சின்னஞ்சிறு "இஸ்லாம் கிறிஸ்தவம்" தலைப்பின் முந்தைய 510 கேள்வி பதில்களை படிக்க இங்கு சொடுக்கவும்.
இந்த கட்டுரையில் "எருசலேம்" என்ற தலைப்பில் மேலதிக 10 கேள்விகளுக்கு பதில்களைக் காண்போம். இப்போது, இந்த தலைப்பை தெரிவு செய்வதற்கு காரணம் உண்டு. மே மாதம், இஸ்ரேல் மற்றும் காசாவில் உள்ள ஹமாஸ் குழுவினருக்கும் இடையே சண்டை மூண்டது. மே மாதம் 6ம் தேதியிலிருந்து 21ம் தேதிவரை (11 நாட்கள்) இது நடந்தது. இந்த கேள்வி பதில்களில் நான் யாருக்கும் சாதகமாக எழுதப்போவதில்லை. எருசலேமிலுள்ள அந்த அக் அக்ஸா மசூதியிலிருந்து இந்த சண்டை தொடங்கியதால், எருசலேம் பற்றியும், அந்த பிரச்சனைக்குரிய இடம் பற்றியும் 10 கேள்வி பதில்களை எழுதப்போகிறேன்.
கேள்வி 511: எருசலேம் நாள் (Jerusalem Day) என்பது என்ன? ஏன் இந்த நாளில் "எருசலேம் காசா சண்டை இவ்வாண்டு(2021), மே மாதம்" தொடங்கியது?
பதில் 511: எருசலேம் நாள் (Jerusalem Day, எபிரேய மொழியில்: Yom Yerushalayim) என்பது இஸ்ரேலின் தேசிய நாள் ஆகும். 1967ம் ஆண்டில் நடந்த ஆறு நாள் போரின் விளைவாக, எருசலேமின் பழைய நகர் பகுதி, மறுபடியும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதனை நினைவு கூறும் வண்ணமாகவும், அதே நேரத்தில் பல்லாண்டு காலமாக யூதர்களின் கட்டுப்பாட்டில் வராத ஜெருசலேம் (எருசலேம்) இந்த நாளில் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்ததால், இந்த நாளை தேசிய நாளாக இஸ்ரேல் கொண்டாடுகிறது. இந்நாள் யூதர்கள் வெற்றிக்கொடி நாட்டிய நாள், 2000 ஆண்டுகளாக நடக்காத ஒன்று நடந்த நாள் (எருசலேம் யூதர்களின் கையில் வந்த நாள்). யூதர்களின் எதிரிகள் இந்நாளை விரும்பாமல் இருப்பதற்கு வேறு காரணங்கள் தேவையா?
இதே நாளில் சண்டை நடந்ததற்கு இதைவிட வேறு காரணம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
நம் இந்தியாவிலும் சுதந்திர மற்றும் ஜனநாயக நாட்களில் மட்டும் அதிகமாக தலைநகரில் பாதுகாப்பு கொடுப்பதற்கு காரணம், பயங்கரவாத செயல்களை நடத்த விரும்புகிற சக்திகள், இந்நாட்களை தெரிவு செய்யக்கூடும் என்பதற்காகத் தான்.
கேள்வி 512: எருசலேம் யூதருக்கு சொந்தமா? முஸ்லிம்களுக்கு சொந்தமா?
பதில் 512: ஒரு சின்ன கேள்வி: டெல்லி யாருக்குச் சொந்தம்? சென்னை யாருக்குச் சொந்தம்? இந்தியர்களுக்கா அல்லது ஆங்கிலேயர்களுக்கா? சுருக்கமாக பதில் சொல்வதாக இருந்தால், இப்போது யார் ஆட்சி செய்கிறார்களோ, அவர்களுக்குத் தான் சொந்தம். (சென்னை யாருக்குச் சொந்தம்? தமிழர்களுக்குச் சொந்தம் என்று சொல்லாமல், எப்படி நீ இந்தியர்களுக்குச் சொந்தம் என்று கேட்கலாம் என்று சிலர் என்னை திட்டுவது என் காதில் விழத்தான் செய்கிறது. தமிழர்களை நான் துக்கப்படுத்தினால் என்னை நான் துக்கப்படுத்துவதற்கு சமம், இருந்தபோதிலும் நான் வேறு கோணத்தில் எழுதுவதினால், என்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்)
இதே கேள்வியை, 1947க்கு முன் கேட்டுயிருந்தால், ஆங்கிலேயர்கள் என்ன சொல்லியிருப்பார்கள்? எங்களுக்குத் தான் சொந்தம் என்று சொல்லியிருப்பார்கள். இந்தியர்களிடம் கேட்டு இருந்தால் என்ன சொல்லியிருப்பார்கள்? எங்களுக்குத் தான் சொந்தம், ஆங்கிலேயர்களை விரட்டியடித்த பிறகு, நாம் சொந்தம் கொண்டாடுவோம் என்று சொல்லியிருப்பார்கள். அவர்களை விரட்டியடித்த பிறகு தான், நம் மண் நம் கையில் வந்தது. எனவே இந்த கேள்வியை "யாரிடம் கேட்கிறோம், எந்த காலக்கட்டத்தில் கேட்கிறோம்" என்பதைப் பொருத்து, பதில்கள் பல வகைகளில் வரும்.
இதே கேள்வியை முகலாயர்கள் டெல்லியை ஆட்சி செய்த போது கேட்டுயிருந்தால் என்ன பதில் வந்திருக்கும்? அப்போதும் சரி, யாரிடம் கேட்கிறோம் என்பதைப் பொருத்து பதில் அமையும்.
இன்றிலிருந்து 2000 ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லியை ஆட்சி செய்த அரச குடும்ப நபர்களில் பலர் இன்று உயிரோடு இருந்து, "டெல்லி எங்கள் மூதாதையர்களுக்கு சொந்தமானது" என்று சொன்னால், இந்த வாதம் சரியாக இருக்குமா?
"நீங்களும் இந்தியர்கள், நாங்களும் இந்தியர்கள், இப்படி பிரித்து பேசுவது சரியாகுமா?" என்று பல மாகாணங்களாக இருந்து ஒன்றிணைக்கப்பட்ட சுதந்திர இந்தியாவில் வாழும் நாம் கேட்போம் அல்லவா?
இதைப் பற்றி என்னுடைய கருத்தைக் கேட்டால், "டெல்லி" எங்களுக்குச் சொந்தம் என்று கேட்க, இந்த இந்தியர்களுக்கு (அரச குடும்ப வாரிசுகளுக்கு) அதிக உரிமை இருக்குமே ஒழிய, முகலாயர்களுக்கோ, ஆங்கிலேயர்களுக்கோ இல்லை என்பேன். முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் வேறு நாடுகளிலிருந்து படையெடுத்து வந்து இங்கு ஆட்சி அமைத்தவர்கள், இவர்களோ, இந்த மண்ணுக்கு சொந்தமானவர், இவர்களுக்குத் தான் உரிமை அதிகம்.
ஆனாலும், இந்தியா ஒரு நாடாக ஒன்றுபட்டபோது, பல அரசர்கள் தங்கள் உரிமையை விட்டுக்கொடுக்கவேண்டி இருந்தது என்பதை நாம் மறக்கக்கூடாது.
சரி, எருசலேம் யாருக்குச் சொந்தம் என்று சொல்லவில்லையே என்று கேட்கத்தோன்றுகிறதா? இதை அறிய எருசலேமின் சரித்திரம் படியுங்கள், யூதர்களின் மற்றும் முஸ்லிம்களின் சரித்திரம் படியுங்கள், அப்போது தான் குறைந்த பட்சம் "மத்திய கிழக்கு நாடுகளில் பெட்ரோல் ஊற்றாமலேயே அவ்வப்போது நாடுகள் ஏன் பற்றி எரிகின்றன?" என்பது விளங்கும்.
இந்த தற்போதைய கேள்வி பதில்களில் சில சரித்திர விவரங்களை மேலோட்டமாக நாம் பார்க்கப் போகிறோம், அப்போது மேற்கண்ட சண்டையின் சாராம்சம் சிறிதளவாவது புரியும்.
எருசலேம் யாருக்கு சொந்தம் என்று கேட்பதைவிட, யாரிடம் அது உள்ளது என்று கவனிப்பது நல்லது.
கேள்வி 513: எருசலேம் கடந்த 3000 ஆண்டுகளாக யார் யார் கைகளுக்கு மாறியது?
பதில் 513: யூதர்களானாலும் சரி முஸ்லிம்களானாலும் சரி, இன்னும் யாராக(கிறிஸ்தவர்களாக) இருந்தாலும் சரி "ஜெருசலேம் எங்களுக்குத் தான் சொந்தம்" என்றுச் சொல்வதைப் பார்த்தால், என்ன தோன்றுகிறதென்றால்? கடந்த 4000 ஆயிரம் ஆண்டுகளாக, இவர்கள் மட்டுமே ஜெருசலேமை இடைவிடாமல் ஆண்டுக்கொண்டு இருப்பதாகவும், மற்றவர்கள் திடீரென்று இன்று வந்து இவர்களை துரத்திவிட்டு, கைப்பற்றிக்கொண்டதாகவும், "அதனால் தான் இந்த அங்கலாய்ப்பும் சண்டையும்" என்று சொல்வதைப்போன்று தெரிகின்றது. இது வேடிக்கையாக இருக்கிறது.
உண்மையில் சரித்திரம் என்ன சொல்கிறது? கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமா?
எருசலேமை அதிக ஆண்டுகள் ஆண்டது யார்?
- யூதர்கள் மொத்தம் 591 (518+73) ஆண்டுகள் எருசலேமை ஆண்டு இருக்கிறார்கள்.
- கிறிஸ்தவர்கள் 417 ஆண்டுகள் எருசலேமை ஆண்டு இருக்கிறார்கள்.
- முஸ்லிம்கள் மொத்தம் 1191 (461+730) ஆண்டுகள் எருசலேமை ஆண்டு இருக்கிறார்கள்.
எருசலேமை கடந்த காலங்களில் யார் ஆண்டார்கள் என்ற பட்டியலை கிழ்கண்ட இரண்டு தொடுப்புக்கள் தெளிவாக விவரிக்கின்றன, இவைகளை சொடுக்கி படித்துக்கொள்ளுங்கள். முக்கியமாக விக்கிபீடியா தளத்தின் தொடுப்பில் இதைப் பற்றிய ஒரு கால வரைபடம் உள்ளது, அதில் இன்னும் தெளிவாக இவ்விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
எருசலேமை அதிக ஆண்டுகள் ஆண்டது யார்? சரித்திரத்தின் படி முஸ்லிம்கள் தானே! ஆம் முஸ்லிம் அரசாட்சி தான் 1191 ஆண்டுகள் ஆண்டது. இது எதனை நிருபிக்கின்றது? இது எதையும் நிருபிக்கவில்லை, வலிமையுள்ளவர்களே வெல்வார்கள் என்பது தான் உலகத்தில் காணப்படும் நிலை. அதிக ஆண்டுகள் முஸ்லிம் அரசர்கள் எருசலேமை ஆண்டதால், இன்று எருசலேம் அவர்களுக்கு சொந்தமாகுமா?
தாவீது ராஜாவாக இருந்தாலும் சரி, இரண்டாம் கலிஃபா உமர் அவர்களானாலும் சரி, அதே போன்று மற்ற கிறிஸ்தவ ஆட்சியாளர்களாக இருந்தாலும் சரி, இவர்கள் அனைவரும் "போர் முனையில் ஆட்சியை பிடித்து மக்களை கொன்று எருசலேமை கைப்பற்றியவர்கள் தானே!, இதில் யாருமே இந்த விஷயத்தில் உயர்ந்தவர்களோ, தாழ்ந்தவர்களோ அல்ல.
போர் புரிந்து, மக்களைக் கொன்று ஆட்சி செய்தவர்கள் சிறந்தவர்கள் என்று கருதினால், உலக சரித்திரத்தில் பாபிலோனியர்கள், ரோமர்கள், கிரேக்கர்கள் (மகா அலேக்சாண்டர்), மற்றும் ஆங்கிலேயர்கள் தான் சிறந்தவர்கள் என்று நாம் ஓட்டு போடவேண்டியிருக்கும், இதனை தற்காலத்தில் யாராவது ஒப்புக்கொள்வார்களா?
கி.மு. 1000 அல்லது 1004ம் ஆண்டில், தாவீது ராஜா எருசலேமை கைப்பற்றிய விவரத்தை கீழ்கண்ட வசனத்தில் காணலாம்:
II சாமுவேல் 5:6-7
6. தேசத்திலே குடியிருக்கிற எபூசியர்மேல் யுத்தம்பண்ண ராஜாவானவன் தன் மனுஷரோடேகூட எருசலேமுக்குப் போனான். அவர்கள்: இதிலே பிரவேசிக்க தாவீதினால் கூடாது என்று எண்ணி, தாவீதை நோக்கி: நீ இதற்குள் பிரவேசிப்பதில்லை; குருடரும் சப்பாணிகளும் உன்னைத் தடுப்பார்கள் என்று சொன்னார்கள். 7. ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று.
கலிஃபா உமர் எப்படி எருசலேமை கைப்பற்றினார்? இந்த தமிழ் கட்டுரையை படிங்கள்.
தாவீது ராஜாவானலும் சரி, கலிஃபா உமரானாலும் சரி யாரும் சமாதான புறாக்கள் அல்ல. எனவே யார் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள் என்ற விவரம், எந்த நியாயமான முடிவு எடுக்கவும் பயன்படாது.
சரித்திரத்தை திரும்பிப்பார்த்தால், எருசலேம் 52 முறை தாக்கப்பட்டுள்ளது, 44 முறை ஆக்கிரமிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்டு மறுபடியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது, 23 முறை முற்றுகையிடப்பட்டுள்ளது மற்றும் கடைசியாக இரண்டு முறை அழிக்கப்பட்டுள்ளது. மேலும் கிமு 4000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நகரில் மக்கள் வாழ்ந்துள்ளார்கள், இதனால் உலகின் பழைய நகரங்களில் எருசலேமும் ஒன்றாகும்(https://en.wikipedia.org/wiki/Kingdom_of_Jerusalem).
கேள்வி 514: எருசலேமுக்காக இன்று சண்டை அவசியமா?
பதில் 514: ஒரு முறை முந்தைய கேள்வியின் பதிலை படித்துக்கொள்ளுங்கள்.
சௌதியில் உள்ள மக்கா நகருக்காக யூதர்கள் சண்டையிடவில்லை, மேலும், எருசலேம் நகரம் முஸ்லிம்களின் ஆட்சியில் இருக்கும் போது, யூதர்கள் வலியச் சென்று சண்டையிடவில்லை. தங்கள் எல்லைக்குள் இருக்கும் தங்கள் நகரை பாதுகாக்க போராடுகிறார்கள்.
முந்தைய பதிலில் சொன்னது போல, இன்று யாரிடம் ஒரு நகரம் இருக்குமோ, அது அவர்களுக்குச் சொந்தம். அதை அவர்கள் எப்படி சம்பாதித்தார்கள் என்பதை வைத்து, அவர்களிடம் சண்டைபோடுவது நியாயமா? இல்லையா? என்பதை முடிவு செய்யலாம்.
எருசலேம் முதலாவது கானானியர்களிடம் இருந்தது, அதன் பிறகு இஸ்ரேல் கைக்கு (தாவீது ராஜா சண்டையிட்டு ஜெயித்தார்), அதன் பிறகு சிரியா ஆட்சியாளர்கள், பெர்சியர்கள், கிரேக்கர்கள், ரோமர்கள், பைசாந்தியர்கள், முஸ்லிம்கள் என்று பல அரசர்களின் கைக்கு மாறி, இன்று அது யூதர்களிடம் உள்ளது.
இஸ்லாம் எருசலேமில் பிறக்கவில்லை, முஹம்மது ஒன்றும் எருசலேம் மண்ணின் மைந்தர் அல்ல, கி.பி.638ல், இரண்டாம் கலிஃபாவாக இருந்த உமர் அவர்கள், மண்ணாசை, பொன்னாசையினால் போர்கள் புரிந்து நாடுகளை பிடித்தார், அந்த நேரத்தில் எருசலேமையும் பிடித்தார்.
எனவே எருசலேமின் சரித்திரம் பற்றி சிறிது தெரிந்துக்கொள்வது இந்த 'எருசலேம் சண்டை' பற்றி சரியான புரிதலுக்கு உதவும் என்பதால் தான் முந்தைய பதிலில் சுருக்கமாக சரித்திரத்தை ஒளிவு மறைவின்றி விவரங்களை கொடுத்தேன்.
இன்றைய நாடுகள் ஒன்றையொன்று சண்டையிட்டுக்கொண்டால், அது உலக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
"இரண்டு நாடுகள் தானே, சண்டையிட்டுக்கொள்ளட்டும்" என்று மற்ற உலக நாடுகள் ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருக்கமுடியாது, இந்த சிறிய சண்டைகள், மூன்றாம் உலகப்போராகவும் உருமாற வாய்ப்புள்ளது.
யார் தீவிரவாதத்தின் மூலமாக சண்டையிடுகிறார்கள் என்பதைப் பார்த்து, அவர்களை அடக்கினால் நல்லது.
எருசலேம் என்பது முஹம்மதுவின் அப்பன் வீட்டு சொத்து அல்ல, முஸ்லிம்கள் உரிமை பாராட்டுவதற்கு, அதே போன்று யூதர்களுக்கும் எருசலேம் அப்பன் வீட்டு சொத்து அல்ல உரிமை கொண்டாடுவதற்கு (தாவீது ராஜா கூட போர் செய்து தானே எருசலேமை பிடித்தார்)! இவ்வரிகள் மூலமாக கிறிஸ்தவர்களில் சிலர் என் மீது கோபம் கொள்ளலாம், ஆனால், உண்மை இப்படித் தானே உள்ளது. இன்று எருசலேம் இஸ்ரேலின் எல்லைக்குள் இருப்பதால், எருசலேம் யூதர்களுக்குச் சொந்தம், இந்த ஒரு விஷயத்தில் நாம் தெளிவாக இருக்கவேண்டும். ஒரு வேளை முஸ்லிம்கள் வணங்கும் அல்லாஹ் முந்தைய காலத்தில் செய்ததாகச் சொல்லப்படும் அற்புதத்தை மறுபடியும் செய்து, அதாவது சூடான கற்களை பறவைகள் கொண்டு வந்து, இஸ்ரேல் இராணும் மீது வீசி, இஸ்ரேல் இராணுவத்தை தோற்கடித்து, முஸ்லிம்களின் கைகளில் எருசலேமை கொடுத்தால், இந்த அற்புதத்தை யாரும் மறுக்கமுடியாது - Survival of the Fittest (வலிமையுள்ளவர்களே வாழ்வார்கள்) என்றுச் சொல்லலாம்.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், எருசலேமுக்காக சண்டை தேவையற்றது என்பது தான் என் கருத்து.
கேள்வி 515: எருசலேமுக்காக யூதர்களும் முஸ்லிம்களும் சண்டையிட்டுக் கொள்வது போன்று, ஏன் கிறிஸ்தவர்கள் சண்டையிடுவதில்லை?
பதில் 515: இந்த கேள்வியில் சிறிய தவறு இருக்கிறது, அதாவது யூதர்கள் எருசலேமுக்காக இன்று சண்டையிடவில்லை, அதனை பாதுகாக்க சண்டையிடுகிறார்கள்.
முஸ்லிம்கள் எருசலேமுக்காக சண்டையிடுகிறார்களா? என்று கேட்டால் 'முஸ்லிம்களே ஆம்' என்று தான் பதில் அளிப்பார்கள். முஸ்லிம்களிடம் "எருசலேம் என்பது இஸ்லாமின் பிறப்பிடமா? முஹம்மதுவின் சொந்த ஊரா? அவரது மூதாதையர்களின் ஊரா? அல்லது குறைந்தபட்சம் முதல் நான்கு கலிஃபாக்களின் சொந்த ஊரா? போன்ற கேள்விகளைக் கேட்டுப்பாருங்கள்' என்ன பதில் வரும் என்பதை கவனித்து, ஆய்வு செய்துப் பாருங்கள்.
இப்பொழுது இக்கேள்வியின் பதிலுக்கு வருவோம். கிறிஸ்தவர்கள் ஏன் எருசலேமுக்காக சண்டையிடுவதில்லை?
இயேசுக் கிறிஸ்துவின் செய்தி, அன்பின் செய்தி ஆகும். அவர் மக்களின் உள்ளங்களில் ஆட்சி செய்ய விரும்புகிறார், நாடுகளில் ஆட்சி செய்ய விரும்புவதில்லை.
உலக நாடுகளை பிடித்து இஸ்லாமிய ஆட்சியின் கீழ் கொண்டுவரவேண்டும் என்பது இஸ்லாமிய கோட்பாடு, குர்ஆன் கற்றுக்கொடுத்த வழி, முஹம்மது வாழ்ந்துச் சென்று வழி. ஆனால், கிறிஸ்தவத்தில் இப்படி இல்லை, உலக மக்கள் அனைவரின் உள்ளங்களில் இயேசு ஆட்சி செய்ய விரும்புகிறார்.
எனவே பைபிளின் படி, உண்மையாக இயேசுவை பின்பற்றுகிற கிறிஸ்தவர்கள், நாடுகளை பிடிக்க சண்டையிடக்கூடாது. குர்ஆனின் படி, உண்மையான முஸ்லிம்கள், நாடுகளை பிடித்து, மக்களைக் கொன்றாவது இஸ்லாமை நிலைநாட்டவேண்டும். இதனை முஹம்மது செய்தார், நான்கு முதல் கலிஃபாக்கள் செய்தார்கள், அடுத்து வந்த அனைத்து கலிஃபாக்களும் நாடுகளை விஸ்தரிப்பதற்காகவே போர் புரிந்தார்கள்.
கேள்வி 516: மே மாதம் 2021 அன்று நடந்த இஸ்ரேல் காசா சண்டை - கிறிஸ்தவர்கள் யார் பக்கம்?
பதில் 516: உங்கள் சொந்த வீட்டிற்குள் வெளியிலிருந்து ஒருவர் கல் வீசி தாக்கினால் என்ன செய்வீர்கள்? கல் வீசியவர் மீது நடவடிக்கை எடுப்பீர்கள் அல்லவா?
2021ம் ஆண்டு, மே மாதம் நடந்த தாக்குதல் பற்றி முஸ்லிம்கள் நடத்தும் ஊடகங்களின் செய்திகளை படியுங்கள், அதே போன்று யூத ஊடகங்களின் செய்திகளையும் படியுங்கள், கடைசியாக நடுநிலையாக செயல்படும் ஊடகங்களின் செய்திகளையும் படித்து, நீங்களே ஒரு நியாயமான நீதியான முடிவுக்கு வாருங்கள், இதே முடிவைத் தான் கிறிஸ்தவர்களும் எடுப்பார்கள் அல்லது எடுக்கவேண்டும்
கேள்வி 517: எருசலேம் முஸ்லிம்களுக்கு மூன்றாவது புனித ஸ்தலமாக மாறியது எப்போது?
பதில் 517:
முஸ்லிம்களின் முதலாவது புனித நகரம் மக்கா ஆகும், இரண்டாவது புனித நகரம் மதினா ஆகும். இந்த நகரங்களிலும் அல்லாஹ்வுக்காக கட்டுப்பட்ட மசூதிகள் இருக்கும் இடம் தான் புனித ஸ்தலமாக கருதப்படுகிறது.
முஸ்லிம்களின் மூன்றாவது புனித நகரமாக எருசலேம் உள்ளது, அதிலும் முக்கியமாக மசூதி உள்ள இடம் தான் மூன்றாவது புனித ஸ்தலமாக உள்ளது. முஹம்மது உயிரோடு இருக்கும்போது எருசலேமில் உள்ள மசூதியை (Dome of Rock) அவர் கட்டினாரா? என்று கேட்டால், "இல்லை, முஹம்மது மரித்த பிறகு 60 ஆண்டுகள் கழித்து" தான் மசூதி கட்டப்பட்டது. அப்படியானால், எப்படி எருசலேம் நகரமும் மற்றும் மசூதி இடமும் புனிதமாக மாறியது?
இந்த மசூதி இருந்த இடத்திலிருந்து தான் கடந்த மே மாத சண்டைகள் தொடங்கின.
முஸ்லிம்களின் 3வது புனித ஸ்தலம் பற்றி சில விவரங்களை சுருக்கமாக காண்போம்.
1) முந்தைய நபிகளை சொந்தம் கொண்டாடிய குர்ஆன்:
முந்தைய வேதமான பைபிளின் நபிமார்களை குர்ஆன் எடுத்துக்கொண்டது, அவர்களை குர்ஆனின் இறைவனாகிய அல்லாஹ் தான் அனுப்பினான் என்று சொந்தம் கொண்டாடியது.
2) முந்தைய வேதங்களை சொந்தம் கொண்டாடிய குர்ஆன்:
முந்தைய நபிமார்களை சொந்தம் கொண்டாடியது போன்று குர்ஆன் முந்தைய வேதங்களையும் அல்லாஹ் தான் அனுப்பினான் என்று சொல்லி அவைகளையும் சொந்தம் கொண்டாடியது. உதாரணத்திற்கு, பைபிளின் ஐந்து ஆகமங்கள், சங்கீதப் புத்தகம், மற்றும் நற்செய்தி நூல்கள், இவைகள் அனைத்தையும் அல்லா தான் கொடுத்தான் என்று சொந்தம் கொண்டாடியது.
3) முந்தைய வேதகால இடத்தையும் சொந்தம் கொண்டாடிய குர்ஆன்:
முந்தைய நபிமார்களை எடுத்துக்கொண்டது, வேதங்கள் எடுத்துக்கொண்டது, கடைசியாக முந்தைய வேதமாகிய பைபிள் கொடுக்கப்பட்ட இடத்தையும் எடுத்துக்கொள்ள குர்ஆன் முயன்றுள்ளது.
இஸ்லாமின் முதல் புனித ஸ்தலம் (எருசலேம்) எப்படி மூன்றாவது புனித ஸ்தலமானது?
இது உண்மையா? ஆமாம் இது உண்மை தான். முஹம்மது முதன்முதலாக அல்லாஹ்வை தொழுதுக்கொள்ளும் போது, எருசலேமை தொழுகையின் திசையாக (கிப்லாவாக) வைத்துக்கொண்டுதான் தொழுகை நடத்தினார். இதையே முஸ்லிம்களும் பின்பற்றினார்கள். கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் மக்காவில் முஹம்மது இஸ்லாமை பரப்பும் போது, முஸ்லிம் சமுதாயம் முழுவதும் தினமும் ஐந்து வேளை எருசலேமை நோக்கி தொழுதனர். இது அல்லாஹ்வின் கட்டளையின் படியே நடைபெற்றது. இந்த தொழுகையை மக்காவில் இருந்து கொண்டே, கஅபா என்ற அல்லாவின் முதல் வீடு இருக்கும் ஊரிலிருந்தே, கஅபாவுக்கு புறமுதுகு காட்டி, எருசலேமே கிப்லாவாக மாற்றி ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயமும் எருசலேமை நோக்கி தொழுது கொண்டது.
இது உண்மை என்றால், முஸ்லிம்களின் முதலாவது புனித ஸ்தலம் எருசலேம் என்பது தானே உண்மை? மக்காவில் பன்னிரண்டு ஆண்டுகள் இஸ்லாமிய தாவா பணியை செய்தபிறகு, மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்தார் முஹம்மது . அங்கு சென்ற பிறகும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் வரை, எருசலேமை நோக்கியே முஸ்லிம்கள் தொழுதார்கள்.
யூதர்கள் தம்மை நபி என்று ஒப்புக்கொள்வார்கள் என்று முஹம்மது கனவு கண்டார், யூதர்கள் தங்கள் பிடியை விட்டுக் கொடுப்பதாக இல்லை, தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று அடம் பிடித்தனர், கிறிஸ்தவர்களும் இயேசுவை விட்டுக் கொடுப்பதாக இல்லை. என்ன செய்ய வேண்டும்? என்று சிந்தித்த முஹம்மது அல்லது அல்லாஹ், மதினாவில் இருக்கும்போது, தொழுகையின் திசையை எருசலேமிலிருந்து, முன்னூறுக்கும் அதிகமான விக்கிரக கற்சிலைகள் கொண்ட காபாவின் பக்கம் திருப்பப்பட்டது.
இதன் பிறகுதான், மக்காவும் அதில் உள்ள காபா ஆலயமும் இஸ்லாமின் முதல் புனித ஸ்தலமாக மாறியது. இப்படி நடந்து பிறகு, அடுத்த ஒன்பது/பத்தாண்டுகள் விக்ரகங்கள் இருக்கின்ற கஅபாவை நோக்கி முஹம்மதுவும் முஸ்லிம்களும் அல்லாவை தொழுதனர். என்னது முஹம்மதுவும் முஸ்லிம்களும் விக்கிர சிலைகள் இருந்த ஆலயத்தை நோக்கியா தொழுதார்கள்? என்ற சந்தேகம் வருகிறதா? உங்கள் இமாம்களை கேட்டுப்பாருங்கள், அல்லது சரித்திர பக்கங்களை சிறிது நேரமெடுத்து புரட்டிப்பாருங்கள்.
ஸூரா 2:144. (நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.
இப்பொழுது எருசலேம் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை காண்போம்.
அல் அக்ஸா மசூதி என்பது எருசலேம் ஆலயத்தை குறிக்குமா?
கீழ்கண்ட குர்ஆன் வசனத்தில், முஹம்மதுவை அல்லாஹ் மக்காவிலிருந்து அல் அக்ஸா மஸ்ஜித் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அந்த அல் அக்ஸா மஸ்ஜித் எருசலேமை தான் குறிக்கும் என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள். ஆனால் குர்ஆனில், எருசலேமில் தான் "அல் அக்ஸா மஸ்ஜித்" உள்ளது என்று சொல்லப்படவில்லை என்பதை கவனிக்கவும்.
குர்ஆன் 17:1 (அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான்.
மூன்றாவது புனித ஸ்தலமாக எருசலேம் மாறிவிட்டது:
கீழ்கண்ட புகாரி ஹதீஸ்களை கவனியுங்கள்:
1189. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மக்காவில் உள்ள) மஸ்ஜிதுல் ஹராம், (மதீனாவில் உள்ள) மஸ்ஜிதுந் நபவீ, (பைத்துல் மக்திசில் உள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களுக்குத் தவிர வேறெந்தப் பள்ளிவாசலுக் கும் (அதிக நன்மையை எதிர்பார்த்துப்) புனிதப் பயணம் மேற்கொள்ளப்படாது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (மேலும் பார்க்க புகாரி: 1197 & 1864)
குர்ஆனின் இன்னொரு சரித்திர பிழை என்னவென்றால், 'எருசலேமின் அல் அக்ஸா மஸ்ஜித் அதாவது யூதர்களின் இரண்டாவது ஆலயம், கி.பி 70 ரோமர்களால் அழிக்கப்பட்டது', முஹம்மது வாழ்ந்த காலத்தில் (கிபி 570 - 632), அந்த ஆலயம் அங்கு இல்லை. இருந்த போதிலும், இல்லாத ஆலயத்திற்கு புனித யாத்திரை செல்லலாம் என்று முஹம்மது சொன்னது வேடிக்கையின் உச்சக்கட்டம் என்றுச் சொல்லலாம்.
கேள்வி 518: காபா மற்றும் எருசலேம் ஆலயத்திற்கு இடையே 40 ஆண்டுகள் இடைவெளியா?
பதில் 518: முஹம்மது ஒரு கள்ள நபி என்பதற்கும், குர்ஆன் இறைவேதமில்லை என்பதற்கும் இதுவும் ஒரு சான்றாகும்.
ஸஹீஹ் புகாரி பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3366 கீழ்கண்டவிதமாக கூறுகிறது:
அபூ தர்(ரலி) அறிவித்தார்
நான் (நபி(ஸல்) அவர்களிடம்),'இறைத்தூதர் அவர்களே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?' என்று கேட்டேன். அவர்கள்,'அல் மஸ்ஜிதுல் ஹராம் - மக்கா நகரிலுள்ள புனித (கஅபா அமைந்திருக்கும்) இறையில்லம்" என்று பதிலளித்தார்கள். நான்,'பிறகு எது?' என்று கேட்டேன். அவர்கள்,'ஜெரூஸத்தில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா" என்று பதிலளித்தார்கள். நான்,'அவ்விரண்டுக்கு மிடையே எத்தனை ஆண்டுக் காலம் (இடைவெளி) இருந்தது" என்று கேட்டேன். அவர்கள்,'நாற்பதாண்டுகள்' (மஸ்ஜிதுல் ஹராம் அமைக்கப்பட்டு நாற்பதாண்டுகள் கழித்து மஸ்ஜிதுல அக்ஸா அமைக்கப்பட்டது) பிறகு,'நீ தொழுகை நேரத்தை எங்கு அடைந்தாலும் உடனே, அதைத் தொழுதுவிடு. ஏனெனில், நேரப்படி தொழுகையை நிறைவேற்றுவதில் தான் சிறப்பு உள்ளது" என்று கூறினார்கள்.
மேலும் அதே ஸஹீஹ் புகாரி பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3425 என்ற ஹதீஸையும் படிக்கவும், இந்த ஹதீஸின் முடிவுரையில் சில மாற்றம் உண்டு, ஆனால், சரித்திர விவரம் ஒன்று போலவே உள்ளது:
பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3425
அபூ தர்(ரலி) அறிவித்தார்
நான் நபி(ஸல்) அவர்களிடம்), 'இறைத்தூதர் அவர்களே! முதலாவதாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்மஸ்ஜிதுல் ஹராம் (மக்காவிலுள்ள புனித இறையில்லம்)" என்று பதிலளித்தார்கள். நான், 'பிறகு எது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'பிறகு 'அல் மஸ்ஜிதுல் அக்ஸா' (ஜெரூசலம் நகரிலுள்ள 'அல் அக்ஸா' பள்ளி வாசல்)" என்று பதிலளித்தார்கள். நான், 'அவ்விரண்டிற்குமிடையே எவ்வளவு காலம் (இடைவெளி) இருந்தது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'நாற்பதாண்டு காலம் (இடைவெளி) இருந்தது" என்று கூறினார்கள். பிறகு, 'உன்னைத் தொழுகை (நேரம்) எங்கே வந்தடைந்தாலும் நீ தொழுது கொள். ஏனெனில், பூமி முழுவதுமே உனக்கு ஸஜ்தா செய்யுமிடம் (இறைவனை வழிபடும் தலம்) ஆகும்" என்று கூறினார்கள்.
நாம் தோராயமாக கணக்கிட்டால், ஆபிரகாம் வாழ்ந்த காலகட்டம் கி.மு. 2000 ஆகும், சாலொமோன் வாழ்ந்த காலம் கி.பி. 950 ஆகும். முஹம்மதுவின் கூற்றுப்படி படி, ஆபிரகாம் காபாவை கட்டினார் (புகாரி - பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3365), அதன் அடித்தளத்தை "ஆபிரகாம் அமைத்தார்" (புகாரி - பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3368). ஆபிரகாம் மக்காவிற்குச் சென்றார் என்பது பைபிளுக்கு முரண்பட்ட கருத்தாகும். உண்மையாகவே ஆபிரகாம் மக்காவிற்குச் சென்றார் என்று ஆதாரத்தோடு நிருபியுங்கள் என்று கேட்டால், இதுவரை யாரும் இதற்கு சரியான பதிலை தரவில்லை. ஆபிரகாம் மக்காவிற்கு சென்றாரா இல்லையா என்பது முக்கியமல்ல, "ஆபிரகாம் மக்காவிற்குச் சென்றார் என்று முஹம்மது நம்பினார்" அதனால் அவர் அப்படி கூறியுள்ளார் என்பது மட்டும் தெரிகிறது. எருசலேமில் முதல் ஆலயத்தை கட்டியது சாலொமோன் ஆவார்.
ஆபிரகாமுக்கும், சாலொமோனுக்கும் இடையே இருப்பது 40 ஆண்டு கால இடைவெளி இல்லை, கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கும் அதிகமான இடைவெளியாகும். இந்த முரண்பாடு குர்ஆனின் முரண்பாடு இல்லை, இதை ஏன் நாம் தெரிந்துக்கொள்ளவேண்டுமென்றால், இது ஹதீஸில் காணப்படுகிறது. அதாவது முஹம்மதுவின் மூளை எதனை சரி என்று நம்பியதோ அதுதான் குர்ஆனிலும் உண்டு, ஹதீஸ்களிலும் உண்டு. குர்ஆனில் அனேக சரித்திர பிழைகள் உண்டு, அது போலவே, முஹம்மதுவின் சொல்லும் செயலும் அடங்கிய ஹதீஸிலும் அனேக சரித்திர தவறுகளை காணலாம்.
கேள்வி 519: எருசலேம் கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலமா?
பதில் 519:
எருசலேம் கிறிஸ்தவர்களின் புனித நகரமல்ல, ஏனென்றால், கிறிஸ்தவர்களின் உள்ளம் தான் தேவன் தங்கும் ஆலயம் என்று பைபிள் சொல்கிறது.
கிறிஸ்தவர்களுக்கு எருசலேம் புனித ஸ்தலமில்லை என்பதற்காக, நாம் அதனை வெறுக்கிறோம் என்று பொருள் அல்ல.
பைபிளின் பரிசுத்தவான்களும், தீர்க்கதரிசிகளும் வாழ்ந்த இடம் என்பதாலும், இயேசுவின் கால் பட்ட இடம் என்பதாலும், 'எங்களுக்கு மரியாதை உண்டு, ஆனால் புனிதமில்லை'. நாங்கள் இஸ்ரேல் நாட்டை பார்க்க விரும்புகிறோம், எருசலேமில் இயேசு நடந்த தெருக்களில், இடங்களில் நாங்களும் நடக்கவும், அவ்விடங்களை பார்த்து மகிழவும் விரும்புகிறோம். ஆனால் புனித பயணம் மேற்கொள்வது கிறிஸ்தவத்தில் கடமையில்லை.
கேள்வி 520: எருசலேம் என்ற பெயர் குர்ஆனிலும், பைபிளிலும் எத்தனை முறை வருகிறது?
பதில் 520:
குர்ஆனில் எருசலேம்:
எருசலேம்/ஜெருசலேம் என்ற வார்த்தை குர்ஆனில் ஒரு முறை கூட வருவதில்லை. பொதுவாக "அல் குத்ஸ் (Al-Quds)" என்று எருசலேமை அரபி முஸ்லிம்கள் அழைக்கிறார்கள், இது 9ம் நூற்றாண்டிலிருந்து பயன்பாட்டில் உள்ளது. இதன் பொருள் "பரிசுத்த நகரம்" அல்லது "பரிசுத்தம்" என்று பொருளாகும். இந்த வார்த்தை கூட எருசலேமுக்காக குர்ஆன் பயன்படுத்தவில்லை என்பது தான் உண்மை.
யூத வேதத்தில் எருசலேம்:
எருசலேம் என்பது பல பெயர்களில் பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இன்று எருசலேம் "Yerushalayim (Hebrew: יְרוּשָׁלַיִם)" என்று அழைக்கப்படுகின்றது. ஷலேம் என்றால் எபிரேய மொழியில் "சமாதானம்" என்று பொருள், ஆக, எருசலேம் என்றால் "சமாதானத்தின் நகரம்" என்று பொருள் (இன்று உலக சமாதானத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது இந்த நகரம்).
ஆதியாகமம் 14:18ம் வசனத்தில் வரும் ஷாலேம் என்பது எருசலேம் ஆகும் என்பது அறிஞர்களின் கூற்றாகும்.
ஆதியாகமம் 14:18-19
18. அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து, 19. அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக.
பைபிளில் எருசலேமுக்கு மேலும் பல பெயர்கள் உள்ளன. சீயோன் என்றும், தாவீதின் நகரம் என்றும், மகா ராஜாவின் நகரம், பரிசுத்த நகரம் என்றும் எருசலேம் அழைக்கப்பட்டுள்ளது.
தமிழில் பழைய ஏற்பாட்டில் தேடும் போது, எருசலேம் என்ற வார்த்தை 627 முறை வருகிறது. தமிழ் புதிய ஏற்பாட்டில் தேடும் போது, எனக்கு 143 முறை எருசலேம் என்ற வார்த்தை வருகிறது.
எபிரேய பைபிளில் இரண்டு வார்த்தைகள் இதற்கு உண்டு(H3389 & H3390), அவைகளின் எண்ணிக்கையை (643 + 26) கீழே காணலாம்.
Strong's Number H3389 matches the Hebrew יְרוּשָׁלַם (Yᵊrûšālam), which occurs 643 times in 600 verses in the wlc Hebrew (source: https://www.blueletterbible.org/lexicon/h3389/kjv/wlc/0-1/ )
Strong's Number H3390 matches the Hebrew יְרוּשְׁלֵם (Yᵊrûšlēm), which occurs 26 times in 25 verses in the wlc Hebrew (https://www.blueletterbible.org/lexicon/h3390/kjv/wlc/0-1/ )
இதுவரை பார்த்த 10 பதில்களிலிருந்து எருசலேம் என்ற வார்த்தையை ஒரு யூதன் (அல்லது கிறிஸ்தவன்) செவியுற்றால், அவன் மனதில் ஓடும் எண்ணங்கள் என்னவென்று உங்களுக்கு ஓரளவிற்கு புரிந்திருக்கும். அதே நேரத்தில், ஒரு முஸ்லிம் இவ்வார்த்தையை செவியுற்றால் அவன் மனதில் ஓடும் எண்ணங்கள் என்னவென்றும் புரிந்திருக்கும். ஆனால், யார் மனதில் என்ன எண்ணங்கள் வந்தாலும், அவைகள் நியாயமானவைகளா இல்லையா என்பதை ஓரளவிற்கு சரி பார்க்க உங்களால் முடிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
இன்னும் அனேக கேள்விகள் எருசலேம் பற்றி உள்ளன, அவைகளை அடுத்த கட்டுரைகளில் காணலாம்.
தேதி: 6th Jun 2021
சின்னஞ்சிறு 1000 கேள்வி பதில்கள் பொருளடக்கம்
Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2020ramalan/2020-ramalan-23-html.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக