குர்-ஆனின் விஞ்ஞானப் பிழை - பீஜே அவர்களுக்கு கேள்வி: விந்தின் பிறப்பிடம் எது?
ஆசிரியர்: உமர்
முன்னுரை:
குர்-ஆனில் அனேக விஞ்ஞான பிழைகள் உள்ளன. எவைகள் குர்-ஆனின் பிழைகளாக இருக்கின்றனவோ, அவைகள் தான் குர்-ஆனின் அற்புதங்கள் என்று மாற்றிச் சொல்கிறார்கள் இஸ்லாமிய அறிஞர்கள். இப்படிப்பட்ட செயலை சிறப்பாக செய்துவருபவர்களில் மதிப்பிற்குரிய பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களும் ஒருவராவார்.
இவர் தம்முடைய குர்-ஆன் தமிழாக்கத்தில் கீழ்கண்டவாறு ஒரு விஞ்ஞான பிழையை மறைத்து, தமிழ் முஸ்லிம்கள் அனைவரின் முகத்திலும் கரியை அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் கைகளாலேயே பூசியுள்ளார். இப்படி உண்மையை மறைத்து, பொய்யை உண்மை என்றுச் சொல்லி மக்களின் முன்பாக மிகவும் தைரியமாக பேசக்கூடிய திறமை இவருக்கு உண்டு என்பதை யாரும் மறுக்கமுடியாது.
இக்கட்டுரையில் கீழ்கண்ட தலைப்புகளில் நாம் குர்-ஆனின் விஞ்ஞான பிழையை ஆய்வு செய்யப்போகிறோம்:
- பிஜே அவர்களின் குர்-ஆன் விளக்கம் – எண் 231 "விந்தின் பிறப்பிடம்" அல்லது "விந்து எங்கிருந்து வெளியேற்றப்படுகின்றது".
- விந்து உருவாகுதல்/வெளியேறுதல் பற்றி விஞ்ஞானம் என்ன சொல்கிறது?
- விந்து பற்றிய குர்-ஆனின் விஞ்ஞான பிழை – ஓர் அலசல்
- விந்து முதுகெலும்பு, விலாயெலும்புக்கு இடையிலிருந்து வெளிப்படுகிறது என்று முஹம்மதுவிற்கு எப்படித் தெரியும்?
- பி. ஜே அவர்களின் விளக்கமும் அதிலுள்ள சிக்கல்களும், பொய்களும்
- தமிழ் முஸ்லிம் மருத்துவர்களுக்கு சில கேள்விகள்
- முடிவுரை
குறிப்பு: இந்த கட்டுரை வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று எண்ணிவிடாதீர்கள். இக்கட்டுரையில் எந்த ஒரு ஆபாசமான வார்த்தைகளும் வர்ணனைகளும் இல்லை. விஞ்ஞானத்தின் அடிப்படையில் ஆய்வு செய்யப்படுவதினால் எல்லோரும் முகம் சுளிக்காமல் படிக்கலாம். பத்தாவது வகுப்பு படிக்கும் நம் பிள்ளைகளுக்கு இருக்கும் விஞ்ஞான அறிவுக்குள்ளே இந்த விவரங்கள் அடங்கிவிடுகின்றன. குழந்தைகள் எப்படி கருப்பைக்குள் உருவாகின்றன, எப்படி பிறக்கின்றன போன்ற பொதுவான விவரங்கள் 10ம் வகுப்பு படிக்கும் நம் பிள்ளைகளுக்கு தெரிந்து இருக்கின்றது என்று நம்புகிறேன். ஒருவேளை சில முஸ்லிம்கள் இந்த கட்டுரையை படிக்கக்கூடாது என்று தடை விதித்தால், அதே தடை குர்-ஆனுக்கும், அந்த குர்-ஆனின் தமிழாக்கத்திற்கும் பொருந்தும் என்று அவர்கள் அங்கீகரிக்கிறார்கள் என்று பொருளாகும். மேற்கொண்டு இந்த கட்டுரையை படிக்கவேண்டுமா இல்லையா என்பது உங்களின் விருப்பத்திற்கு விட்டுவிடுகிறேன். இப்போழுதும், இந்த விண்டோவை மூடிவிட்டு, நீங்கள் வேறு ஏதாவது வேலை செய்யலாம். உங்கள் கணினி/மொபைல் உங்கள் கைகளிலேயே இருக்கிறது என்பதை மறந்துவிடவேண்டாம்.
1. பிஜே அவர்களின் குர்-ஆன் விளக்கம் - எண் 231 "விந்தின் பிறப்பிடம்" அல்லது "விந்து எங்கிருந்து வெளியேற்றப்படுகின்றது"
முதலாவது, குர்-ஆன் 86:5-7 வசனங்களை படிப்போம்.
86:5. மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் 368 என்பதைச் சிந்திக்கட்டும்.
86:6. குதித்து வெளிப்படும் நீரிலிருந்து படைக்கப்பட்டான்.506
86:7. அது முதுகுத் தண்டுக்கும் முன்பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது.231 (பிஜே தமிழாக்கம்).
86:7. அது, முதுகெலும்புக்கும், நெஞ்செலும்புக்கும் இடையிலிருந்து வெளியாகின்றது. (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் தமிழாக்கம்)
86:7. அது, முதுகந்தண்டுக்கும் நெஞ்சுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகின்றது. (அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்)
86:7. முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது. (முஹம்மது ஜான் தமிழாக்கம்).
பிஜே அவர்களின் குர்-ஆன் தமிழாக்கம் முதன் முதலாக வந்ததிலிருந்து இன்று வரை அனேக பதிப்புக்கள் வெளியாகியுள்ளது.
குர்-ஆன் தமிழாக்கத்தின் விளக்க குறிப்பு எண் 231, "விந்தின் பிறப்பிடம்" என்று தலைப்பு கொடுக்கப்பட்டு கீழ்கண்ட விவரங்கள் பதியப்பட்டு இருந்தது.
2012ம் ஆண்டு ஆன்லைன் பீஜே தளத்தில் காணப்பட்ட வரிகள்: (அவரது தளத்தில் 2005ம் ஆண்டும் இதே வரிகள் தான் காணப்பட்டது.)
2015ம் ஆண்டு ஆன்லைன் பீஜே தளத்தில் காணப்பட்ட வரிகள்:
("விளக்கங்கள் அட்டவணையில் இன்னும் "விந்தின் பிறப்பிடம்" என்று தான் இணைய தளத்தில் உள்ளது, இதனை மாற்ற அவர்கள் மறந்துவிட்டார்கள் என்று நினைக்கிறேன்)
2012ம் ஆண்டில் தலைப்பு "விந்தின் பிறப்பிடம்" என்று இருந்தது, அதன் பிறகு அது "விந்து எங்கிருந்து வெளியேற்றப்படுகிறது?" என்று மாறிவிட்டது.
விஞ்ஞானத்தின் படி விந்து உருவாகும் இடமும், குர்-ஆன் சொல்லும் இடமும் ஒன்றை ஒன்று முரண்படுகின்றது என்பதை அறிந்துக்கொண்ட பீஜே அவர்கள், இப்போது "விந்து எங்கிருந்து வெளியேற்றப்படுகிறது?" என்று மாற்றி எழுதியுள்ளார்.
பிஜே அவர்களால் இப்படி தலைப்பைத் தான் மாற்றமுடிந்தது, ஆனால் விஞ்ஞானப் பிழையை குர்-ஆனிலிருந்து அவரால் நீக்க முடிந்ததா?
பிஜே அவர்களின் விளக்கத்தின் படி, விதைப் பையில் விந்து உற்பத்தியானாலும் அது மேலேறிச் சென்று முதுகுத் தண்டிற்கும் முன் பகுதிக்கும் இடையே உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்து அங்கிருந்து தான் வேகமாகத் தள்ளப்படுகிறது. இதனை சமீப காலத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
பிஜே அவர்களின் மேற்கண்ட விளக்கத்தில் உள்ள பிழைகள்,பொய்கள் என்னவென்றும், குர்-ஆன் வசனத்தில் காணப்படும் விஞ்ஞான பிழையையும், நாம் ஆய்வு செய்வதற்கு முன்பாக, விந்து உற்பத்தியாவதைப் பற்றியும், அது வெளியேறுவதைப் பற்றியும் விஞ்ஞானம் என்ன சொல்கிறது என்பதை சுருக்கமாக காண்போம்.
2. விந்து உருவாகுதல்/வெளியேறுதல் பற்றி விஞ்ஞானம் என்ன சொல்கிறது?
20ம் நூற்றாண்டில் உலகம் மிகச்சிறந்த விஞ்ஞான கண்டுபிடிப்புகளையும், தொழில் நுட்பத்தையும் கண்டுள்ளது. முக்கியமாக கணினியின் வருகையும், இணையத்தின் வருகையும் உலகை சுருக்கிவிட்டது எனலாம். நவீன தொழில் நுட்பத்தினாலும், கணினியினாலும் "ஒரு மனிதனுக்குள் என்ன நடக்கிறது?" என்பதை அவன் உயிரோடு இருக்கும்போதே காணமுடியும். ஒரு தாயின் கர்பப்பபையில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்தை அந்த குழந்தை பிறப்பதற்கு முன்பே பெற்றோர்கள் பார்க்கமுடியும்.
இதே போல, ஒரு மனிதனின் உடலில் உள்ள ஒவ்வொரு அவயத்தையும், நரம்பையும், சுரப்பிகளையும் இன்னும் அனைத்து வேலைப்பாடுகளையும் விஞ்ஞானம் கண்டுபிடித்து உள்ளது. நம்முடைய இந்த கட்டுரைக்கு சம்மந்தப்பட்டு,
• விந்து எங்கு உருவாகிறது? எப்படி உருவாகிறது?
• எங்கே செமிக்கப்படுகின்றது? எப்படி வெளியேறுகிறது?
• ஒவ்வொரு விந்து துளியில் இருக்கும் உயிரணுக்களின் எண்ணிக்கை என்ன?
போன்ற அனைத்து விவரங்களும் துள்ளியமாக தற்கால விஞ்ஞானத்தினால் கணிக்கமுடியும்.
அ) விந்து எங்கு உருவாகின்றது:
விந்து விதைப்பையிலும், இன்னும் அதைச் சுற்றியுள்ள சுரப்பிகளிலும் உருவாகின்றது:
The testicle (from Latin testiculus, diminutive of testis, meaning "witness" of virility,[1] plural testes) is the malegonad in animals. Like the ovaries to which they are homologous, testes are components of both thereproductive system and the endocrine system. The primary functions of the testes are to produce sperm(spermatogenesis) and to produce androgens, primarily testosterone. மூலம்:http://en.wikipedia.org/wiki/Testicle
ஆ) விந்து உற்பத்தில் ஒவ்வொரு சுரப்பியின் பங்கு என்ன?
The components and contributions of semen are as follows:
Gland சுரப்பி | Approximate % எவ்வளவு சதவிகிதம் | Description விவரங்கள் |
விந்துப்பை | 2–5% | Approximately 200- to 500-million spermatozoa (also called sperm or spermatozoans), produced in the testes, are released per ejaculation. If a man has undergone a vasectomy, he will have no sperm in the ejaculation. |
செமினல் வெசிகல் சுரப்பி | 65–75% | amino acids, citrate, enzymes, flavins, fructose (2–5 mg per mL semen,[3] the main energy source of sperm cells, which rely entirely on sugars from the seminal plasma for energy), phosphorylcholine, prostaglandins (involved in suppressing an immune response by the female against the foreign semen), proteins, vitamin C |
prostateபுராஸ்டேட் சுரப்பி, | 25–30% | acid phosphatase, citric acid, fibrinolysin, prostate specific antigen, proteolytic enzymes, zinc (the zinc level is about 135±40 micrograms/ml for healthy men.[4] Zinc serves to help to stabilize the DNA-containing chromatin in the sperm cells. A zinc deficiency may result in lowered fertility because of increased sperm fragility. Zinc deficiency can also adversely affect spermatogenesis.) |
பல்போ-உறேதல் சுரப்பி | < 1% | galactose, mucus (serve to increase the mobility of sperm cells in the vagina and cervix by creating a less viscous channel for the sperm cells to swim through, and preventing their diffusion out of the semen. Contributes to the cohesive jelly-like texture of semen.), pre-ejaculate, sialic acid |
மூலம்: en.wikipedia.org/wiki/Semen
கீழ்கண்ட படத்தை நன்றாக பார்க்கவும், பிஜே அவர்களின் விளக்கத்தில் கொடுக்கப்பட்ட விவரங்கள் மற்றும் குர்-ஆன் சொல்லும் விவரங்களிலிருந்து நாம் கேட்கும் கேள்விகளை புரிந்துக் கொள்ள இந்த படம் உதவியாக இருக்கும்.
படம் 1: விந்து உற்பத்திக்கு உதவும் சுரப்பிகள் மற்றும் இதர அவயங்கள்
கீழே தரப்பட்டுள்ள படங்களில் கிட்னிக்கும், விந்து உற்பத்தியாகும் விந்துப்பைக்கும், இதர சுரப்பிகளுக்கும் இடையே இருக்கும் தூரத்தை காணமுடியும். மேலும், கிட்னிக்கு மேலே தான் விலா எலும்புகள் உள்ளன என்பதை கவனத்தில் கொள்ளவும்.
இதுவரை நாம் கண்ட படங்களிலிருந்து அறிந்துக் கொள்பவைகள்:
1) மனிதனின் விந்துப்பையும், அதைச் சுற்றியுள்ள சுரப்பிகளும் தான் விந்துவையும், அதனுள் இருக்கும் இதர உயிர் அணுக்களையும் உற்பத்திச் செய்கின்றன.
2) விலா எலும்பு இருக்கும் இடத்திற்கும், விந்துப்பை இருக்கும் இடத்திற்கும் இடையே சிறிது தூரம் உள்ளது ( 5.5 அடி உயரமுள்ள ஒரு சராசரி மனிதனின் விதைப் பைக்கும், அவனது விலா எலும்பு அமைந்திருக்கும் இடத்திற்கும் இடையே 15 செண்டி மீட்டருக்கு (அறை அடி) அதிகமான தூரம் இருக்கும். இதனை இக்கட்டுரையை படிக்கும் நபரே தன் கைகளினால் தன்னை அளந்து பார்த்துக் கொள்ளலாம். அளவு எடுக்கும் போது தனி அறையில் நீங்கள் இருந்தால் நல்லது, ஏனென்றால் மற்றவர்கள் உங்களின் அளவு எடுக்கும் செயலை பார்த்தால், ஒரு மாதிரியாக உங்களைப் பற்றி நினைத்துவிடுவார்கள்.
3) விந்துப்பை இருக்கும் இடத்திலிருந்து, விலா எலும்பு இருக்கும் இடம் வரை "விந்தை" எடுத்துச் சென்று, மறுபடியும் திரும்பி அதனை ஆணின் மர்ம உருப்பிற்கு கொண்டுச் செல்லக்கூடிய எந்த ஒரு குழாயோ, நரம்போ நம் உடலில் காணப்படுவதில்லை.
இவைகளை நாம் கவனத்தில் கொண்டு, குர்-ஆன் சொல்லும் வசனத்திற்கும், பிஜே அவர்களின் விளக்கத்திற்கும் இப்போது செல்வோம்.
3. விந்து பற்றிய குர்-ஆனின் விஞ்ஞான பிழை – ஓர் அலசல்
இந்த விஞ்ஞான பிழை குர்-ஆன் 86:5-7 வசனங்களில் காணப்படுகின்றது, அவைகளை நான்கு தமிழாக்கங்களில் படிப்போம். ஒவ்வொரு தமிழாக்கத்திலும் 86:7ம் வசனத்தை கவனமாக படிக்கவும்.
5. மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதைச் சிந்திக்கட்டும்.
6. குதித்து வெளிப்படும் நீரிலிருந்து படைக்கப்பட்டான்.
7. அது முதுகுத் தண்டுக்கும் முன்பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது.231 (பிஜே தமிழாக்கம்).
86:7. அது, முதுகெலும்புக்கும், நெஞ்செலும்புக்கும் இடையிலிருந்து வெளியாகின்றது. (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் தமிழாக்கம்)
86:7. அது, முதுகந்தண்டுக்கும் நெஞ்சுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகின்றது. (அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்)
86:7. முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது. (முஹம்மது ஜான் தமிழாக்கம்).
மேற்கண்ட நான்கு தமிழாக்கங்களை பார்க்கும் போது, அவர்கள் எப்படி மொழியாக்கம் செய்து இருக்கிறார்கள் என்பதை கவனிக்கலாம்:
1) பிஜே --> முதுகுத் தண்டுக்கும் முன்பகுதிக்கும் இடையிலிருந்து
2) இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் --> முதுகெலும்புக்கும், நெஞ்செலும்புக்கும் இடையிலிருந்து
3) அப்துல் ஹமீது பாகவி --> முதுகந்தண்டுக்கும் நெஞ்சுக்கும் மத்தியிலிருந்து
4) முஹம்மது ஜான் --> முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து
பிஜே தவிர மற்றவர்கள் "விலா எலும்பு, நெஞ்செலும்பு, நெஞ்சு" என்று தமிழாக்கம் செய்துள்ளார்கள். பிஜே அவர்கள் மட்டும் "முன்பகுதிக்கு" என்று தமிழாக்கம் செய்துள்ளார். ஏன் அவர் நெஞ்சு (அ) விலா எலும்பு என்று தெளிவாக எழுதவில்லை? ஒருவேளை இந்த குர்-ஆன் வசனத்தில் விஞ்ஞான பிழை இருக்கிறதை மறைப்பதற்காக இப்படி எழுதியிருப்பாரோ என்று சந்தேகம் எழுகின்றது. இந்த வசனத்தை படிப்பவர்களுக்கு இந்த பிழை தெரியாமல் இருக்கவேண்டும் என்பதற்காக முடிந்த அளவிற்கு பீஜே அவர்கள் முயற்சி எடுத்துள்ளார் என்பது விளங்குகிறது.
குர்-ஆனின் விஞ்ஞான பிழை: கி.பி. ஏழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட குர்-ஆன், ஒரு ஆணின் முதுகு எலும்புக்கும், விலா எலும்புக்கும் (மார்புக்கும்) இடையிலிருந்து உற்பத்தியாகி வெளிப்படுகிறது என்றுச் சொல்கிறது. இது விஞ்ஞான பிழையாகும்.
பிஜே போன்ற இஸ்லாமிய அறிஞர்கள், இந்த பிழையை சரி செய்ய பல விளக்கங்களை தருகிறார்கள். அவைகளில் ஒன்று தான் பிஜே அவர்கள் கொடுத்த விளக்கம் (அடுத்த குர்-ஆன் பதிவில் இந்த விளக்கம் இருக்காது அல்லது மாற்றப்பட்டுவிடும்). விந்து விதைப்பையில் உற்பத்தியானாலும், அது மேலே சென்று முதுகெலும்பு, மற்றும் விலா எலும்பு உள்ள இடம் வரை சென்று மறுபடியும் திரும்பு வருகிறதாம். இவர் சொன்னது போல குர்-ஆன் சொல்வதில்லை. விதைப்பையில் விந்து உற்பத்தியாகி, பிறகு முதுகெலும்பு வரை சென்று வருகிறது என்று குர்-ஆன் சொல்லவில்லை. உண்மையாகவே அல்லாஹ்விற்கு மனிதனின் உடலில் என்ன நடக்கிறது என்று தெரிந்து இருந்தால், அல்லாஹ் தான் மனிதனையும் படைத்து இருந்திருந்தால், மிகத் தெளிவாக இதனை குர்-ஆனில் சொல்லியிருப்பார், இப்படி விஞ்ஞானத்துக்கு எதிரான தகவல்களை குர்-ஆனில் வசனங்களாக இறக்கியிருந்திருக்கமாட்டார். இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால்:
அ) குர்-ஆனில் விஞ்ஞான பிழை உள்ளது.
ஆ) இந்த பிழை இருப்பதினால், குர்-ஆன் இறைவனின் வேதமல்ல.
இ) இந்த பிழையுள்ள குர்-ஆனை இறக்கிய அல்லாஹ்வின் தூதராக முஹம்மது இருப்பதினால், அவரும் உண்மையான தீர்க்கதரிசி அல்ல, அவர் கள்ளத் தீர்க்கதரிசியாவார்.
ஈ) விஞ்ஞானத்தை தங்கள் குர்-ஆனின் தெய்வீகத் தன்மைக்கு அடிப்படையாக இஸ்லாமிய அறிஞர்கள் முன்வைப்பதினால், அதே விஞ்ஞானம் இப்போது குர்-ஆனின் தெய்வீகத்தன்மையை ஆணித்தரமாக மறுக்கிறது.
எனவே, மக்கள் இஸ்லாமையும், அல்லாஹ்வையும், குர்-ஆனையும் மற்றும் முஹம்மதுவையும் புறக்கணிக்கவேண்டும்.
4. விந்து முதுகெலும்பு, விலாயெலும்புக்கு இடையிலிருந்து வெளிப்படுகிறது என்று முஹம்மதுவிற்கு எப்படித் தெரியும்?
முந்தைய தலைப்பில், குர்-ஆனின் விஞ்ஞான பிழையைக் கண்டோம். விந்து முதுகெலும்பு மற்றும் விலா எலும்புக்கு இடையிலிருந்து வெளிப்படுகிறது என்ற ஒரு தவறான விவரத்தை குர்-ஆன் சொல்கிறது என்பதைக் கண்டோம்.
இப்போது குர்-ஆனை படிக்கும் ஒவ்வொருவருக்கும் கீழ்கண்ட கேள்விகள் தோன்றும்:
அ) முஹம்மது குர்-ஆனில் ஏன் இப்படி தவறாக எழுதிவைத்தார்?
ஆ) அவருடைய கால கட்டத்தில் விந்து என்பது முதுகெலும்பு, விலா எலும்புக்கு மத்தியிலிருந்து வெளிப்படுகின்றது என்ற தவறான நம்பிக்கை மக்களிடையே பரவலாக பரவியிருந்ததா?
இ) முஹம்மதுவின் காலத்திலோ அல்லது அவருக்கு முன்பாகவோ யாராவது இப்படிப்பட்ட (விந்து விலா எலும்பு பகுதியிலிருந்து வெளிப்படுகிறது என்ற) கருத்தை எழுதி வைத்திருந்தார்களா?
மேற்கண்ட கேள்விகளுக்கு பதில்கள் வேண்டுமென்றால் நாம் சிறிது சரித்திரத்தை திரும்பி பார்க்கவேண்டும். முஹம்மதுவிற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற மருத்துவரை நாம் ஆய்வு செய்தால் உண்மை தெரியவரும். இப்போது அந்த மருத்துவர் யார்? அவர் எவைகளை எழுதி வைத்தார்? போன்ற விவரங்களை சுருக்கமாக காண்போம். குர்-ஆனில் ஏன் இந்த விஞ்ஞான பிழை இடம் பிடித்துள்ளது என்பது இப்போது தெளிவாக விளங்க ஆரம்பிக்கும்.
ஹிப்போகிரட்டீஸ் (இப்போக்கிரட்டீசு) – கிரேக்க மருத்துவர் - கி.மு. 460 – 370 (Hippocrates – Ancient Greek Physician)
கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற மருத்துவரின் பெயர் "ஹிப்போக்ரேட்ஸ்" ஆகும். இவரை மருத்துவ துறையின் தந்தை என்றும் அழைப்பார்கள். இவரைப் பற்றி அறிய கீழ்கண்ட தொடுப்புகளை சொடுக்கி படிக்கவும்.
2. http://www.greekmedicine.net/whos_who/Hippocrates.html
3. http://en.wikipedia.org/wiki/Hippocrates
4. http://en.wikipedia.org/wiki/Hippocratic_Oath
5. http://www.historylearningsite.co.uk/hippocrates.htm
6. http://www.kosisland.gr/en/kosisland-history/hippocrates-from-kos.html
7. http://www.britannica.com/EBchecked/topic/266627/Hippocrates
8. www.ucl.ac.uk/~ucgajpd/medicina%20antiqua/sa_hippint.html
இவருக்கும் விந்து பற்றிய குர்-ஆன் வசனத்திற்கும் என்ன சம்மந்தம்?
இவர் ஒரு புகழ் பெற்ற மருத்துவர் தான், ஆனால் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் இவர் வாழ்ந்த படியினால், இன்றுள்ளது போல நவீன மருத்துவ கருவிகள், மருந்துகள் அக்காலத்தில் இல்லை. இவருடைய மருத்துவ விவரங்களில் சில பிழைகள் இருந்தன. இவருக்கு அடுத்தபடியாக, ஆண்டாண்டு காலமாக, நவீன மருத்துவ கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் புதியதாக மருத்துவ உண்மைகளை கண்டுபிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். இதன் அடிப்படையில் பழைய கால மருத்துவ விவரங்களில் உள்ள பிழைகள் இக்காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்படுகின்றன.
இவருடைய புகழ்பெற்ற ஒரு பிழையான விவரம் தான், விந்து எங்கே உற்பத்தியாகின்றது மற்றும் எங்கேயிருந்து வெளியேற்றப்படுகின்றது என்பதாகும்.
இவருடைய கருத்தின் படி:
விந்து என்பது மூளையிலிருந்து, முதுகுத்தண்டின் எலும்பு மஜ்ஜையின் மூலமாக, கிட்னியின் பக்கத்திலிருந்து கடந்து (முதுகெலும்பு மற்றும் விலா எலும்புக்கும் மத்தியிலிருந்து கடந்து வந்து), விதைகளில் விழுந்து, கடைசியாக ஆண்களின் மர்ம உறுப்பிலிருந்து வெளிவருகிறது.
There is a rather less complicated explanation for this verse however. The Greek physician Hippocrates and his followers taught in the fifth century BC that semen comes from all the fluid in the body, diffusing from the brain into the spinal marrow, before passing through the kidneys and via the testicles into the penis [7]. Clearly according to this view sperm originates from the region of the kidneys, and although there is obviously no substance to this teaching today, it was well-known in Muhammed's day, and shows how the Qur'an could contain such an erroneous statement.
மூலம்: http://www.answering-islam.org/Quran/Science/embryo.html
இந்த மருத்துவருடைய விந்து பற்றிய விவரங்கள் பரவலாக முஹம்மதுவின் காலத்தில் பரவியிருந்தபடியினால், அதனை குர்-ஆனில் முஹம்மது சேர்த்துள்ளார் (இல்லை, இல்லை குர்-ஆனை முஹம்மது எழுதவில்லை, அல்லாஹ் தான் அதன் ஆசிரியர் என்று முஸ்லிம்கள் சொன்னால், அந்த அல்லாஹ்வினால் இந்த மருத்துவர் செய்த தவறை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது இதிலிருந்து தெளிவாக புரியும். மேலும் மனிதனை படைத்த இறைவன் நிச்சயமாக அல்லாஹ் இல்லை என்பதும் இதிலிருந்து புரிந்துவிடும்).
குர்-ஆன் 86:7ம் வசனத்தை கவனமாக இப்போழுது படித்துப் பாருங்கள், அல்லாஹ் செய்த பிழை தெளிவாகத் தெரியும்:
86:7. அது முதுகுத் தண்டுக்கும் முன்பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது.231 (பிஜே தமிழாக்கம்).
86:7. அது, முதுகெலும்புக்கும், நெஞ்செலும்புக்கும் இடையிலிருந்து வெளியாகின்றது. (இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் தமிழாக்கம்)
86:7. அது, முதுகந்தண்டுக்கும் நெஞ்சுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகின்றது. (அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்)
86:7. முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது. (முஹம்மது ஜான் தமிழாக்கம்).
5. பி. ஜே அவர்களின் விளக்கமும் அதிலுள்ள சிக்கல்களும், பொய்களும்
இதுவரை நாம் விந்து பற்றிய குர்-ஆன் வசனத்திற்கும், பிஜே அவர்களின் விளக்கத்திற்கும் சம்மந்தப்பட்ட கீழ்கண்ட ஆதாரங்களைப் பார்த்தோம்.
அ) குர்-ஆன் விந்துவின் உற்பத்தி/வெளிப்படுதல் பற்றி என்ன சொல்கிறது.
ஆ) விஞ்ஞானம் விந்துவின் உற்பத்தி/வெளிப்படுதல் பற்றி என்ன சொல்கிறது.
இ) முஹம்மது/அல்லாஹ் ஏன் விஞ்ஞானத்திற்கு எதிரான விவரத்தை குர்-ஆனில் சேர்த்து இருக்கிறார்?
ஈ) முஹம்மதுவிற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மருத்துவர் ஹிப்போகிரடீஸ் என்பவரின் கருத்து "விந்து" பற்றி என்னவாக இருந்தது?
இப்போது பீஜே அவர்கள் எழுதிய விளக்கத்தின் ஒவ்வொரு வரியையும் கவனிப்போம். இவர் எப்படி மக்களை முட்டாள்களாக்குகிறார் என்றும், எப்படி குர்-ஆனின் விஞ்ஞான பிழையை மறைத்து எழுதியுள்ளார் என்பதை சுருக்கமாக காண்போம்.
பீஜே அவர்களின் 231ம் விளக்கம்
231. விந்து எங்கிருந்து வெளியேற்றப்படுகிறது?
திருக்குர்ஆன் 86:7 வசனம் விந்து வெளிப்படுவதைப் பற்றிக் கூறும் போது அது முதுகுத் தண்டுக்கும் முன்பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது எனச் சொல்கிறது.
சமீப காலத்திற்கு முன்பு வரை மனிதனின் விதைப் பையிலிருந்து தான் விந்து வெளிப்படுகிறது என்று நம்பி வந்தனர். ஆனால் விதைப் பையில் விந்து உற்பத்தியானாலும் அது மேலேறிச் சென்று முதுகுத் தண்டிற்கும் முன் பகுதிக்கும் இடையே உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்து அங்கிருந்து தான் வேகமாகத் தள்ளப்படுகிறது என்பதை சமீப காலத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
இதை 1400 ஆண்டுகளுக்கு முன் இந்தச் சொற்றொடர் மூலம் குறிப்பிட்டிருப்பது, இது முஹம்மது நபியின் வார்த்தை இல்லை. மாறாக இறைவனின் வார்த்தையே என்பதை நிரூபிக்கும் சான்றாக அமைந்துள்ளது.
பிஜே அவர்களின் மேற்கண்ட விளக்கத்தை ஒன்றுக்கு பத்து முறை படித்துப் பாருங்கள். இப்போது கீழ்கண்ட கேள்விகளை அவருக்கு முன்பாக வைக்க விரும்புகிறேன். அவைகள் நியாயமான கேள்விகளா இல்லையா என்பதை வாசகர்கள் முடிவு எடுக்கட்டும்:
1) 2012 வரை "விந்தின் பிறப்பிடம்" என்று இருந்த தலைப்பை "விந்து எங்கிருந்து வெளியேற்றப்படுகின்றது" என்று மாற்றி பதித்ததின் நோக்கமென்ன? குர்-ஆன் 86:7ம் வசனத்தை படிப்பவர்கள், குர்-ஆனின் விஞ்ஞான பிழையை கண்டுபிடித்து விடுவார்களோ என்று அஞ்சி, தலைப்பை மாற்றினீர்களா?
2) உங்களின் "சமீப காலத்திற்கு முன்பு வரை மனிதனின் விதைப் பையிலிருந்து தான் விந்து வெளிப்படுகிறது என்று நம்பி வந்தனர்" என்ற சொற்றொடரில், "சமீப காலத்திற்கு முன்பு வரை" என்று சொல்லியிருக்கிறீர்களே! சமீப காலம் என்றால் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு?
3) உங்கள் குர்-ஆன் தமிழாக்கத்தின் இந்த விளக்கத்தை 2005ல் படிப்பவனுக்கு "சமீப காலத்திற்கு முன்பு வரை" என்றால் எந்த ஆண்டை குறிக்கும்? அதே விளக்கத்தை 2012ம் ஆண்டில் படிப்பவனுக்கு, அது எந்த ஆண்டைக் குறிக்கும், அதே போல 2015ம் ஆண்டில் படிப்பவனுக்கு அது எந்த ஆண்டைக் குறிக்கும்? இன்னும் 25 ஆண்டுகள் கழித்து, 2040ல் உங்களின் விளக்கத்தை படிப்பவனுக்கு "சமீப காலத்திற்கு முன்பு வரை" என்றால் எந்த ஆண்டை குறிக்கும்? ஏன் இப்படி தலையும் இல்லாமல், காலும் இல்லாமல் எழுதி மக்களை முட்டாள்களாக்குகிறீர்கள்?
4) உங்களுடைய அடுத்த வரி: "ஆனால் விதைப் பையில் விந்து உற்பத்தியானாலும் அது மேலேறிச் சென்று முதுகுத் தண்டிற்கும் முன் பகுதிக்கும் இடையே உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்து அங்கிருந்து தான் வேகமாகத் தள்ளப்படுகிறது என்பதை சமீப காலத்தில் கண்டுபிடித்துள்ளனர்."
a. விதைப் பையிலிருந்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு விந்து சென்று திரும்பி வரும் என்றுச் சொல்கிறீர்களே, அந்த இடத்திற்கு என்ன பெயர்?
b. விஞ்ஞானிகள் அந்த இடத்தை கண்டுபிடித்து இருக்கிறார்களா?
c. அந்த இடத்திற்கு விந்தை கொண்டுச் செல்லும் குழாயின் பெயர் என்ன? பொதுவாக ஒரு முக்கியமான கண்டுபிடிப்பை கண்டுபிடிக்கும் போது, அந்த சுரப்பிற்கு, குழாயிற்கு, இடத்திற்கு அந்த விஞ்ஞானியின் பெயரையே வைப்பது ஒரு வழக்கம். இதுவரை கண்டுபிடிக்கப்படாத அந்த இடத்தை நீங்கள் (பிஜே) கண்டுபிடித்தால், அதற்கு உங்கள் பெயரையே வைக்க முஸ்லிம் உலகம் சிபாரிசு செய்யும்.
d. "சமீப காலத்தில் கண்டுபிடித்தார்கள்" என்று மொட்டையாக சொன்னால் எப்படி பிஜே அவர்களே! எந்த ஆண்டு இதை கண்டுபிடித்தார்கள்? நீங்கள் குர்-ஆன் தமிழாக்கத்தை முதன் முதலில் வெளியிட்ட ஆண்டா? அதற்கு முன்பான ஆண்டா? அல்லது 1980களிலா? 1970களிலா? 1960களிலா? சமீபம் என்றால் என்னவென்று பொருள் கொள்வது?
e. உங்களின் இந்த விளக்கத்தை இன்றிலிருந்து 100 ஆண்டுகள் கழித்து ஒரு தமிழர் படிக்கும் போது, சமீப காலத்தில் என்று நீங்கள் எழுதியிருப்பது அவருக்கு எந்த வருடத்தைக் காட்டும்? அவன் 20ம் நூற்றாண்டு என்று கருதுவானா? 21ம் நூற்றாண்டு என்று கருதுவானா? அல்லது 22ம் நூற்றாண்டு என்று கருதுவானா?
f. ஆண் உச்சகட்டத்தை அடையும் போது, விந்து வேகமாக வெளிப்படுகின்றது என்பதற்காக, அது விதைப்பையிலிருந்து முதுகெலும்பு வரை மேலே சென்று, மறுபடியும் வேகமாக வந்து வெளிப்படுகின்றது என்றுச் சொல்வது சரியான வாதமில்லை? குர்-ஆனின் விஞ்ஞான பிழையிலிருந்து அதனை காப்பாற்ற நீங்கள் இப்படி விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள் என்று என்னால் உணரமுடிகின்றது, ஆனால், இஸ்லாமியரல்லாத மக்கள் ஒருவேளை இப்படியாகவும் நினைக்கக்கூடும். அதாவது நீங்கள் கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்களை மனதில் வைத்து இதனை எழுதியிருக்கிறீர்கள் என்று எண்ணிவிடுவார்கள். சுழற்பந்து வீச்சாளர் சில அடிகள் தூரத்திலிருந்து ஓடி வந்து பந்தை வீசுவார், அதனால் அதன் வேகம் குறைவாக இருக்கும். வேகப்பந்து வீச்சாளர் ரொம்ப தூரத்திலிருந்து ஓடி வந்து பந்தை வீசுவதினால் பந்து அதிக வேகமாக வெளிப்படுகின்றது என்ற லாஜிக்கை இங்கே நுழைத்துவிட்டீர்களோ என்று மக்கள் எண்ணிவிடுவார்கள்.
g. நீங்கள் சொன்ன அந்த சமீப கால கண்டுபிடிப்பை கண்டுபிடித்த விஞ்ஞானியின் பெயர் என்ன? அவர் எந்த நாட்டைச் சார்ந்தவர்? எந்த ஆண்டு இந்த கண்டுபிடிப்பை அவர் கண்டுபிடித்தார்? இப்போது அவர் உயிரோடு இருக்கின்றாரா? அவர் எந்த பல்கலைக் கழகத்தில் பயின்றார் அல்லது ஆய்வு செய்தார்? இந்த கண்டுபிடிப்பைப் பற்றி நீங்கள் படித்த பத்திரிக்கையின் பெயர் என்ன? அல்லது இணைய தள பத்திரிக்கையின் பெயர் என்ன?
h. மனிதனின் உடல் இதுவரை பல ஆயிரமுறை அல்லது இலட்ச முறை திறக்கப்பட்டு, ஆய்வுகள் செய்து பல உண்மைகளை விஞ்ஞானிகள் உலகிற்குச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கெல்லாம் இதுவரை புலப்படாத இந்த அதிசய கண்டுபிடிப்பு, பீஜே அவர்கள் சொன்ன விஞ்ஞானிகளுக்கு மட்டும், சமீப காலத்தில் புலப்பட்டு இருக்கின்றது. இது மிகப்பெரிய கண்டுபிடிப்பு தான். அப்படியானால், இவர்களுக்கு நோபல் பரிசு போன்ற பரிசுகள் ஏதாவது கிடைத்ததா? குறைந்த பட்சம், குர்-ஆனின் ஒரு விஞ்ஞான பிழையை நீக்க உதவிய இவர்களுக்கு சௌதி அரேபிய அரசாங்கம் சன்மானம் செய்து பரிசுகள் கொடுத்திருக்கவேண்டுமே! இதுபோல ஏதாவது நடந்ததா?
நான் மேலே கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதிலை நீங்கள் தரவில்லையென்றால், உங்களின் இந்த கடைசி வரிகள் பொய்யானவை என்றும்,உங்கள் முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி என்றும், குர்-ஆன் இறைவேதமல்ல என்றும் விஞ்ஞானமே முத்திரையிட்டுவிடும் அபாயம் உள்ளது:
"இதை 1400 ஆண்டுகளுக்கு முன் இந்தச் சொற்றொடர் மூலம் குறிப்பிட்டிருப்பது, இது முஹம்மது நபியின் வார்த்தை இல்லை. மாறாக இறைவனின் வார்த்தையே என்பதை நிரூபிக்கும் சான்றாக அமைந்துள்ளது."
எனவே, தயவு செய்து இந்த கட்டுரையில் தரப்பட்ட கேள்விகளுக்கு விவரங்களுக்கு பதிலைக் கொடுத்து அல்லாஹ்வை காப்பாற்றுங்கள்.
6. தமிழ் முஸ்லிம் மருத்துவர்களுக்கு சில கேள்விகள்
இது விஞ்ஞானம் சம்மந்தப்பட்ட விவரம் என்பதாலும், முஸ்லிம் அறிஞர்கள் தங்கள் பொய்களை விஞ்ஞானத்தின் பெயர் கொண்டு சொல்வதினாலும், தமிழ் முஸ்லிம் மருத்துவர்களிடம் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்.
• நீங்கள் இறைவேதம் என்று நம்பும் குர்-ஆனில் விந்து உற்பத்தியாவது பற்றிய தவறான விவரம் தரப்பட்டுள்ளது.
• குர்-ஆனின் படி, முதுகு தண்டு மற்றும் விலா எலும்புகளுக்கு மத்தியிலிருந்து விந்து வெளிப்படுகின்றது/உருவாகின்றது. ஒரு மருத்துவராக இது பற்றிய உங்கள் நிலைப்பாடு என்ன?
• குர்-ஆன் உண்மையாகவே, இறைவனிடமிருந்து வந்திருந்தால், இப்படிப்பட்ட விஞ்ஞான பிழைகள் காணப்படாது. ஒரு மருத்துவராக அல்லது படித்தவராக இருக்கும் நீங்கள் குர்-ஆனை இறைவேதம் என்றுச் சொல்லப்போகின்றீர்களா? அல்லது பொய்யான வேதம் என்று அங்கீகரிக்கப்போகின்றீர்களா? ஒரே ஒரு பிழை இருந்தாலும், குர்-ஆன் இறைவேதமில்லை என்று குர்-ஆனே சொல்கிறது.
• நீங்கள் மருத்துவ படிப்பு படிக்கின்ற சமயத்தில் ஹிப்போகிரட்டீஸ் (Hippocrates) என்பவரைப் பற்றி படித்து இருப்பீர்கள். இவர் விந்து உற்பத்திப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்? என்று நீங்கள் படித்து இருக்கிறீர்களா?
• உங்களிடம் மனித உடல் அமைப்பு மற்றும் பாகங்கள் பற்றிய மருத்துவ புத்தகங்கள் படங்களோடு இருக்கலாம், அப்படி இருந்தால், அவைகளை உங்கள் இஸ்லாமிய அறிஞர் பிஜே அவர்களுக்கு அனுப்புங்களேன்? தற்காலத்தில் அனேக இணைய தளங்களும் இதைப் பற்றிய படங்களை, வீடியோக்களை வெளியிடுகின்றன. அவைகளையும் நீங்கள் அவருக்கு அனுப்பலாம்.
7. முடிவுரை :
பிஜே அவர்களே! நீங்கள் வேதம் என்று நம்பும் குர்-ஆனில் விஞ்ஞான பிழை இருப்பதை கண்டு இருக்கிறீர்கள். அந்த பிழையை மறைப்பதற்கு ஆதாரங்கள் இல்லாமல் பொய்களை உங்கள் விளக்க குறிப்பில் எழுதியிருக்கிறீர்கள். உங்கள் விளக்கத்திலிருந்து நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன். அடுத்த முறை குர்-ஆனை திருத்தி பதிக்கும் போது, விளக்க குறிப்பு 231ஐ அப்படியே வைத்திருங்கள், அதில் ஆதாரங்களோடு விவரங்களைத் தாருங்கள். முக்கியமாக, இந்த கட்டுரையில் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் விதத்தில் எழுதுங்கள்.
இந்த கட்டுரையைப் பற்றி பிஜே அவர்களோ அல்லது அவரது ஆதரவாளர்களோ (அல்லாஹ்வின் ஆதரவாளர்கள் என்று கூட சொல்லலாம்) பதில் எழுதினால், மேலதிகமாக இதைப் பற்றி ஆய்வு செய்ய, மேலதிக விளக்கம் அளிக்க நான் தயாராக இருக்கிறேன்.
கிறிஸ்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: பிஜே அவர்களின் குர்-ஆனை வாங்குங்கள், படியுங்கள். உங்களால் முடிந்த பதிலை அவருக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும் தாருங்கள். அவர்கள் சத்தியத்தை அறிந்துக்கொள்ளவேண்டும், அவர்களும் இஸ்லாமென்கின்ற அடிமைத் தனத்திலிருந்து விடுதலையாகவேண்டும்.
இந்த கட்டுரையை படிக்கும் ஒவ்வொருவருடைய கண்களும் திறக்கப்பட ஜெபிக்கிறேன். கர்த்தருடைய கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
கட்டுரை முற்றிற்று
தேதி: 7th April 2015
பிஜே அவர்களுக்கு அளித்த இதர மறுப்புக்கள்/பதில்கள்
உமரின் கட்டுரைகள்/மறுப்புக்கள்
Source: http://www.answering-islam.org/tamil/authors/umar/answerpj/pj_notes_231_semen_quran.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக