ஹிஜ்ரியும் சிலுவையும் (The Hijra and the Cross)
Author : Robert Sievers
Translation by: Tamil Christians.
கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் ஒரே இறைவனை வணங்குகிறார்கள் என்று அனேகர் சொல்ல அனேக முறை நான் கேட்டு இருக்கிறேன். கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் ஜெபிக்கிறார்கள், இருவரும் உபவாசம் இருக்கிறார்கள், இவ்விருவருக்கும் பரிசுத்த வேதங்கள் உள்ளது, இவ்விரு குழுவினரும் தங்கள் வேதங்களில் சொல்லப்பட்ட கட்டளைகளுக்கு கீழ்படியவேண்டும், இப்படி அனேக ஒற்றுமைகள் கூறப்படுகின்றது. நான் எவ்வளவு அதிகமாக இஸ்லாமை அறிந்துக்கொள்கின்றேனோ, அவ்வளவு பெரிய அடிப்படை வித்தியாசங்கள் இவ்விரு மார்க்கங்களுக்கு இடையே இருப்பதை என்னால் காணமுடிகின்றது. இந்த வித்தியாசங்கள் ஏதோ முக்கியமில்லாத சாதாரண விஷயங்களாக அல்லாமல், மிகவும் ஆழமான வித்தியாசங்களாக காணப்படுகின்றன. அவைகளை வெளியே கொண்டு வர சிறிது ஆய்வும் தேவைப்படுகின்றது. இந்த வித்தியாசங்களை மிகவும் கூர்ந்து படிக்கும் வாசகர்களுக்கு ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்துவிடும், அது என்னவென்றால், இஸ்லாமில் கணப்படும் ஒரு தொடர்ச்சியான தீய காரியங்கள் அல்லது கோட்பாடுகள் ஆகும். சரி, என்னுடைய இந்த சிறிய கட்டுரையின் முக்கிய கருத்துக்கு வருகிறேன். ரவி ஜகரியா என்ற கிறிஸ்தவ ஊழியர் ஒரு முறை இவ்விதமாக கூறினார்:
"I often hear the question posed wrongly, 'Aren't all religions fundamentally the same and superficially different?' No. They are fundamentally different and at best they are superficially similar.""என்னிடம் தவறாக கேட்கப்படுகின்ற கேள்வி ஒன்று உண்டு, அதாவது "அடிப்படையில் எல்லா மதமும் ஒன்று தானே, பார்க்கின்ற பார்வையில் அவைகள் வித்தியாசமாக காணப்படுகின்றன அல்லவா?" என்று கேள்வி கேட்கப்படுகின்றது. ஆனால், இதற்கு பதில் என்னவென்றால், "இல்லை, அவைகள் அடிப்படை கோட்பாட்டில் வித்தியாசமானவைகள், பார்க்கின்ற பார்வையில் அவைகள் ஒன்று போலவே காணப்படுகின்றன".
அடிப்படை கோட்பாடுகளில் வித்தியாசமானவைகள் என்பது மிகவும் முக்கியமான விஷயமாகும். இந்த அடிப்படை வித்தியாசங்கள் குறித்த அம்சங்கள் பற்றி இப்போது நாம் காண்போம். இந்த மதங்களில் முக்கியமான நிகழ்வு என்ன? மற்றும் இந்த நிகழ்வுகள் நமக்குச் சொல்லும் சத்தியங்கள் என்ன? இந்த இரண்டு மதங்களை ஆய்வு செய்து, கோர்வையாக அலசுவோம், அவைகள் எதிர்மறையாக இருக்கின்றனவா அல்லது ஒன்றோரு ஒன்று ஒன்றிப்போகின்றனவா என்பதை காண்போம்.
கிறிஸ்தவத்தின் அடிப்படை நிகழ்வு:
கிறிஸ்தவத்தின் அடிப்படை நிகழ்வு இயேசு சிலுவையில் அறையப்படுவதாகும் (மேலும் அடுத்த நிகழ்வாகிய உயிர்த்தெழுதலாகும்). சுவிசேஷ நூல்கள் அனைத்தும் நம்மை கடைசியாக சிலுவையில் கொண்டுவந்து சேர்க்கும். ஒவ்வொரு சுவிசேஷ நூலும், இயேசுவின் சிலுவை அறைதலுக்கு முன்பு இருக்கும் கடைசி நாட்கள் பற்றி அதிக விவரங்களை கொண்டுள்ளது. இயேசு சிலுவையில் அறையப்படுதல் என்பது மிகவும் முக்கியமான அம்சமாகும், ஏனென்றால், இந்த தியாக பலியினால் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. மேலும் அதற்கு அடுத்தபடியாக நடைப்பெற்ற இயேசுவின் உயிர்த்தெழுதல் நிகழ்வானது, இயேசுவின் தெய்வீகத்தன்மையை நிருபிக்கிறது, அவர் யாராக இருக்கிறார் என்பதையும், பாவங்களை மன்னிக்க அவருக்கு அதிகாரம் உண்டு என்பதையும் அது தெளிவாக விளக்குகிறது. இயேசுவின் ஊழியங்களில் சிகரமாக இருப்பது சிலுவையாகும், அதன் பிறகு அவரால் "எல்லாம் முடிந்தது" என்று சொல்லமுடிந்தது (1 கொரி 15:3-4). உண்மையில் கூறவேண்டுமென்றால், எல்லாவற்றைக் காட்டிலும் சிலுவை தான் கிறிஸ்தவத்தின் அடிப்படை சின்னமாக உள்ளது. இயேசு உயிரோடு இருந்த போது சாதித்த அனைத்து காரியங்களை விட அவர் சிலுவையில் செய்த காரியமே பிரதான மற்றும் முக்கியமான அம்சமாக உள்ளது.
இஸ்லாமுடைய மிகவும் முக்கியமான நிகழ்வு:
இஸ்லாமுடைய மிகவும் முக்கியமான நிகழ்வு என்ன? ஒருவேளை அது முஹம்மதுவின் பிறப்பாக இருக்குமோ? அல்லது மரணமாக இருக்குமோ? ஒருவேளை தன்னை காபிரியேல் என்று சொல்லிக்கொண்ட ஒரு தூதன் முஹம்மதுவிற்கு முன்பாக தோன்றி அவருக்கு முதலாவது வெளிப்பாட்டை கொடுத்த அந்த முதல் நாள் தான் இஸ்லாமின் முக்கியமான நிகழ்ச்சியா? இவைகள் எல்லாம் இஸ்லாமின் முக்கியமான நிகழ்ச்சி அல்ல, அதற்கு பதிலாக, ஹிஜ்ரி என்றுச் சொல்லக்கூடிய மதினாவிற்கு தப்பித்துச் சென்ற நாள் தான் இஸ்லாமின் முக்கியமான நிகழ்ச்சியாகும். ஆரம்பத்தில் முஹம்மது மக்காவில் வாழ்ந்துக்கொண்டு இருந்தார், ஆனால் அனேக துன்புறுத்தல்கள் மற்றும் கஷ்டங்களை அனுபவித்தார். தம்மை கொல்வதற்கு மக்கா மக்கள் திட்டமிட்டுள்ளார்கள் என்பதை அறிந்துக்கொண்டார். அந்த இரவு முஹம்மது மக்காவிலிருந்து மதினாவிற்கு தம்மை பின்பற்றும் ஒரு சிறு கூட்டத்துடன் தப்பித்துச் சென்றுவிட்டார். மதினாவிற்கு வந்த பிறகு இஸ்லாம் பெறுக ஆரம்பித்தது. முஹம்மது தம்மை பின்பற்றும் அனேக மக்களை அங்கு சம்பாதித்துக்கொண்டார். பல ஆண்டுகள் கழித்து, மக்காவை ஒரு பெரிய இராணுவத்துடன் சென்று வெற்றிகரமாக கைப்பற்றினார்.
ஹிஜ்ரா இஸ்லாமிற்கு ஒரு திருப்புமுனையாகும், இதனை எல்லா இஸ்லாமிய அறிஞர்களும் ஏகோபித்து ஒப்புக்கொள்கின்றனர். உதாரணத்திற்கு, இப்ராஹிம் பி. ஸையத், (Ph.D) இவ்விதமாக கூறுகிறார்:
"இறைத்தூதர் முஹம்மது (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) மதினாவிற்கு ஹிஜ்ரா சென்றது மிகவும் முக்கியமான நிகழ்ச்சியாகும், இதில் சந்தேகமில்லை, இந்த நிகழ்ச்சி தான் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்தது"[i].
ஷமீம் ஏ சித்திகி ஹிஜ்ரா பற்றி "அல்லாஹ்வின் தீன் ஸ்தாபிப்பதற்கு ஹிஜ்ரா என்பது இஸ்லாமிய இயக்கத்திற்கு மூலைக்கல்லாகவும், திருப்புமுனையாகவும் உள்ளது" என்கிறார்.மேலும் இவர் முஹம்மது ஹுஸ்ஸைன் ஹைகல் என்பவரின் கூற்றை மேற்கோள் காட்டுகிறார் "இஸ்லாமிய சரித்திரத்தில் ஹிஜ்ரா என்ற நிகழ்ச்சி அதாவது இறைத்தூதர் மக்காவிலிருந்து மதினாவிற்கு சென்ற நிகழ்ச்சி மிகவும் முக்கியமான நிகழ்ச்சியாக கலிபா உமர் அவர்கள் கருதினார்கள்" [ii].
இந்த ஹிஜ்ர எவ்வளவு முக்கியமானது என்றால், இந்த ஆண்டிலிருந்து தான் இஸ்லாமிய (நாட்காட்டி) நாட்கள் கணக்கெடுக்கப்படுகின்றன.இஸ்லாமிய நாட்காட்டியின் படி, இந்த கட்டுரை ஹிஜ்ரி 1433 அன்று எழுதப்படுகின்றது. இந்த ஹிஜ்ரா நிகழ்வை ஒரு இஸ்லாமிய நாட்காட்டியாக கருதப்படுவதிலிருந்து இதன் முக்கியத்துவத்தை நாம் அறியலாம்.
இப்போது, சிலுவை மற்றும் ஹிஜ்ரா இவை இரண்டையும் ஒன்றோரு ஒன்று ஒப்பிட்டால் என்ன நடக்கும்? சிலுவை என்பது இயேசு தனக்கு செய்யப்பட்ட கொடுமைகளை கட்டியணைக்கும் நிகழ்ச்சியாகும். ஆனால், ஹிஜ்ரி என்பதில் முஹம்மதுவோ தனக்கு செய்யப்பட இருக்கும் கொடுமையிலிருந்து ஓடி ஒலிந்துக்கொண்ட நிகழ்ச்சியாகும். இயேசுவின் மரணம் பற்றி அவரது சீடர்களுக்கு தெரிவிக்கப்பட்டது (மத்தேயு 16:21), அவர்களோ, அந்த மரணத்திலிருந்து (சிலுவையிலிருந்து) அவர் தப்பித்துக்கொண்டு மகிமை அடைய வேண்டும் என்று விரும்பினார்கள் (மத்தேயு 16:22). ஆனால், இயேசுவோ கொடுமையிலிருந்து தப்பித்துக்கொள்ள விரும்பவில்லை (மத்தேயு 16:23). இயேசு பிதாவின் திட்டத்தை நிறைவேற்ற எவ்வளவு பெரிய பாடுகள் வந்தாலும் அவைகளை ஏற்றுக்கொள்ள விருப்பமாக இருந்தார்(லூக்கா 22:42). ஆனால், முஹம்மதுவை எடுத்துக்கொண்டால், தன்னுடைய ஊழியத்திற்காக ஒரு மிகப்பெரிய விலையை செலுத்தவேண்டிய நேரம் வந்தபோது, தான் சந்திக்கவேண்டிய அந்த கொடுமையை, தன்னுடைய தோழர் ஒருவருக்கு ஒப்புவித்து, அவரை ஆபத்துக்குள் தள்ளி, அவரை தன் வீட்டில் இருக்கச் செய்து, தான் தப்பித்துக் கொண்டார் [iii]. முஹம்மதுவின் செயல் இயேசுவின் செயலைப்போல இருக்கவில்லை.
இப்போது சில இஸ்லாமியர்கள் "இயேசு கூட மக்களால் பிடிக்கப்படக்கூடாது என்பதற்காக சில நேரங்களில் தப்பித்துச் சென்றுள்ளார் அல்லவா? (லூக்கா 4:29-30)" என்று கேள்வி எழுப்புவார்கள். மேலும் அதே முஸ்லிம்கள் "இயேசுவைப் போல முஹம்மது கூட தைரியமாக எதிர்களுக்கு பயப்படாமல் அவர்களை போரில் நேருக்கு நேர் சந்தித்தார் அல்லவா?" என்று கூறுவார்கள்.
ஓ அருமை இஸ்லாமியர்களே, நீங்கள் இந்த விஷயத்தில் ஒரு முக்கியமான விவரத்தை தவரவிடுகின்றீர்கள். இயேசு மற்று முஹம்மதுவின் வாழ்வில் நடந்த அனேக நிகழ்ச்சிகள் பற்றி நாம் இந்த கட்டுரையில் அலசவில்லை, அதற்கு பதிலாக, இவ்விரு மார்க்கங்களில் மிகவும் முக்கியமானதாக அதாவது மூலைக்கல்லாக, திருப்புமுனையாக கருதப்படும் நிகழ்ச்சி(சிலுவை மற்றும் ஹிஜ்ரா) பற்றி நாம் அலசிக்கொண்டு இருக்கிறோம், இது தான் இக்கட்டுரையின் நோக்கம். கிறிஸ்தவத்தில் தனக்காக காத்துக்கொண்டு இருந்த பாடுகளை இயேசு அப்படியே ஏற்றுக்கொண்டார், இது முக்கியமான நிகழ்ச்சி. ஆனால், இஸ்லாமிலே முஹம்மது கொடுமைகளிலிருந்து தன் உயிர் காத்துக்கொள்ள தப்பிஓடினார். இவைகளினால் நாம் அறிவது என்னவென்றால் இவ்விரு மார்க்கங்களும் வித்தியாசமானவைகள் அல்ல, இவைகள் ஒன்றுக்கு ஒன்று முழுவதுமாக நேர் எதிரானவைகள். இந்த மார்க்கங்களின் மூல நிகழ்ச்சியானது நேர் எதிரானது. இஸ்லாமிலே ஒரு முக்கியமான நேரத்தில் முஹம்மது எப்படி நடந்துக்கொண்டாரோ, அதற்கு நேர் எதிராக இயேசுக் கிறிஸ்து பூமியில் வாழும் போது செய்தார். முஹம்மது தப்பித்து ஓடினார், இயேசுக் கிறிஸ்து ஒடி அதை அனைத்துக்கொண்டார்.
பின் குறிப்புக்கள்
ஆங்கில மூலம்: The Hijra and the Cross
Thanks to "http://www.unravelingislam.com" site for granting permission to translate and publish its articles in Tamil language.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக