குர்ஆனின் இன்னொரு இலக்கண பிழை
"நாங்கள் இறைத்தூதர் தான்"
ஆசிரியர்கள்: அந்தோனி ரோகர்ஸ் & சாம் ஷமான்
தான் ஒரு இறைத்தூதர் என்றும், தீர்க்கதரிசி என்றும், அல்லாஹ்வின் அப்போஸ்தலர் என்றும் சுயபிரகடனம் செய்துக்கொண்ட முஹம்மதுவின் நபித்துவத்திற்கு கொடுக்கப்பட்ட ஒரே அற்புதம் "குர்ஆன்" மட்டும் தான் என்று இஸ்லாமியர்கள் சொல்வதை அனைவரும் அறிவோம். "குர்ஆன் எந்த ஒரு பிழைக்கும் அப்பாற்பட்டது, எந்த ஒரு இலக்கண பிழைக்கும் அப்பாற்பட்டது" என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள், இதனால் தான் மேற்கண்ட வாதத்தை முன்வைக்கிறார்கள். ஆனால் இந்த கட்டுரைகளை (1, 2, 3, 4, 5, 6) நாம் படிப்போமானால், இஸ்லாமியர்களின் இந்த வாதம் பொய்யானாது என்பது விளங்கும்.
இதன் வரிசையில் குர்ஆன் 26:16ம் வசனத்தில் இன்னொரு இலக்கண பிழையை நாம் காணலாம்.
முதலில் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மற்றும் முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியிட்ட தமிழாக்கங்களிலிருந்து இவ்வசத்தை காண்போம்.
குர்ஆன் 26:16
ஃபிர்அவ்னிடம் சென்று "நாங்கள் அகிலத்தின் இறைவனுடைய தூதர்களாவோம் ....." (பீஜே தமிழாக்கம்)
குர்ஆன் 26:16
ஆதலின் நீங்கள் இருவரும் ஃபிர் அவ்னிடம் செல்லுங்கள்; அவனிடம் கூறுங்கள்: "நிச்சயமாக நாங்களிருவரும் அகிலத்தாருடைய இறைவனின் தூதர்கள் ..." . (முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீடு தமிழாக்கம்)
இந்த வசனத்தை இஸ்லாமியர்களால் மொழியாக்கம் செய்யப்பட்ட அனேக ஆங்கில மொழியாக்கங்களிலிருந்து படிக்கலாம்.
And both of you approach Pharaoh and say: We are the Messengers of the Lord of the worlds, - Dr. Laleh Bakhtiar
Go to Pharaoh, both of you, and say, We are messengers from the Lord of the Worlds: - Wahiduddin Khan
Go to Pharaoh and say: " We are messengers from the Lord of the Universe. – T. B. Irving
"So both of you go to Pharaoh and Say: " We are messengers of the Lord of the worlds" – Progressive Muslims
So go ye twain unto Fir'awn and say: verily we are the apostles of the Lord of the Worlds, - Abdul Majid Daryabadi
So approach Pharaoh and say, '' We are indeed envoys of the Lord of the worlds – Ali Quli Qarai
They came to the Pharaoh and said, " We are the Messengers of the Lord of the Universe. – Muhammad Sarwar
So go, both of you, to Pharaoh and say, ' We both are messengers of the Lord of all the worlds, - Muhammad Taqi Usmani
Go together to Pharaoh and say, " We are Messengers from the Lord of the Worlds." – Shabir Ahmed
"So both of you, go forth to Firon (Pharaoh), and say: ' We are the messengers of the Lord (and Cherisher) of the Worlds (Rab-ul-'Ala'meen); - Syed Vickar Ahamed
Go to Pharaoh and say, ' We are the messengers of the Lord of the worlds, - Umm Muhammad (Sahih International)
Go to Pharoah and tell him: " We are the Messengers from the Lord of the Worlds. – Farook Malik
So go to the pharaoh and say, " We are the messengers of the Lord of the entire universe." – Dr. Munir Munshey
So go both of you to Pharaoh and say: We are the Messengers (sent) by the Lord of all the worlds. – Tahir-ul-Qadri Mohammed
"Therefore approach Firaun then proclaim, ' We both are Noble Messengers of the Lord Of The Creation.' – Faridul Haque
"Go to Pharaoh and say, ` We are messengers from the Lord of the universe.' – Rashad Khalifa
`So go to Pharaoh and say, ` We are the Messengers of the Lord of the Worlds – Sher Ali
"And when you both come to Firaun (Pharaoh), say: We are the Messengers of the Lord of the Alameen (mankind, jinns and all that exists), - Hilali & Khan
மேலே உள்ள ஆங்கில மொழியாக்கங்களை படிக்கும்போது அவைகள் இலக்கணப்படி சரியாக இருப்பது போல் காணப்படுகிறது. ஆனால், இன்னுமுள்ள இதர இஸ்லாமியர்கள் செய்த ஆங்கில மொழியாக்கங்களை படிக்கும்போது, இந்த மொழியாக்கம் செய்பவர்கள் ஏதோ ஒன்றை நம்மிடமிருந்து மறைக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இப்போது இன்னுமுள்ள இதர இஸ்லாமியர்கள் செய்த ஆங்கில மொழியாக்கங்களை கீழே காண்போம்.
And go, both of you, unto Pharaoh and say, 'Behold, we bear a message from the Sustainer of all the worlds: - Muhammad Asad
And come together unto Pharaoh and say: Lo! we bear a message of the Lord of the Worlds, - M. M. Pickthall
Go, both of you, to Pharaoh and say, "We bring a message from the Lord of the Worlds: - Abdel Haleem
"So go, both of you, to the Pharaoh and say: 'We have come with a message from the Lord of the worlds (He Who has created and sustains everything): - Ali Unal
"And go to Pharaoh and say, ´Verily, we bear a message from the Lord of the Worlds - (v. 17) Hamid S. Aziz
Go to the Pharaoh and tell him: 'We bring a message from the Lord of all the worlds – Muhammad Ahmed Samira
இப்போது நாம் மேலே கண்ட ஆங்கில மொழியாக்கங்களை பார்க்கும் போதும் இலக்கணப்படி அவைகள் சரியானதாக இருக்கிறது. ஆனால், இவர்களோடு நாம் முதலில் பதித்த ஆங்கில மொழியாக்கங்களை ஒப்பிட்டால் இரண்டு வித்தியாசங்களைக் காணலாம். அதாவது இரண்டாவதாக நாம் கண்ட மொழியாக்கத்தில் "தூதர்கள்" என்ற பெயர்ச்சொல்லை "தூது" என்று மாற்றியுள்ளார்கள். மற்றும் இரண்டாவது மாற்றம் என்னவென்றால், "பன்மையை" ஒருமையாக மாற்றியுள்ளார்கள் ("தூதர்கள் என்பதற்கு பதிலாக தூது" என்று ஒருமையாக மாற்றியுள்ளார்கள்).
மேலும், குர்ஆனை மொழியாக்கம் செய்த இஸ்லாமியர்களில் இன்னொரு குழுவும் உள்ளது, இவர்களும் குர்ஆன் வசனத்தை சரியான இலக்கணத்தோடு மொழியாக்கம் செய்துள்ளார்கள். ஆனால், இவர்கள் இன்னொரு மாற்றத்தையும் செய்துள்ளார்கள், அதாவது மேலே கண்ட முதலாவது குழு மற்றும் இரண்டாவது குழு செய்த மாற்றங்களை ஒன்றாக கலந்து இவர்கள் மொழியாக்கம் செய்துள்ளார்கள். இப்படி இவர்கள் எல்லாரும் செய்வதினால், இந்த வசனத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது? என்று நாம் ஆச்சரியத்தோடு கேள்வி கேட்கும் படி உள்ளது மற்றும் யார் மூல குர்ஆனுக்கு இணையான மொழியாக்கத்தை செய்கிறார்கள் என்று நம்மை தேட வைக்கிறது. இந்த மூன்றாவது குழுவின் மொழியாக்கத்தை கீழே காண்போம்.
"And so, both of you go to Pharaoh and say to him:" "We are bearers of the divine message sent by Allah, Creator of the worlds, the visible and the invisible, past, present and those to come", - Al-Muntakhab
`Go to Pharaoh both of you and say, "We are bearers of a Message from the Lord of the worlds. – Ahamtul Rahman Omar
Then come to Pharaoh, and say: We are bearers of a message of the Lord of the worlds: - Maulana Muhammad Ali
கடைசியாக, இன்னொரு குழுவும் இருக்கிறது, இவர்கள் செய்த ஆங்கில மொழியாக்கம் உண்மையிலேயே அந்த வசனத்தில் உள்ள பிரச்சனையை நமக்கு காட்டுகிறது. ஏன் மேலே கண்டவர்கள் பல வகையாக மொழியாக்கம் செய்துள்ளார்கள்? என்பது இப்போது புரிய ஆரம்பிக்கிறது. இப்போது இந்த குழு செய்த மொழியாக்கத்தைப் படிப்போம்:
Go to Pharaoh and say, "We are the Messenger of the Lord of all the worlds – Aisha Bewley
So come up to Firaawn, then say (to him), "We (both) are the Messenger of The Lord of the worlds; - Muhammad Mahmoud Ghali
When you see Pharaoh, tell him: "We are the Lord's Messenger for all His intelligent beings." – Bijan Moeinian
go both to Pharaoh and both of you say to him: 'We are (each) a Messenger from the Lord of all the Worlds. – Hasan Al-Fatih Qaribullah
ஜியார்ஜ் சேல் என்ற இந்த இஸ்லாமியரல்லாதவர் இவ்வசனத்தை கீழ்கண்ட விதமாக மொழியாக்கம் செய்கிறார்.
Go ye therefore unto Pharaoh, and say, verily we are the apostle of the Lord of all creatures:
நாம் காண்பது போல, கடைசியாக மொழியாக்கம் செய்தவர்களின் மொழியாக்கம் இலக்கணத்தின் படி தவறான ஒன்றாகும். இந்த இலக்கண பிழையை சரி செய்ய ஹசன் அல்பதி கரிபுல்லாஹ் என்பவர் அடைப்பு குறிக்குள் "ஒவ்வொருவரும் (each) " என்ற வார்த்தையை சேர்த்து, அந்த இலக்கண பிழையை சரி செய்துள்ளார்.
இந்த விடுகதைக்கு பதில் (இதனை நாம் பதில் என்று அழைக்க விரும்பினால்), நாம் இந்த வசனத்தின் அரபி மூலத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.
Transliteration:
Fatiya firAAawna fa-qoola inna rasoolu rabbi alAAalameena
ஃபதிய ஃபிர்அவ்ன ஃப-கூல இன்ன ரசூலு ரப்பி அல்ஆலமீன
மேலேயுள்ள வசனத்தில், "ஃபதிய" மற்றும் "கூல" என்ற வினைச்சொற்கள், "இருமை(dual form)" வடிவில் உள்ளது, ஆகையால் அது இருவரை குறிப்பிடுகிறது. ஆனால், "இன்ன" என்றச் சொல்லானது "பன்மையில்" உள்ளது. இந்த இடத்தில் இருமையை பயன்படுத்துவது சரியான ஒன்றாகும், ஏனென்றால், மோசே மற்றும் ஆரோன் என்ற இருவரையும் இது குறிப்பிடுகிறது, பார்வோனிடம் சென்று இஸ்ரவேலர்களை அனுப்பிவிடும்படி கேட்கும் படி இவ்விருவரும் கட்டளையிடப்படுகிறார்கள்.
ஆனால், "தூதர்" என்ற வார்த்தை, அரபியில் "ரசூலு" என்று இவ்வசனத்தில் வருகிறது, இந்த வார்த்தை ஒரு பெயர்ச்சொல்லாகும் மற்றும் ஆண்பாலாகும். மட்டுமல்ல, இது "ஒருமையில்" கூறப்பட்டுள்ளது. ரசூலு என்ற வார்த்தை மோசே மற்றும் ஆரோன் இருவருக்கும் சேர்த்து பயன்படுத்தப்பட்டு இருந்த போதிலும், இது "ஒருமையில்" கூறப்பட்டுள்ளது.
இந்த வசனத்தை நாம் அப்படியே வார்த்தைக்கு வார்த்தை மொழியாக்கம் செய்தால், இந்த மூல அரபி வசனத்தில் உள்ள இலக்கண பிழை தெரியவரும், இதனை கீழ்கண்ட வாறு மொழியாக்கம் செய்யவேண்டும்.
Both of you go to Pharaoh and both of you say: "We are the messenger of the Lord of the worlds."
நீங்கள் இருவரும் பார்வோனிடம் செல்லுங்கள், மற்றும் நீங்கள் இருவரும் கூறுங்கள் "நாங்கள் அகிலத்தை படைத்த இறைவனின் தூதர் ".
"ரசூலு" என்ற வார்த்தைக்கு பதிலாக "ரசூல" என்று "இருமை வடிவில்" (dual form) மாற்றியிருந்தால், இந்த இலக்கண பிழை வந்திருக்காது. இப்படி இருந்தபோதிலும், வேறு ஒரு இடத்தில் இந்த வார்த்தைகளை குர்ஆன் சரியாகச் பயன்படுத்தியுள்ளது மற்றும் இந்த வசனமும் மோசே மற்றும் ஆரோனை பார்வோனிடம் அனுப்புவது பற்றியே பேசுகிறது.
"ஆகவே, நீங்கள் இருவரும் அவனிடம் சென்று: 'நாங்களிருவரும் உன்னுடைய இறைவனின் தூதர்கள் , பனூ இஸ்ராயீல்களை எங்களுடன் அனுப்பி விடு, மேலும் அவர்களை வேதனை படுத்தாதே, திடனாக, நாங்கள் உன் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை உனக்குக் கொண்டு வந்திருக்கிறோம், இன்னும் எவர் நேர் வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் மீது (சாந்தி) ஸலாம் உண்டாவதாக' என்று சொல்லுங்கள்" (என்று அல்லாஹ் கட்டளையிட்டான்). (20:47 முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியீடு)
`So go ye both to him and say, `We are the Messengers of thy Lord; so let the Children of Israel go with us; and torment them not. We have, indeed, brought thee a great Sign from thy Lord; and peace shall be on him who follows the guidance; S. 20:47, Sher Ali
Transliteration:
Fatiyahu fa-qoola inna rasoola rabbika ...
ஃபதியஹு ஃப-கூல இன்ன ரசூல ரப்பிக ….
மேற்கண்ட விவரங்களோடு இந்த இரகசியம் வெளிப்பட்டுவிட்டது: பல மொழிப் பெயர்ப்பாளர்களின் மொழியாக்கங்களில் நிலவிய வித்தியாசங்கள் மற்றும் குழப்பங்களுக்கெல்லாம் காரணம் என்னவென்றால், அரபி மூல குர்ஆனின் வசனத்தில் நிலவிய இலக்கண பிழையாகும். இதனை சரி செய்வதற்கு அல்லது இலக்கண பிழையை மூடி மறைப்பதற்கு இஸ்லாமியர்கள் மேற்கொண்ட முயற்சியின் பலன் தான் அனேக வித்தியாசங்களோடு கூடிய மொழியாக்கங்கள். மூல அரபி குர்ஆனில் உள்ளது போல மொழியாக்கம் செய்தால், அது இலக்கண பிழையோடு அமைந்துவிடும், ஏனென்றால் மூலத்திலேயே இலக்கண பிழை இருக்கிறது. ஒரு அறைகுறையாக படித்த ஒரு நபரிடம் நாம் எதிர்ப்பார்க்க முடிந்ததெல்லாம் இப்படிப்பட்ட பிழையுள்ள ஒரு வெளிப்பாடுகளாகத் தானே இருக்கமுடியும். சர்வஞானம் படைத்த இறைவனின் நேரடி பேச்சை இப்படிப்பட்ட ஒரு அறைகுறை மனிதனிடம் எதிர்ப்பார்க்க முடியுமா?
மேலும் அறிய படிக்கவும்:
குர்ஆன் மொழியாக்கங்களில் பொதிந்துள்ள மூல குர்ஆனின் குழப்பங்கள்.
அந்தோனி ரோகர்ஸ் அவர்களின் இதர கட்டுரைகள்
ஆங்கில மூலம்: "Don't Shoot Us, We Are Just the Messenger" - Another Grammatical Mistake in the Qur'an
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக