முஸ்லிம்: உங்கள் பைபிளில், எங்கள் இறைத்தூதர் முஹம்மது பற்றி பல வசனங்கள் உள்ளன என்று உங்களுக்குத் தெரியுமா?
கிறிஸ்தவர்: பைபிள் கறைபடுத்தப்பட்டுவிட்டது என்று முஸ்லிம்களாகிய நீங்கள் சொல்கிறீர்கள் அல்லவா?
முஸ்லிம்: ஆமாம், பைபிள் மாற்றப்பட்டுவிட்டது தான்..
கிறிஸ்தவர்: அப்படியானால், கறைபடுத்தப்பட்ட புத்தகத்தில் உங்கள் இறைத்தூதர் முஹம்மது பற்றிய வசனங்கள் உள்ளன என்று எப்படி நீங்கள் சொல்கிறீர்கள்? அல்லாஹ் தன் தூதர் முஹம்மதுவின் பெயர் உள்ள புத்தகத்தை பாதுகாத்து இருந்திருப்பான்? என்பதை சிந்திக்கமாட்டீர்களா?
முஸ்லிம்: பைபிள் முழுவதும் கறைபடுத்தப்படவில்லை, சில விவரங்கள் மட்டுமே கறைபடுத்தப்பட்டது.
கிறிஸ்தவர்: அப்படியானால், அந்த சில விவரங்களை பாதுகாக்க அல்லாஹ்வினால் முடியவில்லை அப்படித்தானே? தன் வார்த்தைகளை தானே காப்பாற்ற முடியாத நிலையில் அல்லாஹ் இருக்கிறான் என்றுச் சொல்கிறீர்கள்!
முஸ்லிம்: அது அல்லாஹ்வின் தவறல்ல, அது மனிதனின் தவறு.
கிறிஸ்தவர்: ஆமாம், இதைத் தான் நானும் சொல்கிறேன். அல்லாஹ் தான் உண்டாக்கிய பலவீனமான படைப்பான மனிதன் தன் வார்த்தைகளை மாற்றும் போது, அவனை தடுக்க முடியாத அளவிற்கு அல்லாஹ் இருந்துள்ளான்..
முஸ்லிம்: இல்லை, இல்லை. சில வசனங்கள் மாற்றப்பட்டன, மீதமுள்ள விவரங்கள் அனைத்தும் மாற்றப்படாமல் இருக்கின்றன.
கிறிஸ்தவர்: எந்த வசனங்கள் மாற்றப்பட்டன? எவைகள் மாற்றப்படவில்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?
முஸ்லிம்: குர்ஆன் தான் சொல்கிறது. முந்தைய வேதங்கள் மாற்றப்பட்டன என்பதால் தான் கடைசியாக குர்ஆன் இறங்கியது.
கிறிஸ்தவர்: ஓ அப்படியா! ஆக, குர்ஆன் வருவதற்கு முன்பே பைபிள் மாற்றப்பட்டது என்பதால் தான் குர்ஆன் வந்தது என்றுச் சொல்கிறீர்கள்? அப்படித்தானே!
முஸ்லிம்: ஆமாம்.
கிறிஸ்தவர்: அப்படியானால், என் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்:
1) முந்தைய வேதங்கள் பற்றி ஏன் குர்ஆன் புகழ்ந்து பேசுகின்றது?
2) கிறிஸ்தவர்களின் வேதம் மாற்றப்பட்டு இருந்திருந்தால், ஏன் குர்ஆனில் அல்லாஹ், கிறிஸ்தவர்களைப் பார்த்து, உங்களுக்கு நான் இறக்கிய இன்ஜிலின் படி தீர்ப்பு வழங்குங்கள் என்றுச்சொல்கிறான்?
3) கிறிஸ்தவர்களைப் பார்த்து, ஏன் அல்லாஹ் 'வேதமுடையவர்கள்' என்று அழைக்கின்றான், அந்த வேதம் தான் மாற்றப்பட்டுவிட்டதே!
முஸ்லிம்: உண்மையில் குர்ஆன் தோரா, ஜபூர் மற்றும் இன்ஜில் பற்றி தான் பேசுகின்றது, பைபிளைப் பற்றி பேசவில்லை.
கிறிஸ்தவர்: அப்படியானால், ஏன் நீங்கள் முஹம்மதுவின் பெயரை பைபிளில் தேடிக்கொண்டு இருக்கிறீர்கள்?
முஸ்லிம்: . . .
கிறிஸ்தவர்: தோரா, ஜபூர் மற்றும் இன்ஜில் புத்தகங்கள் இப்போது எங்கே உள்ளன?
முஸ்லிம்: இந்த புத்தகங்கள் தொலைந்துவிட்டன.
கிறிஸ்தவர்: இந்த மூன்று புத்தகங்களும் தொலைந்துவிட்டன என்று அல்லாஹ், குர்ஆனில் எங்கேயாவது சொல்லியுள்ளானா? ஏதாவது வசன எண்ணை தரமுடியுமா?
முஸ்லிம்: ம்ம்ம். . .இல்லை வசன எண்களை கொடுக்கமுடியாது. குர்ஆன் இறங்கிய நேரத்தில், அப்புத்தகங்கள் தொலைக்கப்படாமல் இருந்தன.
கிறிஸ்தவர்: ஓ.. அப்படியானால், முஹம்மதுவின் வாழ்நாட்களில் இப்புத்தகங்கள் முழுவதுமாக இருந்தன, ஆனால், குர்ஆனுக்கு பிறகு அவைகள் தொலைந்துவிட்டன என்றுச் சொல்கிறீர்கள், சரி தானே!
முஸ்லிம்: ஆமாம்.
கிறிஸ்தவர்: ஒரு சின்ன சந்தேகம். இதற்கு முன்பு தானே நீங்கள் சொன்னீர்கள், "முந்தைய வேதங்கள் மாற்றப்பட்டுவிட்டன என்பதால் தான் குர்ஆனை அல்லாஹ் கடைசி வேதமாக இறக்கினான் என்று"? இப்பொழுது மாற்றி தலைகீழாகச் சொல்கிறீர்கள்?
முஸ்லிம்: பைபிளில் மாற்றப்பட்ட தோராவும், ஜபூரும், இன்ஜிலும் உள்ளன.
கிறிஸ்தவர்: குர்ஆனுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, பைபிள் முழுமை அடைந்துவிட்டது, மற்றும் உலகின் பல நாடுகளுக்கும் கண்டங்களுக்கும் பரவி விட்டுஇருந்தது. உங்களின் கூற்றுப்படி, பைபிளில் காணப்படும் தோரா, ஜபூர் மற்றும் இன்ஜில் மாற்றம் அடைந்துவிட்டது என்றுச் சொன்னால், ஆரம்ப காலத்தில் இருந்த கைப்பிரதி தோரா, ஜபூர் மற்றும் இன்ஜிலோடு நாம் ஒப்பிட்டுப்பார்த்து சரி பார்க்கலாம். குர்ஆனுக்கு பிறகு பைபிள் மாற்றப்பட்டுவிட்டது என்ற உங்கள் குற்றச்சாட்டுக்கு பதில், குர்ஆனுக்கு முன்பு இருந்த பைபிளோடு ஒப்பிட்டுப்பார்ப்பது தான். இன்று நம்மிடம் இவை இரண்டும் உள்ளன, முழு உலகமும் இதனை ஒப்பிட்டுப்பார்த்து தெரிந்துக்கொள்ளலாம். இதுவரை எந்த ஒரு முஸ்லிமும் இதனை செய்யவில்லை, ஆனால், முஸ்லிமல்லாத இதர அறிஞர்கள் அனைவரும் செய்தாகிவிட்டது.
குர்ஆனுக்கு முன்பு, குர்ஆனுக்கு பின்பு உள்ள பைபிளை ஒப்பிட்டுப்பார்த்து, முஹம்மதுவின் பெயர் இல்லாததைப் பார்த்து, இஸ்லாமிய கோட்பாடுகள் இல்லாததைப் பார்த்து அறிஞர்கள் அமைதியாகிவிட்டனர். ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு, பல நாடுகள் மற்றும் கண்டங்களுக்கு நெடிய பணம் செய்து, அனைத்து பைபிள்களையும் சேகரித்து வைத்துக்கொண்டு, எல்லாவற்றிலும் மாற்றம் செய்வது என்பது கற்பனையில் மட்டுமே நடக்கக்கூடிய ஒன்றாகும். இப்படிப்பட்ட ஒரு பெரிய எழுத்து ஊழல் நடந்ததாக சரித்திரம் சாட்சியிடவில்லை, இது சாத்தியமும் இல்லை. குர்ஆன் ஏழாம் நூற்றாண்டில் பிறந்த போது, முந்தைய வேதங்களில் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு நடந்ததாக அது சொல்லவில்லை, மேலும் தனக்கு பின்பாக நடக்கும் என்றும் குர்ஆன் சொல்லவில்லை. மாறாக, முந்தைய வேதங்களை உறுதிப்படுத்தவே தாம் வந்ததாக கூறுகிறது, முந்தைய வேதங்களை புகழ்ந்து பேசுகின்றது.
முஸ்லிம்: பவுல் என்பவர் தான் பைபிளை மாற்றிவிட்டார்.
கிறிஸ்தவர்: இந்த வாதம் அறிவுடையோர் சொல்லும் வாதமல்ல.. முஹம்மதுவிற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் பவுலடியார். பவுலடியார் என்பவர் தன் வேதங்களை இவ்விதமாக மாற்றிவிட்டார் என்று அல்லாஹ் முஹம்மதுவிற்கு குர்ஆனை இறக்கும் போது சொன்னதுண்டா? அபூ லஹப் செய்த செயலுக்கான தண்டனையாக நரகத்தில் அவரை தள்ளுவேன் என்று சொன்ன அல்லாஹ், பவுலடியார் பற்றி ஏதாவது சொல்லியுள்ளானா? அவருக்கு ஏதாவது தண்டனை கொடுப்பேன் என்று பெயர் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளானா அல்லாஹ்? முஸ்லிம்களின் படி, பவுலடியாரின் செயல்கள் அபூ லஹப்பின் செயலை விட பெரியது என்பதால், அல்லாஹ் ஏதாவது குர்ஆனில் சொல்லியிருக்கக்கூடும் என்பதால் தான் இந்த கேள்வியைக் கேட்டேன்!
ஒரு பலவீனமான சாதாரண மனிதனால், சர்வ வல்லவனாகிய அல்லாஹ்வின் வார்த்தைகளை அழிக்கமுடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? உங்களை பொறுத்தமட்டில், தன் வார்த்தைகளை காத்துக்கொள்ள திராணியில்லாத, வல்லமையற்ற ஒரு பலவீனமான இறைவனாக அல்லாஹ் காணப்படுகின்றானா?
இதுமட்டுமல்ல, ஒரு முக்கியமான விவரத்தை நீங்கள் மறைமுகமாகச் சொல்லவருகிறீர்கள். அதாவது, பலவீனமான மனிதன் மாற்றிய புத்தகங்கள் 2000 ஆண்டுகளாக மாற்றமடையாமல் இருக்கின்றன, ஆனால், அல்லாஹ்வின் புத்தகங்கள் தொலைந்துவிட்டன, அல்லது மற்றப்பட்டுவிட்டன என்று முஸ்லிம்களாகிய நீங்கள் கூறுகின்றீர்கள்.
அல்லாஹ்வின் புத்தகங்கள் எங்கே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக