கிறிஸ்தவன் பார்வையின்
"பைபிள் கூறும் பயங்கரவாதம் (2)" கட்டுரைக்கு பதில்: 2
பைபிள் கூறும் பயங்கரவாதம் என்ற பெயரில் "கிறிஸ்தவம் பார்வை" தளம் தொடர் கட்டுரைகளை எழுதிக்கொண்டு இருக்கிறது. இவர்களின் முதல் கட்டுரைக்கு நாம் அளித்துள்ள பதிலை இங்கு படிக்கலாம்:
அபூ அப்திர்ரஹ்மான்பைபிள் கூறும் பயங்கரவாதம் (2)பயங்கரவாதம் - வன்முறை மற்றும் பைபிள்!தாங்கள் செய்த/செய்யும் அக்கிரமச் செயல்களை நியாயப்படுத்த, அன்றைய காலத்தில் தாங்கள் செய்த ஆபாச, அக்கிரமங்கள் அனைத்தும் இறைவனால் அங்கீகரிக்கப்பட்டன என்று சாயம் பூசியது புரோகித வர்க்கம். இதற்காக இவர்கள் இறைவனால் தூதர்களாக தேர்வு செய்யப்பட்ட தீர்க்கதரிசிகளின் பெயரிலும் கையாடல்கள் செய்வதற்கும்த் தயங்கவில்லை. இதனால் தான் வேதம் என்று கிறிஸ்தவர்களால் நம்பப்படும் பைபிள், ஆபாசம் மற்றும் வன்முறைச் சம்பவங்களால் அசிங்கப்பட்டுக் கிடக்கிறது.
Source: http://christianpaarvai.blogspot.com/2009/02/2.html
formats mine
அபூ அப்திர்ரஹ்மான்ஒருபுறம் தங்களை அமைதிப் புறாக்களாகக் காட்டும் கிறிஸ்தவர்கள், திரைமறைவில் செய்து வரும் வேலைகளைக் குறித்து பலரும் அலட்சியமாகவே இருக்கின்றனர்.
அபூ அப்திர்ரஹ்மான்மிஷினரிகளுக்கு இன்னொரு முகமும் இருக்கிறது என்பதை அவர்களின் செயல்களை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள் அறிந்து கொள்வர்.
அபூ அப்திர்ரஹ்மான்ஆபாசம், வன்முறை, முன்னுக்குப் பின் முரணான தகவல்கள், பொய்கள் என அசிங்கக் குப்பைகள் நிறைந்துக் கிடக்கும் பைபிளில், புரோகிதர்களின் கைகளிலிருந்துத் தப்பி இன்னமும் கையாடல் செய்யப்படாமல் ஆங்காங்கே வெளிப்படும் இறைவனின் கட்டளைகளைக் கூட அதனை வேதமாகக் கருதும் கிறிஸ்தவர்களே பின்பற்றுவதில்லை என்பது முரண்பாட்டின் உச்சகட்டம்!
இஸ்லாமியர்களுக்கென்று ஒரு தனி லாஜிக் உள்ளது. கீழ் கண்ட விவரங்களை பாருங்கள். இன்னும் பைபிளில் சில வசனங்கள் "கலப்படம் செய்யப்படாமல்" அப்படியே சுத்தமாக இருக்கிறது என்று ஒப்புக்கொள்கிறார்கள்.
அபூ அப்திர்ரஹ்மான்"பன்றி மாமிசம் உண்ணக் கூடாது" என்று பைபிள் தடை விதித்தாலும் இறைவன் மனிதனுக்காகத் தான் எல்லாவற்றையும் படைத்தான் என்றும் பூமியில் படைக்கப் பட்டவையெல்லாம் அனுபவிக்கலாம் என்ற புரோகிதர்களின் சித்தாந்தத்தாலும் குழப்பம் ஏற்பட்டு இது குறித்து சரியான வழிகாட்டுதலைக் கொடுக்க பைபிள் தவறிய காரணத்தால் தீமை விளைவிக்கக் கூடியது என்பது தெரிந்த போதிலும் இன்று பன்றியை உண்பதில் கிறிஸ்தவர்களே முன்னணியில் நிற்கின்றனர்!
• மோசே கொடுத்த கட்டளையை கிறிஸ்தவர்கள் மீறுவது சரியில்லை என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள், அதே மோசே மூலமாக அதே தேவன் கொடுத்த கட்டளையை முஹம்மது ஏன் மீறினார் என்று கேட்பார்களா?• இஸ்லாமியர்கள் கடந்த 14 நூற்றாண்டுகளாக மோசேயின் கட்டளையை மீறி நடக்க முஹம்மது காரணமாக இருக்கிறார் என்பதை இஸ்லாமியர்கள் அறிவார்களா?• மோசேயின் கட்டளையை பவுல் மீறினார் என்று அவர் மீது குற்றம் சுமத்தும் இஸ்லாமியர்கள் இனி, அதே குற்றச்சாட்டை முஹம்மது மீதும் சுமத்தவேண்டும், செய்வார்களா?
1) பன்றியின் மாமிசம் மட்டுமல்ல, ஒட்டகத்தின் மாமிசத்தையும் உண்ணக்கூடாது என்று தேவன் கட்டளையிட்டுள்ளார், ஆனால், முஹம்மது மோசேயின் மூலமாக தேவன் கொடுத்த கட்டளைக்கு எதிராக ஒட்டக மாமிசம் உண்பதற்கு அனுமதி கொடுத்ததோடு மட்டுமில்லாமல், ஒட்டகங்களை அல்லாஹ்விற்கு பலியிடவும் அனுமதி கொடுத்துள்ளார். கிறிஸ்தவம் மீது சுமத்தும் அதே குற்றம் இப்போது இஸ்லாம் மீதும் உள்ளது, முஹம்மது செய்தது மோசேயின் கட்டளைக்கு எதிரானது இல்லையா? இஸ்லாமியர்கள் சிந்திப்பார்களா?
2) ஒரு பெண்ணை விவாகரத்து செய்த பின்னர், அப்பெண் வேறு கணவனை திருமணம் செய்துக்கொண்டு, பிறகு அந்த கணவனும் விவாகரத்து செய்துவிட்டால், முதல் கணவன் அப்பெண்ணை மறுபடியும் திருமணம் செய்யக்கூடாது, இது அருவருப்பானது என்று தேவன் சொல்லியிருக்கும் போது, அதற்கு நேர் மாறாக, முஹம்மது, அப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளலாம் என்றுச் சொல்லியுள்ளாரே, இது மோசேயின் கட்டளைக்கு எதிராக இல்லையா?
3) மோசேயின் மூலமாக சப்பாத் (Sabbath) என்றுச் சொல்லும் ஓய்வு நாளை (சனிக்கிழமை) கடைபிடிக்கவேண்டும் என்று தேவன் கட்டளையிட்டு இருக்கும் போது, அதை மீறிவிட்டு, அந்த நாளை வெள்ளிக் கிழமையாக மாற்றிவிட்டு, நான் மோசேயைப் போல வந்த நபி என்று உங்கள் முஹம்மது சொல்லியிருக்கிறாரே? இது மீறுதல் இல்லையா? 14 நூற்றாண்டுகளாக ஓய்வு நாளைப்பற்றிய மோசேயின் கட்டளை மீறப்பட்டுக்கொண்டு இருக்கிறதே, இது தான் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, தாவீது, இயேசு வழியில் வந்த ஒரு நபியின் நல்வழிக்காட்டுதலா?
4) மோசேயின் தேவன், போரில் பிடிப்பட்ட பெண்களை திருமணம் செய்துக் கொள்ளாமல், அவளோடு உடலுறவு கொள்ளக்கூடாது என்றுச் சொல்லியிருக்கும் போது, முஹம்மது போரில் பிடிப்பட்ட பெண்களை அடிமைகளை கற்பழிக்கவும், மறுபடியும் விற்கவும் கட்டளையிட்டுள்ளாரே, இது மீறுதல் இல்லையா? திருமணத்திற்கு வெளியே உடலுறவு கொள்ள அதாவது விபச்சாரம் செய்ய அனுமதி அளித்துள்ளாரே, இது மீறுதல் இல்லையா? இஸ்லாமியர்களா மோசேயின் கட்டளைகளைப் பற்றி அதிகம் கவலைப்படுவது?
இப்படி அனேக கட்டளைகளை முஹம்மது மீறியிருக்கிறார், மாற்றியிருக்கிறார் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
மேலே கண்ட அனைத்து விவரங்கள் குறித்த தமிழ் கட்டுரைகளை வசன ஆதாரங்களோடு இங்கு படிக்கவும்:
2) பன்றி மீது ஷப்பீர் அலி அவர்களின் அதீத விருப்பம் பற்றிய ஆய்வு -"பன்றி மாமிசம் உண்ணுதல்" கட்டுரைக்கு கிறிஸ்தவ பதில் (An Examination of Shabir Ally's Fascination with Pigs -Being a Christian Response to his "Eating Pork" Article) பாகம் 1
3) இஸ்லாத்திற்கு மாறும் யூத மற்றும் கிறிஸ்தவர்கள் - இஸ்லாமியர்களை சிந்திக்கத்தூண்டும் சில கேள்விகள் (Jewish and Christian Converts to Islam - Some Questions for Muslims to Ponder)
இதே தலைப்பைப் பற்றிய இதர ஆங்கில கட்டுரைகள்:
1) Muhammad and the Mosaic Law
2) Who Broke the Covenant: Paul or Muhammad?
5) What is the day of congregation?
6) Sam Shamoun's answer to Bassam Zawadi's response
அபூ அப்திர்ரஹ்மான்
"மதுபானம் அருந்தாதீர்கள்" என்று பைபிள் உபதேசம் செய்தாலும் அந்தத் தீமையை தீர்க்கதரிசிகளே செய்து வந்தார்கள் என்றும் இயேசு கிறிஸ்து கூட கல்யாண விருந்தில் அதை பரிமாறியிருக்கிறார் என்று புரோகிதர்கள் எழுதி வைத்துள்ளதால் இது குறித்தும் தார்மீக வழிகாட்டுதல் இல்லாமல் பாஸ்டர் கூட மதுப்பழக்கத்துக்கு அடிமையாவதும் கிறிஸ்தவத்திலேயே நடக்கின்றன.
ஈஸா குர்ஆன்
இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றிய அற்புதம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு கீழ் கண்ட பதிலை நாம் ஏற்கனவே கொடுத்துள்ளோம்.
Answering Islamkalvi : இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
அல்லாஹ் கொஞ்சம் கொஞ்சமாக மதுபானத்தை தடை செய்தார், அதுவரையில் இஸ்லாமியர்கள் குடித்தார்கள் என்று இஸ்லாமியர்கள் சொல்வார்கள். திடீரென்று குடிப்பழக்கத்தை நிறுத்தமுடியாது, அதற்காக மனிதனின் மனநிலையை புரிந்துக்கொண்டு தான் அல்லாஹ் இப்படி அழகாக செய்தார் என்றுச் சொல்வார்கள். இஸ்லாமியர்களின் இப்படிப்பட்ட பலவீனமான வாதங்கள் அனைத்தும் ஒன்றுக்கும் உதவாத வாதங்களாக மாறிவிடுகின்றன, எப்படி என்பதை கீழ் கண்ட கட்டுரைகளை படித்துப்பார்க்கவும்.
• Muhammad, the Quran, and Prohibition: Islam's punishments for drinking and gambling
குடித்தபோதையில் ஒட்டக எலும்பால் அடித்துக்கொண்டு காயப்பட்ட இஸ்லாமிய ஆரம்பகால மாமனிதர்கள்:
இஸ்லாமிய அறிஞரான இபின் கதிர், ஏன், எப்போது அல்லாஹ் வசனங்களை இறக்கினார் என்பதை குறிப்பிடுகிறார். குடித்த போதையில் ஒருவர் ஒரு ஒட்டகத்தின் எலும்பை எடுத்து, போட்டார் ஒரு போடு, மூக்கில் காயம், இறங்கியது வசனம்.
Causes of Its Revelation
Ibn Abi Hatim has recorded some reports about the incident of its revelation: Sa`d said, "Four Ayat were revealed concerning me. A man from the Ansar once made some food and invited some Muhajirin and Ansar men to it, and we ate and drank until we became intoxicated. We then boasted about our status.'' Then a man held a camel's bone and injured Sa`d's nose, which was scarred ever since. This occurred before Al-Khamr was prohibited, and Allah later revealed,
(O you who believe! Approach not As-Salat (the prayer) when you are in a drunken state). Muslim recorded this Hadith, and the collectors of the Sunan recorded it, with the exception of Ibn Majah.
Source: http://tafsir.com/default.asp?sid=4&tid=11257 - Tafsir Ibn Kathir
குடித்துவிட்டு, போதையில் தொழுகை செய்யும் போது வாய் குழம்பிய பே(போ)தையர்:
ஒரு இஸ்லாமியர் குடித்தார், போதை ஏறியது (சென்னைத் தமிழில் அழகாக மப்பு என்பார்கள்), குடித்த மயக்கத்திலேயே தொழுகை செய்ய ஆரம்பித்தார். மற்றவர்களை தொழுகையில் நடத்தும்படி, முன்னின்று தொழுகை செய்ய ஆரம்பித்தார்.
அவர் கீழ் கண்டவாறு குர்ஆன் சூராவை ஓதினார்:
"காஃபிர்களே! நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்,
ஆனால், நீங்கள் வணங்குபவற்றை நாங்கள் வணங்குவோம்"
இதற்காகவே இறங்கியது இன்னொரு வசனம்,
Another Reason Ibn Abi Hatim narrated that `Ali bin Abi Talib said, "Abdur-Rahman bin `Awf made some food to which he invited us and served some alcohol to drink. When we became intoxicated, and the time for prayer came, they asked someone to lead us in prayer. He recited `Say, `O disbelievers! I do not worship that which you worship, but we worship that which you worship [refer to the correct wording of the Surah: 109].''' Allah then revealed,
(O you who believe! Do not approach Salah when you are in a drunken state until you know what you are saying). '' This is the narration collected by Ibn Abi Hatim and At-Tirmidhi, who said "Hasan [Gharib] Sahih.'' Allah's statement,
Source: http://tafsir.com/default.asp?sid=4&tid=11257 - Tafsir Ibn Kathir
மேலே உள்ள விவரங்கள் இஸ்லாமிய ஆதாரங்களாகும், அதாவது குர்ஆன் விரிவுரைகளாகும், எனவே, எங்கள் மீது யாரும் கோபம் கொள்ளவேண்டாம்.
ஆக, இந்த வேலையை அந்த இஸ்லாமிய குடிமகன்கள் பல ஆண்டுகளுக்கு பின்பாக செய்ததால், தடை சிறிது சிறிதாக வந்தது என்று பெருமையாக இஸ்லாமியர்கள் இப்போது சொல்லிக்கொள்கிறார்கள், ஆனால், அவர்கள் அந்த வேலையை ஆரம்பத்திலேயே செய்திருந்தால், தடை ஆரம்பத்திலேயே வந்திருக்கும். மேலும் விவரங்களுக்கு மேலே தரப்பட்ட கட்டுரைகளை படிக்கவும்.
அபூ அப்திர் ரஹ்மான் அவர்களிடம் கேட்க விரும்பும் கேள்விகள்:
• பைபிளில் மதுபானம் தடைசெய்யப்பட்டு இருந்தால், ஏன் கிறிஸ்தவத்திற்கு பிறகு 600 ஆண்டுகளுக்கு பின்பு வந்த இஸ்லாமில் அந்த தடை ஆரம்பத்திலிருந்தே இல்லாமல் இருந்தது?
• பழைய ஏற்பாட்டில் பன்றி மாமிசம் கூடாது என்று மோசேயின் மூலமாக தேவன் (அல்லாஹ் - உங்கள் நம்பிக்கைப்படி) தடை செய்திருக்கும் போது, 2000 ஆண்டுகளுக்கு பின்பும் அது இஸ்லாமில் அமுலில் இருக்குமானால், அதே தேவன் கொடுத்த மதுபான தடை ஏன் இஸ்லாமில் ஆரம்பத்திலிருந்தே சொல்லுபடியாகாது?
• இன்னும் பல நூற்றாண்டுகள் பின்னுக்குச் சென்று, ஆபிரகாமுக்கு தேவன் கட்டளையிட்ட விருத்தசேதனம் என்பது, கி.பி. 600க்கு அடுத்து செல்லுபடியாகுமானால், அதே தேவன் விதித்த மதுபான தடை ஏன் செல்லுபடியாகாது?
அபூ அப்திர்ரஹ்மான்
"நீ திருமணம் முடிக்காதவனாக இருந்தால் (திருமணம் முடிக்க) பெண்ணைத் தேடாதே! திருமணம் முடித்திருந்தால் உன் மனைவியை விட்டுவிடாதே" என்று திருமணம் முடித்தல் பாவமா? நன்மையா? என்ற தெளிவான வழிகாட்டுதலை வழங்க பைபிள் தவறியதால் திருமணம் செய்யாமல் உணர்வுகளையும் அடக்க இயலாமல் சன்னியாசம் சென்று பாதி வழியில் வழிதவறி வருபவர்களும் கிறிஸ்தவர்களே!
ஈஸா குர்ஆன்
அந்த சன்னியாசம் எடுத்துக்கொண்டு, மறுபடியும் வழி தவறியவரிடம் சென்று:
• அய்யா கிறிஸ்தவ சன்னியாசியே, உங்கள் பைபிள் திருமணம் பற்றி, சரியாகச் சொல்லவில்லை, ஆனால், எங்கள் குர்ஆன் திருமணம் பற்றி மிகவும் சரியாகச் சொல்கிறது,
• எனவே, இஸ்லாமுக்கு மாறிவிடுங்கள், மட்டுமல்ல, நான்கு மனைவிகளை திருமணம் செய்துக்கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்,
• போதாக்குறைக்கு அடிமைப்பெண்கள் இருந்தால், அவர்களை திருமணம் செய்துக்கொள்ளாமலேயே அவர்களிடம் உடலுறவு கொள்ளலாம் (திருமணமில்லாமல் உடலுறவு கொள்வதை பொதுவாக எல்லாரும் விபச்சாரம்/வேசித்தனம்/கற்பழிப்பு என்றுச் சொல்வார்கள்),
• நீங்கள் உங்கள் உணர்வுகளை அடக்கவேண்டிய அவசியம் இஸ்லாமில் இல்லை, பணம், வசதி இருந்தால், எந்த வயதிலும் திருமணம் செய்துக்கொள்ளலாம்.
• நான்கு மனைவிகள் என்றால், நான்கு மட்டுமல்ல, நான்கில் ஒரு மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு புதிய பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளலாம். அதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒருவருக்கு நான்கு மனைவிகள் இருக்கலாம், இது தான் கணக்கு.
• கடைசியாக, மரித்துவிட்டாலும் சரி, அங்கேயும் எப்போதும் கன்னித்தன்மையாக இருக்கும் அழகான பெண்கள் கிடைப்பார்கள்" என்றுச் சொல்லி இஸ்லாமியராக மாற்றிக்கொள்ளுங்கள்.
திருமணம் கூடாது என்று தேவன் நினைத்து இருந்தால், ஏன் ஆதாமுக்காக ஏவாளை படைக்கப்போகிறார்? மனிதன் தனிமையாக இருப்பது நல்லது இல்லை என்றுச் சொல்லி, மனிதனின் தனிமையை போக்க, ஏன் ஒரு ஆணை படைக்கவில்லை?
ஆக, யார் யாரேல்லாம் திருமணம் பற்றி தெளிவான வழிகாட்டுதல் பைபிள் கொடுக்கவில்லை என்றுச் சொல்கிறார்களோ, அப்படிப்பட்ட கிறிஸ்தவர்கள் தாராளமாக "திருமணம் பற்றி!" சரியான வழிகாட்டுதல் கொடுக்கும் இஸ்லாமுக்கு மாறிவிடலாம். (இக்கட்டுரையை படிக்கவும்: திருமண உறவிற்கு முன்பு உடலுறவா (விபச்சாரமா) செய்யுங்கள், செய்யுங்கள், செய்யுங்கள் என்றுச் சொல்கிறார் ஒரு மஹான்: Adultery: Do it! Do it! Do it!)
அருமை அப்திர் ரஹ்மான் அவர்களே, ஏதோ ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டு மற்ற வசனங்களோடு ஒப்பிட்டுப்பார்க்காமல், ஏதோ நாமும் எழுதினோம் என்றுச் சொல்லி எழுதுவது எப்படி சரியாகும்?
அபூ அப்திர்ரஹ்மான்
தலைகுனிந்து ஆசீர்வதித்து அமைதிப்புறாவாக மக்களிடம் காட்சியளித்த அன்றைய போப்பும் கிறிஸ்தவ புரோகிதர்களும் தான் சிலுவை யுத்தம் இறையாட்சியை பூமியில் உருவாக்கும் புனிதப் போர் என்று சிலுவை யுத்தங்களுக்கு அழைப்பு விடுத்து இலட்சகணக்கில் மனிதர்களைக் கொன்றொழித்த மாபாதச்செயலைச் செய்தன.
ஈஸா குர்ஆன்
சபாஷ், கொலைப் பற்றி, மக்களை கொல்வதைப் பற்றி ஒரு இஸ்லாமியர் வேதனை அடைவதைக் கண்டால், மிகவும் மனதிற்கு இதமாக உள்ளது. (ஆனால், அப்படி மரித்தவர்கள் இஸ்லாமியர்கள் என்பது வேறு விஷயம்)
இஸ்லாமியர்கள் இறையரசை பூமியில் நிறுவ எடுத்துக்கொண்டு வரும் நல்ல செயல்களை உலகம் பார்த்துக்கொண்டு, படித்துக்கொண்டு, அனுபவித்துக்கொன்டு, வேதனை அடைந்துக்கொண்டு, பல்லை கடித்துக்கொண்டு இருக்கிறது நண்பரே.
கடந்த 14 நூற்றாண்டுகளாக மக்களை கொன்றுக்கொண்டு இருப்பது, அந்த போப்பை தலைவராக கொண்டுள்ள கிறிஸ்தவர்களா? இல்லையே! முஹம்மதுவை தலைவராக கருதும் இஸ்லாமியர்கள் தானே!
இஸ்லாமிய நாடுகளில் மற்ற மார்க்கத்தவர்களை கொடுமைப்படுத்துவது யார்?
பள்ளிக்கூடங்களிலும், சாலைகளிலும், உணவுவிடுதிகளிலும், ஏன் விளையாட்டு வீரர்கள் மிதும் குண்டு மழை பொழிந்துக்கொண்டு இருப்பவர்கள் யார்? போப்பை தலைவராக கருதிக்கொண்டு இருப்பவர்களோ!
போதும் சகோதரரே போதும், அந்த சிலுவைப் போர்கள் இன்றும் தொடர்ந்து நடக்குமானால், நீங்களும் நாங்களும், ஏன் உலக மக்களும் ஒருவரை ஒருவர் கொன்றுக்கொண்டு மாண்டுப்போய் இருப்போம். அவர்கள் நிறுத்திவிட்டார்கள். ஆனால், சிலுவைப் போருக்கு முன்பே மக்களை கொல்லும் அமைதி மார்க்கமாக வந்தவர்கள் தொடர்ந்துக்கொண்டு இருக்கிறார்கள், இவர்கள் எப்போது நிறுத்துவார்கள்?
அபூ அப்திர்ரஹ்மான்
பைபிளின் மீது கைவைத்து சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்ட ஜார்ஜ் புஷ் என்ற கிறிஸ்தவர் தான், ஈராக்குக்கு எதிராக யுத்தம் செய்யுமாறு கடவுள் தன்னிடம் கூறியதாக அறிக்கை விட்டார். ஈராக்கில் நசுக்கப்பட்ட இலட்சகணக்கான பிஞ்சுக் குழுந்தைகளும் பலவீனமான பெண்களும் முதியவர்களும் புஷ்ஷின் பார்வையில் இறைவனுக்காக பலியிடப்பட்டவர்கள்!
ஈஸா குர்ஆன்
என்னடா இது, அமெரிக்காவை இழுக்காமல், ஜார்ஜ் புஷ்ஷை இழுக்காமல் ஒரு இஸ்லாமியர் வன்முறையைப் பற்றி எழுதிக்கொண்டு இருக்கிறாரே என்று நினைத்தேன். எழுத்திட்டாரே எழுதிட்டாரே!
புஷ்ஷைப் போலவே ஒரு நபி கடந்த காலத்தில் வந்தார், என்னன்னவோ சொன்னார், செய்தார், இதோ இன்று ஈராக் அனுபவிக்கும் வேதனையை, இன்று அந்த நபியால் உலகம் அனுபவித்துக் கொண்டு இருக்கிறது.
கடவுள் என்னிடம் கூறினார் என்று ஒரு அரசியல் வாதி சொன்னால் கூடவா நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்பதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது. ஏனென்றால், அப்படி புஷ் சொன்னபோது, கடவுளே அதிர்ந்துபோய் இருப்பார், "அட, எனக்கே தெரியாமல் நான் எப்படி சொல்லியிருப்பேன்?" என்று கடவுள் தன்னையே கேள்வி கேட்டிருப்பார், பாவம் கடவுள்.
ஜார்ஜ் புஷ் தவறு செய்துவிட்டார், அவர் செய்த காரியத்திற்கு அவர் குர்ஆன் மீது தானே பிரமாணம் எடுத்துயிருக்கவேண்டும்?
அபூ அப்திர்ரஹ்மான்
பைபிள் உண்மையில் அகிம்சையையும் அன்பையும் தான் போதிக்கிறதா என்று ஆராய்ந்தால் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் நிறைந்த தகவல்கள் கிடைக்கின்றன. எதை கிறிஸ்தவர்கள் பயங்கரவாதம் என்று சொல்கிறார்களோ அதை விட பயங்கரமான செயல்களையெல்லாம் செய்யவேண்டியது இறைகட்டளையாகவே பைபிளில் உள்ளன என்று கூறினால் பலருக்கும் ஆச்சர்யம் ஏற்படுவது இயல்புதான். எனினும் அதுவே உண்மை.
பயங்கரவாதத்தின் ஆணிவேர்கள் தோண்டப்படும்!
ஈஸா குர்ஆன்
கடைசியாக நீங்கள் எழுதிய வரிகள் தான் எனக்கு மிகவும் பிடித்தமான வரிகள், அது என்னவென்றால்:
//"எதை கிறிஸ்தவர்கள் பயங்கரவாதம் என்று சொல்கிறார்களோ அதை விட"//
அப்படியானால், இஸ்லாம் ஒரு பயங்கரவாத மார்க்கம் என்பதை நீங்களே அங்கீகரிப்பதாக உள்ளது?
நீங்கள் சொல்லவந்த செய்தியை மூன்றாம் பாகம் வரைக்கும் தள்ளிப்போட்டு, இரண்டு பாகத்தை முன்னுரையாகவே நிரப்பியுள்ளீர்களே? ரொம்ப நல்லாயிருக்கு!
பயங்கரவாதத்தை பன்றியாக மாற்றி, அதற்கு மதுவை குடிக்கக்கொடுத்து, பிறகு சன்னியாசத்தை தொட்டு, திருமணம் வரை வந்து, உடனே சிலுவைப் போருக்குச் சென்று, பிறகு அமெரிக்காவிற்கு வந்து ஜார்ஜ் புஷ்வரை வந்துள்ளீர்கள்.
பயங்கரவாதத்தின் ஆணிவேரை நீங்க தோண்டனும், ஆனால், இஸ்லாமின் ஆணிவேர் கிளைகளாக பூமிக்கு மேலே தெரிந்துக்கொண்டிருக்கிறது....
உங்களை மூன்றாம் பாகத்தில் சந்திக்கும் வரை...
1 கருத்து:
வாழ்த்துக்கள் உமர் அண்ணா,
Umar quote:
ஈஸா குர்ஆன்
"முஹம்மது செய்த அக்கிரமச் செயல்களை நியாயப்படுத்த, அன்றைய காலத்தில் அவர் செய்த ஆபாச, அக்கிரமங்கள் அனைத்தும் இறைவனால் அங்கீகரிக்கப்பட்டன என்று சாயம் பூசியது இஸ்லாமிய புரோகித வர்க்கம். இதனால் தான் வேதம் என்று இஸ்லாமியர்களால் நம்பப்படும் குர்ஆன், ஆபாசம் மற்றும் வன்முறைச் சம்பவங்களால் அசிங்கப்பட்டுக் கிடக்கிறது."
mist:
நீங்கள் பைபிளையும் படித்தவர், குர் ஆனையும் படித்தவர். ஆனால் வெறும் அடிக்கோடிட்டு மிமிக்ரி செய்வதால் உண்மை பொய்யாகி விடுமா உமர் அண்ணா. தயவு செய்து எத்தனை இடத்தில் புரோகிதர்களை(ஆசாரியன்,பூசாரியன்) பற்றி பைபிள் சொல்கிற்து எத்தனை இடத்தில் குர் ஆன் சொல்கிறது என்று விளக்குவீர்களானால் நலம்.
umar quote:
மேலே உள்ள வரிகளில் அடிக்கோடிட்ட வரிகளை மட்டுமே நான் எழுதினேன், மற்றவைகள் எல்லாம், அபூ அப்திர்ரஹ்மான் அவர்களின் வரிகளே. இப்போது அந்த வரிகளை படித்தால் எப்படி பொருத்தமாக உள்ளது பாருங்கள்.
mist:
உங்களுடைய முன்னோர்கள் பைபிளை மாற்ற என்னவெல்லாம் technic செய்தார்களோ அதை அப்படியே செய்துள்ளீர்கள் உமர் அண்ணா,சபாஷ். பூனைக்கு பிறந்தது புலிக்குட்டி ஆகுமா?
Umar quote:
மற்ற நாடுகளில் தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்தார்கள் என்ற செய்தியை இந்திய மக்கள் தொலைக்காட்சியில் காணும் போது, ஏதோ ஓரளவிற்கு வேதனை அடைந்தனர், ஆனால், நம் நாட்டிலேயே, மும்பையில் நடைப்பெற்ற தீவிரவாத செயல்களை, ஹாலிவுட் பிரமாண்ட தயாரிப்பில் கூட பார்க்காத அளவிற்கு நேரடி ஒளிபரப்பில் கண்டு, மக்கள் பிரத்துவிட்டார்கள்.
எனவே, திரைமறைவில் யார் என்ன செய்கிறார்கள் என்பதை எல்லாரும் நன்றாக அறிவோம்.
mist:
உமர் அண்ணா இந்த மாதிரி கருத்துக்களை கூறும் முன்பு தீவிரவாதம் பற்றி கொஞ்சம் ஆய்வு செய்து விட்டு ஒரு முடிவுக்கு வரணும், பிரவீண் தொகாடியா மாதிரி பேசக்கூடாது. உலக அளவில் இஸ்லாமியர்களால் நடக்கும் 90% தீவிரவாத செயல்களுக்கு காரணமாக இருந்தது பாலஸ்தீன பிரச்சினை,இப்போது அதனுடன் ஆஃப்கான்,மற்றும் ஈராக் ஆக்கிரமிப்பும் ஒரு காரணமாகிவிட்டது.இந்த பிரச்சினைக்கெல்லாம் மூலக்காரணம் யார் என்பதை நான் உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை, பைபிளை கையில் வைத்து பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டு அநியாயம் செய்வது யார் என்பது உங்களுக்கு தெரியாததா?
ஒரு 20,30 வருடம் கழித்து ஏதாவது ஒரு போப்பாண்டவர் மன்னிப்பு கேட்பார் அப்படி மன்னிப்பு கேட்பதை விட இப்போதிருக்கும் உங்கள் ஆண்டவரிடம் சாரி போப்பாண்டவரிடம் சொல்லி ஆக்கிரமிப்பு படைகளை எல்லாம் வெளியேற்ற ஏற்பாடு செய்ய சொல்லுங்கள். தீவிரவாதம் தானாக அடங்குகிறதா இல்லையா பாருங்கள். என்ன உமர் அண்ணா இலங்கையில் செத்தால் மட்டும் உங்க குரூப்புங்க ஜெபம் செய்றாங்க ஆனால் பாலஸ்தீனத்தில் செத்தால் கிண்டல் செய்றாங்களே ஏன்? இலங்கையில் இறக்கும் மனிதர்களில் கிறிஸ்தவர்களும் இருக்கிறார்கள் என்பதாலா?
நீங்கள் பல புள்ளி விவரங்கள் தெரிஞ்ச ஆளு, 1992 பாபர் மசூதி இடிக்கப்படும் வரை இந்தியாவில் முஸ்லிம்களால் தீவிரவாத பிரச்சினை இருந்ததா? இனக்கலவரம் நடந்திருக்கலாம், ஆனால் இனக்கலவரங்களை தள்ளிவிட்டு காஷ்மீரல்லாத மற்ற இந்திய பிரதேசங்களில் முஸ்லிம்களால் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதா, கொஞ்சம் ஆய்வு செய்து பாருங்கள்.
இந்தியாவை பொறுத்தவரை என்ன காரணம் என்பதையும் உங்களுக்கு விளங்கும் என நம்புகிறேன்.அதனால் முதல் காரணியை கண்டுபிடியுங்க அத சரி பண்ண என்ன செய்யலாம்னு யோசியுங்க,அதற்கு பிறகு எதிர் காரணி செய்வது ஏன் என்பது விளங்கும்.
முடிவாக அன்றிலிருந்து இன்றுவரை அசத்தியத்திற்கு எதிராக விளங்கும் இஸ்லாத்தை ஒழிப்பதற்கு என்னென்ன திரை மறைவு வேலைகளெல்லாம் நடக்கிறது என்பது உங்களை விட யாருக்கு நல்லா தெரியும் சொல்லுங்க.
umar quote:
ஈஸா குர்ஆன்
இன்றைக்கு இஸ்லாமின் உண்மை முகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்திற்கு தெரிந்துவிடுகிறது என்பதால் தானே அதிக ஆவேசத்தோடும், கோபத்தோடும் திட்டுகிறீர்கள்.
mist:
கொஞ்சம் மாற்றி சொல்லுங்கள். இஸ்லாத்தை மேற்கத்திய உலகம் கொஞ்சம்,கொஞ்சமாக உண்மையை உணர்ந்து அரவணைக்கத் தொடங்கி உள்ளதை பொறுத்துக்கொள்ள இயலாத, மதத்தால் பிழைப்பு நடத்தும் கிறிஸ்தவ புரோகிதர்கள் சாரி போதகர்கள், தங்களுடைய பிழைப்பு பறிபோகும் நிலையை தடுத்து நிறுத்தவே ஆவேசத்தோடும், கோபத்தோடும் திட்டுகிறீர்கள். அப்படி இல்லை என்று சொல்வீர்களானால் இன்றைக்கு இஸ்லாத்தின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வருகிறது என்று ஏன் எழுதப்போகிறீர்கள், இத்தனை நாளாக தெரியவில்லையா? கண்ணை மூடிக்கொண்டா இருந்தார்கள்.
உமர் அண்ணா உங்களுக்கு பணிவுடன் ஒரு கருத்தை சொல்லிக்கொள்கிறேன், எதிர்ப்பில் வளர்ந்ததுதான் இஸ்லாம். கிறிஸ்தவத்தை போல அல்ல, ஏதோ 3 ஆம் நூற்றாண்டில் கான்ஸ்டான்டைன் ஏற்றுக்கொண்டு நிதியுதவி செய்ததால் பிழைத்தது, அது வரை எத்தனை ஆயிரம் பேர் கிறிஸ்தவத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்கள்.விளக்கம் கொடுப்பீர்கள் என நம்புகிறேன்.
umar quote:
ஈஸா குர்ஆன்
பாவம் உங்கள் அல்லாஹ், மனிதர்கள் தன் வேதங்களில் கையாடல்கள் செய்யும் போது என்ன செய்துக்கொண்டு இருந்தார்?
ஏதாவது விடுமுறைக்கு சென்று இருந்தாரோ?
அல்லது
உலகத்திலிருந்து தன்னிடம் வரும் ஆண்களுக்கு பெண்களை தயார் படுத்தும் வேலையில் அன்றிலிருந்தே ரொம்ப பிஸீயாக இருந்தாரோ?
mist:
உமர் அண்ணா இப்படியெல்லாம் எழுத உங்களுக்கு எப்படி முடியுது. அல்லாஹ்வை விமர்சிப்பதால் உங்களுக்கு என்ன இன்பம் கிடைக்கிறது? கட்டுரை எழுதியவரை, அவரது எழுத்தை,கருத்தை விமர்சனம் செய்யுங்கள் அதை விட்டுட்டு இப்படியெல்லாம் எழுதுவது NO GOOD உமர் அண்ணா.
ஏன் இதை அப்படியே கொஞ்சம் மாற்றிப்போடக்கூடாது, கிறிஸ்தவம் இஸ்லாத்தை விட சீனியர் இல்லையா, பின் எப்படி கர்த்தர் இஸ்லாத்தை தோன்றி, வளர அனுமதித்தார்?
உமர் அண்ணா கவலையே படாதீர்கள் அல்லாஹ் என்ன பண்ணி கொண்டிருந்தார், என்ன பண்ணுவார் பார்க்கத்தானே போறோம், எல்லாத்துக்கும் பதில் கிடைக்கும். Because நம்ம இரண்டு பேருமே பரலோக ராஜ்ஜியத்தை நம்புகிற ஆட்கள்,உங்களுக்கு ஒரு தேவன் எனக்கு ஒரு அல்லாஹ் இருக்கப்போவதில்லை. So let us wait & see.
umar quote:
1) பைபிளில் இருக்கும் விவரங்கள் (நிகழ்ச்சிகள்) குர்ஆனிலும் அதே போல இருந்தால், அந்த வசனங்களை மனிதர்கள் திருத்தவில்லை, காரணம் என்ன? அதே நிகழ்ச்சி அப்படியே மாற்றமில்லாமல் குர்ஆனில் இருக்கிறதே, அதனால், அவ்வசனங்கள் கலப்படம் செய்யப்படாதவைகள்.
2) பைபிளில் இருக்கும் விவரங்கள், குர்ஆனில், ஹதீஸ்களில் இல்லாமல் இருந்தால், பைபிளில் இருக்கும் அந்நிகழ்ச்சி சம்மந்தப்பட்ட வசனங்கள் மனிதர்களால் திருத்தப்பட்டவைகளாகும். ஏன் இப்படி என்று கேட்டால், அந்நிகழ்ச்சி குர்ஆனில் இல்லை அதனால் தான்.
3) பைபிளில் ஒரு நிகழ்ச்சி பற்றி ஒன்றுமே குறிப்பிடாமல் இருக்கும் பட்சத்தில், ஒரு புதிய நிகழ்ச்சி பற்றி குர்ஆன் சொல்லியிருந்தால், அந்நிகழ்ச்சி பற்றிய விவரங்களை மனிதர்கள் பைபிளிலிருந்து நீக்கிவிட்டார்கள். ஏன் இப்படி என்று கேட்டால், குர்ஆனில் இருக்கிறதல்லவா? அதனால் தான்.
mist:
இதற்கு காரணமும் குர் ஆன் சொல்வதால்தான் இறைவன் தன் அடியார்களுக்கு வேதத்தை வழங்கினான் என்று குர் ஆனில் சொல்வதால் நம்புகிறோம், அதே போல் சொற்ப விலைக்கு அவ்வேதங்களின் வசனங்களை மாற்றி விட்டார்கள் என்பதையும் குர் ஆன் அடிப்படையில்தான் நம்புகிறோம்.உதாரணத்திற்கு R.C பைபிள் மற்றும் protestant பைபிள் இரண்டுக்குமிடையில் புத்தகம் மற்றும் அதிகாரத்தில் வித்தியாசம் இருக்கா,இல்லையா? New American English க்கும், King James version க்கும் (tobit.judith, wisdom, sirah, Baruch, Maccabees 1&2.) ஏன் இவ்வளவு வித்தியாசம்(ஒரு வேளை அயல் நாட்டு சதியா?). இதெல்லாம் பழைய கதைன்னு நீங்கள் சொல்றது எனக்கு கேட்குது,இருந்தாலும் சொல்லுங்க.
மேலும் Ecclesiastes புத்தகத்தில் 12 வது அதிகாரம் வரைதான் இருக்குது மற்றதெல்லாம் எங்கே? மொத்தம் எத்தனை அதிகாரம், உங்களுடைய குருமார்கள் answering islam கட்டுரையாளர்களுடன் கொஞ்சம் கலந்தாலோசித்து விட்டு சொல்றீங்களா? What about Apocrypha and Gospel of barbanas etc…..
இதையெல்லாம் எடிட் பண்ணது யாரு முஸ்லிம்களா? உமர் அண்ணா நீங்களெல்லாம் என்னதான் பைபிளை காப்பாத்த முயற்சி செய்தாலும் பைபிளே அதுக்கு ஒத்துழைக்க வில்லை என்பதுதான் உண்மை.உடனே நீங்க பதிலுக்கு குர் ஆனும் மாற்றப்பட்டு விட்டதுன்னு ஒரு மூன்று பக்கத்து மொழி பெயர்ப்பு கட்டுரையை காட்டுவீர்கள் அல்லது தொடுப்பை கொடுப்பீர்கள்.. அந்த வீணான வேலையெல்லாம் விட்டுட்டு இரண்டு HARD COPY குர் ஆனை கொண்டு வாருங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருப்பதை நிருபியுங்கள். நீங்களே PRINT செய்தால்தான் உண்டு, செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை அல்லது உங்களுடைய முகவரியை கொடுங்க பல விதமான பைபிளை நான் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன் ஆனால் காசு கொடுத்துடனும். போதாக்குறைக்கு Dr.Bart Ehrman புதுசா புத்தகம் வேற எழுதியிருக்கிறாராம். ஏற்கனவே misquoting jesus ல்தான் பைபிளை பற்றி புட்டு,புட்டு வச்சாரே. youtube link தரட்டுமா?
உமர் அண்ணா எனக்கு உங்களுடைய சங்கடம் புரிகின்றது, உங்களை சுத்தி ஒரு குரூப் ஃபார்ம் ஆகிவிட்டதால் நீங்கள் எதையாவது எழுத சாரி மொழி பெயர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது புரிகிறது. Better ஏதாவது பிரசங்கம், ஜெப குறிப்பு இது மாதிரி ஏதாவது மொழி பெயருங்க.ஏன்னா அதில் ஏதும் வில்லங்கம் இருக்காது பாருங்க.
Umar quote:
அல்லாஹ் கொஞ்சம் கொஞ்சமாக மதுபானத்தை தடை செய்தார், அதுவரையில் இஸ்லாமியர்கள் குடித்தார்கள் என்று இஸ்லாமியர்கள் சொல்வார்கள். திடீரென்று குடிப்பழக்கத்தை நிறுத்தமுடியாது, அதற்காக மனிதனின் மனநிலையை புரிந்துக்கொண்டு தான் அல்லாஹ் இப்படி அழகாக செய்தார் என்றுச் சொல்வார்கள். இஸ்லாமியர்களின் இப்படிப்பட்ட பலவீனமான வாதங்கள் அனைத்தும் ஒன்றுக்கும் உதவாத வாதங்களாக மாறிவிடுகின்றன,
mist:
ஏன் உமர் அண்ணா ஒரு மாற்றம் என்பது படிப்படியாக நடப்பதில் தவறேதும் உள்ளதா? Overnight - ல் மாற்றம் நடந்தால் அது நிலைக்குமா. உதாரணத்திற்கு, இயேசு நாதர் இவ்வுலகிற்கு வந்து அன்பை போதித்தார் ஆனால் அவரையே பிடித்து சிலுவையில் அறைந்து விட்டார்கள் இல்லையா? அவருடைய போதனைகள் உடனே பரவியிருந்தால் ஏன் சிலுவையில் அறையப்பட்டிருக்க வேண்டும்,மேலும் பைபிளின் புதிய ஏற்பாட்டில் பார்க்கும்போது இயேசு பலருக்கு வைத்தியம் பார்த்திருக்கிறார்,அற்புதங்கள் நிகழ்த்தியிருக்கிறார், ஆயிரக்கணக்கானவர்களுக்கு உணவு கொடுத்திருக்கிறார் ஆனாலும் மக்கள் மன்றத்தில் அவருக்கு ஆதரவு இல்லை, ஏன் உடனடி மனமாற்றம் ஏற்பட வில்லை.அவருடைய தோல்வியாக கருதலாமா?
இதே அடிப்படையில்தான் முஹம்மத் நபியாவதற்கு முன்பு வரை அறியாமை கால மக்களாக இருந்தவர்கள், குடிப்பழக்கம் உடையவர்கள் ஆனால் இறைவனுடைய கட்டளை இறங்கியவுடன் அந்த பழக்கத்தை விட்டு விலகினார்களா,இல்லையா? பைபிளை புரிந்து கொள்ள ஒரு அளவுகோல், குர் ஆனை புரிந்து கொள்ள வியாக்கியானமா?
Umar quote:
குடித்தபோதையில் ஒட்டக எலும்பால் அடித்துக்கொண்டு காயப்பட்ட இஸ்லாமிய ஆரம்பகால மாமனிதர்கள்:
mist:
ஆரம்ப கால மாமனிதர்கள் என்று நீங்களே குறிப்பிட்டு விட்டு அதற்கு பிறகு விமர்சித்தால் எப்படி அண்ணா. முஸ்லிம்களே பக்கம்,பக்கமாக சொல்கிறார்களே ஆரம்ப கால, அறியாமை கால மக்கள் செய்த அட்டூழியங்களை பற்றி.
Umar quote:
• பைபிளில் மதுபானம் தடைசெய்யப்பட்டு இருந்தால், ஏன் கிறிஸ்தவத்திற்கு பிறகு 600 ஆண்டுகளுக்கு பின்பு வந்த இஸ்லாமில் அந்த தடை ஆரம்பத்திலிருந்தே இல்லாமல் இருந்தது?
• பழைய ஏற்பாட்டில் பன்றி மாமிசம் கூடாது என்று மோசேயின் மூலமாக தேவன் (அல்லாஹ் - உங்கள் நம்பிக்கைப்படி) தடை செய்திருக்கும் போது, 2000 ஆண்டுகளுக்கு பின்பும் அது இஸ்லாமில் அமுலில் இருக்குமானால், அதே தேவன் கொடுத்த மதுபான தடை ஏன் இஸ்லாமில் ஆரம்பத்திலிருந்தே சொல்லுபடியாகாது?
• இன்னும் பல நூற்றாண்டுகள் பின்னுக்குச் சென்று, ஆபிரகாமுக்கு தேவன் கட்டளையிட்ட விருத்தசேதனம் என்பது, கி.பி. 600க்கு அடுத்து செல்லுபடியாகுமானால், அதே தேவன் விதித்த மதுபான தடை ஏன் செல்லுபடியாகாது?
mist:
உங்களுடைய கேள்விகள் எப்படி இருக்கிதென்றால், PTC bus களில் எழுதி வைத்திருப்பது போல, படிகளில் பயணம் செய்யாதீர்கள் என்று விமானத்தில் ஏன் எழுதி வைக்கவில்லை என்று கேட்பது போல். இப்படி Illogical கேள்விகளையெல்லாம் கேட்பதை விட்டு விட்டு இருக்கும் கிறிஸ்தவர்களை ஒழுங்காக இறைவனுடைய கட்டளைகளை பின்பற்ற அறிவுரை சொல்லுங்கள் உமர் அண்ணா.
Umar quote:
ஆக, யார் யாரேல்லாம் திருமணம் பற்றி தெளிவான வழிகாட்டுதல் பைபிள் கொடுக்கவில்லை என்றுச் சொல்கிறார்களோ, அப்படிப்பட்ட கிறிஸ்தவர்கள் தாராளமாக "திருமணம் பற்றி!" சரியான வழிகாட்டுதல் கொடுக்கும் இஸ்லாமுக்கு மாறிவிடலாம். (இக்கட்டுரையை படிக்கவும்: திருமண உறவிற்கு முன்பு உடலுறவா (விபச்சாரமா) செய்யுங்கள், செய்யுங்கள், செய்யுங்கள் என்றுச் சொல்கிறார் ஒரு மஹான்:
mist:
என்ன உமர் அண்ணா சின்னபிள்ள தனமா இருக்கு, ஒன்னும் தெரியாத பாமரனுக்கு கூட தெரியும் இஸ்லாத்தில் விபச்சாரம் செய்தல் மரண தண்டனைக்குரிய குற்றம் என்பது, நீங்க என்னடான்னா புதுசா,புதுசா ரிலீஸ் பண்றீங்க.
அடிமை முறை உலகில் இருந்த போது பின்பற்றிய நடைமுறைகளையெல்லாம் இன்னிக்கு உக்காந்து பேசிக்கிட்டு இருக்கீங்களே, ஆப்ரஹாம் லிங்கன் வரும் வரைக்கும் உங்காளுங்க என்னென்ன அட்டூழீயம் பண்ணாங்கன்னு தெரியாதா,உங்களுக்கு. நெல்சன் மண்டேலாவை மறந்துட்டிங்களா, நம்ம கண்ணு முன்னாடி பாத்தோமே.
இஸ்லாம் நாலு திருமணத்தை அனுமதிக்கிறது, ஆனால் அது என்ன கட்டாய கடமையா? ஒரு திருமணத்துடன் நிறுத்திக்கொண்டால் அவனுக்கென்ன சொர்க்கம் கிடையாது என்றா இஸ்லாம் வலியுறுத்துகிறது, எவனுக்கு ஒன்னு போதுமானதாக இல்லையோ அவனுக்குரிய சிறப்பு அனுமதியாகத்தான் இது அமைந்துள்ளது, உங்காளுங்க அமெரிக்காவிலும்,ஐரோப்பாவிலும் பண்றாங்களே அந்த மாதிரியெல்லாம் செய்யக்கூடாதுன்னா,பலதார மணத்தை அனுமதிச்சாத்தான் முடியும், உங்களால் முடிய வில்லையென்ற காரணத்தால் மற்றவர்களும் செய்யக்கூடாதுன்னா எப்படி உமர் அண்ணா.அமெரிக்காவில் ஒரு நடிகை எலிசபத் டெய்லர்னு நினைக்கிறேன், அந்தம்மா எட்டோ,பத்தோ கல்யாணம் பண்ணாங்க, இதுல கூத்து என்னான்னா 2 வதாக விவாகரத்து பண்ண கணவனையே மீண்டும் 5 வதாக திருமணம் பண்ணி மீண்டும் விவாகரத்து.என்ன உன்னதமான கிறிஸ்தவ கலாச்சாரம்! நடிகை என்பதால் வெளியில் தெரிந்தது, தெரியாமல் எத்தனையோ.
உங்க பசிக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று நீங்கள்தான் முடிவு பண்ண வேண்டும்,ஆனால் திருட்டுத்தனமாக திருடி சாப்பிடாமல் நேர்மையாக பணம் கொடுத்து வாங்கி சாப்பிடுங்க, மூன்றாவது மனிதன் நான் முடிவு பண்ண முடியுமா, நீங்கள் எவ்வளவு சாப்பிட வேண்டுமென்று. It’s very simple matter to understand உமர் அண்ணா
Umar quote:
சபாஷ், கொலைப் பற்றி, மக்களை கொல்வதைப் பற்றி ஒரு இஸ்லாமியர் வேதனை அடைவதைக் கண்டால், மிகவும் மனதிற்கு இதமாக உள்ளது. (ஆனால், அப்படி மரித்தவர்கள் இஸ்லாமியர்கள் என்பது வேறு விஷயம்)
இஸ்லாமியர்கள் இறையரசை பூமியில் நிறுவ எடுத்துக்கொண்டு வரும் நல்ல செயல்களை உலகம் பார்த்துக்கொண்டு, படித்துக்கொண்டு, அனுபவித்துக்கொன்டு, வேதனை அடைந்துக்கொண்டு, பல்லை கடித்துக்கொண்டு இருக்கிறது நண்பரே.
கடந்த 14 நூற்றாண்டுகளாக மக்களை கொன்றுக்கொண்டு இருப்பது, அந்த போப்பை தலைவராக கொண்டுள்ள கிறிஸ்தவர்களா ? இல்லையே! முஹம்மதுவை தலைவராக கருதும் இஸ்லாமியர்கள் தானே!
mist:
என்ன உமர் அண்ணா முழு பூசணிக்காயை சோத்தில் மறைக்கிறீர்கள்,கிறிஸ்தவம் பரவியது எப்படி என்று கொஞ்சம் பார்ப்போமா, முதலில் அமைதியாக இருக்கும் ஒரு சமுதாயத்திற்குள் குழப்பத்தை உண்டு பண்ணி சண்டையை உண்டாக்கி விடுவது, பிறகு சமாதானம் செய்து போல் உள்ளே மூக்கை நுழைப்பது, சமூக சேவை என்ற பெயரில் மக்களை கவர் செய்வது, பிரச்சினை பண்ண யாராவது இருந்தால் அவனுக்கு பெண்ணையோ, பொருளையோ காட்டி வழிக்கு கொண்டு வருவது இல்லையேல் அவனுடைய கதையை முடித்து விட்டு, அங்கிருக்கும் அப்பாவி மக்களை பணத்தாசை,பொருளாசை காட்டி மதம் மாற்றி தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது.
ஒரு பக்கம் படையெடுப்பது,மறு பக்கம் சமூக சேவை என்ற பெயரில் மிஷ நரிகளை உள்ளே அனுப்புவது, என்ன உமர் அண்ணா இந்த யுக்திகளெல்லாம் மறந்து விட்டதா உங்களுக்கு,இல்லை சொல்லி கொடுக்கலியா?
Umar quote:
போதும் சகோதரரே போதும், அந்த சிலுவைப் போர்கள் இன்றும் தொடர்ந்து நடக்குமானால், நீங்களும் நாங்களும், ஏன் உலக மக்களும் ஒருவரை ஒருவர் கொன்றுக்கொண்டு மாண்டுப்போய் இருப்போம். அவர்கள் நிறுத்திவிட்டார்கள். ஆனால், சிலுவைப் போருக்கு முன்பே மக்களை கொல்லும் அமைதி மார்க்கமாக வந்தவர்கள் தொடர்ந்துக்கொண்டு இருக்கிறார்கள், இவர்கள் எப்போது நிறுத்துவார்கள்?
mist:
உமர் அண்ணா தங்களிடம் சில கேள்விகள்,இயேசு மறைந்தது முதல் ஏழாம் நூற்றாண்டு வரை அதாவது முஹம்மத் தன் கையில் வாளெடுக்கும் வரை இந்த உலகத்தில் எத்தனை போர்கள், அடக்கு முறைகள் கிறிஸ்தவர்களுக்கெதிராக, யூதர்களுக்கு எதிராக நடந்தது என்பதை கொஞ்சம் ஆராய்ந்து இத்தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு சொன்னீர்களானால் நலம்.
இவர்கள் எப்போது நிறுத்துவார்கள்?
நல்ல கேள்வி, இதற்கு பதிலாக முதலில் ஆரம்பித்தவர்களை நிறுத்த சொல்லுங்கள்.( நாயகன் டையலாக்)
umar quote:
அருமை அப்திர் ரஹ்மான் அவர்களே, ஏதோ ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டு மற்ற வசனங்களோடு ஒப்பிட்டுப்பார்க்காமல், ஏதோ நாமும் எழுதினோம் என்றுச் சொல்லி எழுதுவது எப்படி சரியாகும்?
mist:
அருமை உமர் அண்ணா அவர்களே, ஏதோ ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டு மற்ற வசனங்களோடு ஒப்பிட்டுப்பார்க்காமல், ஏதோ நாமும் எழுதினோம் என்றுச் சொல்லி எழுதுவது எப்படி சரியாகும்? உங்கக்கிட்ட கத்துக்கிட்டதுதான்,நன்றி.
umar quote:
என்னடா இது, அமெரிக்காவை இழுக்காமல், ஜார்ஜ் புஷ்ஷை இழுக்காமல் ஒரு இஸ்லாமியர் வன்முறையைப் பற்றி எழுதிக்கொண்டு இருக்கிறாரே என்று நினைத்தேன். எழுத்திட்டாரே எழுதிட்டாரே!
பயங்கரவாதத்தை பன்றியாக மாற்றி, அதற்கு மதுவை குடிக்கக்கொடுத்து, பிறகு சன்னியாசத்தை தொட்டு, திருமணம் வரை வந்து, உடனே சிலுவைப் போருக்குச் சென்று, பிறகு அமெரிக்காவிற்கு வந்து ஜார்ஜ் புஷ்வரை வந்துள்ளீர்கள்.
பயங்கரவாதத்தின் ஆணிவேரை நீங்க தோண்டனும், ஆனால், இஸ்லாமின் ஆணிவேர் கிளைகளாக பூமிக்கு மேலே தெரிந்துக்கொண்டிருக்கிறது
mist:
புஷ்ஷை பற்றி பேசக்கூடாது,இஸ்ரேலை பற்றி பேசக்கூடாது,சிலுவைபோரை பற்றி பேசக்கூடாது,கலீலியோவை கொன்றவர்களை பற்றி பேசக்கூடாது,மார்ட்டின் லூதருடைய தீவிரவாத நச்சு கருத்துக்களை பற்றி பேசக்கூடாது,ஹிட்லரை பற்றி பேசக்கூடாது,முசோலினியை பற்றி பேசக்கூடாது,முதல் உலகப்போரை பற்றி பேசக்கூடாது,இரண்டாம் உலகப்போரை பற்றி பேசக்கூடாது,இந்தியாவில் கொலை வெறியாட்டம் போட்டு அப்பாவி இந்தியர்களை கொன்று குவித்த நவீன கால ஆதிக்க வெறி கிறிஸ்தவ வெள்ளையர்களை பற்றி பேசக்கூடாது,உலக நாடுகளையெல்லாம் காலணிகளாக்க கிறிஸ்தவ நாடுகள் ஓட்டிய இரத்த ஆற்றை பற்றி பேசக்கூடாது,தென் ஆப்ரிக்காவிலும்,ஜிம்பாப்வேயிலும் நிற வெறி, இன வெறி கொள்கையை கடைபிடித்து அந்த மண்ணின் மைந்தர்களை 20ஆம் நூற்றாண்டில் கூட அடிமைகளாக நடத்திய கிறிஸ்தவ வெள்ளையர்களை பற்றி பேசக்கூடாது, ஒரே நாளில் இரண்டு லட்சம் மக்களை கொன்று குவித்த அமெரிக்க அதிபரென்னும் கிறிஸ்தவ வெள்ளையரை பற்றி பேசக்கூடாது,வியட்நாம் கொடுமையை பற்றி பேசக்கூடாது, hats off உமர் அண்ணா. ( type செய்து கை வலிக்குது)
ஒரு கன்னத்தை அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்று வசனத்தை ஊரெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டிவிட்டு, மேலே சொன்ன விஷயத்தையெல்லாம் எவ்வளவு அழகாக செய்துள்ளார்கள் இயேசு கிறிஸ்துவை பின் பற்றும் கிறிஸ்தவர்கள். இவ்வளவு ஆக்கப்பூர்வமான வேலைகளையெல்லாம் செய்து விட்டு தாடி வைத்த முஸ்லிம் எல்லாம் தீவிரவாதி.என்னே நீதி!!
மீடியாக்களை கையில் வைத்துக்கொண்டு இன்னும் எத்தனை அட்டூழியங்களையும் செய்வார்கள் இந்த அமைதிப்புறாக்கள், பழியேற்றுக்கொள்ளத்தான் இருக்கிறானே இளிச்சவாயன் இஸ்லாமியன்.
வாழ்க கிறிஸ்தவம், வளர்க அதன் தொண்டு.
நன்றி
மிஸ்ட்.
கருத்துரையிடுக