ஜியாவிற்கு பதில்: முஹம்மது ஒரு பாவி தான் – பாகம் 1
முன்னுரை: கடந்த சில ஆண்டுகளாக, இஸ்லாமிய கிறிஸ்தவ கட்டுரைகளை தமிழ் கிறிஸ்தவ நண்பர்களின் உதவி கொண்டு எழுதிக்கொண்டும், ஆன்சரிங் இஸ்லாம் என்ற ஆங்கில தளத்தின் கட்டுரைகளை மொழியாக்கம் செய்து பதித்துக்கொண்டும் இருக்கிறோம். முஹம்மது ஒரு பாவியா என்ற பெயரில் குர்-ஆனையும், ஹதீஸ்களையும் ஆய்வு செய்து கீழ்கண்ட மூன்று பாகங்களை வெளியிட்டு இருந்தோம்.
மேற்கண்ட கட்டுரைகளுக்கு மறுப்பு என்ற பெயரில் இஸ்லாமியர் ஜியா என்பவர் ஒரு கட்டுரையை பதித்து இருந்தார், அதனை இங்கு படிக்கலாம் - "முஹம்மது ஒரு பாவியா ?".
இப்போது அவர் எழுதிய மறுப்பை நாம் ஆய்வு செய்யப் போகிறோம். இஸ்லாமியர்கள் பதில் என்ற பெயரில் எழுதும் வரிகளை ஆய்வு செய்வதோடு மட்டுமல்லாமல், அவர்களின் வரிகள் எப்படி இஸ்லாமை இன்னும் பரிதாபமான நிலைக்கு கொண்டு போகிறது என்பதை நாம் காண்போம்.
ஜியா அவர்கள் எழுதியது:உமர் அவர்களே உங்கள் வலைதளத்தில் "முஹம்மது ஒரு பாவியா ?" என்ற தலைப்பில் பாகம் 1 , 2 , 3 என்று கட்டுரைகள் இடம் பெற்று இருக்கிறது. அதனை இன்னும் பல இணையதளங்களில் பிரசுரித்து இருக்கிறீர்கள். அதற்கு ஆதரமாக சில குர்ஆன் வசனங்களையும், ஸஹிஹ் ஹதீஸ்களையும் மேற்கோள் காட்டி இருந்தீர்.
ஈஸா குர்-ஆன் உமர்:
அன்பான சகோதரர் ஜியா அவர்களுக்கு, ஆம், மூன்று பாகங்களை நான் வெளியிட்டு இருந்தேன்.
கிறிஸ்தவ கட்டுரைகளின் தொடுப்புக்களை கொடுக்க நடுங்கும் இஸ்லாமிய அறிஞர்கள்:
உங்கள் கட்டுரைகளுக்கு பதில் கொடுக்கும் போது, எப்போதும் நான் கேட்பது போல, இப்போதும் கேட்கிறேன். நீங்கள் குறிப்பிடும் அந்த மூன்று கட்டுரைகளின் தொடுப்புக்கள் எங்கே? அனேக தளங்களில் பதித்துள்ளீர்கள் என்று சொல்கின்ற நீங்கள், ஏதாவது ஒரு தளத்தின் தொடுப்புக்களை கொடுக்க பயப்படுவது ஏன்? உங்கள் தளத்தில் வந்து உங்கள் கட்டுரைகளை படிக்கும் வாசகர்களை ஏன் ஏமாற்றுகிறீர்கள்? உங்கள் பதிலை படிப்பதற்கு முன்பாக, நான் என்ன எழுதினேன், என்பதை படித்து ஒப்பிட்டுப்பார்க்க வாசகர்களுக்கு ஒரு வாய்ப்பை கொடுக்க மறுப்பது ஏன்?
உங்கள் இஸ்லாம் பற்றி உங்களுக்கு நம்பிக்கையில்லையா? இஸ்லாமியர்கள் என் கட்டுரைகளை படித்து விட்டு, அதன் பிறகு உங்கள் பதிலை படிக்க நீங்கள் ஏன் அனுமதிப்பதில்லை?
எங்கள் கட்டுரைகளை படித்தால், இஸ்லாமியர்கள் மத்தியிலே இஸ்லாம் தோற்றுவிடும் என்ற பயமா? எங்கள் கட்டுரைகளை வாசகர்கள் படித்தால், அதன் தரத்தை கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்லாமின் உண்மை முகத்தை அவர்கள் அறிந்துக்கொள்வார்களோ என்ற பயமா? எங்கள் கட்டுரைகளினால், இஸ்லாமின் அஸ்திபாரங்கள் ஆட்டங்காணுகின்றதோ?
எத்தனை முறை எச்சரித்தாலும், எடுத்துச் சொன்னாலும், முகத்தை துடைத்துக்கொண்டு, பழையபடியே, மறுபடியும் எங்கள் மூல தொடுப்பை கொடுக்காமல் எழுதுகின்றீர்கள் என்றுச் சொன்னால், எவ்வளவு கீழ்தரமாக நீங்கள் இஸ்லாமை வெளிக்காட்டுகிறீர்கள்! வெட்கம்… வெட்கம். உங்களைப் போன்றவர்களால் இஸ்லாமுக்கு இழுக்கு.
இனி பதில்கள் எழுதும் போது, உங்கள் இஸ்லாம் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், முஹம்மது ஒரு பாவி அல்ல என்ற திடநம்பிக்கை இருந்தால், எங்கள் தொடுப்புக்களை கொடுத்து எழுதுங்கள், இஸ்லாமை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
சரி, இப்போது உங்கள் கட்டுரைக்கு மறுப்பை காண்போம்.
முஹம்மது ஒரு பாவி தான் – குர்-ஆன்/ஹதீஸ்களின் சாட்சி
ஜியா அவர்கள் எழுதியது:அவற்றில் சில...Sahih Bukhari Volume 8, Book 75, Number 335 : . . . .பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6306 : . . . .
ஈஸா குர்-ஆன் உமர்:
திரு ஜியா அவர்களே, நான் கீழ்கண்ட நான்கு ஹதீஸ்களை மேற்கோள் காட்டினேன், அதிலிருந்து ஒரு ஹதீஸை எடுத்துக்கொண்டு அதனை நீங்கள் மேற்கோள் காட்டியுள்ளீர்கள்?
- பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6306
- பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6368
- பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6398
- பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6399
வாசகர்கள் கொஞ்சம் நீங்கள் சிந்தித்துப் பாருங்கள், ஏன் இப்படி திரு ஜியா அவர்கள் செய்திருப்பார்கள்? இதன் பின்னணி என்னவாக இருக்கும்? எடுத்துக்காட்டுக்காக ஒன்றை மட்டுமே நான் காட்டினேன் இதில் என்ன தவறு என்று திரு ஜியா அவர்கள் ஒன்றுமே தெரியாவதர் போல கேட்கலாம்? நான் கேட்கும் கேள்வி, அந்த ஒன்று ஏன் புகாரி ஹதீஸ் 6398 அல்லது 6399 ஆக இருக்கக்கூடாது?
மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதற்கும்
தானே வழக்கமாக தினமும் செய்வதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது
திரு ஜியா அவர்கள் புகாரி 6306ஐ மட்டும் மேற்கோள் காட்டுவதற்கு காரணம் என்னவென்றால், இந்த ஹதீஸில் அந்த "பாவமன்னிப்பு ஜெபத்தை" மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுப்பது போல அமைந்துள்ளது. இதனை மட்டும் மேற்கோள் காட்டிவிட்டால், "முஹம்மது அந்த பாவஜெபத்தை தனக்காக செய்யவில்லை, மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுத்தார்" என்றுச் சொல்லி சமாளித்துவிடலாம் என்று நினைத்துவிட்டார். ஆனால், நான் அந்த பாவமன்னிப்பு ஜெபம் பற்றிய நான்கு ஹதீஸ்களையும் மேற்கோள் காட்டினேன்.
புகாரி எண் 6368 ஹதீஸானது, 6306ஐ போலவே இருக்கிறது. ஆனால், புகாரி எண் 6398, மற்றும் 6399 ஹதீஸ்கள் வேறுவிதமாக கூறுகின்றது, அவைகளை இப்போது மறுபடியும் காண்போம், அப்போது தான் திரு ஜியா ஏன் இவைகளை மறைத்தார் என்ற உண்மை புரியும்.
பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6398அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்: ரப்பிஃக்ஃபிர் லீ . . . . ..(பொருள்: என் இறைவா! என் குற்றங்களையும், என் அறியாமையையும், என் செயல்கள் அனைத்திலும் நான் மேற்கொண்ட விரயத்தையும் மன்னித்திடுவாயாக. மேலும், என்னை விட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக. இறைவா! நான் தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றே செய்ததையும், அறியாமல் செய்ததையும், அறிந்து செய்ததையும் மன்னித்திடுவாயாக. இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை. இறைவா! நான் முன்னால் செய்ததையும், பின்னால் செய்ததையும், இரகசியமாகச் செய்ததையும் பம்ரங்கமாகச் செய்ததையும் மன்னித்திடுவாயாக. நீயே முன்னேற்றம் அடையச் செய்பவன். பின்னடைவு ஏற்படச் செய்பவனும் நீயே! நீ அனைத்தின் மீதும் ஆற்றல் பெற்றவன்.பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6399அபூ மூஸா அல் அஷ்அரீ(ரஹ்) அவர்கள்கூறினார்:நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தித்து வந்தார்கள். அல்லாஹும்ம ஃக்ஃபிர் . . . . ..(பொருள்: இறைவா! என் குற்றங்களையும் என் அறியாமையையும், என் செயல்களில் நான் மேற்கண்ட விரயத்iயும், மேலும், என்னை விட நீ எவற்றையெல்லாம் அறிந்துள்ளாயோ அவற்றையும் மன்னித்திடுவாயாக! இறைவா! நான் விளையாட்டாகச் செய்ததையும், வினையாகச் செய்ததையும், தவறுதலாகச் செய்ததையும், வேண்டுமென்றேச் செய்ததையும் மன்னித்திடுவாயாக! இவை யாவும் என்னிடம் இல்லாமலில்லை.)
மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களின் படி, முஹம்மது மற்றவர்களுக்கு இந்த பாவ ஜெபத்தை கற்றுக்கொடுக்கவில்லை, அவரே இந்த பாவமன்னிப்பு ஜெபத்தை செய்வது அவரது வழக்கமாக கொண்டு இருந்தார்.
ஆக, அல்லாஹ்விடம் முஹம்மது வேண்டிக்கொள்ளும் வழக்கமான ஜெபமாக இது இருக்கிறது.
"நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு பிரார்த்திப்பது வழக்கம்: . . . . . .
நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) பிரார்த்தித்து வந்தார்கள்: . . . ."
இந்த இரண்டு ஹதீஸ்கள் மேற்கண்ட வரிகளால் ஆரம்பிக்கிறது. இதனை மக்கள் படித்தால், "ஓஹோ, முஹம்மதுவும் நம்மைப்போல ஒரு பாவியான மனுஷன் தான், அவரும் நம்மைப்போலவே அல்லாஹ்விடம் வேண்டுதல் செய்துள்ளாரே" என்று நினைப்பார்கள். ஆனால், இதனை மறைக்க வேண்டும் என்று விரும்பிய இஸ்லாமியர் திரு ஜியா அவர்கள், தனக்கு சாதகமாக இருக்கும் ஹதீஸை மட்டுமே மேற்கோள் காட்டினார், தன் வாதத்திற்கு எதிராக இருக்கும் ஹதிஸை காட்ட பயந்துவிட்டார். ஆனால் நான் பதித்த கட்டுரையில் மேற்கண்ட நான்கு ஹதீஸ்களையும் பதித்தேன், ஏனென்றால், வாசகர்கள் அனைத்தையும் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான்.
ஆக, மேற்கண்ட பாவ மன்னிப்பு வேண்டுதலை, முஹம்மது மற்றவர்களுக்கும் சொல்லிக்கொடுத்துள்ளார், மேலும் தன்னுடைய தனிப்பட்ட வேண்டுதல்களிலும் அவைகளைச் சொல்லி, அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கோரியுள்ளார். இதனை குர்-ஆன் வசனங்கள் கூட உறுதிப்படுத்துகின்றன.
மண்ணறைகளில் வேதனையை அனுபவிக்கும் பாவிகள்:
இஸ்லாமியர்கள் அதிகாரபூர்வமானதாக கருதும் ஹதீஸ்களில் புகாரியும், முஸ்லிம் ஹதீஸ் தொகுப்பும் அடங்கும். இப்போது சஹீ முஸ்லிம் ஹதீஸ் தொகுப்பிலிருந்து சில விவரங்களைக் காண்போம்.
இஸ்லாமிய நபி முஹம்மதுவின் கருத்துப்படி பாவிகள் மரிக்கும் போது அவர்கள் மண்ணறைகளில் வேதனையை அனுபவிப்பார்களாம். கீழ்கண்ட முஸ்லிம் ஹதீஸ்களை படிக்கவும்:
இந்த ஹதீஸின் படி, கோள் சொல்லித் திரியும் நபரும், சிறு நீர் கழிக்கும் போது மர்ம உறுப்பை மறைக்காதவரும் அல்லது சுத்தம் செய்துக்கொள்ளாதவரும் மண்ணறையில் வேதனை அனுபவிப்பதாக முஹம்மது கூறுகிறார். (மேலும் யார் கேள்வி கேட்கப்போகிறார்கள் என்ற நம்பிக்கையில் ஒரு சிறிய செயலையும் செய்துகாட்டுகிறார் முஹம்மது. பேரிச்ச மட்டைகளை கொண்டுவந்து அதனை பிளந்து இரண்டு பேருடைய தலைப் பாகத்தில் ஊண்றுகிறார்.)
அத்தியாயம்: 2, பாடம்: 2.34, எண் 439அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு மண்ணறைகளைக் கடந்து சென்றார்கள். அப்போது, "அறிந்து கொள்ளுங்கள்! (இதோ) இவர்கள் இருவரும் (மண்ணறைக்குள்) வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவ்விருவரும் பெரிய (பாவச்) செயலுக்காக வேதனை செய்யப்படவில்லை. இவர்களில் ஒருவர் (மக்களிடையே) கோள் சொல்லித் திரிந்து கொண்டிருந்தார். மற்றொருவரோ சிறுநீர் கழிக்கும்போது (தமது மறையுறுப்பை) மறைக்க மாட்டார்" என்று கூறினார்கள்.பிறகு பச்சை பேரீச்ச மட்டை ஒன்றைக் கொண்டு வரச் சொல்லி, அதை இரண்டாகப் பிளந்து ஒருவர் (மண்ணறை) மீது ஒரு துண்டையும் இன்னொருவர் (மண்ணறை) மீது இன்னொரு துண்டையும் ஊன்றி வைத்தார்கள். பிறகு, "இவ்விரண்டின் ஈரம் உலராதவரைக்கும் இவர்களின் வேதனை குறைக்கப்படக் கூடும்" என்று கூறினார்கள்.அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி).குறிப்பு: அப்துல் வாஹித் (ரஹ்) வழி அறிவிப்பில், "... மற்றொருவரோ சிறுநீர் கழித்து விட்டுச் சுத்தம் செய்ய மாட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
இப்போது அடுத்த ஹதீஸை காண்போம், இந்த ஹதீஸில் கூட மண்ணறைகளில் மக்கள் வேதனை அடைவார்கள் என்பதைப் பற்றிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் ஒரு படி மேலே சென்று, இந்த நிகழ்ச்சி நடைப்பெற்ற பிறகு, முஹம்மது செய்யும் தொழுகையில், அந்த மண்ணறைகளில் சந்திக்கவிருக்கும் வேதனையிலிருந்து தப்பும்படி அவர் தொடர்ந்து அல்லாஹ்விடம் வேண்டிக்கொள்வது அவரது வழக்கமாக மாறிவிட்டதாம்.
அத்தியாயம்: 5, பாடம்: 5.25, எண் 922மதீனத்து யூதமூதாட்டிகளில் இருவர் என்னிடம் வந்து (பேசிக் கொண்டிருந்தபோது), "மண்ணறைகளில் புதைக்கப்பட்டிருப்போர் வேதனை செய்யப்படுகின்றனர்" என்று கூறினர். அவர்கள் இருவரும் கூறியதை நான் நம்பவில்லை. அவர்கள் கூறியதை நம்புவதற்கு என் மனம் இடம்தரவில்லை. பிறகு அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம் வந்தபோது, "அல்லாஹ்வின் தூதரே! மதீனத்து யூதமூதாட்டியரில் இருவர் என்னிடம் வந்து மண்ணறைகளில் புதைக்கப்பட்டிருப்போர் வேதனை செய்யப்படுகின்றனர் என்று கூறினர்" என அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), "அவர்கள் சொன்னது உண்மையே! (மண்ணறைகளிலிருக்கும் பாவிகள்) கடுமையாக வேதனை செய்யப்படுகின்றனர். அந்த வேதனை(ஓலங்)களை மிருகங்கள் செவியேற்கின்றன" என்று கூறினார்கள்.அதற்குப் பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எந்தத் தொழுகையிலும் மண்ணறையின் வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை.அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)குறிப்பு :அபுல் அஹ்வஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், "... அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அதற்குப் பிறகு தொழுத எந்தத் தொழுகையிலும் மண்ணறையின் வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை" என்று இடம் பெற்றுள்ளது.
முஹம்மது மண்ணறையில் வேதனையை அனுபவிப்பார். . . என்று வெளிப்படுத்திய அல்லாஹ்
இப்போது திரு ஜியா போன்ற ஒரு சில இஸ்லாமியர்கள் "இல்லை.. இல்லை… முஹம்மது வேண்டிக்கொண்டது, மற்றவர்களுக்காகத் தான் தனக்காக அல்ல என்று" சொல்வார்கள். உண்மை என்னவென்றால், இப்படிப்பட்டவர்களுக்கு இஸ்லாம் பற்றி அனைத்து உண்மைகளும் தெரிவதில்லை. அடுத்த ஹதீஸ் என்ன சொல்கிறது என்பதை சிறிது படித்துப்பாருங்கள்.
ஒரு யூதப்பெண், ஆயிஷா அவர்களிடம், உங்களுக்கு மண்ணறையில் வேதனை உண்டு என்று கூறுகிறாள். அப்போது தான் அங்கு வந்த முஹமம்து இதனைக் கேட்டு திடுக்கிடுகிறார். உடனே சவாளித்துக்கொண்டு, யூதர்கள் தான் மண்ணறைகளில் வேதனையை அனுபவிப்பார்கள் என்று ஆவேசத்தில் கூறிவிடுகிறார். ஆனால், சில நாட்கள் கழித்து இவருக்கு அல்லாஹ் ஒரு வெளிப்பாட்டை தருகிறார், அதாவது அந்த யூதப்பெண் சொன்னது உண்மையே என்று அல்லாஹ் ஆமோதிப்பதாக அந்த வெளிப்பாடு இருந்தது. இதன் பிறகு, பயந்துப்போன முஹம்மது அல்லாஹ்விடம் அந்த வேதனையிலிருந்து காக்கும் படி வேண்டிக்கொள்கிறார்.
அத்தியாயம்: 5, பாடம்: 5.25, எண் 920என்னிடம் யூதப்பெண் ஒருவர், "உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் உங்கள் மண்ணறைகளில் வேதனை செய்யப்படுவீர்கள்" என்று கூறிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திடுக்குற்றார்கள். மேலும், "யூதர்கள்தாம் (மண்ணறைகளில்) வேதனை செய்யப்படுவார்கள்" என்றார்கள்.சிலநாட்கள் கழிந்தபின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனக்குத் தெரியுமா? மண்ணறைகளில் நீங்கள் வேதனை செய்யப்படுவீர்கள் என இறைவனால் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது" என்று என்னிடம் கூறினார்கள். அதற்குப்பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மண்ணறையின் வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருவதை நான் செவியுற்றேன்.அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)
முஹம்மது ஒரு பரிசுத்தமான மனிஷன் என்ற நம்பிக்கை அவருக்கே இருந்திருந்தால், அவர் ஏன் பயப்படவேண்டும்? ஏன் அவர் தொடர்ந்து வேண்டிக்கொள்ளவேண்டும்?
மேற்கண்ட ஹதீஸில் ஆயிஷா பற்றி தான் முஹம்மது வேண்டிக்கொண்டார், என்று சிலர் சொல்லக்கூடும், ஆனால், மேற்கண்ட ஹதீஸில் "இரைத்தூதர் அவர்கள் எனக்காக வேண்டிக்கொண்டார்கள்" என்று ஆயிஷா கூறவில்லை. அதற்கு பதிலாக, "அதற்குப்பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மண்ணறையின் வேதனையிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புக் கோருவதை நான் செவியுற்றேன்" என்று ஆயிஷா அவர்கள் கூறுகிறார்கள். இது முஹம்மதுவின் தனிப்பட்ட சொந்த வேண்டுதலாகும், அதனை ஆயிஷா அவர்கள் செவியுறுகிறார்கள்.
ஆக, தான் ஒரு பாவி என்று முஹம்மதுவிற்குத் தெரியும். தனக்கும் அல்லாஹ்விடமிருந்து பாவ மன்னிப்பு வேண்டும் என்றும் அவர் அறிந்திருந்தார். அதற்காகவே அவர் இப்படியாக பயந்து வேண்டுகிறார்.
முதன் முதலில், அந்த யூதப்பெண் சொல்வதைக் கேட்டு, "யூதர்கள் தான் வேதனை அடைவார்கள்" என்று கூறினார். இதன் அர்த்தம் என்ன? அவர் சொல்ல வருவது என்ன? முஸ்லிம்களாகிய நாங்கள் அல்ல, யூதர்களாகிய நீங்கள் தான் அப்படிப்பட்ட வேதனையை அனுபவிப்பீர்கள் என்று கூறுகிறார். ஆனால், முஹம்மதுவை அல்லாஹ் பொய்யராக்கிவிட்டார். அதாவது முஹம்மதுவிற்கு அல்லாஹ் வெளிப்படுத்துகிறார் "முஸ்லிம்களாகிய நீங்கள் மண்ணறைகளில் வேதனையை அனுபவிப்பீர்கள்". சரி, இந்த வேதனை முஸ்லிம்களுக்கு மட்டுமா அல்லது இறைத்தூதர் முஹம்மதுவிற்குமா? என்று கேட்டால், மேற்கண்ட ஹதீஸ்களின்படி, முஹம்மதுவும் அந்த வேதனைக்கு பயந்து வேண்டிக்கொள்கிறார்.
இதன் மூலம் அறிவது என்ன? மரித்தபிறகு கல்லறைக்குள் அனுபவிக்கும் வேதனையின் பயம் முஹம்மதுவை பீடித்தது? ஏன் ஒரு பரிசுத்தமான மனுஷனையும் இந்த பயம் பீடிக்கவேண்டும்? இதற்கு இஸ்லாமியர்களிடம் பதிலில்லை. பதில் தெரிந்தவர்கள் சொல்லட்டும்.
- குர்-ஆனின் படி முஹம்மது ஒரு பாவமும் செய்யாத பரிசுத்தர் அல்ல.
- ஹதீஸ்களின்படி முஹம்மது ஒரு பாவமும் செய்யாத பரிசுத்தர் அல்ல.
- முஹம்மதுவின் படி "தான் ஒரு பரிசுத்தர் அல்ல"…
ஆனால், தற்கால இஸ்லாமியர்கள் மேற்கண்ட மூன்றையும் புறம்பே தள்ளிவிட்டு, நம் இறைத்தூதர் பரிசுத்தர், அவர் பாவம் செய்யவில்லை என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். அந்தோ பரிதாபம்… இஸ்லாமுக்கு வந்த கேடுகெட்ட காலத்தை பார்த்தீர்களா? அல்லாஹ்வின் வார்த்தைகளையும் புறக்கணிக்கும் நிலையில் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இதோ குர்-ஆன் சொல்லும் சாட்சியை இப்போது படியுங்கள்: இந்த வசனங்களை திரு ஜியா அவர்களும் மேற்கோள் காட்டியிருந்தார்கள்.
நம்மைப்போல முஹம்மது ஒரு பாவி என்று சாட்சி கூறும் குர்-ஆன் வசனங்கள்:
குர்-ஆன் 40:55 ஆகவே, நீர் பொறுமையுடன் இருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உறுதியுடையதாகும். உம் பாவத்திற்காக மன்னிப்புக் கோருவீராக மாலையிலும் காலையிலும் உம் இறைவனைப் புகழ்ந்து, தஸ்பீஹ் (துதி) செய்து கொண்டு இருப்பீராக!குர்-ஆன் 48:2 உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும்.குர்-ஆன் 47:19 ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களாகன ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக - அன்றியும் உங்களுடைய நடமாட்டத்தலத்தையும் உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)
முஹம்மதுவைப் பார்த்து அல்லாஹ் சொல்கிறார் "உம்முடைய பாவத்திற்காக…. மன்னிப்பு தேடுவீராக"…. ஆனால், முஸ்லிம்கள், "அல்லாஹ் உங்களுக்கு ஒன்றுமே தெரியாது… முஹம்மது பாவமே செய்ததில்லை, அப்படியிருக்க, எப்படி அவர் மன்னிப்பு கோரமுடியும்?" என்று சொல்கிறார்கள்.
முஹம்மதுவைப் பார்த்து அல்லாஹ் சொல்கிறார் "உம்முடைய முந்தைய பிந்தைய பாவங்களை நான் மன்னித்தேன்"…. ஆனால், முஸ்லிம்கள் சொல்கிறார்கள் "அடக்கடவுளே, முஹம்மது பாவமே செய்ததில்லை, செய்யவில்லை என்று திரும்பி திரும்பி நாங்க சொல்லிக்கொண்டு இருக்கிறோம், ஆனால் நீங்க வந்து, நான் முஹம்மதுவின் முந்திய பிந்திய பாவங்களை மன்னித்தேன் என்று சொன்னால் என்ன அர்த்தம்? நீ சும்மா இருக்கமாட்டீயா?" (அல்லாஹ்வை நீ என்று முஸ்லிம்கள் அழைக்கலாம்).
அல்லாஹவையே குழப்பும் இந்த இஸ்லாமியர்கள், சாதாரண முஸ்லிம்களை குழப்பமாட்டார்களா என்ன? இதைத் தான் சகோதரர் ஜியா அவர்கள் தன் கட்டுரையில் செய்துள்ளார்கள். ஆனால், நான் விடுவேனா என்ன? ஒரே கட்டுரையில் அனைத்து பாயிண்டுகளுக்கும் பதிலைச் சொல்லாமல், ஒவ்வொன்றாக நிதானமாக வருவேன்.
சரி, திரு ஜியா அவர்களின் அடுத்த விளக்கத்திற்கு வருவோம்
ஜியா அவர்கள் எழுதியதுஅந்த கட்டுரையின் வாயிலாக உலகத்தாருக்கு நீங்களும் உங்கள் கிறிஸ்தவமும் தெரிவிக்க விரும்புவது:அல்லாஹ் (சுபஹனவதாலா) - இறைவன்,முஹம்மது (ஸல்) - இறைதூதர்இறைதூதர் முலம் அருளாக பெற்ற இறை வேதம் - குர்ஆன்.உங்களுடைய கருத்து:1. ஒரு இறை தூதர் பாவ மன்னிப்பு கோருகையில் தன்னையும் சேர்த்துக்கொள்ள கூறினால் அவர் - பாவி
ஈஸா குர்-ஆன் உமர்:
முஹம்மது "மற்றவர்களுக்கு மட்டும்" பாவமன்னிப்பு ஜெபத்தை கற்றுக் கொடுக்கவில்லை, தானும் தன்னுடைய தனிப்பட்ட வேண்டுதல்களில் தன் பாவங்களை மன்னிக்கும் படி கேட்டுள்ளார். எனவே, வெறும் "முஹம்மது சொல்லித்தான் கொடுத்தார்" என்றுச் சொல்வது, இஸ்லாமை தவறாக விளக்குவதாகும். இந்த தவறை நீங்கள் செய்யாதீர்கள்.
ஜியா அவர்கள் எழுதியது2. ஒரு இறை தூதர் தன் இறைவனிடம் பாவ மன்னிப்புகோரினால் அவர் – பாவி
ஈஸா குர்-ஆன் உமர்:
ஒருவர் இறைவனிடம் வேண்டும் போது "நான் ஒரு பாவி என் பாவங்களை மன்னியும்" என்று வேண்டிக்கொண்டால், அவரை பாவி என்றுச் சொல்லாமல் "பரிசுத்தர் என்றுச் சொல்வார்களா என்ன?".
திரு ஜியா அவர்களே, நீங்கள் சொல்வது எப்படி உள்ளது தெரியுமா? கீழ்கண்ட உரையாடல் அல்லாஹ்விற்கும் முஹம்மதுவிற்கும் இடையே நடந்தது போல இருக்கிறது, பொறுமையோடு படித்துப் பார்த்து சிந்தியுங்கள். இந்த உரையாடலில் அல்லாஹ் கொடுத்த அறிவுரையைப்போல நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், சரித்திரத்தில் அப்படி நடக்கவில்லையே (உரையாடலின் கடைசி பகுதியை படிக்க மறக்கவேண்டாம்)
முஹம்மது: அல்லாஹ்வே, நான் ஒன்றை கேட்கிறேன்.
அல்லாஹ்: சொல், நான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.
முஹம்மது: நான் ஒரு பரிசுத்தன், உங்களைப்போல, நான் ஒரு பாவமும் இதுவரை செய்யவில்லை, மரணிக்கும் வரைக்கும் இனிமேலும் செய்யப்போவதில்லை.
அல்லாஹ்: உண்மை தான், இப்போது அதற்கு என்ன?
முஹம்மது: நான் எல்லாருக்கும் பாவமன்னிப்பு வேண்டுதலை கற்றுக்கொடுப்பேன்.
அல்லாஹ்: சரி, நல்லது தான்.
முஹம்மது: நானும் என் தனிப்பட்ட வேண்டுதல்களில் "நான் ஒரு பாவி, என் பாவங்களை மன்னியும் என்று உங்களிடம் வேண்டுவேன்".
அல்லாஹ்: நீ தான் பாவம் செய்யவில்லையே, பின்பு ஏன் பாவங்களை மன்னியுங்கள் என்று என்னிடம் வேண்டுகிறாய்?
முஹம்மது: அது அப்படித் தான், நீங்களும் ஒன்று செய்யுங்கள், "முஹம்மதுவே உன் பாவங்களுக்காக மன்னிப்பு கோரு" என்று வசனங்களையும் இறக்குங்கள்.
அல்லாஹ்: குழப்பமாக இருக்கின்றதே! நீ பாவம் செய்யவில்லை. நான் உன்னை மன்னிக்கத்தேவையில்லை. இப்படி இருக்க, "நீ பாவங்களுக்காக மன்னிப்பு கோரு" என்று நான் ஏன் வசனங்களை இறக்கவேண்டும். மேலும் நீ ஏன் "என் பாவங்களை மன்னியுங்கள்" என்று வேண்டிக்கொள்ளவேண்டும்?
சரி, நீ என்ன சொல்லவருகிறாய்? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே!
முஹம்மது: நான் பாவம் செய்யாதவர் என்று இஸ்லாமியர்கள் மற்றும் உலகம் நம்பவேண்டும். இது தான் என் வேண்டுதல்.
அல்லாஹ்: இவ்வளவு தானா! இதற்கு ஏன் நாம் சுற்றி வளைத்து வரவேண்டும். இதற்கு சுலபாமான நேரான வழி ஒன்று இருக்கிறது.
அதாவது, மேற்கண்ட இரண்டையும் நாம் செய்யக்கூடாது.
முதலாவதாக, "உன் பாவங்களுக்காக மன்னிப்பு கோரு, உன் முந்தைய பிந்தைய பாவங்களை நான் மன்னித்தேன்" போன்ற வசனங்களை நான் குர்-ஆனில் இறக்கமாட்டேன். அதற்கு பதிலாக, முஹம்மது ஒரு பாவமும் செய்யாதவர் என்று அனேக வசனங்களை நான் குர்-ஆனில் இறக்குவேன். இதன் மூலம் மக்கள் அனைவரும் "நீ பரிசுத்தர்" என்று அறிந்துக்கொள்வார்கள். மேலும் குர்-ஆனே "நீ பரிசுத்தவான்" என்று சாட்சி சொன்னால் இன்னும் உன் மதிப்பு உயரும்.
இரண்டாவதாக, நீயும், என் பாவங்களை மன்னியுங்கள் என்று என்னிடம் வேண்டிக்கொள்ளவேண்டாம். ஆனால், மற்றவர்களுக்கு மட்டும் அவர்கள் பாவங்களை மன்னிக்கும் படி நீ கற்றுக்கொடுத்தால் மட்டும் போதுமானது.
இந்த இரண்டையும் செய்தால் போதும், நீர் பரிசுத்தமானவர் என்று மக்கள் அறிந்துக்கொள்வார்கள், மேலும் குர்-ஆனிலும் நீர் பரிசுத்தர், பாவம் செய்யாதவர் என்று நான் வசனங்களை இறக்குவதினால், மக்களுக்கு அதிக அதிகார பூர்வ ஆதாரமாக இருக்கும்.
முஹம்மது: இந்த ஆலோசனை ரொம்பவும் நன்றாக இருக்கிறதே. இப்படியே செய்வோம்.
[இதுவரை நடந்த உரையாடல் மிகவும் சீரியஸானது. அதாவது முஹம்மது ஒரு பாவமும் செய்யாத பரிசுத்தமானவர் என்பதை நிலைநாட்ட மேலே அல்லாஹ் கூறிய ஆலோசனை தான் சரியானது. இது போல இருந்திருந்தால், மற்றவர்களின் குற்றச்சாட்டுகளை ஓரளவிற்கு இஸ்லாமியர்கள் சமாளித்து இருந்திருக்கலாம்.]
கட்டுரை மிகவும் சீரியஸாக போகிறது என்பதற்காக கொஞ்சம் நகைச்சுவையை சேர்த்துள்ளோம். அதனை இப்போது படியுங்கள்.
[இந்த உரையாடல் நடந்துக்கொண்டு இருக்கும் போது, கதவை யாரோ தட்டினார்கள், உடனே முஹம்மது எழுந்துச் சென்று கதவை திறந்தார்]
முஹம்மது: ஓ ஜிப்ராயீல் தூதரா… வாங்க வாங்க…
ஜிப்ராயீல் தூதன்: நான் வந்து சில நிமிடங்கள் ஆனது. உங்கள் இருவரின் உடையாடலை கேட்டுக்கொண்டு இருந்தேன்.
முஹம்மது: ஓ அப்படியா?
அல்லாஹ்: எனக்கு ஏற்கனவே தெரியும். அனைத்தையும் அறிந்தவன் நான். சரி, ஜிப்ராயீலே, நீ ஏன் ஆரம்பத்திலேயே கதவை தட்டியிருக்கக்கூடாது?
ஜிப்ராயீல்: நீங்கள் அதி முக்கியமான விஷயத்தை பேசுகிறீர்கள் என்பதை அறிந்து, உங்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பதினால் சும்மா கேட்டுக்கொண்டு இருந்தேன்.
அல்லாஹ்: சரி, நாங்கள் பேசியதைப் பற்றி உன் அபிப்பிராயம் என்ன?
ஜிப்ராயீல்: மன்னிக்கவேண்டும், அல்லாஹ். நீங்கள் பேசியது போல நடக்க வாய்ப்பு இல்லை.
முஹம்மதுவும் அல்லாஹ்வும் ஒரே மூச்சில்: ஏன், ஏன் நடக்க வாய்ப்பு இல்லை.
ஜிப்ராயீல்: அல்லாஹ்வே, நீங்கள் மறந்துவிட்டீர்கள் போலும். நாளைக்கு நீங்கள் முஹம்மதுவின் உயிரை கைப்பற்றப் போகிறீர்கள். முதல் குர்-ஆன் வசனம் இறக்கப்பட்டு கிட்டத்தட்ட இன்றோடு 23 ஆண்டுகள் ஆகிறது.
உங்களின் ஆலோசனையின் படி நான் குர்-ஆன் 40:55, 48:2 மேலும் 47:19ம் வசனங்களை ஏற்கனவே முஹம்மதுவிற்கு வெளிப்படுத்திவிட்டேன். அவரும் அவைகளை தன் மக்களுக்கு அறிவித்துவிட்டார். மேலும் அவரும் தன் தனிப்பட்ட வேண்டுதல்களில் தன் பாவங்களுக்காக உம்மிடம் பாவமன்னிப்பு கோரிவிட்டார். இன்னும் அனேக ஆண்டுகளுக்கு பிறகு புகாரி, முஸ்லிம் போன்றவர்களால் இந்த விவரங்கள் ஹதீஸ்களாக தொக்குக்கப்படப்போகிறது. இந்த ஆலோசனையை நீங்கள் இருவரும் 23 ஆண்டுகளுக்கு முன்பு செய்து இருந்திருந்தால், பிரயோஜனமாக இருந்திருக்கும். இப்போது என்ன செய்வது?
முஹம்மது: கவலையை விடுங்கள். என் தோழர்கள் என்னை பின்பற்றுபவர்கள் இதனை சமாளித்துக் கொள்வார்கள் (திரு ஜியா போன்றவர்களைத் தான் முஹம்மது இங்கு குறிப்பிடுகிறார்)
அல்லாஹ்: ஆம், என் அடியார்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்கள். என் பங்கை நான் முடித்தேன், முஹம்மது தன் பங்கை முடித்தார். இதோ என் அடியார்கள் இருக்கிறார்கள், உலக முடிவு வரை அவர்கள் மீதமுள்ளதை பார்த்துக்கொள்வார்கள்.
[உரையாடல் முடிவு பெறுகிறது]
ஆக, திரு ஜியா அவர்களே, உங்களை துக்கப்படுத்த நான் மேற்கண்ட கற்பனை உரையாடலை எழுதவில்லை. குர்-ஆனும், ஹதீஸ்களும் தெளிவாக சொல்லும் ஒரு விஷயத்தை மறுத்து, என்னத்தை சாதிக்கப்போகிறீர்கள்? இது தான் என் வேதனையும், வேண்டுதலும்.
ஜியா அவர்கள் எழுதியது3. ஒரு இறை தூதர் பாவ மன்னிப்பு கோரும்படி அடுத்தவர்களை பணித்தால் அவர் - பாவி
ஈஸா குர்-ஆன் உமர்:
ஒரு இறைத்தூதர், "பாவமன்னிப்பு கோரும் படி மற்றவர்களை கேட்டுக்கொண்டால்" அவர் பாவியாக மாட்டார், இதனை நான் அங்கீகரிக்கிறேன். ஆனால், முஹம்மதுவை பொறுத்தமட்டில், அவர் மற்றவர்களுக்கு சொல்லியும் கொடுத்துள்ளார். தானும் வேண்டிக்கொண்டுள்ளார். மேலும், இஸ்லாமிய சரித்திரம் முஹம்மது ஒரு பரிசுத்தர் இல்லை என்றே சொல்கிறது. நம்மைப் போல பாவங்கள் செய்யக்கூடிய சாதாரண மனிதர் என்றே கூறுகிறது. ஆனால், இஸ்லாம் பற்றிய முக்கியமான பொறுப்புக்கள் அவரிடம் கொடுக்கப்பட்டது என்று சொல்கிறது. ஆனால், அந்த பொறுப்புக்களை நிறைவேற்ற "இறைவனைப் போல ஒரு பரிசுத்த மனிதனாக அவர் இருக்கவேண்டும்" என்று நீங்கள் நினைப்பது தான் தவறானது.
ஜியா அவர்கள் எழுதியது4. ஒரு இறை தூதர் எவ்வாறு பாவ மன்னிப்பு கோரவேண்டும் என்று எடுத்துரைத்தால், தான்வாழ்நாளில் பாவமன்னிப்பு கோரி முன் உதாரனமாக வாழ்ந்து கட்டினால் அவர் – பாவி
ஈஸா குர்-ஆன் உமர்:
நான் ஏற்கனவே சொல்லியது போல, மற்றவர்களுக்கு பாவமன்னிப்பு கோருங்கள் என்று அறிவுரை கூறுவதினால், ஒரு இறைத்தூதர் பாவியாக மாட்டார். ஆனால், முஹம்மதுவின் விஷயத்தில் அவர் ஒரு பாவி என்றும், அவர் தன் பாவங்களுக்காக மன்னிப்பு கோரவேண்டும் என்றும், அவரது முந்தைய பிந்தைய பாவங்களை அல்லாஹ் மன்னித்தான் என்றும் குர்-ஆன் கூறுவதினால், அவர் ஒரு பாவியாக இருக்கிறார். மேலும் முஹம்மதுவே தன் தனிப்பட்ட வேண்டுதல்களில் "பாவ மன்னிப்பு கோரினார்" என்று ஹதீஸ்கள் சொல்லும்போது, அவர் எப்படி ஒரு பாவியில்லாமல் இருக்கமுடியும்?
முஹம்மது அல்லாஹ்விடம் சென்று "அல்லாஹ்வே நான் பாவம் செய்யவில்லை, இருந்தபோதிலும், "என் பாவங்களை மன்னியுங்கள் என்று நான் கேட்பது போல கேட்பேன், நீங்களும் கேட்டும் கேளாதவர் போல இருந்துவிடுங்கள், ஏனென்றால், நான் பாவமே செய்யவில்லை என்று உமக்கும் தெரியும், ஆனால், இந்த என் வேண்டுதலை கேட்பவர்கள் என்னைப்போலவே அவர்களும் வேண்டிக்கொள்ள கற்றுக்கொள்வார்கள்" என்றுச் சொல்லி, அல்லாஹ்வும் முஹம்மதுவும் ஒரு ஒப்பந்தம் புரிந்ததைப்போல ஜியா போன்ற இஸ்லாமியர்கள் நினைக்கிறார்கள். இது அறிவுப்பூர்வமானதாக உங்களுக்குத் தெரிகின்றதா?
முஹம்மது இப்படி பாவ மன்னிப்பு கோருங்கள் என்று மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுத்தால் போதாதா? அவர் பாவமே செய்யவில்லையானாலும் அல்லாஹ்விடம் சென்று "நான் பாவி, நான் பாவி என்னை மன்னியுங்கள்" என்று தேவையில்லாமல் முஹம்மது சொன்னர் என்று எப்படி நீங்கள் நினைக்கிறீர்கள்? இப்படி முஹம்மது தினமும் செய்யும் போது, அல்லாஹ்விற்கே அருவறுப்பாக இருந்திருக்காதா? சிந்தியுங்கள்.
ஜியா அவர்கள் எழுதியது5. இறைவன் ஒரு இறை தூதரின் பாவத்தை மன்னித்ததாக அறிவித்தால் அந்த தூதர் ஒரு - பாவி
ஈஸா குர்-ஆன் உமர்:
நிச்சயமாக, அவர் பாவி தான், என்ன இறைவனிடம் விளையாடுகிறீர்களா?
இறைவன் ஒருவனைப் பார்த்து "உன் பாவங்களை நான் மன்னித்தேன்" என்றுச் சொன்னால், அதற்கு வேறு அர்த்தம் இருக்குமா? இறைவன் உன் முந்தைய பாவங்களை, பிந்தைய பாவங்களை மன்னித்தேன் என்று குர்-ஆனில் சொல்லும் போது, அதற்கு வேறு அர்த்தம் என்றுச் சொன்னால் அந்த வசனத்தை எந்த நோக்கத்திற்காக அல்லாஹ் இறக்கினான் சொல்லுங்கள்?
- அல்லாஹ் ஒன்றைச் சொன்னால், நாம் வேறு ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டுமா?
- அல்லாஹ் உன்னை தண்டிப்பேன் என்று ஒருவனைப்பார்த்து கூறினால். அதற்கு அர்த்தம் "அல்லாஹ் ஆசீர்வதிப்பார்" என்று அர்த்தமா?
- அல்லாஹ தீயவர்களை மன்னிக்க மாட்டான் என்று சொன்னால், அதன் அர்த்தம் "அல்லாஹ் தீயவர்களை மன்னிப்பார்" என்று அர்த்தமா?
என்ன பைத்தியக்காரத்தனம் இது? உங்கள் பைத்தியத்திற்கு ஒரு எல்லையே இல்லையா? உங்கள் அறியாமைக்கு ஒரு எல்லையே இல்லையா?
ஜியா அவர்கள் எழுதியது6. இறைவன் ஒரு இறை தூதரை பாவ மனிப்பு கேற்க பணித்தால் அந்த இறை தூதர் ஒரு - பாவி
ஈஸா குர்-ஆன் உமர்:
நீங்களே சொல்லுங்கள், உன் பாவத்திற்காக நீ மன்னிப்பு கோரு என்று அல்லாஹ் கேட்டால் அதன் அர்த்தம் என்ன? இதன் அர்த்தத்தை தெரிந்துக்கொள்ள நமக்கு பட்டப்படிப்பு தேவையா? இறைவன் என்ன சும்மா உடகார்ந்து இருக்கிறாரா? அவர் ஒன்று சொல்லுவாராம், மக்கள் வேறு ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டுமாம்? நல்லா இருக்கு உங்க லாஜிக்.
"அல்லாஹ் மன்னிப்பு கேள்" என்று கட்டளையிட்டால், அதன் அர்த்தம் "மன்னிப்பு கேள்" என்பது தானே!
சகோதரர் ஜியா அவர்கள் சொல்வதைப் பார்த்தால்,
• அல்லாஹ் ஒன்று சொல்லுவார், ஆனால், அதன் அர்த்தம் அது அல்ல.
• அல்லாஹ் வேறு ஒன்று சொல்லுவார், ஆனால், அதன் அர்த்தமும் வேறு ஒன்றும் அல்ல.
• அல்லாஹ் இன்னொன்று சொல்லுவார், அதன் அர்த்தமும் இன்னொன்றும் அல்ல.
இப்படி போய்க்கொண்டே இருக்கும். என்னங்கைய்யா உங்க லாஜிக்?
சரி, ஜியா அவர்களின் வழிக்கே நாம் போவோம். இப்போது கீழ்கண்ட வசனத்தின் படி அல்லாஹ் முஹம்மதுவை பாவ மன்னிப்பு தேடச் சொல்கிறாரா இல்லையா?
குர்-ஆன் 47:19 ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களாகன ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக - அன்றியும் உங்களுடைய நடமாட்டத்தலத்தையும் உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான். (முஹம்மது ஜான் தமிழாக்கம்)
உங்களின் லாஜிக்கின் படி, இந்த வசனத்தை நாம் புரிந்துக் கொள்ளவேண்டுமென்றால்,
• முஹம்மது தன் பாவத்திற்காக பாவ மன்னிப்பு கோரக்கூடாது என்று புரிந்துக்கொள்ளவேண்டும்,
• ஆனால், முஃமீன்களான ஆண்கள், பெண்களுக்காக பாவ மன்னிப்பை முஹம்மது கோரவேண்டும் என்று புரிந்துக்கொள்ளவேண்டும்.
ஒரே வசனம், ஒரே விஷயம், ஆனால் நாம் புரிந்துக்கொள்ளும் போது முஹம்மது என்று வந்தால் ஒரு மாதிரியாக புரிந்துக்கொள்ளவேண்டும், இதர மக்கள் வந்தால், வேறு வகையாக புரிந்துக்கொள்ளவேண்டும்.
இப்படியா இந்த வசனத்தை புரிந்துக்கொள்ளவேண்டும் என்று அல்லாஹ் விரும்புகிறார்? இந்த கேள்விக்கு, தமிழ் நாட்டில் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் பதில் சொல்லி, உலக மக்களின் கண்டகளை திறக்கட்டும்.
முடிவுரை: இதுவரை திரு ஜியா அவர்களின் பதிலில் கொடுக்கப்பட்டு இருந்த முதலாவது பகுதிக்கு பதிலைக் கண்டோம். அதாவது முஹம்மது ஒரு பாவி தான் என்பதை குர்-ஆன் மற்றும் ஹதீஸ்களின் ஆதாரங்களில் கண்டோம். அடுத்த பாகத்தில், திரு ஜியா அவர்கள் முன்வைத்த "இயேசுவின் சீடர்கள்" பற்றிய விவரங்களுக்கு நம் பதிலை காண்போம்.
அவர் எழுதிய அந்த ஒரு கட்டுரைக்கு நான் ஒவ்வொரு தலைப்பாக எடுத்து பதிலை கொடுக்கப்போகிறேன். இது ஒரு மெகா தொடராக பல தொடர் கட்டுரைகளாக வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை, ஏனென்றால், அவ்வளவு விவரங்களை அவர் ஒரே கட்டுரையில் கொடுத்துள்ளார்.
முஹம்மது ஒரு பாவி தான் என்பதை நம் தமிழ் நாட்டு இஸ்லாமியர்கள் தங்கள் வாயினால் அறிக்கையிடும் காலம் வெகுதூரமில்லை.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நாளில் எழுபது முறைக்கு மேல் 'அஸ்தஃக் ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி' என்று கூறுகிறேன் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.
(பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவன் பக்கமே திரும்புகிறேன்.) (புகாரி Volume :6 Book :80, எண் 6307)
கர்த்தருக்கு சித்தமானால் அடுத்த கட்டுரையில் சந்திப்போம்…..
கர்த்தரின் நாமம் மட்டுமே மகிமைப்படட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக