அல்லாஹ்வின் தனித்தன்மையைப் பற்றி குர்ஆனில் கீழ்கண்டவிதமாக படிக்கிறோம்:
குர்ஆன் 112:1 (ஐந்து தமிழாக்கங்கள்):
முஹம்மது ஜான் தமிழாக்கம்:
(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:
(நபியே! மனிதர்களை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ் ஒருவன்தான்.
IFT- தமிழாக்கம்: கூறுவீராக! அவன் அல்லாஹ், ஏகன்,
சவூதி தமிழாக்கம்: (நபியே!) நீர் கூறுவீராக அவன் "அல்லாஹ்" ஒருவனே!
பிஜே தமிழாக்கம்: "அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராக!
இந்த அத்தியாயத்திற்கு இரண்டு பெயர்கள் உண்டு: ஸூரத்துல் இஃக்லாஸ் (ஏகத்துவம்) மற்றும் ஸூரத்துல் தௌஹித். நான்கு வசனங்கள் கொண்ட இந்த சிறிய ஸூரா பற்றி ஒரு இஸ்லாமிய அறிஞர் கீழ்கண்டவாறு கூறினார்:
இறைவன் என்பதற்கான மிகச்சுருக்கமான வரையறை:
இஸ்லாமின் இறைவன் பற்றிய மிகவும் சுருக்கமான வரையறையை குர்ஆனின் " இஃக்லாஸ்" என்ற 112வது அத்தியாயத்தில் காணலாம்:
ஸூரத்துல் இஃலாஸ் - இறையியலின் உரைக்கல்:
இறையியலின் உரைக்கல் என்று குர்ஆனின் 112வது அத்தியாயமாகிய ஸூரத்துல் இஃக்லஸை கூறலாம்.
கிரேக்க மொழியில் "தியோ" என்றால் இறைவன் என்று பொருள், 'லாஜி' என்றால் படிப்பு என்று பொருள். ஆக, தியாலஜி என்றால் இறையியல் என்று பொருள். முஸ்லிம்களை பொருத்தமட்டில், சர்வ வல்லவரான அல்லாஹ்வின் இறையியல் பற்றி அந்த நான்கு வார்த்தைகள் கொண்ட வசனமே ஒரு உரைக்கல்லாக உள்ளது போதுமானதாக உள்ளது. யார் யாரெல்லாம் தெய்வத்தன்மைக்கு போட்டியிருகின்றார்களோ, அவர்களை இந்த அமிலச் சோதனையில் போட்டு எடுக்கவேண்டும். இந்த அத்தியாயத்தில் கொடுக்கப்பட்ட அல்லாஹ்வின் குணங்கள் தனித்தன்மை வாய்ந்தவைகளாக உள்ளன. இதனால் தங்களை தெய்வங்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்களையும், பொய்யான தெய்வங்களை சுலபமாக அடையாளம் கண்டு அவர்களை புறக்கணிக்க முடியும்.
(டாக்டர் ஜாகிர் நாயக், இஸ்லாமில் இறைவன் பற்றிய கோட்பாடு இந்த மூல தொடுப்பை சொடுக்கும் போது கீழ்கண்ட செய்தி வருகின்றது- "The URL has been blocked as per the instructions of the Competent Government Authority/ in compliance to the orders of Court of Law." இன்றைய தேதியின் படி ஜாகிர் நாயக்கின் தளம் அரசாங்கத்தால் முடக்கப்பட்டுள்ளது, ஏன் என்று நம் அனைவருக்கும் தெரியும்.).
நாம் மேலே கண்ட 1வது வசனத்தில் "அல்லாஹ் ஒருவனே" என்று அரபு மூலத்தில் சொல்லப்படவில்லை என்பது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம். உண்மையில் அரபியில் அதன் பொருள் "பலரின் அல்லாஹ் ஒருவன் (Say: He, Allah, is one of)" என்பதாகும்.
இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்ட அரபி வார்த்தை "அஹத்" என்பதாகும். குர்ஆனில், இந்த வசனத்தின் அரபி ஒலிப்பெயர்ப்பு கீழ்கண்ட விதமாக உள்ளது:
"குல் ஹுவ அல்லாஹு அஹத் (துன்)"
இதன் பொருள்:
"கூறுவீராக: அவன், அல்லாஹ், பலரின் ஒருவனாக இருக்கிறான்"
"Say: He, Allah, is one of."
கிறிஸ்தவ எழுத்தாளரும், அரபி மொழி பேச்சாளருமான அப்துல்லாஹ் அல் அரபி (Abdullah Al Araby) எழுதுகிறார்:
குர்ஆனின் வசனங்களை வேண்டுமென்றே தவறாக மொழிப்பெயர்க்கின்ற இந்த செயல் மீது ஒரு ஆழமான ஆய்வு நடத்தப்பட்டு ஆய்வறிக்கை சமர்ப்பிக்கவேண்டும், அவ்வளவு பெரிய தலைப்பு இது. இந்த கட்டுரைக்காக, ஒரு சில உதாரணங்களை மட்டுமே நான் இங்கு தருகிறேன்.
குர்ஆன் 112:1ம் வசனம்: நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே
அரபி மூலத்தில் "ஒருவனே" என்ற தமிழாக்கம் செய்யப்பட்ட வார்த்தை "ஒருவனே" என்ற அரபி வார்த்தையில்லை, அது " அஹத் - பலரில் ஒருவன் - One of" என்ற பொருள்படும் வார்த்தையாகும். தமிழாக்கம் செய்த முஸ்லிம், அஹத் என்ற வார்த்தையை சரியாக மொழியாக்கம் செய்திருந்தால், அது ஷிர்க் என்ற பெரும் பாவத்தை செய்வதற்கு சமமானதாக அந்த வசனம் மாறிவிடும். உண்மையில் அஹத் என்ற வார்த்தை, அல்லாஹ்வை பலரோடு ஒப்பிட்டு, பலரில் அல்லாஹ்வும் ஒருவன் என்ற பொருளில் தான் அமைந்துள்ளது. ("Nikah"- The Islamic "N" Word; What Does It Exactly Mean?).
ஒருவேளை அல்லாஹ் இதனை சரியான முறையில் அரபியில் சொல்லவேண்டுமென்றால், "அல்லாஹு அல் அஹத்" அதாவது "அவன் அல்லாஹ், அவன் ஒருவனே" என்று சொல்லியிருந்தால் பிரச்சனை இல்லை.
இந்த பிரச்சனையை சரி செய்ய, கீழ்கண்ட ஆங்கில மொழியாக்கம் செய்தவர்கள், தில்லுமுல்லு செய்து " தி - The" என்ற ஆங்கில வார்த்தையை உள்ளே நுழைத்து பொருளை சரி செய்கிறார்கள்.
Say (O Muhammad): "He is Allah, (the) One. (Hilali-Khan Translation)
Say: He is Allah, the One! (Pickthall - Translation)
Say `He is ALLAH, the One! (Sher Ali - Translation)
மேலும் சில முஸ்லிம் அறிஞர்கள், இந்த பிழையை மறைப்பதற்காக, முழுவாக்கியத்தையே மாற்றி அமைத்திருக்கிறார்கள்.
Proclaim, "He is the One and only GOD. (Khalifa - Translation)
Say, [God] is one God; (Sale - Translation)
குர்ஆனை கொடுத்த அல்லாஹ், இந்த பிரச்சனையையும், குழப்பத்தையும் நீக்குவதற்கு, இந்த வசனத்தை கீழ்கண்டவாறு இறக்கி இருந்திருக்கலாம்:
குல் ஹுவ அல்லாஹு அல் வாஹித்(துன்)
இதன் பொருள்: கூறுவீராக, அவன் அல்லாஹ், அவன் ஒருவனே ("Say, he is Allah, the One,")
அல்லது
கூறுவீராக, அவன் அல்லாஹ் ஒருவனே ("Say he, Allah, is the One.")
மேலும் குர்ஆன் ஆக்கியோன், "அல்" என்ற எழுத்தையும் சேர்க்காமல், "குல் ஹுவ அல்லாஹு வாஹிதுன்(Qul huwa Allahu Wahid(un))" என்று வசனத்தை இறக்கியிருந்திருக்கலாம்.
As Michael B. Schub put in his paper "True Belief - a New Translation and Commentary on Sura 112", ZAL, 22 (1990), p. 81:
"ahadun: The rules of the `Arabiyya [i.e. Classical Arabic] require wahidun here."
மைக்கேல் பி. ஷுப் தம்முடைய "True Belief - a New Translation and Commentary on Sura 112" என்ற ஆய்வுக் கட்டுரையில் பக்கம் 81ல் கீழ்கண்டவாறு கூறுகின்றார்:
"அஹதுன்": பழமை வாய்ந்த மூல அரபியில் இந்த இடத்தில் "வாஹிதுன்" என்று வந்திருக்கவேண்டும்.
குர்ஆனில் வாஹித் என்ற வார்த்தை அல்லாஹ்வின் ஏகத்துவத்திற்கு பயன்படுத்தப்பட்ட வசனங்கள்
இன்னும் சில சான்றுகளை குர்ஆனிலிருந்து காண்போம். முஹம்மது ஜான் தமிழாக்கம் இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கீழ்கண்ட வசனங்களில் "அல்லாஹ் ஒருவனே" என்பதை குறிக்க "வாஹித்" என்ற வார்த்தை சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளதை, கவனிக்கவும்.
2:133. யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம் "எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?" எனக் கேட்டதற்கு, "உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே (ilahan wahidan இலாஹன் வாஹிதன்) -வணங்குவோம் அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்" எனக் கூறினர்.
2:163. மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன்(Wa-ilahukum ilahun wahidun - வ இலாஹுகும் இலாஹுன் வாஹிதுன்); அவனைத் தவிர வேறு நாயனில்லை அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.
4:171. . . . - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்(Allahu ilahun wahidun- அல்லாஹு இலாஹுன் வாஹிதுன்); அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
5:73. நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள்; ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர வேறு நாயன் இல்லை(wama min ilahin illa ilahun wahidun - வமா மின் இலாஹின் இல்லா இலாஹுன் வாஹிதுன்); அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால் நிச்சயமாக அவர்களில் காஃபிரானவர்களை துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும்.
6:19. . . .நான் (அவ்வாறு) சாட்சி சொல்ல முடியாது என்றும் கூறுவீராக; வணக்கத்திற்குரியவன் நிச்சயமாக அவன் ஒருவன் தான்; அவனுக்கு நீங்கள் இணைவைப்பதிலிருந்து நான் நிச்சயமாக விலகிக் கொண்டவனே" என்று கூறிவிடும்(qul la ashhadu qul innama huwa ilahun wahidun - குல் ல அஷ்ஹது குல் இன்னமா ஹுவ இலாஹுன் வாஹிதுன்) .
38:5. "இவர் (எல்லாத்) தெய்வங்களையும் ஒரே நாயனாக(ilahan wahidan - இலாஹன் வாஹிதன்) ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயமே! (என்றும் கூறினர்).
(அனைத்து வசனங்களும் முஹம்மது ஜான் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது)
இங்கு கூர்ந்து கவனிக்கவேண்டிய ஒரு சுவாரஸ்மான விவரம் என்னவென்றால், அல்லாஹ்வின் ஏகத்துவம் பற்றி குர்ஆன் எங்கு பேசினாலும், அங்கு "வாஹித்" என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஒரு இடத்தில் மட்டும் அதாவது குர்ஆன் 112:1ல் மட்டும் அது "அஹத்(அனேகரில் இவனும் ஒருவன்)" என்று தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளது.
அஹத் என்ற வார்த்தை குர்ஆனில் அனைத்து இடங்களிலும் (74), "பலரில் ஒருவர்/உங்களில் ஒருவர்/யாராகிலும்" என்ற பொருளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது
குர்ஆனில் அஹத் என்ற வார்த்தை இடம்பெறும் வசனங்கள் அனைத்தையும் ஆய்வு செய்தால், அத்ஹு அல் அரபி என்பவர் சொன்ன கருத்தையே பிரதிபலிப்பதாக உள்ளது. அஹத் என்ற வார்த்தை இடம் பெறும் வசனங்கள் அனைத்திலும் "அனேகரில் ஒருவர்" அல்லது ஒரு குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அஹத் என்ற வார்த்தை "ஒரே ஒருவர் அல்லது தனித்தன்மை வாய்ந்த ஒருவர்" என்ற பொருளில் எங்கும் பயன்படுத்தப்படவில்லை (112:1ல் தவிர).
அஹத் வார்த்தை வரும் குர்ஆன் வசன சான்றுகள்:
ஒவ்வொருவரும் (ahaduhum - அஹதுஹும்):
2:96. அவர்கள், மற்ற மனிதர்களைவிட, இணை வைக்கும் முஷ்ரிக்குகளையும் விட (இவ்வுலக) வாழ்க்கையில் பேராசை உடையவர்களாக இருப்பதை (நபியே!) நீர் நிச்சயமாகக் காண்பீர்; அவர்களில் ஒவ்வொருவரும் (ahaduhum - அஹதுஹும்) ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என ஆசைப்படுகிறார்கள்; ஆனால் அப்படி அவர்களுக்கு நீண்ட வயது கொடுக்கப்பட்டாலும், அவர்கள் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது; இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்வதையெல்லாம் கூர்ந்து பார்ப்பவனாகவே இருக்கிறான்.
எவருக்கும்(ahadin - அஹதின்):
2:102. . . .. எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும்(ahadin - அஹதின்) எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
ஒருவருக்கிடையேயும்(ahadin - அஹதின்):
2:136. (முஃமின்களே!)"நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும்(ahadin - அஹதின்) நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்" என்று கூறுவீர்களாக.
எவர் ஒருவரையும்(ahadin- அஹதின்):
2:285. (இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: "நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும்(ahadin- அஹதின்) பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்" என்று கூறுகிறார்கள்.
இன்னொருவருக்கும்(ahadun - அஹதுன்):
3:73. "உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுவோரைத் தவிர (வேறு எவரையும்) நம்பாதீர்கள்" (என்றும் கூறுகின்றனர். நபியே!) நீர் கூறும்: நிச்சயமாக நேர்வழியென்பது அல்லாஹ்வின் வழியே ஆகும்; உங்களுக்கு (வேதம்) கொடுக்கப்பட்டதுபோல் இன்னொருவருக்கும்(ahadun - அஹதுன்) கொடுக்கப்படுவதா அல்லது அவர்கள் உங்கள் இறைவன் முன் உங்களை மிகைத்து விடுவதா?" (என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.) நிச்சயமாக அருட்கொடையெல்லாம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது; அதை அவன் நாடியோருக்கு வழங்குகின்றான்; அல்லாஹ் விசாலமான (கொடையளிப்பவன்; யாவற்றையும்) நன்கறிபவன் என்று கூறுவீராக.
எவரொருவரையும்(ahadin - அஹதின்):
3:84. "அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும்(ahadin - அஹதின்) பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
எவரையும் (ahadin - அஹதின்):
3:153. (நினைவு கூறுங்கள்! உஹது களத்தில்) உங்கள் பின்னால் இருந்து இறைதூதர் உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் எவரையும் (ahadin - அஹதின்) திரும்பிப் பார்க்காமல் மேட்டின்மேல் ஏறிக் கொள்ள ஓடிக் கொண்டிருந்தீர்கள்; ஆகவே (இவ்வாறு இறை தூதருக்கு நீங்கள் கொடுத்த துக்கத்தின்) பலனாக இறைவன் துக்கத்தின்மேல் துக்கத்தை உங்களுக்குக் கொடுத்தான்; ஏனெனில் உங்களுக்குக் கிடைக்க வேண்டியது தவறி விட்டாலோ, உங்களுக்குச் சோதனைகள் ஏற்பட்டாலோ நீங்கள் (சோர்வும்) கவலையும் அடையாது (பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்); இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.
எவரையும்(ahadin - அஹதின்):
4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும்(ahadin - அஹதின்) பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
நீங்கள் (aḥadun -அஹதுன்): உங்களில் ஒருவர் என்று வந்திருக்கவேண்டும்! தமிழாக்கம் செய்தவர் "நீங்கள்" என்று எழுதியுள்ளார்.
4:43. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்; அன்றியும் குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை (பள்ளிக்குள் செல்லாதீர்கள்; பள்ளியை) பாதையாக கடந்து சென்றால் தவிர. நீங்கள் நோயாளியாகவோ, யாத்திரையிலோ, மலஜலம் கழித்தோ(aḥadun minkum mina l-ghāiṭi - அஹதுன் மின்கும் மினால் க்ஹாடி), பெண்களைத் தீண்டியோ இருந்து (சுத்தம் செய்து கொள்ள) தண்ணீரை பெறாவிடின் சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவி "தயம்மும்" செய்து கொள்ளுங்கள்; (இதன்பின் தொழலாம்) நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.
எவரும்(ahadun - அஹதுன்):
5:6. முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) - நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்; தவிர நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும்(ahadun - அஹதுன்) மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் . . .
எவருமே(ahadin - அஹதின்):
7:80. மேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: உலகத்தில் எவருமே(ahadin - அஹதின்) உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவா முனைந்தீர்கள்?"
யாரேனும் (ahadun - அஹதுன்):
9:6. (நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் (ahadun - அஹதுன்) உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக; அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக - ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.
யாராவது (ahadin - அஹதின்):
9:84. அவர்களில் யாராவது (ahadin - அஹதின்) ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக நீர் ஒருக்காலும் (ஜனாஸா) தொழுகை தொழவேண்டாம்; இன்னும் அவர் கப்ரில் (பிரார்த்தனைக்காக) நிற்க வேண்டாம்; ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்துப் பாவிகளாகவே இறந்தார்கள்.
யாராவது(ahadin - அஹதின்):
9:127. யாதொரு (புதிய) அத்தியாயம் இறக்கப்பட்டால் அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: "உங்களை யாராவது(ahadin - அஹதின்) பார்த்து விட்டார்களோ?" என்று கேட்டுக் கொண்டே திரும்பி(ப் போய்) விடுகின்றனர்; அல்லாஹ் அவர்களுடைய நெஞ்சங்களை (ஒளியின் பக்கத்திலிருந்து) திருப்பி விட்டான் - (காரணமென்னவெனில்) அவர்கள் சத்தியத்தை அறிந்து கொள்ள முடியாத மக்களாக இருக்கின்றனர்.
யாரும்(ahadun - அஹதுன்):
11:81. (விருந்தினராக வந்த வானவர்கள்) கூறினார்கள்: "மெய்யாகவே நாம் உம்முடைய இறைவனின் தூதர்களாகவே இருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள் உம்மை வந்தடைய முடியாது; எனவே இரவின் ஒரு பகுதி இருக்கும்போதே உம் குடும்பத்துடன் (இவ்வூரை விட்டுச்) சென்றுவிடும்! உம்முடைய மனைவியைத் தவிர, உங்களில் யாரும்(ahadun - அஹதுன்) திரும்பியும் பார்க்க வேண்டாம். நிச்சயமாக அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்து அவளையும் பிடித்துக் கொள்ளும். (வேதனை வர) அவர்களுக்கு நிச்சயமாக வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும்; விடியற்காலை சமீபித்து விடவில்லையா?"
எவரும் (ahadun - அஹதுன்):
15:65. ஆகவே இரவில் ஒரு பகுதியில் உம்முடைய குடும்பத்தினருடன் நடந்து சென்று விடும்; அன்றியும் (அவர்களை முன்னால் செல்ல விட்டு) அவர்கள் பின்னே நீர் தொடர்ந்து செல்லும். உங்களில் எவரும் (ahadun - அஹதுன்) திரும்பிப் பார்க்க வேண்டாம். நீங்கள் ஏவப்படும் இடத்திற்கு சென்று விடுங்கள் என்று அ(த் தூது)வர்கள் கூறினார்கள்.
ஒருவனுக்கு(ahaduhum - அஹதுஹும்):
16:58. அவர்களில் ஒருவனுக்கு(ahaduhum - அஹதுஹும்) பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான்.
ஒருவரையேனும் (ahadin - அஹதின்):
19:98. அவர்களுக்கு முன்னர், எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கிறோம்; அவர்களில் ஒருவரையேனும் (ahadin - அஹதின்) நீர் பார்க்கிறீரா? அல்லது அவர்களுடைய இலேசான சப்தத்தை நீர் கேட்கிறீரா?
எவரும் (ahadin - அஹதின்):
24:21. ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்க வற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்; அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் (ahadin - அஹதின்) எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையடைந்திருக்க முடியாது - எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் தூய்மைப் படுத்துகிறான் - மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
எவருமே (ahadin - அஹதின்):
29:28. மேலும், லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்); அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: "நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே (ahadin - அஹதின்) உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலை செய்ய முனைந்து விட்டீர்கள்.
எவர் (ahadin - அஹதின்):
33:40. முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் (ahadin - அஹதின்) ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.
வேறெவரும் (ahadin - அஹதின்):
35:41. நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான்; அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் (ahadin - அஹதின்) அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்வன்.
ஒருவனுக்கு (ahaduhum – அஹதுஹும்):
43:17. அர் ரஹ்மானுக்கு அவர்கள் எதனை ஒப்பாக்கினார்களோ அதை (அதாவது பெண் குழந்தையை) கொண்டு அவர்களில் ஒருவனுக்கு (ahaduhum – அஹதுஹும்) நற்செய்தி கூறப்படும்பொழுது அவனுடைய முகம் கருத்துப் போய்விடுகின்றது. மேலும் அவன் கோபம் நிரம்பியவனாகவும் ஆகிவிடுகின்றான்.
எவரும்(ahadin - அஹதின்):
69:47. அன்றியும், உங்களில் எவரும்(ahadin - அஹதின்) (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை.
ஒருவரும் (ahadun - அஹதுன்):
72:22. கூறுவீராக: "நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் ஒருவரும் (ahadun - அஹதுன்) என்னைப் பாதுகாக்க மாட்டார்; இன்னும், அவனையன்றி ஒதுங்குந் தலத்தையும் நான் காணமுடியாது.
எவனும் (ahadun - அஹதுன்):
89:25. ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் (ahadun - அஹதுன்) வேதனை செய்யமாட்டான்.
எவனும் (ahadun - அஹதுன்):
89:26. மேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் (ahadun - அஹதுன்) கட்டமாட்டான்.
ஒருவரும் (ahadun - அஹதுன்):
90:5. "ஒருவரும் (ahadun - அஹதுன்), தன் மீது சக்தி பெறவே மாட்டார்" என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?
ஒருவரும் (ahadun - அஹதுன்):
90:7. தன்னை ஒருவரும் (ahadun - அஹதுன்) பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?
அவனுக்கு(ahadun - அஹதுன்):
112:4. அன்றியும், அவனுக்கு(ahadun - அஹதுன்) நிகராக எவரும் இல்லை.
குர்ஆனில் "அஹத்" என்ற வார்த்தை வரும் ஒவ்வொரு வசனத்தை ஆய்வு செய்தாலும், அது "அனேகரில் ஒருவர் பற்றியே அல்லது ஒரு குறிப்பிட்ட மக்களில் ஒருவர் பற்றியே" குறிப்பிடுகிறது என்பதை காணலாம். ஒரே ஒரு வசனத்தில் கூட இந்த அஹத் என்ற வார்த்தைக்கு "ஒரே ஒருவன், ஒருவன் மட்டும், தனிப்பட்ட ஒருவன்" என்று பொருள் வருவதில்லை. நாம் மேலே பார்த்த அல் அரபி என்பவரின் கூற்று தான் உண்மை என்று இவைகள் நிருபிக்கின்றன.
குர்ஆனின் மிகப்பெரிய இலக்கண பிழை:
அடிப்படையில் "குர்ஆனில் ஒரு மிகப்பெரிய மோசமான இலக்கண பிழை இருப்பதை இது நிருபிக்கிறது, மேலும் இது இஸ்லாமின் ஏகத்துவ கொள்கையின் அஸ்திபாரத்தை தகர்த்து விடுவதாக அமைந்துவிட்டது".
எப்படி இந்த பிழை குர்ஆனில் நுழைந்தது?
இந்த பிழை (அஹத் என்ற வார்த்தை) குர்ஆனின் 112:1ல் நுழைந்ததற்கு "யூதர்களுடன் முஹம்மது (அ) குர்ஆனின் ஆசிரியர் கொண்டிருந்த தொடர்பு கூட ஒரு காரணமாக இருக்கலாம்" என்று நான் கருதுகிறேன், இது உண்மையாகவும் இருக்கலாம். அதாவது முஹம்மது யூதர்களிடமிருந்து அவர்களின் 'ஒரே தெய்வ விசுவாசப் பிரமாணத்தை(the Jewish Shema - ஷேமா)' கேள்விப்பட்டு இருந்திருக்கவேண்டும். யூதர்களின் விசுவாசப்பிரமானம் உபாகமம் 6:4ம் வசனத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அங்கு, யெகோவா தேவனின் தனித்தன்மையை வெளிப்படுத்த 'எகாத்' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
யூதர்களின் விசுவாச பிரமாண வசனத்தை எபிரேய மொழியிலும், ஒலிப்பெயர்ப்பிலும் கிழே கொடுத்துள்ளேன்.
எபிரேய ஒலிப்பெயர்ப்பு: ஷெமா இஸ்ரயேல், யாவே எலோஹினு யாவே எகாத்
உபாகமம் 6:4 இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.
Translilteration English: Shema Yisrael Yahweh Elohenu Yahweh Echad
English: Hear O Israel, Yahweh Our God Yahweh is One.
யூதர்கள் "எகாத்" என்ற வார்த்தையை தங்கள் தெய்வத்தின் ஏகத்துவத்தை வெளிக்காட்ட பயன்படுத்துவதை முஹம்மது கவனித்து இருந்துள்ளார். அதன் பிறகு தன்னுடைய அல்லாஹ்விற்கு இதற்கு சமமான வார்த்தையை அரபியில் பயன்படுத்தலாம் என்று நினைத்து, 'அஹத்' என்ற வார்த்தையை அல்லாஹ்விற்கு பயன்படுத்திவிட்டிருக்கிறார். இந்த வார்த்தையின் பயன்பாடு அவரது ஏகத்துவ நிலைப்பாட்டை தகர்த்துவிடும் என்பதையும், குர்ஆனின் அரபி மொழி இலக்கணத்தை கேள்விக்குறியாக்கிவிடும் என்று அவர் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அதாவது அஹத் என்ற வார்த்தையை அல்லாஹ்விற்கு சூட்டி, அவர் தான் நம்பிக்கொண்டு இருந்த ஏகத்துவ கோட்பாட்டை அழித்துவிட்டார்.
அஹத் என்ற வார்த்தை அல்லாஹ்வின் ஏகத்துவத்தை நிலைநாட்ட தவறாக பயன்படுத்தியதற்கு இன்னொரு காரணமும் இருக்கலாம். முஹம்மதுவோ அல்லது குர்ஆனை கொடுத்தவனோ, குர்ஆன் வசனங்களில் முதல் வாக்கியத்திற்கும் இரண்டாம் வாக்கியத்திற்கு இடையே "வரிகளின் ராகம் - எதுகை/மோனை சுவையாக இருக்கும்" என்பதால் கூட இப்படி 'அஹத்' என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்திருக்கலாம்.
இரண்டாம் வசனத்தின் (112:2) கடைசியில் "ஸமத்" என்று வார்த்தை முடியும், அதற்காக முதல்(112:1) வாக்கியத்தில் "அஹத்" என்று ராகத்திற்காக பயன்படுத்தி இருந்திருக்கலாம்.
தவறான வார்த்தையை பயன்படுத்தி, இந்த இலக்கண பிழையை செய்வதைக் காட்டிலும், "அல்-வாஹித்" என்றோ "அல்-அஹத்" என்றோ எழுதியிருந்தால், இந்த பிழை நீங்கியிருக்கும், அதே நேரத்தில் ராகமும் ஓரளவிற்கு சரியாக வந்திருக்கும்.
எது எப்படியிருந்தாலும், குர்ஆனை ஒரு தலைசிறந்த படைப்பாகவோ அல்லது அரபு இலக்கியத்தின் சிகரமாகவோ கருதமுடியாது என்பதை இதுவரை பார்த்த விவரங்கள் காட்டுகின்றன. அல்லாஹ்வின் இயல்புடன் தொடர்புடைய மிக முக்கியமான வசனத்தில் ஒரு வார்த்தையை தவறாகப் பயன்படுத்தியதிலிருந்து "குர்ஆன் இறைவனிடமிருந்து வரவில்லை, அதன் ஆக்கியோன் சர்வஞானியான இறைவன் அல்ல" என்பது தெளிவாக புரிகின்றது. இந்த ஒரு உதாரணமே, குர்ஆன் இறைவேதமல்ல என்பதற்கு தெளிவான சான்றாகும். யாரோ ஒருவரின் தவறான கண்டுபிடிப்பு தான் குர்ஆன். இது இறைவனின் வார்த்தைகள் என்று தனது வாசகர்களை நம்ப வைக்க விரும்பிய ஒருவரின் அபூர்வமான கண்டுபிடிப்பு தான் குர்ஆன். ஆனால் இதுபோன்ற அடிப்படை இலக்கண தவறுகளைச் செய்து, குர்ஆனின் ஆசிரியர் தனக்குத் தானே நம்பிக்கை துரோகம் செய்துக்கொண்டார். மேலும் அவரது சமகாலத்தவர்களுக்கு மிகவும் தவறான செய்தியை கொடுத்தார். இதுமட்டுமா, தன்னுடைய கோட்பாடுகளை எதிர்க்கும் எதிரிகளின் கைகளில் ஒரு கூர்மையான ஆயுதத்தை அவரே தயார் செய்து கொடுத்தும்விட்டார். அதனை அவர் மீதே அவர்கள் பயன்படுத்த அனுமதியும் கொடுத்துவிட்டார்.
குர்ஆன் என்பது தெய்வீகமுள்ளது, அல்லாஹ் என்பவர் ஏகத்துவ இறைவன் என்று மற்றவர்களுக்கு எடுத்துக்காட்ட விரும்பிய குர்ஆனின் ஆசிரியர், தன் இலக்கண பிழையினால், வேறு ஒரு செய்தியை தன்னை அறியாமல் மக்களுக்கு கொடுத்துவிட்டார். குர்ஆனின் எதிரிகளுக்கு தேவையான சான்றுகளை குர்ஆனே கொடுத்தது போன்று ஆகிவிட்டது. இதனை ஆய்வு செய்யும் மக்கள், "அல்லாஹ் சரியாக குழம்பியுள்ளான், ஒரு இடத்தில் தான் மட்டுமே இறைவன் என்றுச் சொல்கிறான், ஆனால் வேறு இடத்தில் உள்ள இலக்கண பிழையினால், அல்லாஹ்வைத் தவிர வேறு தெய்ங்களும் இருக்கின்றன" என்று சொல்கின்ற அளவிற்கு குர்ஆனின் தரம் உள்ளது அவர்கள் சொல்லவைத்திருக்கிறது.
மேலதிக விவரங்களும் விமர்சனங்களும்: தவ்ஹீத்
சுவாரஸ்யமாக, அஹத் என்ற வார்த்தையின் பொருள் "பலரில் ஒருவர் அல்லாஹ்" என்பதற்கு மேலும் ஒரு சான்றும் உள்ளது. குர்ஆனின் 112வது அத்தியாயத்திற்கு சில முஸ்லிம் அறிஞர்கள் "தவ்ஹித்" என்ற பெயரையும் சூட்டியுள்ளார்கள் என்பதை நாம் இதற்கு முன்பு பார்த்தோம்.
இந்த தவ்ஹித் (தௌஹித்) என்ற வார்த்தைக்கு முஸ்லிம் அறிஞர்கள் "ஒற்றுமை" அல்லது "ஒன்று" என்று பொருள் கூறுகிறார்கள். இந்த வார்த்தை 'பலர் ஒன்றாக சேர்வது' அல்லது 'பல பெருட்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு குழுவாக இருப்பது' என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும்.
தவ்ஹீத் என்ற வார்த்தைப் பற்றி முஸ்லிம் அறிஞர்கள் சொல்லும் விளக்கத்தை படிப்போம்:
தவ்ஹீத் என்ற வார்த்தை வஹ்ஹத் என்ற வினைச்சொல்லிலிருந்து வந்தது, இதன் அர்த்தம் 'ஒன்றாக சேர்ப்பது' என்பதாகும். இஸ்லாமின் படி இதன் பொருள் "ஒருவரின் செயல்களில் (உள்நோக்கி மற்றும் வெளிப்புறமாக) அல்லாஹ்வின் ஒற்றுமையை உணர்ந்து வாழ்வதாகும்". தௌஹித் என்ற வார்த்தை குர்ஆனிலும் இல்லை, ஹதீஸ்களிலும் இல்லை. ஆனால், இதன் மூல வார்த்தையின் நிகழ்காலச் சொல்லை ஹதீஸ்களில் (சுன்னா) காணலாம்.
இறைத்தூதர் முஅத் இப்னு ஜபலை யெமனுக்கு ஆளுநராக அனுப்பும் போது (ஹிஜ்ரி 9), "நீங்கள் வேதக்காரர்களிடம் செல்கிறீர்கள், எனவே அவர்களை அல்லாஹ்விடம் ஒற்றுமையடைய (யுவஹ்ஹிது) வாருங்கள் என்று அழையுங்கள்" என்றார்.
மேலும் இந்த மேற்கோளையும் படிக்கவும்:
தவ்ஹீத்: வரையறை மற்றும் வகைகள்:
இஸ்லாம் தவ்ஹீத்ஐ நம்புகிறது. தவ்ஹீத் என்பது வெறும் ஏகத்துவ வாதம் அல்ல அதாவது ஒரே இறைவன் மீது வைக்கும் நம்பிக்கை மட்டுமல்ல, இதற்கும் அப்பாற்பட்டதை இஸ்லாம் நம்புகிறது. தவ்ஹீத் என்றால் 'ஒற்றுமைப்படுதல், ஐக்கியப்படுதல்' என்பதாகும். இந்த வார்த்தை வஹ்ஹத என்ற வார்த்தையிலிருந்து வந்தது, மேலும் இதன் பொருள் "ஒற்றுமைப்படுதல், ஒன்று சேர்த்தல்" என்பதாகும்.
Tauhiyd comes from the verb wahhad WHICH LITERALLY MEANS TO UNITE. In Islamic terminology, it means to realize and maintain the unity of Allâh in one's actions (inwardly and outwardly). The actual word tauhiyd does not occur in the Quran or Sunnah though the present tense of the verb (from which tauhiyd is derived) is used in Sunnah. The Prophet sent Muadh ibn Jabal as governor of Yemen in 9 A.H. He told him, "You will going to the people of the book, so first invite yuwahhidu Allâh [them to the assertion of the oneness of Allâh]".[1] (The Concept of Tauhiyd in Islam; capital emphasis ours)
And:
TAWHEED:
Definition and Categories:
Islam believes in 'Tawheed' which is not merely monotheism i.e. belief in one God, but much more. Tawheed literally means 'unification' i.e. 'asserting oneness' and is derived from the Arabic verb 'Wahhada' which means TO UNITE, UNIFY or CONSOLIDATE. (Source; the bold, underlined, capital emphasis is ours)
ஆக, இந்த 112வது அத்தியாயத்தில் அல்லாஹ்வின் தனித்தன்மையை விவரிக்க பயன்படுத்திய அஹத் என்ற வார்த்தையும் மற்றும் அல்லாஹ்வின் ஒற்றுமையைக் குறிக்க முஸ்லிம்கள் பொதுவாகப் பயன்படுத்தும் தவ்ஹீத் என்ற வார்த்தையும், "ஏகத்துவத்தை குறிப்பதில்லை", பலவற்றை ஒற்றுமைப்படுத்த ஐக்கியப்படுத்த பயன்படும் வார்த்தையாக அது உள்ளது.
குர்ஆனின் 112வது ஸூராவிற்கு 'தவ்ஹீத்' என்ற பெயரை முஸ்லிம்கள் சூட்டினார்கள். ஆனால், இந்த வார்த்தை அரபி மூலத்தில் அதாவது குர்ஆனில் எங்கும் இல்லை. இந்த பெயரை சூட்டியவர்களின் நோக்கத்திற்கு வெளியே இந்த பெயர் அமைந்துள்ளது, அதாவது அல்லாஹ்வின் இயல்புக்கு எதிராக தவ்ஹீத் என்ற வார்த்தை அமைந்துள்ளது.
எது எப்படியிருந்தாலும், முஸ்லிம்கள் குழப்பத்தில் உள்ளனர் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது. ஸூரா 112:1ன் படி அஹத் என்றால், அல்லாஹ் பலபேர்களில் ஒருவராக இருக்கிறார் என்று பொருள். ஆனால், அந்த பலபேர் எந்த வகையைச் சார்ந்தவர்கள்? என்ற கேள்வி எழுகிறது. அதாவது பல தெய்வங்களில் ஒருவர் அல்லாஹ்வா? இதனை நாம் ஏற்றுக்கொண்டால், இது குர்ஆனில் உள்ள வேறு பல வசனங்களோடு மோதுகின்றது, அதாவது அல்லாஹ்வைத் தவிர வேறு தெய்வங்கள் இல்லை என்றுச் சொல்லக்கூடிய வசனங்களோடு இது சண்டையிடுகின்றதே! ஒருவேளை, பல தெய்வங்கள் இருக்கிறார்கள், அவர்களை ஒன்று சேர்க்கும்படியாக அல்லாஹ் இருக்கின்றான் என்று சொல்லலாமா? தௌஹித் என்றால் இது தானே பொருள், பலவற்றை ஒன்றாக மாற்றுதல் என்பது தான் தௌஹித். இதனை ஏற்றுக்கொண்டால், ஒன்றுக்கும் அதிகமான தெய்வங்கள் இருப்பதாக பொருள் வந்துவிடுமே! இது கூட குர்ஆனின் இதர வசனங்களுக்கு எதிராக பேசுகின்றதே!
இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இதே குற்றச்சாட்டை அன்று பலதெய்வ வழிப்பாட்டு மக்கள் முஹம்மது மீது சுமத்தினார்கள், அதாவது முஹம்மது பல தெய்வங்களை ஒரு தெய்வமாக மாற்றுகிறார் என்று அவர்கள் குற்றம் சாட்டினார்கள், பார்க்க குர்ஆன்: 38:5
38:5. "இவர் (எல்லாத்) தெய்வங்களையும் ஒரே நாயனாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயமே! (என்றும் கூறினர்).(முஹம்மது ஜான் தமிழாக்கம்)
38:5. என்ன, இவர் அத்தனை கடவுளருக்கும் பகரமாக ஒரே கடவுள்தான் என்று ஆக்கிவிட்டாரா? இது மிகவும் வியப்புக்குரிய விஷயம்தான்!" (IFT – தமிழாக்கம்)
38:5. கடவுள்களை ஒரே கடவுளாக ஆக்கி விட்டாரா? இது வியப்பான செய்தி தான்.'(பிஜே தமிழாக்கம்)
"Say: He is Allah, one of many who have always existed as God."
அல்லது
ஒரே கடவுளாக எப்போதும் ஒன்றாக இருந்த பல தெய்வங்களில் இவரும் ஒருவரா?
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பல தெய்வங்கள் ஒன்றாக சேருவது ஒற்றுமையல்ல, உண்மையாக தெய்வங்களாக இருந்தவர்கள் ஒன்றாக சேருவது தான் ஒற்றுமையாக இருக்கமுடியும். இதனை தெளிவாக்க கீழ்கண்டவற்றை படிக்கவேண்டும்:
"கூறுவீராக: அவன் அல்லாஹ், எப்போதும் இருக்கின்ற பல தெய்வங்களில் இவரும் ஒருவராவார்".
இதைத் தான் ஸுரா 112வது அத்தியாயம் கூறுகிறது. இப்போது இந்த முழூ அத்தியாயத்தையும் இங்கு மேற்கோள் காட்டுகிறோம். அதோடு கூட, அந்த அஹத் என்ற வார்த்தையின் உண்மையான பொருளோடு சேர்த்து தருகிறோம்.
112:1. (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் (அஹதுன் - மற்ற தெய்வங்களைப் போல அவனும்) ஒருவனே.
112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் (அவனைப்போன்று பன்முகத்தன்மையாக, பல தெய்வங்களில் ஒருவனாக, வேறு ஒருவரும்) இல்லை.
மேற்கண்ட ஸூராவில் நம்முடைய மொழியாக்கத்தை/விளக்கத்தை கொடுத்துள்ளோம். அந்த விளக்கம் அஹத் என்ற வார்த்தையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நாம் எழுதவில்லை. குர்ஆனின் அனேக வசனங்களின் அடிப்படையில் அதனை நாம் கொடுத்துள்ளோம். அதாவது அஹத் என்ற வார்த்தை குர்ஆனில் பயன்படுத்தப்பட்ட இடங்களில் "ஒன்றுக்கும் மேற்பட்ட தெய்வங்கள், மனிதர்கள் இருக்கும் ஒரு குழுவிலிருந்து ஒரு தெய்வத்தை அல்லது மனிதனை" குறிக்க அஹத் வார்த்தை குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு: அல்லாஹ்வின் ஆவி/ஆத்துமா கூட இறைவன் தான் என்று குர்ஆன் சொல்கிறது. இந்த ஆத்துமாவிற்கு ஒரு ஆள்தத்துவமும், இறைவனுக்கு இருக்கும் அனைத்து இயல்புகளும் உள்ளது என்று குர்ஆன் சொல்கிறது. இதைப் பற்றிய மேலதிக விவரங்களுக்காக கீழ்கண்ட ஆங்கில கட்டுரையை படிக்கவும்:
குர்ஆன், தான் சொல்ல வந்த செய்தியை, எல்லா இடங்களிலும் ஒரே விதமாக சொல்லவில்லை என்பதை இந்த கட்டுரையில் எடுத்துக்காட்டினோம். ஒளிவு மறைவு இன்றி, விருப்பு வெறுப்பு இன்றி, குர்ஆனின் வசனங்களை அவைகள் சொல்லும் பொருளில் பார்க்கும் போது, "குர்ஆன் குழப்புகிறது" என்பதை மட்டும் புரிந்துக்கொள்ள முடிகின்றது.
இறைவனின் இயல்பு பற்றி இவ்விதமாக குழப்பமான செய்தியைத் தரும் புத்தகம் எப்படி ஒரு இறைவேதமாக இருக்கும்.
மேலதிக விவரங்கள்:
அஹத் என்ற வார்த்தை பல வடிவங்களில் குர்ஆனில் 74 இடங்களில் வருகிறது, அவைகள் அனைத்தையும் கீழ்கண்ட பட்டியலில் தருகிறோம்.
இந்த பட்டியலை குர்ஆன் கார்பஸ் என்ற தளத்திலிருந்து எடுத்துள்ளோம், அதன் தொடுப்பு: http://corpus.quran.com/qurandictionary.jsp?q=AHd#(112:1:4)
ஆசிர்யர்: சாம் ஷமான்
ஆங்கில மூலம்: https://www.answering-islam.org/Shamoun/ahad.htm
தேதி: 25th Jun 2020
Source: https://www.answering-islam.org/tamil/authors/sam-shamoun/allah_ahad_q112.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக