ஜென்டைல்(Gentile) என்ற ஆங்கில வார்த்தை, " gentilis " என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்ததாகும். இதன் பொருள் "நாடு அல்லது ஒரே இனத்தைச் சேர்ந்த மக்கள்" என்பதாகும். எபிரேய மொழியில் நாடு என்பதற்கு "கொய்(goy)" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் எல்லா நாடுகளையும் குறிக்க இந்த வார்த்தை பைபிளில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை அமைத்துவிட்ட பிறகு, 'ஜென்டைல்' என்றால் "மற்ற நாடுகள்" அதாவது யூதரல்லாத மற்ற நாடுகள் என்ற பொருளில் அது அமைந்துவிட்டது.
இதன்படி பார்த்தால், யூதர்களின் படி 'கிறிஸ்தவர்களும்' ஜென்டைல் என்ற அந்நிய ஜனங்கள் தான். அனைத்து நாடுகளையும் குறிக்க பயன்படுத்தப்பட்ட வார்த்தை, கடைசியாக யூதரல்லாத நாடுகளை மட்டுமே குறிக்க பயன்படும் படி ஆகிவிட்டது.
தமிழ் பைபிளில் இன்னொரு சிக்கலும் உள்ளது. நாடு அல்லது ஜனங்கள் என்று வரும் வார்த்தையை, தமிழில் "ஜாதி" என்று மொழியாக்கம் செய்துவிட்டார்கள். இந்திய சூழலில் ஜாதி என்ற வார்த்தை மிகவும் அதிகமாக அடிபடும் வார்த்தையாக உள்ளது.
மக்களை கீழ்ஜாதி மேல்ஜாதி என்று பிரித்துப் பார்க்கும் இந்துக்களின் மொழி நடையினால், அனேகருக்கு "ஜாதி" என்ற வார்த்தையை பைபிளில் பார்க்கும் போது, பைபிள் கூட ஜாதி பார்க்கச்சொல்கிறதா? என்ற எண்ணம் வந்துவிடுகிறது.
மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் பிரித்துப் பார்க்கவேண்டுமென்றால், தேவன் முதல் மனிதனை படைக்காமல், முதல் மனிதர்களை படித்து இருந்திருப்பார். ஒரே ஒரு ஆதாமை படைக்காமல், பிராமண் ஆதாம் என்றும், சத்திரியன் ஆதாம், வைசியன் ஆதாம், சூத்திரன் ஆதாம் என்று ஒவ்வொருவரையும் வெவ்வேறு இடங்களிலிருந்து படைத்து இருந்திருப்பார்.
எனவே, நாடு என்ற வார்த்தையைத் தான், பைபிளில் 'ஜாதி' என்று குறிப்பிட்டள்ளார்கள் என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும். பைபிள் பொது மொழிப்பயெர்ப்பில் "ஜாதி" என்ற வார்த்தைக்கு பதிலாக, நாடு என்ற வார்த்தையை சரியாக பயன்படுத்தியுள்ளனர்.
எபிரேய வார்த்தை "கொய்" என்பதற்கு எபிரேய அகராதியில் 1471 எண் கொடுக்கப்பட்டுள்ளது (https://www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm?Strongs=H1471&t=KJV ). நாடு/ஜாதி/ ஜென்டைல் என்ற வார்த்தை யூதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து நாடுகளையும் குறிக்க இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு சில உதாரணங்கள்.
நோவாவின் பிள்ளைகள் தனி நாடுகளாக வளருவார்கள்:
Gen 10:32: These are the families of the sons of Noah, after their generations, in their nations: H1471 and by these were the nations H1471 divided in the earth after the flood.
ஆதியாகமம் 10:32
தங்கள் ஜாதிகளிலுள்ள தங்களுடைய சந்ததிகளின்படியே நோவாவுடைய குமாரரின் வம்சங்கள் இவைகளே; ஜலப்பிரளயத்துக்குப் பின்பு இவர்களால் பூமியிலே ஜாதிகள் பிரிந்தன.
பொது மொழிப்பயெர்ப்பு:
நோவாவின் பிள்ளைகளால் உருவான குடும்பப்பட்டியல் இதுதான். இவர்கள் தங்கள் நாடுகளின்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். வெள்ளப் பெருக்குக்குப் பிறகு இக்குடும்பங்கள் தோன்றி பூமி முழுவதும் பரவினர்.
தமிழில் "ஜாதி" என்ற வார்த்தை, உண்மையில் "நாடு" என்று மொழியாக்கம் செய்யப்பட்டு இருந்திருக்கவேண்டும்.
ஆபிரகாமின் சந்ததி பெரிய நாடு ஆகும் என்ற ஆசீர்வாதம்:
Gen 12:2 : And I will make of thee a great nation, H1471 and I will bless thee, and make thy name great; and thou shalt be a blessing:
ஆதியாகமம் 12:2. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.
பொது மொழிப்பயெர்ப்பு:
நான் உன் மூலமாக ஒரு பெரிய தேசத்தை உருவாக்குவேன். நான் உன்னை ஆசீர்வதிப்பேன். உனது பெயரைப் புகழ்பெறச் செய்வேன். ஜனங்கள் மற்றவர்களை ஆசீர்வதிக்க உன் பெயரைப் பயன்படுத்துவர்.
இஸ்மவேலின் பிள்ளைகளும் பெரிய நாடாக மாறுவார்கள்:
Gen 17:20: And as for Ishmael, I have heard thee: Behold, I have blessed him, and will make him fruitful, and will multiply him exceedingly; twelve princes shall he beget, and I will make him a great nation. H1471
ஆதியாகமம் 17: 20. இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்; நான் அவனை ஆசீர்வதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் பண்ணுவேன்; அவன் பன்னிரண்டு பிரபுக்களைப் பெறுவான்; அவனைப் பெரிய ஜாதியாக்குவேன்.
பொது மொழிப்பயெர்ப்பு:
"நீ இஸ்மவேலைப்பற்றிச் சொன்னாய். நான் அவனையும் ஆசீர்வதிப்பேன். அவனுக்கும் நிறைய பிள்ளைகள் இருக்கும். அவன் 12 பெரிய தலைவர்களுக்குத் தந்தையாவான். அவனது குடும்பமே ஒரு நாடாகும்.
இஸ்ரேல் மக்கள் தவறு செய்யும் போது, இதர நாடுகளின் கைகளில் அவதிப்படுவார்கள்:
இங்கும் இதே வார்த்தை, "நாடுகள்" என்ற வருகிறது. மற்ற நாடுகளின் கைகளில் இஸ்ரேல் மக்கள் அவதிப்படுவார்கள் என்ற பொருள் வருகிறது. நாடுகள் என்ற வார்த்தை தான் ஜென்டைல், புறஜாதி என்று பயன்படுத்துகிறோம்.
Lev 26:38: And ye shall perish among the heathen, H1471 and the land of your enemies shall eat you up.
லேவியராகமம் 26:38: புறஜாதிகளுக்குள்ளே அழிந்துபோவீர்கள்; உங்கள் சத்துருக்களின் தேசம் உங்களைப் பட்சிக்கும்.
பொது மொழிப்பயெர்ப்பு:
வேறு நாடுகளில் நீங்கள் காணாமல் போவீர்கள். உங்கள் பகைவரின் நாடுகளில் மறைந்து போவீர்கள்.
எனவே, ஜென்டைல் என்று ஆங்கிலத்தில் சொல்வதோ, தமிழ் மொழியாக்க பைபிளில் வரும் "ஜாதி" என்ற வார்த்தையோ "நாடு" என்பதைத் தான் குறிக்கும்.
தேதி: 27th July 2020
உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்
Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/general-topics/gentile_nation.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக