Answering Ziya: அல்லேலூ 'யா' வும், அல்லாஹ் படும் அல்லல்களும் - பாகம் 2
முன்னுரை: ஜியா என்ற சகோதரர் எழுதிய "அல்லேலூயாவும் ஈசா உமரும்" என்ற கட்டுரைக்கு கீழ்கண்ட மறுப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
1.0 Answering Ziya: அல்லேலூ "யா" வும் "அல்லாஹ்" படும் அல்லல்களும் - பாகம் 1
1.1 Answering Ziya: "அல்லாஹ்" என்றால் "கர்வாலி மரம்" என்று பொருள்
(இஸ்லாமியர்களின் அறியாமைக்கு வானமே எல்லை. இஸ்லாமியர்களின் ஏமாற்று வேலைக்கு எல்லையே இல்லை)
1.2 Answering Ahmad Deedat: பைபிளில் "அல்லாஹ்", அஹமத் தீதத் கொடுத்த "அல்வா"
(இது அஹமத் தீதத் அவர்களின் அறியாமையா? அல்லது மக்களை ஏமாற்றும் யுக்தியா?)
1.3 Answering Ziya: குர்ஆனின் இறைவனின் பெயர் என்ன? அல்லாஹ்வா? அல்லது எலோஹிமா?
இதன் தொடர்ச்சியாக, "அல்லேலூ 'யா'வும் அல்லாஹ் படும் அல்லல்களும் - பாகம் 2" வெளியிடப்படுகிறது.
இப்போது இரண்டாம் பாக மறுப்பைக் காணலாம்.
ஜியா அவர்கள் எழுதியவை:
மொழிபெயர்ப்பு:
உமர் அவர்களே, நீங்கள் அளித்த "விகிபீடியா" விலாசத்தில் "யஹுவாவை துதித்தல்"என்பதே சரி என்று இருக்கிறது. சரி "யஹுவாவை துதித்தல்" அல்லது "யஹ்வேஹ்-வை துதித்தல்" என்ற வார்த்தையில் வரும் "யஹுவா" அலலது "யஹுவெஹ்" என்றால் என்ன? ஹிப்ரூ மொழியில் "யோத்" "ஹு" "வாவ்" "ஹு", சரியான உச்சரிப்பு அறிய போதாதலால், அதனுடன் vowels சேர்க்கப்பெற்று "யஹுவா" என்று உச்சரித்தனர்.
Source
உமரின் பதில்:
ஜியா அவர்களே, விக்கிபீடியா சொன்னதால் தான் "ஹல்லேலூயா" என்ற வார்த்தைக்கு "யஹுவாவை துதித்தல்" என்று அர்த்தமில்லை, அந்த வார்த்தை இரண்டு வார்த்தைகளின் கூட்டாக இருப்பதினால் தான் அந்த அர்த்தம். இது விக்கிபீடியா கலைக்கலைஞ்சியத்தில் பதிக்கப்பட்டுள்ளது. ஹல்லேலூயா வார்த்தையின் பொருளை இதர பைபிள் விரிவுரை தளங்களிலிருந்து மேற்கோள் காட்டலாம், ஆனால், பொதுவான கலைக்கலைஞ்சியமாக விக்கிபீடியா இருப்பதினால், அதன் தொடுப்பை கொடுத்தேன்.
சரி, நான் கொடுத்த தொடுப்பை சொடுக்கி நீங்கள் படித்து சில விவரங்களை தெரிந்துக்கொள்ள நான் வழி வகுத்து கொடுத்துள்ளேன் இல்லையா! இதே போல, நீங்களும் தொடுப்புக்களை கொடுத்தால் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்குமல்லவா? இஸ்லாமியர்களாகிய நீங்களும் உங்களைப் போல இணையத்தில் எழுதும் இதர இஸ்லாமியர்களும் இப்படி மூல தொடுப்புக்களைக் கொடுத்து வாசகர்களுக்கு உதவுவார்களா?
"யஹூவெஹ்" என்றால் என்ன என்று கேள்வி கேட்டு இருக்கிறீர்கள்?
ஜியா அவர்களே, நான் உங்களிடம் கேட்க விரும்பும் கேள்வி என்னவென்றால், விக்கீபீடியாவை படித்தேன் என்றுச் சொல்லியுள்ளீர்கள், அதிலிருந்து இன்னும் சில தொடுப்புக்களுக்கு தாவி அங்கிருந்தும் சிலவற்றை பதித்து இருக்கிறீர்கள். நீங்கள் பதித்த ஆங்கில விவரங்களிலேயே "யஹூவெஹ்" என்றால் என்ன என்று சொல்லியிருக்கும்போது, மறுபடியும் எப்படி ஒன்றுமே தெரியாதவர் போல கேள்வியை கேட்கிறீர்கள்?
உங்களுடைய யுக்தி அனைத்தும் எங்களுக்குத் தெரியும். யஹூவெஹ் என்றால் "I AM" / "He is" என்று பொருள் என்று கூறியிருந்தும், உங்களுடைய சொந்த விவரத்தை நுழைக்க, கேள்வியை கேட்பது போல கேட்டு, அதற்கு உங்கள் இஸ்லாமிய முறைப்படி பொருள் கொடுக்க முனைந்துள்ளீர்கள். ஆனால், ஜியா அவர்களே, இஸ்லாமியர்களாகிய உங்களின் இப்படிப்பட்ட யுக்தி மிகவும் ஆபத்தானது என்பதை இக்கட்டுரையை முழுவதுமாக படித்த பிறகு புரிந்துக்கொள்வீர்கள்.
இருக்கிறவராகவே இருக்கிறேன் அல்லது "இருக்கிறேன்": (I AM THAT I AM OR I AM)
பைபிளின் தேவன் தன் பெயர் "இருக்கிறேன்" என்றுச் சொல்கிறார். தலைமுறை தலைமுறையாக எப்போதும் அவரை இந்த பெயரில் அழைக்கவேண்டும் என்று அவர் கூறுகிறார்.
God said to Moses, "I AM WHO I AM. This is what you are to say to the Israelites: 'I AM has sent me to you.'"
God also said to Moses, "Say to the Israelites, 'The LORD, the God of your fathers—the God of Abraham, the God of Isaac and the God of Jacob—has sent me to you.'
"This is my name forever, the name you shall call me from generation to generation. (Exodus 3:14, 15)
அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.
மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம். (யாத்திராகமம் 3:14,15)
பைபிளின் தேவன் தன் பெயர் "இருக்கிறேன்" என்றுச் சொல்கிறார். உலகத்தில் எந்த மனிதனும் "இருக்கிறேன்" என்று எப்போதும் சொல்லமுடியாது. உதாரணத்திற்கு, "ஜியா" என்கின்ற நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் உயிரோடு இருக்கும் வரை நீங்கள் "இருக்கிறேன்" (நிகழ்காலம்) என்றுச் சொல்லிக்கொள்ளலாம், ஆனால், மரித்துவிட்ட பிறகு நீங்கள் "இருக்கிறேன்" என்றுச் சொல்லமுடியாது, மற்றவர்கள் உங்களைப் பற்றி கூறும் போது, "இருந்தார் (இறந்த காலம்)" அதாவது ஜியா என்ற சகோதரர் இருந்தார் என்றுச் சொல்வார்கள்.
ஆக, எல்லா காலத்திற்கும் "இருக்கிறேன்" என்று நிகழ்காலத்தில் சொல்லக்கூடிய ஒருவர் இருந்தால் அவர் இறைவனாகத் தான் இருக்கமுடியும், ஆகையால் தான் பைபிளின் தேவன் "நான்" அல்லது "இருக்கிறேன்" என்று தன் பெயரைச் சொல்கிறார்.
அல்லாஹ்வும் பைபிளின் "இருக்கிறேன்" என்கின்ற யேகோவா தேவனும் ஒருவரல்ல:
நாம் மேலே படித்த வசனங்களில் யேகோவா தேவன், தன்னை "யேகோவா" பெயரில் அழைக்கவேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார். பைபிளில் "யேகோவா" என்ற பெயர் 6000க்கும் அதிகமாக இடங்களில் வருகின்றது. தன் தீர்க்கதரிகளுக்கு தேவன் இந்த பெயர் மூலமாக வெளிப்பாடு அருளினார், அவர்களும் இந்த பெயரை பயன்படுத்தினார்கள். ஆனால், தன்னை பைபிளின் தேவன் தான் அனுப்பினார், தானும் ஒரு நபி என்று சுயமாக சொல்லிக்கொண்ட முஹம்மது மட்டும் "அல்லாஹ்" என்ற பெயரில் தீர்க்கதரிசனம் உரைத்தார். ஆக, யேகோவா தேவன் அனுப்பிய தீர்க்கதரிசி முஹம்மது அல்ல என்பது இதன் மூலமாக நிருபனமாகும். மற்றும் எப்படி பைபிளில் தேவன் தன் பெயரை யேகோவா என்று பல ஆயிர முறை பயன்படுத்தியுள்ளாரோ, அதே போல, தன் பெயர் அல்லாஹ் என்றுச் சொல்லி, குர்ஆனில் "அல்லாஹ்" பயன்படுத்தியுள்ளார்.
பழைய ஏற்பாட்டில் தன் பெயர் "யேகோவா" என்று சொல்லி அறிமுகப்படுத்திய தேவன், திடீரென்று ஏழாம் நூற்றாண்டில், தன் பெயர் "அல்லாஹ்" என்று மாற்றிக்கொள்ளவில்லை. இதற்கு பதிலாக, தலை முறை தோறும் "இருக்கிறேன் (யேகோவா)" என்ற பெயராலேயே தான் அழைக்கபடவேண்டும் என்று பைபிளின் தேவன் கட்டளையிட்டுள்ளார்.
குர்ஆன் வசனங்களில் நாம் யேகோவா என்ற பெயரை நாம் காண்பதில்லை. ஆக, பைபிளின் தேவனும், குர்ஆனின் அல்லாஹ்வும் ஒருவரல்ல. [கிறிஸ்தவர்களே, இவ்விருவரும் ஒருவரே என்று பொய் சொல்லி, இஸ்லாமியர்கள் உங்களை ஏமாற்றுவார்கள் எச்சரிக்கையாக இருங்கள்]
ஆக, இதன் மூலம் அறிவது என்னவென்றால், குர்ஆனின் அல்லாஹ்வும் பைபிளின் தேவனும் ஒருவரல்ல.
இவர் வேறு அவர் வேறு, பைபிளின் தேவன் அனுப்பிய நபி முஹம்மது அல்ல. முஹம்மது ஒரு கள்ள நபி அதாவது ஒரு பொய் நபியாவார். ஆகையால் தான் யூதர்களும், கிறிஸ்தவர்களும் முஹம்மது ஒரு நபி என்பதை அங்கீகரிக்கவில்லை.
ஜியா அவர்கள் எழுதியவை:
ஹிப்ரூ மொழி "யஹுவா"வில் உள்ள "யா" என்றால் "ஓ!" அன்று அர்த்தம் ஆகும் அச்சிரியத்தை வெளிபடுத்த பயன்படும் சொல்லாகும், "ஹுவா" என்றால் "அவன் தான்" என்று அர்த்தம். "யஹுவா" என்றால் "ஓ! அவன் தான்" என்று அர்த்தம் ஆகும்.
முதலில், அல்லேலூயா வார்த்தையில் வரும் இரண்டு வார்த்தைகளில், "யா" என்பது யேகோவா தேவனை குறிக்கும். இந்த வார்த்தைக்கு பொருள் நேரடியாக உள்ளது, அதாவது "அல்லேலு" என்றால், துதித்தல் என்றும், "யா" என்றால் "யேகோவா" தேவனை குறிக்கும் என்று தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. ஆனால், நீங்கள் மட்டும் உங்கள் இஸ்லாமிய தில்லுமுல்லை வெளிக்காட்டுவதற்கு "யா" என்றால் "ஓ" என்று அர்த்தம் என்றுச் சொல்லியுள்ளீர்கள். நான் கேட்கிறேன்: அல்லேலூயா என்ற வார்த்தையில் "யா" என்ற வார்த்தை "ஓ" என்ற பொருள் படும்படி பயன்படுத்தப்பட்டுள்ளதா? இதற்கு பதில் சொல்லமுடியுமா ஜியா அவர்களே?
உதாரணத்திற்கு கீழ்கண்ட பெயர்களை கவனிக்கவும்:
பெயர் | தமிழில் பெயர் | பொருள் |
Jeremiah | எரேமியா | Yahweh exalts |
Isaiah | ஏசாயா | Yahweh is salvation |
Obadiah | ஒபதியா | servant of Yahweh" or "worshipper" of Yahweh |
Zacharia | சகரியா | Yahweh has remembered |
Nehemiah | நெகேமியா | Comforted of/is the LORD (Yahweh) |
Zaphaniah | செப்பனியா | Yahweh has concealed |
இன்னும் இப்படி அனேக பெயர்கள் உள்ளன, எடுத்துக்காட்டிற்காக சிலவற்றை மட்டுமே கொடுத்தேன். இந்த பெயர்களின் வரும் "யா" என்பது யேகோவா தேவனை குறிக்குமே ஒழிய, "ஓ" என்ற ஆச்சரியத்தை குறிக்காது. இதே போல, அல்லேலூயா என்ற வார்த்தையில் இருக்கும் "யா" என்பது யேகோவாவை குறிக்கும். எனவே, உங்கள் சொந்த விளக்கத்தை குர்ஆனை விளக்க பயன்படுத்துங்கள்.
ஜியா அவர்கள் எழுதியவை:
"ஓ! அவன் தான்" என்றால் யார் அவன்? அவன் பெயர் என்ன?
யேகோவா என்பது தன் பெயர், இதற்கு "இருக்கிறேன்" என்பது பொருள், இந்த பெயராலேயே எல்லாரும் அழைக்கவேண்டும் என்று நான் மேலே காட்டிய வசனங்கள் தெளிவாக கூறும் போது, மறுபடியும், இதன் பொருள் என்ன என்று கேட்கிறீர்கள்? விக்கிபீடியாவிலிருந்து நீங்கள் மேற்கோள் காட்டிய விவரங்களே இதற்கு பொருள் "I AM" என்றுச் சொல்லும் போது, மறுபடியும் ஏன் இந்த கேள்வியை எழுப்புகிறீர்கள்?
ஏதோ.. உங்க இஸ்லாமிய லாஜிக்கை சொல்லபோகிறீர்கள், மூக்கை அறுத்துக் கொள்ளப்போகிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது... தொடருங்கள்... பார்க்கலாம்.
ஜியா அவர்கள் எழுதியவை:
156 முறை பைபளில் "ய ஹுவா எலா ஹிம்" (Example :Genesis 2:7) என்று சொல்ல பெற்று உள்ளது, அதற்கு அர்த்தம்
"ஓ! அவன் தான் எலா ஹிம்".
"எலா ஹிம்" என்றால் என்ன? "எலாஹ்" என்றால் கடவுளின் பெயர் "ஹிம்" என்றால் மரியாதையை குறிக்கும் சொல், நம் தமிழில் "கள்" இருபது போல "விலங்குகள்" என்றால் பல விலங்கு என்று அர்த்தம் அண்ணல் "உமர் அவர்கள்" என்றால் பல உமர் என்று அர்த்தம் கிடையாது அது மரியாதையை குறிக்கும் சொல்.
நாம் மேலே கண்டது போல "யா" என்பது, நீங்கள் சொல்கின்ற படி "ஓ" என்று அர்த்தமில்லை. மற்றும் "யேகோவா எலோஹிம்" என்ற வார்த்தைகளின் அர்த்தம் "தேவனாகிய யேகோவா" என்பதாகும்.
எலோஹிம் என்பது எபிரேய மொழியில் "இறைவன்" என்ற பொருள் கொண்ட பொதுப்பெயராகும். அதாவது, இறைவன் என்பது ஒரு குறிப்பிட்ட இறைவனை குறிக்காது. "இறைவன்" என்ற பொருள் படும் "எலோஹிம், எலாஹ், எல்..." போன்ற அனேக வார்த்தைகள் எபிரேய மொழியில் உண்டு, இவ்வார்த்தைகள் பைபிளில் எந்தெந்த பொருளில், யார் யாருக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை கீழ்கண்ட கட்டுரையில் விளக்கியுள்ளேன்:
Answering Ziya: குர்ஆனின் இறைவனின் பெயர் என்ன? அல்லாஹ்வா? அல்லது எலோஹிமா?
உதாரணத்திற்கு: "உங்கள் இறைவன் அல்லாஹ்" என்ற சொற்றொடரில், இஸ்லாமிய கடவுளின் பெயர் என்ன?
"இறைவன்" என்பது இஸ்லாமிய கடவுளின் பெயரா?
"அல்லாஹ்" என்பது இஸ்லாமிய கடவுளின் பெயரா?
"அல்லாஹ்" என்பது தான் பெயர், "இறைவன்" என்பது பெயர் அல்ல என்று இஸ்லாமியர்கள் பதில் கூறுவார்கள்.
இதே போலத்தான், எபிரேய மொழியில் "எலோஹிம்" என்பது தமிழில் "இறைவன்" என்ற பொருள் படும் பொதுப் பெயராகும். யேகோவா என்பது தான் பைபிள் இறைவனின் தனிப்பட்ட பெயராகும்.
எனவே, ஜியா அவர்களே, உங்கள் விளக்கம் தவறானது (உண்மையில் இந்த விளக்கத்தின் உண்மை சொந்தக்காரர் காலஞ்சென்ற திரு அஹமத் தீதத் அவர்களாவார்கள், இவரது அறியாமையை (மக்களை ஏமாற்றும் யுக்தியை) அப்படியே இஸ்லாமியர்கள் இன்றும் காபி அடித்துக்கொண்டு இருக்கிறார்கள். காபி அடிப்பது தவறல்ல ஆனால் "ஈ" அடிச்ச காபி அடிக்கக்கூடாது, சிறிது யோசிக்கனும், ஆராயனும்.)
ஜியா அவர்கள் எழுதியவை:
அதனால் தான் நபி ஈஷா (ஸல்) தான் இறக்கும் தருவாயில் "Eloh, Eloh, lama sabachthani? என்று அழுததாக பைபிள் கூறுகிறது (Mark 15:34)
இதுவரை நாம் கண்ட விளக்கத்தின் படி, மற்றும் "எலோஹிம், எல், எலோஹ்" போன்ற வார்த்தைகளின் பொருள் "இறைவன்" என்பதாகும், இது தனிப்பட்ட பெயர் அல்ல.
மேலதிக விவரத்திற்காக "எலோஹ்", "எல்", "எலோஹிம்" போன்ற வார்த்தையின் பயன்பாடு பைபிளிலிருந்தும், எபிரேய அகராதியிலிருந்தும் எடுத்து விளக்கப்பட்டுள்ள கீழ்கண்ட கட்டுரையை படிக்கவும்:
Answering Ziya: குர்ஆனின் இறைவனின் பெயர் என்ன? அல்லாஹ்வா? அல்லது எலோஹிமா?
ஜியா அவர்கள் எழுதியவை:
"யா ஹு வா எலொ ஹு" என்றால் "ஓ! அவன் தான் எலா ஹு" என்று அர்த்தமாகும்,
"யா ஹு வா எலொ ஹு" என்றால் "தேவனாகிய யேகோவா" (அ) "இறைவனாகிய யேகோவா" என்று பொருள்.
இதில் "யேகோவா" என்ற பெயரை உங்கள் விருப்பப்படி பொருள் கூறுவது தவறாகும்.
உதாரணத்திற்கு:
"இறைவன் அல்லாஹ்", என்ற வார்த்தைகளை எபிரேய மொழியில் கூறவேண்டுமானால், "இறைவன்" என்ற வார்த்தையின் மொழியாக்கம் "எல் (அ) எலோஹ் (அ) எலோஹிம்" என்பதாகும். அடுத்ததாக, அல்லாஹ் என்ற தனிப்பட்ட பெயர் அப்படியே வரும், அதாவது "அல்லாஹ் எலோஹிம்" என்று கூறலாம். "அல்லாஹ்" என்பது பெயர், "எலோஹிம்" என்பது பொதுப்பெயர். இந்த எலோஹிம், விக்கிரகங்களையும், இதர தெய்வங்களை குறிக்கவும் பயன்படுத்தலாம்.
ஜியா அவர்கள் எழுதியவை:
இதில் வரும் "ஓ!" என்ற அசிர்யத்தை குறிக்கும் சொல்லை பிரித்தால் "ஹு வா எலொஹு" என்று வரும் குர்ஆனில் உள்ளது போல "ஹு வல்ல ஹு உள்ளஜி ல இலஹா இல்ல ஹு" (quran 59 :22 )
ஏன் நீங்கள் "ஓ" என்ற எழுத்தை பிரிக்கிறீர்கள் ?
(இப்படி பிரிக்கவில்லையானால், நீங்கள் சொல்ல வந்த பொய்யை ஏமாற்று வேலையை காட்டமுடியாது என்பதால், "ஓ" என்ற எழுத்தை பிரித்து விடுகிறீர்களோ)
உங்கள் விருப்பப்படி பொருள் கொடுப்பீர்கள்,
உங்கள் விருப்பப்படி சில எழுத்துக்களை சேர்ப்பீர்கள்,
உங்கள் விருப்பப்படி நீங்கள் சொன்ன பொருளிலிருந்தே, சில எழுத்துக்களை பிரிப்பீர்கள்.. கடைசியாக, ஏதோ ஒரு குர்ஆன் வசனத்தில் ஒரு பகுதியின் உச்சரிப்பு போல இருப்பதைக் கண்டு, அதைச் சொல்லிவிட்டு, என்னவோ, உலகத்திலேயே ஒரு மகா பெரிய விஞ்ஞான உண்மையை கண்டுபிடித்து விட்டதுபோல, ஒரு பெருமிதம் கொள்கிறீர்கள்.
என்னே அறிவு... என்னே ஞானம்.... சபாஷ் இஸ்லாமியர்களே, சபாஷ்
ஆனால், ஒரு நன்மையும் இல்லையே ஜியா அவர்களே... உங்கள் இஸ்லாமிய மார்க்கத்தின் பொய்யையும், புரட்டையும் மக்கள் சிறிது சிறிதாக அறிந்துக்கொண்டு இருக்கிறார்களே...
ஜியா அவர்களிடம் சில கேள்விகள்:
நீங்கள் மேற்கோள் காட்டிய குர்ஆன் வசனம் 59:22ஐ முழுவதுமாக கீழே தருகிறேன்.
Huwa Allahu allathee la ilaha illa huwa AAalimu alghaybi waalshshahadati huwa alrrahmanu alrraheemu
1) குர்ஆனின் ஒரு வசனத்தில் முதல் சில வார்த்தைகளின் உச்சரிப்பு போல இருப்பதை வைத்துக்கொண்டு, பெரிய உலக மகா அரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்துவிட்டது போல பெருமைப்படும் இஸ்லாமியரே, இவ்வசனத்தில் உள்ள இதர வார்த்தைகளை ஏன் விட்டுவிட்டீர்கள்?
2) இந்த முழு வசனத்திற்கும் சமமான உச்சரிப்பு உள்ள பைபிள் வசனம் கண்டுபிடித்துவிட்டீர்களா?
3) பைபிளின் சில வார்த்தைகளின் உச்சரிப்பிற்கு ஏற்றாற்போல குர்ஆன் வசனம் இருப்பதாக அதுவும் அதில் ஒரு பாகம் இருப்பதாக நீங்கள் மேற்கோள் காட்டியதால், எதை சாதிக்கலாம் என்று நினைத்துவிட்டீர்கள்? அல்லது இதன் மூலம் அல்லாஹ் தெரிவிக்கும் தத்துவமோ அல்லது பாடமோ என்ன? அல்லது இந்த அறிய கண்டுபிடிப்பினால் உலகிற்கு முக்கியமாக கிறிஸ்தவர்களுக்கு நீங்கள் தெரிவிக்க விரும்பும் தத்துவம்/பாடம் என்னவோ?
4) ஏதோ ஒரு வரியின் உச்சரிப்பு ஒரே மாதிரியாக இருப்பதை கண்டுபிடித்துவிட்டால், இஸ்லாம் உண்மையான மார்க்கமாகி விடுமா?
என்னடா இது, இப்படி முட்டாள் தனமாக நாம் (இஸ்லாமியர்களாகிய நாம்) சம்மந்தமே இல்லாமல் ஒப்பிடுகின்றோமே... பைபிளில் இருக்கும் இரண்டு வார்த்தைகளை எடுத்துக்கொண்டு, சம்மந்தமே இல்லாமல் அவ்வார்த்தைகளுக்கு பொருளைக் கூறி , அந்த இரண்டு வார்த்தைகள் குர்ஆனின் ஒரு வசனத்தில் வரும் ஒரு சில வார்த்தைகளின் உச்சரிப்பு போல வருவதை காரணங்காட்டி, அடிமுட்டாள்தனமாக கட்டுரை எழுதுகின்றோமே... யாராவது இதனை கண்டுபிடித்து... எழுதினால் மானம் போகுமே...இஸ்லாமுக்கும் கெட்டப்பெயர் வருமே என்ற எண்ணமே உங்களுக்கு வராதா?
இஸ்லாமியர்களின் லாஜிக்கின் படி, அமெரிக்கவின் முன்னாள் அதிபர் புஷ், இந்துக்களின் தெய்வம் "அம்மன்" போன்ற வார்த்தைகள் அல்லது இவைகளுக்கு சமமான உச்சரிப்புள்ள வார்த்தைகள் குர்ஆனில் உள்ளன, இதனால், இந்து தெய்வம் "அம்மன்" குர்ஆனில் உண்டு என்று இந்துக்கள் சொல்லலாமா?
இந்த தொடுப்பில், Islamic City Quran Transliteration Search, "Bush" என்றும், "Amman" என்றும் கொடுத்து குர்ஆனில் தேடிப்பருங்கள், எத்தனை வசனங்கள் வருகின்றது என்று நீங்களே பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்
ஜியா அவர்கள் எழுதியவை:
இதன் அடிபடையில் "ஹல்லேளுயாஹ்" (halleluyah) என்றால் "ஓ! அவன் தான்எலொஹு, அவனையெ துதி" என்று அர்த்தமாகும்.
எதன் அடிப்படையில்?
இஸ்லாமியர்கள் உச்சரிப்பு ஒரே மாதிரியாக வரும் வார்த்தைகளை காட்டி எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை கண்டோம்.
இந்த அல்லேலூயா வார்த்தைக்கு நேரடி பொருள் இருக்கும் போது, அதை திருத்தி, தங்கள் சொந்த விளக்கத்தைக் கொடுக்கும் இஸ்லாமியர்களின் யுக்தியை இக்கட்டுரையில் கண்டோம்.
இப்போது, சகோதரர் ஜியா அவர்கள் செய்த தில்லுமுல்லை சுருக்கமாக கீழ்கண்ட படத்தில் காணலாம்.
ஜியா அவர்கள் எழுதியவை:
உமர் அவர்கள்லே நிங்களும் உங்கள் தோழர்களும் இஸ்லாத்திற்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்ய, அடுத்தவர் இணைய தளத்தை மொழிபெயர்க்க செலவிடும் நேரத்தில் சிறிதளவு உங்கள் மார்கத்தை அறிய செலவிட்டால் இப்படி கட்டுரை எழுதமாட்டீர்… அஸ்ஸலாமு அழைக்கும்
- ஜியா
சகோதரர் ஜியா அவர்களே, இஸ்லாமுக்கு எதிரான பொய் பிரச்சாரம் அல்ல, மெய் பிரச்சாரம். ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயம் ஒன்றாகச் செர்ந்து, இஸ்லாம் பற்றிய உண்மைகளை உலகிற்கு எடுத்துச் சொல்லாமல் பொய்களை சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். கிறிஸ்தவம் பற்றி பொய்களை அள்ளி வீசுகிறீர்கள், உங்களைப் போன்ற பொய்யர்களுக்கு சரியான பதில் தருவதும், மற்றும் இஸ்லாமின் உண்மை முகத்தை உலகத்திற்கு அடையாளம் காட்டுவதும் எங்கள் கடமையாகும்.
இஸ்லாம் பற்றி அதிக உண்மைகளை மக்கள் இப்போது அறிந்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது உண்மை.
"அடுத்தவர் இணைய தளத்தை மொழிப்பெயர்க்கும் நேரம் என்றுச் சொன்னீர்கள்" அஹமத் தீதத் அவர்களின் உழைப்பை அப்படியே காபி அடித்து, அதனை எழுதி, உங்களுக்கு பெயர் வரும்படி செய்துள்ளீர்கள், குறைந்த பட்சம் அவரது எழுத்துக்களிலிருந்து இவைகளை எடுத்தேன் என்ற ஒரு வரியையாவது எழுதினீர்களா?
அடுத்ததாக, அடுத்தவர் தளத்தை மொழியாக்கம் செய்வது பற்றி குற்றம் சுமத்தியுள்ளீர்கள். என்னுடைய ஈஸா குர்ஆன் தளத்தில் உள்ள அனைத்து கட்டுரைகளையும் படித்துள்ளீர்களா? பீஜே அவர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் மொழிப்பெயர்ப்புகளா? இஸ்லாம் கல்வி தளத்திற்கு கொடுத்த மறுப்புக்கள் மொழிப்பெயர்ப்புக்களா? தமிழ் முஸ்லிம் தளத்திற்கு கொடுத்த பதில்கள் மொழிப்பெயர்ப்புக்களா? இன்னும் அனேக இஸ்லாமிய தளங்களுக்கு நான் கொடுத்த மறுப்புக்கள் அனைத்தும் மொழிப்பெயர்ப்புக்களா?
எனவே, மொழிப்பெயர்ப்பு என்றுச் சொல்லி இஸ்லாமியர்கள் சாக்கு போக்கு சொல்லமுடியாது. உங்கள் இஸ்லாம் மீது நம்பிக்கை இருந்தால், என் அனைத்து கட்டுரைகளுக்கும் பதிலை அளியுங்கள். நானும் தொடர்ந்து அளித்துக்கொண்டு இருக்கிறேன், இனியும் தொடர்வேன்.
இன்னொரு முறை தமிழ் இஸ்லாமிய அறிஞர் உலகை எச்சரிக்கிறேன், நேர்மையாக எழுதுவீர்களானால், அதற்கேற்றபடி பதில் அளிக்கப்படும், பொய்களையும், அவதூறுகளையும் கிறிஸ்தவத்தின் மீது சொல்வீர்களானால், நாங்கள் வாளை எடுக்கமாட்டோம் அதை விட மிகவும் வலிமை வாய்ந்த பேனாவை எடுப்போம்... அதன் பிறகு... பாலைவன வெயிலையும், குளிரையும் தாங்க முடியாமல் தவிப்பீர்கள். எச்சரிக்கை... எச்சரிக்கை... எச்சரிக்கை.
ஜியா அவர்கள் எழுதியவை:
Note: இந்த கட்டுரையை ஒரு நகல் isaaquran கும் அனுப்பி உள்ளேன், உங்களில் இ -மெயில் ஐடி இல்லாமையால், எழுத்து விவாதத்திற்கு அழைக்கும் நீங்கள் அடுத்தவர் கட்டுரைகளை முழுமையாக பிரசுரிக்க மறுக்கிறீர்கள் என்பதால், அவர்களுக்கு ஒரு நகல் அனுப்பி உள்ளேன். இனியேனும் உங்கள் இ - மெயில் ஐடி தருவீர்கள் என்று நம்புகிறேன்.
முதலில், நான் விவாதத்திற்கு அழைத்த கட்டுரையில் என் மெயில் ஐடி உண்டா இல்லையா என்பதை ஒரு முறை பார்த்து எழுதுகிறீர்களா ஜியா அவர்களே. (2007ம் ஆண்டில் நான் விடுத்த எழுத்து விவாத அழைப்பு)
அடுத்தவர் கட்டுரையை முழுவதுமாக பிரசுரிக்க மறுக்கின்றேனா? அய்யோ பாவம் வாசகர்களுக்கு வந்த கேடுகாலத்தை பார்த்தீங்களா?
சிறிதும் வெட்கமில்லாமல், எங்கள் தொடுப்பையும் கொடுக்க பயப்படும், நடுங்கும் இஸ்லாமியர்கள் என் மீது குற்றம் சுமத்துகிறார்கள்! ஆச்சரியம் தான். முதலில் ரோஷமுள்ளவர்களாக நீங்கள் நடந்துக்கொண்டு எங்கள் தொடுப்புக்களை கொடுக்க முன்வாருங்கள்.
என் மறுப்புக்களை பார்க்கும் போது:
1) மூல தொடுப்புக்களை கொடுப்பேன் (இஸ்லாமியர்கள் போல, எனக்கு தொடுப்புக்களை கொடுக்க பயமில்லை)
2) இஸ்லாமியர்களின் ஒவ்வொரு பத்தியையும், வரியையும் பதித்து பதில் தருவேன். இதன் மூலம் இஸ்லாமியர்களின் மூல கட்டுரை என் தளத்தில் முழுவதுமாக வந்துவிடும்.
3) இதர தளங்களிலிருந்து மொழியாக்கம் செய்து இருந்தால், அதன் தொடுப்பைத் தருவேன்.
கடந்த சில ஆண்டுகளாக இஸ்லாமிய அறிஞர்கள் செய்யும் பொய்யைக் கண்டு, தில்லுமுல்லைக் கண்டு நொந்துபோய், உலகிற்கு அதனை எடுத்துச் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.
நீங்கள் ஒரு கட்டுரையை புதியதாக எழுதும்போது, அதனை உங்கள் இஸ்லாமிய தளங்களில் முதலில் பதியுங்கள், அதன் தொடுப்பை எனக்கு அனுப்புங்கள். நான் பதில் அளிக்கும் சமயத்தில் உங்கள் தொடுப்பை கொடுப்பேன், அதற்கான பதிலைத் தருவேன். அதை விட்டுவிட்டு, நீங்கள் எழுதும் வீணான பிரயோஜனமற்ற கட்டுரைகளை முதன் முதலில் பதிக்கும் சாக்கடை என் தளமில்லையே. முதலில் உங்கள் தளத்தில் அவைகளை பதியுங்கள், அந்த சாக்கடையை நான் சுத்தப்படுத்தும்போது, என் தளத்தில் உங்கள் கட்டுரை அனைத்திற்கும் பதிலை அளிப்பேன். இது தான் முறையே தவிர, இஸ்லாமிய சாக்கடையை முதன் முதலில் பதிக்கும் இடம் என் தளமல்ல, அதற்கு பீஜே அவர்களின் தளமும், டிஎன்டிஜே தளமும், இஸ்லாம் கல்வி தளமும், இன்னும் அனேக இஸ்லாமிய தளங்கள் உள்ளன, அங்கே பதியுங்கள். சாக்கடையை சுத்தம் செய்வது மட்டும் என் கடமை என்பதை இந்திய கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். சரியாக சாக்கடையை சுத்தம் செய்யவில்லையானால், மறுபடியும் சுத்தம் செய்வேன், முழு சுத்தம் அடையும் வரை சுத்தம் செய்துக்கொண்டே இருப்பேன். நான் எப்படி சுத்தம் செய்கிறேன் என்பதற்கு இந்த தற்போதைய கட்டுரையும் ஒரு உதாரணமாகும். நீங்கள் உங்கள் கட்டுரையில் பதித்த விவரத்திற்கு மறுப்பாக நான்கு கட்டுரைகளை எழுதியுள்ளேன். இது போல, அனைத்து விவரத்திற்கும் பதில் அளிப்பேன், சிறிது கால தாமதம் ஆகலாம், ஆனால், தவறாமல் பதில் அளிப்பேன்.
உங்களை அடுத்த கட்டுரையில் சந்திக்கும் வரை....
உங்கள் சகோதரன்,
உமர்
9 கருத்துகள்:
உமர் அண்ணா, பைபிள் இறைவன் பெயர் “இருக்கிறேன்” அல்லது “யேகோவா” இதில் எது சரி? ரோம்ப தெளிவா கொலபுரிங்க... பைபிள் இறைவனின் தனிப்பட்ட பெயர் “யேகோவா”ன்னு சொன்னிங்க, இப்ப “இருக்கிறேன்” என்று சொல்றிங்க? அப்படினா அல்லேலூ 'யா'
என்றால் "இருக்குறவன துதி" என்று தானே அர்த்தம்? அப்பா நீங்க முதல்லா சொன்ன கருத்து தப்பா?
உங்களுக்கு நிங்களே முரண்னான கருத்துகளை சொல்லி கொள்வின்களா? கொஞ்சம் தெளிவகுங்க ப்ளீஸ்...
-ஜாவித்
உமர் அண்ணா, பைபிள் இறைவன் பெயர் “இருக்கிறேன்” அல்லது “யேகோவா” இதில் எது சரி? ரோம்ப தெளிவா கொலபுரிங்க... பைபிள் இறைவனின் தனிப்பட்ட பெயர் “யேகோவா”ன்னு சொன்னிங்க, இப்ப “இருக்கிறேன்” என்று சொல்றிங்க? அப்படினா அல்லேலூ 'யா'
என்றால் "இருக்குறவன துதி" என்று தானே அர்த்தம்? அப்பா நீங்க முதல்லா சொன்ன கருத்து தப்பா?
உங்களுக்கு நிங்களே முரண்னான கருத்துகளை சொல்லி கொள்வின்களா? கொஞ்சம் தெளிவகுங்க ப்ளீஸ்...
-ஜாவித்
Dear Jawid,
நான் கொட்டை எழுத்தில் "அல்லாஹ்வும் பைபிளின் "இருக்கிறேன்" என்கின்ற யேகோவா தேவனும் ஒருவரல்ல:" என்று எழுதியுள்ளேன். "இருக்கிறேன்" என்பது தமிழ், யேகோவா என்பது எபிரேயம், I AM என்பது ஆங்கிலம்.
அது சரி, உங்கள் சகோதரர் ஜியா அவர்களிடம் சென்று இக்கட்டுரைக்கு என்ன பதில் என்று கேட்டீர்களா? இல்லையா?
உங்களிடம் ஒரு கேள்வி: ஜியா அவர்களின் கட்டுரையையும், இந்த என் பதிலையும் படித்தீர்களே, உங்கள் கருத்து என்ன? ஜியா சொன்னது சரியா அல்லது நான் கொடுத்த மறுப்பு சரியா?
Mr.Umar,what zia anna said was truly the truth....
Mr.Umar,zia anna's post was truly the truth..Just stop collapsing people,and find a better way to do your posts....hats off zia anna...
உமர் அண்ணா, என் கேள்விய நீங்க புரிஞ்சிகலன்னு நினைகிறேன், முதல்ளா “அல்லேலுயா” வார்த்தைக்கு – “யேகோவா தேவனை துதித்தல்” என்ற சொன்னிங்க, இது தமிழ் விளக்கம் தானே? இப்ப “யேகோவா” என்பதற்க்கு “இருக்கிறேன்” என்பது தமிழ்ன்னு சொல்றிங்க, அப்படினா “இருக்கிறவனை துதி” என்பது தானே சரியான தமிழ் விளக்கம்? அல்லது “யேகோவா தேவனை துதித்தல்” என்பது சரியான தமிழ் விளக்கமா? எது “அல்லேலுயா”வுக்கு சரியான தமிழ் விளக்கம்ன்னு கொஞ்சம் தெளிவ விளகுரிங்களா???
அண்ணா, ஜியா அண்ணன் கொடுத்த விளக்கத்துக்கு நீங்க இன்னும் சரியான மறுப்பு கொடுகலன்னு தான் எனக்கு தோணுது. நீங்க உங்க “யேகோவா தேவனை துதித்தல்” என்பதையே இன்னும் சரியா நிருபிக்களா, ஜியா அண்ணன் சொன்ன “அவன் தான் எலொஹு, அவனையெ துதி" என்கிறதையும் தெளிவ மறுக்கல, அவங்க குடுத்த விவாத அழைப்பை ஏத்துகிட்டு கையெழுத்திட்ட அக்ரிமென்ட் வெளியிடல, இப்படி இருக்கும் பொழுது எத வச்சு நீங்க சொல்றது சரின்னு முடிவு பன்ன சொல்றிங்க?
நானே உங்கள்டா கேள்வி கேட்டுகிட்டு இருக்கேன், ஜியா அண்ணன் பதில் எழுதாம இருப்பாரா!!! கண்டிப்பா வரும்னு எதிர் பாக்கிறேன். ஆனா அதுக்கு பதில் எழுத்த நீங்க இன்னும் டைம் எடுபிங்க, அது தான் வருத்தம்...
உமர் அண்ணா, “I am” ன்னு சொன்ன “இருக்கிறவன்” என்ற அர்த்தம் எந்த “dictionary”ல கண்டு புடிச்சிங்க கொஞ்சம் சொல்றிங்களா, என்னால் கண்டு புடிக்க முடியளா...
-ஜாவித்
jawid anna,i guess umar anna is having an odd diction where "i am" means irrukiren..anna umar anna bible'la padichu thappu thappa post pannaanga..ippa dictionary'ya kooda uttu vaikala...Guess umar anna gonna publish a diction where "I am" means irukiren...hilarious...jawid anna,umar anna is fed up of his own lies post,thats why he is not having any new post to be published..Lets wait and watch..superb jawid bro..allah hafizz..
திரு ஜாவித் மற்றும் சையத் அலி அவர்களுக்காக ஒரு சின்ன பின்னூட்டம் :
ஆங்கிலத்தில் "I AM" (OR) "I" என்றால் தமிழில் எப்படி "இருக்கிறேன்" என்று பொருள் வரும்?
http://isakoran.blogspot.com/2011/03/i-am-or-i.html
Umar
உமர் அண்ணா, உங்களுக்கு ஆங்கிலம் தமிழ் ரெண்டும் தெரியாதுன்னு ஒதுகிடத்துக்கு ரோம்ப நன்றி, அப்படினா தெரியாத மொழிலா கட்டுரை எழுதுறது தப்புதானே? அப்படினா முதல்லா நீங்க இந்த மொழிகளை ஓரளவு படிச்சுட்டு தானே கட்டுரை எழுத்த ஆரம்பிக்கணும்? நான் சொல்றது சரி தானே அண்ணா? நான் எழுத்து பிழையைய பத்தி பேசல, பொதுவ உங்க மொழி பெயர்புல இருக்குற கருத்து பிழையா பத்தி பேசுறேன்.
அண்ணா, இஸ்லாமியர்களுக்கு எப்படி பதில் அளிக்க தெரியும்னு சொல்றிங்க, அண்ணா என் கேள்விகளில் ஒன்னுக்கு மட்டும் அதிலும் தவறான பதில் தர்ரிங்க, என்னுடைய மத்த கேள்விகள் எல்லாம் என்ன ஆச்சு? அதுக்கு பதில் சொல்ல உங்களுக்கு தெரியாதா?
உமர் அண்ணா, கேள்விய புரிஞ்சுகாம தப்பு தப்பா எதிர் கேள்வி கேட்கிறது உங்கள் வழக்கமா போச்சு. கேள்வி கேட்ட விளக்கம் தரனும், மாறாக எதிர் கேள்வி கேட்க கூடாது, விளக்கம் அழிச்சிட்டு நீங்க விரும்பின எதிர் கேள்வி கேக்கலாம். முதல்லா எதிர் கேள்வி பதில் ஆகாது என்பதை கொஞ்சம் புரிஞ்சுகொங்க.
இப்ப என் கேள்வியை மறுபடியும் ஒரு முறை கொஞ்சம் நிதானமா படிச்சு பாருங்க. நீங்க தான் யேகோவா என்கிற வார்த்தைக்கு ஆங்கிலத்துல "I am" ன்னு சொனிங்க, தமிழ்ல இருக்கிறவன்ன்னு சொனிங்க, அதுக்கு தான் நான் "I am" என்கிறதுக்கு இருக்கிறவன் என்று எந்த “dictionary“ கண்டுபுடிசிங்கன்னு கேட்டேன். ஆனா இப்ப நீங்க எதிர் கேள்வி கேக்குறது வசனங்களின் கோர்ப்புபை முன் வச்சு.
i am waiting for umars answer – என்று ஆங்கிலத்தில் சொன்ன, நான் உமர் அவர்களின் பதில்க்காக காத்து இருக்கிறேன் என்று அர்த்தம். இது ஒரு சொற் தொடர். ஆனால் நீங்கள் சொன்னது வேறும் “I am” என்றால் “இருக்கிறவன்” என்ற பொருள், இரண்டுக்கும் வித்தியாசம் புரியுதா?
எந்த “dictionary“யிலும் நீங்கள் சொல்லும் விளக்கம் இருக்காது, ஆனா ஒரு சொற் தொடர்லா, ஒரு செயலை தொடர்ந்து செய்வதை அறிவிக்கும் பொழுது, அதை செய்து கொண்டு “இருக்கிறேன்” என்று மொழியாக்க படுகிறது. நான் “I am” என்றால் “இருக்கிறவன்” என்ற பொருள் சொலலா, நீங்க தான் சொனிங்க அதை விளக்க சொல்லி தான் நான் கேக்குறேன்.
இப்ப மறுபடியும் கேக்குறேன், எந்த “dictionary“யில் “I am” என்றால் “இருக்கிறவன்” என்ற அர்த்தம் வந்தது? அப்படி எந்த “dictionary“ யிலும் கிடையாது என்றால் நீங்க சொன்ன “I am” என்றால் “இருக்கிறவன்” என்ற அர்த்தம் தப்புன்னு ஒத்துகுரிங்களா?
-ஜாவித்
கருத்துரையிடுக