நோன்பு மாதமாகிய புனித ரமளானில் ஏன் முஸ்லிம்கள் அதிகமாக உண்கிறார்கள்?
(Why Do Muslims Eat More During Ramadan?)
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நான் கல்லூரியில் படித்துக்கொண்டு இருக்கும்போது, இஸ்லாமிய பாடப்பிரிவை நான் தெரிவு செய்து இருந்தேன். இந்த பாடத்தை நடத்தும் என் பேராசிரியர் (இவர் ஒரு இஸ்லாமியர்) எங்களிடம் "இதர மாதங்களை விட, ரமளான் மாதத்தில் முஸ்லிம்கள் அதிகமாக உண்கிறார்கள்" என்று கூறினார். இஸ்லாமியரல்லாதவர்களுக்கு இந்த செய்தி ஆச்சரியத்தை உண்டாக்கும், ஏனென்றால், உபவாசம் அல்லது நோன்பு என்றுச் சொன்னால், சரீர தேவையாகிய உணவை தள்ளிவைத்து, ஆன்மீக விஷயங்களில் அதிக முக்கியத்தும் காட்டுவது ஆகும். இதை விட்டுவிட்டு, மாலை ஆனவுடனே ஆரம்பித்து, அதிகாலை வரை அதிகமாக சாப்பிடுவது நோன்பு ஆகாது.
துனிஷியா நாட்டில் ரமளான் மாதத்தில் எப்படி உணவு அதிகமாக உட்கொள்ளப்படுகிறது என்பதை பார்ப்போம்:
புனித மாதத்தில் துனிஷியாவில் உணவு நுகர்வின் அளவு அதிகமாக உள்ளது. நேஷ்னல் கன்ஸுமர் இன்ஸ்டிடியுட்(INC)ன் செய்திப்பிரிவின் தலைவர் அஹமத் மெத்லௌதி என்பவர், TAP செய்திக்கு அளித்த விவரமாவது:
- வருடத்தின் இதர மாதங்களில் ஒரு நபர் 0.9 லிட்டர் பாலை உட்கொள்கிறார், ஆனால், இது ரமளான் மாதத்தில் 2 லிட்டராக உயர்கிறது
- யோகர்ட் என்றுச் சொல்லக்கூடிய தயிர் இதர மாதங்களில் ஒரு மாதத்திற்கு ஒரு நபருக்கு 5.4 பாக்கெட் உட்கொள்ளப்படுகிறது, ஆனால் ரமளான் மாதத்தில் 12.9 பாக்கெட்டை ஒரு நபர் உட்கொள்கிறார்.
- சாதாரண மாதங்களில் ஒரு நபர் ஒரு மாதத்தில் சராசரியாக 12.8 முட்டைகளை சாப்பிடுகிறார், ரளமான் மாதத்தில் மட்டும் ஒரு நபர் 26 முட்டைகளை சாப்பிடுகிறார்.
- பெகட் (baguette) என்ற ரொட்டிகளை சாதாரண மாதங்களில் சராசரியாக ஒரு நபர் 600 கிராம் அளவிற்கு உட்கொள்கிறார், ஆனால் ரமளான் மாதத்தில் 1400 கிராம் உட்கொள்கிறார்.
- சாதாரண மாதங்களில் ஒரு நபருக்காக சராசரியாக 1.140 லிட்டர் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது, ஆனால், ரமளான் மாதத்தில் 1.200 லிட்டார் பயன்படுத்தப்படுகின்றது.
- மாமிச ஆகாரத்தை கணக்கிட்டால்:
- ரமளானில் 1.100 கிலோகிராம் ஆட்டு மாமிசம் உட்கொள்ளப்படுகிறது, இதர மாதங்களில் அது 750 கிராமாக உள்ளது.
- ரமளானில் 0.500 கிலோகிராம் மாட்டு மாமிசம் உட்கொள்ளப்படுகிறது, இதர மாதங்களில் 0.220 கிராம்கள் உட்கொள்ளப்படுகின்றது.
- ரமளானில் 1.800 கிலோகிராம் இதர மாமிச ஆகாரங்கள் உட்கொள்ளப்படுகிறது, இதர மாதங்களில் 1.280 கிலோ கிராம்கள் உட்கொள்ளப்படுகிறது.
துனிஷியாவின் நுகர்வோர்களில் 57.8 சதவிகித மக்கள் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்க விரும்புகின்றனர், 42.2 சதவிகிதத்தினர், இதர சாதாரண கடைகளில் பொருட்களை வாங்குகிறார்கள் (மூலம்: http://www.africanmanager.com/site_eng/detail_article.php?art_id=20518).
முஸ்லிம்கள் நோன்பு இல்லாத காலத்தில் உண்பதை விட, ஏன் நோன்பு இருக்கும் காலத்தில் அதிகமாக உண்கிறார்கள்? ஏன் தங்களின் பெருந்திண்டி ஆசையின் மீது "ரமளான் நோன்பு" என்ற முகமூடி போட்டுக்கொள்கிறார்கள்?
இதற்கான பதில் இஸ்லாமின் அடிப்படை கோட்பாடுகளில் உள்ளது என்று நான் கருதுகிறேன். இஸ்லாம் மக்களை அதிக பரிசுத்தவான்களாகவோ அல்லது ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் உள்ளவர்களாகவோ மாற்றுவதில்லை. வாழ்வில் தங்கள் அடிமட்ட ஆசைகளை தீர்த்துக்கொள்ள இஸ்லாம் ஒரு வழியை முஸ்லிம்களுக்கு வகுத்துக்கொடுக்கிறது.
ஒரு இஸ்லாமியரல்லாதவன், பல இரவு நேர கிளப்களை கண்டுபிடித்து, எப்படியாவது 10 பெண்களை கண்டுபிடித்து, அவர்களோடு உடலுறவு கொண்டால், அவனை இஸ்லாம் "விபச்சாரக்காரன்" என்று கூறி அவனுக்கு தண்டனையை கூறும். ஆனால், அதே மனிதன், இஸ்லாமியனாக மாறி, 4 பெண்களை திருமணம் செய்து, இன்னும் போரிலிருந்து பிடிபட்ட 6 பெண் அடிமைகளை வாங்கிக்கொண்டு, அவர்களோடு ஒரே நாளில் உடலுறவு கொண்டாலும், அல்லாஹ்வின் பார்வையில், இஸ்லாமின் பார்வையில் அவன் "பரிசுத்தவான்" தான்.
இதே போல, ஒரு மனிதன் ஒரு விபச்சாரியிடம் விலையை பேசி, அவளோடு உடலுறவு கொண்டால், அவன் இஸ்லாமின் படி பாவம் செய்தவன் ஆவான். ஆனால், அதே மனிதன் முஸ்லிமாக மாறிவிட்டு, "முடா - Muta" என்ற குறுகிய கால திருமணம் செய்வதாக கூறி, அதே விபச்சாரியான பெண்ணிடம் பேசி, அதே அளவு பணத்தை கொடுப்பதாகச் சொல்லி, முன்பு செய்தது போலவே விபச்சாரம் செய்தால், இஸ்லாமின் படி அவன் பாவம் செய்யவில்லை, இஸ்லாமிய சமுதாயத்தில் வெட்கமில்லாமல் அவன் நடமாடுவான்.
மனநோய் உள்ள ஒரு மனிதன், கட்டுப்பாடு இல்லாதவன், திடீரென்று ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் இரக்கமின்றி கொன்றால், இஸ்லாமின் படி அவன் நரகம் செல்வான். ஆனால், அதே மனிதன், அல்லாஹ்விற்காக ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் இரக்கமின்றி கொன்றால், அவனுக்கு அல்லாஹ்வின் சொர்க்கத்திற்கு போவதற்கு பயணச்சீட்டு இலவசமாக கொடுக்கப்பட்டுவிடும்.
இஸ்லாமிய நூல்களின் படி, மக்காவினர் கொடூரமானவர்கள், சிற்றின்ப பிரியர்கள் மேலும் பெருந்திண்டிக்காரர்கள். அவர்களை இஸ்லாமுக்கு மாற்றிய முஹம்மது அவர்களின் இந்த குணங்களை மாற்றவில்லை. இதற்கு பதிலாக அவர்களின் வன்முறைகளையும், சிற்றின்பத்தையும், பெருந்தீண்டித் தனத்தையும், அல்லாஹ்விற்கு பிரியமானதாக மாற்றிவிட்டார்.
விஷயம் இப்படி இருக்க, ரமளான் மாதம் முழுவதும் நடக்கும் ராஜவிருந்தை முஸ்லிம்கள் "நோன்பு" என்று அழைத்தால், நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லையே!?!
1 கருத்து:
எமது ஊர்களிலும் பொதுவாக சொல்கிற ஒரு விஷயம்தான் மற்றைய மாதங்களின் செலவுகளுடன் ஒப்பிடும் போது ரமளான் மாதத்தின் செலவு மூன்று மடங்காக அதிகரித்துவிடுகிறது.
நோன்பிருக்கும் போது உன் உணவை அடுத்தவனுக்கு கொடு என்று இறைவேதமாம் பைபிள் சொல்லுவதை நாங்கள் நினைவில் கொள்வோம்.
கருத்துரையிடுக