(ஜிஹாதின் அடிச்சுவடுகளில் சிலுவைப்போர் - தொடர் கட்டுரைகள்)
சிலுவைப்போர்கள் பற்றிய முந்தைய தொடர் கட்டுரைகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடுப்புக்களில் படிக்கலாம்.
மேற்கண்ட இரண்டாம் தொடரில் முஹம்மதுவின் மரணம் தொடங்கி, முதல் சிலுவைப்போர் தொடங்கும்வரையில் "கிறிஸ்தவ மற்றும் இதர நாடுகள் மீது" இஸ்லாமியர்கள் தொடுத்த போர்கள், அழித்த தேவாலயங்கள் போன்ற விவரங்களை ஆண்டு வரிசையில் கண்டோம். இந்த கட்டுரையில், அதே விவரங்களை இன்னும் தெளிவாக புரியும் வண்ணம் வரைபடங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாக விளக்கவுள்ளோம். இஸ்லாமிய போர்களின் விவரங்களை படங்கள் மூலமாக சுலபமாக அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையில் பதியப்படும் படங்கள் உதவும்.
இதுமட்டுமல்லாமல், இக்கட்டுரையில் எத்தனை சிலுவைப்போர்கள் நடந்தன? எந்தெந்த ஆண்டுகளில் அவைகள் நடந்தன, அவர்கள் கைப்பற்றிய நாடுகள் யாவை? போன்றவைகளையும் படங்கள் மூலமாக காண்போம்.
தலைப்புக்கள்:
- மதினாவில் 10 ஆண்டுகளில் முஹம்மது கட்டளையிட்ட போர்கள்/வன்முறைகள் (622-632)
- முஹம்மதுவின் மரணம் தொடங்கி, முதல் நான்கு (ரஷீதுன்) கலீஃபாக்கள் நடத்திய போர்கள் மற்றும் கைப்பற்றிய நாடுகள் (632-660)
- ஐந்தாவது கலீஃபா தொடங்கி, சிலுவைப்போர் வரை இஸ்லாமிய அரசுகள் நடத்திய போர்கள் மற்றும் கைப்பற்றிய நாடுகள் (660-1095)
- எத்தனை சிலுவைப்போர்கள் நடந்தன? எந்தெந்த ஆண்டுகளில் நடந்தன?
இஸ்லாமிய புள்ளிவிவரங்கள்:
இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்ட விவரங்கள் இஸ்லாமிய சரித்திர நூல்களிலிருந்தும், குர்ஆன் மற்றும் ஹதீஸ்களிலிருந்தும், இஸ்லாமிய விளக்கவுரைகளிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் இணையத்தில் முக்கியமாக விக்கிபீடியா கலைக்களஞ்சியத்தில் கிடைக்கின்றன. அவைகளின் தொடுப்புக்களும் கொடுக்கப்பட்டுள்ளன, வாசகர்கள் நாம் பதிக்கும் விவரங்களின் உண்மைத்தன்மையை சரி பார்த்துக்கொள்ளலாம்.
1) மதினாவில் 10 ஆண்டுகளில் முஹம்மது கட்டளையிட்ட போர்கள்/வன்முறைகள் (622-632)
முஹம்மது 63 ஆண்டுகள் வாழ்ந்தார். தம்முடைய 40வது வயதில் "தான் ஒரு நபி (தீர்க்கதரிசி)" என்று பிரகடனப்படுத்தினார். அதன் பிறகு 12 லிருந்து 13 ஆண்டுகள் மக்காவில் வாழ்ந்தார். பிறகு மதினாவிற்கு இடம்பெயர்ந்து (ஹிஜ்ரி ஆண்டு தொடக்கம்) அதிக பட்சமாக 10 ஆண்டுகள் வாழ்ந்தார்.
மதினாவில் வாழ்ந்த அந்த 10 ஆண்டுகளில் அவர் போர்களிலும், வழிப்பறி கொள்ளைகளிலும், வன்முறை செயல்களிலும் ஈடுபட்டார். அவைகள் பற்றி இப்போது காண்போம். குர்ஆனின் அத்தியாயங்களும் மக்கீ மற்றும் மதனீ என்று பிரிக்கப்பட்டதும், முஹம்மதுவின் இருப்பிடத்தை (வாழ்ந்த ஊரினை) கருத்தில் கொண்டு தான் என்பது கவனிக்கத்தக்கது.
இந்த தொடர் கட்டுரைகளில் "முஹம்மதுவின் வன்முறைகள் என்று குறிப்பிடும் போது", அது முஹம்மது செய்த கீழ்கண்ட காரியங்களை குறிக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
- வியாபார கூட்டங்களை வழிமறித்து அவர்களின் உடைமைகளை கொள்ளையிட்டது (Raids)
- இவரே வலியச்சென்று போர் செய்தது (Offence)
- எதிரிகள் இவர் மீது போர் தொடுக்கும் போது இவர் போரிட்டது (Defence)
- தன்னை எதிர்த்து பேசியவர்களை ஆட்களை அனுப்பி கொலை செய்தது
கீழ்கண்ட அட்டவணையைப் பார்க்கவும். முஹம்மது மதினாவில் வாழ்ந்த 10 ஆண்டுகளில் அவர் கட்டளையிட்ட வன்முறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. மொத்தம் 95 வன்முறைகள் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
10 ஆண்டுகளில், 95 வன்முறைகள் என்றால், ஒரு ஆண்டுக்கு 9.5 வன்முறைகள் என்று கணக்கு வருகின்றது. புரியும் படி சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், முஹம்மது மதினாவிற்கு வந்த பிறகு ஒவ்வொரு ஆறு வாரங்களுக்கு (ஒன்றரை மாதத்தில்) ஒரு வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.
கீழ்கண்ட விக்கிபீடியா தொடுப்பில் முஹம்மதுவின் வன்முறைச் செயல்கள் 95ஐ வரிசைப் படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. அதனை நான் ஹிஜ்ரி ஆண்டு வரிசையில் தயாரித்துள்ளேன். கிழேயுள்ள அட்டவணையை காணவும்.
Source: List of expeditions of Muhammad – Wikipedia
அட்டவணை 1: முஹம்மது 10 ஆண்டுகளில் பங்கு பெற்ற கட்டளையிட்ட போர்கள்/வன்முறைச் செயல்கள் ஹிஜ்ரி ஆண்டு வரிசையில்
முஹம்மது மட்டும் பங்கு பெற்ற வன்முறைகளை கூட்டினால், அது 28 வருகின்றது. அதாவது மதினாவில் வாழ்ந்த 10 ஆண்டுகளில், முஹம்மது பங்கு பெற்ற வன்முறைகள் 28 ஆகும். மீதமுள்ள 67 வன்முறைகளில் முஹம்மது பங்கு பெறவில்லை, தம்முடைய சஹாபாக்களின் தலைமையில் சண்டையிடும் படி கட்டளையிட்டார்.
புகாரி ஹதீஸின்படி 19 போர்களில் முஹம்மது பங்கு பெற்றார் என்பது தவறா?
புகாரி ஹதீஸ் எண்கள்: 3949, 4404 & 4471 ன்படி முஹம்மது பங்கு பெற்ற போர்கள் 19 என்று வருகிறதே, ஆனால் 28 என்று நாம் சொல்வது ஏன் என்ற கேள்வி சிலருக்கு எழலாம். புகாரி சொல்லும் கணக்கு முஹம்மது போருக்குச் சென்று சண்டையிடுவதைப் பற்றித் தான். ஆனால், இஸ்லாமிய சரித்திரத்தின் படி முஹம்மது பங்கு பெற்ற வழிப்பறி கொள்ளைகள், பழிக்கு பழிவாங்கும் சண்டைகள், போர்கள் என்று அனைத்தையும் கூட்டும் போது 28 வருகின்றது (இந்த பட்டியலில் முஹம்மது பங்கு பெற்ற விவரங்களை சரி பார்க்கவும்: en.wikipedia.org/wiki/List_of_expeditions_of_Muhammad)
புகாரி ஹதீஸ்: 3949. அபூ இஸ்ஹாக்(ரஹ்) அறிவித்தார்
நான் ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களுக்கும் அருகிலிருந்தபோது, 'நபி(ஸல்) அவர்கள் புரிந்த போர்கள் எத்தனை?' என்று அவர்களிடம் வினவப்பட்டது. 'பத்தொன்பது' என்று அவர்கள் பதிலளித்தார்கள். 'நபி(ஸல்) அவர்களுடன் நீங்களும் பங்கெடுத்த போர்கள் எத்தனை?' என்று வினவப்பட்டபோது, 'பதினேழு' என்றார்கள். 'இவற்றில் முதல் போர் எது?' என்று நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள், 'உஸைரா' அல்லது 'உஷைர்' என்று பதிலளித்தார்கள்.
