ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

 1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
 2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
 3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
 4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
 5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
 6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
 7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
 8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
 9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
 10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
 11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
 12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
 13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
 14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
 15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
 16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
 17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
 18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
 19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
 20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
 21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
 22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
 23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
 28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
 29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
 30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
 31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
 32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
 33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
 34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
 35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
 36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
 37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
 38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
 39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
 40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
 41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
 42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
 43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
 44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
 45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
 46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
 47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
 48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
 49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
 50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
 51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
 53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
 54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
 55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
 56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
 57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

 1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
 2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
 3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
 4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
 5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
 6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
 7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
 8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
 9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
 10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
 11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
 12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
 13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
 14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
 15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
 16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
 17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
 18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
 19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
 20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
 21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
 22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
 23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
 24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
 25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
 26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
 27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
 28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
 29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
 30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
 31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
 32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
 33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
 34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
 35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
 36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
 37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
 38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
 39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
 40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
 41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
 42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
 43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
 44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
 45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
 46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
 47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
 48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
 49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 2 ஜூன், 2012

தமீம் அன்சாரிக்கு உம‌ர் பதில்: முஹம்மதுவின் மனைவிகள் முஸ்லிம்களின் அன்னையர்கள்! அப்படியானால்....

(மத்தேயு 23:9 vs குர்‍ஆன் 33:6)

"தமீம் அன்சாரி" என்று ஒரு இஸ்லாமிய சகோதரர் ஆன்சரிங் இஸ்லாம் தளத்திலிருந்து ஒரு பின்னூட்டத்தை எனக்கு அனுப்பியிருந்தார். அதாவது மத்தேயு 23:9ம் வசனத்தைப் பற்றிய ஒரு விளக்கத்தை (கேலியாக) அனுப்பியிருந்தார்.

இந்த வசனம் பற்றி நம் தளத்தில் கொல்வின் சகோதரர் ஏற்கனவே ஒரு பதிலை சுருக்கமாக‌ பதித்து இருந்தார், எனவே, அந்த பதிலை இந்த இஸ்லாமியருக்கு இங்கு தருகிறேன். மேலும், இஸ்லாமியர்களின் லாஜிக் எப்படி அவர்களுக்கே தலைவலியாக அல்லது பிரச்சனையாக மாறுகிறது என்பதையும் இதே கட்டுரையில் விளக்குகிறேன்.

இந்த கட்டுரையில் கீழ்கண்ட தலைப்புகளில் நாம் விவரங்களை காண்போம்.

1) இஸ்லாமியர் தமீம் அன்சாரி அவர்கள் அனுப்பிய பின்னூட்டம்

2) சகோதரர் கொல்வின் அவர்களின் பதில்

3) இஸ்லாமியர்களின் லாஜிக் எப்படி அவர்களுக்கே கேடு விளைவிக்கும் ?

4) முடிவுரை


முஹம்மதுவின் மனைவிகள் முஸ்லிம்களின் அன்னையர்கள்! அப்படியானால்....

1) இஸ்லாமியர் தமீம் அன்சாரி அவர்கள் அனுப்பிய பின்னூட்டம்
from: Thamem thamem_ansarixxxxxxxxxx@yahoo.com
to: isa.koranxxxxxxx@gmail.com
date: Thu, May 24, 2012 at 3:52 PM
subject: Feedback from Answering Islam
NAME: Thamem

MESSAGE:
அன்பு கிறுத்தவ சகோதரர்களே தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள், அந்த கணக்கெடுப்பில் நம்மை கிறுத்துவ நடைமுறைக்கு எதிராக நடக்க வைக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. அவர்களிடம் ஏமாந்து விடாமல் உங்களின் தந்தையின் பெயரை கேட்கும்போது எல்லா கிறுத்தவர்களும் மறக்காமல் பரலோகத்தில் உள்ள நம் பிதாவின் பெயரை மட்டும் சொல்லவும். அவ்வாறு செய்வதன் மூலம் நம் வேதாகமத்தை பொய்யாக்க நடக்கும் முயற்சிகள் முறியடிக்கப்படும். வேத வசனம் வெல்லட்டும்! அல்லேலுயா!

மத்தேயு 23:9பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார்.
2) சகோதரர் கொல்வின் அவர்கள் பதித்த பதில்

சகோதரர் கொல்வின் அவர்கள் பதித்த பதில் போதுமானதாக இருக்கிறது. ஆகையால், அதனை இங்கு அந்த இஸ்லாமியருக்கு பதிலாக பதிக்கிறேன்.

Brother Colvin: இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்'' (மத்தேயு 23:9)

-- இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மறைநூல் அறிஞரும் பரிசேயரும் தங்களை மக்கள் பாராட்டிப் போற்றவேண்டும் என்றும், சிறப்புப் பெயர்கள் சூட்டி தங்களை அழைக்க வேண்டும் என்றும் எதிர்பார்த்தார்கள். யூத சமயத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த அத்தலைவர்கள் ''ரபி'' (போதகர்), ''தந்தை'' போன்ற பெயர்களால் அழைக்கப்படுவதை விரும்பினார்கள். அவர்களைப் பார்த்து இயேசு கூறியது: ''இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார்''. சிலர் இயேசு கூறிய இச்சொற்களுக்குத் தவறான விளக்கம் தந்து, இயேசு நாம் யாரையும் தந்தை என அழைக்கலாகாது எனக் கூறுகிறார் என்பர். இது சரியான விளக்கம் அல்ல. இங்கே குறிக்கப்படுகின்ற ''தந்தை'' என்னும் சொல் நம் சொந்தப் பெற்றோரைக் குறிக்க நாம் பயன்படுத்தும் சொல் அல்ல. மாறாக, வணக்கமும் மரியாதையும் பெறும் வண்ணம் அக்கால மறைநூல் அறிஞரும் பரிசேயரும் தங்களை மக்கள் ''தந்தை'' என அழைக்கவேண்டும் என்று கோரியது சரியல்ல என்பதே இயேசுவின் போதனை. மேலும், கிறிஸ்தவ சபைகளில் தலைமைப் பொறுப்புக் கொண்டவர்களைத் தந்தையர் என அழைக்கும் வழக்கம் உண்டு. இதை இயேசு கண்டனம் செய்தார் என்பதும் சரியாகாது. கடவுள் ஒருவரே நம் அனைவருக்கும் தந்தை. அதே நேரத்தில் கடவுளின் பெயரால் நம்மை வழிநடத்தும் பொறுப்புடையோரை நாம் தந்தையர் என அழைப்பது பொருத்தமே.

-- போதகர் என்றும் தந்தை என்றும் திருச்சபையில் அழைக்கப்படுபவர்கள் உண்மையிலேயே இயேசுவின் போதனையைப் போதிப்பவர்களாக இருக்க வேண்டும்; அனைவருக்கும் தந்தையாகிற கடவுளின் அன்பை மக்களோடு பகிர்ந்துகொள்பவர்களாக வாழ வேண்டும். அப்போது அவர்களுடைய சொல்லும் செயலும் ஒன்றோடொன்று இணைந்து செல்லும். அக்காலப் பரிசேயரிடமும் மறைநூல் அறிஞரிடமும் இயேசு கண்ட குறை நம்மிடையே தோன்றாது. வெளிவேடம் இல்லாத இடத்தில் உண்மையான பண்பு துலங்கி மிளிரும்.

மூலம்: http://www.tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=4&topic=2416&Itemid=287
3) இஸ்லாமியர்களின் லாஜிக் எப்படி அவர்களுக்கே கேடு விளைவிக்கும்?

இதர மார்க்க விஷயங்களில் அதிகமாக தங்கள் கைவரிசயை காட்ட இஸ்லாமியர்கள் அதிகமாக விரும்புவார்கள். ஆனால், அதே லாஜிக்கை தங்கள் மார்க்க விஷயங்களுக்கு என்று வரும் போது, தத்துவம் பேசுவார்கள், விஞ்ஞானம் பேசுவார்கள், அவதூறு சொல்கிறார்கள் என்று புலம்புவார்கள்.

நம்முடைய அன்பு சகோதரர் தமீம் அன்சாரி அவர்கள், பைபிளின் ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டு, அதன் பின்னனி என்ன? அந்த வார்த்தைகளை இயேசு கூறும் போது எந்த அர்த்தத்தோடு கூறினார், போன்றவற்றை புறக்கணித்துவிட்டு, கேலியாக விமர்சித்துள்ளார்.

அதாவது, இதர மார்க்க விஷயங்களில் எப்போதும் "எழுத்துவாரியாக பொருள் செய்வது" இவர்களின் வழக்கம். மத்தேயு 23:9ம் வசனத்தில் "யாரையும் உங்கள் தந்தை என்று அழைக்கவேண்டாம், தேவன் ஒருவரே உங்கள் தந்தையாக இருக்கிறார்" என்று இயேசு கூறியதை, சரீர பிரகாரமான தந்தையை இயேசு குறிப்பிடுகிறார் என்று அர்த்தம் செய்துக்கொண்டு விமர்சித்துள்ளார். இது தெரியாமல் செய்த பிழை அல்ல, தெரிந்தே பைபிளை கேலிசெய்யவேண்டும் என்று எடுத்த ஒரு இஸ்லாமிய முயற்சி.

இஸ்லாமியர்களின் இந்த லாஜிக்படியே நாமும் ஒரு விஷயத்தை இங்கு காணப்போகிறோம், அதாவது குர்ஆனின் ஒரு வசனத்தை சகோதரர் தமீம் அன்சாரி அவர்கள் தங்கள் இஸ்லாமிய வழக்கப்படி பொருள் கூறினால் எப்படி இருக்கும் என்பதை இப்போது காண்போம். இந்த இடத்தில் என்னை தவறாக யாரும் நினைக்கவேண்டாம், இது என்னுடைய லாஜிக் இல்லை, இது தமீம் அன்சாரி அவர்களின் லாஜிக், அதாவது இஸ்லாமியர்களின் லாஜிக்.

இப்போது குர்ஆன் 33:6ம் வசனத்தின் முதல் பாகத்தை ஒருமுறை பார்ப்போம்:

இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார் இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர். …. (33:6)

இந்த குர்ஆன் வசனத்தில், முஹம்மதுவின் மனைவிமார்கள், இஸ்லாமியர்களுக்கு தாய்மார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. சகோதரர் தமீம் அன்சாரி தன்னுடைய லாஜிக்கின் படி சொல்லவேண்டுமென்றால், கீழ்கண்டவாறு கூறுவார்:

அன்பு இஸ்லாமிய சகோதரர்களே தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது என்பதை தாங்கள் அறிவீர்கள், அந்த கணக்கெடுப்பில் நம்மை இஸ்லாமிய நடைமுறைக்கு எதிராக நடக்க வைக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. அவர்களிடம் ஏமாந்து விடாமல் உங்களின் தாய்மார்களின் பெயரை கேட்கும்போது எல்லா முஸ்லிம்களும் மறக்காமல் உங்களைப் பெற்ற தாயின் பெயரோடு கூட, நம்முடைய இறைத்தூதர் அவர்களின் மனைவிமார்களின் பெயர்களையும் சொல்லவும். அவ்வாறு செய்வதன் மூலம் நம் இறைவேதத்தை பொய்யாக்க நடக்கும் முயற்சிகள் முறியடிக்கப்படும். இறை வசனம் வெல்லட்டும்! அல்லாஹு அக்பர்!

இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார் இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர். …. (33:6).

உதாரணத்திற்கு தமீம் அன்சாரி அவர்கள் ஜாதிவாரியான கணக்கெடுப்பில் பதில் தரும் போது, முஹம்மதுவின் மனைவிகள் அனைவரின் பெயர்களையும் குறிப்பிட்டு, இவர்கள் என் தாய்மார்கள் என்றுச் சொல்வார்.

குர்ஆன் வசனம் 33:6ன் படி, ஒவ்வொரு முஸ்லிமுக்கும் முஹம்மதுவின் மனைவிகள் தாய்மார்கள் ஆவார்கள். முஸ்லிம்களின் லாஜிக்கின் படி, இப்படிப்பட்ட வசனங்களுக்கு ஒரு சரீர பிரகாரமான உறவுமுறையை பொருளாக சொல்வதினால், தமீம் அன்சாரி அவர்களுக்கும், முஹம்மதுவின் மனைவிகள் சரீர பிரகாரமான தாய்மார்கள் ஆவார்கள். ஆனால், இங்கு பிரச்சனை என்னவென்றால், தமீம் அன்சாரி அவர்களின் சரீர பிரகாரமான தாய்மார்கள், அவருடைய அப்பாவிற்கு சரீர பிரகாரமான மனைவியாவார்கள். அதாவது முஹம்மதுவின் மனைவிகள், தமீம் அன்சாரி அவர்களின் அப்பாவிற்கும் மனைவிகள் என்று கருத்து கொள்ளவேண்டி வருகிறது. இது தான் சிக்கல்.

இப்படி உலக இஸ்லாமியர்கள் அனைவருக்கும் முஹம்மதுவின் மனைவிகள் சரீர பிரகார மனைவிகள் என்று சொல்லவேண்டி வரும். இப்படி தமீம் அன்சாரி அவர்களும் பொருள் கொள்ளமாட்டார்கள், நானும் இப்படி பொருள் கொள்ளமாட்டேன். ஆனால், தமீம் அன்சாரிக்கு தன்னுடைய லாஜிக் தன்னுடைய மார்க்கத்தை எந்த இடத்தில் கொண்டுச் சேர்த்துள்ளது என்று நன்றாக புரிந்து இருக்கும். இப்போது தமீம் அன்சாரி செய்த தவறு என்ன‌ என்று அவருக்கே புரிந்து இருக்கும்!

குர்ஆன் 33:6ம் வசனம் சரீர பிரகாரமான பொருளில் சொல்லப்படவில்லை என்று எனக்கு தெரிந்திருந்தாலும், தமீம் அன்சாரி போன்றவர்களின் அறியாமையை போக்குவதற்கு அவர்களின் வழியிலேயேச் சென்று விவரிக்கவேண்டியுள்ளது, அப்போது தான் இப்படிப்பட்டவர்கள் மற்றவர்களின் மார்க்க விஷயங்களில் நேர்மையாக நியாயமாக நடந்துக் கொள்வார்கள். அதாவது இப்படிப்பட்ட இஸ்லாமியர் சிலருக்கு சுளுக்கு பிடித்து இருக்கும், அந்த சுளுக்குக்கு சிகிச்சை செய்து அதை போக்கவேண்டும், போக்கவில்லையானால், அவர்கள் கஷ்டப்படுவார்கள். நம்முடைய இஸ்லாமிய சகோதரர்களின் சுளுக்கை நீக்குவது, கிறிஸ்தவர்களாகிய நம்முடைய கடமையல்லவா? ஆகையால் தான் அவர்களுக்கு புரியும் வண்ணம் அவர்களின் சுளுக்கை நீக்கியுள்ளேன். முழு சுளுக்கும் உடனே நீங்காது. இதற்கு அதிக நாட்கள் ஆகும், கடந்த சில ஆண்டுகளாக தமிழ் கிறிஸ்தவ சகோதரர்களின் அதிகமான வருகையால், எழுத்துக்களால், இஸ்லாமியர்களின் இந்த சுளுக்கு சிறிது சிறிதாக நீங்கிக்கொண்டு இருக்கிறது.

[இந்த வரிகளை எழுதும் எனக்கு இன்று உண்மையாகவே கழுத்தில் சுளுக்கு பிடித்து இருக்கிறது, கழுத்தை இப்படியும் அப்படியும் திருப்பமுடியவில்லை. என்ன! உமருக்கும் சுளுக்கா? என்று கேட்கவேண்டாம், எனக்கு இன்று பிடித்து இருப்பது "கழுத்து சுளுக்கு", தமீம் அன்சாரி சகோதரருக்கு பிடித்து இருப்பது, "கருத்து சுளுக்கு". கழுத்து சுளுக்கை சீக்கிரமாக சுகமாக்கிவிடலாம், ஆனால், கருத்து சுளுக்கை நீக்குவதற்கு அதிக நேரமும், பிரயாசமும் தேவைப்படும் ஏனென்றால், கருத்து சுளுக்கு அவர்களின் மூளைக்குள் சிறிது சிறிதாகச் சென்று, இன்று சிம்மாசனம் போட்டு ‌அமர்ந்துள்ளது, அந்த சுளுக்கை நீக்க இப்படிப்பட்ட அவசர மற்றும் ஆழமான சிகிச்சைகள் தேவைப்படுகிறது.]

4) முடிவுரை:

இந்த நேரத்தில் நீதிமொழிகள் 26:4, 5ம் வசனங்களை ஒரு முறை பார்ப்பது நல்லது என்று கருதுகிறேன்.

மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான். (நீதிமொழிகள் 26:5)

மேற்கண்ட வசனத்தின் படி, இஸ்லாமியர்களின் அறியாமையை அவர்கள் உணரும்படி நாம் பதில் தரவேண்டும். இல்லையென்றால், அவர்கள் தங்கள் பார்வைக்கு ஞானவான்களாக கருதிக்கொண்டு, இன்னும் அதிக கேடு விளைவிப்பார்கள். தங்களுக்கு பைபிள் பற்றி எதுவும் தெரியாதபட்சத்திலும், யாரோ சொன்னதை அப்படியே எல்லா இடத்திலும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள்.

இதே போல, கீழ்கண்ட வசனத்தின் படி, இஸ்லாமியர்களின் நிலைக்கு நாமும் இறங்கி பதில் தரக்கூடாது, அதாவது, உண்மை எது என்று தெரிந்தும் வேண்டுமென்றே அவர்கள் பைபிளின் வசனங்களுக்கு வியாக்கீனம் செய்வது போல நாம் செய்யக்கூடாது.

மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய். (நீதிமொழிகள் 26:4)

குர்‍ஆன் 33:6ம் வசனத்தில் சொல்லப்பட்ட விவரம் நேரடியான பொருளில் எடுக்கத் தேவையில்லை, அதாவது முஹம்மதுவின் மனைவிகள் எல்லா இஸ்லாமியர்களுக்கும் சரீர பிரகாரமான உறவு முறையை கருத்தில் கொண்டு "தாய்மார்கள்" என்று சொல்லவில்லை என்பதை நாம் அறிவோம். இதனை அறிந்து இருந்தும், இஸ்லாமியர்கள் போல கீழ்தரமாக நம்முடையை நிலையை இறக்கிவிட்டு, "இந்த வசனம் சரீர பிரகாரமான உறவுமுறையைத் தான் குறிக்கிறது" என்று நாம் சொல்வதில்லை, அதாவது அவர்களைப்போல நாமும் நம் நிலையை விட்டு இறங்கி கேள்வி கேட்பதில்லை. இப்படி செய்தால், அவர்களைப்போல நாமும் அஞ்ஞானிகளாக கருதப்படுவோம்.

கடைசியாக, எல்லா இஸ்லாமியர்களுக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால், அல்லது இதனை நீங்கள் எச்சரிக்கையாகவும் எடுத்துக்கொள்ளலாம், அதாவது பைபிளின் வசனங்களுக்கு நேர்மையான முறையில் நீங்கள் விமர்சனம் செய்தால், அல்லது விளக்கம் கேட்டால், கிறிஸ்தவர்கள் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளார்கள். ஆனால், உண்மை தெரிந்து இருந்தும் வேண்டுமென்றே மாற்றி பொருள் கூறுவது, கிண்டலடிப்பது போன்றவைகள் செய்தால், உங்கள் வழியிலேயே வந்து உங்கள் அறியாமை என்ன என்பது உங்களுக்கே புரியும் வண்ணம் பதில் தர கிறிஸ்தவர்கள் தயங்க மாட்டார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த மத்தேயு 23:9ம் வசனம் பற்றி சுருக்கமாக கொடுக்கப்பட்ட பதிலே போதுமானதாக உள்ளது. இன்னும் நீண்ட விளக்கம் தேவைப்படுகிறது என்று இஸ்லாமியர்கள் கருதினால், அதை தெரியப்படுத்தினால் நிச்சயமாக விளக்கம் தரப்படும்

கருத்துகள் இல்லை: