ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வெள்ளி, 1 ஜனவரி, 2010

இஸ்லாம் கல்விக்கு பதில் - மோசேயும் சமாரியனும் (ஸாமிரியும்)

இஸ்லாம் கல்விக்கு பதில்

மோசேயும் சமாரியனும் (ஸாமிரியும்)

(குர்‍ஆனின் சரித்திர தவறு)

Moses and the Samaritan

முன்னுரை: இஸ்லாம் கல்வி தளத்தின் வாயிலாக, தேங்கை முனீஃப் என்ற இஸ்லாமியர் "திருக்குர்ஆனில் சரித்திர தவறா? (பகுதி – 2) " என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை பதித்தார், அதற்கான பதிலை இரண்டு பகுதிகளாக காண்போம்.

பாகம் 1: குர்ஆனும் சரித்திர தவறும் மோசேயின் காலத்தில் சமாரியனும் (ஸாமிரி)

பாகம் 2: இஸ்லாம் கல்வி தளத்தின் கட்டுரைக்கு மறுப்பு

குர்ஆன் எப்படி மோசேயின் காலத்தில் சமாரியர்களைப் பற்றிச் சொல்லி ஒரு சரித்திர பிழையை செய்துள்ளது என்பதை இந்த முதல் பாகத்தில் காணலாம். இரண்டாம் பாகத்தில் இஸ்லாம் கல்வி தளம் கொடுத்த பதிலைக் குறித்து மறுப்பைக் காணலாம்.

பாகம் 1: குர்ஆனும் சரித்திர தவறும் மோசேயின் காலத்தில் சமாரியனும் (ஸாமிரி)

இஸ்லாம் கல்வி தளம் "கிறிஸ்தவர் விமர்சித்தார்" என்றுச் சொல்லி ஒரு பத்தியை பதித்துள்ளது.

தேங்கை முனீஃப்

கிறிஸ்தவர்களின் விமர்சனம்:

//மோசேயினுடைய காலத்தில் சமாரியர்கள் இருந்ததாக "எந்தவொரு" சரித்திரமும் கூறவில்லை. மாறாக கி. மு 722 ஆண்டுகளில் தான்சமாரியர்களைப்பற்றி சரித்திரம் கூறுகின்றது. அதற்கு முதல் சமாரியர்கள் இருந்தததுமில்லை. மோசேயின் காலம் கி.மு 1400. இப்படியிருக்கையில் குர்-ஆன் சமாரியனைப்பற்றி அறிவில்லாமல் கூறி மீண்டும் சரித்திரத்தில் தவறு செய்துவிட்டது.//

குர்ஆன் மீது இப்படி ஒரு விமர்சனத்தை கிறிஸ்தவர் ஒருவர் தனது இணைய தளத்தில் பதிவு செய்துள்ளார். அதைப் பின்பற்றி சில கிறிஸ்தவர்களும் இதனைப் பரப்பி வருகின்றனர். Source: "திருக்குர்ஆனில் சரித்திர தவறா? (பகுதி – 2)"

ஆனால், இந்த குர்ஆன் சரித்திர தவறு பற்றிய முழு விவரத்தை இப்போது நாம் காண்போம்..

காளைக் கன்றுப் பற்றிய நிகழ்ச்சியை குர்‍ஆனில் கீழ்கண்ட விதமாக நாம் படிக்கிறோம்:

"நிச்சயமாக, (நீர் இங்கு வந்த) பின்னர் உம்முடைய சமூகத்தாரைச் சோதித்தோம்; இன்னும் அவர்களை 'ஸாமிரி' வழிகெடுத்து விட்டான்" என்று (அல்லாஹ்) கூறினான்.

ஆகவே, மூஸா கோபமும் விசனமும் கொண்டவராய்த் தம் சமூகத்தாரிடம் திரும்பி வந்து . . .

". . . நாங்கள் சமூகத்தாரின் அலங்கார (ஆபரண)ங் களிலிருந்து சில சுமைகள் (கொண்டு) சுமத்தப்பட்டோம்; பிறகு, நாங்கள் அவற்றை(க் கழற்றி நெருப்பில்) எறிந்தோம்; அவ்வாறே
ஸாமிரியும் எறிந்தான்" என்று அவர்கள் கூறினார்கள்.

பின்னர் அவன் அவர்களுக்காக ஒரு காளைக்கன்றை (உருவாக்கி) வெளிப்படுத்தினான்; அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர் "இது தான் உங்களுடைய நாயன்; இன்னும் (இதுவே) மூஸாவின் நாயனுமாகும்; ஆனால் அவர் இதை மறந்து விட்டார்" என்று சொன்னார்கள்.

...
"ஸாமிரிய்யே! உன் விஷயமென்ன?" என்று மூஸா அவனிடம் கேட்டார். (குர்‍ஆன் 20:85-88, 20:95)
He [Allah] said, "We have tempted thy people since thou didst leave them. 'The Samaritan has led them into error." Then Moses returned ... ... and we cast them [(gold) ornaments], "as the Samaritan" also threw them, into the fire." (Then he brought out for them a Calf, a mere body that lowed; and they said, "This is your god, and the god of Moses, whom he has forgotten.") ... Moses said, "And thou, 'Samaritan," what was thy business?" ... -- Sura 20:85-88, 95

சமாரியா பட்டணம் உம்ரி இராஜாவினால் கி.மு. 870ல் ஸ்தாபிக்கப்பட்டது (பார்க்க 1 இராஜாக்கள் 16:24), ஆனால்,அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அதாவது கி.மு. 1400 காலக் கட்டத்தில் வாழ்ந்த மோசேயின் காலத்தில் இஸ்ரவேல் மக்களை எப்படி ஒரு சமாரியன் வழிகெடுத்து இருப்பான்? "சமாரியர்கள்" என்ற தனிப்பட்ட பிரிவு வட இஸ்ரவேல் மக்கள் நாடு கடத்தப்பட்ட பிறகு தான் அடையாளம் காணப்பட்டார்கள். அந்த நிலப்பரப்பில் கி.மு. 722ல் சர்கான் II என்ற அரசன் காலத்தில் இவர்கள் இஸ்ரவேலரல்லாதவர்களோடு ஒன்றர கலந்து வாழலானாரகள். இவர்கள் யூத மற்றும் இதர பல மத கோட்பாடுகளை பின்பற்றலானார்கள். ஆக, ஒரு சமாரியன் இஸ்ரவேல் மக்களை மோசேயின் காலத்தில் விக்கிர ஆராதனை என்ற வழிகேட்டுக்கு வழி நடத்தினான் என்பது சரித்திரத்தின் படி நடக்கமுடியாத ஒரு விஷயமாகும். மோசே மற்றும் சமாரியர்களின் கால கட்டம் குறைந்த பட்சம் 500 லிருந்து 700 ஆண்டுகள் கால வித்தியாசம் கொண்டது.

இந்த "சமாரியன்" என்ற வார்த்தையை யூசுப் அலி அவர்கள் தன் குர்ஆன் மொழியாக்கத்தில்
"ஸாமிரி - Samiri" என்று மொழியாக்கம் செய்தார்,

பிக்தால் (Pickthall) தன் மொழியாக்கத்தில்
"அஸ் ஸாமிரீ - As Samirii" என்றும் மொழியாக்கம் செய்துள்ளார்.

ஆர்பெர்ரி (Arberry) ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யும் போதும், கஸிமிர்ஸ்கி (Kasimirski) என்பவர் பிரென்சு மொழியில் மொழியாக்கம் செய்யும் போதும் இவ்வார்த்தையை
"ஸமாரியன் - Samaritan" என்று சரியாக மொழியாக்கம் செய்துள்ளார்கள்.

யூசுப் அலி தன் பின் குறிப்பில், இவ்வார்த்தைக்கு பொருள் கூறுகிறார், அதாவது இந்த பெயர்
"ஷெமர் - Shemer" என்பதாகும் இதற்கு "அறிமுகமில்லாதவர்" என்று பொருள், அல்லது "ஷோமெர் - Shomer" என்பதாகும் இதற்கு "காவல் காப்பவர்" என்று பொருள் என்கிறார். இதற்கு நிகரான அரபி வார்த்தை "ஸமரா - Samara" என்பதால் அவர் இப்படி வார்த்தைகளுக்கு பொருள் கூறியுள்ளார். இந்த வார்த்தைக்கு இதர பொருள்களை கொடுக்க யூசுப் அலி அவர்களின் முயற்சிக்கு அரபி மொழி ஒத்துழைக்கவில்லை. ஆர்பெர்ரியும், கஸிமிர்ஸ்கி அவர்களும் மொழியாக்கம் செய்தது போல, அரபி வார்த்தைகளுக்கு நிகரான மொழியாக்கத்தை யூசுப் அலி அவர்கள் செய்திருக்க வேண்டும்.

தாமஸ் பாட்ரிக் ஹக்ஸ் தன் "டிக்ஷ்னரி ஆப் இஸ்லாம் - Dictionary of Islam" , பக்கம் 564ல் "அல் பைதாவி [அஸ் ஸாமிரி குறித்து] கூறும் போது, அவருடைய பெயர் மூஸா இபின் ஜாபர், இவர் சமாரிய குலத்தை சேர்ந்தவர் என்று கூறியுள்ளார்".

இந்த குழப்பம் முஹம்மதுவிற்கு எப்படி வந்தது? பரிசுத்த வேதாகமத்தில் இரண்டு இடத்தில் கன்றுக்குட்டி விக்கிரகம் பற்றிய விவரங்கள் வருகின்றன.

சலொமோன் ஆட்சி காலத்திற்கு பின்பு, இஸ்ரவேல் மக்களின் நாடு இரண்டு பாகங்களாக பிரிந்துப்போனது, அதாவது தென் பகுதி யூதா என்றும் வட பகுதி இஸ்ரேல் என்றும் பிரிந்தது. ஆனால், தேவனை ஆராதனை செய்யக்கூடிய இடம் மட்டும் இன்னும் எருசலேமில் மட்டுமே இருந்தது. தன்னுடைய ஆட்சிக்கு ஒரு ஆதாரமாக இருக்கவேண்டுமென்பதற்காக, முதலாம் யெரோபெயாம், இரண்டு இடங்களை தெரிந்துக்கொண்டு அவைகளில் பொன் கன்றுக்குட்டி விக்கிரகங்களை செய்வித்து வைத்தான்(1 இராஜாக்கள் 12:26-33). ஆனால், இப்படிப்பட்ட அருவருப்பு கூடாது என்று தேவன் தன் தீர்க்கதரிசிகள் மூலமாக திட்டவட்டமாக எச்சரித்துள்ளார். (1 இராஜாக்கள் 12:30, 2 இராஜாக்கள் 10:29; 17:16; 2 நாளாகமம் 13:8). அதன் பிறகு சமாரியா பட்டணம் இந்த வட இஸ்ரேல் பாகத்திற்கு தலை நகரமாக மாறியது.

பொன் கன்றுக்குட்டி வணக்கம் பற்றி இரண்டு நிகழ்ச்சிகளை பைபிள் சொல்கிறது. முதலாவது மோசேயின் காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சி, இரண்டாவது சமாரியாவை தலை நகரமாக கொண்ட வட இஸ்ரேலில் நடந்த நிகழ்ச்சியாகும். இந்த இரண்டு நிகழ்ச்சிகளை சரியாக புரிந்துக்கொள்ளாமல் தான் முஹம்மது குழம்பியிருக்கவேண்டும். ஓசியா தீர்க்கதரிசன புத்தகத்தில் இதைப் பற்றிய வசனம் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

சமாரியாவே, உன் கன்றுக்குட்டி உன்னை வெறுத்துவிடுகிறது; என் கோபம் அவர்கள்மேல் மூண்டது; எதுவரைக்கும் சுத்தாங்கம் அடையமாட்டாதிருப்பார்கள்? அதுவும் இஸ்ரவேலருடைய செய்கையே; தட்டான் அதைச் செய்தான், ஆதலால் அது தேவன் அல்லவே, சமாரியாவின் கன்றுக்குட்டி துண்டுதுண்டாய்ப் போகும். (ஓசியா 8:5-6)

.குர்‍ஆன் 20:97ல் அந்த கன்றுக்குட்டியைப் பற்றி தொடர்ந்துச் சொல்கிறது..

"நீ இங்கிருந்து போய் விடு நிச்சயமாக இந்த வாழ்க்கையில் (எவரைக் கண்டாலும், என்னைத்) "தீண்டாதீர்கள்" என்று சொல்(லித் திரி)வது தான் உனக்குள்ளது, (மறுமையில்) நிச்சயமாக உனக்கு வாக்களிக்கப்பட்ட வேதனையும் உண்டு அதை விட்டும் நீ தப்பமாட்டாய்; மேலும்; நீ தரிபட்டு ஆராதனை செய்து கொண்டிருந்தாயே அந்த "நாயனைப்" பார்; நிச்சயமாக அதனைச் சுட்டெரித்துப் பின்னர் (சாம்பலாக்கி) அதைக் கடலில் பரத்திவிடுவோம்" என்றார்.

(Moses) said [to the Samaritan]: "Get thee gone! But thy (punishment) will be that thou wilt say, 'Touch me not'; ... Now look at thy god, of whom you hast become a devoted worshipper: We will certainly burn it in blazing fire and scatter it broadcast in the sea!"
இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கு இடையே இருக்கும் தொடர்பைப் பாருங்கள். ஓசியா தீர்க்கதரிசி கூறிய அந்த "சமாரியாவின் கன்றுக்குட்டியைப் பற்றி தான்", குர்ஆன் சொல்லுகின்ற "ஆராதனை செய்துக்கொண்டு இருந்த கன்றுக்குட்டி". இந்த இரண்டு விவரங்களிலும் இறைவன் அதை (கன்றுக்குட்டி விக்கிரகத்தை) அழித்துவிடுவதாக கூறுகிறார். பைபிளில் கூறப்பட்ட சமாரிய வசனத்திற்கும், குர்ஆனில் சொல்லப்பட்ட ஸாமிரி/ஸமாரியன் நிகழ்ச்சிக்கும் இடையே இன்னொரு ஒற்றுமையும் உண்டு. சமாரியர்களுக்கு உண்டாகும் தண்டனை என்னவென்றால், அது "தீண்டத்தகாதவர்கள்" என்பதாகும். தீண்டத்தகாதவர்கள் என்றால் சுத்தமில்லாதவர்கள், அதாவது விக்கிர ஆராதனை செய்ததால் இப்படி கூறப்பட்டார்கள். இது எஸ்றா கால முதல் இன்றுவரையும் யூதர்கள் சமாரியர்களை தீண்டத்தகாதவர்களாக கண்டதும் இந்த விக்கிரத்தை ஆராதத்தினால் தான். இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையானது தெளிவாக தெரிகிறது. அது மட்டுமல்லாமல், மோசேக்கு பிறகு 700 ஆண்டுகள் வரை சமாரியர்கள் என்பவர்கள் இல்லை. முஹம்மது மத்திய கிழக்கு நாடுகளுக்கு பிரயாணம் செய்துள்ளார், அங்கு அவர் சமாரியர்கள் பற்றி அறிந்திருப்பார், மட்டுமல்ல, விக்கிர ஆராதனை செய்ததால் தான் யூதர்கள் சமாரியர்களை தீண்டத்தகாதவர்கள் என்று கருதுகிறார்கள் என்பதையும் அவர் அறிந்திருக்கக்கூடும். யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் இடையே இருக்கும் இந்த விவரத்தைச் சொல்ல வந்த முஹம்மது அறியாமையால் மோசே காலத்து "பொன் கன்றுக்குட்டியோடு" சம்மந்தப்படுத்தி தவறாக‌ பேசிவிட்டார்.

சிந்திக்கத் தூண்டும் ஒரு கேள்வி என்னவென்றால், "அஸ் ஸாமிரி" என்ற வார்த்தைக்கு பொருள் "ஸமாரியன்" அல்ல என்று இஸ்லாமியர்கள் சொன்னால், "ஸமாரியன்" என்ற வார்த்தையை அரபியில் எப்படி கூறுவீர்கள்? இன்றளவும் ஒரு சிறு பிரிவினராக ஸமாரியர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கிறார்கள். இவர்களை அரபியர்கள் அரபியில் எப்படி அழைப்பாரகள்? (மூலம்: http://www.answering-islam.org/tamil/quran/contra/qbhc01.html

முடிவுரை:

பொன் கன்றுக்குட்டிகளை வணங்கிய இரண்டு நிகழ்ச்சிகளைப் பற்றி பைபிள் குறிப்பிடுகிறது. முதலாவது மோசேயின் காலத்தில் நடந்தது, இரண்டாவது நிகழ்ச்சி பல நூற்றாண்டுகளுக்கு பிறகு சமாரியர்களின் காலத்தில் நடந்தது. தங்கள் வம்சமாக இருந்தும் இப்படி விக்கிர ஆராதனை செய்ததால், சமாரியர்களை யூதர்கள் தீண்டத்தகாதவர்களாக கருதினார்கள். யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் இடையே இருந்த வெறுப்புணர்ச்சியை நாம் புதிய ஏற்பாட்டிலும் காணலாம். இதனை சரியாக புரிந்துக்கொள்ளாமல் சமாரியர்களை மோசேயின் காலத்தில் வாழ்ந்ததாக முஹம்மது கருதி அதனை குர்‍ஆனிலும் சேர்த்துவிட்டார் முஹம்மது.

இக்கட்டுரையின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தில், இஸ்லாம் கல்வி தளம் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலைக் காண்போம். சமாரியர்கள் மோசேயின் காலத்திற்கு முன்பே அல்லது அந்த காலத்திலிருந்தே சமாரிகள் என்று அழைக்கப்பட்டார்களா? அல்லது இது முஹம்மதுவின் இன்னொரு சரித்திர தவறா என்பதை நாம் அடுத்த பாகத்தில் காணலாம்.

இந்த குர்ஆன் சரித்திர தவறு பற்றி இஸ்லாமிக் அவார்னஸ் தளத்திற்கு கொடுத்த பதிலை இங்கு படிக்கலாம்.
 

கருத்துகள் இல்லை: