முதல் மனைவியின் அனுமதியுடன் தான் முஸ்லிம்கள் இரண்டாவது திருமணம் செய்துக் கொள்கிறார்களா?
முன்னுரை:
தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்தில் ஒரு சகோதரர் கீழ்கண்ட கேள்வியை முன்வைத்தார்.
சகோதரரே முதல் மனைவியின் அனுமதியுடன்தான் ஒரு இஸ்லாமியன் அடுத்த திருமணங்களை செய்ய முடியும் என்று சொல்கிறார்கள். முதல் மனைவியின் அனுமதியில்லாம் செய்தால் அது இஸ்லாமிய சட்டப்படி குற்றமாம். இதன் உண்மைத்தன்மையை பற்றி விளக்க முடியுமா? (மூலம்: http://www.tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=38&topic=2643&Itemid=287)
இப்படிப்பட்ட கேள்விகளை பீஜே போன்ற இஸ்லாமிய அறிஞர்களிடம் கேட்கவேண்டும். இவர்கள் இதற்கு நேரடியாக "ஆம்" அல்லது "இல்லை" என்றுச் சொல்லாமல், மக்களை தெளிவாக குழப்புவார்கள். யாராவது பீஜே அவர்களிடம் இந்த கேள்வியை கேட்பார்களா?
இக்கட்டுரையின் தலைப்புகள்:
1) குர்-ஆனின் வரையறை: குர்-ஆன் 4:3
2) முஹம்மதுவின் மகள் "பாத்திமா" அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி:
3) முஹம்மது எப்படி நடந்துகொண்டார்?
4) தனக்கு சக்காளத்தி வருவதை எந்த பெண் தான் விரும்புவாள்:
5) மனைவியை விடுங்கள், செக்ஸ் அடிமைகள் பற்றி குர்-ஆன் என்ன சொல்கிறது?
6) எல்லாவற்றிலும் விதிவிலக்குகள் உண்டு:
முடிவுரை:
இப்போது இந்த கட்டுரையின் கேள்விக்கு வருவோம்.
1) குர்-ஆனின் வரையறை: குர்-ஆன் 4:3
அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்! (மனைவியரிடையே) நீதியாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!). இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி. (பீஜே தமிழாக்கம்)
இந்த வசனத்தின் படி, ஒரு இஸ்லாமிய ஆண் நான்கு திருமணம் செய்துக்கொள்ள அனுமதி பெறுகிறான். இந்த வசனத்திலோ அல்லது குர்-ஆனின் இதர வசனங்களிலோ, எங்கும், முதல் மனைவியின் அனுமதி பெற்று தான் ஒரு முஸ்லிம் இரண்டாவது, மூன்றாவது அல்லது நான்காவது திருமணம் செய்யவேண்டும் என்று சொல்லப்படவில்லை.
குர்-ஆன் அனுமதிக்காத ஒன்றை, முஸ்லிம்கள் செய்யமாட்டார்கள். அதாவது நான்கு திருமணங்கள் பற்றி அல்லாஹ் கட்டளையிட்டு இருக்கும் போது, அதைச் செய்யலாமா செய்யக்கூடாதா என்று மனிதர்களிடம் முக்கியமாக தன் முதல் மனைவியிடம் கேட்டு செய்யமாட்டார்கள் இஸ்லாமியர்கள்.
ஆக, இதன் அடிப்படையில் பார்த்தால், ஒரு முஸ்லிமுக்கு அடுத்தடுத்து திருமணம் செய்ய, முதல் மனைவியின் அனுமதி தேவையில்லை என்பது விளங்கும்.
இப்போது ஹதீஸ்களிலிருந்து ஒரு எடுத்துக்காட்டை காண்போம்.
2) முஹம்மதுவின் மகள் "பாத்திமா" அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சி:
முஹம்மதுவின் அன்பான மகள் பாத்திமா அவர்களின் கணவர் அலி என்பவர் இரண்டாவது மனைவியை திருமணம் செய்ய முடிவு செய்தார். இதனை அறிந்த பாத்திமா வேதனை அடைந்து, தன் கணவரின் இந்த முடிவு பற்றி தம் தந்தையிடம் முறையிடுகிறார்கள். உடனே, முஹம்மது இதற்கு மறுப்புச் சொல்கிறார். அலி அவர்களும் தன் மாமனாரின் (இஸ்லாமிய நபி) மீது வைத்த மரியாதையின் காரணமாக, தன் முடிவை மாற்றிக்கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியை சித்தரிக்கும் புகாரி ஹதீஸை நாம் இப்போது படிப்போம்.
பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3729
மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்
அலீ(ரலி) (ஃபாத்திமா இருக்கவே,) அபூ ஜஹ்லுடைய மகளை (இரண்டாம் தாரமாக மணம் புரிந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். அதைப் பற்றி ஃபாத்திமா(ரலி) கேள்விப்பட்டார்கள். உடனே அவர்கள் (தம் தந்தையான) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, '(தந்தையே!) உங்கள் சமுதாயம் உங்களுடைய மகள்களுக்காக (அவர்கள் மனத்துன்பத்திற்கு ஆளாக்கப்படும் போது) நீங்கள் கோபம் கொள்ளமாட்டீர்கள். என்று கருதுகிறது. (உங்கள் மருமகனும் என் கணவருமான) இந்த அலீ, அபூ ஜஹ்லுடைய மகளை மணக்கவிருக்கிறார்" என்று கூறினார்கள். உடனே, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள், (உரையாற்ற) எழுந்தார்கள். அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, 'நிற்க, அபுல் ஆஸ் இப்னு ரபீஉவை (என் மூத்த மகள் ஸைனபுக்கு) மணம் முடித்து வைத்தேன்.
அவர் என்னிடம் (தன் மனைவியைத் திருப்பி அனுப்பி விடுவதாக வாக்களித்துப்) பேசினார்; (பேசியபடி) வாய்மையுடன் நடந்து கொண்டார். ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். எவரும் அவருக்குத் துன்பம் தருவதை நான் வெறுக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய மகளும் அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் ஒரே மனிதரிடம் ஒன்று சேர முடியாது. என்று கூறினார்கள்.எனவே, அலீ(ரலி) (அபூ ஜஹ்லுடைய மகளைப்) பெண் பேசுவதைவிட்டுவிட்டார்கள். . . . . . .
இதே விவரம் அடங்கிய இந்த ஹதீஸையும் காண்க: பாகம் 3, அத்தியாயம் 57, எண் 3110
இந்த நிகழ்ச்சியின் படி நாம் அறிவது என்னவென்றால், முஹம்மதுவின் மருமகனாகிய அலி அவர்கள், தன் மாமனாரின் மனதுக்கு துக்கம் வரக்கூடாது என்பதற்காக, தனது இரண்டாவது மனைவி தேடுதலை விட்டுவிட்டார். இங்கு கவனிக்க வேண்டிய விஷயம், "தன் முதல் மனைவியின் அனுமதியின்றி, அலி அவர்கள் இரண்டாம் திருமணம் செய்ய முயற்சி எடுத்துள்ளார்கள். வேறு வகையில் சொல்லவேண்டுமென்றால், பாத்திமாவின் விருப்பத்திற்கு எதிராகவும், அவர்கள் துக்கம் அடையும் விதமாகவும் செயல்பட்டுள்ளார்.
[இதே அலி அவர்கள், பாத்திமா இறந்த பிறகு மேலும் ஆறுக்கும் அதிகமான பெண்களை திருமணம் செய்துள்ளார், அடிமைப்பெண்களை வைப்பாட்டிகளாக வைத்திருந்தார்.]
ஆக, முஹம்மதுவின் மகள் பாத்திமாவிற்கே இந்த நிலையென்றால், மற்றவர்களின் நிலை எப்படி இருக்கும்.
ஒரு முஸ்லிம் தன் முதல் மனைவியின் அனுமதி இல்லாமலேயே அடுத்தடுத்த திருமணம் செய்கிறார், இது தான் உண்மை.
3) முஹம்மது எப்படி நடந்துக்கொண்டார்?
குறைந்தபட்சம் முஹம்மதுவாவது அடுத்தடுத்து திருமணங்கள் செய்த போது, தன்னுடைய முந்தைய மனைவிமார்களின் அனுமதி பெற்று தான் திருமணங்கள் செய்தாரா? இதற்கும் பதில் "இல்லை" என்பதாகும்.
முஹம்மது தம் முதல் மனைவி, கதிஜா அவர்கள் உயிரோடு இருக்கும் வரைக்கும், இரண்டாவது திருமணம் செய்துக்கொள்ளவில்லை. அவர்கள் மரணித்த பிறகு 10க்கும் அதிகமான பெண்களை திருமணம் செய்துக்கொண்டார். அனேக பெண்களை அடிமைகளாக வைப்பாட்டிகளாக வைத்திருந்தார்.
முஹம்மது சௌதா அவர்களை திருமணம் செய்த போது, கதிஜா அவர்கள் ஏற்கனவே மரித்துவிட்டார்கள். ஆனால், முஹம்மது ஆயிஷாவை திருமணம் செய்த போது, சௌதாவிடம் அனுமதி கேட்டு, அவர்கள் அனுமதி கொடுத்த பிறகு தான் திருமணம் செய்தார்களா? இதற்கு பதில் "இல்லை" என்பதாகும்.
அதே போல, அடுத்தடுத்த திருமணங்கள் செய்தபோது, அவர் முந்தைய மனைவிமார்களின் அனுமதி பெற்றுத் தான் செய்தாரா? இதற்கும் பதில் இல்லை என்பதாகும்.
ஆக, முஹம்மது தன் சொந்த வாழ்விலும் செய்யாத ஒன்றை, எப்படி இஸ்லாமியர்கள் பின்பற்றுவார்கள்?
4) தனக்கு சக்காளத்தி வருவதை எந்த பெண் தான் விரும்புவாள்:
இஸ்லாமிய பெண்கள் மட்டுமல்ல, உலகில் எந்த பெண்ணாக இருந்தாலும் சரி, தன் கணவனின் படுக்கையை, அன்பை, பகிர்ந்துக்கொள்ளும் இன்னொரு பெண்ணை அனுமதிக்கமாட்டாள்.
முஹம்மது தன் முந்தைய மனைவியின் அனுமதி பெற்று தான் அடுத்த திருமணம் செய்ய விரும்பியிருந்தால், உலகில் அவர் "ஏக பத்தினி விரதன்" என்ற விருதுக்கு தகுதியானவராக இருந்திருப்பார். அவர் மட்டுமல்ல, எந்த ஒரு முஸ்லிமும் இரண்டாவது மனைவியை திருமணம் செய்திருக்கமாட்டார்கள். இது உலக நியதி (இதில் விதி விலக்குகள் உண்டு, அவைகளை கடைசி பாயிண்டாக தருகிறேன்).
உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், ஒரு முஸ்லிம் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது திருமணம் செய்வது என்பது:
1) முதல் மனைவியின் அனுமதி இல்லாமல் செய்வதாகும்.
2) முதல் மனைவியின் விருப்பத்திற்கு எதிராக செய்வதாகும்.
3) முதல் மனைவியின் அன்பை தன் காலின் கீழ் போட்டு மிதித்துவிட்டு, எடுக்கும் செயலாகும்.
4) தன் முதல் மனைவிக்கு செய்யும் துரோகச் செயலாகும்.
5) தன் முதல் மனைவியை 100% நேசிக்காமல் செய்யும் செயலாகும்.
6) தன் முதல் மனைவியை ஒரு செக்ஸ் மிஷன் போல நினைத்து, அவளது எண்ணங்களுக்கு, மதிப்பு கொடுக்காமல் செய்யும் செயலாகும்.
இது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, உலகில் எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் சரி, இரண்டாவது மனைவியை திருமணம் செய்யும் ஒவ்வொருவனுக்கும் இது பொருந்தும்.
[ஒருவேளை சிலர் இப்படி என்னிடம் கேட்க முன்வரலாம், அதாவது பைபிளில் பழைய ஏற்பாட்டில் வரும் அனேகர் பல திருமணங்கள் செய்துள்ளார்களே, அவர்களும் இப்படி முதல் மனைவியை துக்கப்படுத்தியவர்கள் தானா? என்று கேட்டால், "ஆம்" என்பது தான் பதில். அவர் ஆபிரகாமாக இருந்தாலும் சரி, தாவீது, சாலொமோன் என்றுச் சொல்லும் அரசர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் தங்கள் முதல் மனைவிக்கு துக்கத்தை வருவித்து தான் அடுத்தடுத்த திருமணம் செய்துக்கொண்டார்கள். இவர்கள் செய்தார்கள் ஆகையால் அது சரியாக இருக்கும் என்று சொல்லமுடியாது, தவறு செய்தால், அது தவறு தான். மனித சமுதாயம் வளர்ச்சி அடையாத அந்த காலத்தில் அவர்கள் செய்ததை காரணங்காட்டி, அதை இப்போதும் நாம் பின்பற்றலாம் என்றுச் சொன்னால், அது அடிமுட்டாள்த் தனமாகும்.
மனிதன் வளர்ச்சி அடைந்துகொண்டு வந்த பழங்காலத்தில் பின் பற்றிய பழக்கங்களை சரி பார்த்து, அவைகளால் சமுதாயத்திற்கு நன்மையா தீமையா என்பதை ஆராயவேண்டும். நன்மை தரும் பழக்கங்களை இன்றும் கடைபிடிக்கவேண்டும், தீமை தரும் பழக்கங்களை விட்டுவிடவேண்டும்.]
5) மனைவியை விடுங்கள், செக்ஸ் அடிமைகள் பற்றி குர்-ஆன் என்ன சொல்கிறது?
இரண்டாவது திருமணம் பற்றி முதல் மனைவியின் ஒப்புதல் பெறுவது ஒரு நிலை. இதை ஒரு பக்கம் வையுங்கள், இஸ்லாமில் ஒரு முஸ்லிம் அடிமைப்பெண்களை விலைக்கு வாங்கி, வீட்டில் வைத்துக்கொண்டு, தேவைப்படும் போது அவர்களோடு உடலுறவு கொள்ளலாம், அதாவது அவர்களோடு விபச்சாரம் வேசித்தனம் செய்யலாம். வீட்டில் நான்கு மனைவிமார்கள் இருந்தாலும், பிள்ளைகள் இருந்தாலும், தனியாக அடிமைப்பெண்களை வைத்துக்கொண்டு, இப்படி கலர் கலராக கும்மாளம் அடிக்கலாம்.
இப்போது கேள்வி என்னவென்றால், இந்த அடிமைப்பெண்களை விலைக்கு வாங்கி வீட்டிற்கு அழைத்து வருவதற்கு முன்பாக, தன்னுடைய மனைவிமார்களிடம் அனுமதி பெறுகிறார்களா? இதற்கு பீஜே போன்ற இஸ்லாமிய காப்பாளர்கள் பதில் அளிப்பார்களா?
முஹம்மதுவே இப்படி அடிமைப்பெண்களை வைத்திருக்கும் போது, தன்னுடைய முந்தைய மனைவிமார்களின் அனுமதி பெறாத போது, சாதாரண முஸ்லிம்கள் தங்கள் மனைவிமார்களிடம் அனுமதி பெறுவார்களா? நிச்சயமாக இல்லை. இஸ்லாமுடைய இப்படிப்பட்ட கோட்பாடுகள், மனித சமுதாயத்திற்கு கிடைத்த சாபங்கள், வெட்கக்கேடுகள்.
இஸ்லாமிலே, மனைவிமார்களை ஒரு பொருட்டாகவே மதிக்காத போது, அவர்களுக்கு ஞானம் குறைவு என்று முஹம்மது சொல்லியிருக்கும் போது, அவர்களின் சாட்சி, ஆண்களின் சாட்சியில் பாதி தான் என்று முஹம்மது சட்டமாக்கியுள்ள போது, அவர்களிடம் போய் யாராவது அனுமதி கேட்பார்களா? அதுவும், அவர்களுக்கு சக்காளத்திகளை வீட்டிற்கு கொண்டு வர, அவர்களிடமே அனுமதி கேட்டால், எந்த ஒரு அறிவுள்ள பெண்ணாவது அனுமதி கொடுப்பாளா? நிச்சயமாக இல்லை.
எனவே, முஸ்லிம்கள் இரண்டாம் திருமணம் செய்யும் போது முதல் மனைவியின் அனுமதி பெற்று தான் செய்யவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது என்று யாராவது கூறினால், அது மிகப்பெரிய புளுகு மூட்டையாகும். இதனை மறுப்பவர்கள், ஆதாரத்தோடு விளக்கட்டும், அப்போது இந்த கட்டுரையை நான் நீக்கிவிடுகிறேன்.
6) எல்லாவற்றிலும் விதிவிலக்குகள் உண்டு:
ஒரு சில விதிவிலக்குகள் உலகில் அவ்வப்போது காணப்படுவார்கள். அதாவது முதல் மனைவியே தன்னுடைய கணவனுக்கு இரண்டாவது மனைவியை தேடித்தருவது, அல்லது அனுமதி அளிப்பது போன்றவை அவ்வப்போது நடக்கும். இவைகள் "விதி விலக்குகள்" இவைகள் பின்பற்றத் தகுதியான நல்ல சட்டங்கள் அல்ல என்பதை மனதில் வைக்கவேண்டும்.
அ) முதல் மனைவிக்கு, குணமாகாத வியாதி இருக்கும் போது, சீக்கிரமாக மரணம் அவளை சந்திக்கும் என கருதும் போது, அவள் தன் கணவனின் நிலையை புரிந்துக்கொண்டு, பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தன் கணவனுக்கு மனப்பூர்வமாக இரண்டாவது திருமணத்தை தன் கையாலேயே செய்துவைப்பது. இது ஒரு விதிவிலக்காகும்.
ஆ) முதல் மனைவி, தன் தங்கைக்கு திருமணம் ஆகாத நிலையை புரிந்துக்கொண்டு, தன் தங்கைக்கு திருமணம் செய்ய தன் தாய் வீட்டில் பணவசதி இல்லாத போது, தன் கணவனுக்கே தன் தங்கையை இரண்டாம் மனைவியாக கொடுக்க (தன் வாழ்வை கெடுக்க) முன்வரும் முதல் மனைவிமார்கள் சிலர் இருப்பார்கள். இந்த விதிவிலக்குகள், பணவசதி இல்லாத ஏழை குடும்பங்களில் நடப்பதுண்டு.
இ) ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்து, தன் தங்கையின் வாழ்வை கெடுத்துவிட்ட தன் கணவனுக்கே அவளை திருமணம் செய்துக் கொடுக்கும் பெண்களும் இருப்பார்கள்.
ஈ) இஸ்லாமிய நாடுகளில் நடப்பது போல, முதல் மனைவிக்கு எந்த ஒரு உரிமையும் இல்லாத போது, கணவனை எதிர்த்து கேள்வி கேட்டால், உடனே வீட்டை விட்டு போய் விடு என்றுச் சொன்னால், வெளியே சென்று வாழ வழி தெரியாத முதல் மனைவிமார்கள், தங்கள் கணவனின் காமபசிக்கு பலியாக வரும் இரண்டாவது மனைவியை, அன்புடன் தங்கள் குடும்பத்தில் ஏற்றுக்கொள்வார்கள். கிட்டத்தட்ட 99% இஸ்லாமிய பெண்கள், தங்கள் குடும்பத்தில் இன்னொரு பெண் வருவதை அனுமதித்தால், அதற்கு இந்த காரணம் தான் இருக்கும். முஹம்மதுவின் மனைவிகளின் நிலையும் இது தான்.
இப்படி அனேக விதிவிலக்குகளை சொல்லலாம். இந்த அனைத்து விதி விலக்குகளிலும், அந்த முதல் மனைவிமார்கள், ஒரு நிர்பந்தத்தில் இருந்துக்கொண்டு தான் அனுமதி அளிப்பார்கள்.
முடிவுரை: இதுவரை கண்ட விவரங்களின் மூலம் நாம் அறிவது என்னவென்றால், இஸ்லாமிலே முதல் மனைவியின் அனுமதி இன்றி தான் அடுத்தடுத்த பெண்களை முஸ்லிம்கள் திருமணம் செய்கிறார்கள் என்பது தெளிவாக விளங்கும்.
இந்துக்களோ, கிறிஸ்தவர்களோ, இஸ்லாமியர்களிடம் நான்கு திருமணங்கள் பற்றி கேள்வி எழுப்பும் போது, தர்மசங்கடத்தில் மாட்டிக்கொள்ளும் முஸ்லிம்கள், இப்படி பொய்களைச் சொல்லி சமாளிக்கிறார்கள்.
இந்த கட்டுரையை படித்து, இஸ்லாமியர்கள் தகுந்த பதில் அளித்தால், இந்த கட்டுரையை நீக்க நான் தயாராக உள்ளேன். தமிழ் நாட்டில், இந்தியாவில், ஏன் உலக அளவில், எந்த ஒரு இஸ்லாமிய அறிஞராவது, இதற்கு பதில் அளித்து, நான் சொல்வது தவறு, பல திருமணங்கள் செய்யும் ஒவ்வொரு முஸ்லிமும், முதல் மனைவியின் அனுமதி பெற்று தான் திருமணங்கள் செய்கிறார் என்று விளக்கமுடியுமா, தங்கள் நிலையை நிருபிக்கமுடியுமா? குறைந்த பட்சம், தாங்கள் வழிகாட்டியாக பின்பற்றும் முஹம்மதுவாவது இப்படி அனுமதி பெற்று தான் திருமணங்கள் செய்தார் என்று நிருபிக்கமுடியுமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக