ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

சனி, 14 ஜூலை, 2012

கிறிஸ்தவ சபையே! விழிமின் எழுமின் - பாகம் 4

      

கிறிஸ்தவ சபையே! விழிமின் எழுமின் - பாகம் 4

முன்னுரை: 'கிறிஸ்தவ சபையே! விழிமின் எழுமின்' என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை நாம் படித்துக்கொண்டு இருக்கிறோம். முதல் மூன்று பாகங்களை கீழ்கண்ட தொடுப்புகளில் படிக்கலாம்:

கிறிஸ்தவ சபையே! விழிமின் எழுமின் – பாகம் 1, பாகம் 2 & பாகம் 3

முதல் மூன்று பாகங்களை முதலாவது படித்துவிட்டு, நான்காவது பாகத்தை படித்தால் கோர்வையாக விவரங்கள் புரியும்.

பாகம் 4:

(பழைய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் முஹம்மதுவின் நபித்துவத்தைப் பற்றிய கேள்வி பதில்களின் தொடர்ச்சி...)

கேள்வி 8: என் பெயர் செல்வி. நான் சிறுபிள்ளைகளுக்கு ஞாயிறு பள்ளி நடத்தும் ஆசிரியையாக இருக்கிறேன். என் கேள்வி என்னவென்றால், தீர்க்கதரிசிகள் என்றாலே நம் மனதில் "அற்புதங்கள், அடையாளகள், சுகமாக்குதல், சாகசங்கள்" போன்றவைகளை செய்யும் நபர்கள் தான் நினைவிற்கு வருகிறார்கள். இதனை நாம் பழைய ஏற்பாட்டில் ஆங்காங்கே படிக்கிறோம். ஒரு தீர்க்கதரிசி என்பவர் அற்புத அடையாளங்கள் செய்யும் ஒரு நபராகவே கட்டாயமாக இருக்கவேண்டுமா? எந்த ஒரு அற்புதமும் செய்யாதவர் கர்த்தரின் தீர்க்கதரிசியாக இருக்கமுடியாதா? முஹம்மது ஒரு அற்புதமும் செய்யவில்லை என்றுச் சொல்கிறார்கள். அற்புத அடையாளங்களின் அடிப்படையில் பார்த்தால், நாம் முஹம்மதுவை தீர்க்கதரிசி என்று ஏற்றுக் கொள்ளமுடியுமா?

உமர் பதில் 8: நீங்கள் சிறு பிள்ளைகளின் ஞாயிறு பள்ளி ஆசிரியை என்பதால், பைபிளில் காணப்படும் அற்புத அடையாளங்கள் பற்றியே அதிகமாக பிள்ளைகளுக்கு போதிக்கிறீர்கள் போல் தெரிகிறது. உங்கள் கேள்வி இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் சிந்திக்கச் செய்யும் கேள்வியாக உள்ளது. இப்போது அதற்கான பதிலைக் காண்போம்.

பழைய ஏற்பாட்டில், ஆபிரகாமுக்கு அடுத்து முதன் முதலாக ஒரு தீர்க்கதரிசி என்ற பட்டத்தோடு மக்களை சந்திக்க தேவன் அனுப்பிய மோசேயையும், புதிய ஏற்பாட்டில் அதே நிலையில் வந்த யோவான் ஸ்நானகனையும் நாம் இப்போது இந்த கேள்விக்காக‌ தியானிக்கப் போகிறோம், பிறகு, முஹம்மதுவை சந்திப்போம்.

மோசே மற்றும் யோவான் ஸ்நானகனை நாம் ஒப்பிட்டால், இவ்விருவருக்கும் இடையே அனேக வித்தியாசங்களைக் காணலாம். இவ்விருவரும் மிகப்பெரிய தீர்க்கதரிசிகளாக இருக்கிறார்கள். ஆனால், மோசேயைப் பற்றி பார்க்கும் போது, தேவனின் உதவியுடன் இவர் அற்புதங்கள் மேல் அற்புதங்களைச் செய்தார், ஆனால், யோவான் ஒரு அற்புதமும் செய்யவில்லை, இருந்த போதிலும் இயேசு கூறும் போது, "ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரிய தீர்க்கதரிசி ஒருவனுமில்லை" என்று கூறினார். ஒரு அற்புதமும் செய்யாத ஒரு தீர்க்கதரிசி, இயேசுவிடம் மிகப்பெரிய புகழ்ச்சியைப் பெற்றார் என்பதை இதன் மூலம் அறியலாம்.

மேலும், நாம் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளை வகைப்படுத்தும் போது, பெரிய தீர்க்கதரிசிகள் என்றும், சிறிய தீர்க்கதரிசிகள் என்றும் சொல்லுகிறோம். ஆனால், "பெரிய அல்லது சிறிய தீர்க்கதரிசிகள்" என்று நாம் கூறும் போது அவர்களின் தரத்தைப் பற்றியோ அல்லது அவர்கள் செய்த அற்புதங்கள் பற்றியோ கருத்தில் கொண்டு கூறுவதில்லை. அவர்கள் எழுதிய தீர்க்கதரிசன புத்தகங்களின் அளவைப் பொருத்தே நாம் அப்படி கூறுகிறோம்.

சுருக்கமாக கூறவேண்டுமென்றால், பைபிளைப் படிக்கும் ஒரு கிறிஸ்தவர் எப்படி அற்புதங்களை அதிகமாக செய்த மோசேயை மதிக்கிறாரோ, அதே நிலையில் தான் ஒரு அற்புதத்தையும் செய்யாத யோவான் ஸ்நானகனையும் மதிக்கிறார் .

எனவே, ஒருவர் தீர்க்கதரிசியாக இருக்கவேண்டுமென்றால், "அற்புதங்களை நிச்சயமாக செய்தே ஆகவேண்டும்" என்ற கட்டாயமில்லை. அவர் நீதிமானாகவும், கர்த்தர் சொல்லும் வார்த்தைகளை மக்களிடம் கொண்டு வந்துச் சொல்லும் சாதாரண மனிதனாகவும் இருந்தாலே போதும். இதற்கும் நாம் அனேக உதாரணங்களை பைபிளில் காணலாம். தீர்க்கதரிசிகளேயானாலும், அவர்கள் தவறுகள் செய்யும் போது, அதனை தேவன் அவர்களுக்கு வெளிப்படுத்தினால், மன்னிப்பு கேட்டு அவைகளை விட்டுவிடும் நபர்களே தேவனுடைய வேலைக்கு தகுதியானவர்களாக இருப்பார்கள்.

சரி, இப்போது சிலருக்கு கீழ்கண்ட கேள்விகள் எழும்:

1) ஒருவர் தீர்க்கதரிசியாக இருக்கவேண்டுமென்றால், "அற்புதங்கள்" செய்யவேண்டுமென்ற நிலை தேவையில்லை என்று இருக்கும் போது, ஏன் தேவன் பல தீர்க்கதரிசிகள் மூலமாக அற்புதங்கள் செய்தார்?

2) ஏன் மோசே கேட்ட போது, பார்வோனுக்காக மற்றும் இஸ்ரவேலுக்காக அற்புதங்கள் செய்யும் தகுதியோடு மோசேயை தேவன் அனுப்பினார்?

3) அவ்வளவு எதற்கு, ஏன் இயேசு கூட "நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்" என்றுச் சொல்லி, குறைந்தபட்சம் நான் செய்யும் அற்புத கிரியைகளையாவது கண்டு, என்னை நம்புங்கள் என்று கூறினார்?

4) கடைசியாக, ஒரு நபிக்கு அற்புதம் செய்யும் வரம் இல்லாவிட்டாலும் அவர் ஒரு நபியாக இருக்கமுடியும் என்றுச் சொன்னால், ஒரு அற்புதமும் செய்யாத முஹம்மதுவை நாம் ஏன் நம்பக்கூடாது? ஏன் அவர் ஒரு அற்புதமும் செய்யவில்லை என்று நாம் (கிறிஸ்தவர்கள்) குற்றம் சாட்டவேண்டும்?

இப்போது மேற்கண்ட கேள்விகளுக்கான பதில்களைக் காணலாம்.

நானே அதிகமாக பேசாமல், உங்களிடமிருந்தே இந்த கேள்விகளுக்கான விடையை பெற முயற்சி எடுக்கிறேன். நாம் அனைவரும் பைபிளை படிக்கிறோம், நூற்றுக்கணக்கன பிரசங்கங்களை கேட்கிறோம், ஆகையால், ஓரளவிற்கு நமக்கு பதில் சொல்லத்தெரியும். இந்த கேள்விகளை கேட்ட பிறகு உங்களுக்குத் தோன்றும் பதில்களை ஒவ்வொருவராக கூறுங்கள், அதன் பிறகு நான் சுருக்கமாக எல்லாவற்றையும் தொகுத்துக் கூறுகிறேன்.

முதலாவதாக, தேவன் ஏன் பல தீர்க்கதரிசிகள் மூலமாக அற்புதங்கள் செய்தார்? இதற்கு உங்களில் யாராவது பதில் சொல்லுங்களேன்?

சபை அங்கத்தினரிடமிருந்து ஒரு கரம் எழும்புகிறது: என் பெயர் சிவக்குமார், நான் என்னால் முடிந்த பதிலைச் சொல்கிறேன். ஒரு மனிதன் வேறு ஒரு மனிதன் சொல்லும் பொதுவான விஷயங்களை கேள்வி கேட்காமல் சில நேரங்களில் நம்புவான், ஆனால், அதே மனிதன் மார்க்க அல்லது மத விஷயங்கள் பற்றிச் சொல்லும் போது, அவனை எடுத்த எடுப்பிலேயே நம்புவது மிகவும் கடினமாக இருக்கும். எனவே, தேவன் தன் தீர்க்கதரிசிகளை அனுப்பும் போது, தேவைப்படும் நேரங்களில் அவர்கள் மூலமாக அற்புதங்கள் செய்வித்து, "இவன் என் பிரதிநிதியாக இருக்கிறான், இவனை நீங்கள் நம்பலாம் என்பதை மக்களுக்கு புரியவைக்க அற்புதங்களை அனுமதிக்கிறார்". தன்னை ஒரு தீர்க்கதரிசி என்றுச் சொல்லிக்கொள்கின்ற ஒரு நபர், நல்ல காரியங்களை பேசுவதோடு மட்டுமல்லாமல், ஒரு படிமேலே சென்று வியாதிகளை குணமாக்கி, அற்புதங்களைச் செய்துக் காட்டினால், இன்னும் அவர் மீது நம்பிக்கை வைக்க அது உபயோகமாக‌ இருக்கும். ஆக, அற்புதங்கள் என்பது கட்டாயமல்ல, ஆனால் சில நேரங்களில் அற்புதங்களை தேவன் ஒரு முக்கிய கருவியாக பயன்படுத்தி தன் செய்தியை மக்களிடம் சேர்க்கிறார்.

உமர்: சகோதரரே, நீங்கள் நன்றாக பதில் கூறினீர்கள். நீங்கள் சொன்னது உண்மையான வார்த்தைகள். அற்புதங்கள் என்பது சில நேரங்களில் தேவன் தம் பிள்ளைகள் மூலமாக செய்து, தம் ஊழியத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்.

அடுத்த கேள்வி: ஏன் மோசே கேட்ட போது, பார்வோனுக்காக மற்றும் இஸ்ரவேலுக்காக அற்புதங்கள் செய்யும் வல்லமையோடு மோசேயை அனுப்பினார்? "நான் அனுப்பினால் நீ போகவேண்டும், அவ்வளவு தான், கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது" என்று ஏன் தேவன் மோசேக்கு மறு உத்தரவு அளிக்கவில்லை, அதற்கு பதிலாக, ஒருசில அற்புதங்களை அப்போதே மோசேயை செய்யச் சொல்லி, மோசே அதை செய்துக்காட்டியபிறகு, அவரை இஸ்ரவேலர்களை விடுதலைச் செய்ய அனுப்பினார்.

இந்த கேள்விக்கு உங்களில் யார் பதில் சொல்லப்போகிறீர்கள்?

சபை அங்கத்தினரிடமிருந்து ஒரு கரம் எழும்புகிறது: என் பெயர் ருக்மணி, நான் ஒரு தனியார் கல்லூரி ஒன்றியில் ஆசிரியையாக இருக்கிறேன். மோசேவும், தேவனும் உரையாடிய அந்த உரையாடலை நாம் பார்த்தால், தேவன் அற்புதங்களோடு மோசேயை அனுப்பியது சரியானது தான் என்பது தெளிவாக புரியும்.

என் பைபிளில் நான் யாத்திராகமத்தை எடுத்துக்கொள்கிறேன். அதிலே மூன்றாம் அத்தியாயம் என்று நினைக்கிறேன், அதில் இந்த நிகழ்ச்சி உள்ளது. [எல்லாரும் தங்கள் பைபிளை யாத்திராகமம் மூன்றாம் அத்தியாயத்திற்கு திருப்புகிறார்கள்]

இதோ, இந்த மூன்றாம் அத்தியாயத்தில் முதல் சில வசனங்களை நாம் படித்தால், மோசே எரியும் முட்செடியை பார்க்கிறார், பிறகு தேவன் பேசுகிறார், இஸ்ரவேல் படும்வேதனையை நான் கண்டேன், அவர்களை கானான் தேசத்திற்கு கொண்டு வருவேன். ஆகையால் உன்னை பார்வோனிடம் அனுப்புகிறேன் என்றுச் சொல்கிறார்.

அப்பொழுது மோசே மிகவும் முக்கியமான கேள்வியை கேட்கிறார்: நான் இஸ்ரவேலர்களிடம் சென்று உங்கள் பிதாக்களுடைய தேவன் என்னை அனுப்பினார் என்றுச் சொன்னால், "அந்த தேவனின் பெயர்" என்ன என்று கேட்பார்களே, அதற்கு நான் என்ன பதில் சொல்வேன் என்று கேட்கிறார். அதற்கு தேவன் பதில் அளிக்கிறார் மற்றும் பார்வோன் உங்களை போக விடமாட்டான், எனவே, நான் அனேக அற்புதங்கள் செய்து அதன் மூலமாக உங்களை விடுதலையாக்கி கொண்டு வருவேன் என்று தேவன் கூறுகிறார்.

அடுத்ததாக, மோசே கேட்ட கேள்வி "மோசே ஒரு தீர்க்கதரிசி என்று மக்களை நம்பவைக்கும்" மிகவும் முக்கியமான கேள்வி, அதாவது பார்வோன் அற்புதங்களைக் காண்பான், கடைசியாக எங்களை அனுப்பிவிடுவான், ஆனால், இந்த மக்கள் என்னை நம்பவேண்டுமே, நான் பொய் சொன்னேன் என்றுச் சொல்வார்களே, உனக்கு தேவன் தரிசனமாகவில்லை என்றுச் சொல்வார்களே. அதற்கு என்ன பதில்? முதலாவது இஸ்ரவேல் மக்கள் என்னை நம்பினால் தானே நான் அவர்களின் பிரதிநிதியாக பார்வோனிடம் பேசமுடியும், இவர்களே என்னை நம்பவில்லையானால், பார்வோனிடம் செல்வது எப்படி? ஆரம்பமே அறைகுறையாக இருந்தால், முடிவு எப்படி இருக்கும்? நான் அதிகமாக இவர்களை கட்டாயப்படுத்தினால், என்னை ஒரு பைத்தியம் என்றுச் சொல்லி இவர்களே கொன்றுபோட்டுவிடுவார்களே.

இப்போது இதற்கு என்ன வழி?

மோசேயின் இந்த கேள்விக்கு, தேவன் மோசேயை கடிந்துக்கொள்ளவில்லை, அதற்கு மாறாக மூன்று அற்புத அடையாளங்களை செய்துக்காட்டி, மக்களை நம்பவைக்கிறார்.

யாத்திராகமம் 4: 1-9

1 அப்பொழுது மோசே: அவர்கள் என்னை நம்பார்கள்; என் வாக்குக்குச் செவிகொடார்கள்; கர்த்தர் உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள் என்றான்.

2 கர்த்தர் அவனை நோக்கி: உன் கையிலிருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான்.

3 அதைத் தரையிலே போடு என்றார்; அவன் அதைத் தரையிலே போட்டபோது, அது சர்ப்பமாயிற்று; மோசே அதற்கு விலகியோடினான்.

4 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: உன் கையை நீட்டி, அதின் வாலைப் பிடி என்றார்; அவன் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தபோது, அது அவன் கையிலே கோலாயிற்று.

5 ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்குத் தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார்.

6 மேலும், கர்த்தர் அவனை நோக்கி: உன் கையை உன் மடியிலே போடு என்றார்; அவன் தன் கையைத் தன் மடியிலே போட்டு, அதை வெளியே எடுக்கும்போது, இதோ, அவன் கை உறைந்த மழையைப்போல வெண்குஷ்டம் பிடித்திருந்தது.

7 அவர்: உன் கையைத் திரும்பவும் உன் மடியிலே போடு என்றார். அவன் தன் கையைத் திரும்பத் தன் மடியிலே போட்டு, தன் மடியிலிருந்து அதை வெளியே எடுத்தபோது, அது திரும்ப அவனுடைய மற்றச் சதையைப்போலாயிற்று.

8 அப்பொழுது அவர்: முந்தின அடையாளத்தை அவர்கள் கண்டு, உன்னை நம்பாமலும் உனக்குச் செவிகொடாமலும் போனால், பிந்தின அடையாளத்தைக் கண்டு நம்புவார்கள் .

9 இவ்விரண்டு அடையாளங்களையும் அவர்கள் நம்பாமலும், உன் வாக்குக்குச் செவிகொடமலும் இருப்பார்களானால், அப்பொழுது நீ நதியின் தண்ணீரை மொண்டு நிலத்தில் ஊற்றுவாயாக; நதியில் மொண்ட தண்ணீர் வெட்டாந்தரையிலே இரத்தமாகும் என்றார்.

மக்கள் சந்தேகம் கொள்வது நியாயமானது தான், அவர்களின் சந்தேகங்களை தீர்த்துவைப்பது ஒரு தீர்க்கதரிசியின் கடமை அல்லது அவனை அனுப்புகிற தேவனின் கடமை. அதனைத் தான், தேவன் இங்கு செய்கிறார். [இதனை அல்லாஹ் செய்தாரா என்பது தான் முக்கியமான கேள்வி] மக்களின் அவநம்பிக்கையைச் சொல்லி தன் ஊழியத்தை தட்டிக் கழிக்கலாம் என்று நினைத்த மோசேவினால், இப்போது மறுப்பு சொல்லமுடியவில்லை, ஏனென்றால், மக்கள் அற்புதங்களைக் கண்டால், நிச்சயமாக மார்க்கவிஷயங்களில் அதிகமாக நம்புவார்கள். அதன் பிறகு, மோசே தன்னால் சரியாக பேச வராது என்றுச் சொல்கிறார், அதன் பிறகு தேவன் அதற்கும் ஒரு வழிமுறையைச் சொல்கிறார்.

ஆக, ஒரு நபர் திடீரென்று வந்து நான் உங்கள் நபி, உங்களை விடுதலைச் செய்ய வந்துள்ளேன், உங்கள் பிரதிநிதியாக நான் பார்வோனிடம் பேசுகிறேன் என்றுச் சொன்னால்? மக்கள் என்ன பதில் சொல்வார்கள்? உடனே நம்பிவிடுவார்களா? அவர்களின் பிழைப்பில் மண்ணை வாரிப்போட ஒருவர் நினைக்கும் போது, அவர்களின் வாழ்க்கையையே மாற்றிவிடும் முடிவுகளை நான் உங்களுக்காக எடுக்கிறேன் என்று ஒருவர் சொல்லும் போது, மக்கள் அமைதியாக கேட்பார்களா? நிச்சயமாக கேட்கமாட்டார்கள். இப்படிப்பட்ட பெரிய முடிவுகளை மக்கள் நமபவேண்டுமென்றால், தங்கள் எதிர்காலத்தை ஒரு மனிதனின் வார்த்தைகள் மீது வைக்கவேண்டுமென்றால், அந்த மனிதன் சொல்வது உண்மையானது தான் என்பதை அவர்கள் நம்பும்படி, "அற்புதங்கள் அவசியமாகின்றன".

எனவே, மோசே மற்றும் தேவனின் இந்த உரையாடல் 100% மிகவும் சரியானது, மோசேயின் கேள்விகளில் நியாயம் இருந்தது, அதனை தேவன் உணர்ந்து, அற்புதங்கள் மூலமாக, மக்களை நம்பவைத்தார். மேலே உள்ள வசனங்களை சிறிது படித்துப் பாருங்கள், ஒவ்வொரு அற்புதத்தையும் சொல்லி, இதையும் கண்டு மக்கள் நம்பாமல் போவார்கள் அப்போது, இன்னொரு அற்புதம் செய் என்றுச் சொல்லி அடுத்தடுத்து மூன்று அற்புதங்களை கொடுத்து அனுப்புகிறார்.

பார்வோனை பணியவைக்க தேவன் 10 அற்புதங்களைச் செய்தார், அதே தேவன் தன் சுய ஜனங்களை நம்பவைக்க 3 அற்புதங்களை செய்யச் சொல்லி அனுப்புகிறார். இதில் ஜனங்கள் மீது தேவன் கோபம் கொள்ள அவசியமே இல்லை, இது இயற்கையான சந்தேகமே. இப்படிப்பட்ட பெரிய முடிவுகளை எடுக்க, மக்கள் ஒரு தீர்க்கதரிசியை நம்ப, நிச்சயமாக அற்புதங்கள் அவசியமே.

உமர்: மிகவும் அருமையாக கூறினீர்கள். கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும். ஆக, மோசே மற்றும் தேவனின் இந்த உரையாடல் மிகவும் முக்கியமான உரையாடலாகும், அதாவது மனிதர்களின் இயற்கை குணமென்ன? அவர்கள் ஏன் எடுத்த எடுப்பிலேயே பெரிய முடிவுகளுக்கு "ஆம்" என்று கண்மூடித்தனமாக பதில் சொல்லக்கூடாது என்பதற்கு இந்த உரையாடல் தெளிவான பதில் தருகிறது.

சரி, அடுத்த கேள்விக்குச் செல்வோம்.

இயேசு "நான் செய்யும் அற்புத அடையாளங்களைக் (கிரியைகளைக்) கண்டாவது என்னை நம்புங்கள்" என்று ஏன் கூறினார்? இதற்கு யார் பதில் சொல்லப்போகிறீர்கள்?

[கூட்டத்திலிருந்து ஒரு கரம் எழும்புகிறது]

என் பெயர் சாலமோன், இதுவரை கேட்ட பதில்களிலிருந்தே இந்த கேள்விக்கான விடையை கொடுத்து விட முடியும். அதாவது, சில வேளைகளில் மனிதர்களின் ஞானமான பேச்சுக்களை கேட்டு மனிதர்கள் நம்பவில்லையானாலும், இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்களைக் கண்டால் நிச்சயமாக நம்புவார்கள். ஆனால், அக்கால யூத தலைவர்கள், அனேக இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்களை தங்கள் கண்களால் கண்டும் நம்பாத காரணத்தினால், இயேசு இப்படி கூறினார்.

பொதுவாக மனிதர்கள் அற்புதங்களைக் கண்டால் இயற்கையாக நம்புவார்கள், இந்த பொதுவான அறிவு கூட அல்லது நம்பிக்கை கூட இவர்களிடத்தில் இல்லையே என்று இயேசு அறிந்து இப்படி கூறினார். ஆக, ஒரு தீர்க்கதரிசி என்றால் கட்டாயமாக அற்புதம் செய்யவேண்டும் என்ற கட்டாயமில்லை, ஆனால், அவசியம் வரும் போது, நிச்சயமாக ஒரு அற்புதம் செய்து, தேவன் 'இவன் என் தீர்க்கதரிசி தான் என்பதை நிருபிக்க' அற்புதத்தை பயன்படுத்திக்கொள்வார்.

ஒரு தீர்க்கதரிசிக்கான அனேக தகுதிகளில், அற்புதம் செய்வது ஒரு தகுதியாகும். சிலருக்கு சில வேளைகளில் இது முக்கியமான முதலாவது தகுதியாகவும் (மோசே), சிலருக்கு அற்புதம் என்பது ஒரு தேவையில்லாத கருவியாகவும் (யோவான் ஸ்நானகன்) இருக்கும். புதிய ஏற்பாட்டில் இயேசுவிற்கும், இதர அப்போஸ்தலர்களுக்கும், மற்றும் பழைய ஏற்பாட்டின் முக்கியமான தீர்க்கதரிசிகளுக்கும் அற்புதங்கள் என்பது தங்கள் ஊழியங்களுக்கு தூண்களாகவும் இருக்கிறது.

உமர்: அருமை அருமை. மிகவும் அருமையாக கூறினீர்கள். இப்போது கடைசி கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்.

கேள்வி: "ஒரு நபிக்கு அற்புதம் செய்யும் வரம் இல்லாவிட்டாலும் அவர் ஒரு நபியாக இருக்கமுடியும் என்றுச் சொன்னால், ஒரு அற்புதமும் செய்யாத முஹம்மதுவை நாம் ஏன் நம்பக்கூடாது? ஏன் அவர் ஒரு அற்புதமும் செய்யவில்லை என்று நாம் (கிறிஸ்தவர்கள்) குற்றம் சாட்டவேண்டும்?".

இதுவரை நம்முடைய சகோதர சகோதரிகள் சொன்ன பதில்களின் சுருக்கம் இதோ:

1) ஒருவர் தீர்க்கதரிசியாக இருக்கவேண்டுமென்றால், அவரது வாழ்க்கையில் அவர் ஒரு முறையாவது அற்புதம் செய்தாகவேண்டும் என்ற கட்டாயமில்லை.

2) அற்புதம் என்பது மக்களின் மனதில் நம்பிக்கையை கொடுக்க தேவன் பயன்படுத்தும் அனேக கருவிகளில் அற்புதமும் ஒன்று.

3) சில தீர்க்கதரிசிகளுக்கு அவர்களின் ஊழியத்தின் தன்மை, இடம் போன்றவற்றை பொறுத்து அற்புதங்கள் அவசியமாகும் (மோசே).

4) சில தீர்க்கதரிசிகளுக்கு அவர்களின் ஊழியத்தின் தன்மை, இடம் போன்றவற்றை பொறுத்து அற்புதங்கள் அவசியமே இல்லை (யோவான் ஸ்நானகன்)

இப்போது நம் கேள்வி என்னவென்றால், முஹம்மதுவிற்கு தன் ஊழியத்தைப் பொருத்து, அதன் வீரியத்தைப் பொருத்து பார்ப்போமானால், அவருக்கு அற்புதம் அவசியமா இல்லையா? அவசியம் என்றுச் சொன்னால், ஏன் அவசியம்? அவசியமில்லையென்றுச் சொன்னால், ஏன் அவசியமில்லை?

இந்த கேள்விகளுக்கு நாம் பதில்களை தெரிந்துக்கொண்டால், முஹம்மது ஒரு பொய்யான தீர்க்கதரிசியா அல்லது உண்மையான தீர்க்கதரிசியா என்பது தெளிவாக விளங்கும். புதிய மற்றும் பழைய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் நாம் இதுவரை கண்ட விவரங்களின் படி, முஹம்மது ஒரு கள்ள நபி என்று பார்த்தோம். ஆனால், இப்போது "அற்புதம் செய்யும் தகுதியின் அடிப்படையில்" அவரது நபித்துவத்தைப் பற்றி காண்போம்.

1) ஊழியத்தின் தன்மை (நபித்துவத்தின் வகை):

தேவன் சில தீர்க்கதரிசிகளை "மக்களை எச்சரிக்க மட்டும்" அனுப்புகிறார், இவர்கள் மூலமாக அவர் அற்புதம் செய்வதில்லை, உதாரணத்திற்கு யோவான் ஸ்நானகனையும், மற்றும் இதர சில தீர்க்கதரிசிகளையும் குறிப்பிடலாம்.

யோவானின் ஸ்நானகனின் ஊழியம் எப்படி இருந்தது: இவர் மக்களை எச்சரித்தார், தவறுகளை கண்டித்தார், கேட்டு திருந்துபவர்கள் திருந்தட்டும், கேளாதவர்கள் அவர்கள் வழியில் போகட்டும், அவ்வளவே. தான் பெரிய தீர்க்கதரிசி என்றுச் சொல்லி மக்களை கட்டாயப்படுத்தியோ, சாப‌மிட்டோ, தன் சீடர்களை ஒன்று சேர்த்துக்கொண்டு, மக்கள் மீது யுத்தம் செய்தோ தன் செய்தியை சொல்லவில்லை. ஆக, இந்த வகை தீர்க்கதரிசிகள், தேவன் கொடுத்த செய்தியை மக்களுக்கு கொடுப்பார்கள், கட்டாயப்படுத்தமாட்டார்கள். ஒருவேளை, இவர்கள் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டால் தப்பித்துச் செல்வார்கள் அல்லது தங்கள் ஊழியத்திற்காக உயிர் தியாகம் செய்து மரிப்பார்கள்.

வேறு வகையில் சொல்லவேண்டுமென்றால் இவர்களின் செய்தி மக்களின் மனதிலே மாற்றத்தை கொண்டு வரும் செய்தியாக இருக்கும், மக்களின் அரசியல் வாழ்க்கை சம்மந்தப்பட்ட பெரிய முடிவுகள் எடுக்கும் படி இவர்களின் செய்தி இருக்காது. ஆக, "மனதில் மாற்றம் செய்யுங்கள்" அல்லது "மனந்திரும்புங்கள்" என்ற வகையில் ஊழியம் செய்யும் நபிமார்கள் அற்புதம் செய்யவில்லையானாலும் பரவாயில்லை, நம்புபவர்கள் நம்பட்டும், நம்பாதவர்கள் நம்பாமலிருக்கட்டும்.

இரண்டாவதாக, இன்னொரு வகையான ஊழியம் செய்பவர்களும் இருக்கிறார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக மோசேயின் ஊழியத்தைக் கூறலாம். அதாவது, மக்கள் மிகப்பெரிய முடிவை எடுக்கவேண்டும் என்று இந்த தீர்க்கதரிசி கூறுவார். உதாரணத்திற்கு, 400க்கும் அதிகமான ஆண்டுகள் எகிப்தில் வாழ்ந்த இஸ்ரவேல் ஜனங்கள், தங்கள் இருப்பிடத்தைவிட்டுவிட்டு, மோசே என்ற ஒரு மனிதன் சொல்லும் வார்த்தைகளை கேட்டு,

அ) பார்வோன் இராஜாவிற்கு எதிராக செயல்படவேண்டும்,

ஆ) முழு குடும்பமும், இந்த ஒரு மனிதனின் (மோசே) பேச்சைக் கேட்டு, நாடு விட்டு நாடு கடந்துச் செல்லவேண்டும்.

இ) மட்டுமல்ல, தாங்கள் செல்லப்போகும் நாட்டில் ஏற்கனவே குடியிருக்கும் மக்களை துரத்தி,யுத்தம் செய்து, அங்கு இடம் பெயரவேண்டும்.

இப்படிப்பட்ட முடிவுகளை எடுக்கவேண்டுமென்றால்,

1) "ஏதோ ஒரு மனிதன் சொல்லும் பேச்சை கேட்டு எடுக்கமுடியுமா?"

2) இதற்கு உண்மையாகவே தேவனின் அங்கீகாரம் உண்டா?

3) தேவன் தங்களோடு இருந்து வழி நடத்துவாரா?

என்ற கேள்விகளுக்கு முதலில் பதில் தெரிந்துக்கொள்ளாமல், மோசேயை பின்பற்ற முடியுமா? இந்த கேள்விகளுக்கெல்லாம், பதில் ஒன்றே ஒன்று தான் உண்டு, அது "அற்புதங்கள்" என்பதாகும். இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்கள் செய்து மக்களின் மனதில் நம்பிக்கை ஊட்டினால் தவிர, மக்கள் நம்பமாட்டார்கள். தான் ஒரு உண்மையான தீர்க்கதரிசி என்று மோசே நிருபித்துக்கொண்டால் தவிர, இம்மக்கள் இவரை பின் பற்றமுடியாது. இது இரண்டாவது வகையான தீர்க்கதரிசிகளின் ஊழியம்.

இந்த வகையில் தீர்க்கதரிசியாக வரும் எந்த ஒரு நபராக இருந்தாலும் சரி, அவர் அற்புதங்கள் செய்பவராக இருக்கவேண்டும், அப்படி இல்லையானால், அந்த நபர் ஒரு பொய் நபியாவார், அவரை அனுப்பினவர் யெகோவா தேவன் இல்லை என்பது தெளிவாக புரிந்துவிடும்.

இப்போது இவ்விருவகையான நபித்துவத்தை கருத்தில் கொண்டு முஹம்மதுவை நாம் ஆராய்ந்தால் அவர் யார் என்பது விளங்கும்.

1) முஹம்மது அற்புதங்கள் செய்யாமலேயே நபியாக இருக்கமுடியும்:

முதலாவது முஹம்மது மக்காவில் தம் ஊழியத்தை ஆரம்பித்தார், தன்னை ஒரு தீர்க்கதரிசி என்றுச் சொல்லிக்கொண்டார், அனேக ஆண்டுகள் இப்படி உழைத்தார். ஒரு சிலர் மட்டுமே இவரது செய்தியைக் கேட்டு இவர் பக்கம் வந்தார்கள். மட்டுமல்ல மக்காவாசிக‌ள் இவரையும், இவரது சகாக்களையும் துன்பபடுத்தி, கொடுமைப்படுத்தினார்கள்.

இந்த நிலையில் முஹம்மது ஒரு யோவான் ஸ்நானகனைப்போல செயல்பட்டார், அதாவது தன் செய்தியைச் சொன்னார், மக்காவாசிக‌ள் கேட்டாலும் சரி, கேட்காவிட்டாலும் சரி, பாடுகளின் மத்தியில் தன் ஊழியத்தைச் செய்தார். ஆக, இந்த நிலையில் அவருக்கு அற்புதங்கள் தேவையில்லை. ஏனென்றால், இவர் கட்டாயப்படுத்தவில்லை, கையில் கத்தியை ஏந்தவில்லை, மனந்திரும்புங்கள் என்று கூறினார். ஆக, கையில் கத்தியை ஏந்தாத நிலையில் இருக்கும் இவருக்கு அற்புதங்கள் செய்யும் வல்லமை தேவையில்லை. அல்லாஹ் அற்புதங்கள் செய்து தன் செய்தியை உறுதிப்படுத்தவேண்டிய அவசியமில்லை.

முஹம்மது இப்படியே தன் வாழ் நாளெல்லாம் ஊழியம் செய்து இருந்திருந்தால், அவரிடம் "அற்புதங்களை" மக்கள் (கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள்) எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்.

2) முஹம்மது அற்புதங்கள் செய்தால் மட்டுமே, தன் நபித்துவத்துக்கான அடிப்படை தகுதியை உடையவராக மாறுவார்:

முஹம்மது மக்காவில் அமைதியாக தன் செய்தியை சொன்னார், மக்களை கட்டாயப்படுத்தாமல் இருந்தார். ஆனால், அவர் மதினாவிற்கு இடம்பெயர்ந்த பிறகு அனேக போர்களைச் செய்தார், தன்னை எதிர்த்தவர்களை கொன்றார், தான் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் இறைவனை (பலிக்கடாவாக்கினார்) பயன்படுத்திக்கொண்டார். வன்முறையில் ஈடுபடும் முஹம்மதுவிற்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தவர் யார்? என்பதை அறியவேண்டும். அவர் செய்யும் அனைத்து காரியங்களுக்கும் இறைவன் தான் காரணம் என்றுச் சொன்னால், அந்த காரியத்திற்கு இறைவனின் சாட்சி வேண்டும். அல்லாஹ் அற்புதங்கள், அடையாளங்கள் செய்து தன் நபியின் நபித்துவத்தை நிருபித்து இருந்திருக்கவேண்டும். ஆனால், இது நடக்கவில்லை.

மோசே தேவனிடம் கேட்ட கேள்விகளை முஹம்மது அல்லாஹ்விடம் கேட்கவில்லை. தன்னை அவர்கள் நபி என்று நம்பவேண்டும் என்று முஹம்மது கூறினாரே தவிர, தன் நபித்துவத்தை நிருபித்துக்கொள்ள எந்த ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களை அல்லாஹ் செய்யவில்லை. மோசே எங்கே, முஹம்மது எங்கே, யெகோவா தேவன் எங்கே, அல்லாஹ் எங்கே. இவ்விருவரும் நேர் எதிர் துருவங்கள்.

நாளைக்கு ஒருவன் வருவான், தன்னை நபி என்றுச் சொல்லுவான், ஒரு புதிய மதத்தை உருவாக்குவான், எல்லா இஸ்லாமியர்களும் தன் மார்க்கத்திற்கு வரவேண்டும் என்று கூறுவான், மாறவில்லையானால் மரண தண்டனை என்பான். அவனை பின்பற்ற ஒரு கூட்ட மக்களை சேர்த்துக்கொள்வான், பலவீனமாக மக்களை தாக்குவான், இதனை தன் இறைவன் செய்யும் படிச் சொன்னார் என்பான். இந்த சூழ்நிலையில் இஸ்லாமியர்கள் என்ன செய்வார்கள்? இந்த புதிய நபியை ஏற்றுக்கொள்வார்களா? அல்லது அவரிடம் தன் நபித்துவத்திற்கு அத்தாட்சி என்னவென்று கேட்பார்களா? சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், மனந்திரும்புங்கள் என்றுச் சொல்லி, தன் செய்தியை மக்களின் மனதில் அமைதியாக பதியவைக்கும் ஒரு நபிக்கு அற்புதங்கள் தேவையில்லை. ஆனால், நாடு, அரசியல், சட்டம், யுத்தம், நாடுகளை பிடித்தல், நாட்டுக்கான சட்டங்களை உருவாக்கி தவறு செய்பவர்களை தண்டித்தல போன்ற மிகப்பெரிய மாற்றங்களைச் செய்யும் படி தன்னை இறைவன் அனுப்பினார் என்றுச் சொல்லும் ஒரு நபிக்கு கட்டாயமாக அற்புதங்கள் தேவை. இப்படிப்பட்ட ஊழிய அழைப்பில் வந்தவர் மோசே, ஆகையால் தேவன் மோசேயை வல்லமையோடு, அற்புதங்களோடு அனுப்பினார். ஆனால், அதே பாணியில், அதே ஊழிய அழைப்பில் வந்தவர் என்று இஸ்லாமியர்கள் கூறிக்கொள்ளும் தங்கள் நபிக்கு மட்டும், அல்லாஹ் அற்புதங்கள் இல்லாமல் அனுப்பினார். அற்புதங்களோடு மட்டுமே இறைவன் அவரை அனுப்பவேண்டும், அப்படி அனுப்பவில்லையானால் அவர் நபியுமல்ல, அவரை அனுப்பியவனும் இறைவனுமல்ல.

ஆக, முஹம்மது ஒரு கள்ள நபி என்பதை அறிய உதவும் அனேக காரணங்களில், "அற்புதங்களை" முஹம்மது செய்யாததும் ஒரு காரணமாகும்.

யோவான் ஸ்நானகன் அற்புதங்களைச் செய்யவில்லையானாலும் அவரை நாம் நபி என்று நம்பலாம், ஏனென்றால், அவர் ஒரு கத்தியை எடுத்து மக்களின் கழுத்து பக்கத்தில் வைத்து, தன் போதனையை செய்யவில்லை. ஆனால், முஹம்மது கட்டாயத்தின் பெயரில் தன் மார்க்கத்தை பரப்பினார், தன்னை நபி என்று ஏற்கும் படி அனேக நாடுகளுக்கு கடிதம் எழுதினார், பலவீனமான நாடுகள் அவரை நபி என்று அங்கீகரித்தன, எதிர்த்த நாடுகளோடு, இனங்களோடு மக்களோடு அவர் யுத்தம் செய்தார். இப்படிப்பட்டவரை மக்கள் நபி என்று நம்புவது எப்படி? மக்களை நம்பவைக்க வன்முறையை அல்ல, அற்புதங்களை முஹம்மது செய்திருக்கவேண்டும். ஆனால், அதில் அவர் தோல்வியுற்றதால், அவர் நபித்துவ பரிட்சையிலும் தோல்வியுறுகிறார்.

ஆக, மனதளவில் மாற்றத்தை உண்டாக்கும் நபிக்கு அற்புதங்கள் தேவையில்லை, நாட்டையும் சட்டத்தையும், ஆட்சியையும் தன் கையில் எடுக்கும் எந்த நபிக்கும் அற்புதங்கள் தேவை, அவரை அனுப்பும் இறைவனும் இதனை கடமையாக எண்ணவேண்டும்.

அடுத்த கேள்விக்குச் செல்வோம்.

கேள்வி 9: என் பெயர் ராஜாராம். முஹம்மது அற்புதங்கள் செய்யவில்லை என்று என் இஸ்லாமிய நண்பர்கள் ஏற்கிறார்கள். ஆனால், "குர்‍ஆன் தான்" முஹம்மதுவிற்கு அல்லாஹ் கொடுத்த அற்புதம் என்றுக் கூறுகிறார்கள். குர்‍ஆனைப் போல ஒரு நூல் உலகில் இல்லை என்றுச் சொல்கிறார்கள், அது வாழும் அற்புதம் என்கிறார்கள். என் கேள்வி என்னவென்றால், குர்‍ஆன் முஹம்மதுவின் நபித்துவத்திற்கு கிடைத்த அற்புதகமாக நாம் ஏற்கலாமா?

உமர் பதில் 9:

இந்த கேள்வியை நான் எதிர்ப்பார்த்தேன். இயேசுவைப் போலவும், அவரது சீடர்களைப் போலவும், இன்னும் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளைப் போலவும் அற்புதங்களை செய்யாத தங்கள் நபியான முஹம்மதுவிற்கு கிடைத்த கடைசி ஆயுதம் "குர்‍ஆன்". இதனை விட்டால் இஸ்லாமியர்களுக்கு தங்கள் நபியின் நபித்துவத்தை நிருபிக்க வேறு எதுவும் கிடைக்காது.

கேட்கிறவன் கேனையாக இருந்தால் சொல்கிறவன் எந்த பெரிய பொய்யையும் சொல்லுவான். அதாவது நாம் குர்‍ஆனை படிப்பதில்லை என்பதினாலும், நமக்கு அரபி மொழி தெரியாது என்பதினாலும், ஒரு வேளை நாம் தமிழ் அல்லது ஆங்கில குர்‍ஆனை படித்து, இது வேதமா என்று கேள்வி கேட்டால், நீங்கள் படிப்பது மொழியாக்கம் ஆகையால் தான் உங்களுக்கு புரியவில்லை, குர்‍ஆனின் மூல மொழியில் படித்தால் தான் குர்‍ஆனின் அர்த்தம் புரியும் என்று இஸ்லாமியர்கள் கூறுவார்கள்.

குர்‍ஆன் ஒரு அற்புதமா?

சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், குர்‍ஆன் ஒரு அற்புதமல்ல, அது ஒரு சிறந்த இலக்கிய நூலுமல்ல, குறைந்தபட்சம் சாதாரண மனிதனுக்கு புரியும் அளவிற்கு கோர்வையாக எழுதப்பட்ட ஒரு நூலுமல்ல.

உண்மையச் சொல்லவேண்டுமென்றால், மக்கள் குர்‍ஆனை படித்து இஸ்லாமை புரிந்துக்கொள்வதை விட, இஸ்லாம் பற்றி குழப்பமடைவதே அதிகம்.

[குர்‍ஆனைப் பற்றிய ஒரு சுருக்கத்தை நாம் "கிறிஸ்தவ சபையே! விழிமின், எழுமின் பாகம் 1ல் கண்டுள்ளோம்]

குர்‍ஆன் ஒரு அற்புதமல்ல, இது இஸ்லாமியர்களால் சொல்லப்படும் பொய்யாகும், வாழ்நாளெல்லாம் குர்‍ஆனை அரபியில் படித்தால் தான் அதிக நன்மை என்று நம்பிக்கொண்டு, குர்‍ஆனின் வசனங்களின் பொருளை அறியாமல், படிக்கும் சராசரி இஸ்லாமியர்கள் நம்மிடம் அடிக்கடி சொல்லும் பொய் "குர்‍ஆன் ஒரு வாழும் அற்புதம்" என்பதாகும். நன்றாக கவனியுங்கள், பிறவியிலிருந்தே கண்கள் இல்லாத ஒரு மனிதன், தாஜ்மஹாலின் அழகை வர்ணித்தால், அப்படிப்பட்டவன் சொல்வதை நீங்கள் நம்புவீர்களா? அதே போலத்தான், குர்-ஆனை அரபியில் மட்டும் படித்துவிட்டு, நம்மிடம் வந்து பெரிய பெரிய கதைகளைச் சொல்வார்கள் முஸ்லிம்கள். இப்போது சராசரி மனிதனுக்கும் புரியும் படி குர்‍ஆன் ஒரு அற்புதமா? என்பதை காண்போம்.

1) வேதம் என்பது இறைவன் மக்களின் வழிகாட்டுதலுக்காக கொடுத்த புத்தகம் என்று பொதுவாகச் சொல்லுவோம். ஆனால், குர்‍ஆனை மட்டும் படித்து மக்கள் வழிநடத்தப்படுவார்களா? குர்‍ஆனை படித்து மக்கள் இஸ்லாமைப் பற்றி அறிந்துக்கொள்வார்களா? குறைந்தபட்சம், ஒரு நாளுக்கு எத்தனை முறை தொழவேண்டும் எப்படி தொழவேண்டும் போன்றவைகளை மக்கள் அறிந்துக்கொள்ள முடியுமா? போன்ற கேள்விகளை நாம் கேட்டால், இதற்கு "குர்‍ஆனை படித்து ஒரு மனிதன் இஸ்லாமை முழுவதுமாக அறிய முடியாது" என்பது தான் பதிலாகும். எந்த நோக்கத்திற்காக வேதம் கொடுக்கப்படுகின்றதோ, அந்த நோக்கத்தையே அந்த வேதத்தால் நிறைவேற்ற முடியவில்லையானால், அதனை "வேதம்" என்று அழைப்பதெப்படி? இப்படிப்பட்ட ஒரு புத்தகம் தான் குர்‍ஆன், இது எப்படி அற்புதமாகும்? குர்‍ஆன் எப்படி முஹம்மதுவிற்கு அல்லாஹ்வினால் கொடுக்கப்பட்ட அற்புதம் என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள்?

2) அடுத்தபடியாக, ஒரு இறைவேதம் என்றால், அது பிழையற்ற ஒன்றாக இருக்கவேண்டும். எழுத்துக்கு எழுத்து அல்லாஹ்வின் வார்த்தை என்று இஸ்லாமியர்கள் நம்மிடம் கூறுவார்கள், ஆனால், குர்‍ஆனில் உள்ள முரண்பாடுகள், எழுத்துப்பிழைகள், கருத்துப் பிழைகள், இலக்கண பிழைகள், சரித்திர தவறுகள், விஞ்ஞான பிழைகள் என்று அனேக தவறுகள் இருக்கும் போது அது எப்படி வேதமாகும்? அது எப்படி அற்புதமாகும்? [நமக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தால், இந்த பிழைகள் அனைத்தையும் பற்றி விவரமாக பேசுவோம். அதுவரை எங்களுக்கு நேரமில்லை என்றுச் சொல்லுபவர்கள் இந்த தொடுப்புகளை சொடுக்கி, தமிழிலும், ஆங்கிலத்தில் குர்‍ஆனின் பிழைகளை, முரண்பாடுகளை அறிந்துக்கொள்ளுங்கள்: http://isakoran.blogspot.com/ and http://www.answering-islam.org/tamil/quran.html]

3) மேலும், இறைவன் ஒருவனே, உலக மக்கள் அனைவரும் அவரது படைப்புக்கள் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள், தங்கள் தொழுகையில் இன்னும் ஏன் அரபியை பயன்படுத்துகிறார்கள்? வேதம் மக்களுக்காக, மக்கள் புரிந்துக்கொண்டு, அதன் மூலமாக இறைவனை தொழுதுக்கொள்வதற்காக கொடுக்கப்படுகிறது என்று இருக்கும் போது, புரியாத மொழியில் குர்‍ஆனை படிப்பதினால் ஒரு சராசரி மனிதனுக்கு என்ன நன்மை? அர்த்தம் புரியவில்லையானாலும், நானும் குர்‍ஆனை படித்தேன் என்று பெருமையாக சொல்லிக்கொள்ள முடியுமே தவிர, இறைவனின் வார்த்தைகளை புரிந்துக்கொண்டு, அவனுக்கு கீழ்படிய முடியுமா?

4) அரபியில் படித்தால் தான் இலக்கிய நயம், மொழி நயம் நன்றாக இருக்கும் என்று இஸ்லாமியர்கள் சொல்வார்களானால், யாருக்கு வேண்டும் இலக்கிய நடை? யாருக்கு வேண்டும் மொழி நயம்? தன் வாழ்க்கையைப் பற்றி தனக்கே சரியாக புரியாத பாமர மனிதனுக்கு இலக்கிய நடை தேவையா? மொழி நயம் தேவையா? "தீமையை செய்யாதே நன்மையை செய்" என்பதை அவனுக்கு புரியும் தமிழில் சொல்லி அவனுக்கு வழிகாட்டுவாயா? அல்லது அரபி மொழியில் அவனுக்குச் சொல்லி, இதனை ஒரு நாளுக்கு ஐந்து முறை ஓது என்றுச் சொல்லி, மருத்துவர் கசப்பான மாத்திரைகளை கொடுத்து, ஒரு நாளுக்கு முன்று முறை சுடுதண்ணீரில் "மிழுங்கு" என்பானே அது போல, "அரபியை மிழுங்கச் சொல்கிறீர்களா"? பாமர மனிதனுக்கு தேவை, புரியும் வண்ணமிருக்கும் வேதமா? அல்லது கண்களை மூடிக்கொண்டு, வாயில் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றி மாத்திரையை போட்டு, வேண்டா வெறுப்போடு விழுங்க வைக்கும் அரபியில் அமைந்த குர்‍ஆனா? எது தேவை? புரியும் வேதமா? அல்லது புரியா வேதமா?

5) நீ என் வேதத்தை அரபியில் படித்தால் தான் நான் நன்மை செய்வேன் என்றுச் சொல்லும் இறைவன் யாருக்குத் தேவை? நீயும் வேண்டாம் உன் வேதமும் வேண்டாம்?

6) உனக்கு புரியும் மொழியில் நான் உன்னை தொழுதுக்கொள்ளமுடியாது, எனக்கு புரியும் மொழியில் நான் உன்னை தொழுதுக்கொள்ள உனக்கு சம்மதமா? இதற்கு "ஆம், என்றும் ஆமென்" என்றும் சொல்லும் இறைவன் தான் நமக்கு வேண்டுமே ஒழிய, ஏதோ டேப்பில் ரிகார்டு செய்து அடிக்கடி போட்டு கேட்டு சந்தோஷப்படும் இறைவன் நமக்கு தேவையில்லை. நாம் அல்லாஹ்வின் டேப்ரிகார்கர் அல்ல, இறைவன் நம்மை இயந்திரங்களாக படைக்கவில்லை என்பதை இஸ்லாமியர்கள் அறியவேண்டும்.

மார்க்கமோ அல்லது மதமோ அது "மனிதனைச் சுற்றியே அமைந்திருக்கவேண்டும், மனிதனுக்காகவே அது இருக்கவேண்டும்", அவனையே புறக்கணித்துவிட்டு, அவனுக்கு புரியாத மொழியில் தொழுதுக்கொள்ளவேண்மென்றால், மனிதனுக்கு மார்க்கமும் வேண்டாம், ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம். மனிதனுக்கு புரியாத மொழியில் அவனை தொழுதுக்கொள்ளச் சொல்லும் இறைவன் அவனுக்கு வேண்டாம். அவனுக்கு புரியாத மொழியில் அவனை தொழுதுக்கொள்ளச் சொல்லும் இறைவன் ஒரு இறைவனா? அப்படிப்பட்டவன் மனித சமுதாயத்திற்கு தேவையா? வேறுவகையில் சொல்லவேண்டுமென்றால், அவன் உண்மையான இறைவனே அல்ல, அவன் ஒரு பொய்யன்.

ஆகையால், குர்‍ஆன் ஒரு அற்புதமல்ல, அதனை அரபியில் படித்தால் தான் நல்லது என்றுச் சொல்லும் இஸ்லாம், இறைவனால் உண்டான மார்க்கமல்ல.

குர்‍ஆனைப் பற்றி அடுத்தடுத்த கூட்டங்களில் நாம் அலசுவோம், தியாணிப்போம்.

ஆக, "குர்‍ஆன் ஒரு அற்புதமல்ல", முஹம்மது ஒரு தீர்க்கதரிசி அல்ல, அவர் ஒரு கள்ள தீர்க்கதரிசியாவார். நமக்கு கொடுத்த நேரமும் கடந்துவிட்டது, எனவே, அடுத்த முறை இன்னும் அதிகமாக கேள்விகளுக்கு பதில்களைக் காண்போம்.

[உமர் அமர்கிறார், போதகர் பேச ஆரம்பிக்கிறார்]

போதகர்: இது வரை எங்களின் கேள்விகளுக்கு பதில்களைச் சொன்ன சகோதரர் ஜான்சன் மற்றும் உமர் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நம்முடைய சபை விசுவாசிகளுக்கு நான் கூறிக்கொள்வது என்னவென்றால், இந்த கூட்டம் வெறும் ஆரம்பம் தான், இப்படிப்பட்ட கூட்டங்களை நாம் மாதம் ஒருமுறையாவது ஒழுங்குபடுத்துவோம், இன்னமும் இஸ்லாமைப் பற்றி அதிகமாக அறிந்துக்கொள்வோம்.

இந்த கூட்டங்கள் மூலமாக குர்‍ஆனை மட்டுமல்ல, இஸ்லாமியர்கள் கேள்விகள் கேட்கும் போது, எப்படி பைபிள் வசனங்களை பயன்படுத்தவேண்டும் என்பதையும் அறிந்துக்கொண்டோம். நமக்கு பைபிள் முழுவதும் தெரியும் என்பதற்காக, நாம் இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உடனே பதில்களை கொடுத்துவிடமுடியாது, அவர்களோடு விவாதம் புரிய மேடை ஏறக்கூடாது. பைபிளோடு கூட, குர்‍ஆனையும், இஸ்லாமையும் நாம் கற்கவேண்டும், அதன் பிறகு தான் நம்முடைய இஸ்லாமிய கிறிஸ்தவ உரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமையும். எனவே, சபையின் அங்கத்தினர்களுக்கு நான் வேண்டிக்கொள்வது என்னவென்றால், உங்களிடம் இஸ்லாமியர்கள் கேள்விகள் கேட்கும் போது, சிறிது நேரம் உரையாடிவிட்டு, அவர்களை எங்களிடம் கொண்டு வாருங்கள், அவர்கள் கேள்விகளை எங்களிடம் கேளுங்கள், அறைகுறை ஞானத்தோடு நீங்களே முழு பதில்களையும் சொல்ல முயற்சி எடுக்காதீர்கள், இது மிகவும் ஆபத்தானது.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

ஜெபம் செய்வோம்,....

[ஜெபம் செய்து, எல்லாரும் ஒருவரை ஒருவர் வாழ்த்திவிட்டு செல்கிறார்கள். உமரும் அவரது நண்பர் ஜான்சன் அவர்களும், போதகரோடும், அவரது குடும்பத்தோடும் ஒரு உணவு விடுதிக்குச் செல்கிறார்கள். போதகருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளும் உண்டு. மூத்தவனுக்கு திருமணமாகி சில ஆண்டுகள் ஆகிறது, மற்ற இருவரும் பொறியியல் பட்டப்படிப்பை படித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஹோட்டலில் உணவு சாப்பிடும் போது... போதகரின் மகள் திடீரென்று "உமரண்ணா... ஒரு கிறிஸ்தவ பெண்.. ஒரு இஸ்லாமியரை திருமணம் செய்துக்கொள்வது பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டாள்….இப்படிப்பட்ட கேள்வியை அதுவும் போதகரின் மகளின் வாயிலிருந்து இந்த கேள்வியை அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்கவில்லை… போதகரின் கண்கள் தன் மகளைப் பார்த்தது... உமருக்கும் .ஜான்சனுக்கும்  தலை சுற்றியது... போதகரின் மனைவியாகிய பாஸ்டரம்மாவிற்கோ..... தாங்க முடியாத அளவிற்கு சிரிப்பு வந்தது.]

அடுத்த பாகத்தில்.... போதகரின் பிள்ளைகள் மூவரும் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில்களைக் காண்போம். இஸ்லாமியர்களை திருமணம் செய்துக்கொள்ளுதல் முதற்கொண்டு, அவர்களிடம் நட்பு கொள்ளுதல் வரைக்கும் உள்ள சூடான மற்றும் மென்மையான கேள்விகளுக்கு பதில்களைக் காண்போம். "கிறிஸ்தவ சபையே (வாலிபர்களே)! விழிமின் எழுமின் பாகம் 5" வாலிபர்கள் கேட்கும் கேள்வி பதிலாக அமையும்....

கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.

கருத்துகள் இல்லை: