ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 5 செப்டம்பர், 2015

யஹ்யா (யோவான்) எப்படி இயேசுவை மெய்ப்படுத்துவார்?

யஹ்யா (யோவான்) எப்படி இயேசுவை மெய்ப்படுத்துவார்?

(குர்-ஆனின் அரைகுறை விவரங்களின் தன்மைக்கு இன்னொரு உதாரணம்)
யோகன் கட்ஜ்
ஜகரிய்யா மற்றும் யோவான் ஸ்நானகனைப் பற்றி குர்-ஆனில் ஆங்காங்கே சில விஷயங்களை காணலாம். அவைகளில், யோவான் பற்றிய குர்-ஆனின் ஒரு கூற்றை நாம் இக்கட்டுரையில் ஆய்வு செய்யப்போகிறோம். 
தனக்கு ஒரு மகனை கொடுக்கும் படி வேண்டுதல் செய்த ஜகரிய்யாவிற்கு, தேவதூதன் கீழ்கண்டவாறு பதில் அளிக்கிறர், இதனை குர்-ஆன் 3:39ம் வசனத்தில் காணலாம் (நான்கு குர்-ஆன் தமிழாக்கங்களிலிருந்து மேற்கோள்கள்):
முஹம்மது ஜான் தமிழாக்கம்:
3:39. அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து: "நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்; அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்" எனக் கூறினர். 
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:
3:39. ஆகவே அவர் மாடத்தில் ("மிஹ்ராப்") நின்று தொழுது கொண்டிருந்த சமயத்தில் (அவரை நோக்கி) மலக்குகள் சப்தமிட்டுக் கூறினார்கள்: (ஜகரிய்யாவே!) நிச்சயமாக அல்லாஹ் "யஹ்யா" (என்ற ஒரு மக)வை உங்களுக்கு அளிப்பதாக நற்செய்தி கூறுகின்றான். அவர் அல்லாஹ்வின் ஒரு வாக்கியத்தை (முன்னறிக்கையை) உண்மைப்படுத்தி வைப்பார்.(மனிதர்களுக்குத்) தலைவராகவும், (பெண்கள்) இன்பத்தைத் துறந்தவராகவும், நபியாகவும், நல்லொழுக்கம் உடையவராகவும் இருப்பார். 
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் தமிழாக்கம்:
3:39. அதற்கு மறுமொழியாக அவர், மிஹ்ராபில் மாடத்தினுள் நின்று தொழுது கொண்டிருக்கும்போது, வானவர்கள் குரல் கொடுத்தார்கள்: "அல்லாஹ் உமக்கு யஹ்யா (என்ற மக)வைக் கொண்டு நிச்சயமாக நற்செய்தி சொல்கின்றான். அவர் அல்லாஹ்விடமிருந்து வரப்போகும் ஒரு வாக்கினை, மெய்ப்படுத்தக் கூடியவராய் விளங்குவார். மேலும், அவரிடம் தலைமைத்துவம் மற்றும் மகத்துவத்தின் பண்புகள் காணப்படும். மனக்கட்டுப்பாடு கொண்டவராகவும் இருப்பார்; நபித்துவம் அருளப்பட்டவராகவும் இருப்பார். மேலும் ஒழுக்க சீலர்களில் ஒருவராகவும் திகழ்வார்."
பீ. ஜைனுல் ஆபீதின் தமிழாக்கம்:
3:39. அவர் தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருந்தபோது "யஹ்யாவைப் பற்றி அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான். அல்லாஹ்வின் வார்த்தையை90 அவர் உண்மைப்படுத்துவார். தலைவராகவும், ஒழுக்கக் கட்டுப்பாடு மிக்கவராகவும், நபியாகவும், நல்லவராகவும் இருப்பார்'' என்று வானவர்கள் அவரை அழைத்துக் கூறினர்.
தேவதூதர்களிடமிருந்து ஜகரிய்யாவிற்கு ஒரு மகன் பிறக்கப்போகிறார் என்ற நற்செய்தியும், அவரது பெயர் என்னவென்றும் செய்தி வருகிறது. யஹ்யா  ஒழுக்கமுள்ளவராகவும், தலைவராகவும், நபியாகவும் இருப்பார். மேலும் ஜகரிய்யாவிற்கு பிறக்கப்போகும் குழந்தை இன்னொரு முக்கியமான கடமையையும் செய்வார். அதாவது, யஹ்யாவின் வாழ்வின் முக்கிய நோக்கத்தை குர்-ஆன் இப்படியாகச் சொல்கிறது:  "அல்லாஹ்வின் வார்த்தையை அவர்(யஹ்யா) உண்மைப்படுத்துவார் / மெய்ப்படுத்துவார்" என்பதாகும்.
யோவான் மெய்ப்படுத்தக்கூடிய "அல்லாஹ்வின் வார்த்தை" எது? அதனை எப்படி யோவான் மெய்ப்படுத்துவார்?
மேற்கண்ட முதல் கேள்விக்கான பதில், ஆறு வசனங்களுக்கு பிறகு காணப்படுகின்றது. அதாவது,  "மரியாளுக்கும் ஒரு மகன் பிறப்பார் என்ற நற்செய்தி அறிவிக்கப்படும்" அவ்விடத்தில் அந்த வார்த்தை யார் என்று சொல்லப்படுகிறது.
முஹம்மது ஜான் டிரஸ்ட்:
3:45. மலக்குகள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்; 
அப்துல் ஹமீது பாகவி:
3:45. (மேலும், மர்யமை நோக்கி) மலக்குகள் "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய (ஆகுக! என்ற) ஒரு வார்த்தையைக் கொண்டு உங்களுக்கு (ஒரு குழந்தையை அளிக்க) நற்செய்தி கூறுகின்றான்" என்றும் "அதன் பெயர் அல் மஸீஹ் ஈஸா இப்னு மர்யம்" என்பதாகும். அவர் இம்மை மறுமையில் மிக்க கம்பீரமானவராகவும், (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்" என்றும் கூறினார்கள். 
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்:
3:45. வானவர்கள் இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: "மர்யமே! திண்ணமாக அல்லாஹ் உனக்கு தனது கட்டளை பற்றி நற்செய்தி சொல்கின்றான். அதன் பெயர் மர்யத்தின் குமாரர் ஈஸா 'அல் மஸீஹ்' என்பதாகும். அவர் இம்மையிலும், மறுமையிலும் கண்ணியமிக்கவராகவும், அல்லாஹ்விடம் நெருங்கிய நல்லடியார்களில் ஒருவராகவும் திகழ்வார்.
பீ ஜைனுல் ஆபீதின்:
3:45. "மர்யமே! அல்லாஹ் தன் வார்த்தை90 பற்றி உமக்கு நற்செய்தி கூறுகிறான். மர்யமின் மகனான ஈஸா எனும் மஸீஹ்92 என்பது அவரது பெயர். இவ்வுலகிலும், மறுமையிலும் தகுதிமிக்கவராகவும், (இறைவனுக்கு) நெருக்கமானவராகவும் இருப்பார்'' என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக! 
யோவான் மெய்ப்படுத்தவேண்டிய வார்த்தை "இயேசு" ஆவார். இதனை பீ ஜைனுல் ஆபீதின் அவர்களின் தமிழாக்கம் தெளிவாக கூறுகின்றது, பார்க்க குர்-ஆன் 3:39:
3:39. அவர் தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருந்தபோது "யஹ்யாவைப் பற்றி அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான். அல்லாஹ்வின் வார்த்தையைஅவர் உண்மைப்படுத்துவார். தலைவராகவும், ஒழுக்கக் கட்டுப்பாடு மிக்கவராகவும், நபியாகவும், நல்லவராகவும் இருப்பார்'' என்று வானவர்கள் அவரை அழைத்துக் கூறினர். (பீ. ஜைனுல் ஆபீதின் தமிழாக்கம்)
ஹிலாலி மற்றும் கான் என்ற ஆங்கில மொழியாக்கத்தில் யோவான் பற்றி சொல்லும்போது, அடைப்பு குறிக்குள் அவர் "நம்பிக்கை" கொள்வார் என்று கொடுக்கப்பட்டுள்ளது. 
Then the angels called him, while he was standing in prayer in Al-Mihrab (a praying place or a private room), (saying): "Allah gives you glad tidings of Yahya (John), confirming (believing in)the Word from Allah [i.e. the creation of 'Iesa (Jesus), the Word from Allah ("Be!" - and he was!)], noble, keeping away from sexual relations with women, a Prophet, from among the righteous." S. 3:39 Al-Hilali & Khan
இந்த ஆங்கில மொழியாக்கத்தில் அடைப்பிற்குள் கொடுத்த "நம்பிக்கை" கொள்வார் என்ற வார்த்தையினால் எந்த ஒரு பயனும் இல்லை. "மெய்ப்படுத்துவார்" மற்றும் "நம்பிக்கை கொள்வார்" என்ற வார்த்தைகள் இரண்டும் வெவ்வேறானவைகளாகும். நம்பிக்கை என்பது மௌனமாகவும், யாருக்கும் தெரியாமலும் மனதிற்குள் நம்பிக்கை கொள்ளலாம். ஆனால், மெய்ப்படுத்துவது அல்லது உண்மைப்படுத்துவது (confirm) என்பது மக்களுக்கு முன்பாக வெளிப்படையாக சாட்சி சொல்வதாகும். "மெய்ப்படுத்துவார்" என்ற வார்த்தையில் "யாரை மெய்ப்படுத்துவார்?" "யாருக்கு முன்பாக மெய்ப்படுத்துவார்?" என்ற இரண்டு கேள்விகள்  உள்ளடக்கியுள்ளன. 
குர்-ஆனில் யோவானின் பிறப்பு பற்றிய தீர்க்கதரிசன செய்தி கொடுக்கப்பட்ட பிறகு, அவர் அந்த வார்த்தையை எப்படி மெய்ப்படுத்தினார் என்பதை குர்-ஆனிலிருந்து காண மக்கள் அதிகமாக விரும்புவார்கள். குர்-ஆனின் 3:39 மற்றும் 3:45ம் வசனங்களை படிக்கும் போது, யோவான் மெய்ப்படுத்தக்கூடிய அந்த வார்த்தை "இயேசு" என்பதை தெளிவாக அறியமுடியும்.  குர்-ஆனின் இந்த அறிவிப்பில், அனேக கேள்விகள் பதில் சொல்லப்படாமல் விடப்பட்டுள்ளது, அதாவது: 
  • இயேசுவைப் பற்றி யோவான் எவைகளை மெய்ப்படுத்துவார்?
  • எந்த காலக்கட்டத்தில் யோவான் இயேசுவை மெய்ப்படுத்துவார்?
  • யோவான் எப்படி இயேசுவை மெய்ப்படுத்துவார்?
  • யோவான் இயேசுவை மெய்ப்படுத்தும் போது, அதனை கேட்பவர்கள்/பெற்றுக் கொள்பவர்கள் யார்? அல்லது எந்த மக்களுக்கு முன்பாக யோவான் இயேசுவை மெய்ப்படுத்துவார்?
இயேசு என்ற "அல்லாஹ்வின் வார்த்தை" பிறக்கப் போகிறார் என்று யோவான் முன்னறிவிக்கவேண்டிய (அ) மெய்ப்படுத்தவேண்டிய அவசியமென்ன? இயேசு இருக்கிறாரா அல்லது இல்லையா என்று மக்களில் யாராவது சந்தேகம் கொள்வார்களா? யோவானின்  காலத்தில் வாழ்ந்த மக்களில் யாராவது "இயேசு" என்ற நபர் பிறந்திருக்கிறார் என்பதை நம்ப மறுப்பார்களா? 
மக்கள் இப்படியெல்லாம் சந்தேகம் கொள்ளமாட்டார்கள் என்று கருதினால், யோவான் ஏன் அவரை மெய்ப்படுத்த வரவேண்டும்?
மேற்கண்ட அனைத்து கேள்விகளுக்கும் பைபிள் பதில் தருகின்றது. ஆனால், "அல்லாஹ்வின் வார்த்தையை மெய்ப்படுத்துவார்" என்று யோவானின் பிறப்பு விஷயத்தில் ஒரு தீர்க்கதரிசன நற்செய்தியை சொல்லிவிட்டு, அதன் பிறகு குர்-ஆன் வேறு ஒன்றையும் விவரிக்காமல் அமைதியாக இருந்துவிட்டது.  வேறு சில இடங்களில் யோவானைப் பற்றி குர்-ஆன் பேசுகின்றது, ஆனால், அந்த யோவான் எப்படி இயேசுவை மெய்ப்படுத்தினார் என்பதை மட்டும் விவரிக்க குர்-ஆன் தவறிவிட்டது. யோவான் பற்றி குர்-ஆன் சொல்லும் அனைத்து வசனங்களையும் நாம் கீழே காணலாம் (முஹம்மது ஜான் தமிழாக்கம்):
குர்-ஆன் 3:38. அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் "இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்."
குர்-ஆன் 3:39. அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து: "நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்; அவர்அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்" எனக் கூறினர்.
குர்-ஆன் 6:85. இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் - இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே.
குர்-ஆன் 6:89. இவர்களுக்குத்தான் நாம் வேதத்தையும், அதிகாரத்தையும், நபித்துவத்தையும் கொடுத்தோம்; ஆகவே இவற்றை இவர்கள் நிராகரித்தால் இதனை நிராகரிக்காத ஒரு சமுதாயத்தினரை இதற்கு நாம் நிச்சயமாக பொறுப்பாக்குவோம்.
குர்-ஆன் 19:7. "ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை" (என்று இறைவன் கூறினான்).
குர்-ஆன் 19:12. (அதன் பின்னர்) "யஹ்யாவே! நீர் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்" (எனக் கூறினோம்); இன்னும் அவர் குழந்தையாக இருக்கும் போதே அவருக்கு நாம் ஞானத்தை அளித்தோம்.
குர்-ஆன் 19:13. அன்றியும் நாம் நம்மிடமிருந்து இரக்க சிந்தனையும், பரிசுத்தத் தன்மையையும் (அவருக்குக் கொடுத்தோம்); இன்னும் அவர் மிகவும் பயபக்தியுடையவராக இருந்தார்.
குர்-ஆன் 19:14. மேலும், தம் பெற்றோருக்கு நன்றி செய்பவராகவும் இருந்தார்; அவர் பெருமை அடிப்பவராகவோ, (அல்லாஹ்வுக்கு) மாறு செய்பவராகவோ இருக்கவில்லை.
குர்-ஆன் 19:15. ஆகவே, அவர் பிறந்த நாளிலும், அவர் இறக்கும் நாளிலும், (மறுமையில்) அவர் உயிர் பெற்றெழும் நாளிலும் அவர் மீது ஸலாம் (சாந்தி) நிலைத்திருக்கும்.
குர்-ஆன் 21:89. இன்னும் ஜகரிய்யா தம் இறைவனிடம் "என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன்" என்று பிரார்த்தித் போது:
குர்-ஆன் 21:90. நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்காக அவருடைய மனைவியை (மலட்டுத் தனத்தை நீக்கி) சுகப்படுத்தி, அவருக்கு யஹ்யாவையும் அளித்தோம்; நிச்சயமாக இவர்கள் யாவரும் நன்மைகள் செய்வதில் விரைபவர்களாக இருந்தார்கள் - இன்னும், அவர்கள் நம்மை ஆசை கொண்டும், பயத்தோடும் பிரார்த்தித்தார்கள். மேலும், அவர்கள் நம்மிடம் உள்ளச்சம் கொண்டவர்களாக இருந்தார்கள்.
யோவான் தன் கடமையை செய்தாரா? அவர் பிறந்ததற்கான நோக்கத்தை நிறைவேற்றினாரா? போன்ற கேள்விகளுக்கு பதில் தராமல் குர்-ஆன் அமைதியாக இருந்துவிட்டது. இயேசுவின் போதனையை அல்லது இயேசுவை எவ்வாறு மற்றும் எப்போது யோவான் மெய்ப்படுத்தினார்? இதற்கு குர்-ஆனிடம் பதில் இல்லை. 
இப்போது நம் முன் நிற்கும் முக்கியமான கேள்விகள் என்னவென்றால்,
யோவானின் மெய்ப்படுத்துதல் (சாட்சி) இயேசுவிற்கு ஏன் அவசியமாக உள்ளது?
ஒரு நபி (யோவான்), இன்னொரு நபியை (இயேசுவை) ஏன் மெய்ப்படுத்தவேண்டும்?
குர்-ஆனில் தரப்பட்டிருக்கும் விவரங்களை சேர்த்து பார்த்தோமானால், யோவானும், இயேசுவும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டார்களா? என்ற சந்தேகம் வரும், ஏனென்றால், முக்கியமான இவ்விருவர் பற்றி மிகக் குறைவான விவரங்கள் தான் குர்-ஆனில் காணப்படுகின்றது. இவ்விருவர் சந்தித்ததாக எந்த ஒரு விவரத்தையும் குர்-ஆன் கொடுப்பதில்லை.
யோவான் கொண்டுவந்த செய்தி என்ன?
யோவான் ஒரு நபி என்று அழைக்கப்பட்டார் (குர்-ஆன் 3:39), மேலும அவருக்கு நபித்துவமும், வேதமும் கொடுக்கப்பட்டு இருந்தது என்றும் குர்-ஆன் சொல்கிறது (பார்க்க குர்-ஆன் 6:85, 89). இந்த யோவான் என்ற நபி கொண்டு வந்த செய்தி என்ன? அவர் எவைகளை போதனைச் செய்தார்? போன்ற விவரங்கள் குர்-ஆனில் இல்லை. யோவான் எதனை போதித்தார் என்ற ஒரு சிறிய துரும்பு கூட குர்-ஆனில் காணப்படுவதில்லை. யோவானின் வாழ்க்கைப் பற்றி குர்-ஆனில் காணப்படும் விவரங்கள் வெறும் பொதுவானவைகளாக உள்ளன. உதாரணத்திற்கு, யோவான் ஒழுக்கமுடையவராக இருந்தார், பக்தியுள்ளவராக இருந்தார், பெற்றோர்களுக்கு கடமைகளைச் செய்தார், நற்காரியங்களைச் செய்தார், இறைவனுக்கு கீழ்படிந்தவராக இருந்தார் போன்ற பொதுவான வரிகள் மட்டுமே யோவான் பற்றி குர்-ஆனில் காணப்படுகின்றது. ஒரு தீர்க்கதரிசியாக யோவானின் செய்தி எப்படிப்பட்டதாக இருந்தது? அவருக்கு கொடுத்த வேதம் எப்படிப்பட்டதாக இருந்தது? குர்-ஆனில் இக்கேள்விகளுக்கு பதில் இல்லை (பைபிளின் படி, யோவான் ஒரு தீர்க்கதரிசியாவார்,  ஆனால், அவருக்கு எந்த ஒரு வேத புத்தகமும் கொடுக்கப்படவுமில்லை என்பது தான் உண்மை).
யோவான் இயேசுவை எப்படி மெய்ப்படுத்தினார்? இதற்கான பதில் குர்-ஆனில் அல்ல, பைபிளில் காணப்படுகின்றது: பார்க்க லூக்கா 1:1-25,39-45, 57-80; 3:1-22; யோவான் 1:14-37.
யோவான் பற்றி குர்-ஆனில் அரைகுறை விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. குர்-ஆன் சொல்லும் பாதி விவரங்களை புரிந்துக் கொள்ளவேண்டுமென்றால், ஒவ்வொரு முஸ்லிமும் குர்-ஆனை விட்டு வெளியே வரவேண்டும், அதன் பிறகு அவர் பைபிளை படித்து தெரிந்துக் கொள்ளவேண்டும்.
குர்-ஆனை தமிழில் மொழியாக்கம் செய்தவர்கள் "தவறாக மொழிப்பெயர்த்துள்ளார்கள்". இயேசு எப்படி உருவாகினார் என்ற கருத்தில் தான் "அல்லாஹ்வின் வார்த்தை" என்ற வாசகம் வருகிறது அதே போல "யோவானும் மெய்ப்படுத்துவார்" என்ற வாசகமும் வருகிறது என்று முஸ்லிம்கள் தவறாக மொழிப்பெயர்த்துள்ளார்கள். 
யோவான் வந்ததின் நோக்கம்:
  • "கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துவதற்கு ஆகும்" (ஏசாயா 40:3, மத்தேயு 3:1-17).
  • இயேசு கர்த்தர் என்றும், அவருக்கு தெய்வீகத்தன்மை உள்ளது என்றும் யோவான் குறிப்பிட்டார் (யோவான் 1:23,27).  
  • இயேசு உலக மக்களின் பாவங்களை சுமந்த ஆட்டுக்குட்டியாக பலியாவார் என்றும் யோவான் சாட்சி பகிர்ந்தார் (யொவான் 1:29-30).
பைபிளின் இந்த அடிப்படை கோட்பாடுகளை குர்-ஆனின் ஆசிரியர் மறுக்கிறார். இதன் அடிப்படையில் பார்க்கும் போது, யோவானின் செய்தி பற்றி குர்-ஆன் மூச்சு விடவில்லை என்றுச் சொல்வது ஆச்சரியப்படவேண்டிய விஷயமல்ல. 
கீழண்ட மூன்று கட்டுரைகள், யோவானின் செய்தியில் இயேசுவின் தெய்வீகத்தன்மை எவ்விதம் வெளிப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்கிறது : 123
யோவான் ஒரு தலைவராக இருந்தாரா?
குர்-ஆன் 3:39ல் இன்னொரு பிரச்சனையும் உள்ளது. இப்போது அதைப் பற்றி நம் தமிழ் குர்-ஆன் மொழியாக்கங்கள் என்ன சொல்கின்றன என்பதைக் காண்போம்.
முஹம்மது ஜான் தமிழாக்கம்:
3:39. அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து: "நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்; அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும் (சய்யிதன்), ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்" எனக் கூறினர்.
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:
3:39. ஆகவே அவர் மாடத்தில் ("மிஹ்ராப்") நின்று தொழுது கொண்டிருந்த சமயத்தில் (அவரை நோக்கி) மலக்குகள் சப்தமிட்டுக் கூறினார்கள்: (ஜகரிய்யாவே!) நிச்சயமாக அல்லாஹ் "யஹ்யா" (என்ற ஒரு மக)வை உங்களுக்கு அளிப்பதாக நற்செய்தி கூறுகின்றான். அவர் அல்லாஹ்வின் ஒரு வாக்கியத்தை (முன்னறிக்கையை) உண்மைப்படுத்தி வைப்பார். (மனிதர்களுக்குத்) தலைவராகவும் (சய்யிதன்), (பெண்கள்) இன்பத்தைத் துறந்தவராகவும், நபியாகவும், நல்லொழுக்கம் உடையவராகவும் இருப்பார். 
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் தமிழாக்கம்:
3:39. அதற்கு மறுமொழியாக அவர், மிஹ்ராபில் மாடத்தினுள் நின்று தொழுது கொண்டிருக்கும்போது, வானவர்கள் குரல் கொடுத்தார்கள்: "அல்லாஹ் உமக்கு யஹ்யா (என்ற மக)வைக் கொண்டு நிச்சயமாக நற்செய்தி சொல்கின்றான். அவர் அல்லாஹ்விடமிருந்து வரப்போகும் ஒரு வாக்கினை, மெய்ப்படுத்தக் கூடியவராய் விளங்குவார். மேலும், அவரிடம் தலைமைத்துவம் (சய்யிதன்) மற்றும் மகத்துவத்தின் பண்புகள் காணப்படும். மனக்கட்டுப்பாடு கொண்டவராகவும் இருப்பார்; நபித்துவம் அருளப்பட்டவராகவும் இருப்பார். மேலும் ஒழுக்க சீலர்களில் ஒருவராகவும் திகழ்வார்." 
பீ. ஜைனுல் ஆபீதின் தமிழாக்கம்:
3:39. அவர் தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருந்தபோது "யஹ்யாவைப் பற்றி அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான். அல்லாஹ்வின் வார்த்தையை90 அவர் உண்மைப்படுத்துவார். தலைவராகவும் (சய்யிதன்), ஒழுக்கக் கட்டுப்பாடு மிக்கவராகவும், நபியாகவும், நல்லவராகவும் இருப்பார்'' என்று வானவர்கள் அவரை அழைத்துக் கூறினர்.
இவ்வசனத்தில் வரும் "ஒழுக்கமுள்ளவர்" என்ற சொற்றொடரானது, அவர் திருமணம் செய்துக்கொள்ளாமல், வனாந்திரத்தில் வாழ்ந்தவராக இருந்தார் என்பதை காட்டக்கூடியதாக உள்ளது. அவர் நபியாகவும், நல்லவராகவும் இருந்தார் என்ற குர்-ஆன் சொற்றொடரானது, "மனந்திரும்புங்கள், தீய வழிகளை விட்டுவிட்டு, நல் வழியில் வாழுங்கள்" என்று மக்களுக்கு அவர் செய்த போதனையை காட்டுவதாக உள்ளது (லூக்கா 3:1-20).
எனினும் "சய்யித் (தலைவர், எஜமான்)" என்ற குர்-ஆனின் சொற்றொடர் யோவான் ஸ்நானகனுக்கு பொருந்துவதாக இல்லை. யோவான் வாழ்ந்த முதல் நூற்றாண்டு கால சமுதாய சூழ்நிலையில்,  திருமணம் செய்துக்கொள்ளாமல், பிள்ளைகளும் பெறாமல் இருக்கும் ஒரு வாலிபன், தன் இன மக்களுக்கு தலைவராக இருப்பது என்பது கடினமாகும். அவர் வாழ்ந்த சமுதாயத்தில் யோவான் மக்களின் தலைவராக ஒருபோதும் இருந்ததில்லை. அவர் ஒரு வாலிபனாக இருந்த சமயத்திலேயே, அதிகாரத்தில் இருந்த பெரிய தலைவர்களை கேள்வி கேட்டு, அவர்களின் தீய செயல்களை கண்டித்தது உண்மை தான். உதாரணத்திற்கு,ஏரோது இராஜாவின் தீய செயல்களை அவர் கண்டித்தார் (லூக்கா 3:19). அவர் இதனை ஒரு நபியாக, வனாந்திரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாக செய்தாரே தவிர, தன் யூத ஜனங்களின் தலைவராக பதவி வகித்தவராக இதனை செய்யவில்லை (லூக்கா 3:4. ஏசாயா 40:3). 
ஆக, யோவானை "தலைவன்" என்று குர்-ஆன் அழைப்பது, அதன் ஆசிரியருக்கு யோவானின் உண்மையான வாழ்க்கை வரலாறு தெரியவில்லை என்பதை வெளிக்காட்டுகிறது. இதனால் தான் கீழ்கண்ட மொழியாக்கங்கள், தலைவர் என்று அவரை மொழிபெயர்க்காமல், வெறு வகையாக எழுதி, குர்-ஆனின் அறியாமையை/பிழையை மறைத்துள்ளார்கள்.
முஹம்மது ஜான் "கண்ணியமுடையவராகவும்" என்று மொழியாக்கம் செய்துள்ளார்:
3:39. அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து: "நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்; அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்" எனக் கூறினர். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)
பிக்தால், Lordly என்று மொழியாக்கம் செய்கிறார்:
And the angels called to him as he stood praying in the sanctuary: Allah giveth thee glad tidings of (a son whose name is) John, (who cometh) to confirm a word from Allah, lordly, chaste, a prophet of the righteous. Pickthall
யூசுப் அலி, Noble என்று மொழியாக்கம் செய்கிறார்:
While he was standing in prayer in the chamber, the angels called unto him: "Allah doth give thee glad tidings of Yahya, witnessing the truth of a Word from Allah, and (be besides) noble, chaste, and a prophet,- of the (goodly) company of the righteous." Yusuf Ali
சஹி இண்டர்னாஷ்நல், honorable என்று மொழியாக்கம் செய்கிறது:
So the angels called him while he was standing in prayer in the chamber, "Indeed, Allah gives you good tidings of John, confirming a word from Allah and [who will be] honorable, abstaining [from women], and a prophet from among the righteous." Saheeh International
ஹிலாலி & கான் noble என்று மொழியாக்கம் செய்கிறார்கள்:
Then the angels called him, while he was standing in prayer in Al-Mihrab (a praying place or a private room), (saying): "Allah gives you glad tidings of Yahya (John), confirming (believing in) the Word from Allah [i.e. the creation of 'Iesa (Jesus), the Word from Allah ("Be!" - and he was!)], noble, keeping away from sexual relations with women, a Prophet, from among the righteous." Al-Hilali & Khan
முஹம்மது அஸத்  outstanding amoung men என்று எழுதுகிறார்:
Thereupon, as he stood praying in the sanctuary, the angels called out unto him: "God sends thee the glad tiding of [the birth of] John, who shall confirm the truth of a word from God, and [shall be] outstanding among men, and utterly chaste, and a prophet from among the righteous." Muhammad Asad
பிக்தால், lordly என்று எழுதுகிறார், ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவருக்கு உரிய தரத்தில்/தகுதியில் என்று இதனை புரிந்துக் கொள்ளவேண்டுமா? "தலைவராக" இருப்பதற்கும், தலைவர் பதவி வகிக்காமல் ஆனால், "தலைவருக்கு உரிய தகுதிகளோடு" இருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. இதர மொழியாக்கங்கள் செய்தவர்கள், தலைவர் என்ற எண்ணம் வரக்கூடாது என்பதற்காக "கண்ணியமான" போன்ற வார்த்தைகளைக் கொண்டு, குர்-ஆனின் தவறை மொழியாக்கங்களில் திருத்தியுள்ளார்கள்.
எனினும், ஆங்கிலத்தில் ஹானரபுல் (honorable) என்ற வார்த்தை "சய்யித்" என்ற அரபி வார்த்தைக்கு  பயன்படுத்தியது சரியா தவறா என்று உறுதியாக கூறமுடியாது. ஏனென்றால், சய்யிதன் என்ற அரபி வார்த்தையானது, குர்-ஆனில் காணப்படும் அனேக குழப்பமான வார்த்தைகளில் இதுவும் ஒன்றாகும். இவ்வார்த்தையின் அர்த்தம் என்னவென்று யாருக்கும் தெரியாது. குர்-ஆன் முரண்பாடுள்ள, புரியாத மற்றும் குழப்பம் தரக்கூடிய வார்த்தைகளை பயன்படுத்துவது, அதன் நம்பகத்தன்மையை கெடுத்துவிடுகின்றது. 
குர்-ஆனில் "சய்யித்" என்ற வார்த்தை, இன்னொரு இடத்திலும் வருகிறது. அது குர்-ஆன் 12:25ம் வசனமாகும். குர்-ஆன் மொழியாக்கம் செய்தவர்கள், குர்-ஆன் 3:39ல் சய்யித் என்ற வார்த்தை வரும் போது, "honorable" அல்லது "noble" என்று மொழியாக்கம் செய்தார்கள். ஆனால், இந்த இரண்டாவது இடத்தில்(12:25) மட்டும் "தலைவர்/எஜமான்" என்றே மொழியாக்கம் செய்துள்ளார்கள். இவர்கள் உண்மையை மறைக்கிறார்கள் என்பது இதன் மூலம் விளங்குகிறது.
யூசுஃப் அலி:
So they both raced each other to the door, and she tore his shirt from the back: they both found her lord(sayyidaha) near the door. She said: "What is the (fitting) punishment for one who formed an evil design against thy wife, but prison or a grievous chastisement?" Yusuf Ali
பிக்தால்:
And they raced with one another to the door, and she tore his shirt from behind, and they met her lord and master at the door. She said: What shall be his reward, who wisheth evil to thy folk, save prison or a painful doom? Pickthall
ஹிலாலி & கான்:
So they raced with one another to the door, and she tore his shirt from the back. They both found her lord (i.e. her husband) at the door. She said: "What is the recompense (punishment) for him who intended an evil design against your wife, except that he be put in prison or a painful torment?" Al-Hilali & Khan
முஹம்மத் அஸத்:
And they both rushed to the door; and she [grasped and] rent his tunic from behind - and [lo!] they met her lord at the door! Said she: "What ought to be the punishment of one who had evil designs on [the virtue of] thy wife - [what] but imprisonment or a [yet more] grievous chastisement?" Muhammad Asad
இவ்வசனத்தின் பின்னணியை பார்ப்போம். இந்த நிகழ்ச்சியில் வரும் அந்தப் பெண், பல முறை யோசேப்போடு தவறான உறவு கொள்ளமுயற்சி எடுத்து இருக்கிறாள். ஆனால், அது பயன் அளிக்கவில்லை. மேலும், அவள் "சய்யித்" இடம் யோசேப்பு பற்றி குற்றம் சுமத்துகிறாள். இந்த இடத்தில் சய்யித் என்றால், "கண்ணியமிக்க" என்று அர்த்தம் கொள்ளமுடியாது. அவளது கணவனுக்கு யோசேப்பை தண்டிக்கும் சக்தி இருப்பதினாலும், அதற்கான அதிகாரம் அவரிடம் இருப்பதினாலும் தான் அவள் முறையிடுகிறாள். 
ஆக, குர்-ஆன் 12:25ல் வரும் சய்யித் என்ற வார்த்தையின் அர்த்தம், தலைவர் அல்லது எஜமானன், அதிகாரம் உடையவர் என்பதாகும். எனவே, குர்-ஆன் 3:39ல் யோவானை "தலைவர்" என்று மொழியாக்கம் செய்தவர்களின் மொழியாக்கம் தான் சரியானது. குர்-ஆன் 3:39ல் "கண்ணியமிக்க" என்று மொழிப்பெயர்த்தவர்கள் தவறு செய்துள்ளார்கள். 
சய்யித் என்றால் கணவன் என்று அர்த்தமா?
சில மொழியாக்கங்களில் சய்யித் என்ற வார்த்தையை "கணவன்"  (12:25) என்று மொழியாக்கம் செய்துள்ளார்கள். ஆனால், இது சரியான எழுத்தின் படியான மொழியாக்கம் ஆகாது. இது தான் சரியான மொழியாக்கம் என்று சொன்னால், இது இன்னொரு புதிய பிரச்சனையை குர்-ஆனுக்கு கொடுக்கும். ஏனென்றால், யோவான் ஒரு கணவனாக இருப்பான் என்று அல்லாஹ் சொல்வதாக அமைந்துவிடும். எனவே, பெரும்பான்மையான மொழியாக்கங்களில், யோவானின் விஷயத்தில் "தலைவர்" என்று மொழிப்பெயர்த்துள்ளார்கள். இவர்களுக்கு நன்றாகத் தெரியும், கணவன் என்று யோவானின் வசனத்தில் பயன்படுத்தினால், அது மிகப்பெரிய தவறாக இருக்கும். 
யோவான் பற்றிய இதர குர்-ஆன் வசனங்களில் உள்ள பிழைகளை அறிய கீழ்கண்ட இரண்டு கட்டுரைகளை படிக்கவும்:
முடிவுரை (உமர்):
யோவான் பற்றிய அனேக விஷயங்களை நாம் இக்கட்டுரையில் ஆய்வு செய்தோம். குர்-ஆனின் அரைகுறையான விளக்கங்கள் அல்லது தீர்க்கதரிசனங்கள் குர்-ஆனின் நம்பகத்தன்மையை கேள்வி கேட்பதாக இருக்கிறது. இப்போது இக்கட்டுரையில் முன்வைத்த கேள்விகளைப் பார்ப்போம். முஸ்லிம்கள் இதைப் பற்றி மேலும் ஆய்வு செய்ய சில புதிய கேள்விகள் இங்கே தரப்படுகின்றன.
அ) யோவான் எப்படி இயேசுவை மெய்ப்படுத்தினார்? [குர்-ஆனில் இதற்கு பதில் இல்லை].
ஆ) ஏன் யோவான் இயேசுவை மெய்ப்படுத்தவேண்டும்? ஒரு நபி இன்னொரு நபியை ஏன் மெய்ப்படுத்த வேண்டும்? [இதற்கும் குர்-ஆனில் பதில் இல்லை].
இ) ஒரே காலக்கட்டத்தில், ஒரே இன மக்களுக்கு ஏன் இரண்டு தீர்க்கதரிசிகளை அல்லாஹ் அனுப்பினார்? யோவான் இயேசுவிற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாக பிறக்கிறார், ஏன் இவர் ஆறு மாதங்களுக்கு பிறகு பிறக்கப்போகும் இயேசுவை மெய்ப்படுத்தவேண்டும்? [இதற்கும் குர்-ஆனில் பதில் இல்லை].
ஈ) இயேசு அல்லாஹ்வின் வார்த்தையென்று யோவானின் பிறப்பு பற்றிய தீர்க்கதரிசனங்களில் ஏன் அல்லாஹ் குறிப்பிடவேண்டும்? [இதற்கும் குர்-ஆனில் பதில் இல்லை].
உ) உண்மையாகவே, யோவான் ஒரு தலைவராக இருந்தாரா? [இதற்கும் குர்-ஆனில் பதில் இல்லை].
ஊ) கடைசியாக, ஏன் குர்-ஆன் மொழியாக்கங்கள் செய்தவர்கள், "அல்லாஹ்வின் வார்த்தை" என்று வரும் இடத்தில், வெவ்வேறு விதமாக மொழியாக்கம் செய்துள்ளார்கள்? இவர்கள் மறைக்க விரும்பும் விஷயம் என்ன? 

கருத்துகள் இல்லை: