ஆன்சரிங் இஸ்லாம் ஈமெயில் உரையாடல்கள்
தலைப்பு: அரபி மொழியை கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டுமா?
மெயில் பெற்றுக்கொண்ட தேதி: 31 அக்டோபர் 2004
பொருள்: குர்-ஆனின் பிழைகள்.
குர்-ஆனை விமர்சிப்பதற்கு முன்பாக திரு கட்ஜ் அவர்கள் கட்டாயமாக அரபி மொழியை கற்றுக்கொள்வார் என்று நான் நம்புகிறேன். இந்த அறிவுரை குர்-ஆனுக்கு மட்டுமல்ல, அவருக்கு தெரியாத இதர மொழி புத்தகங்களுக்கும் பொருந்தும்.
எங்கள் பதில்:
அன்பானவரே,
உங்கள் பின்னூட்டத்திற்காக மிக்க நன்றி.
நான் உங்களிடம் சில கேள்விகளை கேட்கிறேன். இவைகள் உங்கள் விமர்சனத்திற்கும் பதிலாக அமையும்.
எந்த ஒரு மனிதனானாலும் சரி, குர்-ஆனை விமர்சிப்பதற்கு முன்பாக, கட்டாயமாக அவன் அரபி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?அல்லது இந்த சட்டத்தை எனக்கு மட்டுமே நீங்கள் முன்வைக்கிறீர்களா?
குர்-ஆனைப் பற்றி ஒரு ஆரோக்கியமான உரையாடலை, கேள்விகளை முன்வைக்கும் மனிதன், ஏன் அரபியை கற்றுக்கொள்ள வேண்டும்?
குர்-ஆனை விமர்சிப்பவர்களுக்கு நீங்கள் விதிக்கும் இந்த சட்டங்கள், பைபிளை விமர்சிப்பவர்களுக்கும் பொருந்தும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? எனவே, நாம் இப்படி சொல்லலாமா? அதாவது பைபிளை விமர்சிக்க விரும்புகிறவர்கள் கட்டாயமாக, பைபிளின் மூல மொழிகளாகிய எபிரேயம், கிரேக்கம் போன்ற மொழிகளை கற்றுக்கொண்ட பிறகு தான் பைபிளைப் பற்றி பேசவேண்டும், கேள்வி கேட்கவேண்டும், அதுவரை அவர்களுக்கு பைபிளை விமர்சிக்க உரிமையில்லை.
நீங்கள் எனக்கு விதித்த சட்டத்தை பைபிளுக்கும் பொருந்தும் என்று நீங்கள் நினைத்தால், இதுவரை பைபிளை வெளிப்படையாக விமர்சிக்கும் இஸ்லாமிய அறிஞர்களை நீங்கள் கேள்வி கேட்டதுண்டா? அவர்கள் செய்வது தவறு என்று அவர்களிடம் புகார் கூறியதுண்டா? அதாவது அஹமத் தீதத், ஜமால் பதாவி, ஷப்பீர் அலி, ஜாகிர் நாயக், ஹம்ஜா மாலிக் போன்றவர்கள் செய்வது தவறு என்று அவர்களை நீங்கள் கண்டித்ததுண்டா? இல்லை நான் இவர்களை கண்டிக்கவில்லை என்றுச் சொல்வீர்களானால், ஏன் கண்டிக்கவில்லை என்று எனக்கு விளக்கவும். அவர்களும் எபிரேயம், கிரேக்க மொழிகளை கற்றுக்கொள்ளாமல் தானே விமர்சிக்கிறார்கள்? [உமரின் வரிகள்: தமிழ் நாட்டின் இஸ்லாமிய அறிஞர்களாகிய பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்களும், இன்னும் இதர அறிஞர்களும் எபிரேயம், கிரேக்கம் போன்ற மொழிகளை கற்றுக்கொண்டு தான் பைபிளை விமர்சிக்கவேண்டும் என்று கிறிஸ்தவர்கள் எதிர்ப்பார்க்கலாம் அல்லவா?]
ஒருவேளை, குர்-ஆனுக்கு பொருந்தும் இந்த சட்டமானது, பைபிளுக்கு பொருந்தாது என்று நீங்கள் கருதினால், ஏன் இப்படி பொருந்தாது என்று விவரமாக தயவு செய்து எனக்கு விளக்கவும்?
கடைசியாக, உங்களுடைய இந்த கோட்பாடு உங்களுக்கே ஒரு பிரச்சனையாக மாறுகிறது. அதாவது அரபி கிறிஸ்தவர்கள் குர்-ஆனை விமர்சிக்க நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள் என்று அர்த்தமாகிறது. இந்த கிறிஸ்தவர்களின் தாய் மொழி அரபியாக இருப்பதினாலும், அவர்கள் தாராளமாக குர்-ஆனை விமர்சிக்கலாம் என்று நாம் கருதலாம் இல்லையா? அரபி கிறிஸ்தவர்கள் குர்-ஆனை விமர்சிக்க நீங்கள் வரவேற்ப்பீர்கள் என்று நம்புலாமா?
குர்-ஆன் பற்றி நான் சொல்லும் விவரங்களில் விமர்சனங்களில் ஏதாவது தவறு இருக்குமானால் அதனை எனக்கு தெரிவிக்கவேண்டும். அதனை நான் சந்தோஷத்தோடு சரி செய்துக்கொள்வேன். என்னுடைய எந்த இணைய பக்கமானாலும் சரி, அதில் தவறு இருக்கிறது என்று நீங்கள் நிருபித்தால், அதனை சரி செய்துக்கொள்ள நான் ஆவலாக உள்ளேன்.
உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.
இப்படிக்கு
யோகன் கட்ஜ்
© Answering Islam, 1999 - 2013. All rights reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக