ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 12 செப்டம்பர், 2011

குர்‍ஆன் 35:8 - அல்லாஹ்வின் பிழையை சரி செய்யும் பீஜே போன்ற இஸ்லாமியர்கள்

 

குர்‍ஆன் 35:8 - அல்லாஹ்வின் பிழையை சரி செய்யும் பீஜே போன்ற இஸ்லாமியர்கள்

முன்னுரை: பீஜே போன்ற இஸ்லாமிய அறிஞர்கள், குர்‍ஆன் பற்றி கூறும் போது, "குர்‍ஆன் ஒரு அற்புதம், அரபி இலக்கிய நூல்களில் குர்‍ஆன் போன்றதொரு புத்தகம் இல்லை" என்பார்கள். இன்னும் ஒரு படி மேலே சென்று, குர்‍ஆன் போன்ற ஒரு புத்தகம் உலகில் வேறு எதுவும் இல்லை என்றும், குர்‍ஆனின் ஒவ்வொரு வசனமும், வார்த்தையும் எழுத்தும் அல்லாஹ்வினால் கொடுக்கப்பட்டுள்ளது. குர்‍ஆனில் ஒரு பிழையையும் நாம் காணமுடியாது என்று பலவாறு கூறுவார்கள். 

இவைகளை கேட்கின்ற பாமர இஸ்லாமியர்கள் பெருமிதம் கொள்வார்கள், அதே சமயத்தில் இஸ்லாமியரல்லாதவர்கள் "அப்படியா" என்று ஆச்சரியப்படுவார்கள். ஆனால், இந்த இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வது உண்மையா? குர்‍ஆன் மாற்றப்படாமல் அப்படியே உள்ளதா? குர்‍ஆனில் பிழைகள் எதுவும் இல்லையா? என்று நாம் கேட்டு, சிறிது நேரம் எடுத்து ஆராயும் போது, பீஜே போன்றவர்கள் சொல்வது உண்மையல்ல, அவைகள் பொய்கள் என்பது புரியும். 

சரி, இந்த தற்போதைய கட்டுரையில், இஸ்லாமிய அறிஞர்கள், குர்‍ஆனில் உள்ள பிழைகளை எப்படி திருத்துகிறார்கள் அல்லது சரி செய்ய முயற்சி எடுக்கிறார்கள் என்பதை "குர்‍ஆன் 35ம் அதிகாரம், 8ம் வசனத்தைக் கொண்டு" நாம் பார்க்கலாம்.

1) குர்‍ஆனை தமிழாக்கம் செய்யும் போது, மேற்கொள்ளவேண்டிய ஏற்பாடுக‌ள்: 

குர்‍ஆனை ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழியாக்கம் செய்யும் போது, வசனத்தின் பொருள் சரியாக இருக்கவேண்டும் என்பதற்காக, மொழியாக்கம் செய்பவர்கள் அல்லது தமிழாக்கம் செய்பவர்கள், வசனங்களின் மத்தியில் சில அடைப்புக்குறிகள் "()" இட்டு, அதில் சில சொந்த வார்த்தைகளை எழுதுவார்கள், இதனால் தமிழில் நாம் குர்‍ஆன் வசனத்தை படிக்கும் போது, பொருள் விளங்கும். இப்படி செய்வது தவறு அல்ல. இப்படி அடைப்புகுறிகள் கொடுத்து விளக்குவது வசனங்களின் பொருளை சரியாக உணர உதவும். 

ஆனால், இந்த கட்டுரையில் நாம் பார்க்கப்போவது என்னவென்றால், "அல்லாஹ் ஒரு வாக்கியத்தை சரியாக முடிக்காமல், அதாவது பாதியிலேயே அந்த வாக்கியத்தை அறைகுறையாக விட்டுவிட்டு, அடுத்த வாக்கியத்திற்குச் சென்றுள்ளார்" என்பதாகும். அல்லாஹ்வின் இந்த பிழையை சரி செய்ய மொழியாக்கம் செய்பவர்கள் என்ன செய்துள்ளார்கள் என்பதைக் காண்போம்.

2) குர்‍ஆன் 35:8ம் வசனம் பீஜே தமிழாக்கத்திலிருந்து: 

இந்த குர்ஆன் வசனத்தை நாம் அனேக (ஒன்பது) தமிழாக்கங்களில் படிக்கப்போகிறோம். அதற்கு முன்பாக பீஜே அவர்கள் எப்படி இந்த வசனத்தை மொழியாக்கம் செய்துள்ளார் என்பதை பார்ப்போம்.