மேற்கண்ட அட்டவணையை பார் சார்ட் (Bar Chart) வரைபடமாக பார்க்கும் போது, விவரம் இன்னும் தெளிவாக புரியும்:
வரைபட விளக்கம் - உதாரணம்:
ஹிஜ்ரி ஆண்டு 1: மதினாவிற்கு முஹம்மது ஹிஜ்ரத் செய்த பிறகு முதலாம் ஆண்டில், நான்கு வன்முறைகளை கட்டளையிட்டுள்ளார். அதில் ஒரு வன்முறையில் முஹம்மது சுயமாக பங்கு பெற்றுள்ளார், மீதமுள்ள 3 வன்முறைகளில் அவர் பங்கு பெறவில்லை, முஸ்லிம்கள் மட்டுமே பங்கு பெற்றுள்ளனர்.
ஹிஜ்ரி ஆண்டு 8: முஹம்மது மதினாவிற்குச் சென்ற 8ம் ஆண்டை கவனித்தால், முஹம்மது கட்டளையிட்ட வன்முறைச் செயல்கள் 20 ஆகும், அதில் 4ல் அவரே சுயமாக பங்கு பெற்றுள்ளார்.
2) முஹம்மதுவின் மரணம் தொடங்கி, முதல் நான்கு (ரஷீதுன்) கலீஃபாக்கள் நடத்திய போர்கள் மற்றும் கைப்பற்றிய நாடுகள்
முதல் தலைப்பில் முஹம்மது தம் வாழ்நாளில் (கடைசி 10 ஆண்டுகளில்) பங்கு பெற்ற போர்கள் மற்றும் வன்முறைச் செயல்களைக் கண்டோம். இந்த தலைப்பில் அவருக்கு அடுத்து வந்த நான்கு கலீஃபாக்கள்(முஸ்லிம் தலைவர்கள்) புரிந்த போர்களைப் பற்றி சுருக்கமாக காண்போம்.
சிலுவைப்போர்கள் பற்றி அறியவேண்டிய இடத்தில் ஏன் இஸ்லாமிய போர்கள் பற்றி பார்க்கிறோம் என்று சில வாசகர்களுக்கு கேள்வி எழலாம். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், இஸ்லாமியர்கள் முதலில் கிறிஸ்தவ நாடுகளில் மீது போர் தொடுத்து அவைகளை ஆக்கிரமித்துக் கொண்டதால் தான், நீண்ட காலத்துக்குப் பிறகு கிறிஸ்தவர்கள் கொதித்தெழுந்து எதிரடி கொடுத்தார்கள் (முஸ்லிம்களின் கணக்குப்படி பார்த்தால், கிறிஸ்தவர்கள் ரொம்ப லேட்டாக பதிலடி கொடுத்திருக்கிறார்கள் என்று அர்த்தம். முஸ்லிம்களாக இருந்திருந்தால், உடனே அடி விழுந்திருக்கும்).
அஸ்திபாரத்தை புரிந்துக்கொள்ளாமல், அதன் மீது கட்டப்பட்ட மாளிகையை புரிந்துக்கொள்ளமுடியாது. அஸ்திபாரத்தின் ப்ளூ பிரிண்டைப் பார்த்தல் தான் மாளிகை ஏன் இப்படி கட்டப்பட்டுள்ளது(சிலுவைப்போர்கள் ஏன் தொடங்கப்பட்டன) என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும்.
முதல் கலீஃபா: அபூ பக்கர் (கி.பி. 632-634)
முஹம்மது மரித்த பிறகு அரவது நெருங்கிய தோழர் அபூ பக்கர் அவர்கள் முதல் இஸ்லாமிய கலீஃபாவாக (ஆட்சியாளராக) நியமிக்கப்படுகின்றார். ஒருமனதாக முஸ்லிம்கள் இவரை நியமிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இஸ்லாமின்படி, முஹம்மது ஒரு நபியாக இருந்தும், தன்னுடைய மரணத்துக்கு பிறகு யார் இஸ்லாமிய ஆட்சியாளராக இருக்கவேண்டும் என்று சொல்லாமல் மரித்துவிடுகின்றார். இதனால் நாற்காலியில் யார் உட்காரவேண்டும் என்ற வாக்குவாதங்கள் சஹாபாக்களின் இடையில் உண்டானது. கடைசியாக அரைகுறை மனதோடு முஸ்லிம்கள் அபூ பக்கரை தலைவராக ஒப்புக்கொள்கிறார்கள்.
இவர் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார், 634ம் ஆண்டு மரித்துவிடுகின்றார்.
இந்த இரண்டரை ஆண்டுகளில் இவர் என்ன செய்தார்? பல நாடுகளுக்கு இஸ்லாமிய ஊழியர்களை அனுப்பி இஸ்லாமிய அழைப்புப்பணி செய்தாரா? இஸ்லாமிய அழைப்புப் பணிக்கு எவ்வளவு பணம் இவரால் செலவிடப்பட்டது? இதற்கெல்லாம் பதில் முஸ்லிம்களிடம் இல்லை. ஆனால், இவர் எத்தனை போர்களை புரிந்தார், எந்தெந்த பகுதிகளை இஸ்லாமிய ஆட்சிக்குள் கொண்டுவந்தார் போன்ற விவரங்கள் கிடைக்கும்.
சரி, அபூ பக்கர் அவர்கள் புரிந்த போர்கள்/வன்முறைகளை ஆண்டு வரிசையாக கீழ்கண்ட படத்தில் காண்போம். இந்த விவரங்கள் இஸ்லாமிய சரித்திர நூல்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது, சரி பார்க்க விரும்புகிறவர்கள் கொடுக்கப்பட்ட விக்கிபீடியா தொடுப்பை சொடுக்கவும்.
கீழ்கண்ட அட்டவணைப் படங்களை கவனியுங்கள்.
முஹம்மதுவிற்கு முன்பு அரேபியா எப்படி இருந்தது என்பதை முதலாவது படம் காட்டுகின்றது. முஹம்மது மதினாவிற்கு சென்ற ஆண்டிலிருந்து (622), முஹம்மது மரிக்கும் போது, அதாவது 632ம் ஆண்டு வரை பத்து ஆண்டுகளில் முஹம்மது கைப்பற்றிய அரேபிய தீபகர்ப்பத்தை இரண்டாம் படம் காட்டுகின்றது. மூன்றாம் படத்தில் முதல் கலீஃபா அபூ பக்கர் அவர்கள் கைப்பற்றிய நாடுகள் குறிக்கப்பட்டுள்ளது. முஹம்மது கைப்பற்றிய நாடுகளை அபூ பக்கர் இன்னும் விருத்தி செய்தார்.
இரண்டாம் கலீஃபா உமர் (634 - 646)
முதல் கலீஃபா அபூ பக்கர் மரித்த பிறகு உமர் இரண்டாம் கலீஃபாவாக பதவி ஏற்றார், இவர் 634 லிருந்து 644 வரை (10 ஆண்டுகள் மற்றும் சில மாதங்கள்) ஆட்சி புரிந்தார். இவர் தம்முடைய 10 ஆண்டு கால ஆட்சியில், இன்னும் அனேக நாடுகளை ஆக்கிரமித்தார். முக்கியமாக, எருசலேமை இவர் கைப்பற்றினார் (637). கிறிஸ்தவ பைசாந்திய ஆட்சியாளரிடமிருந்து இஸ்லாம் எருசலேமை கைப்பற்றியது. சிலுவைப் போர்களின் முக்கிய நோக்கமாக, கிறிஸ்தவ புனித ஸ்தலங்களை முஸ்லிம்களிடமிருந்து திரும்பப்பெருவதாக இருந்தது என்பதை இங்கு நியாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
இரண்டாம் கலீஃபா கைப்பற்றிய நாடுகள் ஆண்டு வரிசையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
உமரின் ஆட்சியின் முடிவில் மத்திய கிழக்கு நாடுகளில் எந்தெந்த பகுதிகள் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது என்பதை கீழ்கண்ட படம் காட்டுகின்றது. உமர் தம் ஆட்சி காலத்தில் எகிப்து, எருசலேம், பைசாந்திய நாடுகள், பெர்சியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளை இஸ்லாமின் ஆட்சிக்குள் கொண்டு வந்தார். அபூ பக்கர் கைப்பற்றிய நாடுகளோடு, உமர் கைப்பற்றிய நாடுகளை (படங்களை) ஒப்பிட்டுப்பாருங்கள்.
மூன்றாம் மற்றும் நான்காம் கலீஃபாக்களின் ஆட்சி காலம் (உஸ்மான் மற்றும் அலி – 644- 661)
இரண்டாம் கலீஃபா உமர் கொல்லப்படுகின்றார், அதன் பிறகு உஸ்மான் மூன்றாம் கலீஃபாவாக பதவி ஏற்கிறார். இவரும் தம் பங்கிற்கு பல நாடுகளை பிடிக்கிறார். இவரது ஆட்சியில் அதிருப்தி கொண்டு முஸ்லிம்களே இவர்களை கொல்கிறார்கள். அதன் பிறகு நான்காம் கலீஃபாவாக அலி அமருகிறார், இவரும் சில நாடுகளை பிடிக்கிறார்.
இவ்விருவரின் ஆட்சியில் இவர்கள் செய்த போர்களை கீழ்கண்ட அட்டவணையில் ஆண்டு வரிசையில் விளக்கியுள்ளோம்.
இப்போது அரேபியா இஸ்லாமின் நான்காவது கலிஃபான அலியின் கால அடைசியில் எப்படி இருந்தது என்பதை பாருங்கள். மேலும் உமையத் கலீஃபாக்கள் கைப்பற்றிய நாடுகளையும் இந்த படத்தில் குறிப்பிட்டுள்ளோம்.
- கி.பி. 622 - 632 முஹம்மது கைப்பற்றிய நாடுகள்
- கி.பி. 632 - 661 நான்கு கலீஃபாக்கள் கைப்பற்றிய நாடுகள்
- கி.பி. 661 - 750 உமையத் கலீஃபாக்கள் கைப்பற்றிய நாடுகள்
முஹம்மது மரித்த 30 ஆண்டுகளில் நான்கு கலீஃபாக்கள் எகிப்து, எருசலேம், பைசாந்திய பேரரசு, பெர்சியா போன்ற இடங்களை பிடித்துவிட்டார்கள். அடுத்த 90 ஆண்டுகளில் உமையத் முஸ்லிம்கள் ஸ்பெயின் வரையில் பிடித்துவிட்டார்கள், கிழக்கில் இப்போதுள்ள பாதி பாகிஸ்தான்வரை (சிந்து பகுதி) பிடித்துவிட்டார்கள்.
இது தான் கி.பி. 622 முதல் கி.பி. 750 வரையிலான சுருக்கமான இஸ்லாமிய விஸ்தரிப்பு விவரங்கள்.
முஸ்லிம்கள் கைப்பற்றிய நாட்டு மக்கள், தங்கள் நாடுகளை முஸ்லிம்களிடமிருந்து விடுவிக்க போர் செய்தால் அது தவறாகுமா? முஸ்லிம்கள் ஏன் தங்கள் நாடுகள் மீது முதலில் போர் தொடுத்தார்கள் என்ற கேள்வி அந்நாட்டு மக்களுக்கு எழாதா? சிந்தியுங்கள்!
3) ஐந்தாவது கலீஃபா தொடங்கி, சிலுவைப்போர் வரை இஸ்லாமிய அரசுகள் நடத்திய போர்கள் மற்றும் கைப்பற்றிய நாடுகள் (660-1095)
முதல் சிலுவைப்போர் 1095/1096ம் ஆண்டு தொடங்கியது.
பில் வார்னர் என்ற அறிஞர், இஸ்லாமின் போர்கள் பற்றியும் சிலுவைப்போர்கள் பற்றியும் ஆய்வுச் செய்து, நாம் மேலே கண்ட விவரங்களையும், இன்னும் 1095ம் ஆண்டு வரை முஸ்லிம்கள் செய்த போர்களையும் தொகுத்து ஒரு அருமையான வீடியோவை தயாரித்துள்ளார்.
முஹம்மது முதல் சிறுவைப்போர்கள் வரையிலான விவரங்கள சுருக்கமாக இந்த வீடியோவில் விளக்கியுள்ளார். இதுவரை கண்ட விவரங்களை இன்னும் தெளிவாக சில நிமிடங்களில் நாம் கற்றுக்கொள்ளமுடியும். இந்த வீடியோவில் 1:20 நிமிடத்திலிருந்து பாருங்கள், இஸ்லாமியர்கள் கைப்பற்றிய நாடுகள், அவர்கள் தொடுத்த போர்களின் விவரங்களை தெளிவாக பார்க்கலாம். கடைசியாக, சிலுவைப்போர் பற்றியும் இந்த வீடியோ விளக்குகிறது.
இஸ்லாம் புரிந்த 548+ போர்கள்:
இவருடைய ஆய்வில் "ரோம மற்றும் கிரேக்க நாடுகளில்" இஸ்லாம் 548 போர்களை புரிந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் ஆப்ரிக்கா, இந்தியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இஸ்லாம் புரிந்த போர்களை கணக்கில் கொள்ளவில்லை. இதனை கீழ்கண்டவாறு விவரிக்கிறார்..
Well, what I would like to talk about here, are facts. I created a database of 548 battles that Islam fought: jihad battles against classical civilization. This isn't even all the battles. It doesn't include battles Africa, India, Afghanistan and other locations. It's primarily at data base of the battles against the classical civilization of Rome and Greece.
மூலம்: Jihad vs Crusades - Bill Warner, PhD - www.politicalislam.com/jihad-vs-crusades/
4) எத்தனை சிலுவைப்போர்கள் நடந்தன? எந்தெந்த ஆண்டுகளில் நடந்தன?
இதுவரை சிலுவைப்போர்களுக்கு முன்பு (இஸ்லாமுக்கு பின்பு மற்றும் 1095க்கு முன்பு) என்ன நடந்தது என்பதை படங்கள், வீடியோக்கள் மூலமாக கண்டோம். இப்போது சிலுவைப் போர்கள் பற்றி காண்போம். அதன் பிறகு இஸ்லாமிய போர்கள் மற்றும் சிலுவைப்போர்கள் இரண்டையும் ஒப்பிட நமக்கு தேவையான விவரங்கள் கிடைத்துவிடும்.
இஸ்லாமிய போர்களாக இருக்கட்டும், அல்லது சிலுவைப்போர்களாக இருக்கட்டும், ஆய்வு செய்து முடிந்த அளவிற்கு அவைகளின் ஆணிவேர் வரைச் சென்றால் தான், நாம் சொல்லும் கருத்து உண்மையின் அடிப்படையில் உள்ளதா இல்லையா என்பதை அறியமுடியும்.
எத்தனை சிலுவைப்போர்கள் நடந்துள்ளன? அவைகளின் ஆண்டுகள் என்ன?
1095ம் ஆண்டிலிருந்து 1270வரை 8 சிலுவைப்போர்கள் நடந்ததாக சரித்திரம் சொல்கிறது. நான் பொதுவாக செய்வதுப்போன்று, இந்த 8 போர்கள் பற்றிய விவரங்களை சுலபமாக புரிந்துக்கொள்வதற்காக, படமாக இங்கு தருகிறேன்.
இந்த பட்டியலில் 'இடைவெளி ஆண்டுகள்' என்ற பத்தியை கவனிக்கவும்.
இடைவெளி ஆண்டுகள் - ஏன் & எப்படி கணக்கிட்டீர்கள்?
ஒவ்வொரு சிலுவைப்போர்களுக்கும் இடையே சில ஆண்டுகள் இடைவெளி உள்ளது. நான் இந்த பட்டியலை தயாரிக்கும்போது, ஒரு சிலுவைப்போர் முடிந்த ஆண்டிலிருந்து அடுத்த சிலுவைப்போர் துவங்கிய ஆண்டுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை மட்டுமே கணக்கில் கொண்டேன்.
உதாரணத்திற்கு:
முதல் சிலுவைப்போர் 1095ம் ஆண்டு துவங்கி, 1099ம் ஆண்டு முடிவடந்தது.
இரண்டாம் சிலுவைப்போர் 1147ம் ஆண்டு துவங்கியது.
நாம் 1147ம் ஆண்டிலிருந்து, 1099ம் ஆண்டை கழிக்கும் போது நமக்கு 48 ஆண்டுகள் இடைவெளி வருகிறது. முதல் சிலுவைப்போர் துவங்கிய ஆண்டுக்கும், இரண்டாம் சிலுவைப்போர் துவங்கிய ஆண்டுக்கும் இடையே வித்தியாசத்தை கணக்கிட்டால் அது 52 ஆண்டுகள் என்று வரும் (1147 – 1095 = 52). ஆனால், நான் 48 என்ற கணக்கை மட்டுமே எடுத்துக்கொண்டேன்.
ஏன் சிலுவைப்போர்களின் இடைவெளி ஆண்டை கணக்கிடுகிறீர்கள்? என்று கேட்டால், இதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு, அதனை அடுத்தடுத்த கட்டுரையில் குறிப்பிடுவேன். இந்த கட்டுரைக்கு இந்த விவரம் போதும். ஆனால், இப்போதைக்கு ஒவ்வொரு சிலுவைப்போருக்கு இடையேயுள்ள இடைவெளி ஆண்டுகள் மீது ஒரு கண் வைக்கவும்.
சிலுவைப்போர்கள் எத்தனை எட்டா? ஒன்பதா?
சிலுவைப்போர்களை வகைப்படுத்துவதில் சரித்திர ஆசிரியர்கள் வித்தியாச எண்ணிக்கையை கொண்டுள்ளார்கள். சிலர் எட்டு என்றும் சிலர் ஒன்பது என்றும் கூறுகிறார்கள்.
உதாரணத்திற்கு, கீழ்கண்ட எட்டாம் சிலுவைப்போர் பற்றிய விவரங்களை படிக்கவும்:
The Eighth Crusade was a crusade launched by Louis IX of France against the city of Tunis in 1270. The Eighth Crusade is sometimes counted as the Seventh, if the Fifth and Sixth Crusades of Frederick II are counted as a single crusade. The Ninth Crusade is sometimes also counted as part of the Eighth. The crusade is considered a failure after Louis died shortly after arriving on the shores of Tunisia, with his disease-ridden army dispersing back to Europe shortly afterwards.[1]
விக்கிபீடியா தமிழ் பக்கம் இதைப் பற்றிச் சொல்லும் போது:
புனித நிலத்தில் இடம்பெற்ற சிலுவைப்போர்கள், 1095-99இல் இடம்பெற்ற முதலாம் சிலுவைப்போரிலிருந்து, 1271 -72 வரை இடம்பெற்ற ஒன்பதாம் சிலுவைப்போர் வரை, பொதுவாக ஒன்பது என்றே இனங்காணப்பட்டிருக்கின்றன. போர்களை முன்னின்று நடத்தியவரைக் கருதி, இத்தொடர்களை ஏழாகவும் குறைத்து நோக்கலாம்.[1]
Source: ta.wikipedia.org/s/3vl
மேலும், சிலுவைப்போர்களில் பிரதானமானது கிறிஸ்தவ புனித இடங்களை முஸ்லிம்களின் ஆட்சியிலிருந்து கைப்பற்றுவதற்காக நடத்தப்பட்டவைகளாகும் (1095 லிருந்து 1270 வரை). கி.பி. 1270க்கு பிறகு நடத்தப்பட்ட சிலுவைப்போர்களுக்கு வேறு பல காரணங்கள் கூறுகின்றார்கள். அவைகள் பேகனிசம் மற்றும் கள்ள உபதேசங்களுக்கு எதிராக நடத்தப்பட்டவைகள் என்று சொல்லப்படுகின்றது.
The best-known crusades are those fought against the Muslims of the eastern Mediterranean for the Holy Land in the period between 1096 and 1271. Other crusades were fought from the 12th century for a variety of reasons including the suppression of paganism and heresy, the resolution of conflict among rival Catholic groups, against the Iberian Moors and the Ottoman Empire.
Source: en.wikipedia.org/wiki/Crusades
இஸ்லாமிய போர்கள் மற்றும் சிலுவைப்போர்கள் ஒப்பீடு
கீழ்கண்ட இரண்டு படங்களை கவனிக்கவும்.
முஹம்மது தொடங்கி சிலுவை போர்கள் வரையில் எத்தனை போர்களை இஸ்லாம் செய்துள்ளது என்பதை முதல்படம் காட்டுகின்றது. இதைப் பற்றிய விவரங்கள் மேலே கொடுக்கப்பட்ட யுடியூப் வீடியோவில் காணலாம்.
இரண்டாம் படத்தில், சிலுவைப்போர்கள் எத்தனை மற்றும் எங்கே நடத்தப்பட்டது என்பது சிலுவை குறியீடு மூலம் காட்டப்பட்டுள்ளது.
இவ்விரண்டையும் ஒரே ஒரு நிமிடம் கவனித்தாலே, நனக்கு உண்மை புரியும். சிலுவைப் போர்கள் நடைப்பெற்ற நாடுகளை இடங்களை கவனிக்கவும்.
இஸ்லாமிய போர்கள் மற்றும் சிலுவைப்போர்கள் ஒப்பீடு | |
---|---|
கி.பி. 632 முதல் கி.பி. 1100 வரை | |
கி.பி. 1095 முதல் கி.பி. 1270 வரை |
முடிவுரை:
இந்த தொடரில் இஸ்லாமிய போர்கள் மற்றும் சிலுவைப்போர்கள் பற்றிய விவரங்களை அட்டவணைகளாகவும், படங்களாகவும் பார்த்தோம். இந்த தொடர் கட்டுரைகளை தொடர்ந்து படித்துக்கொண்டு இருக்கின்ற உங்களுக்கு சிலுவைப்போர்கள் பற்றியும், இஸ்லாமியர்களின் ஆக்கிரமிப்புக்கள் பற்றியும் ஓரளவுக்கு புரிந்திருக்கும். இன்னும் ஆழமாக, இவைகளை அடுத்தடுத்த தொடர்களில் காண்போம்.
ஒரு விவரத்தை மறுபடியும் தெளிவாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், அது என்னவென்றால், சிலுவைப்போர்கள் பைபிளில் கட்டளையிடப்படாதது மற்றும் இயேசு அங்கீகரிக்காதது ஆகும். பைபிளுக்கு எதிராக திருச்சபை மனிதர்கள் எடுத்த தவறான முடிவு தான் சிலுவைப்போர்கள். கிறிஸ்தவ சபை ஒரு போதும் அதனை அங்கீகரிக்கவில்லை. ஆனால், நாடுகளை ஆக்கிரமித்து இஸ்லாமை அங்கு ஸ்தாபிப்பது குர்ஆனின் கட்டளையாகும், அல்லாஹ்வின் கட்டளையாகும்.
தேதி: டிசம்பர் 30, 2019
ஜிஹாதின் அடிச்சுவடுகளில் சிலுவைப்போர்கள் - பொருளடக்கம்
உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள்
Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/crusades/crusades-3.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக