Muhammad's Message And Motives Revealed
தனது சொந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் கேள்விப்படாத ஒரு புதிய செய்தியை முஹம்மது கொண்டு வந்தார். அவர்கள் இஸ்லாமிய காலத்திற்கு முந்தைய காலத்திலிருந்தே, பல தெய்வ வழிப்பாட்டுக்காரர்களாக இருந்தார்கள். முஹம்மதுவும் இதே வழிபாடுகளை பின்பற்றியவராக இருந்தார். அவர்கள் நூற்றுக்கும் அதிகமான கற்ச்சிலைகலை வைத்து தொழுதுக்கொண்டு இருந்தார்கள்.
தங்கள் பழங்குடியிலே பிறந்து, தங்களோடு வாழ்ந்த முஹம்மது, திடீரென்று ஒரு நாள், ஒரு புதிய கோட்பாட்டை சொன்னது மக்கா மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்கள் காட்டிய எதிர்வினை ஸூரா 38:5 இல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வசனத்தை ஐந்து தமிழாக்கங்களில் படிப்போம்:
டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்:
38:5. "இவர் (எல்லாத்) தெய்வங்களையும் ஒரே நாயனாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயமே! (என்றும் கூறினர்).
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:
38:5. "என்ன! இவர் (நம்) தெய்வங்கள் அனைத்தையும் (பொய்யெனக் கூறி, வணக்கத்திற்குரியவன்) ஒரே இறைவன்தான் என்று ஆக்கிவிட்டாரா? மெய்யாகவே, இது ஓர் ஆச்சரியமான விஷயம்தான்" (என்று கூறி,)
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:
38:5. என்ன, இவர் அத்தனை கடவுளருக்கும் பகரமாக ஒரே கடவுள்தான் என்று ஆக்கிவிட்டாரா? இது மிகவும் வியப்புக்குரிய விஷயம்தான்!"
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி) தமிழாக்கம்:
38:5. (என்ன!) இவர் (நம்முடைய வணக்கத்திற்குரிய) தெய்வங்களை (நிராகரித்து விட்டு) ஒரே ஒரு வணக்கதிற்குரியவனாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயம்தான்" (என்றும் கூறினர்).
பீஜே தமிழாக்கம்:
38:5. "கடவுள்களை ஒரே கடவுளாக ஆக்கி விட்டாரா? இது வியப்பான செய்தி தான்.''
மேற்கண்ட வசனத்தின் படி, முஹம்மது அவர்கள் மக்கா மக்களுக்கு எவைகளைச் சொல்லியுள்ளார்? அவர்களின் எல்லா தெய்வங்களையும் ஒன்றாக்கிவிட்டு, ஏகத்துவத்தைச் சொல்லியுள்ளார்!
இஸ்லாம் போதிக்கும் தவ்ஹீத் என்ற கோட்பாடு இதைத் தான் சொல்கிறது. அதாவது பல தெய்வங்களின் கூட்டு தான் தவ்ஹீத் ஆகும். இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால், மக்காவினர் வணங்கிக்கொண்டு இருந்த 360 கற்ச்சிலை தெய்வங்கள் அனைவரும் "அல்லாஹ்" என்ற பெயரில் ஒன்றுபடப் போகின்றன என்று பொருள். முஹம்மது ஆரம்பத்தில் தனது மக்களுக்கு கொண்டு வந்த போதனை இதுதான். இதைத் தான் மேற்கண்ட குர்ஆன் வசனம் சொல்கிறது.
முஹம்மது இப்படி போதித்தவுடன், மக்காவின் மக்கள் மிகவும் துக்கமாகிவிட்டார்கள். பல்லாண்டு காலமாக, தங்கள் வம்சங்கள் வணங்கிக்கொண்டு வந்த தெய்வங்களுக்கு எதிராக முஹம்மது சொன்ன தேவதூஷணத்தை அவர்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இதனால் அவர்கள் "முஹம்மது பொய் சொல்கிறார் என்றும், அவர் 360க்கும் அதிகமான தெய்வங்களை ஒன்றாக ஆக்கியபடியினால், அவர் ஒரு மாயக்காரர் என்றும்" குற்றம் சாட்டினர் (நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயமே! குர்ஆன் 38:5).
இந்த மக்கள் முஹம்மதுவை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது, முஹம்மது அவர்களில் ஒருவராக இருந்தார். அவர்களிடையே பிறந்து, வளர்ந்தார். மேலும் அவர்கள் அனைவரோடும் சேர்ந்து முஹம்மது தம்முடைய 40வது வயதுவரை, காபாவின் கற்சிலை தெய்வங்களை வணங்கிவந்தார். ஆனால் திடீரென்று அவர் கொண்டு வந்த புதிய "கோட்பாடு" அவர்களை கோபப்படுத்தியது.
மக்காவின் தலைவர்கள் முஹம்மதுவின் புதிய கோட்பாட்டை புறக்கணிக்க துடித்தனர். இப்னு கதீர் என்ற குர்ஆன் விரிவுரையாளர் கீழ்கண்டவிதமாக பதிவு செய்துள்ளார்:
Tafsir Ibn Kathir, Surat Sad 38:4
Ibn Jarir said, "The Tawhid to which Muhammad is calling you is something by which he wishes to gain power over you, and exalt his own position, so that he will have followers among you, but we will not respond."
These leaders then go to Abu Talib, Muhammad's uncle, to bring their dissatisfaction to him to see if he would straighten out his nephew.
Abu Ja`far bin Jarir recorded that Ibn `Abbas, may Allah be pleased with him, said, "When Abu Talib fell sick, some of the people of the Quraysh, including Abu Jahl, entered upon him and said, `Your brother's son is insulting our gods; he does such and such and says such and such. Why don't you send for him and tell him not to do that' So he sent for the Prophet and he entered the house. There was space enough for one man to sit between them and Abu Talib, and Abu Jahl, may Allah curse him, was afraid that if ﴿the Prophet ﴾ were to sit beside Abu Talib he would be more lenient with him, so he jumped up and sat in that spot, and the Messenger of Allah could find nowhere to sit near his uncle, so he sat by the door. Abu Talib said to him, `O son of my brother, why are your people complaining about you and claiming that you insult their gods and say such and such' They made so many complaints against him.
தஃப்ஸீர் இப்னு கதீர் விளக்கவுரை:
இப்னு ஜரீர் கூறினார்: "முஹம்மது உங்களை தவ்ஹீத் (ஏகத்துவம்) பக்கம் அழைக்கிறார், இதன் மூலமாக உங்கள் மீது அவர் அதிகாரம் பெறுவார், தம்முடைய நிலையை உயர்த்திக்கொள்வார். உங்களில் அனேகர் அவரை பின்பற்றுவார்கள். ஆனால் நாங்கள் அவரை நம்பமாட்டோம்.
மக்காவின் தலைவர்கள் மறுபடியும் முஹம்மதுவின் பெரியப்பா அபூ தலிப் அவர்களிடம் சென்று: "முஹம்மது கொண்டுவந்த பிரச்சனையை சரிசெய்யும்படி முறையிட்டனர்".
இப்னு அப்பாஸ் கூறியதாக அபூ ஜாஃபர் பின் ஜரிர் பதிவு செய்ததாவது: "அபு தலிப் நோய்வாய்ப்பட்டபோது, அபூ ஜஹ்ல் உட்பட குறைஷி மக்களில் சிலர் அவரிடம் சென்று," உங்கள் சகோதரனின் மகன் (முஹம்மது) நம் கடவுள்களை அவமதிக்கிறார்; அவர் பல தீயமொழிகளை நம் கடவுள்கள் பற்றி கூறுகிறார். நீங்கள் ஏன் அவரை அழைத்து இப்படி செய்யவேண்டாம் என்று சொல்லக்கூடாது? என்று முறையிட்டனர். எனவே அவர் நபியை அழைத்தார், அவர் வீட்டிற்குள் நுழைந்தார். அபு தலிபிற்கும், அபூ ஹஜலுக்கும் இடையில் ஒரு மனிதர் உட்கார்ந்து கொள்ள போதுமான இடம் இருந்தது. அபு ஜஹ்ல் (அல்லாஹ் அவரை சபிக்கட்டும்), நபி அபூ தலிஃபின் அருகில் அமர்ந்தால் அவர் அவருடன் அதிக மெத்தனமாக இருப்பார் என்று பயந்தார், எனவே ஜஹல் சீக்கிரமாக குதித்து எழுந்து அந்த இடத்தில் உட்கார்ந்தார். அல்லாஹ்வின் தூதர் தனது பெரியப்பாவின் அருகில் உட்காருவதற்கு இடம் காணவில்லை. எனவே அவர் வாசலில் அமர்ந்தார். அபு தலிப் நபியிடம், 'என் சகோதரனின் மகனே, மக்கள் ஏன் உங்களைப் பற்றி புகார் செய்கிறார்கள், நீங்கள் அவர்களின் கடவுள்களை அவமதித்து, ஏன் அவதூறு கூறுகிறீர்? என்று கேட்டார். அவர்கள் அவருக்கு எதிராக பல புகார்களை கூறினார்கள்.
அவர் கொண்டு வந்த இந்த புதிய கோட்பாட்டிற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பியபோது, முஹம்மது கூறிய பதில்
«يَا عَمِّ إِنِّي أُرِيدُهُمْ عَلَى كَلِمَةٍ وَاحِدَةٍ يَقُولُونَهَا تَدِينُ لَهُمْ بِهَا الْعَرَبُ، وَتُؤَدِّي إِلَيْهِمْ بِهَا الْعَجَمُ الْجِزْيَة»
(O uncle, all I want from them is one word which, if they say it, the Arabs will become their followers and the non-Arabs will pay Jizyah to them.)
(ஓ பெரியப்பா, அவர்களிடமிருந்து நான் விரும்புவது ஒரே ஒரு வார்த்தையைத் தான். அவர்கள் அதை சொல்லிவிட்டால், அரேபியர்கள் அவர்களைப் பின்பற்றுபவர்களாக நான் மாற்றுவேன், மற்றும் அரேபியரல்லாதவர்கள் அவர்களுக்கு ஜிஸ்யா என்ற வரியை செலுத்துபவர்களாக மாற்றுவேன்)
முஹம்மது என்ன சொன்னார் என்று கவனித்தீர்களா?
தான் கொண்டு வந்த தவ்ஹீத் என்ற கோட்பாட்டை மக்கா தலைவர்கள் ஏற்றுக்கொண்டால்:
- அரேபியர்கள் அனைவரும் இவர்களை பின்பற்றும்படி செய்வார்
- அரேபியரல்லாதவர்கள் வரிப்பணம் (ஜிஸ்யா) செலுத்தும்படி செய்வார்
முஹம்மதுவின் வாயிலிருந்து வந்த வார்த்தைகளை கவனித்தீர்களா? முஹம்மது கொண்டுவந்த செய்தியின் உண்மை நோக்கம் இது தான்: அதிகாரமும் செல்வமும். இந்த இரு நோக்கங்களுக்கு பின்னால் தான் அவர் ஓடினார். இப்னு ஜரிர் சொன்னது எவ்வளவு உண்மையாக இருக்கிறது! அவர் சரியாகத் தான் கனித்து இருக்கிறார்.
இது வஞ்சகமே தவிர வேறு இல்லை. முஜாஹிதும் கதாதாவும் கூறினார்கள்: அவர் கொண்டு வந்தது ஒரு பொய். இப்னு அப்பாஸ் கூறினார்: அது ஒரு கட்டுக்கதை
அரேபியர்கள் "அல்லாஹ் கடவுள் இல்லை" என்றுச் சொல்லவில்லை, அவரை புறக்கணிக்கவில்லை. அவர்கள் அல்லாஹ்வை நன்கு அறிந்திருந்தார்கள்.
இஸ்லாமுக்கு முன்புலிருந்தே அரேபியர்கள் அல்லாஹ்வை அறிந்திருந்தனர், மக்கா மக்கள் வணங்கிக்கொண்டு இருந்த பல தெய்வங்களில் அல்லாஹ்வும் ஒருவர் (Encyclopedia of Islam, ed. Gibb, I:406)
அவர்கள் ஏற்றுக்கொள்ளாத ஒன்று 'முஹம்மது கொண்டு வந்த புதிய கோட்பாடு' ஆகும். அதாவது, அல்லாஹ் என்ற கடவுளை உயர்த்திக் காட்டுவதற்கு, அவர்கள் பல்லாண்டுகாலமாக தொழுதுக்கொண்டு இருந்த மற்ற கடவுள்களை மட்டுப்படுத்துவதைத் தான் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
"அல்லாஹு அக்பர்" என்ற இஸ்லாமிய சொற்றொடரின் அர்த்தம் "அல்லாஹ் பெரியவன்(Allah is great)" என்று பெரும்பாலான முஸ்லிம்கள் நினைக்கிறார்கள். உண்மையில், இதன் உண்மையான பொருள் "அல்லாஹ் அனேகரில் பெரியவன் (Allah is greater) " என்பதாகும். கேள்வி என்னவென்றால், யாரை விட அல்லாஹ் பெரியவன்?
"மற்ற விக்கிரகங்களை விட அல்லாஹ் பெரியவன்" என்பது தாம் இக்கூற்றின் உண்மை பொருள்.
இந்த சிறிய கட்டுரையில் ஆய்வு செய்யப்பட்ட முஹம்மதுவின் நோக்கத்தை சரியாக புரிந்துக்கொண்டால், குர்ஆனில் வரும் நிகழ்ச்சிகள் இன்னும் தெளிவாக புரிய ஆரம்பிக்கும்.
இஸ்லாமின் படி, 'ஷிர்க்' என்றுச் சொல்லக்கூடிய பாவம் என்பது, அல்லாஹ்வுடன் மற்றவர்களை ஒப்பிட்டு பேசுவதாகும். இந்த ஷிர்க்கை கிறிஸ்தவர்கள் செய்கிறார்கள் என்று முஸ்லிம்கள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் இது கிறிஸ்தவர்களை குறிப்பதல்ல. கிறிஸ்தவ இறையியலை சரியாக முஸ்லிம்கள் புரிந்துக் கொள்ளாதபடியினால் இப்படி தவறாக கருதுகிறார்கள். அரேபிய மக்கள் பல தெய்வங்களை அல்லாவிற்கு சமமாக வைத்து வணக்கியதை குற்றப்படுத்த 'ஷிர்க்' பயன்படுத்தப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக