[ அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1, கடிதம் 2, கடிதம் 3, கடிதம் 4, கடிதம் 5, கடிதம் 6, கடிதம் 7, கடிதம் 8 , கடிதம் 9, கடிதம் 10, கடிதம் 11, கடிதம் 12, கடிதம் 13, கடிதம் 14, கடிதம் 15, கடிதம் 16 ]
அன்புள்ள தம்பிக்கு,
சாந்தியும் சமாதானமும் உனக்கு உண்டாவதாக.
தம்பி, நீ தொடர்ந்து என்னோடு கடிதத்தொடர்பு வைத்துக்கொண்டு இருப்பதினால் நான் அதிகமாக சந்தோஷமாக இருக்கிறேன்.
உன் கடிதத்தில் நீ குறிப்பிட்டு இருந்தாய், அதாவது "பழைய ஏற்பாட்டில் முஹம்மதுவைப் பற்றிய முன்னறிவிப்புக்கள் உண்டு, உன்னதப்பாட்டு 5:14-16 வரையுள்ள வசனத்தில், "முஹம்மது" என்ற பெயர் அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது என்றும், இந்த வசனத்தில் வரும் பெயர் எபிரேய மொழியில் அப்படியே முஹம்மது என்பதாகும் என்றும் நீ எழுதியுள்ளாய்". மேலும் உன் இஸ்லாமிய நண்பர்கள் எபிரேய மொழியை கற்ற ஒரு இஸ்லாமிய இமாமிடம் உன்னை கொண்டுச் சென்றதாகவும், நீ அவரிடம் கேள்வி கேட்டு, அவர் எபிரேய மொழியில் உனக்கு அந்த உன்னத்தப்பாட்டு வசனத்தை காட்டியதாகவும் நீ கூறினாய்". ஆகையால், பைபிளில் முன்னறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசியை ஏன் நீங்கள் விசுவாசிக்கக்கூடாது என்று என்னிடம் கேட்டு இருந்தாய்.
உன் ஆய்வையும், ஆர்வத்தையும் நான் மெச்சிக்கொள்கிறேன். உன் கேள்விகளுக்கு பதில்களை எழுதுவது எனக்கு மிகவும் பிடித்தமான வேலையாக உள்ளது.
உனக்கு சலிப்பு உண்டாகக்கூடாது என்பதற்காக நான் என் கடிதங்களில் குறைந்த வசன மேற்கோள்களை கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். ஆனால், நீ கேட்கும் கேள்விகள் சில நேரங்களில் என்னை அதிகமான வசனங்களை மேற்கோள்களாக காட்டி விளக்க கட்டாயப்படுத்துகின்றன. அப்படிப்பட்ட
ஒரு கேள்வியை நீ கேட்டுள்ளாய். நான் இப்போது உன் கேள்விக்கு பதிலை தருகிறேன்.
ஆக, உங்களுக்கு தேவையான பைபிள் வசனங்களை பிடித்துக்கொண்டு இவைகள் திருத்தப்படாத வசனங்கள் என்று சொல்லுவீர்கள், அதே பைபிளின் அடுத்தடுத்த வசனங்கள் திருத்தப்பட்டுள்ளது என்று சொல்லுவீர்கள், இது என்ன நியாயம்?
இப்போது நேரடியாக உன் கேள்விக்கான பதிலை காணலாம்.
முதலாவதாக, முஹம்மது பற்றிய எந்த ஒரு முன்னறிவிப்பும் பைபிளில் இல்லை, அது பழைய ஏற்பாடாக இருக்கட்டும், அல்லது புதிய ஏற்பாடாக இருக்கட்டும், இரண்டிலும் உங்கள் நபி பற்றி ஒரு சிறு குறிப்பும் இல்லை.
இரண்டாவதாக, உன்னத்தப்பாட்டிற்கு வரும் போது, அது கணவன் மனைவி அல்லது காதலன் காதலிக்கு இடையே நடைபெற்ற ஒரு உரையாடலாக உள்ளது. இப்போது நீ மேற்கோள் காட்டிய வசனங்களை படிப்போம்:
5:14 அவர் கரங்கள் படிகப்பச்சை பதித்த பொன் வளையல்களைப் போலிருக்கிறது; அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது.
5:15 அவர் கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது; அவர் ரூபம் லீபனோனைப்போலவும் கேதுருக்களைப்போலவும் சிறப்பாயிருக்கிறது.
5:16 அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் குமாரத்திகளே! இவரே என் சிநேகிதர்.
மேற்கண்ட வசனங்களை முழுவதுமாக முதலாம் வசனத்திலிருந்து படித்துப்பார்த்தால், ஒரு பெண் தன் நாயகனைப் பற்றி வர்ணிக்கும் வர்ணனையை காணலாம். இந்த விவரங்களில் திடீரென்று 7ம் நூற்றாண்டில் வந்த முஹம்மது எங்கே வந்தார்? தம்பி, நீ முதலாவது ஒரு வசனத்திற்கு பொருள் கூறும் போது, அதைச் சுற்றியுள்ள வசனங்களை கவனிக்க வேண்டாமா? இப்படியா அறைகுறையாக வியாக்கீனம் செய்வது சரியா?
இப்போது 16ம் வசனத்தை எபிரேய மொழியில் பார்க்கலாம்:
எபிரேய மொழியில் இந்த வார்த்தையின் எண்: 4261
எபிரேய வார்த்தை: מַחְמָד (machmad)
அர்த்தம்: 1) desire, desirable thing, pleasant thing – ஆசையான, விருப்பமுள்ள, அழகான.
இந்த தொடுப்பை சொடுக்கி, எபிரேய அகராதியில் இந்த விளக்கத்தை தெரிந்துக்கொள்:
Source: http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=H4261&t=KJV
மக்மத்: என்ற வார்த்தை எங்கு வந்தாலும் அங்கு உங்கள் முஹம்மது இருக்கிறார் என்றுச் சொல்வது அறியாமையாக உள்ளது. நீ வெறும் உன்னதப்பாட்டை மற்றுமே மேற்கோள் காட்டினாய், இந்த வார்த்தை வரும் இதர வசனங்களையும் காண்போம். இந்த ஒவ்வொரு இடத்திலும் உங்கள் முஹம்மது பற்றியே முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது என்றுச் சொல்லுவாயா? நிச்சயமாக சொல்லமாட்டாய்!
1) பழைய ஏற்பாட்டிலிருந்து 1 இராஜாக்கள் 20:6ம் வசனத்தை ஒரு முறை படிப்போமா?
ஆனாலும் நாளை இந்நேரத்தில் என் ஊழியக்காரரை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவர்கள் உன் வீட்டையும் உன் ஊழியக்காரரின் வீடுகளையும் சோதித்து, உன் கண்ணுக்குப் பிரியமானவைகள் எல்லாவற்றையும் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு போவார்கள் என்றார் என்று சொன்னார்கள். ( 1 இராஜாக்கம் 20:6)
இந்த வசனத்தில் "பிரியமானவைகள்" என்ற தமிழ் வார்த்தையின் எபிரேய வார்த்தை, நீ சொல்லுகின்ற "மக்மத்" என்பதாகும். ஒரு இராஜா இன்னொரு இராஜாவிடம் சொல்லியனுப்பிய செய்தி தான் இந்த வசனமாகும். உன் வீட்டில் இருக்கும் நல்லவைகள் அனைத்தையும் என் சேவகர்கள் எடுத்துக்கொள்வார்கள் என்று சொல்லியனுப்புகிறார். தம்பி இந்த இடத்திலும் உங்கள் முஹம்மது பற்றி முன்னறிவிப்பு உண்டா? முழு அதிகாரத்தையும் படித்துப்பார் தம்பி.
2) அதே பழைய ஏற்பாட்டில், 2 நாளாகமம் 36:19ம் வசனத்தை படிப்போமா?
தம்பி இந்த வசனத்தில் "திவ்வியமான" என்ற தமிழ் வார்த்தையின் எபிரேய வார்த்தை தான் "மக்மத்" என்பது, அதாவது ஆலயத்தை தீயிட்டு கொளுத்தி, அதில் கணப்பட்ட அழகான பணிமுட்டுக்களையும் அழித்துவிட்டார்கள் என்று இந்த வசனம் சொல்கிறது.
அவர்கள் தேவனுடைய ஆலயத்தைத் தீக்கொளுத்தி, எருசலேமின் அலங்கத்தை இடித்து, அதின் மாளிகைகளையெல்லாம் அக்கினியால் சுட்டெரித்து, அதிலிருந்த திவ்வியமான பணிமுட்டுகளையெல்லாம் அழித்தார்கள். (2 நாளாகமம் 36:19)
தம்பி, இந்த இடத்தில் உங்கள் முஹம்மதுவை சேர்த்து எழுதினால் "அதிலிருந்த முஹம்மதுவான பணிமுட்டுகளையெல்லாம் அழித்தார்கள்" என்று வரும். இதன் பொருள் உங்கள் முஹம்மதுவை அழித்தார்கள் என்று வருகிறது. இது சரியான ஒன்றாகுமா? சிந்தித்துப்பார். உங்கள் இஸ்லாமியர்களின் வாதஞானம் எவ்வளவு கெடுதியை முஹம்மதுவிற்கு உண்டாக்குகிறது என்று பார்த்தயா? நீ பேசிய அந்த எபிரேயம் தெரிந்த இஸ்லாமிய இமாம், உன்னதப்பாட்டை மட்டுமே படிப்பாரா, ஆய்வு செய்வாரா? இந்த இதர புத்தகங்களை படிக்கமாட்டாரா?
உனக்கு இன்னும் அனேக வசனங்கள் காட்டி சலிப்புண்டாக்க நான் விரும்பவில்லை, இந்த தொடுப்பை சொடுக்கி (http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=H4261&t=KJV) இதர வசனங்களையும் சரி பார்த்துக்கொள்.
இந்த வார்த்தை இடம்பெறும் வசனங்கள்: உன்னதப்பட்டு 5:16 (நீ குறிப்பிட்ட வசனம்), ஏசாயா 64:11, புலம்பல் 1:10,11, எசேக்கியேல் 24:16, 21, 25, ஓசியா 9:6, 16 , யோவேல் 3:5
இஸ்லாமிய அறிஞர்களின் ஏமாற்றுவேலை:
"மக்மத்" என்றால், "நல்ல, பிரியமான, இனிமையான" போன்ற அர்த்தங்கள் கொண்ட வார்த்தையாகும். இது அனேக இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது, அவைகளை நீயே சரி பார்த்துக்கொள்ளலாம். ஆனால், இஸ்லாமிய அறிஞர்கள் நம்மிடம் வந்து முஹம்மது குறித்த முன்னறிவிப்புக்கள் பைபிளில் உள்ளது என்றுச் சொல்லும் போது, அவர்கள் உண்மையை மறைத்துக்கூறுவார்கள். உன்னதப்பாட்டில் முஹம்மதுவின் முன்னறிவிப்பு உள்ளது என்று உனக்கு சொன்னவர்கள், இதர வசனங்களில் கூட அந்த வார்த்தை உள்ளது என்று ஏன் உனக்கு தெரிவிக்கவில்லை? ஏனென்றால், அவர்கள் எதனை உனக்கு சொல்லவேண்டுமென்று நினைத்தார்களோ, அதனை மட்டுமே கூறுவார்கள், நாம் தான் ஏமாறாமல் இருந்து எல்லாவற்றையும் சோதித்து பார்த்து தெரிந்துக் கொள்ளவேண்டும். நாம் ஒரு முறை ஏமாறலாம், ஒன்பது முறை ஏமாறலாமா? நாம் சிந்திக்கும் திறம் படைத்த மனிதர்கள் அல்லவா? குறைந்த பட்ச ஆய்வு நாம் செய்தால், உண்மை எது பொய் எது என்பது விளங்கும்.
இதைப்பற்றி உனக்கு மேலதிக விவரங்கள் தேவைப்பட்டால் எனக்கு எழுத தயங்காதே.
இப்படிக்கு, உன் சகோதரன்
தமிழ் கிறிஸ்தவன்

1) பைபிள் திருத்தப்பட்டது என்று இஸ்லாமியர்கள் குற்றம் சாட்டுகிறார்கள் , ஆனால், ஏன் பைபிளிலிருந்து சில வசனங்களை எடுத்துக்கொண்டு, இதோ இங்கே எங்கள் நபி பற்றி கூறியுள்ளது என்று சொல்கிறார்கள்?
2) உங்களுக்கு தேவைப்பட்டால், பைபிளிலிருந்து வசனங்களை காட்டுவீர்கள், தேவையில்லையானால் பைபிள் மீது குற்றம் சுமத்துவீர்கள்? ஏன் இந்த இரட்டை வேஷம்?
3) முக்கியமாக உன்னதப்பாட்டு என்ற பழைய ஏற்பாட்டு நூல் மிகவும் ஆபசமாக உள்ளது என்று காது கிழிய மேடையில் பேசுகிறீர்கள், ஆனால், அதே உன்னத்தப்பாட்டில் உங்கள் நபியை தேடுகிறீர்கள்? இப்படி சொல்ல உங்களுக்கு கூச்சமாகவும் வெட்கமாகவும் தெரியவில்லையா? ஆபாசமாக இருக்கிறது என்று குற்றம் சுமத்தும் புத்தகத்தில் எங்கள் முஹம்மதுவை நாம் காட்டுகின்றோமே, இது சரியானதா என்று இஸ்லாமியர்கள் சுயமாக சிந்திப்பார்களா?
ஆக, உங்களுக்கு தேவையான பைபிள் வசனங்களை பிடித்துக்கொண்டு இவைகள் திருத்தப்படாத வசனங்கள் என்று சொல்லுவீர்கள், அதே பைபிளின் அடுத்தடுத்த வசனங்கள் திருத்தப்பட்டுள்ளது என்று சொல்லுவீர்கள், இது என்ன நியாயம்?
இப்போது நேரடியாக உன் கேள்விக்கான பதிலை காணலாம்.
முதலாவதாக, முஹம்மது பற்றிய எந்த ஒரு முன்னறிவிப்பும் பைபிளில் இல்லை, அது பழைய ஏற்பாடாக இருக்கட்டும், அல்லது புதிய ஏற்பாடாக இருக்கட்டும், இரண்டிலும் உங்கள் நபி பற்றி ஒரு சிறு குறிப்பும் இல்லை.
இரண்டாவதாக, உன்னத்தப்பாட்டிற்கு வரும் போது, அது கணவன் மனைவி அல்லது காதலன் காதலிக்கு இடையே நடைபெற்ற ஒரு உரையாடலாக உள்ளது. இப்போது நீ மேற்கோள் காட்டிய வசனங்களை படிப்போம்:
5:14 அவர் கரங்கள் படிகப்பச்சை பதித்த பொன் வளையல்களைப் போலிருக்கிறது; அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது.
5:15 அவர் கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது; அவர் ரூபம் லீபனோனைப்போலவும் கேதுருக்களைப்போலவும் சிறப்பாயிருக்கிறது.
5:16 அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் குமாரத்திகளே! இவரே என் சிநேகிதர்.
மேற்கண்ட வசனங்களை முழுவதுமாக முதலாம் வசனத்திலிருந்து படித்துப்பார்த்தால், ஒரு பெண் தன் நாயகனைப் பற்றி வர்ணிக்கும் வர்ணனையை காணலாம். இந்த விவரங்களில் திடீரென்று 7ம் நூற்றாண்டில் வந்த முஹம்மது எங்கே வந்தார்? தம்பி, நீ முதலாவது ஒரு வசனத்திற்கு பொருள் கூறும் போது, அதைச் சுற்றியுள்ள வசனங்களை கவனிக்க வேண்டாமா? இப்படியா அறைகுறையாக வியாக்கீனம் செய்வது சரியா?
இப்போது 16ம் வசனத்தை எபிரேய மொழியில் பார்க்கலாம்:
எபிரேய மொழியில் இந்த வார்த்தையின் எண்: 4261
எபிரேய வார்த்தை: מַחְמָד (machmad)
அர்த்தம்: 1) desire, desirable thing, pleasant thing – ஆசையான, விருப்பமுள்ள, அழகான.
இந்த தொடுப்பை சொடுக்கி, எபிரேய அகராதியில் இந்த விளக்கத்தை தெரிந்துக்கொள்:
Source: http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=H4261&t=KJV
மக்மத்: என்ற வார்த்தை எங்கு வந்தாலும் அங்கு உங்கள் முஹம்மது இருக்கிறார் என்றுச் சொல்வது அறியாமையாக உள்ளது. நீ வெறும் உன்னதப்பாட்டை மற்றுமே மேற்கோள் காட்டினாய், இந்த வார்த்தை வரும் இதர வசனங்களையும் காண்போம். இந்த ஒவ்வொரு இடத்திலும் உங்கள் முஹம்மது பற்றியே முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது என்றுச் சொல்லுவாயா? நிச்சயமாக சொல்லமாட்டாய்!
1) பழைய ஏற்பாட்டிலிருந்து 1 இராஜாக்கள் 20:6ம் வசனத்தை ஒரு முறை படிப்போமா?
ஆனாலும் நாளை இந்நேரத்தில் என் ஊழியக்காரரை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவர்கள் உன் வீட்டையும் உன் ஊழியக்காரரின் வீடுகளையும் சோதித்து, உன் கண்ணுக்குப் பிரியமானவைகள் எல்லாவற்றையும் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு போவார்கள் என்றார் என்று சொன்னார்கள். ( 1 இராஜாக்கம் 20:6)
இந்த வசனத்தில் "பிரியமானவைகள்" என்ற தமிழ் வார்த்தையின் எபிரேய வார்த்தை, நீ சொல்லுகின்ற "மக்மத்" என்பதாகும். ஒரு இராஜா இன்னொரு இராஜாவிடம் சொல்லியனுப்பிய செய்தி தான் இந்த வசனமாகும். உன் வீட்டில் இருக்கும் நல்லவைகள் அனைத்தையும் என் சேவகர்கள் எடுத்துக்கொள்வார்கள் என்று சொல்லியனுப்புகிறார். தம்பி இந்த இடத்திலும் உங்கள் முஹம்மது பற்றி முன்னறிவிப்பு உண்டா? முழு அதிகாரத்தையும் படித்துப்பார் தம்பி.
2) அதே பழைய ஏற்பாட்டில், 2 நாளாகமம் 36:19ம் வசனத்தை படிப்போமா?
தம்பி இந்த வசனத்தில் "திவ்வியமான" என்ற தமிழ் வார்த்தையின் எபிரேய வார்த்தை தான் "மக்மத்" என்பது, அதாவது ஆலயத்தை தீயிட்டு கொளுத்தி, அதில் கணப்பட்ட அழகான பணிமுட்டுக்களையும் அழித்துவிட்டார்கள் என்று இந்த வசனம் சொல்கிறது.
அவர்கள் தேவனுடைய ஆலயத்தைத் தீக்கொளுத்தி, எருசலேமின் அலங்கத்தை இடித்து, அதின் மாளிகைகளையெல்லாம் அக்கினியால் சுட்டெரித்து, அதிலிருந்த திவ்வியமான பணிமுட்டுகளையெல்லாம் அழித்தார்கள். (2 நாளாகமம் 36:19)
தம்பி, இந்த இடத்தில் உங்கள் முஹம்மதுவை சேர்த்து எழுதினால் "அதிலிருந்த முஹம்மதுவான பணிமுட்டுகளையெல்லாம் அழித்தார்கள்" என்று வரும். இதன் பொருள் உங்கள் முஹம்மதுவை அழித்தார்கள் என்று வருகிறது. இது சரியான ஒன்றாகுமா? சிந்தித்துப்பார். உங்கள் இஸ்லாமியர்களின் வாதஞானம் எவ்வளவு கெடுதியை முஹம்மதுவிற்கு உண்டாக்குகிறது என்று பார்த்தயா? நீ பேசிய அந்த எபிரேயம் தெரிந்த இஸ்லாமிய இமாம், உன்னதப்பாட்டை மட்டுமே படிப்பாரா, ஆய்வு செய்வாரா? இந்த இதர புத்தகங்களை படிக்கமாட்டாரா?
உனக்கு இன்னும் அனேக வசனங்கள் காட்டி சலிப்புண்டாக்க நான் விரும்பவில்லை, இந்த தொடுப்பை சொடுக்கி (http://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=H4261&t=KJV) இதர வசனங்களையும் சரி பார்த்துக்கொள்.
இந்த வார்த்தை இடம்பெறும் வசனங்கள்: உன்னதப்பட்டு 5:16 (நீ குறிப்பிட்ட வசனம்), ஏசாயா 64:11, புலம்பல் 1:10,11, எசேக்கியேல் 24:16, 21, 25, ஓசியா 9:6, 16 , யோவேல் 3:5
இஸ்லாமிய அறிஞர்களின் ஏமாற்றுவேலை:
"மக்மத்" என்றால், "நல்ல, பிரியமான, இனிமையான" போன்ற அர்த்தங்கள் கொண்ட வார்த்தையாகும். இது அனேக இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது, அவைகளை நீயே சரி பார்த்துக்கொள்ளலாம். ஆனால், இஸ்லாமிய அறிஞர்கள் நம்மிடம் வந்து முஹம்மது குறித்த முன்னறிவிப்புக்கள் பைபிளில் உள்ளது என்றுச் சொல்லும் போது, அவர்கள் உண்மையை மறைத்துக்கூறுவார்கள். உன்னதப்பாட்டில் முஹம்மதுவின் முன்னறிவிப்பு உள்ளது என்று உனக்கு சொன்னவர்கள், இதர வசனங்களில் கூட அந்த வார்த்தை உள்ளது என்று ஏன் உனக்கு தெரிவிக்கவில்லை? ஏனென்றால், அவர்கள் எதனை உனக்கு சொல்லவேண்டுமென்று நினைத்தார்களோ, அதனை மட்டுமே கூறுவார்கள், நாம் தான் ஏமாறாமல் இருந்து எல்லாவற்றையும் சோதித்து பார்த்து தெரிந்துக் கொள்ளவேண்டும். நாம் ஒரு முறை ஏமாறலாம், ஒன்பது முறை ஏமாறலாமா? நாம் சிந்திக்கும் திறம் படைத்த மனிதர்கள் அல்லவா? குறைந்த பட்ச ஆய்வு நாம் செய்தால், உண்மை எது பொய் எது என்பது விளங்கும்.
இதைப்பற்றி உனக்கு மேலதிக விவரங்கள் தேவைப்பட்டால் எனக்கு எழுத தயங்காதே.
இப்படிக்கு, உன் சகோதரன்
தமிழ் கிறிஸ்தவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக