முஸ்லிம்களே! குர்ஆனில் அல்லாஹ் சொன்னவைகளை நாம் நம்பவேண்டுமா? அல்லது நம்பவேண்டாமா? குர்ஆனில் சொல்லப்பட்டவைகளை நீங்கள் நம்புகிறீர்களா?
குர்ஆனின் கீழ்கண்ட வசனத்தின் காரணமாகத் தான் நான் இக்கேள்வியை கேட்கிறேன், மூன்று குர்ஆன் தமிழாக்கங்களில் இவ்வசனத்தை படிப்போம்:
5:47. (ஆதலால்) இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும்; அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)
5:47. ஆகவே, இன்ஜீலை உடையவர்கள் அதில் அல்லாஹ் அறிவித்து இருக்கும் (கட்டளைகளின்)படியே தீர்ப்பளிக்கவும். எவர்கள், அல்லாஹ் அறிவித்த (கட்டளைகளின்)படியே தீர்ப்பளிக்க வில்லையோ அவர்கள் நிச்சயமாக பாவிகள்தான். (அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்)
5:47. மேலும், இன்ஜீல் அருளப்பட்டவர்கள், அதில் எந்தச் சட்டத்தை அல்லாஹ் இறக்கி வைத்தானோ அந்தச் சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கட்டும் (என்பதே நம் கட்டளையாக இருந்தது)! மேலும், எவர்கள் அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கவில்லையோ, அவர்கள்தாம் ஃபாஸிக்கள் பாவிகளாவர்.(இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் தமிழாக்கம்)
கிறிஸ்தவர்கள் இன்ஜிலில் சொல்லப்பட்டதின் படியே தீர்ப்பு அளிக்கவேண்டுமாம். குர்ஆனின் இந்த வசனத்துக்கு கீழ்படிய என்னை அனுமதிப்பீர்களா?
இல்லை.. இல்லை, இன்ஜில் தொலைந்துவிட்டது அல்லது மாற்றப்பட்டுவிட்டது என்று முஸ்லிம்கள் நம்மிடம் கூறுவார்கள்.
இன்ஜில் தொலைந்து போய் இருந்தால், ஏன் அல்லாஹ், அதனைக் கொண்டு தீர்ப்பு அளியுங்கள் என்று கட்டளையிடுகின்றான்?
குர்ஆன் 5:47 என்ற வசனத்துக்கு நான் கீழ்படிவது எப்படி?
இவ்வசனத்தை இறக்கும் போது, இன்ஜில் என்பது தொலைந்துவிட்டது அல்லது எதிர்காலத்தில் தொலையப்போகிறது என்ற விவரம் அல்லாஹ்விற்கு தெரியவில்லையா? சர்வ ஞானியான அல்லாஹ் இதனை அறிந்திருக்கவேண்டுமல்லவா?
அல்லாஹ் இவ்வசனத்தை இறக்கும் போது, சொல்லாத விஷயத்தை, முஸ்லிம்களே, நீங்கள் எப்படி அறிந்துக்கொண்டீர்கள்?
ஒருவேளை நீங்கள் (முஸ்லிம்கள்), குர்ஆன் இறக்கப்பட்ட பிற்பாடு தான் இன்ஜில் தொலைந்துவிட்டது என்று சொல்வீர்களானால், இன்னமும் நீங்கள் அல்லாஹ்வின் வார்த்தையை கனவீனப்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம். ஏனென்றால், உங்கள் கூற்றின்படி, அல்லாஹ்வின் 5:47 என்ற வசனமானது இனி உபயோகத்தில் இல்லை, அது செல்லுபடியாகாது என்று சொல்லவருகிறீர்கள். அல்லாஹ்வின் வசனங்கள் ஒரு காலத்தில் (7ம் நூற்றாண்டில்) செல்லுபடியாகும், எதிர்காலத்தில் அவைகளினால் உபயோகமில்லை, அவைகள் செல்லுபடியாகாது என்று நீங்கள் சொல்கிறீர்கள், அப்படித்தானே!
இதுமட்டுமல்ல, அல்லாஹ் தன்னுடைய இன்னொரு வசனத்தின் மூலமாக, தன்னைத் தானே தர்மசங்கடத்தில் தள்ளிக்கொள்கிறான்:
ஸூரா 5:68ஐ படிக்கவும்:
5:68. "வேதமுடையவர்களே! நீங்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கப்பட்டவற்றையும் நீங்கள் கடைப்பிடித்து நடக்கும் வரையிலும் நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களாக இல்லை" என்று கூறும்; மேலும் உம் இறைவனால் உம்மீது இறக்கப்பட்ட (வேதமான)து அவர்களில் பெரும்பாலோருக்கு குஃப்ரை (நிராகரித்தலை)யும் வரம்பு மீறுதலையும் நிச்சயமாக அதிகப்படுத்துகிறது; ஆகவே நிராகரித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தாருக்காக நீர் கவலைப்பட வேண்டாம். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)
முஸ்லிம்களே, ஸூரா 5:68 ஐ கிறிஸ்தவர்கள் பின்பற்ற அனுபதிப்பீர்களா?
குர்ஆன் 5:68ல் சொல்லப்பட்டதின்படி யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு வழிகாட்டுதல் கிடைக்காது ஏனென்றால் தோராவும், இன்ஜிலும் தொலைந்துவிட்டன என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.
ஆனால், இவ்வசனத்தில் அல்லாஹ் தோராவும், இன்ஜிலும் தொலைந்துவிட்டன என்று சொல்லவில்லையே! முஸ்லிம்கள் அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு எதிராக பேசுகிறார்கள். நல்வழிகாட்டுதலை தோராவிலும், இன்ஜிலிலும் காணலாம் என்று அல்லாஹ் சொல்கிறான். அல்லாஹ் ஒருவகையாக சொல்கிறான், அதற்கு எதிராக முஸ்லிம்கள் சொல்வதினால். இப்போது நாம் என்ன செய்வது?
குர்ஆன் சொல்வதை நாம் நம்பவேண்டுமா? இல்லையா?
குர்ஆன் 5:47 செல்லுபடியாகாது என்று நாம் மேலே கண்டோம், இப்போது அந்த பட்டியலில் குர்ஆன் 5:68ம் வசனமும் சேர்ந்துவிட்டது. முஸ்லிம்களே, குர்ஆனிலிருந்து இன்னும் எத்தனை வசனங்களை நீங்கள் இரத்து செய்யப்போகிறீர்கள்? அல்லாஹ் சொல்லாத ஒன்றை சொன்னதாக நீங்கள் கற்பனை செய்துக்கொண்டு இன்னும் எத்தனை ஸூராக்களை பொய்யாக்கப்போகிறீர்கள்?
அல்லாஹ் தன் வேதத்தை நித்தியத்தில் எழுதியதாக முஸ்லிம்கள் நம்புகிறார்கள், ஆனால், அதனை பாதுகாக்க அல்லாஹ் தவறியிருக்கின்றான் என்று அவர்களே சாட்சியிடுகிறார்கள். முஸ்லிம்களிடமிருந்து இன்னும் எப்படிப்பட்ட அவமானங்களை அல்லாஹ் சகிக்கவேண்டி இருக்குமோ தெரியவில்லை!
சிந்திக்க சில வரிகள்:
முஹம்மது வாழ்ந்த காலத்தில் இருந்த கையெழுத்துப் பைபிள் பிரதிகள், கீழ்கண்ட இரண்டு பிரதிகளாக இப்போதும் நம்மிடம் உள்ளது.
- கோடக்ஸ் வாடிகனஸ் - The Vatican (Codex Vaticanus)
- கோடக்ஸ் சினாடிகனஸ் - British Museum (Codex Sinaticus)
இயேசு உலக மக்களுக்காக மரித்து, உயிர்த்தெழுந்த விவரங்கள், மேலும் பல சாட்சிகளுக்கு முன்பாக அவர் பரமேரிய விவரங்கள் அனைத்தும் இந்த பிரதிகளில் உள்ளது. புதிய ஏற்பாடு, இவ்விரு கிரேக்க கையெழுத்து பிரதிகளில் பத்திரமாக பாதுக்காக்கப்பட்டு இருக்கிறது. இவைகள் முஹம்மதுவிற்கு முன்பு 200 ஆண்டுகள் பழைய பிரதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்தவ பைபிள் முஹம்மதுவிற்கு முன்பு 575 ஆண்டுகள் முந்தையதாகும். அதே போல, யூதர்களின் தோரா (பைபிளின் முதல் ஐந்து நூல்கள்), முஹம்மதுவிற்கு முன்பு 1000 லிருந்து 3000 ஆண்டுகள் முந்தையதாகும். இவைகளில் வெளிச்சமும், நேரான வழிகாட்டுதலும் இருக்கிறது, எனவே முஸ்லிம்கள் இவைகளை படிக்கவேண்டும் என்று முஹம்மது குர்ஆனில் கட்டளையிட்டுள்ளார். இவைகள் மாற்றப்பட்டுவிட்டன என்று இஸ்லாம் சொல்லுமானால், முஹம்மது ஒரு பொய்யர் என்று இஸ்லாம் அவர் மீது முத்திரை குத்துகிறது என்று அர்த்தம், ஏனென்றால் அவர் தான் தோரா, இன்ஜில் மற்றும் ஜபூரை படிக்கச் சொன்னவர் - Steve Perez
2 கருத்துகள்:
மூளை மழுங்கி கிருத்த கூட்டம் மக்களை எப்படி மடைமாற்றம் செய்கிறது என்பதர்கு இதுவே ஆதாரம்.....
யூதர்களும் கிருத்தவர்களும் முஹம்மது (ஸல்) அவர்களின் காலத்தில் மார்கத்தீர்பு கேட்ட ோது இறைவனிடம் இருந்து வந்த வசனம் இஞ்சில் என்பது இயேசுவுக்கு ோராவைப்ோல் குர்ஆனைப் ோல் ொடுக்கப்பட்ட வேதம் தற்ோது உள்ள பவுல் எழுதிய பைபிள் இல்லை
சகோதரரே, இந்த கட்டுரயில் சொல்லப்பட்டவைகளை நீங்கள் புரிந்துக்கொண்டீர்களா? புரியவில்லையென்றால் எந்த இடத்தில் உங்களுக்கு சந்தேகம் உள்ளது என்று சொல்லமுடியுமா?
கருத்துரையிடுக