குர்ஆன் 35:8 

யாருக்கு தனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அழகானதாக கருதினானோ அவனா (சொர்க்கவாசி)? தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். (முஹம்மதே!) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விடவேண்டாம். அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன். (பீ. ஜைனுல் ஆபிதீன் தமிழாக்கம்)

மேற்கண்ட வசனத்தை நாம் மூன்றாக பிரிக்கலாம்: 

1) யாருக்கு தனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அழகானதாக கருதினானோ அவனா (சொர்க்கவாசி)? 

2) தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். 

3) (முஹம்மதே!) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விடவேண்டாம். அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன் 

மேலே நாம் காண்பது போல, முதல் வாக்கியம் ஒரு கேள்வியாக உள்ளது, அதாவது ஒரு மனிதன் தான் செய்யும் தீய செயல்கள் நல்லவைகளாக காண்கிறானோ, அவன் எப்படி ஒரு சொர்க்கவாசியாக இருக்கமுடியும்? என்பது போல கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இரண்டாவது பாகம், அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுகிறார், எப்படி வழி கேட்டில் விடுகிறார் என்பதைச் சொல்கிறது. மூன்றாவதாக, முஹம்மதுவிற்கு அறிவுரை கொடுக்கப்படுகிறது. 

இப்போது, மேற்கண்ட மூன்று விவரங்களில், இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகம் பற்றி நாம் அலசப்போவதில்லை. ஆனால், முதல் பாகத்தைப் பற்றி பார்க்கப்போகிறோம். 

முதல் பாகத்தை பீஜே அவர்கள் கீழ்கண்டவிதமாக மொழியாக்க‌ம் செய்துள்ளார்கள்:

"யாருக்கு தனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அழகானதாக கருதினானோ அவனா (சொர்க்கவாசி)?"

3) அறைகுறை வாக்கியம்: 

இந்த வசனத்தில் முதல் பாகத்தில் ஒரு தீயவனை பற்றி பேசி, அவனை நல்லவவோடு/நல்லவற்றோடு ஒப்பிட்டு வாக்கியத்தை முடிக்கவேண்டும். ஆனால், அல்லாஹ் முதல் வாக்கியத்தில் பாதியை அடைந்தவுடன், நல்லவனை ஒப்பிட்டு பேசுவதை மறந்துவிட்டார். இதனால், வாக்கியத்தை "அவனா?" என்ற வார்த்தையோடு அறைகுறையாக விட்டுவிட்டு, "தான் நாடியோரை நல்லவழியில் செலுத்துவார்..." என்ற வாக்கியத்தை ஆரம்பித்துவிட்டார். 

இதனால் மொழியாக்கம் செய்பவர்கள் அல்லாஹ் செய்த பிழையை சரி செய்கிறார்கள்.  அல்லாஹ் சொல்ல தவறிய விவரத்தை இவர்கள் மொழியாக்கத்தில் சேர்கிறார்கள். 

இந்த வசனத்தில் பீஜே சேர்த்த "(சொர்க்கவாசி)" என்ற வார்த்தையை நீக்கிவிட்டு வாசியுங்கள். இந்த வாக்கியம் அறைகுறையாக முழுமையடையாமலிருப்பதை காணலாம்.

குர்ஆன் 35:8 

யாருக்கு தனது தீய செயல் அழகாகக் காட்டப்பட்டு, அதை அழகானதாக கருதினானோ அவனா? 

தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். 

(முஹம்மதே!) அவர்களுக்காகக் கவலைப்பட்டு உமது உயிர் போய்விடவேண்டாம். அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன். (பீ. ஜைனுல் ஆபிதீன் தமிழாக்கம்)

பீஜே அவர்கள் அல்லாஹ்வின் வார்த்தையில் இருக்கும் பிழையை "சொர்க்கவாசி" என்ற வார்த்தையை அடைப்பிற்குள் எழுதி, வாக்கியத்தை முழுமை படுத்தினார். 

பீஜே "(சொர்க்கவாசி)?" என்று சேர்க்கவில்லையானால், அந்த வசனம் "அவனா?...." என்பதோடு நின்றுவிடும். அவ்வாக்கியத்திற்கு பொருள் இருக்காது அல்லது அறைகுறையான வாக்கியமாக இருக்கும். அல்லாஹ்வின் இந்த பிழையை சரி செய்ய பீஜே அவர்கள் "சொர்க்கவாசி" என்ற வார்த்தையை சேர்த்தார். இதே போல தமிழில் குர்‍ஆனை மொழியாக்கம் செய்த இதர இஸ்லாமிய அறிஞர்கள் இந்த குர்‍ஆனின் பிழையை எப்படி சரி செய்து, அல்லாஹ்விற்கு உதவினார்கள் என்பதை அவர்களின் மொழியாக்கங்களிலிருந்து குர்‍ஆன் 35:8ம் வசனத்தை இப்போது காண்போம்.

4) இஸ்லாமிய நூல்கள் மலிவுப்பதிப்பு பப்ளிக்கேஷர்ஸ் & புக் செல்லர்ஸ்: 

இந்த தமிழாக்கத்தை செய்தவர்கள், அல்லாஹ்வின் பிழையை சரி செய்ய "(இதை தவிர்த்தவருக்கு சமமாவார்?)" என்று சேர்த்துள்ளார்கள். (பீஜே ஒரே வார்த்தையை பயன்படுத்தி சரி செய்துள்ளார்கள்). இவர்களும் தங்கள் வார்த்தைகளை அடைப்புகுறிக்குள் எழுதியுள்ளார்கள், ஏனென்றால், அந்த விளக்கம் குர்‍ஆனில் இல்லை.

எனவே எவருக்கு அவருடைய செயலின் தீமை அலங்காரமாக காண்பிக்கப்பட்டு, அவர் அதை அழகாக காண்கிறாரோ அவரா?(இதை தவிர்த்தவருக்கு சமமாவார்?)ஆகவே நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியோரை வழி தவறச் செய்கிறான் இன்னும் தான் நாடியோரை நேர் வழியில் செலுத்துகிறான்.எனவே அவர்களின் மீதுள்ள கவலைகளால் உம்முடைய உயிர் போய்விடவேண்டாம்-நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்கின்றவற்றை அறிந்தவன்.

5) குர்ஆன் தர்ஜுமா, திரியெம் பிரிண்டர்ஸ் 

இவர்கள் தங்கள் தமிழாக்கத்தில் "(நற்செயல் புரிந்தவனுக்கு சமமாவான்?)" என்று எழுதி குர்‍ஆனின் பிழையை சரி செய்துள்ளார்கள்.

எனவே, எவனொருவனுடைய தீயசெயல் அவனுக்கு அழகாக்கப்பட்டு அதை(ச் செய்வதை)அவனும் அழகானதாகவும் கண்டானே அவனா? (நற்செயல் புரிந்தவனுக்கு சமமாவான்?) நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியோரை வழி தவறச் செய்கிறான் இன்னும் தான் நாடியோரை நேர் வழியில் செலுத்துகிறான்.எனவே அவர்களின் மீதுள்ள கவலைகளால் உம்முடைய உயிர் போய்விடவேண்டாம்-நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்கின்றவற்றை முற்றும் அறிந்தவன்.

6) தர்ஜுமா அல்குரானில் கரீம் வெளியீடு பஷரத் பப்ளிக்கேஷன் 

இவர்கள் தங்கள் தமிழாக்கத்தில் "(நற்செயல் புரிந்தவனுக்கு சமமாவான்)" என்று எழுதி குர்‍ஆனின் பிழையை சரி செய்துள்ளார்கள்.

எனவே எவனொருவன் அவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாக்கப்பட்டு அதை அவனும் அழகானதாகவும் கண்டானோ அவனா?(நற்செயல் புரிந்தவனுக்கு சமமாவான்).நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களை வழிதவறச்செய்கிறான்.தான் நாடியவர்களை நேரான வழியில் நடத்துகிறான்.ஆகவே (நபியே) அவர்கள் மீதுள்ள கவலைகளால் உம்முடைய உயிர் போய்விடவேண்டாம்.நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிந்தோனாக இருக்கின்றான்.

7) திருக்குரான் ,இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (ஐ எஃப் டி) 

இந்த தமிழாக்கத்தை தந்தவர்கள், சிறிது மாற்றி "அந்த மனிதனின் வழிக்கேட்டிற்கு எல்லை ஏதும் உண்டா? " என்று எழுதியுள்ளார்கள். மற்ற நல்ல மனிதனோடு ஒப்பிடாமல், பீஜேயைப் போன்று, எழுதியுள்ளார்கள். இவைகளை நாம் கவனித்தால், அல்லாஹ் பிழையாக செய்து வைத்துச் சென்றதை, ஒவ்வொரு மொழிப்பெயர்ப்பாளரும், தங்கள் சொந்த கருத்தை சொல்லி, அந்த குர்‍ஆன் பிழையை சரி செய்துள்ளார்கள் என்பது தெரியவருகிறது.

எந்த மனிதனுக்கு அவனுடைய தீயச்செயல் அலங்காரமாக்கப்பட்டிருக்கிறதோ, மேலும் அதனை அவன் நல்லதென்று கருதிக்கொண்டிருகின்றானோ(அந்த மனிதனின் வழிக்கேட்டிற்கு எல்லை ஏதும் உண்டா?) திண்ணமாக அல்லாஹ் தான் நாடுவோரை நெறிபிறழச்செலுத்துகிறான்.மேலும் தான் நாடுவோரை நேர்வழியில் செலுத்துகிறான்.எனவே (நபியே)இவர்களுக்காகத் துக்கமும் வேதனையும் அடைந்தே உமது உயிர் உருகிப் போய்விட வேண்டாம்.

8) திருக்குரான்,இஸ்லாம் இண்டர்நேஷனல் பப்ளிக்கேஷன்ஸ் லிட்: 

இவர்களின் குரானில் இது ஒன்பதாவது வசனம். பிஸ்மில்லாவையும் ஒரு வசனமாக கணக்கிட்டு எண்கள் போடப்பட்டுள்ளது. இது "அஹமதியா" என்ற இஸ்லாமிய பிரிவினரால் தமிழாக்கம் செய்யப்பட்ட குர்‍ஆன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களும் "(நம்பிக்கை கொண்டு நற்செயலாற்றுபவனைப் போன்றவனாவானா?)" என்று எழுதி அல்லாஹ்வின் பிழையை திருத்த முயற்சி செய்துள்ளார்கள்.

35:9 தனது செயலின் தீமை தனக்கு கவர்ச்சிமிக்கதாக ஆக்கப்பட்டு தானும் அதனை அழகானதென்று காண்பவன் (நம்பிக்கை கொண்டு நற்செயலாற்றுபவனைப் போன்றவனாவானா?) நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்புபவனை வழிக்கேட்டில் செல்ல விடுகிறான்.தான் விரும்புபவனை நேர்வழியில் நடத்துகின்றான்.எனவே அவர்களுக்காக வருந்தி உமது உயிர் அழிந்துவிட வேண்டாம்.நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு அறிபவனாவான்.

9) மதினாவிலுள்ள மன்னர் ஃப்ஹ்து புனித முஸ்ஹஃப் அச்சக வளாகத்தில் ஹிஜ்ரீ 1425ம் ஆண்டு அச்சிடப்பட்டது: 

இந்த குர்‍ஆன் சௌதியில் உள்ள மதினாவில் அரசாங்கத்தால் பதிக்கப்படுகிற குர்‍ஆன் தமிழாக்கமாகும். இதில் கூட அடைப்பிற்குள் "(இதைத் தவிர்த்தவருக்கு சமமாவார்?)" என்ற வார்த்தைகளை சேர்த்து அல்லாஹ்வின் அறியாமையை போக்கியுள்ளார்கள்.

எனவே, எவருக்கு அவருடைய செயலின் தீமை அலங்காரமாகக் காண்பிக்கப்பட்டு, அவர் அதை அழகாகக் காண்கிறாரோ அவரா? (இதைத் தவிர்த்தவருக்கு சமமாவார்?)ஆகவே, நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியவர்களைத் தவறான வழியில் விட்டுவிடுகிறான்; தான் நாடியவர்களை நேரான வழியிலும் செலுத்துகிறான்; ஆகவே, (நபியே) அவர்கள் மீதுள்ள கவலைகளால் உம்முடைய உயிர் போய்விடவேண்டாம்; நிச்சயமாக , அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிகிறவன்

10) சங்கைமிகு குர்‍ஆன் - ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்: 

இந்த மொழிப்பெயர்ப்பாளர், கொஞ்சம் வார்த்தைகளை தாரளமாகவே பயன்படுத்தியுள்ளார். அதாவது " (எவன் தீய காரியங்களைத் தீயனவாகவே கண்டு அதிலிருந்து விலகிக் கொள்கின்றானோ அவனும் சமமாவார்களா? ஒரு போதும் ஆக மாட்டார்கள்)" என்று எழுதியுள்ளார். அதாவது 'அல்லாஹ் கேள்வி கேட்பது போல' வசனம் உள்ளது, அதில் முதல் பாகத்தில் பாதி கேள்வியோடு அல்லாஹ் விட்டுவிட்டார், ஆனால், இந்த மொழிப்பெயர்ப்பாளர், அல்லாஹ்வின் கேள்வியை பூர்த்தி செய்து, அதற்கான பதிலையும் தானே கொடுத்து காரியத்தை கச்சிதமாக முடித்துள்ளார்.

எவனுக்குத் தீய காரியங்கள் அழகாகக் காண்பிக்கப்பட்டு அவனும் அதனை அழகாகக் காண்கிறானோ அவனும், (எவன் தீய காரியங்களைத் தீயனவாகவே கண்டு அதிலிருந்து விலகிக் கொள்கின்றானோ அவனும் சமமாவார்களா? ஒரு போதும் ஆக மாட்டார்கள்) நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களைத் தவறான வழியில் விட்டுவிடுகிறான். தான் விரும்பியவர்களை நேரான வழியில் செலுத்துகிறான். ஆகவே, (நபியே!) அவர்களுக்காக உங்கள் உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு நீங்கள் கவலைப்படாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

11) முஹம்மது ஜான் தமிழாக்கம் 

இந்த தமிழாக்கத்தில் "(நேர் வழி பெற்றவனைப் போலாவானா?)" என்று எழுதி வாக்கியத்தை சரி செய்துள்ளார்கள்.

எவனுக்கு அவனுடைய செயலின் கெடுதியும் அழகாகக் காண்பிக்கப்பட்டு, அவனும் அதை அழகாகக் காண்கிறானோ, அவன் (நேர் வழி பெற்றவனைப் போலாவானா?)அன்றியும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிதவறச் செய்கிறான்; மேலும் தான் நாடியவரை நேர்வழியில் சேர்க்கிறான்; ஆகவே, அவர்களுக்காக உம்முடைய உயிர் போகும் அளவுக்கு நீர் விசாரப்படவேண்டாம், நிச்சயமாக, அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிபவன்.

12) ஒன்பது தமிழ் குர்‍ஆன் மொழியாக்கங்களிலிருந்து மேற்கோள்கள்: 

இதுவரை நாம் ஒன்பது தமிழ் குர்‍ஆன்களிலிருந்து வசனங்களை மேற்கோள் காட்டியுள்ளோம். எல்லாரும் தங்கள் சொந்த கருத்தை சொல்லியுள்ளார்கள். எல்லாரும் தங்கள் சொந்த கருத்தை அடைப்புகுறிக்குள் கொடுத்துள்ளார்கள். இவர்கள் எல்லாருக்கும் அரபியில் உள்ள வசனத்தின் பிழை தெரிந்துள்ளது, அதனை சரி செய்ய, பிழையான அறைகுறை வாக்கியத்தை சரி செய்ய இவர்கள் முயன்றுள்ளார்கள். 

இந்த ஒன்பது பேர் அடைப்பிற்குள் எவைகளை சேர்த்து பிழையான வாக்கியத்தை சரி செய்துள்ளார்கள் என்பதை கீழ்கண்ட அட்டவனை சுருக்கமாக காட்டும்:

எண்தமிழாக்கம்பிழையை திருத்துவதற்கு சேர்க்கப்பட்ட வார்த்தைகள்
1,பீ. ஜைனுல் ஆபிதீன் தமிழாக்கம்(சொர்க்கவாசி)?
2.இஸ்லாமிய நூல்கள் மலிவுப்பதிப்பு பப்ளிக்கேஷர்ஸ் & புக் செல்லர்ஸ் (இதை தவிர்த்தவருக்கு சமமாவார்?)
3.குர்ஆன் தர்ஜுமா,திரியெம் பிரிண்டர்ஸ் (நற்செயல் புரிந்தவனுக்கு சமமாவான்?)
4.தர்ஜுமா அல்குரானில் கரீம் வெளியீடு பஷரத் பப்ளிக்கேஷன்(நற்செயல் புரிந்தவனுக்கு சமமாவான்)
5.திருக்குரான் ,இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (ஐ எஃப் டி)அந்த மனிதனின் வழிக்கேட்டிற்கு எல்லை ஏதும் உண்டா?
6.திருக்குரான்,இஸ்லாம் இண்டர்நேஷனல் பப்ளிக்கேஷன்ஸ் லிட்(நம்பிக்கை கொண்டு நற்செயலாற்றுபவனைப் போன்றவனாவானா?)
7.மதினாவிலுள்ள மன்னர் ஃப்ஹ்து புனித முஸ்ஹஃப் அச்சக வளாகத்தில் ஹிஜ்ரீ 1425ம் ஆண்டு அச்சிடப்பட்டது(இதைத் தவிர்த்தவருக்கு சமமாவார்?)
8.சங்கைமிகு குர்‍ஆன் - ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்(எவன் தீய காரியங்களைத் தீயனவாகவே கண்டு அதிலிருந்து விலகிக் கொள்கின்றானோ அவனும் சமமாவார்களா? ஒரு போதும் ஆக மாட்டார்கள்)
9.முஹம்மது ஜான் தமிழாக்கம்(நேர் வழி பெற்றவனைப் போலாவானா?)

நான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் விளக்கியுள்ளபடி, குர்ஆன் தமிழாக்கத்தில் இவர்கள் புதிதாக சேர்த்த வார்த்தைகள், ஏற்கனவே இருக்கும் அரபி வார்த்தைகளுக்கு அதிகபடியான விளக்கம் தருவதற்காக அல்ல, அதற்கு மாறாக, பிழையாக உள்ள வாக்கியத்தில் அல்லது அறைகுறையாக விடுபட்ட வாக்கியத்தை சரி செய்ய இவர்கள் எடுத்த முயற்சி தான் இந்த குறிப்பிட்ட (35:8) வசனத்தின் இடையில் போடப்பட்ட மேற்கண்ட வார்த்தைகளாகும். ஒவ்வொரு மொழிப்பெயர்ப்பாளரும் தனக்கு தோன்றியபடி, விளக்கம் கொடுத்துள்ளார்கள். எல்லாருடைய விளக்கமும் ஒரே மாதிரியாக இல்லை என்பதை கவனிக்கவும். 

முடிவுரை: 

பீஜே கூறுவது போல குர்‍ஆன் ஒரு பிழையற்ற வேதமல்ல. அல்லாஹ் செய்த பிழையை மனிதன் திருத்தும்படி அல்லாஹ் தம் வேதத்தை விட்டுவிட்டார். இது ஒன்று மட்டுமல்ல இது போல அனேக பிழைகள், இலக்கண பிழைகள் குர்‍ஆனில் (மூல குர்‍ஆனில்) உண்டு. கர்த்தருக்கு சித்தமானால் நாம் அவைகளை பிறகு காண்போம்.

குர்‍ஆன் பற்றிய இதர தமிழ் கட்டுரைகள்: 

1) வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல் 

2) ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! 

3) குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் 

4) குர்‍ஆன் பாதுகாக்கப்பட்டதா? 

5) பல விதமான அரபி குர்‍ஆன்கள் (THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR'AN) 

6) ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌ 

7) விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்? 

8) இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம் 

9) அரபி குர்‍ஆனின் தாறுமாறான மேற்கோள்கள்? 

சமர்கண்ட் மூல குர்‍ஆன் (MSSவுடன்) இன்றைய குர்‍ஆன் (1924 எகிப்திய வெளியீடு) ஒப்பீடு 

10) பின் இணைப்பு A - பாகம் 1 (Appendix A1) 

11) பின் இணைப்பு A - பாகம் 2 (Appendix A2) 

12) பின் இணைப்பு A - பாகம் 3 (Appendix A3) 

13) பின் இணைப்பு A - பாகம் 4 (Appendix A4)


1 கருத்து:

selvakumar சொன்னது…

mikka nandri thangal PJ virku alikum badhilga arumai friend praise tha lord