ஆசிரியர்: சைலஸ்
இயேசு மரணிப்பதற்கு முன்பாக நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளில் இயேசுவை கைது செய்தது இரண்டாவது நிகழ்வாகும். யூத தலைவர்களில் பலர் இயேசு கொல்லப்படவேண்டும் என்று விரும்பினார்கள். இதே போல பல யூதர்கள் இயேசுவை அதிகமாக நேசித்த்தார்கள் மற்றும் ஆதரித்தார்கள். இவர்களில் பேதுரு என்பவரும் ஒருவர், இவர் இயேசுவிற்காக சண்டையிட்டு அவருக்காக மரிக்கவும் தயாராக இருந்தார். ஆனால், இயேசு பேதுருவின் "சண்டையை நிறுத்து " என்று சொல்லிவிட்டார்.
மேற்கண்ட நிகழ்விற்கு சிறிது நேரம் கழித்து, இயேசு கீழ்கண்டவாறு கூறினார்:
யோவான் 18:36. இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்.
37. அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார். (யோவான் 18:36-37)
இயேசு இவ்வுலகத்தில் ஒரு அரசாங்கத்தை அமைக்க விரும்பவில்லை. இப்படி ஒரு அரசை அமைப்பது அவரது நோக்கமாகவும் இருக்கவில்லை, மட்டுமல்ல, மற்றவர்கள் அப்படிப்பட்ட அரசை இயேசுவைக் கொண்டு அமைக்க விரும்பினாலும் அதனை அவர் எதிர்த்தார். இதற்கு பதிலாக, இயேசு முன்பு போதித்தது போல, அவர் தேவ குமாரனாகிய மேசியா, அரசனாக திரும்பி வருவார், அப்போது அவர் மக்களை நீதியாக நியாயந்தீர்த்து, தீயவர்களை தன் இராஜ்ஜியத்திலிருந்து நீக்குவார். (மத்தேயு 13:40-43, 25:31-46, 26:63, 64, இவ்வசனங்களோடு தானியேல் 7:13, 14, 27ஐ ஒப்பிட்டுப் பார்க்கவும்). மேசியாவின் இராஜ்ஜியம் பூமியில் அமைப்பதற்காக அதுவரைக்கும் காத்திருக்கவேண்டும். எதிர் காலத்தில் ஒரு நாள் அது அமைக்கப்படும், ஆனால் இன்று இல்லை, இயேசு பூமியில் வாழும்போது அது அமைக்கப்படாது.
இயேசு இன்னொரு அரசு பற்றியும் போதித்தார்:
அது தான் "இறைவனின் அரசு (தேவனுடைய இராஜ்ஜியம்)". இயேசு தம்முடைய எதிர கால அரசு (மேசியாவின் அரசு)பற்றி போதித்தவற்றையும் , " தேவனுடைய இராஜ்ஜியம்" பற்றி அவர் போதித்தவற்றையும் நாம் ஒப்பிட்டுப் பார்த்தால், அவர் "தேவனுடைய இராஜ்ஜியத்துக்கு" அதிக முக்கியத்துவம் கொடுத்து போதனை செய்து இருப்பதை நாம் காணமுடியும். இயேசுவின் போதனைகள், உவமைகள் மற்றும் பிரசங்கங்களை கூர்ந்து கவனித்தால், அதில் "தேவனுடைய இராஜ்ஜியம்" பற்றிய விவரங்கள் அதிகம் காணப்படும். இயேசு பூமியில் வாழ்ந்த அந்த காலக்கட்டத்திலும் "தேவனுடைய இராஜ்ஜியம்" இருந்தது, இன்றும், இப்போதும் அது நம்மிடம் இருக்கிறது, மட்டுமல்ல, இயேசு தேவனுடைய வார்த்தையாய், இராஜாதி இராஜனாய், கர்த்தாதி கர்த்தராய் மறுபடியும் வரும் போது, அந்த தேவனுடைய இராஜ்ஜியம் மூழுமையாக ஸ்தாபிக்கப்படும். இயேசு உயிர்த்தெழுந்த பிறகு தன் சீடர்களுக்கு போதிக்கும் போதும், இந்த தலைப்பு ஒரு முக்கியமான தலைப்பாக இருந்தது (பார்க்க அப்போஸ்தலர் நடபடிகள் 1:3).
இங்கு கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், இயேசு உயிர்தெழுந்த பிறகு கூட, அவருடைய சீடர்கள் ஒரு உலகப்பிரகாரமான அரசு அமைக்கப்படவேண்டும் என்று விரும்பினார்கள் (பார்க்க அப் 1:7). தங்களை ஆட்சி புரிந்துகொண்டு இருந்த ரோமர்களின் அரசு அகற்றப்பட்டு புதிய அரசு இயேசுவால் அமைக்கப்படவேண்டும் என்று சீடர்கள் விரும்பினார்கள். தேவனுடைய ஆட்சி உலகில் ஸ்தாபிக்கப்படவேண்டும் என்று சீடர்கள் விரும்பினார்கள். ரோமர்களின் ஆட்சியினால், யூத மக்களும் அவர்களின் நாடும் தாங்கொணா துன்பத்துக்கு ஆளாகியிருந்தது. ஆனால், அந்த மேசியாவின் இராஜ்ஜியம் இப்போது இல்லை என்று இயேசு சீடர்களிடம் சொல்லிவிட்டார், மேலும் அந்த நாள் பிதாவின் வசத்தில் இருக்கிறது என்றுச் சொன்னார். பிறகு இயேசு சீடர்களிடம் "அவர்கள் நிறைவேற்றவேண்டிய ஊழியம்" பற்றி போதித்தார். அதன் பிறகு, இயேசுவின் சீடர்கள், உலகத்தில் ஸ்தாபிக்கப்படவேண்டிய அரசுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தங்கள் ஊழியமும் தரிசனமும் நிறைவேற்றுவதை முக்கிய அம்சமாக கொண்டு செயல்பட்டார்கள்.
இயேசு சீடர்களுக்கு அதிகமாக தேவனுடைய இராஜ்ஜியம் பற்றி பொதித்தார், ஏனென்றால், அது அவர்களின் வாழ்க்கையில் ஸ்தாபிக்கப்பட்டு, மற்றவர்களுக்கு பிரதிபலிக்கவேண்டும் என்று அவர் விரும்பினார். இயேசு மறுபடியும் திரும்பி வரும்வரை, அவர் போதித்த தேவனுடைய இராஜ்ஜியம் என்பது கிறிஸ்தவர்களுக்கு ஒரு ஆவிக்குரிய (ஆன்மீக) இராஜ்ஜியமாகவும், ஆன்மிக வல்லமையாகவும் இருக்கவேண்டும். இந்த தேவனுடைய இராஜ்ஜியம் தான் "நீதி, சமாதானம் மற்றும் பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷமாகும்" (ரோமர் 14:17), இப்படிப்பட்ட இராஜ்ஜியத்தின் அரசராக தேவன் இருப்பார். தேவன் பரிசுத்த ஆவியானவரின் மூலம் ஒரு அரசராக கிறிஸ்தவர்களின் உள்ளங்களிலும், வாழ்விலும் ஆட்சி செய்வார்.
தேவன் மக்களின் உள்ளங்களிலும் சிந்தனைகளிலும் ஆட்சி செய்யும் போது, மக்கள் மனமாற்றம் அடைவார்கள். இயேசுவின் சிறந்த இரண்டு கட்டளைகள் “நீ தேவனை நேசி அதே போல மற்ற மனிதர்களையும் நேசி” என்பதாகும். கிறிஸ்தவர்களாக மாறும் சகோதரர்களும், சகோதரிகளும் இந்த கட்டளையை மனதார பின்பற்றவேண்டும். கிறிஸ்தவர்கள் பாவத்தை விட்டுவிடவேண்டும் மற்றும் தேவனையும் மனிதனையும் நேசிக்கவேண்டும். கிறிஸ்துவிற்கு கீழ்படிவதினால், இப்படிப்பட்டவர்களின் உள்ளங்கள் மாற்றமடையும். தேவனிடம் இப்படிப்பட்ட அர்பணிப்பைச் செய்யும் கிறிஸ்தவர்கள், இயேசுவிற்காக வாழ்வது மட்டுமல்ல, அவருக்காக பாடுபடவும், மரிக்கவும் தயங்க மாட்டார்கள்.
கிறிஸ்துவிற்கு பிறகு அடுத்த சில நூற்றாண்டுகள் கிறிஸ்தவர்கள் பெருவாரியாக துன்புறுத்தப்பட்டார்கள். ஆனால், கிறிஸ்தவம் ரோம சாம்ராஜ்ஜியம் முழுவதும் பரவியது. அந்த ஆரம்ப கால கிறிஸ்தவ சபை மக்களின் உள்ளங்களும் சிந்தனைகளும் தேவனுடைய இராஜ்ஜியத்தினால் நிரப்பப்பட்டு இருந்தது. இந்த அன்பும் விசுவாசமும் ரோம சாம்ராஜ்ஜியத்தில் உள்ளவர்களை வென்றுவிட்டது. அக்கால கிறிஸ்தவர்கள் முழுமையான பரிசுத்தர்களாக 100 சதவிகிதம் வாழ்ந்தார்கள் என்று நாங்கள் சொல்லவரவில்லை, ஆனால், அவர்களின் மாற்றமடைந்த உள்ளங்ளும் சிந்தனைகளும், வாழ்க்கை நெறியும் தங்களை தேவனுடைய இராஜ்ஜியத்தின் மக்களாக பிரதிபலித்தது. கையில் வாளை ஏந்தாமல் கிறிஸ்தவத்துக்கு வெற்றி கிட்டியது. இந்த வெற்றிக்காக அவர்கள் மற்றவர்களை பயமுறுத்தவில்லை உலக பொருட்களின் ஆசைகளைக் காட்டி வசியம் செய்யவில்லை, மற்றவர்களின் இரத்தம் சிந்தவில்லை. இயேசு தான் மஸீஹா என்றும் தேவகுமாரன் என்றும் மக்கள் நம்புவதற்கு கட்டாயப்படுத்தப்படவில்லை. கிறிஸ்தவர்களாக மாறுவதற்கு ஜிஸ்யா போன்ற கட்டாய வரிச் சுமையை சுமத்தவில்லை, இரண்டாம் தர குடிமக்களாக தரக்குறைவாக மற்றவர்களை பார்க்கவில்லை. பாடுகளின் மத்தியிலும், கொடுமைகளின் மத்தியிலும் கிறிஸ்தவம் உலகமெங்கும் பரவியது.
தன்னை பின்பற்றுபவர்களிடம் உலகில் ஒரு அரசாங்கத்தை அமைக்கும்படி ஏன் இயேசு போதிக்கவில்லை? இயேசு சொல்லியிருந்தால், அவரின் சீடர்கள் வாள்களை பிடித்து போர் புரியவும் தயாராக இருந்திருப்பார்கள். மேசியாவிற்காக ஒரு அரசை அவர்கள் அமைத்து இருந்திருப்பார்கள். உண்மையான கிறிஸ்தவ அரசாங்கம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துப் பாருங்கள். அதில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் தேவன் மீது அன்பு கூறுவதிலும், தன்னைப்போல மற்ற மனிதர்கள் மீதும் அன்பு செலுத்துவதிலும் சிறந்து விளங்கியிருந்திருப்பான்.
இப்படி ஒரு அரசு அமைத்திருந்தால், அது ஒரு குறிப்பிட்ட கலாச்சரம், சமூகத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும். இப்படி அமைக்கப்படும் அரசாங்கங்கள், கிறிஸ்தவர்கள் அல்லாத மக்கள் மீது தங்கள் மத நம்பிக்கையை கட்டாயப்படுத்தி இருப்பார்கள், இது நல்லதல்ல.
குறைந்தபட்சம் ஒரு மதகுரு அரசராக அமர்ந்துக் கொண்டு நாட்டை ஆட்சி செய்யும்படியான (இறைமையாட்சி) அரசையாவது அமைத்துக் கொள்ளும்படி ஏன் இயேசு தம் சீடர்களுக்கு கட்டளையிடவில்லை?
இயேசு அரசு அமைக்கும் படி கட்டளை கொடுத்திருந்தால் ஏதாவது தவறு நடந்திருக்குமா?
பெத்லகேமில் உள்ள சந்நியாசி பாதிரிமார்கள் சண்டையிட்டுக் கொண்டது போன்ற ஒரு கேவலமான சண்டை உருவாகியிருக்கும்? (இந்த தொடுப்பைப் பாருங்கள்) இந்த செயல் எவ்வளவு ஒரு இழிவான செயல் என்று பாருங்கள்? கிறிஸ்தவத்தின் மீது படிந்த கறையை பார்த்தீர்களா? நாத்தீகர்களும், முஸ்லிம்களும் கிறிஸ்தவத்தை விமர்சிக்க இந்த சண்டை வழிவகுத்துவிட்டது. கிறிஸ்தவம் பிறந்த இடம் எருசலேம் ஆகும், ஆனால் இந்த மனிதர்கள் இயேசு வாழ்ந்தபடி, அவரது சீடர்கள் வாழ்ந்த படி வாழ்ந்து காட்டவில்லை. இவர்கள் கிறிஸ்தவத்தை பிரதிபலிக்கும் மனிதர்களாக காணப்படவில்லை, இவர்களின் கனிகள் உலகத்துக்கு உரியவைகளாக உள்ளன. எனவே, தாம் வந்து மேசியாவின் அரசை அமைக்கும் வரைக்கும், உலக பிரகாரமான அரசை அமைக்கும் படி இயேசு சீடர்களுக்கு இடம் தரவில்லை.
முஹம்மதுவின் அரசும், இஸ்லாமிய கலிஃபாக்களும்
முஹம்மது தன் ஊழியத்தை 23 ஆண்டுகள் செய்தார், கி.பி. 610 லிருந்து அவர் விஷத்தினால் சாகும்வரை அவரது ஊழியம் நீடித்தது (கி.பி. 632). இந்த காலகட்டத்தில் சாத்தானின் வசனங்களை அவர் வெளிப்படுத்திய விஷயத்தை தவிர அவர் இஸ்லாமை உண்மையாக பின் பற்றினார். அந்த 23 ஆண்டுகளை முஹம்மது இரண்டு பட்டணங்களில் செலவிட்டார், 13 ஆண்டுகள் மக்காவிலும், மீதமுள்ள 10 ஆண்டுகள் மதினாவிலும் வாழ்ந்தார்.
மக்காவில் முஹம்மது இஸ்லாமை பிரச்சாரம் செய்த போது, இஸ்லாம் ஒரு ஆன்மீக மதமாக இருந்தது. பல வகைகளில் அது இயேசுவின் ஊழியத்தைப் போல காணப்பட்டது. இந்த காலகட்டத்தில் முஹம்மது ஒரு அரசாங்கத்தை அமைக்க தேடவில்லை.
(அரபி கிறிஸ்தவர்கள் அல்லாஹ் என்ற வார்த்தையை பைபிளின் தேவனுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதை நான் அறிவேன். இந்த கட்டுரையில் நான் அல்லாஹ் என்ற வார்த்தையை இஸ்லாமியர்களின் தெய்வத்தை குறிக்க மட்டும் பயன்படுத்துகிறேன் என்பதை வாசகர்கள் அறிந்துக் கொள்ளவேண்டும்).
மக்காவின் காலகட்டத்தில் அல்லாஹ் முஹம்மதுவிற்கு ”மக்களை முஸ்லிம்களாக்க கட்டாயப்படுத்த வேண்டாம்” என்று சொன்னார்: குர்-ஆன் 10:99.
மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா? (குர்-ஆன் 10:99 முஹம்மது ஜான் தமிழாக்கம்).
மக்காவில் முஹம்மதுவிற்கு சிறிய அளவில் வெற்றி கிடைத்தது. இவரை பின் பற்றியவர்கள் பலவீனமானவர்களும், அதிகமாக துன்புறுத்தப்பட்டவர்களுமாய் இருந்தார்கள். மக்காவில் பெரும்பான்மையாக இருந்த குறைஷி மக்களிடம் முஹம்மதுவும் அவரது சகாக்களும் வன்முறையை பயன்படுத்தி இருந்திருந்தால், மரணம் அவர்களை சந்தித்து இருந்திருக்கும், இஸ்லாம் முழுமையாக அன்றே அழிந்துவிட்டிருக்கும்.
மக்காவை விட்டு மதினாவிற்கு முஹம்மது இடம்பெயர்ந்து போவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு சில மதினா மக்கள் முஸ்லிம்களாக மாறினர். இந்த மக்களும் மதினாவில் இஸ்லாமிய பிரச்சாரம் செய்து, இன்னும் சிலரை இஸ்லாமியர்களாக மாற்றியிருந்தனர். ஒரு குறிப்பிட்ட அளவு மக்களின் சக்தி முஹம்மதுவிற்கு மதினாவில் கிடைத்தது. இவர்களில் அனேகர் போர் புரியும் அளவிற்கு வலிமை மிக்கவர்களாக இருந்தனர். அப்பொது தான் இரண்டாவது அகபா உடன்படிக்கை கையெழுத்தானது, இந்த மக்கள் முஹம்மதுவிற்காக சண்டையிட தங்களை அர்பணித்துக் கொண்டார்கள்.
முஹம்மதுவின் இஸ்லாமிய பிரச்சார காலகட்டத்தில், முஹம்மது சந்தித்த சூழ்நிலைகள் மாறியது, அதற்கு ஏற்றாற்போல அல்லாஹ்வின் வெளிப்பாடுகளும் மாறினது, இதனால் கடைசியாக இஸ்லாமும் மாறினது. முஹம்மதுவுடன் கைகோர்த்த இந்த யுத்த வீரர்களினால், மிகப்பெரிய மாற்றம் இஸ்லாமில் ஏற்பட்டது. மக்காவில் முஹம்மதுவிற்கு இருந்த சீடர்கள் போல அல்லாமல், மதினாவின் சீடர்கள் (சகாக்கள்) பலவீனமானவர்களாக இருக்கவில்லை, அவர்கள் துன்புறுத்தப்படவில்லை. அவர்கள் ஆயுதம் ஏந்தியவர்களாக இருந்தனர், எப்படி யுத்தம் செய்யவேண்டும் என்பதையும் அறிந்திருந்தார்கள். இந்த நம்பிக்கையில் தான் முஹம்மது மக்காவை விட்டு மதினாவிற்கு ஓடிப்போனார். மதினா வந்த பிறகு அல்லாஹ் ஒரு புதிய கட்டளையை முஹம்மதுவிற்கு கொடுத்தார்: “சண்டையிடுங்கள் என்ற கட்டளைத் தான் அது.”
இதைப் பற்றி இப்னு இஷாக் கீழ்கண்டவாறு கூறுகின்றார்:
”இரண்டாவது அகபா உடன்படிக்கை கையெழுத்துக்கு முன்பு வரை சண்டையிடவும் அல்லது இரத்தம் சிந்தவும் முஹம்மதுவிற்கு அல்லாஹ் அனுமதி அளிக்கவில்லை. முஹம்மது வெறும் மக்களை இஸ்லாமின் பக்கம் அழைக்கவேண்டும், அதனால் அவமானங்கள், துன்பங்கள் ஏற்பட்டால் அதனை சகிக்கவேண்டும் மற்றும் துன்புறுத்தியவர்களை மன்னிக்கவேண்டும் என்பது தான் அல்லாஹ்வினால் கட்டளையிடப்பட்டு இருந்தது” . . .
. . . அதன் பிறகு அல்லாஹ் இறைத்தூதருக்கு தன்னை பாதுகாத்துக்கொள்ள சண்டையிட அனுமதி அளித்தார். தனக்கு தீமை செய்தவர்களோடு சண்டையிடவும் அல்லாஹ் அனுமதித்தார் [1].
சண்டையிடு என்று கட்டளைப் பெற்ற விவரங்களை இப்னு இஷாக்கின் புத்தகத்தின் 212 மற்றும் 213ம் பக்கத்தில் காணலாம். பல இஸ்லாமிய அறிஞர்கள் ”சண்டையிட முதன் முதலாக இறங்கிய வசனம் எது?” என்ற கருத்தில் ஒருமித்து இல்லை. பெரும்பான்மையான வசனங்கள் ஒரே மாதிரியாக இருப்பதினால் எந்த வசனம் சண்டையிடச் சொன்ன வசனம் என்ற குழப்பத்தில் பல இஸ்லாமிய அறிஞர்கள் இருக்கிறார்கள். இங்கு சண்டைப் பற்றிய பொதுவான வசனங்களை தருகிறோம்: குர்-ஆன் 22:39-41, மற்றும் 2:193. இவைகளிலிருந்து இரண்டு வசனங்களை மட்டும் இங்கு தருகிறோம்.
போர் தொடுக்கப்பட்டோருக்கு - அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த காஃபிர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு) அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது; நிச்சயமாக அவர்களுக்கு உதவி செய்ய அல்லாஹ் பேராற்றலுடையவன். (குர்-ஆன் 22:39 – முஹம்மது ஜான் தமிழாக்கம்)
ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்; ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது. (குர்-ஆன் 2:193 - முஹம்மது ஜான் தமிழாக்கம்)
இரண்டு காரணங்களுக்காக முஹம்மது சண்டையிடலாம் என்று அல்லாஹ் கட்டளையிட்டார், அதாவது தற்காப்பிற்காகவும் சண்டையிடலாம், இவராகவே வலியச் சென்றும் சண்டையிடலாம். பல தெய்வ வழிப்பாடுகளை அழிக்கவும், தன்னை எதிர்க்கிறவர்களை அழிக்கவும் முஹம்மது வலியச் சென்று யுத்தம் செய்ய கட்டளைப்பெற்றார். குர்-ஆனில் ஆரம்பத்தில் இறக்கப்பட்ட அன்பான அஹிம்சையை போதிக்கும் வசனங்கள், இப்போது இரத்து செய்யப்பட்டு விட்டது.
சண்டையிடுதல் பற்றி அல்லாஹ்வின் கட்டளையை முஹம்மது கீழ்கண்டவாறு சுருக்கிச் சொல்கிறார்:
33. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை (லா இலாஹ இல்லல்லாஹ்) என்று கூறும்வரை இந்த மக்களுடன் போரிடுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. யார் "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை" என்று கூறிவிடுகிறாரோ அவர் -தகுந்த காரணம் இருந்தாலன்றி- தமது செல்வத்தையும் உயிரையும் என்னிடமிருந்து காத்துக் கொள்வார்.அவரது (அந்தரங்கம் குறித்த) விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. Book :1 [2]
உங்கள் கவனத்திற்கு:
இன்று நாம் உலகில் காண்கின்ற இஸ்லாமிய வன்முறைகளை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால், உங்கள் ஆய்வு இந்த இடத்திலிருந்து தொடங்க வேண்டும். முஹம்மதுவின் மேற்கண்ட வார்த்தைகள் தான் இஸ்லாமில் காணப்படும் அனைத்து வன்முறைகளுக்கும் அஸ்திபாரமாக உள்ளது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.
அல்லாஹ்வின் அரசை (இராஜ்ஜியத்தை) இந்த பூமியில் ஸ்தாபிக்க முஹம்மது விரும்பினார். யார் யாரெல்லாம் அல்லாஹ்வின் இறைத்தூதராக முஹம்மது இருக்கிறார் என்று அங்கீகரித்து ஏற்றுக்கொள்கிறார்களோ, அவர்கள் இஸ்லாமிய சட்டத்தின் சில விதிமுறைகளை ஏற்றுக் கொள்ளவேண்டும். இது கட்டாயம் பின்பற்றப்படவேண்டிய விஷயமாகும், இது எனக்கு வேண்டாமென்று முஸ்லிம்கள் ஒதுக்கிவிடமுடியாது.
இஸ்லாமியரல்லாத மக்கள் இரண்டு காரியங்களைத் தான் செய்யவேண்டும்:
1) இஸ்லாமுக்கு தங்களை அர்பணிக்கவேண்டும் (முஸ்லிம்களாக மாறவேண்டும்) அல்லது
2) இஸ்லாமியர்களோடு சண்டையிடவேண்டும்.
முஹம்மதுவும் அவரை பின் பற்றுகின்ற முஸ்லிம்களும் ”இஸ்லாமியரல்லாதவர்களோடு போர் புரிய” கட்டளைப் பெற்று இருக்கிறார்கள். இஸ்லாமியரல்லாதவர்கள் இஸ்லாமுக்கு மாறவேண்டும் அல்லது இஸ்லாமிய ஆட்சிக்கு தங்களை ஒப்புக்கொடுக்கவேண்டும். வேதம் கொடுக்கப்பட்டவர்களாகிய யூதர்களும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமிய ஆட்சியில் ஜிஸ்யா என்ற வரிகளைச் செலுத்தி, தரம் குறைந்த குடிமக்களாக வாழவேண்டும் (குர-அன் 9:29).
அல்லாஹ்வின் அரசை பூமியில் முஹம்மது ஸ்தாபித்தார்.
அல்லாஹ்விடமிருந்து பெற்ற புதிய கட்டளையை முஹம்மது தாமதிக்காமல் உடனே செயல்படுத்தினார். முஹம்மது அல்லாஹ்விற்கு கீழ்படிந்தார், இஸ்லாமிரல்லாதவர்கள் தங்கள் முழங்கால்களை மடங்கி அவருக்கு முன்பாக சமர்பிக்கும் வரைக்கும் முஹம்மது அவர்களோடு சண்டையிட்டார். அல்லாஹ்வின் அரசை (இராஜ்ஜியத்தை) முஹம்மது பூமியில் ஸ்தாபித்தார். இதனை அவர் எப்படி செய்தார்?
மதினாவிற்கு இடம் பெயர்ந்தவுடன் முஹம்மது தன் இராணுவத்தை வழிப்பறி கொள்ளைகள் அடிப்பதற்காக அனுப்பினார். இஸ்லாமிரல்லாத கிராமங்கள் மீதும், வியாபார விஷயமாக சென்றுக்கொண்டு இருக்கும் வியாபாரிகள் மீதும் அவர்கள் பாய்ந்து கொள்ளையடித்தார்கள். இப்படிப்பட்ட செயல்களினால் முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்களை கொலை செய்யவேண்டி வந்தது. முஹம்மதுவின் இப்படிப்பட்ட திருட்டுகளும், கொலைகளும் யுத்தங்களுக்கு வழிவகுத்தது.
இதைப் பற்றி இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் தபரி கீழ்கண்டவாறு பதிவு செய்துள்ளார்:
இந்த நிகழ்வு இறைத்தூதருக்கும் குறைஷி மக்களுக்கும் இடையே யூத்தம் செய்யவேண்டிய சூழலை உருவாக்கியது. இவ்விரு குழுவினரும் ஒருவரிடம் ஒருவர் சண்டையிடவும், கொல்லவும் இதுவே ஆரம்பமாக இருந்தது [3]
சரித்திர ஆசிரியர் தபரியின் பதிவின் படி, போர் தொடங்கப்பட காரணமாக இருந்தது குறைஷிகள் அல்ல, முஹம்மது ஆவார். அடுத்த 10 ஆண்டுகளில் முஸ்லிம் வன்முறையின் உயரமும் ஆழமும் அதிகரித்துக் கொண்டே சென்றது. அல்லாஹ்விற்கு கீழ்படிவதிலும், இஸ்லாமை பரவலாக வியாபிக்கச் செய்வதிலும் முஹம்மது வன்முறையையும், பயமுறுத்தலையும் பிரதானமாக பயன்படுத்தினார். அவைகள் பற்றிய ஒரு சுருக்கத்தை கீழே காணலாம்.
சரித்திர ஆசிரியர் தபரியின் பதிவின் படி, போர் தொடங்கப்பட காரணமாக இருந்தது குறைஷிகள் அல்ல, முஹம்மது ஆவார். அடுத்த 10 ஆண்டுகளில் முஸ்லிம் வன்முறையின் உயரமும் ஆழமும் அதிகரித்துக் கொண்டே சென்றது. அல்லாஹ்விற்கு கீழ்படிவதிலும், இஸ்லாமை பரவலாக வியாபிக்கச் செய்வதிலும் முஹம்மது வன்முறையையும், பயமுறுத்தலையும் பிரதானமாக பயன்படுத்தினார். அவைகள் பற்றிய ஒரு சுருக்கத்தை கீழே காணலாம்.
1) முஸ்லிமல்லாத கிராமங்கள் மற்றும் வியாபாரிகள் மீது வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுதல்
2) அரேபியா சுற்றுவட்டாரங்களில் கொலை செய்தல்
3) மதினா மற்றும் அதைச் சுற்றியுள்ள யூத மார்க்கத்தார்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்துதல், அவர்களை கொடுமைப்படுத்துதல்
4) இராணுவத்தை அனுப்பி நாடுகளை பிடித்தல், கற்பழித்தல், கொலை செய்தல் மேலும் முஸ்லிமல்லாத அரபு இனத்தை கூண்டோடு அழித்தல்.
5) பல நாடுகளில் இஸ்லாமை ஸ்தாபிக்க இராணுவத்தை அனுப்புதல்
முஹம்மது புரிந்த அனைத்து போர்களிலும் அவர் வெற்றி பெறவில்லை, ஆனால் பெரும்பான்மையான போர்களில் வெற்றிப்பெற்றார். மக்கள் முஹம்மதுவைக் கண்டும், முஸ்லிம்களைக் கண்டும் பயந்தார்கள். நாடுகளுக்கு அனுப்பப்பட்ட முஹம்மதுவின் இராணுவ பிரதிநிதிகள் பிரகடணப்படுத்திய விஷயம் இது தான்: "இஸ்லாமை ஏற்றுக்கொள்ளுங்கள், அப்போது நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்". மக்களுக்கு தெளிவாக புரிந்த விஷயம் என்னவென்றால், அவர்கள் இஸ்லாமை ஏற்கவில்லையென்றால், நிச்சயமாக அவர்கள் மீது போர் தொடுக்கப்படும், அவர்களின் உடமைகள் கொள்ளையிடப்படும், மக்கள் கொடுமைப்படுத்தப்படுவார்கள், அடிமைகளாக்கப்படுவார்கள், கற்பழிக்கப்படுவார்கள் மற்றும் கொலை செய்யப்படுவார்கள். இதனால், அரேபியா பகுதியில் ஒரு இஸ்லாமிய மந்திரம் எங்கும் ஒளித்துக்கொண்டு இருந்தது, அது "எங்களை உங்களால் மேற்கொள்ள முடியாவிட்டால், எங்களோடு சேர்ந்துவிடுங்கள், முஸ்லிம்களாகிவிடுங்கள்" என்பதாகும். இதனால், முஸ்லிம்களை மேற்கொள்ளமுடியாதவர்கள் முஸ்லிம்களானார்கள். அந்த மக்கள் முஸ்லிம்களால் கொள்ளையிடப்பட விரும்பவில்லை, அவர்களின் மனைவிகள் திருடப்பட்டு, அடிமைகளாக்கப்பட்டு, தங்கள் கண்களுக்கு முன்பாக கற்பழிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. அவர்களின் பிள்ளைகள் அடிமைகளாக விற்கப்பட விரும்பவில்லை, அவர்களை மரிப்பதற்கு ஒப்புக்கொடுக்க அம்மக்கள் விரும்பவில்லை, எனவே முஸ்லிம்களாக மாறினர், இஸ்லாமை ஏற்றனர். சூழ்நிலை இப்படி இருக்கும் போது யார் தான் இஸ்லாமை ஏற்கமாட்டான்? இந்த காரியங்கள் அனைத்தும் முஹம்மதுவின் கட்டளையின்படியும், அவரது மேற்பார்வையிலும் நிறைவேற்றப்பட்டது.
முஹம்மது புரிந்த அனைத்து போர்களிலும் அவர் வெற்றி பெறவில்லை, ஆனால் பெரும்பான்மையான போர்களில் வெற்றிப்பெற்றார். மக்கள் முஹம்மதுவைக் கண்டும், முஸ்லிம்களைக் கண்டும் பயந்தார்கள். நாடுகளுக்கு அனுப்பப்பட்ட முஹம்மதுவின் இராணுவ பிரதிநிதிகள் பிரகடணப்படுத்திய விஷயம் இது தான்: "இஸ்லாமை ஏற்றுக்கொள்ளுங்கள், அப்போது நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்". மக்களுக்கு தெளிவாக புரிந்த விஷயம் என்னவென்றால், அவர்கள் இஸ்லாமை ஏற்கவில்லையென்றால், நிச்சயமாக அவர்கள் மீது போர் தொடுக்கப்படும், அவர்களின் உடமைகள் கொள்ளையிடப்படும், மக்கள் கொடுமைப்படுத்தப்படுவார்கள், அடிமைகளாக்கப்படுவார்கள், கற்பழிக்கப்படுவார்கள் மற்றும் கொலை செய்யப்படுவார்கள். இதனால், அரேபியா பகுதியில் ஒரு இஸ்லாமிய மந்திரம் எங்கும் ஒளித்துக்கொண்டு இருந்தது, அது "எங்களை உங்களால் மேற்கொள்ள முடியாவிட்டால், எங்களோடு சேர்ந்துவிடுங்கள், முஸ்லிம்களாகிவிடுங்கள்" என்பதாகும். இதனால், முஸ்லிம்களை மேற்கொள்ளமுடியாதவர்கள் முஸ்லிம்களானார்கள். அந்த மக்கள் முஸ்லிம்களால் கொள்ளையிடப்பட விரும்பவில்லை, அவர்களின் மனைவிகள் திருடப்பட்டு, அடிமைகளாக்கப்பட்டு, தங்கள் கண்களுக்கு முன்பாக கற்பழிக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. அவர்களின் பிள்ளைகள் அடிமைகளாக விற்கப்பட விரும்பவில்லை, அவர்களை மரிப்பதற்கு ஒப்புக்கொடுக்க அம்மக்கள் விரும்பவில்லை, எனவே முஸ்லிம்களாக மாறினர், இஸ்லாமை ஏற்றனர். சூழ்நிலை இப்படி இருக்கும் போது யார் தான் இஸ்லாமை ஏற்கமாட்டான்? இந்த காரியங்கள் அனைத்தும் முஹம்மதுவின் கட்டளையின்படியும், அவரது மேற்பார்வையிலும் நிறைவேற்றப்பட்டது.
முஹம்மது புரிந்த அனைத்து வன்முறைகளைப் பற்றியும் படிக்க இந்த தொடுப்பை சொடுக்கவும்: இஸ்லாமும் தீவிரவாதமும் (கட்டுரைகள்)
இவைகளில் முக்கியமான மூன்று கட்டுரைகள்:
2. ஜிஹாத்
மக்களின் இரத்தம் சிந்துவதிலும், கொடுமைப்படுத்துவதிலும் முஹம்மது முன்னேறிக்கொண்டே சென்றார். அல்லாஹ்வின் ஜிஹாதிய கட்டளைகளை மிகவும் ஆர்வமாக நிறைவேற்ற ஆரம்பித்தார். அவருடைய இஸ்லாமை தன்னைச் சுற்றியுள்ள இடங்களில் ஸ்தாபிக்க தொடங்கினார், அல்லாஹ்வின் அரசு அனேக இடங்களில் நிறுவப்பட்டது. முஹம்மது உயிரோடு இருந்த நாட்களில் ஒருவரும் அவரை எதிர்க்க தைரியம் கொள்ளவில்லை. அல்லாஹ்வின் ஆட்சியை முஹம்மது செய்தார், தொடர்ந்து அல்லாஹ்விற்கு கீழ்படிந்தார், இஸ்லாமிய ஆட்சி அமையும் வரை மனிதர்களோடு சண்டையிட்டார். அவரும் அவருடைய சகாக்களும் ஜிஹாத் என்ற புனிதப்போரில் ஈடுபட்டனர், இதனை அவர்கள் அல்லாஹ்வின் அரசு அமைப்பதற்காகச் செய்தார்கள். (ஜிஹாத் என்றால் போராட்டம் என்று பொருள் கூறுவார்கள், ஆனால், இஸ்லாமிய இறையியலின் படி பார்த்தால், அது புனிதப்போர் என்பதைக் குறிக்கும், மேலும் அறிய கீழ்கண்ட கட்டுரையில் நான்காவது தலைப்பை படிக்கவும்: குர்-ஆனின் பட்டய வசனம் 9:5 மற்றும் ஜிஹாத்).
மக்காவை ஆக்கிரமித்து ஒன்றரை வருடத்திற்கு பிறகு முஹம்மது மரித்துவிட்டார். அவர் ஒரு வெற்றிப் பெற்ற மனிதராக இருந்தார். அவரிடம் பணமிருந்தது, அதிகாரமிருந்தது, புகழ்ச்சி இருந்தது, முஸ்லிம்கள் அவரை மதித்து வந்தார்கள், அனேக அழகான பெண்களோடு உடலுறவுக் கொண்டார், அதாவது அவருக்கு மனைவிகளும் வைப்பாட்டிகளும் இருந்தார்கள். அவர் சந்தித்த கடுமையான சவால்களையெல்லாம் அவர் தீர்த்துக்கொண்டார், அதாவது தன் எதிரிகளை அழித்துவிட்டார். முஹம்மது அதிகபடியான அதிகாரம் பெற்று உச்சக்கட்டத்தில் இருந்த சமயத்தில் மரித்தார். தன்னை நபி என்று ஏற்காத மற்றும் தன்னை எதிர்த்த மக்களின் சடலங்களின் மீது அல்லாஹ்வின் இராஜ்ஜியத்தை ஸ்தாபித்தார்.
ஆனால், முஹம்மது மரித்த பிறகு என்ன நடந்தது? இப்போது நாம் அல்லாஹ்வின் இராஜ்ஜியத்தின் கனிகளை (செயல்பாடுகளை) காண்போம். அல்லாஹ்வின் அரசின் அதிகாரம் என்ன? அதனால் விளைந்த விளைவுகள் என்ன?
அல்லாஹ்வின் ஆட்சியின் தொடர்ச்சி: கலிஃபாக்களின் நிலை பற்றிய ஆய்வு:
முஹம்மது மரிக்கும் போது அவருக்கென்று நெருக்கமானவர்கள் அனேகர் இருந்தனர். அவர்கள் அவரை நன்கு அறிந்து வைத்திருந்தனர், அவரை நேசித்தனர் அவருக்கு எப்போதும் கீழ்படிந்து இருந்தனர். முஹம்மதுவை அவர்கள் ஒரு தீர்க்கதரிசி என்று நம்பினபடியால், அவருக்காக சண்டையிடமும், மற்றவர்களை கொல்லவும், தங்கள் உயிரை கொடுக்கவும் தயங்காதவர்களாக இருந்தனர். அவர்கள் குர்-ஆனை மனனம் செய்து இருந்தனர்.
முஹம்மதுவின் போதனைகளையும், செயல்களையும் (ஹதீஸ்கள்) மற்றவர்களுக்கு சொல்கின்றவர்களாக இருந்தனர். மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை முறையை அப்படியே கடைப்பிடிப்பவர்களாக இருந்தனர். முஹம்மதுவைப் போல நடையிலும் உடையிலும் இன்னும் இதர விஷயங்களிலும் அவரை பின் பற்றுகின்றவர்களாக இருந்தனர். முஹம்மது பற்றிய எந்த ஒரு சிறிய விஷயமும் அவர்களிடம் பற்றாக்குறையாக இருந்ததில்லை. எல்லா முஸ்லிம்களும், தங்களுக்குள் ஒருவரை ஒருவர் நேசிக்கவேண்டும் என்ற முஹம்மதுவின் போதனையை அவர்கள் அனைவரும் அறிந்திருந்தனர். முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற முஹம்மதுவின் போதனையை அவர்கள் அறிந்திருந்தனர். முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு தலைவர்களாக இருந்தவர்கள், இஸ்லாமை அறியாதவர்கள் அல்ல, இஸ்லாம் பற்றி அனைத்தையும் அறிந்தவர்கள். முஹம்மதுவின் மனதுக்கு அருகாமையில் இருந்தவர்கள், இவர்களைப் பற்றி முஹம்மது நன்கு அறிந்திருந்தார்.
அபூ பக்கர்:
முஹம்மது மரித்தவுடனே, அடுத்த இஸ்லாமிய ஆட்சித் தலைவர் யார் என்ற சண்டை இவர்களுக்குள் தொடங்கியது. மக்காவிலிருந்து முஹம்மதுவோடு வந்திருந்த முஸ்லிம்கள் (முஜாஹிரூன்), தங்கள் வம்சத்திலிருந்து ஒருவரை தலைவராக நியமிக்கவேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால், மதினாவிலிருந்து முஸ்லிம்களானவர்கள் (அன்சார்கள் – உதவியாளர்கள்) தங்களுக்குள் ஒருவர் தலைவராக வரவேண்டும் என்று விருப்பம் கொண்டனர். சையத் பின் உபைதா என்பவர் தலைவராக வர இவர்கள் கோரிக்கை விடுத்தனர். இப்படி இவர்கள் மத்தியிலே ஒரு கேவலமான சண்டையும், வாக்கு வாதங்களும் உருவாகின. இவர்கள் ஒருவரை ஒருவர் சபித்துக்கொண்டார்கள், கொலை மிரட்டல்கள் விட்டார்கள். சிறிது கைகலப்பும் உண்டானது, வாள்கள் உறைகளிலிருந்து எடுக்கப்பட்டன, ஆனால், இரத்தம் சிந்தும் அளவிற்கு வாள்கள் பயன்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் உமர் எழுந்து நின்று, அபூ பக்கர் அவர்கள் தான் தலைவர் என்று அறிக்கையிட்டார், தன்னுடைய ஒத்துழைப்பு இவருக்குத் தான் என்றுச் சொல்லி, மற்றவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ இவருக்கு ஆதரவு தரவேண்டும் என்றுச் சொன்னார். கடைசியாக, அன்சார் முஸ்லிம்கள், அபூ பக்கர் தலைவராக இருப்பதற்கு ஒப்புக்கொண்டனர்.
முஸ்லிம்களுக்கு இது ஒரு துரதிஷ்டமான எதிர்பாராத ஆரம்பம், உண்மை தானே! முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் சகோதரர்கள் போல கருதி வாழவேண்டும் என்று முஹம்மது அனேக முறை போதித்தார், கட்டளையிட்டார். ஆனால், அவர்கள் மத்தியிலே சகோதர அன்பு இல்லாமல் போனது. முஸ்லிம்கள் பெருமையாக சொல்லிக்கொள்ள முடியாத விஷயமாகும் இது. இந்த நிகழ்ச்சி இஸ்லாமிய ஆட்சியில் எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் பல தீய காரியங்களை எடுத்துக் காட்டும் ஒரு அடையாள குறியாகும்.
முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு, அனேக பழங்குடி பிரிவினர்கள் இஸ்லாமை விட்டு வெளியேறினர். முஹம்மது உயிரோடு இருந்த போது, இவர்கள் மீது போர் புரிந்தும், கட்டாயத்தினாலும் இவர்களை முஸ்லிம்களாக மாற்றியிருந்தார் (விருப்பமிருந்தாலும், விருப்பமில்லாவிட்டாலும் முஸ்லிம்களாக மாறியவர்கள்). முஹம்மது மரித்த பிறகு, இவர்கள் முஸ்லிம்களோடு யுத்தம் செய்யவில்லை. இவர்கள் சுதந்திரமாகவும், அமைதியாகவும் வாழ விரும்பினார்கள், கட்டாயப்படுத்தி முஸ்லிம்களாக மாற்றி கீழ்படுத்துவதை இவர்கள் விரும்பவில்லை. ஆனால், இஸ்லாமிய ஆட்சியின் கீழ், இந்த மக்கள் "இஸ்லாமை விட்டு வெளியேறியர்கள்" என்று அடையாளப்படுத்தப்படுகிறார்கள், முஹம்மதுவின் கட்டளையின் படி இப்படிப்பட்டவர்கள் கொல்லப்படவேண்டும். இதன் விளைவாக, அபூ பக்கர் ஆட்சி தலைவராக இருந்தபடியினால், இஸ்லாமை விட்டுவேளியேறிய இவர்கள் தாக்கப்பட்டார்கள், மறுபடியும் இஸ்லாமிய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டார்கள். அபூ பக்கரின் இஸ்லாமிய இராணுவத்தினால் பல்லாயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த போர்கள் "ரித்தா போர்கள் – (இஸ்லாமை விட்டு வெளியேறியவர்களோடு செய்த போர்கள் - Ridda Wars)" என்று அழைக்கப்பட்டது. இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் தபரி அவர்களின் புத்தகத்தின் 10ம் தொகுப்பில் இந்த கொடூரமான, காட்டுமிராண்டித் தனமான போர்கள் பற்றி விவரமாக எழுதப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் மற்றவர்களை கட்டாயப்படுத்தி இஸ்லாமியர்களாக மாற்றினார்களா? என்ற சந்தேகம் அனேகருக்கு வந்திருக்கும். ஆனால், கட்டாயப்படுத்தி தான் முஸ்லிம்களாக மாற்றப்பட்டார்கள் என்று தெளிவாக சரித்திர நூல்கள் சொல்கின்றன:
“You [Muslims] were the most severe people against his enemies who were among you, and the most troublesome to his enemies who were not from among you, so that the Arabs became upright in God’s cause, willingly or unwillingly, and the distant one submitted in abject humiliation until through you God made great slaughter in the earth for His Apostle, and by your swords the Arabs were abased for him.”4
"நீங்கள் [முஸ்லிம்கள்] உங்களுக்குள் இருக்கும் அவருடைய எதிரிகளுக்கு நீங்கள் கடுமையானவர்களாக இருக்கிறீர்கள், உங்களுக்கு வெளியே இருக்கும் அவருடைய எதிரிகளுக்கு இன்னும் அதிகமான துன்பத்தை நீங்கள் கொடுக்கிறீர்கள். ஏனென்றால், அல்லாஹ்வின் பார்வையில் அரபியர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தனக்கு கீழ்படிகின்றவர்களாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறீர்கள். இஸ்லாமை ஏற்றுக்கொள்ளாத அரபியர்கள் தாழ்மை அடைந்து கீழ்தரமாக நடத்தப்படுகிறார்கள், உங்களைக் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் வாழ்ந்த இந்த பூமியில் அல்லாஹ் படுகொலை செய்கின்றான், உங்களின் வாள்கள் அரபியர்களை இழிவுப்படுத்துகிறது"[4]
முஸ்லிம்கள் குர்ஆன் 2:256ம் வசனத்தை அடிக்கடி மேற்கோள் காட்டுவார்கள், இதன் படி இஸ்லாமில் கட்டாயமில்லை என்றுச் சொல்வார்கள். ஆனால், இந்த வசனம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்காகவும், சூழ்நிலைக்காகவும் சொல்லப்பட்டதே ஒழிய,எல்லா காலத்திற்கும், எல்லா நாடுகளிலும் சூழ்நிலைகளிலும் பயன்படுத்துவதற்காக இறக்கப்பட்டது இல்லை என்பதை இவர்கள் அறியவேண்டும்.
அபூ பக்கர் முஹம்மதுவின் அடிச்சுவடிகளில் நடந்தார், அல்லாஹ்வின் இராஜ்ஜியத்தை ஸ்தாபிக்க கட்டாயப்படுத்தியும், யுத்தங்கள் செய்தும், மக்களை இஸ்லாமின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அனைத்து வன்முறைகளையும் பயன்படுத்தினார்.
அல்லாஹ்வின் இராஜ்ஜியத்தில் வெளிப்படையாக தெரியும் ஒரு பண்பு என்னவென்றால், "முஸ்லிமல்லாத அனைத்தையும் ஆக்கிரமிப்பதாகும்". ஆனால், அவரது இராஜ்ஜியத்தில் வாழும் முஸ்லிமாக்கப்பட்டவர்களின் உள்ளங்களில் என்ன இருக்கும்? அல்லாஹ்வின் அரசை எப்படி மக்களின் மனதில் பதியவைப்பது? அல்லாஹ்வின் அரசை எவ்வாறு இயேசு போதித்த "தேவனுடைய அரசோடு" ஒப்பிடுவது?
முஹம்மதுவின் நெருங்கிய தோழர்கள் ஒருவரோடு ஒருவர் எப்படி நடந்துக்கொண்டார்கள் என்பதை கவனித்தால், இதற்கான பதிலை கண்டுபிடிக்கலாம். ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் தாழ்மையோடு நடந்துக்கொண்டார்கள், ஒருவரை ஒருவர் நேசித்தார்கள், மற்றவர்களுக்கு சேவை செய்தார்கள். முஹம்மதுவின் குடும்பத்தார்கள் எப்படி நடந்துக்கொண்டார்கள்? நாம் இவர்களின் வாழ்க்கையில் மற்றும் உள்ளங்களில் அல்லாஹ்வுடைய அரசின் உண்மையான கனிகளையும், அதன் சுவையையும் காணமுடியும்.
ஆனால், உண்மையில் இவர்களின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை நீங்கள் அறிந்துக்கொண்டால், ஆச்சரியத்தில் மூழ்கிவிடுவீர்கள். முஹம்மதுவின் குடும்ப அங்கத்தினர்களும், நண்பர்களும் ஒருவரின் கழுத்தை ஒருவர் பிடித்துக்கொண்டார். நம்பிக்கைத் துரோகங்கள், படுகொலைகள், அதிகார ஆசை, பேராசை என்ற அனைத்து தீய காரியங்களும் இவர்களின் வாழ்க்கையில் காணப்பட்டது.
முஹம்மது மரணிப்பதற்கு முன்பாக கனிசமான அளவிற்கு சொத்துக்களை சேர்த்துவிட்டார். அவருடைய மரணத்திற்கு முன்பே தன் சொத்துக்கள் எவைகளுக்காக செலவிடப்படவேண்டும் என்று சொல்லிவிட்டார். தன் சொத்துக்களில் பெரும் பகுதி இஸ்லாமிய சமுதாயத்தின் மேன்மைக்காக பயன்படவேண்டும், மேலும் தன் மனைவிமார்களின் குடும்ப பராமரிப்பிற்காக அந்த சொத்துக்களிலிருந்து செலவிடவேண்டும் என்றும் கூறினார். இதுமட்டுமல்ல, அந்த செல்வத்திலிருந்து தன் சந்ததிக்கு (பிள்ளைகளுக்கு, உறவினர்களுக்கு) எந்த ஒரு பங்கும் தரப்படக்கூடாது என்றும் கட்டளையிட்டார். முஹம்மதுவின் கருத்தின் படி, யூத நபிகள் (தீர்க்கதரிசிகள்) தங்கள் செல்வங்களை தங்கள் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லவில்லையாம் (ஆனால், முஹம்மது இந்த விஷயத்தில் தவறாக நினைத்துவிட்டார்). எனவே, அபூ பக்கர் தலைவர் பதவியை ஏற்றவுடன், முஹம்மதுவின் செல்வத்திலிருந்து அவருடைய சந்ததிக்கு (மகள்கள் மற்றும் உறவினர்களுக்கு) பங்கீடு செய்ய மறுத்துவிட்டார்.
அபூ பக்கர் முஹம்மதுவின் செல்வத்தை பங்கீடு செய்யாததினால், உறவினர்களிடையே வெறுப்பும் கோபமும் பூசலும் உண்டானது. முஹம்மதுவின் மகள் ஃபாத்திமா மற்றும் அவரது கணவர் அலி மேலும் உறவினர் அப்பாஸ் இவர்கள் மூன்று பேரும் அபூ பக்கர் மீது கோபம் கொண்டு தங்களுக்கு வரவேண்டிய செல்வத்தை கேட்டனர். முஹம்மதுவின் சொத்துக்களிலிருந்து ஒரு ரூபாய் கூட கொடுக்கமுடியாது என்று அபூ பக்கர் கூறிவிட்டார். இதன் காரணமாக ஃபாத்திமாவும், இதர மக்களும் அபூ பக்கரை அதிகமாக வெறுத்தார்கள். முஹம்மதுவின் மரணத்திற்கு பிறகு ஆறு மாதத்திலேயே ஃபாத்திமா மரித்துவிட்டார்கள். அபூ பக்கரை அலி அவர்கள் எந்த அளவிற்கு வெறுத்தார்கள் என்றால், தன் மனைவி ஃபாத்திமாவின் மரணத்தையும் அவருக்குச் சொல்லிவில்லை மேலும் ஃபாத்திமாவின் அடக்கத்திற்கும் அவரை அனுமதிக்கவில்லை.[5]
இவர்களின் உள்ளங்கள் இன்னும் மாற்றமடையாமல் இருப்பதையும், உலக ஆசைகள், பேராசைகள் இவர்களை விட்டு இன்னும் அகலவில்லை என்பதையும் நாம் இந்த நிகழ்ச்சி மூலமாக அறிந்துக்கொள்ளமுடியும். முஹம்மதுவின் இராஜ்ஜியம் முஸ்லிம்களை வெளிப்புறமாக மட்டுமே மாற்றியுள்ளது, அவர்கள் அதிகாரம் படைத்தவர்களாகவும், செல்வந்தர்களாகவும் மாறினார்களே தவிர அவர்களின் உள்ளங்கள் மாற்றமடையாமல், இன்னும் பாவ சிந்தனையிலேயே இருந்துள்ளது.
அபூ பக்கர் தன் மரணம் வரைக்கும் கலிஃபாவாக இருந்தார், அதாவது ஒன்றரை ஆண்டுகள் அவர் தலைவராக இருந்தார். அவர் முஹம்மதுவின் நெருங்கிய நண்பர் மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் முஹம்மதுவை நன்கு அறிந்திருந்தார். உண்மையாகவே, முஹம்மது எவைகளை செய்யவேண்டும் என்று விரும்பினாரோ அதையே அபூ பக்கர் செய்தார் என்று நிச்சயமாக சொல்லமுடியும். அல்லாஹ்வின் இராஜ்ஜித்திற்காகவும், இஸ்லாம் பரவுவதற்கும் அபூ பக்கர் இரத்த ஆறு ஓடச் செய்தார்.
உமர்
அபூ பக்கர் ஞானமாக செயல்பட்டார், அதாவது எதிர்பாராதவிதமாக தான் மரிக்க நேரிட்ட போது, தனக்கு அடுத்தபடியாக யார் தலைவர் பதவியை வகிக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு மரித்தார். இதனால், தலைவர் பதவிக்காக நிகழவிருக்கும் வன்முறையும் கொடுமைகளும் தடுக்கப்பட்டது. தனக்கு அடுத்தபடியாக முஹம்மதுவின் இரண்டாவது நெருங்கிய நண்பராகிய உமர் தான் அரசை நடத்தவேண்டும் என்று முடிவு செய்து சொல்லிவிட்டார். உமர் கலிஃபாவாக பதவி ஏற்றதும், இஸ்லாமிய இராணுவத்தை முஸ்லிமல்லாத நாடுகள் மீது போர் தொடுக்க அனுப்பினார். இந்த இராணுவம் சிரியா, பாலஸ்தீனம், ஈராக், பெர்ஷியா மற்றும் எகிப்தை கைப்பற்றியது. இந்த நாடுகள் அனைத்தும் இஸ்லாமிய பட்டயங்களினால் வெற்றிக்கொள்ளப்பட்டன. யுத்தங்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டு இருந்தது, முஸ்லிம்கள் வெற்றி பெற்றுக்கொண்டு இருந்தார்கள். இஸ்லாம் அமைதி மார்க்கமாக காணப்படவில்லை, அதற்கு பதிலாக, கொடுமைப்படுத்தி கட்டாயப்படுத்தும் மார்க்கமாக செயல்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கட்டாயத்தின் பேரில் இஸ்லாமிய ஆட்சிக்குள் கொண்டு வரப்பட்டார்கள். இஸ்லாமியராக மாறாதவர்களைக் காட்டிலும், இஸ்லாமியர்களாக மாறியவர்கள் நல்ல முறையில் நாட்டில் நடத்தப்பட்டார்கள். இப்படி வன்முறையினாலும், கட்டாயத்தினாலும் அனேகர் இஸ்லாமுக்கு மாறினார்கள்.
உத்மான் (உஸ்மான்)
உமர் அவர்கள் மரித்தவுடன் உஸ்மான் பதவிக்கு வந்தார். இன்று நாம் பயன்படுத்தும் குர்ஆனை ஒரு அதிகார பூர்வமான தொகுப்பாக வெளியிட்ட பெருமை உஸ்மான் அவர்களுக்கு உண்டு. அவரது காலத்தில் பல வித்தியாசமான குர்ஆன் பிரதிகள் இருந்தன. அவைகள் பெரும்பான்மையாக ஒரே மாதிரியாக இருந்தாலும், பல குறிப்பிட்ட வித்தியாசங்கள் அவைகளில் காணப்பட்டது. இந்த வித்தியாசங்கள் முஸ்லிம்களிடையே பெரிய பிரிவினையை உண்டாக்கியது. இதனை சரி செய்ய, உஸ்மான் ஒரு அதிகார பூர்வமான பிரதியை உருவாக்கி, இதர பிரதிகள் அனைத்தையும் எரித்துவிடும் படி கட்டளையிட்டார்.
உஸ்மானின் இராணுவம் அர்மேனியாவையும், வடமேற்கு ஆசியாவையும் மேலும் சைப்பரஸ்ஸையும் ஆக்கிரமித்தது. இவருடைய ஆட்சி காலத்தில் முஸ்லிம்களின் வலிமையும் செல்வமும் பெருகியது.
உஸ்மானின் மரணத்தில் தான் உண்மையான இஸ்லாமிய பழுத்த கனிகள் வெளிப்பட்டன என்று நான் நம்புகிறேன். இவருடைய ஆட்சியில் அரசியல் கறைபட்டுவிட்டது, பல முஸ்லிம்கள் உஸ்மானின் ஆட்சியில் திருப்தி அடையவில்லை, அவர் மீது கோபம் கொண்டனர். பல இஸ்லாமிய நாடுகளில் இருந்த அதிருப்தி அடைந்த முஸ்லிம்கள் உஸ்மானை மதினாவில் சந்தித்து, நீதி கேட்பதற்காக மதினாவை நோக்கி நகர்ந்தன. இந்த அதிருப்தி குழுவில் எகிப்திலிருந்து வந்த மக்களும் இருந்தனர், இவர்கள் கலிஃபாவாக "அலி" பதவி ஏற்கவேண்டும் என்று விரும்பினர்.
அலி முஹம்மதுவின் மருமகனாவார். முதியவராகிய உஸ்மானை பாதுகாக்கும் பொறுப்பு இவருக்கு இருந்தது. ஆரம்ப காலத்தில் பாதுகாவலர்களை அமர்த்தி தன் பொறுப்பை நிறைவேற்றினார்.
எனினும், அலியின் உள்ளத்தின் ஆழத்தில் கசப்பும் எதிர்ப்பும் குடிகொண்டு இருந்தது. முஹம்மதுவிற்கு அடுத்தபடியாக தான் தலைவராக ஆகவேண்டும் என்று அலி விரும்பினார். ஆனால், முஹம்மதுவிற்கு அடுத்தபடியாக அபூ பக்கர் கலிஃபாவானார், அதன் பிறகு உமர், உஸ்மான் தலைவர்களாக பதவியெற்றார்கள். அலி ஒவ்வொரு முறையும் பல்லை கடித்துக்கொண்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தார். அலியின் மனக்கசப்பு இன்னும் வேறூண்றியிருந்தது. கலீஃபா பதவி மீதும், செல்வம், அதிகாரம் போன்றவற்றின் மீதும் இவருக்கு இருந்த இச்சை சாகவில்லை.
அதிருப்தி அடைந்துள்ள முஸ்லீம் கும்பல்களுக்கும் மற்றும் உஸ்மானுக்கும் இடையே இருந்த மோதல் மோசமான நிலையை அடைந்தது. இந்த நேரத்தில் உஸ்மானுக்கு கொடுக்கப்பட்டு இருந்த பாதுகாப்பையும், குடும்ப நபர்களின் ஆதரவையும் அலி நீக்கிவிட்டார். உஸ்மான் அந்த முஸ்லிம் கும்பலினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த கொலை நடக்கும் போது, அலியின் ஆதரவாளர்கள் அங்கே காணப்படவில்லை.
இங்கு கவனிக்கவேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், உஸ்மானை கொன்றவர்களில் ஒருவர் அபூ பக்கரின் மகன் “முஹம்மத் பி. அபூ பக்கர்” ஆவார். (அபூ பக்கர் முதல் கலீஃபாவாக பதவி வகித்தவர் என்பது கவனிக்கத்தக்கது. முதல் கலீஃபாவின் மகன், மூன்றாவது கலீஃபாவைக் கொன்றார்).
இதைப் பற்றி தபரி தன் சரித்திரத்தில் கீழ்கண்டவாறு பதிவு செய்கிறார்:
”முஹம்மது பி. அபூ பக்கர் பதின்மூன்று நபர்களோடு உஸ்மானிடம் வந்தார். உஸ்மானின் பற்களில் நெருடல் சத்தம் கேட்கும் அளவிற்கு, அவர் உஸ்மானின் தாடியை பிடித்து ஆட்டினார். முஹம்மது பி. அபூ பக்கர் இப்படி கூறினார்: “உங்களுக்கு முஅவியாவினால் எந்த நன்மையும் இல்லை, அதே போல இப்னு அமிர் என்பவரினாலும், உங்கள் கடிதங்களினாலும் எந்த நன்மையும் உண்டாவில்லை”. உஸ்மான் “என் தாடியை விட்டுவிடு, என் சகோதரனின் மகனே, என் தாடியை விட்டுவிடு” என்றார். முஹம்மது பி. அபூ பக்கர் தன்னோரு வந்த போராளிகளில் ஒருவரைப் பார்த்து தன் கண்களால் ஒரு சமிக்ஞை செய்தார். உடனே, அந்த மனிதர் இருப்பு அம்பு கொண்ட ஒரு தடியை கொண்டு வந்து, உஸ்மானின் தலையின் குத்தினார்…. அவர்கள் ஒன்றாக சேர்ந்து அவரை கொன்றார்கள்”. [6]
இதனை நீங்கள் கற்பனை செய்துப் பாருங்கள்: ஒருவேளை இயேசுவின் சீடர்கள் ஒருவர் மீது ஒருவர் வெறுப்பு கொண்டு, சண்டையிட்டுக் கொண்டு, ஒருவரை ஒருவர் கொன்றுக்கொண்டு இருந்திருந்தால், நீங்கள் என்ன நினைப்பீர்கள். பேதுருவின் மகன் ஸ்தேவானை கொலை செய்வதாக கற்பனை செய்துக்கொள்ளுங்கள். இப்படி நடந்திருந்தால், இது பயங்கரமான தீய செயலாக இருந்திருக்கும் அல்லவா!
இந்த ஆரம்ப கால இஸ்லாமிய சரித்திரம் இன்னும் மோசமான இருண்ட தீயதாக மாறுகிறது. உஸ்மான் கொல்லப்பட்ட பிறகு, கொலையாளிகளுக்கு தகுந்த தண்டனை கிடைக்கவேண்டும் என்று அனேகர் கோஷமிட்டனர். எகிப்திய கலகக்காரர்களின் ஆதரவினால், அலி அடுத்த கலிஃபாவாக பதவியேற்றார். நீண்ட கதையை சுருக்கிச் சொல்கிறேன். அப்போது இருந்த முக்கியமான முஸ்லிம்களாகிய தல்ஹா, ஜுபைர் மற்றும் முஹம்மதுவின் (சிறுமி) மனைவி ஆயிஷா உள்நாட்டு சண்டயை ஆரம்பித்து வைத்தார்கள். அலியும் அவரது இராணுவமும் இவர்களை நோக்கி வந்தது, இவர்களிடையே யுத்தம் நடந்தது. இந்த போரை ”ஒட்டகப்போர் என்பார்கள்(The Battle of the Camel)”. இந்த போரில் அலி வெற்றிப்பெற்றார். தல்ஹாவும், ஜுபைரும் கொல்லப்பட்டார்கள். ஆயிஷா அவர்கள் வீட்டுக் கைதியாக அடைத்து வைக்கப்பட்டார்கள். இந்த போரில் மரித்தவர்களின் எண்ணிக்கை 10 லிருந்து 20 ஆயிரம் வரை இருந்தது.
அதிகாரத்திற்காகவும், பேராசையினாலும் முஹம்மதுவின் தோழர்கள் ஒருவரை ஒருவர் கொன்றதைப் பற்றி இன்னும் சில எடுத்துக்காட்டுகளை சரித்திரத்திலிருந்து எடுத்து உங்கள் முன் வைக்கமுடியும். இந்த கொடூரங்களின் சிகரமாக “சிப்பின் போர் (The battle of Siffin)” என்ற போரை குறிப்பிடலாம். இந்த போரில் நடந்த நிகழ்ச்சி வன்முறையில் சிகரங்களின் சிகரம் என்று அழைக்க தகுதிப்பெற்றதாகும். தமாஸ்கஸ் நாட்டின் இஸ்லாமிய தலைவராக யாஜித் இருந்தார். ஆரம்பகாலத்தில் முஹம்மதுவின் பரம எதிரியாக இருந்த அபூ சுஃப்யானின் பேரனாவார் இந்த யாஜித். இந்த யாஜித்தின் மனிதர்கள் முஹம்மதுவின் பேரன் ஹுசைனை கொன்று, அவரின் தலையை துண்டித்து, இவரிடம் கொண்டு வந்தார்கள். யாஜித்தும், அவரது மனிதர்களும் அந்த தலையை வைத்துக்கொண்டு கேலி பரிகாசம் செய்து அதனை நாசமாக்கினார்கள்.
முஹம்மதுவின் மரணத்திற்கு நடந்த நிகழ்வுகளை நீங்கள் மொத்தமாக படித்து அறிந்துக்கொள்ள விரும்பினால், இந்த தொடர் கட்டுரைகளை படிக்கவும்: இஸ்லாமிய அரச குடும்பம், பாகம் 1: முஹம்மதுவின் சொத்துக்கள் (தமிழ் கட்டுரை).
இதை விட சிறந்தது எதுவென்றால், தபரியின் சரித்திர புத்தகங்களை வாங்கி நீங்களே படிப்பதாகும். உங்களுக்காக மற்றவர்கள் சிந்திக்க விடாதீர்கள். உங்கள் சொந்த கண்களால் இஸ்லாமிய சரித்திர நூல்களை படித்து, நீங்களே உண்மைகளை தெரிந்துக் கொள்ளுங்கள். தபரியின் 10வது தொகுப்பிலிருந்து படிக்க ஆரம்பியுங்கள்: Volume 10: “The History of al-Tabari Vol. 10: The Conquest of Arabia: The Riddah Wars A.D. 632-633/A.H. 11”
முடிவுரை:
இதுவரை நாம் பார்த்தது இரண்டு இராஜ்ஜியங்களின் ஒப்பீடுதல் ஆகும்: ஒன்று இயேசுவின் இராஜ்ஜியம் அடுத்தது முஹம்மதுவின் இராஜ்ஜியம். இவ்விருவர் எப்படிப்பட்டவர்கள்? இவர்களின் வழிமுறைகள் என்ன? மற்றும் இவர்களின் கனிகள் என்ன? என்பதையும் உங்களுக்கு காட்ட விரும்பினேன்.
இயேசுவின் இராஜ்ஜியம்:
மனிதனின் உள்ளான மனம் எப்படி மாறுதல் அடையவேண்டும், எப்படி நல்ல கனிகளை தரவேண்டும் என்பதைப் பற்றிச் சொல்வது தான் இயேசுவின் இராஜ்ஜியம். இயேசுவின் ஆட்சி ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தில் ஆன்மீக மாறுதலைக் கொண்டு வரும். கிறிஸ்துவின் ஆட்சி மனிதனின் உள்ளத்தில் ஏற்படும் மாறுதலாகும் மேலும் இதனை ஆரம்ப கால கிறிஸ்தவர்களின் வாழ்வில் காணலாம். அவர்கள் மற்றவர்களின் உதிரத்தை சிந்தாமல், பட்டயத்தை ஏந்தாமல், ரோம சாம்ராஜ்ஜியத்தை அன்புடனும், விசுவாசத்துடனும் வெற்றுக் கொண்டார்கள். இதே நிலை இன்றுள்ள உண்மையான திருச்சபைகளிலும், உண்மை கிறிஸ்தவர்களின் வாழ்விலும் நாம் காணமுடியும். இயேசுவின் ஆட்சியின் மந்திரம் “ஒருவரை ஒருவர் நேசிப்பதாகும்”. சகோதர அன்பு இல்லையானால், நாம் முதன் முதலில் பார்த்தபடி, ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்ட சந்நியாசிகளைப் போல ஒவ்வொருவரும் சண்டைபோட்டுக் கொள்வார்கள். இப்படிப்பட்டவர்கள் மத்தியிலே தேவனுடைய இராஜ்ஜியம் இராது. இயேசுவின் இராஜ்ஜியத்தின் வலிமையும், பிரசன்னமும் அவர் அன்று வாழ்ந்துவிட்டுச் சென்ற நாள் முதல் இன்றுவரை தொடர்ந்து வியாபித்துக்கொண்டே இருக்கிறது.
முஹம்மதுவின் இராஜ்ஜியம்:
முஹம்மதுவின் இராஜ்ஜியம் வெளிப்புறமானது, அது மக்களின் வெளிப்புற வாழ்க்கையை மட்டுமே மாற்றுகிறது. இறைவன் விரும்பும் விதத்தில் மக்கள் வாழ அவர்களின் உள்ளங்களை மாற்றும் சக்தி அதற்கு இல்லை. முஹம்மது மரித்தவுடன், அவரது நேரடி மேற்ப்பார்வை அகன்று போனது, இதனால், இஸ்லாமிய தலைவர்களாகிய அவரது தோழர்கள் ”நாங்கள் மனதளவில் மாற்றமடையாத மக்களாக இருக்கிறோம்” என்று நிரூபித்துக்கொண்டார்கள். அவர்களின் பாவமான வாழ்க்கை, உலக பொருட்கள் மீது இருந்த இச்சை போன்றவை மாறாமல் அப்படியே இருந்தது. இஸ்லாமின் ஆரம்பகால முஸ்லிம்களின் இதயங்கள் சுயநலத்துடனும், மனக்கசப்புடனும் கொடூரத்துடனும் காணப்பட்டது. இதனால் அவர்கள் ஒருவரை ஒரு காட்டிக்கொடுத்து, நம்பிக்கை துரோகம் செய்து தங்கள் உயிர் நண்பர்களையே கொன்றார்கள்.
முஹம்மதுவின் அரசு பட்டயத்தின் அஸ்திபாரத்தில் ஸ்தாபிக்கப்பட்டது, அந்த பயத்துடனேயே மக்களை இஸ்லாமிலே தக்கவைத்துக்கொண்டு இருந்தது. அது ஒரு பக்கம் ஆன்மீகத்தையும் இன்னொரு பக்கம் அரசியலையும் கொண்டு இருந்தது. அது படைகளை தனக்கென்று உருவாக்கிகொண்டது, புதிய வரிகளையும், குடும்ப மற்றும் கலாச்சார விதிகளையும், வணிக சட்டங்களையும் உருவாக்கியது. முஹம்மதுவின் அரசு முஸ்லிம்களின் வாழ்க்கையிலும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளிலும் அவ்வப்போது தன் விஸ்வரூபத்தை காட்டிக்கொண்டு இருக்கிறது.
மக்கள் தங்கள் முழங்கால்களை இஸ்லாமுக்கு முன்பு மடக்கவேண்டும் இதற்காக அவர்களோடு சண்டையிட வேண்டும் என்று அல்லாஹ்வினால் முஹம்மதுவிற்கு கட்டளை பிறந்தது. இந்த சண்டை இரண்டு வகையாக இருந்தது. முதலாவது எதிரிகள் தாக்கும் போது தற்காப்புக்காக சண்டையிடுவது. இரண்டாவது இவரே வலியச் சென்று மக்களோடு போர் புரிந்து முஹம்மதுவின் இராஜ்ஜியத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது.
முஹம்மதுவுடைய செய்தி குழப்பம் தராமல் தெளிவாக இருந்தது: “இஸ்லாமை ஏற்றுக்கொள் அப்போது பாதுகாப்பாக இருப்பீர்கள்” என்பது தான் அது. மேலும் ஆயுதங்கள் மூலமாக முஹம்மதுவின் இராஜ்ஜியம் நிர்வாகிக்கப்படுகின்றது. பல காரணங்களுக்காக அரபு பழங்குடியினர் இஸ்லாமை விட்டு வெளியேறியபோது, அவர்கள் தாக்கப்பட்டார்கள், மறுபடியும் இஸ்லாமுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வைக்கப்பட்டார்கள், அல்லது போரில் மரிக்கும் வரைக்கும் தொடர்ந்து தாக்கப்பட்டார்கள். ஒரு வெள்ளைத் தாளில் இரத்தம் கொட்டப்பட்டால் எப்படி அந்த காகிதம் முழுவதும் அது பரவுமோ அது போல முஹம்மதுவின் அரசு முழு உலகிலும் பரவியது. முஹம்மது மரித்த பிறகு முதல் 100 ஆண்டுகளில் முஹம்மதுவின் அரசு ஒரு அசூரவேகத்தில் பட்டத்தின் முனையில் பரவியது, ஒரு பெரிய சாம்ராஜ்ஜியமாக உருமாறியது.
கடைசியாக நான் மூன்று மேற்கோள்களை இஸ்லாமிய சரித்திய நூலிலிருந்து எடுத்துக் காட்டி இந்த கட்டுரையை முடிக்கிறேன்.
முதலாவது மேற்கோள் ஈராக்கிய கிறிஸ்தவர்கள் பற்றியதாகும். இவர்கள் ஆரம்பத்தில் கிறிஸ்தவர்களாக இருந்தனர், அதன் பிறகு இஸ்லாமுக்கு மாறினார்கள், ஆனால் கிறிஸ்துவை பின் பற்றும்படி மறுபடியும் கிறிஸ்தவர்களானார்கள். இவர்களின் வார்த்தைகள், இந்த கட்டுரையில் இதுவரை நாம் பார்த்த விவரங்களின் சுருக்கமாக அமைந்துள்ளது:
”ஒரு காலத்தில் கிறிஸ்தவர்களாக இருந்து, அதன் பிறகு இஸ்லாமை தழுவியர்களும் அவர்களில் இருந்தார்கள். இஸ்லாமில் குழப்பங்களும், எதிர்ப்புக்களும் உண்டானபோது, இவர்கள் இப்படி கூறினார்கள்: ‘கடவுள் மீது ஆணையாக, நாங்கள் விட்டுவந்த மார்க்கமே சிறந்ததாக இருந்தது. இந்த இஸ்லாமிய மக்கள் பின் பற்றும் மார்க்கத்தைவிட அதுவே சரியானதாக இருந்தது. இவர்கள் இன்னும் மற்றவர்களின் இரத்தத்தை சிந்திக்கொண்டு இருக்கிறார்கள், சாலைகளிலும் திகிலூட்டிக்கொண்டு இருக்கிறார்கள், மேலும் மற்றவர்களின் சொத்துக்களை அபகரித்துக்கொண்டே இருக்கிறார்கள், இவைகளிலிருந்து இஸ்லாம் இவர்களை மாற்றவில்லை.’. இப்படிச் சொல்லி அந்த மக்கள் தாங்கள் விட்டுவந்த மார்க்கத்திற்கே (கிறிஸ்தவத்திற்கு) திரும்பினார்கள். அல் கிர்ரீத் என்பவர் அந்த கிறிஸ்தவர்களை சந்தித்து கூறியதாவது: “உங்களுக்கு ஆபத்துவரும், ஒரு கிறிஸ்தவர் முஸ்லிமாக மாறி, அதன் பிறகு கிறிஸ்தவத்திற்கு திரும்புவதைப் பற்றி அலி அவர்கள் என்ன சொன்னார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? இறைவன் மீது ஆணையாக, அவர் யாருடைய பேச்சும் கேட்கமாட்டர், அவர்களை மன்னிக்கமாட்டார், எங்களுக்கு இஸ்லாமுக்கு மறுபடியும் திரும்புவதற்கு அவகாசம் கொடுங்கள் என்று கேட்டாலும் அதை ஏற்கமாட்டார். இப்படிப்பட்டவர்களைப் பற்றி அவருடைய கட்டளையென்ன வென்றால், அவர்களை அலி கண்டவுடனே, அவர்களின் தலையை துண்டித்துவிடுவார்” [7]
இரண்டாவது மேற்கோள் முஹம்மதுவின் தோழர்கள் பற்றியதாகும். முஸ்லிம்களோடு சண்டையிட்டார்கள் என்பதற்காக, 80 வயது முதிர்ந்த ஒரு மூதாட்டிக்கு முஹம்மதுவின் தொழர்களில் சிலர் செய்த செயல் என்ன? அவைகளை இப்போது காண்போம்.
ஃபஜாரா பழங்குடியினரால் முஸ்லிம்கள் ஆரம்பத்தில் தோற்கடிக்கப்பட்டு இருந்தார்கள். காயப்பட்ட முஸ்லிம் தலைவர் பழிவாங்கவேண்டுமென்று சபதம் எடுத்து இருந்தார். அவர் சுகமடைந்த பின்பு அவர்களை தாக்க மறுபடியும் புறப்பட்டார். அந்த சண்டையில் ஒரு வயதான மூதாட்டி பிடிபட்டார், அவருக்கு அவர் என்ன செய்தார் என்பதை இஸ்லாமிய சரித்திர நூலிலிருந்து காண்போம்.
”… மற்றும் உம் கிர்ஃபா ஃபதிமா என்பவர் கைதியாக பிடிபட்டார். இந்த பெண் மிகவும் வயது சென்ற மூதாட்டியாக இருந்தார், இவர் மாலிக் என்பவரின் மனைவியாவார். இந்த பெண்ணின் மகளையும், அப்துல்லா மசதாவையும் பிணைக்கைதிகளாக் பிடித்துக்கொண்டார்கள். ஜையத் உம் கிர்ஃபாவை கொல்லும் படி கேய்ஸுக்கு கட்டளையிட்டார். அவளை அவர் மிகவும் கொடூரமான முறையில் கொன்றார். (தபரி சரித்திரம்: அவளுடைய இரண்டு கால்களிலும் இரண்டு கயிறுகளால் கட்டி, இரண்டு ஒட்டகங்களில் கட்டினார்கள். இந்த இரண்டு ஒட்டகங்களும் நேர் எதிரே இழுத்துச் செல்லும்படி அவைகளை ஓட்டினார்கள். அவள் இரண்டாக பிளக்கப்பட்டு மரித்தாள்). [8]
மூன்றாவது மேற்கோள், தன்னை கேலி செய்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக முஹம்மது என்ன செய்தார் என்பதைப் பற்றியது (சில மாதங்களுக்கு முன்பாக பிரான்ஸில் நடந்த தீவிரவாத தாக்குதல் சார்லி ஹெப்டோவை நீங்கள் கவனத்தில் கொள்ளவும்). இந்த நிகழ்ச்சியில் ஒரு முஸ்லிம் தன் அடிமைப்பெண்ணை எப்படி கொன்றார் என்பதைப் பற்றியதாகும். அந்த அடிமைப்பெண் முஹம்மதுவை கேலி செய்தாள் என்பதற்காக கொள்ளப்பட்டாள்.
அப்துல்லா இப்னு அப்பாஸ் அறிவித்ததாவது:
ஒரு குருடனுக்கு ஒரு அடிமைப்பெண் இருந்தாள், அவள் பிள்ளைகள் பெற்றவளாக இருந்தாள். இந்த பெண் இறைத்தூதர் பற்றி அவதூறுகளை பேசுபவளாக இருந்தாள். இப்படி செய்யாதே என்று அந்த மனிதன் கூறியும், அவள் அதனை நிறுத்தவில்லை. அவளை கடிந்துக்கொண்ட பிறகு, தன் பழக்கத்தை அவள் விடவில்லை. ஒரு நாள் இரவு இப்படியே அவள் இறைத்தூதர் பற்றி அவதூறு வார்த்தைகளை பேசிக்கொண்டே இருந்தாள். அம்மனிதன் ஒரு கத்தியை எடுத்து அந்த பெண்ணின் வயிற்றில் வைத்து குத்தி கொன்றுவிட்டான். அவளின் குழந்தை அவள் கால்களுக்கிடையில் இரத்தக் கறைகளுடன் காணப்பட்டது. அடுத்த நாள் காலை இந்த விவரம் இறைத்தூதருக்கு அறிவிக்கப்பட்டது.
இறைத்தூதர் மக்களை ஒன்று கூட்டினார், மேலும் இவ்விதமாக கூறினார்: அல்லாஹ்வின் மீது ஆணையாக, இந்த செயலைச் செய்தவர் யார்? அவர் இப்போது எழுந்து நிற்கட்டும் என்றார். அந்த மனிதர் நடுங்கியவராக எழுந்து நின்றார்.
அந்த மனிதர் இறைத்தூதருக்கு முன்பாக உட்கார்ந்தார், மேலும் இப்படி கூறினார்:
”அல்லாஹ்வின் தூதரே: நான் தான் அவளின் எஜமானன், அவள் என் அடிமையாவாள். அவள் உங்களைப் பற்றி கேலி செய்துக்கொண்டு இருந்தாள். இப்படி சொல்வதை தவிர்த்துவிடு என்று சொன்னேன், ஆனால் அவள் நிறுத்தவில்லை. நான் கடிந்தும்கொண்டேன், அவள் தன் பழக்கத்தை விடவில்லை. அவள் மூலமாக எனக்கு இரண்டு மகன்கள் முத்துக்களைப் போல பிறந்து இருக்கிறார்கள், அவள் என் துணைவி தான். நேற்று இரவு அவள் அப்படியே உங்கள் மீது அவதூறு வார்த்தைகளைச் சொன்னாள், எனவே, நான் ஒரு கத்தியை எடுத்து அவரது வயிற்றில் குத்தி அவளை கொன்றுவிட்டேன்.”.
இப்படி அந்த மனிதர் சொன்ன போது, இறைத்தூதர் இப்படியாக சொன்னார்: “இன்று நீங்கள் எல்லாரும் இதற்கு சாட்சிகளாக இருக்கிறீர்கள். அவளை கொன்றதற்காக எந்த ஒரு இரத்த பரிகாரமும் செய்யத்தேவையில்லை” [9]
மேலே நாம் கண்ட மூன்று உதாரணங்களில் படுகொலையையும், வன்முறையையும், மிருகத்தனத்தையும் காணமுடியும். இது தான் முஹம்மது போதித்த இஸ்லாம். முஹம்மதுவை கேலி செய்பவர்களை கொலை செய்வது என்பது முஹம்மதுவிற்கு நன்மையான ஒன்றாக காணப்படுமானால், இப்படி கொலைகள் செய்வது நன்மையானதாக ஏன் முஸ்லிம்களுக்கு இன்று காணப்படாது?
இக்கட்டுரை தலைப்பின் ஒரு பகுதி “ISIS இஸ்லாம் அங்கீகரிக்கும் ஒன்றா?” என்பதாகும். இதுவரை நாம் பார்த்த உதாரணங்கள், இஸ்லாமிய மேற்கோள்களினால், “ஆம், ISIS என்பது முஸ்லிம்களுக்கு ஹலால் தான், ISIS இஸ்லாம் அங்கீகரிக்கும் ஒன்று தான்” என்ற முடிவுக்குத் தான் நம்மால் வரமுடியும். அதாவது ஐஎஸ்ஐஎஸ் என்பது ஒரு ஆதாரபூர்வமான இஸ்லாமிய கோட்பாடுகளின் மீது கட்டப்பட்ட ஒரு அமைப்புத் தான் என்பதை நாம் அறிந்துக் கொள்ளமுடியும். இஸ்லாம் என்றால் என்ன என்பதை அறிந்துக்கொள்ள முஹம்மதுவின் போதனைகள் மற்றும் செயல்களை ஆய்வு செய்தல் போதுமானது. மேலும் இதுவரை கண்ட விவரங்களிலிருந்து உண்மையான இஸ்லாமிய மார்க்கம் ஒரு பயங்கரமான தீய மற்றும் மனிதாபமற்ற மதமாகும் என்பதை அறிந்துக்கொண்டோம். இது மட்டுமல்ல, இயேசுவிற்கும் முஹம்மதுவிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நீங்கள் புரிந்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக இவ்விருவர்களின் இராஜ்ஜியத்தைப் பற்றியும் விவரித்தேன்.
அறியாமையில் உள்ள மக்கள் அனேக முறை இவ்விரு மார்க்கங்களும் ஒன்று தான் என்று தவறாக நினைத்துவிடுகின்றனர். இவர்களின் கருத்துப்படி, இவ்விரு மார்க்கங்களும் மிகபெரிய மார்க்கங்களாக இருக்கின்றன, இவ்விருவர்கள் பெருந்தலைவர்களாக இருக்கிறார்கள், இம்மார்க்கங்களில் பல விஷயங்கள் ஒத்துப்போகின்றன, எனவே இவை இரண்டும் ஒன்று தான் என்று தவறான நினைத்துவிடுகின்றனர். ஆனால், உண்மையில் இவ்விருவரும் நேர் எதிர் துருவங்களாகும், இயேசு மற்றும் முஹம்மதுவின் போதனைகள், செயல்கள் ஒருபோதும் ஒன்றுபடமுடியாது.
பின்குறிப்புகள்
1. Ibn Ishaq, "Sirat Rasulallah", compiled by A. Guillaume as "The Life of Muhammad", Oxford, London, 1955, page 212
2. Muslim, Abu’l-Husain, “Sahih Muslim”, International Islamic Publishing House, Riyadh, Saudi Arabia, 1971, translated by A. Siddiqi, volume 1, #33
3. al-Tabari, "The History of al-Tabari", State University of New York Press,” volume 7, page 29
4. al-Tabari, "The History of al-Tabari", State University of New York Press” volume 10, page 2
5. For a description of this event see: al-Tabari, "The History of al-Tabari", State University of New York Press volume 9, 1993, pages 196, 197
6. al-Tabari, "The History of al-Tabari", State University of New York Press,” volume 15, pages 190, 191
7. al-Tabari, "The History of al-Tabari", State University of New York Press, volume 17, pages 187, 188
8. Ibn Ishaq, "Sirat Rasulallah", compiled by A. Guillaume as "The Life of Muhammad", Oxford, London, 1955 page 665
9. Abu Dawud, Suliman, “Sunan”, al-Madina, New Delhi, 1985, translated by A. Hasan, Book 38, Number 4348
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக