முஹம்மது மற்றும் அல்லாஹ்வின் பார்வையில் பெண்கள் - புகாரி நூல் எண்: 304
கேள்வி: அதிக சாபமிடுபவர்கள், அறிவு மற்றும் மார்க்க கடமை குறைவு உள்ளவர்கள், கணவனுக்கு நன்றி கெட்டவர்கள், நரகத்தில் அதிகமாக உள்ளவர்கள் பெண்கள் என்று கூறியது யார்?
பதில்: உலகத்தின் மேன்மைக்காக அல்லாஹ் அனுப்பிய கடைசி தீர்க்கதரிசி மற்றும் முஸ்லிம்கள் அணுவணுவாக பின்பற்றும் முஹம்மது தான் இப்படி சொல்லியுள்ளார்.
முஹம்மது மற்றும் அல்லாஹ்வின் பார்வையில் பெண்கள் - புகாரி நூல் ஹதீஸை படமாக காட்டியுள்ளேன் காணுங்கள்:
புகாரி நூல் எண்: 304
304. 'ஹஜ்ஜுப் பெருநாளன்றோ நோன்புப் பெருநாளன்றோ தொழும் திடலிற்கு நபி(ஸல்) அவர்கள் சென்று கொண்டிருந்தபோது சில பெண்களுக்கு அருகே அவர்கள் சென்று, 'பெண்கள் சமூகமே! தர்மம் செய்யுங்கள்! ஏனெனில், நரக வாசிகளில் அதிகமாக இருப்பது நீங்களே என எனக்குக் காட்டப்பட்டது' என்று கூறினார்கள்.
'இறைத்தூதர் அவர்களே! ஏன்' என்று அப்பெண்கள் கேட்டதற்கு, 'நீங்கள் அதிகமாகச் சாபமிடுகிறீர்கள்; கணவனுக்கு நன்றி கெட்டவர்களாக இருக்கிறீர்கள்; மார்க்கக் கடமையும் அறிவும் குறைந்தவர்களாக இருந்து கொண்டு மன உறுதியான கணவனின் புத்தியை மாற்றி விடக்கூடியவர்களாக உங்களை விட வேறு யாரையும் நான் காணவில்லை' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியபோது 'இறைத்தூதர் அவர்களே! எங்களுடைய மார்க்கக் கடமையும் எங்களுடைய அறிவும் எந்த அடிப்படையில் குறைவாக உள்ளன' என்று பெண்கள் கேட்டனர்.
'ஒரு பெண்ணின் சாட்சி ஓர் ஆணின் சாட்சியில் பாதியாகக் கருதப்படவில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டததற்கு, 'ஆம்' என அப்பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் அவர்கள் அறிவு குன்றியவர்கள் என்பதைக் காட்டுகிறது; ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் ஏற்பட்டால் அவள் தொழுகையையும் நோன்பையும்விட்டு விடுவதில்லையா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கும் 'ஆம்!' எனப் பெண்கள் பதில் கூறினர். 'அதுதான் பெண்கள் மார்க்கக் கடமையில் குறைவானவர்களாக இருக்கின்றனர் என்பதற்கு ஆதாரமாகும்' என்று நபி(ஸல்) கூறினார்கள்' என அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய விவரம்:
தனிப்பட்ட முறையிலே, அக்காள் தங்கை, அண்ணன்களோடு ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்து, கூட்டுக்குடும்பத்தில் வளர்ந்த ஒரு நபராக, முஹம்மதுவின் மேற்கண்ட கூற்றை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பெரியம்மா, சின்னம்மா, அண்ணி என்று பல உறவுகளில் வாழ்ந்து, என்னைச் சுற்றியுள்ள பெண்களை கவனித்து பார்த்ததில், முஹம்மதுவின் கூற்றில் உண்மையில்லை என்று சொல்லமுடியும்.
பொதுவாக சில பெண்களிடத்தில் ஓரிரு கெட்ட குணங்கள் இருக்கும், இதே போன்று சில ஆண்களிடத்திலும் சில கெட்ட குணங்கள் இருக்கும். ஆனால், "உங்களில் சிலர் இப்படி உண்டு" என்றுச் சொல்வதை விட்டுவிட்டு, ஒட்டுமொத்த பெண் இனத்தை விமர்சிப்பது நபிக்கு அழகல்ல.
ஆண்கள் அனைவரும் வக்கிர புத்தி கொண்டவர்கள், பெண்களை மோகப்பொருளாகவே ஆண்கள் பார்க்கிறார்கள் என்று ஒட்டுமொத்த ஆண் இனத்தின் மீது குற்றம் சுமத்தினால் 'அது சரியான கூற்றாக இருக்குமா'?
ஒருவேளை முஹம்மதுவைச் சுற்றியிருந்த அவரது மனைவிகள், சொந்தங்கள், தாய்மார்கள், அக்காமார்கள், அண்ணிமார்கள், பெரியம்மா, சின்னம்மா மற்றும் சஹாபாக்களின் மனைவிகள் போன்ற பெண்கள் அவருடைய கண்களுக்கு மேற்கண்ட குணங்களை உடையவர்களாக இருந்திருக்கலாம். அதற்காக, அவர் உலகத்தில் பிறக்கும் எல்லா பெண்களும் இப்படி இருப்பார்கள் என்று எண்ணுவது அறிவுடமையன்று.
இதனை முஸ்லிம் பெண்கள் வன்மையாக கண்டிக்கவேண்டும். முஹம்மதுவின் கூற்றில் உண்மையில்லை என்று நம்புகிற முஸ்லிம் ஆண்களும் கண்டிக்கவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக