(How Is Christianity Different From Other Religions?)
கிறிஸ்தவம் மற்ற மதங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது? கிறிஸ்தவம் தனிச்சிறப்பு வாய்ந்தது, அதாவது 'மனிதனுக்கு இரட்சிப்பைத் தருவது, மனிதனை சொர்க்கத்தில் சேர்ப்பது போன்றவற்றை இறைவன் மீது சுமத்தியுள்ளது கிறிஸ்தவம், மனிதன் மீது அல்ல. உலகில் உள்ள எல்லா மதங்களும் "பரலோகத்திற்கு வருவதற்கு மனிதன் என்ன என்ன செய்யவேண்டும்?" என்று சொல்லித்தருகிறது, ஆனால், கிறிஸ்தவம் மட்டும் தான் "மனிதனை பரலோகத்திற்கு அழைத்துச் செல்வதற்கு, இறைவன் என்ன செய்தார்" என்றுச் சொல்கிறது.
உதாரணமாக, பரலோகத்திற்குச் செல்ல:
- யூத மதத்தில் நீங்கள் நீதியுள்ளவர்களாக இருக்க வேண்டும், மற்றவர்களிடமும் அன்பாக நடந்துக்கொள்ளவேண்டும், இதர சட்டங்களையும் பின்பற்ற வேண்டும்.
- புத்தமதத்தில் "நிர்வானா" என்ற நிலையை அடைய, மனிதன் 'எட்டு கோட்பாடுகளை/கட்டளைகளை பின்பற்றவேண்டும்'.
- இஸ்லாத்தின் படி "சொர்க்கம் செல்லவேண்டுமென்றால், நீங்கள் இஸ்லாமின் ஐந்து தூண்களை பின்பற்றவேண்டும், மேலும் பிற நற்செயல்களைச் செய்ய வேண்டும், இதனால் உங்கள் நற்செயல்கள் இறுதித் தீர்ப்பில் உங்கள் கெட்ட செயல்களை விட அதிகமாக இருக்கும் படி பார்த்துக்கொள்ளவேண்டும் (இது சாத்தியமா என்பது வேறு கேள்வி).
- இந்து மதத்தில் மோக்ஷத்தை அடைய, மற்றும் இறப்பு, மறுபிறப்பு சுழற்சியில் இருந்து விடுபட, நீங்கள் இந்து மதத்தில் விவரிக்கப்பட்டுள்ள நல்ல செயல்களையும், பூஜைகளையும், இதர நிபந்தனைகளையும் பின்பற்றவேண்டும்.
இதுவரை பார்த்த உலக மதங்களின்படி, பரலோகம் செல்வதற்கான எல்லா கடமைகளையும் பொறுப்புக்களையும் நீங்கள்(மனிதன்) தான் செய்யவேண்டும். ஆனால், கிறிஸ்தவத்தில் மட்டும் தான், மனிதனை சொர்க்கத்தில் சேர்ப்பதற்கான தகுதியை (License - உரிமம்) தேவனே சம்பாதித்து கொடுத்துள்ளார். உண்மையில் சொல்லவேண்டுமென்றால், இறைவன் பரிபூரண பரிசுத்தராக இருக்கிறார், உலகில் பிறந்த எந்த ஒரு மனிதனாலும், இறைவன் எதிர்ப்பார்க்கும் அளவிற்கு பரிசுத்தமாக வாழமுடியாது. ஒரு நாள், ஒரு மாதம் ஒரு ஆண்டு அல்லது சில ஆண்டுகள் வாழலாம், ஆனால் அவனது வாழ்நாள் முழுவதும் இப்படி வாழமுடியாது. நாம் பலவீனமானவர்களாக இருக்கிறோம், குறைவுள்ளவர்களாக இருக்கிறோம், ஒருவேளை நாம் சிறப்பாக நல்லவர்களாக இருக்கவேண்டுமென்று விரும்பி செயல்பட்டாலும், அதனை முழுவதுமாக எப்போதுமே செய்யமுடிவதில்லை. பரலோகம் செல்வதற்கான தகுதியை சுயமாக சம்பாதிக்க நாம் விரும்பினால், அது நம்மால் முடியாத காரியமாகவே இருக்கிறது.
மனிதனால் இது சாத்தியமில்லை என்பதால் தான், கடவுளே நமக்காக பரலோகத்திற்குச் செல்வதற்கான தகுதியை சம்பாதிக்க சுயமாக அவரே வேலையில் இறங்கிவிட்டார். அவர் எதிர்பார்க்கும் அளவிற்கு நாம் பரிபூரண பரிசுத்தமாக வாழமுடியாது என்பதை அவர் அறிந்திருந்தார். எனவே தாமே களத்தில் இறங்கிவிட்டார். அவர் மனித அவதாரம் எடுத்தார், இயேசு என்ற உருவில் மனிதனாக வந்தார். நாம் வாழமுடியாத பரிசுத்தமான வாழ்க்கையை அவர் வாழ்ந்துக் காட்டினார். இயேசு வாழ்ந்த பரிசுத்தமும், நீதியும் நம் மீது பொழியப்பட்டது. இதனால் தேவன் எப்போதெல்லாம் நம்மை பார்ப்பாரோ, அப்போதெல்லாம் நம்முடைய சுயவாழ்க்கையின் அலங்கோலங்களை அவர் பார்க்காமல், இயேசுவின் நீதியான பரிசுத்த சாயலையே நம்மில் காண்கிறார். நித்திய ஜீவனுக்கு (மோட்ஷம், சொர்க்கம், பரலோகம்) செல்லுவதற்கான தகுதியை தேவனே நமக்கு சம்பாதித்து கொடுத்துள்ளார். மனிதன் செய்யவேண்டியதெல்லாம், அவர் மீது விசுவாசம் வைக்கவேண்டும், அவர் கொடுக்கும் இலவசமான இரட்சிப்பை பெற்றுக்கொள்ளவேண்டும்.
இந்த முக்கியமான அடிப்படை விஷயத்தில் தான் கிறிஸ்தவம் மற்ற உலக மதங்களைவிட தனித்துவம் பெற்று விளங்குகிறது. மற்ற உலக மதங்களில் மனிதன் நல்ல செயல்களைச் செய்து, தன் இரட்சிப்பை (மோட்சத்தை, சொர்க்கத்தை) சம்பாதித்துக்கொள்ளவேண்டும். ஆனால், கிறிஸ்தவத்தில் தான் இறைவனே மனிதன் இரட்சிக்க இறங்கிவந்து, அந்த இரட்சிப்பை சம்பாதித்து கொடுத்துவிட்டுச் சென்றார். இதுவே கிறிஸ்தவத்தின் தனிச்சிறப்பு.
நம்மை படைத்த இறைவன் கொடுத்த இந்த இரட்சிப்பு என்ற பரிசை பெற்றுக்கொள்ள நீங்கள் ஆயத்தமா? அல்லது உங்கள் இரட்சிப்புக்காக உலக மதங்கள் சொல்வது போன்று, பாத யாத்திரைகள், பூஜைகள், சட்ட திட்டங்களை பின்பற்ற முயலப்போகிறீர்களா?
இந்த இரட்சிப்பு உங்களுக்கு வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், இப்போது நீங்கள் எங்கே இருந்தாலும், 'என்னை படைத்த இறைவனே, இயேசு மூலமாக நீங்கள் கொடுத்த இரட்சிப்பை நான் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்' என்று சொல்லிப்பாருங்கள், அதன் பிறகு ஒரு புதிய ஏற்பாட்டை வாங்கி அல்லது இணையத்தில் படித்துப் பாருங்கள் (http://www.tamil-bible.com/chapters.php?Type=Matthew).
மூலம்:https://www.str.org/w/how-is-christianity-different-from-other-religions-?inheritRedirect=true
தேதி: 4th Oct 2020
2 கருத்துகள்:
There is no worse cult than Christianity. Heard Jesus raped Mary.
Dear brother,
Thank you for your update.
Could you please provide any evidences for your comments?
Where did you read that Jesus raped Mary? in Quran or in Hindu scriptures?
அன்பான சகோதரருக்கு,
உங்கள் பதிவுக்கு நன்றி.
உங்களின் கருத்துக்கு சான்றுகளைத் தரமுடியுமா?
இயேசு மரியாளை கற்பழித்ததாக நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்கு சான்றுகளை தரமுடியுமா?
ஒருவேளை குர்ஆனில் இப்படி எழுதப்பட்டுள்ளதா? அல்லது இந்து வேதங்களில் இப்படி எழுதப்பட்டுள்ளதா? தயவு செய்து தெரிவியுங்கள்.
சான்றுகளை கொடுக்காமல் எழுதுவது படித்தவர்களுக்கு தகுதியாக இருக்காது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
"நான் கேள்விப்பட்டேன்" என்று நீங்கள் சொல்கிறீர்கள். சகோதரரே, கேள்விப்படுவதெல்லாம் நாம் உண்மை என்று நம்பிவிட்டால், அதன் பிறகு ஆய்வு எதற்கு? ஒருவிஷயத்தை வெளியே சொல்வதற்கு முன்பாக, அது உண்மையா பொய்யா? என்பதை சரி பார்க்கவேண்டாமா?
கருத்துரையிடுக