இஸ்லாமையும் கிறிஸ்தவத்தையும் ஒப்பிட்டு தொடர் கட்டுரைகள் எழுதும் போது, பலதார திருமணத்தைப் பற்றி ஒரு விவரத்தையும் சொல்லாமல் தொடரை முடித்தால் 'பார்ப்பதற்கு நன்றாகவா இருக்கும்'? அதாவது, ஒரு பட்டிமன்ற பேச்சாளர்கள் தன்னுடைய பேச்சை முடிப்பதற்கு முன்பாக கணவன் மனைவி பற்றிய ஒரு ஜோக்கை சொல்லாவிட்டால் அவர் ஒரு சிறந்த பட்டிமன்ற பேச்சாளர் என்று கருதப்படமாட்டார் என்று சொல்வது போல, இஸ்லாமிய திருமணம் பற்றி எழுதாமல் எந்த ஒரு தொடர் கட்டுரையும் முடிவு பெறாது.
முஸ்லிம் ஆண்கள் நான்கு பேரை திருமணம் செய்துக் கொள்கிறார்கள் என்று மாற்று மார்க்க ஆண்களுக்கு பொறாமை, அதனால் தான் இஸ்லாமின் பலதாரமணத்தை விமர்சிக்கிறார்கள் என்று முஸ்லிம் ஆண்கள் சொல்லக்கூடும்.
இந்த கூற்றில் உண்மை இருக்கின்றதா? இல்லையா? என்பதை அறிய முஸ்லிம் பெண்களை கேட்டுப்பாருங்கள்?
சகக்கழுத்தி (காலப்போக்கில் இது சக்காளத்தி என்று மாறிவிட்டது) உள்ள முஸ்லிம் குடும்ப பெண்களையும், அவர்களின் பிள்ளைகளையும் கேட்டுப்பாருங்கள், உண்மை விளங்கும். அவ்வளவு ஏன் முஹம்மதுவின் குடும்பத்திலேயே சகக்கழுத்தி பிரச்சனைகள் இருந்தன. அந்த ஒரு குறிப்பிட்ட மனைவிக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? போன்ற கேள்விகள் அவரிடமும் கேட்கப்பட்டது. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், முஹம்மது திருமணம் செய்திருந்த பெண்களால் முஹம்மதுவிற்குத் தான் அதிக தொல்லைகள் என்றுச் சொல்லலாம். தன்னுடைய நபி படும் பாடுகளைக் கண்டு, அல்லாஹ் வசனங்களை இறக்கி, அவர்களை பிளாக்மெயில் செய்துள்ளான் என்றுச் சொன்னால் பார்த்துக் கொள்ளுங்களேன், பலதாரமணத்தினால் எவ்வளவு பிரச்சனைகள் உண்டாகுமென்று. நபிக்கே இந்த கதியென்றால் சாதாரண மக்களைச் சொல்லவேண்டுமா? தம்முடைய மனைவிகளிடம் இருந்து அல்லாஹ் காப்பாற்றுவார் என்று முஹம்மது எண்ணியிருந்தார், ஆனால் அல்லாஹ் என்ன சொன்னார் தெரியுமா, "நீங்கள் நபிக்கு அதிக தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தால், உங்களை அவர் விவாகரத்து செய்து, அவருக்கு வேறு நல்ல பெண்களை மறுபடியும் நான் திருமணம் செய்து வைப்பேன் என்று இஸ்லாமிய தாய்மார்களை மிரட்டினான்.
அது முஹம்மதுவின் குடும்ப பிரச்சனை நமக்கெதற்கு! சரி விஷயத்துக்கு வருவோம்.
ஒருத்தியோடு மட்டுமே வாழவேண்டும் என்று கணவனை மனைவி கட்டாயப்படுத்தினால்! - இஸ்லாமில் இது ஹராம்:
நான்கு மனைவிகளை திருமணம் செய்துக்கொள்ள முஸ்லிம் கணவனுக்கு அல்லாஹ் அனுமதி கொடுத்து இருக்கும் போது, அதனை தடுப்பது ஹராம் ஆகாதா?
4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.
[கவனிக்கவும், அல்லாஹ் இந்த வசனத்தில் "ஒவ்வொன்றாகவோ" என்று சொல்கிறானா பாருங்கள், எடுத்த எடுப்பிலேயே இரண்டிரண்டாகவோ என்று தொடங்குகிறான்]
ஒரே ஒரு பெண்ணைத் தான் திருமணம் செய்யச்சொல்லி இஸ்லாம் சொல்கிறது, ஆனால் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் தான் இரண்டு, மூன்று அல்லது நான்கு பேரை திருமணம் செய்ய குர்ஆன் அனுமதிக்கிறது என்று முஸ்லிம்கள் சப்பைக் கட்டு கட்டுவார்கள். அதாவது,
- முதல் திருமணம் நடந்தது,
- தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இரண்டாம் திருமணம்
- மறுபடியும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மூன்றாம் திருமணம்
- மறுபடியும் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நான்காம் திருமணம்.
ஒரு முஸ்லிம் ஆணுக்கு எத்தனை முறைதான் 'தவிர்க்க முடியாத சூழ்நிலை' வரும், மற்றவர்களுக்கெல்லாம், இப்படிப்பட்ட தவிர்க்க முடியாத சூழ்நிலையே வருவதில்லையே! அது ஏன்? ("தவிர்க்க முடியாத சூழ்நிலை" என்றால் என்ன சிறிது முஸ்லிம்கள் விளக்கமுடியுமா?).
முஸ்லிம்களின் படி இது தான் சீக்குவன்ஸ்:
முஸ்லிம் ஒரு திருமணம் செய்வான் -> தவிர்க்க முடியாத சூழ்நிலையில் -> 2/3/4 திருமணங்கள் செய்துக்கொள்ளலாம்.
ஆனால், குர்ஆன் 4:3 இப்படி சொல்லவில்லை!
குர்ஆன் 4:3ன் படி இது தான் சீக்குவன்ஸ்:
ஒரு முஸ்லிம் 2/3/4 திருமணங்கள் செய்யலாம் -> தவிர்க்க முடியாத நூழ்நிலையில் -> ஒரு திருமணம் செய்யலாம்.
சீக்குவன்ஸ் எதுவாக இருந்தாலும், முஸ்லிம் பெண்களின் படி, சகக்கழுத்தி என்பது ஹராம் ஆகும்.
இது தவறான கருத்தாகும், முஸ்லிம் பெண்கள் "தங்கள் ஆண்கள் இப்படி நான்கு திருமணங்கள் செய்வது ஹராம்" என்று கருதுவதில்லை என்றுச் சொல்லும் முஸ்லிம்கள், கீழ்கண்டவைகளை செய்துப்பாருங்கள்:
1) உங்கள் மகளுக்கு ஒரு நல்ல கணவனை தெரிவு செய்து திருமணம் செய்யுங்கள். அவன் உங்கள் மகளை ராணி மாதிரி அன்பாக பார்த்துக்கொள்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒரு மாதம் கழித்து, உங்கள் மருகமனிடம் சென்று, உனக்கு இரண்டாம் திருமணம் செய்ய விருப்பமா? என்று மகளுக்கு முன்பாக கேட்டுப்பாருங்கள். இப்போது உங்கள் மகளின் ரியாக்ஷ்ன் என்னவாக இருக்கும் என்று கவனித்துப் பாருங்கள். அடுத்தபடியாக, உண்மையாகவே உங்கள் மருமகனுக்கு இரண்டாம் திருமணம் செய்ய முயற்சி எடுத்துப்பாருங்கள், அதன் பிறகு உங்கள் மகளின் ரியாக்ஷ்னை கவனியுங்கள். இஸ்லாமா? மகளா? யார் ஜெயிப்பார்கள் என்று அப்போது புரியும். [நீயெல்லாம் ஒரு அப்பனா என்று காறி துப்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை]
2) மேற்கண்ட இதே சூழ்நிலையில் உங்கள் சகோதரியை வைத்து கற்பனை செய்துப்பாருங்கள். உங்கள் சகோதரியின் ரியாக்ஷ்ன் எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.
உங்கள் மகளோ/சகோதரியோ, தன் கணவன் தனக்கு மட்டுமே கணவனாக இருக்கவேண்டும் என்று விரும்புவது தவறா?
ஒருத்தியோடு மட்டுமே வாழவேண்டும் என்று கணவனை மனைவி கட்டாயப்படுத்தினால்! - கிறிஸ்தவத்தில் இது ஹலால்:
ஒரு கிறிஸ்தவப்பெண் தன் கணவன் தனக்கு மட்டுமே கணவனாக இருக்கவேண்டும் என்று விரும்புவது ஹலால் ஆகும். இதனையே இயேசுவும் ஒருவனுக்கு ஒருத்தி என்று சொல்லியுள்ளார். அவன் பாதை மாறிச் சென்றால், கிறிஸ்தவப்பெண் அவன் மீது வழக்கு தொடுப்பாள், இந்த உரிமை முஸ்லிம் பெண்களுக்கு இல்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும். [பலதாரமண கணவனிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் என் இஸ்லாமிய தங்கைகள், அக்காக்கள் படும் வேதனை சொல்லிமுடியாது.]
மத்தேயு 19:4-6
4. அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும்,
5. இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?
6. இப்படி இருக்கிறபடியால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார்.
9. ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணினால், அவன் விபசாரம் பண்ணுகிறவனாயிருப்பான்; தள்ளிவிடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ஆண்களுக்கு சுயகட்டுப்பாட்டை கற்றுக்கொடுப்பதை விட்டுவிட்டு...
பொதுவாகவே, ஆண்கள் ஒரு மாதிரியானவர்கள். இஸ்லாமின் படி நான்கு பெண்களை திருமணம் செய்தாலும், ஐந்தாவது மனைவியைத் தேடுவான் மனுஷன். ஒரு பெண்ணோடு வாழ்க்கை நடத்துபவனே சுயகட்டுப்பாடுள்ள உண்மையான ஆண் என்று கருதப்படுவான். ஒரு மனைவியை உடைய சில ஆண்களும், மற்ற பெண்களைப் பார்க்கும் போது சில வேளைகளில் உள்ளத்தில் சபலப்படுவார்கள், ஆனாலும் தன் சமுதாய அந்தஸ்தை கருத்தில் கொண்டு, தன் குடும்பத்தை கருத்தில் கொண்டு, சுயகட்டுப்பாட்டுடன் தன் 'சிற்றின்ப ஆசைகளை கட்டுப்படுத்தி' வெற்றிப்பெற்றுக்கொண்டு முன்னேறிச் சென்றுக்கொண்டே இருப்பார்கள்.
ஒவ்வொரு ஆணும் பெண்ணும் இப்படிப்பட்ட சுயகட்டுப்பாடு உடையவர்களாக இருக்கவேண்டும் என்று இயேசு எதிர்ப்பார்க்கிறார். ஆனால், அல்லாஹ் எதை கற்றுக்கொடுக்கின்றான்? இரண்டிரண்டாகவோ, மூம்மூன்றாகவோ, நன்னான்காகவோ என்று இரண்டிலிருந்தே தொடங்குகிறான். அல்லாஹ்விற்கு கணக்கை ஒன்றிலிருந்து ஆரம்பிக்க விருப்பமில்லைபோலும். இது போதாது என்று திருமணம் செய்துக்கொள்ளாமலேயே வைப்பாட்டிகளாக வைத்துக்கொள்ள அடிமைப்பெண்களை வாங்கிக்கொள்வதும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த அடிமைப்பெண்களின் எண்ணிக்கை சொல்லப்படவில்லை.
பணம் அதிகமாக உள்ள முஸ்லிம், பல பெண்களை விலைக்கு வாங்கி உடலுறவில் ஈடுபடலாம், என்ன கன்ராவி இது, ஒரு குடும்பத்தில் ஒரு ஆண் இப்படியெல்லாம் செய்யமுடியுமா?
முஹம்மது முதற்கொண்டு, அவருடைய நெருங்கிய தோழர்கள் முதற்கொண்டு, பணம் படைத்த இன்றைய அரேபிய மன்னர்கள் இதனை செய்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். மக்காவில் விவாகரத்து அதிகமாக நடக்கிறது என்பதை அறியும் போது, புனித நகரத்தின் புனிதம் மீது சந்தேகம் வருகிறது.
எது எப்படியோ, முஸ்லில்ம் பெண்களுக்கு இஸ்லாம் ஒரு சாபம், முஸ்லிம் ஆண்களுக்கு இஸ்லாம் ஒரு வரம்.
முடிவுரை:
கிறிஸ்தவமும் இஸ்லாமும் ஒரே மரத்தின் கிளைகள் அல்ல. இவ்விருவரும் வேறு வேறு மரத்தின் கிளைகள். வீட்டிற்கும் நாட்டிற்கும் பலதாரமணம் ஒரு எலும்புறுக்கி நோய் போன்றது. பெண்களை துக்கப்படுத்தி, கணவன் மனைவி அன்பை சிதைத்து, பிள்ளைகள் மனச்சோற்விற்கு ஆளாவதற்கு காரணமாக இருப்பது பலதாரமணம்.
ஒரே தாய்க்கு பிறந்த பிள்ளைகள் பெரியவர்கள் ஆனவுடன் சொத்துக்களுக்காக அடித்துக்கொண்டு சாகிறார்கள், இதில் சகக்கழுத்தியின் பிள்ளைகள் என்று வந்துவிட்டால், அந்த வீட்டில் நிம்மதிக்கு இடமிருக்குமா? ஏதோ ஆயிரத்தில் ஒரு வீட்டில், பலதாரமணத்தினால் பிரச்சனை இல்லாமல் இருக்கும், ஆனால், பெரும்பான்மையான வீடுகளில் ஒரு ஆண் தன் அன்பை பல பெண்களோடு பகிர்ந்துக்கொண்டால், நிம்மதி வீட்டைவிட்டு வெளியே சென்று விடும், அவ்வீட்டின் பெண்களின் வேதனையை வார்த்தைகளால் விவரிக்கமுடியாது.
எந்த தலைப்பை எடுத்துக்கொண்டாலும் சரி, முஹம்மதுவும் இயேசுவும் ஒருமித்து கருத்து சொல்வதில்லை, இஸ்லாமும் கிறிஸ்தவமும் ஒத்துப்போவதில்லை.
எவைகளை இயேசு ஹராம் என்றுச் சொல்லி எச்சரித்தாரோ, அதனை ஹலால் என்று முஹம்மது பின்பற்றியுள்ளார். தொழுகை முதற்கொண்டு திருமணம் வரைக்கும், பிறப்பு முதற்கொண்டு இறப்பு வரைக்கும் இவ்விரு துருவங்கள் ஒரு போதும் ஒன்று சேராது. இதனை மறுப்பவர்கள் இவ்விரு மார்க்கங்களின் புத்தகங்களை படித்து அறிந்துக்கொள்ளுங்கள்.
முஸ்லிம்களே, இஸ்லாமிலிருந்து உங்கள் பெண்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
தேதி: 4th Jun 2019
2019 ரமளான் கட்டுரைகள்
அனைத்து ரமளான் தொடர் கட்டுரைகளை படிக்க
உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்
Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2019ramalan/2019-ramalan-10.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக