தேவப்பிரியா நீங்க ஃபிரியா? - விவாதம் புரிய!
அன்பான தேவப்பிரியா அவர்களுக்கு,
தேவப்பிரியா அவர்களின் ஒரு கட்டுரைக்கு நான் பதில் எழுதியிருந்தேன்.
முதலாவது தேவப்பிரியா அவர்கள் கேட்ட கேள்வி
http://pagadhu.blogspot.in/2012/06/blog-post_26.html
அதற்கு நான் அளித்த பதில்:
http://isakoran.blogspot.in/2012/07/blog-post.html
உடனே, எனக்கு பதில் என்றுச் சொல்லி ஒரு கட்டுரையை பதித்துள்ளார்: http://pagadhu.blogspot.in/2012/07/blog-post_887.html
இவர் ஒரு பிரபஷ்னலாக எழுதுவார், இவரோடு விவாதம் புரிந்தால் எல்லாருக்கும் உபயோகமாக இருக்கும் என எண்ணி, நானும் என் முதல் பதிலை எழுதினேன். ஆனால், ஏமாற்றம் தான் எனக்கு மிஞ்சியது, இவர் நேர்மையாக உண்மையாக விஷயங்களை அறிய விரும்புவதில்லை, ஆய்வு செய்வதில்லை, ஏதோ விமர்சிக்கவேண்டும், பதில் தரப்பட்டால் அதிலுள்ள உணமைகளை பார்க்கவேண்டியதில்லை என்ற தோரணையில் எழுதுகிறார். சரி அவர் என் கட்டுரையை படித்து என்ன எழுதினார் என்பதை இப்போது பார்ப்போம்.
முதலாவதாக, "கர்த்தர் குழம்பியுள்ளார்" என்ற கேள்வியை இவர் வைத்தார், அதற்கு பதிலை நான் அளித்தேன். அந்த பதில் சரியானதா இல்லையா? என்பதை ஆராய்வதை விட்டுவிட்டு, "உமர் மழுப்புகிறார்" என்று எழுதி, இவர் அதிகமாக மழுப்பினார். தேவப்பிரியா அதிகமாக மழுப்புகிறார் என்பதை எப்படி உங்களால் சொல்லமுடியும் என்று நீங்கள் கேட்கலாம். இதை அறிய, அவரது முதல் கட்டுரையை படியுங்கள், அதில் அவர் என்னென்ன கேள்விகளை எழுப்பியுள்ளார் என்பதை குறித்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு என் பதிலை படியுங்கள், அதில் நான் அவர் கேட்ட கேள்விகளுக்கு பதிலை கொடுத்துள்ளேனா இல்லையா என்பதை கவனியுங்கள். எந்த நோக்கத்திற்காக கட்டுரை எழுதப்பட்டதோ அதைவிட்டு வெளியே சென்று, மழுப்பினேனா இல்லையா என்பதை நீங்கள் வாசித்துப்பாருங்கள். கடைசியாக, எனக்கு பதில் என்றுச் சொல்லி, அவர் எழுதிய கட்டுரையை படியுங்கள், அப்போது புரியும் யார் மழுப்புகிறார் என்று.
இரண்டாவதாக, ஒரு அரசனின் பெயரில் அவனது மகனோ அல்லது பேரப்பிள்ளையோ ஆட்சி செய்யும் விவரம் பற்றி நான் விளக்கியிருந்தேன். அதனை மழுப்பல் என்று தேவப்பிரியா எழுதுகிறார். உண்மையாக இவர் ஒரு நேர்த்தியாக நேர்மையாக எழுதக்கூடியவராக இருந்திருந்தால், நான் கொடுத்த விளக்கம் சரியானது அல்ல, இப்படி உலகில் இதுவரை நடக்கவில்லை, அல்லது இப்படிப்பட்ட பழக்கம் உலக அரசர்களின் வம்சங்களில் இல்லை என்று இவர் நிருபித்து இருக்கவேண்டும். அதை விட்டுவிட்டு, நான் கொடுத்த ஆதாரத்தை சரி பார்ப்பதை விட்டுவிட்டு, நீங்கள் சொந்தமாக ஏன் கதை விடுகிறீர்கள் என்று கேட்கிறார் (கதைகளுக்கும் புராணங்களும் அறியாதவரா இவர்?). இவரோடு விவாதிக்க நான் முன்வந்தமைக்காக எனக்கு வெட்கமாக உள்ளது என்பதை வேதனையோடு தெரிவித்துக்கொள்கிறேன். ஏதோ இணையத்தில் எழுதினால் போதும், விமர்சித்தால் போதும், தலைப்பிற்கு தலைப்பு தாவினால் யார் கண்டுக்கொள்வார் என்ற தோரணையில் அவர் தனது இரண்டாவது கட்டுரயிலேயே வெளிக்காட்டிவிட்டார்.
மூன்றாவதாக, அரசர்களை பட்டப்பெயர் கொண்டு அழைக்கும் வழக்கம் உண்டு என்பதை நான் விளக்கினேன், அதனை உரசிப்பார்க்க இவரால் முடியவில்லை. இவருடைய நோக்கம் வெறும் கிறிஸ்தவத்தை விமர்சிக்கவேண்டும் என்பது மட்டுமேயாகும். (இவரைப்போல வெறும் விமர்சிக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை, அப்படி இருந்திருக்குமானால், அனேக படங்கள் போட்டு பிலிம் காட்ட என்னால் கூட முடியும், அதுவும் இந்துத்துவ கதைகள், புராணங்களை எடுத்துக்கொண்டால், அடேங்கப்பா.. எவ்வளவு விவரங்கள் கிடைக்கும் தெரியுமா? நமக்கு வேண்டாமையா வேண்டாம்).
நான்காவதாக, இவரோடு ஏன் நான் இதுவரை விவாதமோ அல்லது இதர கட்டுரை பதில்களோ எழுதவில்லை என்பதை நான் விளக்கினேன். என் தளத்தில் ஒரு முறை இவர் "ஏன் என்னோடு விவாதம் புரியக்கூடாது?" என்ற கேள்வியை கேட்டதாக எனக்கு ஞாபகம் உள்ளது. ஆகையால் என் நிலைப்பாட்டை நான் விளக்கினேன். மற்றும் ஏதோ தேவப்பிரியா ஆசைப்படுகிறாரே என்பதற்காக, சரி நான் விவாதிக்க தயார், சில மணித்துளிகள் இவருக்காக செலவிடலாம் என்று எண்ணி, இவரை அழைத்தேன், ஆனால், தம்முடைய தளத்தில் அதைப்பற்றி மூச்சு விட மறுத்துவிட்டார். இதிலிருந்து அறிவது என்னவென்றால், இந்துத்துவம் பற்றி விவாதிக்க இவருக்கு தைரியம் இல்லை, இவருக்கு தம் மார்க்கம் மீதே நம்பிக்கை இல்லை, ஆகையால் அதைப் பற்றி மூச்சு விடவில்லை.
ஐந்தாவதாக, என் கட்டுரையில் இவருக்கு முதலாவது பதிலை கொடுத்துவிட்டு, பிறகு தான் விவாதம் பற்றி சிறு குறிப்பு கொடுத்தேன். கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் நான் ஓடவில்லை. ஆனால் இவரது கட்டுரையை பார்த்தால், ஒரு சில வரிகளை 'உமர் மழுப்புகிறார்' என்று எழுதினார் அவ்வளவு தான், உடனே தலைப்பை விட்டு தாவுகிறார். அதாவது "தாவீது மற்றவனின் மனைவியை அபகரித்துக்கொண்டான், அதைப் பற்றி பைபிளில் உள்ளது என்று கேட்கிறார்". நான் தேவப்பிரியா அவர்களிடம் கேட்கும் கேள்வி என்னவென்றால், "பழைய ஏற்பாட்டில் கர்த்தர் குழம்பினார்" என்ற தலைப்பு பற்றி கேள்வி கேட்டீர்கள் நான் பதில் அளித்தேன், இதற்குள் "தாவீது எங்கே வந்தார்"? ஒன்றை உங்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால், எங்கள் பைபிள் பொய்யனை பொய்யன் என்றும், விபச்சாரக்காரனை விபச்சாரக்காரன் என்றுச் சொல்கிறது, இவர் பெரிய பக்தன், இவனது தவறுகளை மறைப்போம் என்றுச் சொல்லி மறைப்பதில்லை. ஆன்மீகத் தலைவர்களை தலைமீது வைத்துக்கொண்டு கரகாட்டம் ஆடச் சொல்லி பைபிள் எங்களுக்கு தெரிவிக்கவில்லை.
ஆக, என் கட்டுரையில் கொடுத்த பதிலை படித்து, ஜீரணித்துக்கொள்ள திராணியில்லை என்பதால் அடுத்தடுத்த தலைப்பிற்கு தேவப்பிரியா தாவுகிறார், ஆனால், என்னோடு இந்துத்துவம் பற்றிய விவாதம் புரிய வாருங்கள் என்று அழைத்தால், அதைப் பற்றி மூச்சு விடவில்லை. ஏன் இப்படி மழுப்பவேண்டும்? ஏன் அதைப் பற்றி மூச்சுவிடாமல் இருக்கவேண்டும்? உண்மை அவருக்கே தெரியும்.
ஆறாவதாக, மறுபடியும் அடுத்த தலைப்பிற்கு தாவுகிறார், அதாவது சரித்திர ஆராய்ச்சிகள், அகழ்வாராச்சிகள் பைபிளுக்கு எதிராக சாட்சி கொடுக்கிறதாம் அதை இவர் குறிப்பிடுகிறார். அய்யா தேவப்பிரியா அவர்களே, உங்கள் கேள்விக்கு நான் பதில் கொடுத்தேனா இல்லையா? இந்த தலைப்பில் ஏன் மற்ற தலைப்புகளை நுழைக்கிறீர்கள்? நான் கேட்ட விவாதம் பற்றிய கேள்விக்கு ஏன் பதில் அளிக்கவில்லை?
நான் விவாதத்திற்கு தயார் என்றுச்சொல்லுங்கள், பிறகு எந்த தலைப்பில் வேண்டுமானாலும் நாம் விவாதிப்போம், தொல்பொருள் ஆராய்ச்சி முதற்கொண்டு, என்னென்ன ஆராய்ச்சி பற்றி நீங்கள் பைபிள் மீது குற்றம் சுமத்த விரும்புகிறீர்களோ அனைத்தும் பற்றி பேசுவோம், விவாதிப்போம். எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, உங்களுக்குத் தான் பயம் இருக்கிறது போல் தெரிகிறது, ஆகையால், தலைப்புக்கு தலைப்பு தாவுகிறீர்கள் அதுவும் ஒரே கட்டுரையில்.
நான் என் கட்டுரையின் முடிவுரையில் "ஆக, தேவப்பிரியா அவர்களின் பதிலுக்காக உமர் காத்துக்கொண்டு இருக்கின்றான். " என்று எழுதி முடித்துள்ளேன், இதைப் பற்றி ஒன்றுமே நீங்கள் எழுதவில்லை, அதைவிட்டுவிட்டு, இன்னும் பைபிள் வரலாறு பற்றிய தொடர்ச்சி வரும் என்பது போல எழுதியுள்ளீர்கள். முதலில் நீங்கள் வைத்த கேள்வி என்ன? அதற்கு நான் கொடுத்த பதில் என்ன? அடுத்ததாக, நான் உங்களிடம் எழுத்து விவாதத்திற்கு வரும் படி கேட்டிருந்தேனே, அதற்கு ஒருவரியாவது எழுதவேண்டும் என்று உங்களுக்கு தோன்றவில்லையா?
தேவப்பிரியா அண்ணே, அகழ்வாராய்ச்சி, தொல்பொருள் ஆராய்ச்சி இதைப் பற்றி நாம் எழுதுவோம் அண்ணே. நம் நாட்டிலும் நடந்தது ஒரு ஆராய்ச்சி, ராமர் பாலம் என்று ஒரு செய்தி செய்திகளில் வந்தது, நடந்தது என்ன? ராமர் இருந்தாரா இல்லையா என்பதை நான் இப்போது இங்கே விவாதிக்க வரவில்லை, அதற்கு அதற்கேற்ற கட்டுரையில் நாம் பார்ப்போம். நான் தலைப்பு விட்டு தலைப்பு தாவவிரும்பவில்லை.
நான் கேட்டது போல, நீங்களும் என் தளத்தில் பதித்தது போல, எழுத்து விவாதம் புரிய விரும்புகிறீர்களா? அல்லது வெறுமனே மண்ணை வாரி வீசத்தான் எனக்குத் தெரியும், என் மார்க்கத்துக்கும் தெரியும், என்னை நோக்கி வரும் அக்கினிப்பந்தை சிக்சருக்கு அடிக்க எனக்கு தெம்பு இல்லை என்றுச் சொல்லி, வெறும் மழுப்பலாக எழுதிக்கொண்டே இருக்கப்போகிறீர்களா?...
அண்ணே… நீங்க இதுவரை என் நேரத்தை வீணடித்தது போதும்.. .கொஞ்சம் உங்கள் விருப்பம் எது என்பதை தெளிவாக மழுப்பாமல் எனக்கு தெரிவிப்பீர்களா?.. மற்ற எல்லா வகையான அகழ்ஆராய்ச்சிகள், தொல்பொருள் ஆராய்ச்சிகள் போன்றவற்றை நாம் இருவரும் சேர்ந்து அலசுவோம், சரியா? முதலில் எனக்கு நேரடி பதில் தரவும், ப்ளீஸ்.
இப்படிக்கு
உமர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக