திருடர்களின் கைகள் பற்றி இஸ்லாமும் கிறிஸ்தவமும் (The Hands of Thieves)
ஆசிரியர் : ராபர்ட் ஸீவர்ஸ்
தமிழாக்கம்: தமிழ் கிறிஸ்தவர்கள்
நான் எவ்வளவு அதிகமாக இஸ்லாமையும், கிறிஸ்தவத்தையும் அறிந்துக்கொள்கிறேனோ, அவ்வளவு அதிகமாக இவ்விரு மார்க்கங்களின் இடையே இருக்கும் வித்தியாசங்களை கண்டு ஆச்சரியப்படுகிறேன். சில வித்தியாசங்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது, சில வித்தியாசங்கள் நம் கண்களை திறக்கின்றனவாக உள்ளது. மேலும் சில வித்தியாசங்களை சிறிது ஆய்வு செய்வதின் மூலமே கண்டுபிடித்துவிடலாம். தற்போதைய கட்டுரை, இந்த மூன்றாம் வகையில் சார்ந்ததாக உள்ளது.
ஷரியா சட்டம் என்பது இஸ்லாமினால் உருவாக்கப்பட்ட சட்டமாகும். இந்த ஷரியா சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் நாட்டுக்கு நாடு வித்தியாசப்பட்டாலும், இஸ்லாமியர்களின் படி, ஷரியா என்பது அல்லாஹ்வின் சட்டமாகும். அதாவது அல்லாஹ்வினால் கொடுக்கப்பட்ட மனிதர்களால் மாற்றக்கூடாத சட்டமாகும். சௌதி அரேபியாவின் ரியாத் பட்டணத்தில் ஒரு முஸ்லிம் அனுபவிக்கும் ஷரியா சட்டமும், இஸ்தான்புல் பட்டணத்தில் வேறு ஒரு முஸ்லிம் அனுபவிக்கும் ஷரியா சட்டமும் சிறிது வேறுபட்டு இருக்கும். ஷரியா சட்டத்தை முழுவதுமாக அறிந்து க்கொள்ள நமக்கு அதிக நேரம் தேவைப்படும். ஷரியாவின் அடிப்படையாக, குர்-ஆனில் சில சட்டங்களைக் காணலாம். அதாவது ஒரு நல்ல சமுதாயம் எப்படி இருக்கவேண்டும் என்றுச் சொல்லி, குர்-ஆன் சில கட்டளைகளை/சட்டங்களை கொடுத்துள்ளது. இந்த சட்டங்களின் ஒரு விஷயத்தைப் பற்றி நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
திருடுபவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கவேண்டும்? என்று குர்-ஆன் 5:38ல் விளக்கப்பட்டுள்ளது:
திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான் (குர்-ஆன் 5:38).
இந்த தண்டனையை தவிர்ப்பதற்கான அனேக காரணங்கள் ஹதீஸ்களில் கொடுக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு, திருடுபவன் புத்திசுயாதீனமில்லாதவனாக இருந்தால், அல்லது திருடப்பட்ட பொருள் ஒரு குறிப்பிட்ட விலைக்கு குறைவானதாக இருந்தால், கைகளை வெட்டாமல் குறைந்த தண்டனை கொடுக்கப்படும். அனேக இஸ்லாமிய அறிஞர்கள் தங்களின் நேரத்தை செலவழித்து, "கைகளை வெட்டும் தண்டனை என்பது நியாயமானது தான்" என்றுச் சொல்லி, அதனை நியாயப்படுத்த அனேக விளக்கங்களை தருகின்றனர். மேலும், மேலே சொல்லப்பட்டது போல, சில விதிவிலக்குகளைச் சொல்லி, இந்த தண்டனையை நியாயப்படுத்துகின்றனர். மேலும் இந்த தண்டனையினால் உண்டாகும் விளைவைவிட (கைகள் வெட்டப்பட்டவன் படும் அல்லல்கள்), இந்த தண்டனையினால் சட்ட ஒழுங்கு சீர்படும் என்றும் இவர்கள் சொல்கிறார்கள். இந்த சட்டத்தின் பின்னணி எதுவாக இருந்தாலும், எப்படிப்பட்ட விதிவிலக்குகளை கொடுத்தாலும், தெரிந்து செய்யும் திருட்டுக்கு, குர்-ஆன் கைகளை வெட்டுதலை தண்டனையாக கொடுத்துள்ளது என்பதை யாரும் மறுக்கமுடியாது.
குர்-ஆன் வசனத்தை மட்டும் தனியாக எடுத்து விளக்காமல், அதற்கு சான்றாக மேலதிக விளக்கத்தையும் நான் தரவிரும்புகிறேன். இந்த வசனம் பற்றி முஹம்மது கூறிய ஒரு ஹதீஸை (விளக்கத்தை) இப்போது காண்போம். குர்-ஆன் விரிவுரையாளராகிய இப்னு கதீர் என்பவரின் விளக்கத்தின் படி, இந்த தண்டனையைக் குறித்து முஹம்மது தாமே கீழ்கண்டவாறு கூறியதாக காண்கிறோம்.
"By Him in Whose Hand is my soul! If Fatimah the daughter of Muhammad stole, I will have her hand cut off." [i]
"என் உயிர் எவன் வசம் உள்ளதோ, அவன் மீது ஆணையாக, முஹம்மதுவின் மகள் ஃபாத்திமா திருடினாலும், அவளது கைகளை நான் வெட்டச் செய்வேன்" [1].
இதுவரை கண்ட விவரங்களை பார்த்தபிறகு, அனேக இஸ்லாமியர்கள் "இந்த தண்டனை என்பது நியாயமானது தான்" என்று வாதிக்க முற்படுவார்கள், ஒரு நல்ல சமுதாயத்திற்கு இப்படிப்பட்ட கட்டளைகள் தேவை என்றுச் சொல்வார்கள். ஒரு பேச்சுக்காக நாம் இஸ்லாமியர்கள் கூறுவதை சரியானது என்றே வைத்துக்கொள்வோம். சமுதாயத்திற்கு இந்த கட்டளை நல்லதைச் செய்கிறது என்றே வைத்துக்கொண்டு மேலும் சில விவரங்களை இப்போது காண்போம். இந்த திருட்டு பற்றி பைபிள் என்ன கூறுகிறது? குர்-ஆன் கூறும் தண்டனையையும், பைபிள் சொல்லும் விவரத்தையும் ஒப்பிடும் போது, பைபிளின் தேவன் எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதை அறியமுடியும்? இவைகளை சுருக்கமாக காண்போமா?
புதிய ஏற்பாட்டின் எபேசியருக்கு எழுதின கடிதத்தில், 4:28ம் வசனம் திருடர்கள் என்னசெய்யவேண்டும் என்று அவர்களுக்கு கட்டளையிடுகிறது?
திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன். (எபேசியர் 4:28)
He who steals must steal no longer; but rather he must labor, performing with his own hands what is good, so that he will have something to share with one who has need.
முதலாவதாக, திருடுகிறவர்கள் திருடுவதை நிறுத்தவேண்டும் என்று மேற்கண்ட வசனம் கூறுகிறது. மேலும் திருடுகிறவன் தன் இரண்டு கைகளாலும் (கவனிக்க பன்மை) உழைத்து மற்றவர்களுக்கு உதவி செய்யவேண்டும். எந்த திருடன் தன் இரண்டு கைகளை பயன்படுத்தி திருடினானோ, மற்றவர்களின் பொருட்களை அபகரித்தானோ, அதே கைகளை பயன்படுத்தி அவன் இப்போது கடினமாக உழைக்கவேண்டும். அவன் பணத்தை சம்பாதிக்கவேண்டும், அந்த சம்பாதித்த பணத்தைக் கொண்டு மற்றவர்களுக்கு உதவவேண்டும். திருட்டுத் தனத்திற்கு தண்டனை கொடுக்கும் சமுதாயத்தில் இரண்டு வகையான விஷயங்கள் தண்டனையாக கொடுக்கப்படும், முதலாவது அவன் திருடிய பொருட்களை திருப்பித் தரவேண்டும், இன்னும் அதிகமாக செலுத்தவேண்டும், மேலும் அவனுக்கு தண்டனையாக சில நாட்கள்/மாதங்கள்/வருடங்கள் சிறையில் போடவேண்டும். அவன் செய்த குற்றத்திற்கு ஏற்றது போல, இந்த தண்டனைகள் மாற்றமடையும். கடைசியாக, அவன் பணத்தை செலுத்திய பின்பு, சிறைத்தண்டனையை அனுபவித்த பின்பு, அவன் சமுதாயத்திற்கு பாரமாக இருக்காதபடி, அவன் விடுதலையாக வேண்டும். எந்த கைகளால் அவன் திருடினானோ, பாவம் செய்தானோ அந்த கைகளால் அவன் உழைத்து வாழவேண்டும், சமுதாயத்திற்கு அவன் பாரமாக இருக்கக்கூடாது. ஒரு வேளை திருட்டுத்தனத்திற்கு அவன் கைகளை சட்டம் வெட்டிவிட்டால், அவன் வாழ்நாள் முழுவதும் அவன் சார்ந்த சமுதாயத்திற்கு பாரமானவனாக மாறிவிடுகின்றான். இந்த துள்ளியமான விஷயத்தில் பைபிளின் தேவன் எப்படி செயல்பட்டுள்ளார் என்பதை கவனியுங்கள். மனிதர்கள் பற்றி தேவன் எப்படிப்பட்ட செயல்திட்டத்தை வைத்துள்ளார் என்பதை கவனியுங்கள்.
தேவனின் பொதுவான திட்டமென்னவென்றால், "இருதயத்தின் படி பாவிகளாகிய நாம்" அனைவரும் அவரது இராஜ்ஜியத்திற்காக உழைக்கவேண்டும், நல்ல காரியங்களைச் செய்யவேண்டும் என்று அவர் விரும்புகிறார். இது அவருடைய சிறப்பான திட்டமாகும். நாம் கடந்த காலத்தில் செய்த பாவமானது (உதாரணத்திற்கு திருடுவது), எதிர்காலத்தில் தேவன் மீது நாம் அன்புகூர்ந்து, நாம் தேவனுக்காக செய்யக்கூடிய நற்காரியங்கள் செய்ய தடுக்குமானால், எந்த ஒரு மனிதனும் இறைவனுக்கு உபயோகமுள்ள மனிதனாக மாறமுடியாது. எல்லாருக்கும் மிகவும் கடுமையான தண்டனைகளை கொடுத்துவிட்டால், இந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் தேவனுடைய இராஜ்ஜிய வேலையை நற்காரியங்களை எதிர்காலத்தில் செய்யமுடியாமல் போகும்.
ஆனால், தேவனுக்கு நாம் நன்றிச் சொல்லவேண்டும். எந்த நாவுகள் அவரைப் பற்றி தூஷணமாக பேசியதோ, அதே நாவுகள் அவரை புகழ்வதை நாம் அடிக்கடி காணமுடியும். எந்த உள்ளங்களின் எண்ணங்கள் தீயவைகளாக இருந்ததோ, அந்த உள்ளங்கள் மனந்திரும்பி, அவரது இராஜ்ஜியத்திற்காக உழைக்க ஆரம்பித்துள்ளது. தீமை செய்ய ஓடிய கால்கள், இப்போது இதர மக்களுக்கு நன்மைகளை செய்ய ஓடுகின்றன, உழைக்கின்றன. இதே போல, கடந்த காலத்தில் திருட்டுத் தனத்தில் ஈடுபட்ட கைகளை வெட்டிவிட்டு, அவன் மூலமாக எதிர்காலத்தில் எந்த ஒரு நல்ல செயல்களையும் செய்யவிடாமல் இருக்க தேவன் விரும்பவில்லை. அதற்கு பதிலாக, ஒரு காலத்தில் திருடினாலும், அந்த தீய செயலை விட்டுவிட்டு, தங்கள் கரங்களால் உழைத்து மற்றவர்களுக்கு உபயோகமானவர்களாக மக்கள் இருக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
பாவம் செய்த கடந்த கால கைகள், எதிர்காலத்தில் இதர மக்களுக்கு உதவும் படி உழைக்கும் கைகளாக மாறவேண்டும் என்று கிறிஸ்தவம் எதிர்ப்பார்க்கிறது. ஆனால், இஸ்லாமோ, அந்த கைகளை வெட்டச் சொல்கிறது. இது 100 சதவிகிதம் கிறிஸ்தவத்திற்கு எதிராக உள்ளது. நீங்களே சிந்தித்துப் பாருங்கள், எது சரியானது? கைகளை வெட்டிவிட்டு, அந்த நபர் சமுதாயத்திற்கு பாரமாக வாழ்நாள் முழுவதும் இருப்பதா? அல்லது திருந்திவிட்டு, அதே கைகளால் சமுதாயத்திற்கு உதவுவதா? பைபிளின் தேவனா அல்லது குர்-ஆனின் அல்லாஹ்வா?
திருடர்களின் கைகள் பற்றி இந்த தெய்வங்கள் கொண்டு இருக்கும் எண்ணங்களே, இவர்கள் உண்மையான தெய்வங்களா இல்லையா என்பதை புரிந்துக் கொள்ளலாம்.
பின் குறிப்புகள்
[i] http://www.quran4u.com/Tafsir%20Ibn%20Kathir/PDF/005%20Mai'dah.pdf
ஆங்கில மூலம்: The Hands of Thieves
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக