ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

செவ்வாய், 9 ஜூன், 2020

Fwd: சின்னஞ்சிறு கேள்வி பதில்கள் 1000: பாகம் 12 - முஹம்மது (331 - 360)


சின்னஞ்சிறு கேள்வி பதில்கள் 1000: பாகம் 12 - முஹம்மது (331 - 360)

முந்தைய 330 கேள்வி பதில்களை படிக்க இங்கு சொடுக்கவும். 

"முஹம்மது" என்ற தலைப்பின் முந்தைய 30 கேள்வி பதில்களை படிக்க இங்கு சொடுக்கவும். இந்த கட்டுரையில் "முஹம்மது" என்ற தலைப்பில் இன்னும் 30 புதிய கேள்வி பதில்களைக் காண்போம். 


சின்னஞ்சிறு கேள்வி பதில்கள் - முஹம்மது (331 - 360)

கேள்வி 331: எங்கள் நபி முஹம்மது அவர்கள் சொன்னவைகளில் உங்களுக்கு பிடித்தமான கட்டளைகளை மட்டும் நீங்கள் பின்பற்றலாமே! ஏன் அவரை முழுவதுமாக புறக்கணிக்கிறீர்கள்?

பதில் 331:  அருமை முஸ்லிம் நண்பரே, பிடித்தமான கட்டளைகளை பின்பற்றுவதற்கு, அல்லது பிடிக்காதவற்றை விட்டுவிடுவதற்கு முஹம்மது என்ன சினிமா நடிகரா?  முஹம்மது என்பவர் இறைவனுடைய வழியைக் காட்டக்கூடிய இடத்தில் இருக்கிறார். நம்முடைய நித்திய வாழ்க்கை யார் மீது சார்ந்துள்ளதோ, அவர் காட்டும் வழி முழுமை அடைந்த ஒன்றாக இருக்கவேண்டும்.

முஹம்மது காட்டும் வழிகளில் சிலவற்றை பின்பற்றி, சிலவற்றை பின்பற்றாமல் இருப்பதற்கு அவர் உலகப்பிரகாரமான தலைவர் அல்ல. அவர் ஒரு ஆன்மீகத் தலைவர், எனவே அவரை நாம் பின்பற்றினால் 100% பின்பற்றவேண்டும் அல்லது 100% புறக்கணிக்கவேண்டும்.

கேள்வி 332: இஸ்லாமின் பெயரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை பார்த்து, இஸ்லாமை எடை போடாதீர்கள், முஹம்மதுவின் செயல்களைப் பார்த்து எடை போடுங்கள்.

பதில் 332: இது சரியான கூற்றாகும்.

இஸ்லாமை நாம் முஹம்மதுவின் செயல்களின் அடிப்படையில் எடை போடவேண்டும். முஹம்மதுவின் செயல்களை அடிப்படையாகக் கொண்டு எடைபோடும் போது 'இஸ்லாம் ஒரு வன்முறை மார்க்கம்' என்று நிருபிக்கப்படுகின்றது என்பது தான் முஸ்லிமல்லாத உலக மக்களின் குற்றச்சாட்டு.

முதலாவதாக,  இஸ்லாமின் அடிப்படையாக கருதப்படும் முஹம்மதுவின் வாழ்க்கையை ஆய்வு செய்யும் போது, மேற்கண்ட நிலைப்பாட்டுக்குத் தான் வரவேண்டியுள்ளது.

இரண்டாவதாக, "குர்‍ஆன் மற்றும் ஹதீஸ்களின்" அடிப்படையில் இஸ்லாமை எடைபோடுகிறோம். குர்‍ஆனிலும், ஹதீஸ்களிலும் கட்டளையிடப்பட்டவைகள் இன்றைய நவீன உலகிற்கு ஏற்றதாக உள்ளதா? மனித சமுதாயத்தை அடுத்த நிலைக்கு அவைகள் கொண்டுச் செல்கின்றனவா? அவைகளை பின்பற்றினால் நாட்டில்  வீட்டில் அமைதி நிலவுமா? போன்ற கேள்விகள் கேட்கப்பட்டு, அவைகளில் பதில்களைத் தேடி, அவைகளின் அடிப்படையில் இஸ்லாமை எடை போடுகிறோம்.

மூன்றாவதாக‌, முஹம்மதுவிற்கு பிறகு ஆட்சி புரிந்த நான்கு  கலிஃபாக்களின் செயல்களை கவனிக்கும் போது, அவர்கள் நாடுகளை பிடிக்க காட்டிய ஆர்வம், ஆன்மீகத்தில் காட்டவில்லை என்று சரித்திரம் சாட்சியிடுகிறது.

படம் 1: இஸ்லாமை எதன் அடிப்படையில் எடை போடுவது

நான்காவதாக,  இன்றைய தேதிகளில் இஸ்லாமின் பெயரில் பயங்கரவாத செயல்களை செய்பவர்களை கவனிக்கும் போது, அவைகள் முஹம்மதுவின் செயல்களோடு ஒத்துப்போகிறதை பார்க்கமுடியும்.  முஹம்மதுவின் வாழ்க்கையை கணக்கில் கொண்டுவிட்ட பிறகு, இன்றைய முஸ்லிம்களின் வாழ்க்கையை கணக்கில் கொள்ளத்தேவையில்லை, இவ்விரண்டும் ஒன்று தான்.

ஆக, இன்றைய முஸ்லிம்களின் செயல்பாடுகள், இரண்டாம் தரம் தான். குர்‍ஆனும், முஹம்மதுவும் முதல் நான்கு கலிஃபாக்களும் தான் இஸ்லாமை சரியான வெளிச்சத்தில் காட்டக்கூடிய கண்ணாடிகள்.

கேள்வி 333:  யூதர்கள் முஹம்மதுவை நபி (தீர்க்கதரிசி) என்று நம்புகிறார்களா?

பதில் 333: எந்த யூதர்கள்? முஹம்மதுவின் கால யூதர்களா? அல்லது இன்றைய யூதர்களா?

முஹம்மதுவின் காலத்தில் ஒரு சில யூதர்கள் இஸ்லாமை தழுவி அவரோடு இருந்தார்கள். ஆனால்,பெரும்பான்மையான யூதர்கள் முஹம்மதுவை நபி என்று நம்பவில்லை.

இதற்கு காரணமென்ன?

1) முஹம்மதுவின் நபித்துவத்தை நிரூபிக்கும் படி, 'அற்புதங்கள் தேவை' என்று யூதர்கள் கேட்டார்கள், ஆனால், முஹம்மதுவோ, அல்லாஹ்வோ அற்புதங்களை செய்துக் காட்டவில்லை

முஹம்மது வாழ்ந்த அந்த ஏழாம் நூற்றாண்டில், மக்கா மற்றும் மதினா பகுதிகளில்  குறைஷிகள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இதர மக்கள் வாழ்ந்தனர். இம்மக்களுக்கு 'தாம் ஒரு நபி' என்று முஹம்மது நிரூபிக்கவேண்டி இருந்தது. 

அன்றைய யூதர்களின் நிலை:

'முஹம்மதுவை நபி' என்று யூதர்கள் நம்பவேண்டுமென்றால், அவர் முந்தைய நபிகளைப்போல அற்புதங்கள் செய்யவேண்டுமென்று அவர்கள் கேட்டனர், இதனை அல்லாஹ் குர்-ஆனில் கீழ்கண்டவாறு சொல்லிக்காட்டுகின்றான். மேலும் 'நான் ஒரு மனிதன் மட்டுமே' இப்படிப்பட்ட அற்புதங்கள் செய்யமுடியாது என்று யூதர்களுக்கு பதிலாகச் சொல்லும் படி முஹம்மதுவிற்கு கட்டளையிடுகின்றான். 

குர்-ஆன் 17:90-93

17:90. இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்: "நீர் எங்களுக்காகப் பூமியிலிருந்து ஒரு நீர் ஊற்றைப் பீறிட்டு வரும்படி செய்யும் வரையில், உம் மீது நாங்கள் நம்பிக்கை கொள்ள மாட்டோம்.  17:91. "அல்லது பேரீச்சை மரங்களும், திராட்சைக் கொடிகளும் (நிரப்பி) உள்ள தோட்டம் ஒன்று உமக்கு இருக்க வேண்டும். அதன் நடுவே ஆறுகளை நீர் ஒலித்தோடச் செய்ய வேண்டும். . . . . . 17:93. "அல்லது ஒரு தங்கமாளிகை உமக்கு இருந்தாலன்றி (உம் மீது நம்பிக்கை கொள்ளோம்); அல்லது வானத்தின் மீது நீர் ஏறிச் செல்ல வேண்டும், (அங்கிருந்து) எங்களுக்காக நாங்கள் படிக்கக் கூடிய ஒரு (வேத) நூலை நீர் கொண்டு வந்து தரும் வரையில், நீர் (வானத்தில்) ஏறியதையும் நாங்கள் நம்ப மாட்டோம்" என்று கூறுகின்றனர். "என் இறைவன் மிகத் தூயவன், நான் (இறைவனுடைய) தூதனாகிய ஒரு மனிதனே தவிர வேறெதுவுமாக இருக்கின்றேனா?" என்று (நபியே! நீர் பதில்) கூறுவீராக.  (முஹம்மது ஜான் தமிழாக்கம்)

யூதர்கள் தன்னை நபியாக ஏற்கவில்லை என்ற கோபத்தினால்: 

  1. எருசலேமை நோக்கி  (கிப்லா) முஸ்லிம்கள் அதுவரை தொழுதுக்கொண்டு வந்திருந்தனர், அதனை மக்காவிற்கு மாற்றினார் முஹம்மது.
  2. அரேபியாவில் இருந்த யூத இனக்குழுக்கள் மீது திடீர் தாக்குதல் செய்து அவர்களை அடிமைகளாக்கி, கொன்று குவித்து மற்றும் ஊரை விட்டு துரத்தினார்.
  3. இப்படி முஹம்மதுவினால் தன் குடும்பத்தை இழந்த ஒரு பெண், உணவில் விஷம் வைத்து முஹம்மதுவிற்கு கொடுத்துவிட்டாள்.

இன்றைய யூதர்களின் நிலை:

இன்றைய யூதர்கள் அன்றைய யூதர்களைவிட புத்திசாலிகளாக இருக்கிறார்கள். மேலும், இஸ்லாமிய நாடுகளும், முஸ்லிம்களும் இஸ்ரேல் நாட்டுக்கு எதிராக இருப்பதினால், இவர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். முஹம்மதுவை நபி என்று இவர்கள் நம்புவதில்லை.

கேள்வி 334: முஹம்மதுவின் மனைவிகள் பெயர்கள் யாவை? முஹம்மது திருமணங்கள் செய்த போது அவரது வயது என்னவாக இருந்தது?

பதில் 334: கீழ்கண்ட அட்டவணையில் முஹம்மதுவின் 11 மனைவிகளின் பெயர்களும், அவர்களின் திருமண ஆண்டுகளும், மேலும் முஹம்மதுவின் வயதும் கொடுக்கப்பட்டுள்ளது.

கேள்வி 335: முஹம்மது செக்ஸ் அடிமைகள் (வைப்பாட்டிகள்) வைத்திருந்தாரா? எங்கள் நபி இப்படி செய்யமாட்டார்!

பதில் 335: முஹம்மதுவிற்கு வைப்பாட்டிகள்  இருந்தனர்.

செக்ஸ் அடிமைகளை வைத்துக்கொள்வது என்பது குர்‍ஆனுக்கு  எதிரானது அல்ல. குர்‍ஆனே இதற்கு அனுமதி அளித்துள்ளது.

இப்னு கய்யிம் (Ibn al-Qayyim) என்ற இஸ்லாமிய சரித்திர ஆசிரியர், முஹம்மதுவிற்கு நான்கு பெண் அடிமைகள் இருந்ததாகவும், 27 ஆண் அடிமைகள் இருந்ததாகவும் கூறுகிறார். இந்த ஆண் அடிமைகளில் சிலரை அவர் விடுதலையும் செய்துள்ளார்.

1) ரெஹானா பிந்த் ஜைத் இப்னு அமர்:

கி.பி. 627ல் பனு குரைய்ஜா என்ற யூத குனக்குழுவினரை முஹம்மது தாக்கி, 600 லிருந்து 900 வரையுள்ள ஆண்களை கொன்றார்.  அவர்களின் பெண்கள் மற்றும் பிள்ளைகளை அடிமைகளாக எடுத்துக்கொண்டார். இந்த நேரத்தில் அந்த யூத இனக்குழுவினரின் தலைவரின் மனைவியாகிய ரிஹானாவை தன் வைப்பாட்டியாக (செக்ஸ் அடிமையாக) எடுத்துக்கொண்டார்.

சில முஸ்லிம்களின் கூற்றுப்படி, ரிஹானாவை முஹம்மது திருமணம் செய்துக்கொள்ள கேட்டதாகவும், ஆனால் ரிஹானா மறுத்துவிட்டு, ஒரு யூதப்பெண்ணாகவே வாழ்ந்தார் என்றும் கூறுகிறார்கள். இன்னொரு இஸ்லாமிய கூற்றுப்படி, ரிஹானா முஹம்மதுவை திருமணம் செய்துக்கொண்டதாகவும்,  ரிஹானாவின் விடுதலை தான் முஹம்மது கொடுத்த மஹர் என்றும் கூறுகிறார்கள்.

2) மரியா பிந்த் ஷமூன் அல் குப்தியா

மரியா எகிப்திலிருந்து முஹம்மதுவுக்கு பரிசாக அனுப்பப்பட்ட ஒரு காப்டிக் பெண்ணாவாள். இந்த பெண்ணுக்கும் முஹம்மதுவிற்கும் ஒரு மகன் பிறந்தான் (இப்றாஹீம்), ஆனால் அக்குழந்தை  இரண்டு வயதில் இறந்தார். முஹம்மது மரியாவை திருமணம் செய்துக்கொள்ளவில்லை, ஆனால், அவரோடு உடலுறவு கொண்டார்.

இதைப் பற்றி மேலும் அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்.

3) அல் ஜரியா

இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் இப்னு அல் கய்யும் (Ibn al-Qayyim, Za'd al-Ma'ad 1:114.)  என்பவரின் படி, ஜரியா 'ஜைனப் பிந்த் ஜாஷ்' இன் அடிமையாக இருந்தார். அவர் முஹம்மதுவிற்கு வைப்பாட்டியாக இருந்தாராம். மேலும், மற்ற மனைவிகளிடம் போவது போன்று ஒரு குறிப்பிட்ட நாளை இப்பெண்ணுக்காக அவர் ஒதுக்கவில்லையாம். தேவைப்படும் போது முஹம்மது இப்பெண்ணோடு உடலுறவு கொண்டுள்ளார்.

4) துகனா அல் குறைஜியா

முஹம்மது குறைய்ஜா மக்களை ஆக்கிரமித்த போது, இந்த பெண்ணை தன்னுடைய அடிமையாக எடுத்துக்கொண்டார். இப்பெண்ணும் அவருடைய வலக்கரத்து சொந்தமான செக்ஸ் அடிமையாவாள். தனக்கு தேவைப்படும் போதும் இப்பெண்ணிடம் முஹம்மது சென்றுள்ளார். முஹம்மது மரித்த பிறகு இந்த பெண்ணை அப்பாஸ் அவர்கள் திருமணம் செய்துக்கொண்டுள்ளார்கள்.

Wikipedia: Abbas ibn Abd al-Muttalib: 

"Tukana, a Jewish woman from the Qurayza tribe and a former concubine of Muhammad, whom Abbas married after 632.[21] It is not known whether any of the children were hers." Source: en.wikipedia.org/wiki/Abbas_ibn_Abd_al-Muttalib

கேள்வி 336: எத்தனை பெண்களோடு முஹம்மது திருமணம் ஒப்பந்தம் செய்துக்கொண்டு, பிறகு சில காரணங்களுக்காக ஒப்பந்தங்களை முறித்துப்போட்டார்?

பதில் 336:  முஹம்மதுவிற்கு 11 மனைவிகள் இருந்தார்கள் என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.  மேலும் இப்னு கய்யிம் என்ற சரித்திர ஆசிரியரின் படி 4 பெண் அடிமைகள் இருந்ததாக அறிகிறோம். 

இவைகளை விடுத்து, இன்னும் பல திருமணங்கள் புரிவதற்கு  முஹம்மதுவிற்கு ஒப்பந்தங்கள் வந்தன, அவைகளை அவர் ஒப்புக்கொண்டார், ஆனால் திருமணத்திற்கு முன்பாக சில காரணங்களுகாக அந்த திருமண ஒப்பந்தங்களை அவர் முறித்துப்போட்டார்.

இப்படி முஹம்மது எத்தனை திருமண ஒப்பந்தங்களை  முறித்தார்?  போன்ற விவரங்களை காண்போம் (இந்த விவரங்களை இஸ்லாமிய சரித்திர நூல்களிலிருந்தும், ஹதீஸ்களிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளது: 

மூலம்: wikiislam.net/wiki/List_of_Muhammads_Wives_and_Concubines

கேள்வி 337: முஹம்மது திருமண ஒப்பந்தங்களை முறித்ததற்கு காரணங்கள் யாவை?

பதில் 337: முந்தைய கேள்வியில் முஹம்மது முறித்த 11 திருமண ஒப்பந்த பட்டிலைக் கண்டோம். இந்த பதிலில் அவைகளுக்கான காரணங்களைக் காண்போம்.

1) கஜியா -  Ghaziya (Umm Sharik) bint Jabir

இப்பெண் ஒரு ஏழை விதவையாக இருந்தார், இவருக்கு பிள்ளைகளும் இருந்தனர். இவர் முஹம்மதுவுக்கு திருமண செய்ய தன் விருப்பத்தை தெரித்து அவருக்கு ஒப்பந்த முன்மொழிவை அனுப்பினார். முஹம்மது இந்த ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்டார். இருப்பினும், அவர் அப்பெண்ணை நேரில் சந்தித்தபோது, அவர் கவர்ச்சிகரமானவராக இருந்தாலும், அவர் "வயதானவர்" என்பதைக் கண்டார், முஹம்மது உடனடியாக அவளை விவாகரத்து செய்தார், அதாவது தன் முந்தைய ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டார். அப்பெண் கடைசிவரை மறுமணம் செய்து கொள்ளவில்லை.  இந்த நிகழ்ச்சியின் போது (கிபி 627) முஹம்மதுவின் வயது 57 ஆகும். (மூலம்:  தபரி, இப்னு ஹிஷாம் மற்றும் இப்னு ஸைத் - Ibn Hisham[68], Al-Tabari[69], Ibn Sa'd[70])

சிந்திக்க சில கேள்விகள்:

  1. ஏற்கனவே முஹம்மதுவிற்கு நான்கு/ஐந்து மனைவிகள் இருந்துள்ளார்கள், இருந்தபோதிலும் இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய இவருக்கு விருப்பமிருந்துள்ளது.
  2. முஹம்மதுவிற்கு 57 வயது, இருந்தபோதிலும் இவருக்கு இளமையான மனைவி தேவையாக இருந்துள்ளது.
  3. அந்த பெண்ணுக்கு வறுமையின் நிர்பந்தம், தன் பிள்ளைகளுக்கு உண்வு/உடை/இருப்பிடம் மற்றும் பாதுகாப்பிற்காக திருமணம் தேவைப்பட்டுள்ளது, ஆனால் முஹம்மதுவிற்கு ஏற்கனவே சில மனைவிகள் இருந்த போதும் ஏன் இன்னும் திருமணம் செய்ய ஆசை?
  4. முஹம்மதுவின் ஒவ்வொரு திருமணத்திற்கும் ஒரு அரசியல் காரணம் இருக்கும் என்று முஸ்லிம்கள் கூறுவார்கள், இந்த பெண்ணை திருமணம் செய்ய முஹம்மது ஒப்புக்கொண்டதற்கு எந்த அரசியல் காரணம் நமக்கு கிடைக்கும்?
  5. ஒரு வேளை அப்பெண்ணின் அனாதை பிள்ளைகளுக்கு ஆதரவு அளிப்பதாக நினைத்தாலும், அப்பெண்ணுக்கு வயதாகிவிட்டது என்று ஏன் முஹம்மது புறக்கணித்தார்?
  6. கவனிக்கவும், முஹம்மதுவிற்கு 57 வயது ஆகியிருந்தது, அந்தப்பெண் "வயதானவர்" என்று சரித்திரம் கூறுவதினால், அப்பெண்ணுக்கு ஒருவேளை 57க்கும் அதிகமான வயது இருக்குமோ என்று எண்ணவேண்டாம். முஹம்மது திருமணம் செய்துக்கொண்ட அனைவரும் 9 வய‌திலிருந்து 40 வயதுக்குள்ளானவர்கள் தான். ஒரு வேளை இப்பெண்ணின் வயது 40க்கும் 50க்கும் இடையே இருக்கும், எனவே இவருக்கு பிடிக்கவில்லை. தனக்கு மட்டும் 57 வயது இருக்கும் போது இளம் கட்டழகிகள் தேவையான இருந்துள்ளது.

2)  கௌலா - Khawla bint Hudhayl

இப்பெண் வடக்கு அரேபியாவில் சக்திவாய்ந்த கிறிஸ்தவ தக்லிப் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு மன்னனின் மகள் (இளவரசி). இப்பெண்ணின் பெரியப்பா (அ) சித்தப்பா இத்திருமணத்தை ஏற்பாடு செய்தார். இது இரு தரப்பிலும் அரசியல் ரீதியாக சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முஹம்மது இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், ஆனால் அவர்கள் நேரில் சந்திப்பதற்கு முன்பு கௌலா மதீனாவிற்கு செல்லும் பயணத்தின் போது இறந்துவிட்டாள்.

இப்பெண் இயற்கையாக மரித்துவிட்டதால் முஹம்மதுவின் திருமணம் ஒப்பந்தம் இயற்கையாக முறிந்துவிட்டது. (மூலம்:  தபரி,  இப்னு ஸைத் - Al-Tabari[69], Ibn Sa'd[70])

3) ஷரஃப் - Sharaf bint Khalifa

இவர் கௌலாவின் அத்தையாவாள் (மேலே பார்த்த கௌலா). கௌலா இறந்த பிறகு, அவர்களின் குடும்பத்தினர் ஷரப் என்ற இப்பெண்ணை கௌலாவிற்கு பதிலாக முஹம்மதுவிற்கு திருமணம் செய்ய முயற்சித்தனர். ஒரு இஸ்லாமிய பாரம்பரியத்தின் படி, ஷரப் என்ற இந்த பெண்ணும், திருமணத்திற்கு முன்பே இறந்துவிட்டார். மற்றொரு இஸ்லாமிய பாரம்பரியத்தில், முஹம்மது தனது எண்ணத்தை மாற்றி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டார் என்று கூறப்படுகின்றது. (மூலம்:  தபரி,  இப்னு ஸைத் - Al-Tabari[69], Ibn Sa'd[70])

4) லைலா - Layla bint al-Khutaym

இஸ்லாமிய சரித்திர அறிஞர் தபரி "The History of Al-Tabari: The Last Years of the Prophet " என்ற முஹம்மதுவின் சரித்திரத்தில் கீழ்கண்ட நிகழ்ச்சியை குறிப்பிடுகிறார்.

முஹம்மது தெருவில் நடந்துச் சென்றுக்கொண்டு இருக்கும்போது, லைலா என்ற ஒரு பெண் அவருக்கு பின்னால் சென்று பின்பக்கத்திலிருந்து அவரது தோல்பட்டையில் தட்டுகிறாள். அவர் திரும்பி பார்த்ததும். என்னை திருமணம் செய்துக்கொள்கிறாயா? என்று கேட்கிறாள். அதற்கு "நான் உன்னை திருமணம் செய்துக்கொள்கிறேன்", என்றுச் சொல்லி தன் சம்மதத்தை முஹம்மது அளிக்கிறார். இந்தப் பெண் மறுபடியும் தன் ஜனங்களிடம் சென்று "முஹம்மதுவை நான் திருமணம் செய்துக்கொள்கிறேன், அவர் இதற்கு சம்மதம் என்று கூறினார்" என்று கூறுகிறாள். இதற்கு அம்மக்கள் "நீ ஒரு நல்ல குடும்பத்துப் பெண், ஆனால் முஹம்மது ஒரு பெண் பித்து பிடித்தவர்", இப்படிப்பட்டவரை நீ திருமணம் செய்துக்கொள்வது சரியானது அல்ல. எனவே, அவரிடம் சென்று, இந்த திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்றுச் சொல்லி, அவரிடமிருந்து விலகி வந்துவிடு" என்று கூறினார்கள். இந்தப் பெண்ணும் அப்படியே முஹம்மதுவிடம் சென்று, தனக்கு விருப்பமில்லை, இந்த ஒப்பந்தத்தை முறித்துவிடுங்கள் என்று கூறுகிறாள், முஹம்மதுவும் இதற்கு ஒப்புதல் அளித்துவிடுகிறார். 

Source: (The History of Al-Tabari: The Last Years of the Prophet, translated and annotated by Ismail K. Poonawala [State University of New York Press, Albany, 1990], Volume IX, p. 139; bold emphasis ours)

இந்த லைலா நிகழ்ச்சி பற்றிய முழு விவரங்களை அறிய கீழ்கண்ட தமிழ் கட்டுரையை படிக்கவும்: முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?

5) உம் ஹபீப் - Umm Habib bint Al-Abbas (AD 630)

இப்பெண் முஹம்மதுவின் உறவினர். இப்பெண் குழந்தையாக இருந்த நேரத்தில் (1 வயது இருக்கலாம்), தவழ்ந்து வந்துக்கொண்டு இருந்தார், இதைப் பார்த்த முஹம்மது: "இவள் வளர்ந்து பெரியவள் ஆகும் போது, நான் உயிருடன் இருந்தால், நான் இவளை திருமணம் செய்து கொள்வேன்" என்று குறிப்பிட்டார்.

அதன் பிறகு அக்குழந்தையின் தந்தை, இவருக்கு  சகோதரர் முறை (foster-brother) என்பதால் மனதை மாற்றிக்கொண்டார், இது மட்டுமல்லாமல் சில ஆண்டுகளில் முஹம்மது மரித்துவிட்டார். (மூலம்: இப்னு இஷாக்,  தபரி மற்றும் இப்னு ஸைத் - Ibn Ishaq[77], Al-Tabari[69], Ibn Sa'd[70])

சிந்திக்க சில கேள்விகள்:

1) முஹம்மதுவிற்கு 60 வயது ஆகிறது, அப்போது ஒரு சொந்தக்காரர் வீட்டில் ஒரு வயது குழந்தை தவழ்ந்து விளையாடிக்கொண்டு இருப்பதைப்  பார்த்த போது முஹம்மது கூறியதை கண்டீர்களா?

2) குழந்தைகளைப் பார்த்தல், எடுத்து முத்தம் கொடுக்கத் தோன்றும் இது சாதாரணமானதே, ஆனால், நம் இஸ்லாமிய இறைத்தூதர் என்ன செய்தார்? அக்குழந்தை வளர்ந்து  பெரியவள் ஆகும் போது, இவர் திருமணம் செய்துக்கொள்வாராம். இது சும்மா வேடிக்கையாகச் சொல்லப்பட்டதல்ல, முஹம்மது உயிரோடு இருந்திருந்தால், அல்லது அக்குழந்தையின் தந்தை வேறு நபராக இருந்திருந்தால், தனக்கு  70 வயது ஆகியிருந்தாலும் சரி, அந்த 9 வயது சிறுமியை (பெரியவளாகி இருந்தால்) திருமணம் செய்து இருந்திருப்பார் முஹம்மது.

3) இப்படிப்பட்ட அருமையான எடுத்துக்காட்டு வாழ்க்கையை முஹம்மது வாழ்ந்ததால் தான், இன்றும் முஸ்லிம் நாடுகளில் 70+ வயதான முஸ்லிம்கள், சிறுமிகளை திருமணம் செய்துக்கொள்ளும் நிகழ்ச்சிகளை பார்க்கமுடிகிறது. இப்படிப்பட்ட சமுதாய‌ கொடுமைகளுக்கு விதை போட்டது, முஹம்மது ஆவார்.

4) இதனால் தான் மற்ற முஸ்லிம்கள் (80 வயது கிழவன் வந்தாலும் சரி) வீட்டுக்கு வரும் போது, தன் ஒரு வயது குழந்தைக்கும்  புர்கா, நிகாஃப் போட்டு உடலை முழுவதுமாக மறைக்கிறார்கள் இன்றைய முஸ்லிம்கள். தவழும் குழந்தையைப் பார்த்தும் சபலம் கொள்ளும் முஹம்மது போன்று மற்ற ஆண்களும் இருப்பார்கள் என்று எண்ணி இப்படி முஸ்லிம்கள் செய்கிறார்கள்.

5) நாம் சாலையில்  செல்லும்போது, கைக்குழந்தைக்கும் புர்கா போட்டு, நிகாஃப் போட்டு, வெறும் கண்கள் மட்டும் தெரியும் வண்ணம் உடை அணிவித்து முஸ்லிம்கள் குடும்பமாக செல்வதை கண்டு இருப்பீர்கள், இது ஏன் என்று இப்போது உங்களுக்கு புரிகின்றதா? இப்படிப்பட்ட அவல நிலைக்கு அனேக குடும்பங்கள் குழந்தைகள் முஸ்லிம் நாடுகளில் பலியாகின்றன.

6) ஸனா - Sana al-Nashat bint Rifaa (Asma) ibn As-Salt

முஹம்மதுவின் போராளி ஒருவரின் மகள் தான் இவர். இவர் தன் மகள் ஸனாவை முஹம்மதுவிற்கு திருமணம் செய்யக்கொடுத்து, அவருக்கு  மாமனார் ஆகிவிடலாம் என்று எண்ணினார். மேலும் இதன் மூலம் முஹம்மதுவிற்கு நெருங்கிய‌ உறவினர் ஆகிவிடலாம், தன் வாழ்க்கைத் தரமும் இதனால் உயருமென்று விரும்பினார். முஹம்மதுவும் இந்த திருமண ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் திருமணத்திற்கு முன்பு ஸமா மரித்து விட்டார், இதனால் முஹம்மதுவின் மனைவியாகும் வாய்ப்பை இழந்தார்.

இந்த திருமண ஒப்பந்தமானது, முஹம்மதுவிற்கு 60 வயதின் போது நடந்தது.

7) உம்ரா - Umra bint Rifaa

இந்த உம்ரா என்பவர் மேலே கண்ட ஸனாவின் சகோதரி ஆவார். ஸானா இறந்த பிறகு, அவளின் தந்தை உம்ராவை முஹம்மதுவிற்கு திருமணம் செய்ய ஆர்வம் காட்டினார். இந்த திருமணத்தையும் முஹம்மது ஒப்புக்கொண்டார்(திருமண பேச்சு வந்தால், இல்லை என்று முஹம்மது சொல்லவே மாட்டாரா?). ஆனால் பின்னர் அவர் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டார், ஏனென்றால் "உம்ரா தனது வாழ்க்கையில் ஒரு நாள் கூட நோய்வாய்ப்படவில்லை என்று" அவளின் தந்தை பெருமையாக கூறினார். 

8) பிந்த் ஜுந்தப் - Bint Jundub ibn Damra of Janda'a

முஹம்மது இப்பெண்ணோடு திருமண ஒப்பந்தம் செய்துக்கொண்டார், ஆனால் திருமண நாளுக்கு முன்பு முஹம்மது திருமண ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டார் என்பதைத் தவிர இந்த பெண்ணைப் பற்றி வேறு எதுவும் தெரியவில்லை.

9) ஜம்ரா -Jamra bint Al-Harith

இப்பெண் முஹம்மதுவை திருமணம் செய்துக்கொள்வதாக கேட்டாள், முஹம்மதுவும் இவளை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார். இதன் பிறகு இப்பெண்ணின் தந்தை முஹம்மதுவிடம், 'என் மகளுக்கு ஒரு தீராத நோய் உள்ளது' என்று கூறினார். அதன்பின் முஹம்மது நிச்சயதார்த்தத்தை முறித்துக் கொண்டார். முஸ்லீம் வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, அப்பெண்ணின் தந்தை இப்படி முஹம்மதுவிடம் சொல்லிவிட்டு, வீட்டிற்குச் சென்றார், அப்போது அவரது மகள் தொழுநோயால் பாதிக்கப்பட்டதைக் கண்டார் என்று சொல்கிறார்கள்.

இந்த முஸ்லிம் அறிஞர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்றால், "முஹம்மதுவோடு தன் மகளுக்கு திருமணம் நடக்க விரும்பாத அப்பெண்ணின் தகப்பன், முஹம்மதுவிடம் பொய் சொன்னான், ஆனால் அவர் வீட்டிற்குச் சென்ற போது அப்பெண்ணுக்கு அந்த நோயை அல்லாஹ் கொடுத்தான்" என்று சொல்ல வருகிறார்கள்.

அறுபது வயது நிரம்பிய தன் நபிக்கு பெண் கொடுக்க விருப்பாதபடியினால் தான் அல்லாஹ் அந்த நோயை கொடுத்தான் என்றுச் சொல்வது எவ்வளவு கீழ்தரமாக உள்ளது பாருங்கள்.

10) அல்-ஷன்பா - Al-Shanba' bint Amr

இவர் ஒரு அரேபிய பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண். இவர் முஹம்மதுவுடன் நட்பாக இருக்க விரும்பினார். திருமணம் செய்யவும் ஒப்பந்தம் செய்திருந்தாள். அதே வேளையில் இவள் குறைய்ஜா என்ற வேறு ஒரு பழங்குடியினரின் நண்பராகவும் இருந்தார். ஒரு நாள், இப்பெண் "முஹம்மது உண்மையான நபி அல்ல" என்று வேடிக்கையாக கூறினார், இது முஹம்மதுவை அவமானப்படுத்துவது போன்று இருந்தது. உடனே முஹம்மது இப்பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.

இந்த நிகழ்ச்சி முஹம்மதுவின் கடைசி ஆண்டில் நடந்தது, அதாவது அவருக்கு அப்போது 63 வயது இருந்தது. முஹம்மது சாகும் வரை யார் வந்து கேட்டாலும் தாராளமாக திருமண ஒப்பந்தம் செய்ய,  விருப்பமுள்ளவராகவே இருந்தார்.

11) குதைலா - Qutayla (Habla) bint Qays

இப்பெண் அஸ்மா பின்த் அல்‍நுமன் என் பெண்ணின் உறவினர் ஆவாள். யெமன் நாட்டு தலைவர் நுமனுக்கு பதிலாக இந்த பெண்ணை மாற்று மணமகளாக முஹம்மதுவுக்கு திருமணம் செய்ய்ய விரும்பினார்கள். முஹம்மது திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், ஆனால் இப்பெண் மதினாவிற்கு வருவதற்கு முன்பு முஹம்மது 632ல் இறந்துவிட்டார். முஹம்மது இறந்துவிட்டார் என்று இப்பெண் கேள்விப்பட்டவுடன், அவள் இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிட்டாள். சீக்கிரத்திலேயே இன்னொரு அரபி தலைவரை இப்பெண் திருமணம் செய்துக்கொண்டாள், இந்த நபர் தான் அபோஸ்டசி வார் என்று அழைக்கப்படும் "இஸ்லாமை விட்டு வெளியேறியவர்களோடு அபூ பக்கர்" செய்த போரில் எதிராளிகளின் தலைவராக இருந்தார்.

குறிப்பு: முஹம்மது மரித்தவுடன் அரேபியாவில் உள்ள இனக்குழு நாடுகள் இஸ்லாமை விட்டு வெளியேறினர். முஹம்மதுவின் வாளுக்கும் இராணுவத்திற்கும் பயந்து இவர்கள் இஸ்லாமில் ஏற்றுக்கொண்டு இருந்தனர். இவர்களோடு முதல் கலீஃபா அபூ பக்கர் போர் புரிந்து, மறுபடியும் இஸ்லாமிய ஆட்சிக்குள் கொண்டுவந்தார்.

மூலம்: wikiislam.net/wiki/List_of_Muhammads_Wives_and_Concubines

யார் எதைக்கேட்டாலும் வாரி வாரி வழங்கும் வள்ளல்கள் பற்றி நாம் புராணங்களிலும் அரசர்களின் சரித்திரங்களிலும் படிக்கிறோம், அவர்களை மிஞ்சும் வகையில் முஹம்மது அவர்கள் யார் வந்து உன்னை திருமணம் செய்துக்கொள்கிறேன் என்றுச் சொன்னால், 'இல்லையென்றுச் சொல்லமாட்டார்', அவ்வளவு பெரிய மனசு இவருக்கு. தன் நிலை என்ன? தன்னை திருமணம் செய்திருக்கின்ற மற்ற 9 மனைவிகள் என்னவாவது? போன்றவைகளை சிந்திக்கவேமாட்டார், நம் கண்மணி நாயகம் முஹம்மது.

கேள்வி 338:  ஒரு நாள் முஹம்மது  ஏழு வானங்களுக்கு மேலே சென்று வந்தார் என்று சொல்கிறார்களே! இது உண்மையா?

பதில் 338: இது முஸ்லிம்களின் நம்பிக்கை சார்ந்த விஷயமாகும். இப்படி நடந்தது என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள், இதற்கு எந்த ஒரு சான்றுமில்லை. ஹதீஸ்களில், குர்‍ஆனில் இருப்பதினால் முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.

முஹம்மதுவின் வாழ்க்கையை பார்க்கும்போது இவர் ஒரு உண்மையான நபி இல்லை என்று தெரிகின்றது, இப்படிப்பட்ட சூழலில் இவரைப் பார்க்கும் போது, இவர் சொல்வதை எப்படி முஸ்லிமல்லாதவர்கள் நம்புவார்கள்?

கேள்வி 339:  முஹம்மது சொந்தமாக அடிமைகளை வைத்திருந்தாரா?

பதில் 339: இஸ்லாமிய சரித்திர ஆரிசியர் இப்னு கய்யிம் (Ibn Qayyim al-Jawziyya) என்பவரின் கூற்றுப்படி, முஹம்மது நான்கு பெண் அடிமைகளையும், 27 ஆண் அடிமைகளையும் வைத்து இருந்ததாக அறியமுடிகின்றது.

இப்னு கைய்யிம் பற்றிய விக்கிபீடியா தொடுப்பு: en.wikipedia.org/wiki/Ibn_Qayyim_al-Jawziyya

இவர் எழுதிய முஹம்மதுவின் சரித்திரமாகிய " Zad al-Ma'ad" என்ற புத்தகத்தை அரபியில் படிக்க சொடுக்கவும்: archive.org/details/ZadAlMaad-IbnulQayyim/page/n25/mode/2up

இப்னு கைய்யிம்:  

முஹம்மது நபியாக தம்மை பிரகடனப்படுத்திய பிறகு முக்கியமாக, மதினாவிற்கு வந்த பிறகு அவருக்கு நிறைய அடிமைகளை வைத்திருந்தார்.  முஹம்மது அடிமைகளை வாங்கினார், விற்றார் மற்றும் வாடகைக்கு அடிமைகளை விட்டார், இதன் மூலம் பணம் சம்பாதித்தார்.

Ibn Qayyim al-Jawziyya who is one of the greatest scholars and chroniclers of Islam. In his book, "Zad al-Ma'ad" (Part I, p. 160), he says:

"Muhammad had many male and female slaves. He used to buy and sell them, but he purchased (more slaves) than he sold, especially after God empowered him by His message, as well as after his immigration from Mecca. He (once) sold one black slave for two. His name was Jacob al-Mudbir. His purchases of slaves were more (than he sold). He was used to renting out and hiring many slaves, but he hired more slaves than he rented out.

கேள்வி 340: முஹம்மதுவிற்கு சொந்தமாக "ஆண் அடிமைகள்" இருந்ததில்லை. இதற்கு ஏதாவது சான்றை கொடுக்கமுடியுமா?

பதில் 340:  இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் இப்னு கய்யிம், முஹம்மதுவிற்கு இருந்த ஆண் மற்றும் பெண் அடிமைகளின் பெயர்களை பட்டியலிட்டுள்ளார்.

முஹம்மது வைத்திருந்த 27 ஆண் அடிமைகளின் பெயர்கள்:

Ibn Qayyim al-Jawziyya - book, "Zad al-Ma'ad" (part 1, pp. 114, 115, and 116):
"These are the names of Muhammad's male slaves:

1) Yakan Abu Sharh, 2) Aflah, 3) 'Ubayd, 4) Dhakwan, 5) Tahman, 6) Mirwan, 7) Hunayn, 8) Sanad, 9) Fadala Yamamin, 10) Anjasha al-Hadi, 11) Mad'am, 12) Karkara, 13) Abu Rafi', 14) Thawban, 15) Ab Kabsha, 16) Salih, 17) Rabah, 18) Yara Nubyan, 19) Fadila, 20) Waqid, 21) Mabur, 22) Abu Waqid, 23) Kasam, 24) Abu 'Ayb, 25) Abu Muwayhiba, 26) Zayd Ibn Haritha, and also a black slave called 12) Mahran, who was re-named (by Muhammad) Safina (`ship').

இந்த பெயர்களில் "1), 2)" என்று எண்களை நான் எழுதினேன்.

முஹம்மது வைத்திருந்த பெண் அடிமைகளின் பெயர்கள்:

Salma Um Rafi', Maymuna daughter of Abu Asib, Maymuna daughter of Sa'd, Khadra, Radwa, Razina, Um Damira, Rayhana, Mary the Coptic, in addition to two other maid-slaves, one of them given to him as a present by his cousin, Zaynab, and the other one captured in a war.

கேள்வி 341: மஹ்ரன் என்ற ஆண் அடிமை யார்?  இவர் முஹம்மது மற்றும் சஹாபாக்கள் பற்றி என்ன கூறினார்?

பதில் 341: முஹம்மது வைத்திருந்த ஒரு  ஆண் அடிமையின் பெயர் மஹ்ரன் ஆகும். இவர் ஒரு கருப்பின அடிமையாவார். இவருக்கு முஹம்மது 'ஸபினா" என்று பெயர் வைத்தார். ஸபினா என்றால் கப்பல் என்று பொருளாகும். 

ஏன் முஹம்மது இவருக்கு கப்பல் என்று பெயர் வைத்தார்? இதனை அறிய இப்னு கய்யிம் தம் சரித்திரத்தில், இந்த மஹ்ரன்/ஸபினா என்ற ஆண் அடிமை, ஒரு நிகழ்ச்சியை விவரிக்கிறார், இதனை படியுங்கள்:

"The apostle of God and his companions went on a trip. (When) their belongings became too heavy for them to carry, Muhammad told me, `Spread your garment.' They filled it with their belongings, then they put it on me. The apostle of God told me, `Carry (it), for you are a ship.' Even if I was carrying the load of six or seven donkeys while we were on a journey, anyone who felt weak would throw his clothes or his shield or his sword on me so I would carry that, a heavy load. The prophet told me, `You are a ship"' (refer to Ibn Qayyim, pp. 115-116; al-Hulya, Vol. 1, p. 369, quoted from Ahmad 5:222).

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது அவர்களும் அவருடைய தோழர்களும் ஒரு பயணத்திற்குச் சென்றார்கள். அந்த பயணத்தின் போது, அவர்களுடைய உடமைகளை எடுத்துச் செல்ல முடியாத அளவுக்கு அது கனமாகிவிட்டது. முஹம்மது என்னிடம், 'ஒரு ஆடையை  விரி' என்று கூறினார்கள். நானும் விரித்தேன், அப்போது அனைவரும் தங்கள் பொருட்களை அதில் போட்டார்கள், பின்னர் அவர்கள் அதை என்மேல் வைத்தார்கள். இறைத்தூதர் என்னிடம், `அதை எடுத்துச் செல், ஏனென்றால் நீ ஒரு கப்பல்' என்றுச் சொன்னார்கள். நான் ஒருவன் இந்த பயணத்தில் ஆறு அல்லது ஏழு கழுதைகளின் சுமைகளை சுமந்துக்கொண்டு வந்தேன். நபித்தோழர்களில் யார் பலவீனமாக உணர்ந்தாலும், அவருடைய ஆடைகளை அல்லது கவசத்தை அல்லது வாளை நான் சுமந்து வரும் படி என் சுமையில் மீது வைப்பார்கள், அதனால் அது ஒரு பெரிய சுமையாக இருந்தது. இதனால் இறைத்தூதர் என்னப் பார்த்து, நீ ஒரு கப்பல் (ஸபினா) என்று கூறினார். 

இதே நிகழ்ச்சியை தபரி என்ற சரித்திர ஆசிரியரும் தம் சரித்திரத்திலும் பதிவு செய்துள்ளார் (Chronicles, Volume 2 p. 216, 217, 218).

கேள்வி: மற்ற அடிமைகள் இருக்கும் பொது, ஒரு கருப்பின அடிமைக்கு மட்டும் ஏன் இந்த சுமையை முஹம்மது அதிகமாக சுமக்க வைத்தார்?

கேள்வி 342: முஹம்மதுவும், சஹாபாக்களும் அடிமைகளை சொந்தமாக வைத்திருந்தார்களா?

பதில் 342:  ஆம், முஹம்மதுவும், சஹாபாக்களும், முஹம்மதுவின் மனைவிகளும் அடிமைகளை வைத்திருந்தார்கள்.

சில பிராயச்சித்தங்கள் செய்ய "ஒரு அடிமையை விடுதலை செய்யுங்கள்" என்று முஹம்மது சொல்லியுள்ளார், அப்படியானால், முஸ்லிம்களிடம் அடிமைகள் இருக்கவேண்டுமல்லவா? அடிமைகள் சொந்தமாக இல்லாமல் இருந்தால், சஹாபாக்களும் சரி, முஹம்மதுவும் மனைவிகளும் சரி எப்படி 'முஹம்மதுவின் அந்த பிராயச்சித்த கட்டளைக்கு கீழ்படிய முடியும்?'.

நூல்: புகாரி, எண்: 1054 

1054. அஸ்மா(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்யுமாறு கட்டளையிட்டார்கள்.

அடிமைகள் சொத்துக்களாக இருந்தாலும், அதற்காக ஸகாத் கொடுக்கத்தேவையில்லை.

நூல்: புகாரி, எண்: 1463, 1464: 

1463. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(குதிரைகளையும் அடிமைகளையும் பெற்றிருக்கும்) ஒரு முஸ்லிம் குதிரைகளுக்காகவும் அடிமைகளுக்காகவும் ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை..' அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அடிமைகள் விற்பதை முஹம்மது ஆதரித்தார்:

நூல்: புகாரி, எண்கள்: 2141, 2230, 2231, 2283

2141. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். ஒருவர் தமக்குச் சொந்தமான அடிமை தம் மரணத்திற்குப் பின் விடுதலையாவார் என்று கூறியிருந்தார். அம்மனிதருக்குப் பொருள் தேவை ஏற்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் அந்த அடிமையைப் பெற்று, 'இவரை என்னிடமிருந்து வாங்கிக் கொள்பவர் யார்?' என்று கேட்டார்கள். அவரை நுஅய்கி இப்னு அப்தில்லாஹ்(ரலி) இன்ன விலைக்கு வாங்கினார்கள். நபி(ஸல்) அவர்கள், அவரிடம் அந்த அடிமையைக் கொடுத்தார்கள்.

2230. ஜாபிர்(ரலி) அறிவித்தார். 'என்னுடைய மரணத்திற்குப் பின் நீ விடுதலையடைந்து விடுவாய்!' என்று உரிமையாளரால் வாக்களிக்கப்பட்ட அடிமையை நபி(ஸல்) அவர்கள் விற்றார்கள்!'

2283. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். அடிமைப் பெண்கள் (விபச்சாரத்தின் மூலம்) பொருளீட்டுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

குறிப்பு: அடிமைப் பெண்களை விபச்சாரம் செய்யச் செய்து அதன் மூலம் பொருள் ஈட்டுவதை முஹம்மது தடை செய்தார். ஆனால், அவர்களை வாங்குவது, லாபத்திற்கு விற்பதை தடை செய்யவில்லை. ஆனால் அதே அடிமைப் பெண்களோடு திருமணம் செய்யாமல் வாங்கியவன் அவர்களோடு உடலுறவு கொள்வது விபச்சாரமில்லையாம், இது தான் இஸ்லாம்.

முஸ்லிம்களுக்கு சொந்தமான அடிமைகள்:

நூல்: புகாரி, எண்: 2304, 2594

2304. கஅபு இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 'ஸல்வு' எனுமிடத்தில் மேயக்கூடிய சில ஆடுகள் எங்களுக்குச் சொந்தமாக இருந்தன. அந்த ஆடுகளில் ஒன்று சாகும் தருவாயில் இருப்பதை எங்களின் அடிமைப்பெண் பார்த்துவிட்டு, ஒரு கல்லை (கூர்மையாக) உடைத்து, அதன் மூலம் அந்த ஆட்டை அறுத்தார் . . . .

2594. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமையான குரைப் (ரஹ்)அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவியரான மைமூனா (ரலி) அவர்கள் தமது அடிமைப் பெண் ஒருத்தியை விடுதலை செய்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் மைமூனா (ரலி) அவர்களிடம், (இந்த அடிமைப் பெண்ணை அன்பளிப்பாகக் கொடுத்து,) உன் தாய்மாமன்கள் சிலரின் உறவைப் பேணியிருந்தால் உனக்குப் பெரும் நற்பலன் கிடைத்திருக்கும் என்று கூறினார்கள்.

இன்னும் அனேக ஹதீஸ்களை இதற்கு உதாரணமாக காட்டலாம்.

இதுவரை பார்த்த விவரங்களின் படி, முஹம்மதுவும், சஹாபாக்களும், முஹம்மதுவின் மனைவிகளும், இதர முஸ்லிம்களும் அடிமைகளை வைத்திருந்தனர். அடிமைகளை விற்றனர், வாங்கினர், அவ்வடிமைகள் மூலம் பணம் சம்பாதித்தனர். பெண் அடிமைகளோடு முஹம்மதுவும், சஹாபாக்களும் திருமணம் செய்துக்கொள்ளாமலேயே உடலுறவு கொண்டனர். சில முஸ்லிம்கள் பெண் அடிமைகளை விபச்சாரம் செய்யச் செய்து பணம் சம்பாதிப்பதை முஹம்மது தடையும் செய்துள்ளார் என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.

கேள்வி 343: முஹம்மதுவின் பிள்ளைகளின் பெயர்கள் யாவை?

பதில் 343: முஹம்மதுவிற்கு 3 மகன்களும், 4 மகள்களும் பிறந்தார்கள். ஒரு ஆண் மகனைத் தவிர மற்ற அனைவரும் முஹம்மதுவிற்கும் அவரது முதல் மனைவி கதிஜாவிற்கும் தான் பிறந்தார்கள்.

முஹம்மதுவின்  அடிமைப்பெண் மரியா என்பவருக்கும் முஹம்மதுவிற்கும் ஒரு ஆண் பிள்ளை (இப்றாஹீம்) பிறந்தது, ஆனால், பிறந்த இரண்டாடுகளில் அக்குழந்தை இறந்துவிட்டது. மற்ற இரு ஆண் பிள்ளைகளும் வாலிப வயதை அடைவதற்குள் மரித்துவிட்டார்கள்.

முஹம்மதுவின் பிள்ளைகளின் பெயர்கள் மற்றும் பிறந்த ஆண்டுகள்:

1. காசிம் (கி.பி. 598 – 601) - மகன்

2. ஜைனப் (கி.பி. 599 – 630) - மகள்

3. ருகைய்யா (கி.பி. 601 – 624) - மகள்

4. உம் குல்தும் (கி.பி. 603 – 630) - மகள்

5. ஃபாத்திமா (கி.பி. 605 - 632) - மகள்

6. அப்துல்லாஹ் (மரணம் கி.பி. 615) - மகன்

7. இப்றாஹீம் (கி.பி. 630 – 632) - மகன்

முஹம்மதுவின் பெண் பிள்ளைகள் பற்றி சன்னி மற்றும் ஷியா பிரிவினருக்கு இடையே வேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. சன்னி பிரிவினர் முஹம்மதுவின் 4 மகள்களும் முஹம்மது மற்றும் கதிஜா அவர்களுக்கு பிறந்தவர்கள் என்று நம்புகிறார்கள். ஆனால் ஷியா பிரிவினர் ஃபாத்திமா மட்டும் தான் முஹம்மது மற்றும் கதிஜாவிற்கு பிறந்தவர்கள், மூதமுள்ள மூன்று மகள்கள் கதிஜா அவர்களுக்கும், அவருடைய முன்னாள் கணவருக்கும் பிறந்தவர்கள் என்று கூறுகிறார்கள்.

முஹம்மது மரித்த போது, அவருக்கு ஆண் வாரிசு யாருமில்லை, ஒரு வேளை ஒரே ஒரு மகனாவது அவருக்கு உயிரோடு இருந்திருந்தால், அல்லது மற்ற 11 மனைவிகளுக்கு பிறந்திருந்தால், ஷியா சன்னி என்ற பிரிவுகள் உண்டாகாமல் இருந்திருக்கும் என்று நாம் நம்பலாம். 

கேள்வி 344: ஒரு முஸ்லிம் 4 மனைவிகள் மட்டும் திருமணம் செய்யலாம் என்று குர்ஆன் சொல்லும் போது, ஏன் முஹம்மது மட்டும் 10க்கும் அதிகமாக திருமணங்கள் செய்தார்?

பதில் 344: முஹம்மது அனேக திருமணங்களைச் செய்தார், அவர் மரித்த போது அவரின் 9 மனைவிகள் உயிரோடு இருந்தார்கள்.

முஹம்மதுவின் திருமண வாழ்க்கை குர்‍ஆன் வசனத்திற்கு முரண்பட்டதாகும்.

குர்‍ஆன் 4:3ம் வசனத்தை முஹம்மது பின்பற்றவில்லை.

குர்‍ஆன் 4:3. அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும்.

குர்‍ஆன் 4:3ஐ பின்பற்றாமல் இருப்பதற்கு தனக்கு சிறப்பு சலுகை கிடைத்துள்ளது என்று குர்‍ஆன் 33:50ம் வசனத்தை முஹம்மது இறக்கியுள்ளார்.

குர்‍ஆன் 33:50. நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்); மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.

கேள்வி 345: முஹம்மதுவின் இரண்டாவது மனைவி ஸௌதா, தன்னை முஹம்மது விவாகரத்து செய்துவிடுவார் என்று ஏன் பயந்தார்கள்?

பதில் 345: மனைவிக்கு வயது கூடியதால்  விவாகரத்து செய்ய விரும்பினார் அல்லாஹ்வின் தீர்க்கதரிசி முஹம்மது.

முஹம்மது தம் மனைவியாகிய "சௌதா" அவர்களை விவாகரத்து செய்ய விரும்பினார். உடனே சௌதா அவர்கள் தம்மை விவாகரத்து செய்யவேண்டாம் என்று முஹம்மதுவிடம் கேட்டுக்கொண்டார்கள், மேலும் இதற்கு பதிலாக முஹம்மது தன்னிடம் செலவிடும் தன் நாளை ஆயிஷாவிற்கு விட்டுக்கொடுப்பதாக சௌதா சொன்னார்கள். இதனை முஹம்மது அங்கீகரித்துக்கொண்டார்.

இவரை கிறிஸ்தவர்கள் கள்ளத் தீர்க்கதரிசி என்று கருதுவது சரியே! கள்ளத் தீர்க்கதரிசிகளின் கனிகளினால் (செயல்களினால்) அவர்களை அறியலாம் என்று இயேசு கூறியது எவ்வளவு உண்மையாக இருக்கிறது

குர்-ஆன் 4:128-130 & ஸஹீஹ் புகாரி எண் 5206 

4:128. ஒரு பெண் தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை; அத்தகைய சமாதானமே மேலானது; இன்னும், ஆன்மாக்கள் கருமித்தனத்திற்கு உட்பட்டவையாகின்றன. அவ்வாறு உட்படாமல்) ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து, (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடப்பீர்களானால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.

4:129. (முஃமின்களே!) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும், மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது; ஆனால் (ஒரே மனைவியின் பக்கம்) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் தொங்க விடப்பட்டவள் போன்று ஆக்கிவிடாதீர்கள்; நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து சமாதானமாக நடந்து கொள்வீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.

4:130. (சமாதானமாக இணைந்து வாழ முடியாமல் சமாதானமாக) அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டால், அவ்விருவரையும் தன்னுடைய விசாலமான அருட்கொடையால், (ஒருவர் மற்றவரை விட்டும்) தேவையற்றவராக அல்லாஹ் ஆக்கிவிடுவான். அல்லாஹ் விசாலமான அருளுடையவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

குர்‍ஆன் 4:128ன் பின்னணியை கீழ்கண்ட ஹதீஸ் விளக்குகிறது:

புகாரி 5206 : ஆயிஷா(ரலி) அறிவித்தார், 

ஒரு பெண் ஒருவரின் மனைவியாக இருந்து வருகிறாள். (அவளுடைய முதுமை, நோய் போன்ற காரணத்தினால்) அவளை அவருக்குப் பிடிக்காமல் போய்விடுகிறது; அவளை விவாகரத்துச் செய்துவிட்டு மற்றொருத்தியை மணமுடிக்கவும் அவர் விரும்புகிறார். (இந்நிலையில்) அவள் 'என்னை (மனைவியாக) இருக்கவிடுங்கள்; என்னை விவாகரத்துச் செய்துவிடாதீர்கள். பின்னர் (வேண்டுமானால்) மற்றொரு பெண்ணை மணந்துகொள்ளுங்கள். எனக்காகச் செலவழிப்பதிலிருந்தும், இரவைப் பகிர்ந்தளிப்பதிலிருந்தும், இரவைப் பகிர்ந்தளிப்பதிலிருந்தும் நீங்கள் விலகி கொள்ளலாம்'' என்று தம் கணவரிடம் கூறுகிறாள். இதையே இவ்வசனம் கூறுகிறது: ஒரு பெண், தன்னிடம் கணவன் நல்ல முறையில் நடந்து கொள்ளமாட்டான் என்றோ, புறக்கணித்துவிடுவான் என்றோ அஞ்சினால், கணவன் - மனைவி இருவரும் (தம் உரிமைகளில் சிலவற்றைப் பரஸ்பரம்விட்டுக் கொடுத்து) தமக்கிடையே சமாதானம் செய்துகொள்வதில தவறேதும் இல்லை. (திருக்குர்ஆன் 04:128)

பெண்களுக்கு எதிரான மார்க்கம் இஸ்லாம் என்றுச் சொல்வது எவ்வளவு பொருத்தமாக உள்ளது பாருங்கள்.

சிந்திக்க சில‌ கேள்விகள்:

  • ஏன் முஹம்மது சௌதாவை விவாகரத்து செய்ய விரும்பினார்?
  • சௌதா அவர்களுக்கு வயதுகூடிவிட்டதாம், இதனால் அவர்கள் அழகாக இல்லையாம், இதனால் அவர் தன் மனைவியை விவாகரத்து செய்ய நினைத்தார்.
  • "என்றும் பதினாறு" என்றுச் சொல்வது  போல எப்போதும் இளமையோடு முஹம்மது இருப்பாரா? இவருக்கு முகத்தில் சுருக்கங்கள் விழவில்லையா?
  • மனைவிக்கு வயது கூடியதால் விவாகரத்து செய்ய விரும்பியவர் எப்படி உண்மையான தீர்க்கதரிசியாக இருக்கமுடியும்? 
  • ஒரு சராசரி மனிதனிடம் எதிர்ப்பார்க்கும் நல்ல குணம் கூட ஒரு நபியிடம் இல்லையே!

உங்கள் தந்தை "உங்கள் தாய்க்கு" வயது கூடிவிட்டதால் விவாரகரத்து செய்வேன் என்றுச் சொன்னால், நீங்கள் என்ன செய்வீர்கள்! முஸ்லிம் நண்பர்களே!

கேள்வி 346: முஹம்மது திருமணம் செய்துக்கொண்ட இரண்டு பெண்களின் தகப்பன்மார்கள் அவரது நெருங்கிய தோழராக இருந்தார்கள் அவ்விருவர் யார்?

பதில் 346: ஆமாம், அபூ பக்கர் மற்றும் உமர் என்பவர்களின் மகள்களை முஹம்மது திருமணம் செய்திருந்தார்.

முஹம்மது 9 வயது சிறுமியாகிய ஆயிஷாவை திருமணம் செய்தார், இவருடைய தந்தை தான் அபூ பக்கர். ஹப்ஸா என்பவர் உமரின் மகள் ஆவார், இவரையும் முஹம்மது திருமணம் புரிந்திருந்தார்.

முஹம்மது மரித்த பிறகு முதல் கலிஃபாவாக பதவி வகித்தவர் அபூபக்கர் ஆவார், இவர் மரித்த பிறகு உமர் இரண்டாவது கலிஃபாவாக பதவிக்கு வந்தார்.

கேள்வி 347: மூன்றாவது மற்றும் நான்காவது கலிஃபாவிற்கும் முஹம்மதுவிற்கும் என்ன தொடர்பு?

பதில் 347: முஹம்மதுவின் மகள்களை திருமணம் செய்தவர்கள் தான் உஸ்மானும்  அலியும். உஸ்மான் மூன்றாவது கலிஃபாவாக பதவி வகித்தார், அலி நான்காவது கலிஃபாவாக பதவி வகித்தார்.

ஆக, முஹம்மதுவிற்கு பிறகு இஸ்லாமிய அரசின் தலைவர்களாக இருந்தவர்கள் முஹம்மதுவின் இரண்டு மாமனார்கள், அதன் பிறகு முஹம்மதுவின் மருமகன்மார்கள்.

முஹம்மதுவிற்கும் அவரது சஹாபாக்களுக்கும் இடையே இருந்த உறவுகள் பற்றி மேலதிக விவரங்களை வேறு ஒரு கேள்வி பதிலில் காண்போம்.

கேள்வி 348: மதினாவில் வாழ்ந்த போது  முஹம்மது எத்தனை போர்களை புரிந்தார்?

பதில் 348:

1) மதினாவில் 10 ஆண்டுகளில் முஹம்மது கட்டளையிட்ட போர்கள்/வன்முறைகள்  (622-632)

முஹம்மது 63 ஆண்டுகள் வாழ்ந்தார். தம்முடைய 40வது வயதில் "தான் ஒரு நபி (தீர்க்கதரிசி)" என்று பிரகடனப்படுத்தினார். அதன் பிறகு 12 லிருந்து 13 ஆண்டுகள் மக்காவில் வாழ்ந்தார். பிறகு மதினாவிற்கு இடம்பெயர்ந்து (ஹிஜ்ரி ஆண்டு தொடக்கம்) அதிக பட்சமாக 10 ஆண்டுகள் வாழ்ந்தார்.

மதினாவில் வாழ்ந்த அந்த 10 ஆண்டுகளில் அவர் போர்களிலும், வழிப்பறி கொள்ளைகளிலும், வன்முறை செயல்களிலும் ஈடுபட்டார். அவைகள் பற்றி இப்போது காண்போம். குர்‍ஆனின் அத்தியாயங்களும் மக்கீ மற்றும் மதனீ என்று பிரிக்கப்பட்டதும், முஹம்மதுவின் இருப்பிடத்தை (வாழ்ந்த ஊரினை) கருத்தில் கொண்டு தான் என்பது கவனிக்கத்தக்கது.

"முஹம்மதுவின் வன்முறைகள் என்று குறிப்பிடும் போது",  அது முஹம்மது செய்த கீழ்கண்ட காரியங்களை குறிக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

  • வியாபார கூட்டங்களை வழிமறித்து அவர்களின் உடைமைகளை கொள்ளையிட்டது (Raids)
  • இவரே  வலியச்சென்று போர் செய்தது (Offence)
  • எதிரிகள் இவர் மீது போர் தொடுக்கும் போது இவர் போரிட்டது (Defence)
  • தன்னை எதிர்த்து பேசியவர்களை ஆட்களை அனுப்பி கொலை செய்தது 

கீழ்கண்ட அட்டவணையைப் பார்க்கவும். முஹம்மது மதினாவில் வாழ்ந்த 10 ஆண்டுகளில் அவர் கட்டளையிட்ட‌ வன்முறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. மொத்தம் 95 வன்முறைகள் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

10 ஆண்டுகளில், 95 வன்முறைகள் என்றால், ஒரு ஆண்டுக்கு 9.5 வன்முறைகள் என்று கணக்கு வருகின்றது. புரியும் படி சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், முஹம்மது மதினாவிற்கு வந்த பிறகு ஒவ்வொரு ஆறு வாரங்களுக்கு (ஒன்றரை மாதத்தில்) ஒரு வன்முறையில் ஈடுபட்டுள்ளார். 

கீழ்கண்ட விக்கிபீடியா  தொடுப்பில் முஹம்மதுவின் வன்முறைச் செயல்கள் 95ஐ வரிசைப் படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. அதனை நான் ஹிஜ்ரி ஆண்டு வரிசையில் தயாரித்துள்ளேன்.  கிழேயுள்ள அட்டவணையை காணவும்.

அட்டவணை 1: முஹம்மது 10 ஆண்டுகளில் பங்கு பெற்ற கட்டளையிட்ட போர்கள்/வன்முறைச் செயல்கள் ஹிஜ்ரி ஆண்டு வரிசையில்.

முஹம்மது மட்டும் பங்கு பெற்ற வன்முறைகளை கூட்டினால், அது 28 வருகின்றது. அதாவது மதினாவில் வாழ்ந்த 10 ஆண்டுகளில், முஹம்மது பங்கு பெற்ற வன்முறைகள் 28 ஆகும். மீதமுள்ள 67 வன்முறைகளில் முஹம்மது பங்கு பெறவில்லை, தம்முடைய சஹாபாக்களின் தலைமையில் சண்டையிடும் படி கட்டளையிட்டார்.

புகாரி ஹதீஸின்படி 19 போர்களில் முஹம்மது பங்கு பெற்றார் என்பது தவறா?

புகாரி ஹதீஸ் எண்கள்: 3949, 4404 & 4471 ன்படி முஹம்மது பங்கு பெற்ற போர்கள் 19 என்று வருகிறதே, ஆனால் 28 என்று நாம் சொல்வது ஏன் என்ற கேள்வி சிலருக்கு  எழலாம். புகாரி சொல்லும் கணக்கு முஹம்மது போருக்குச் சென்று சண்டையிடுவதைப் பற்றித் தான். ஆனால், இஸ்லாமிய சரித்திரத்தின் படி முஹம்மது பங்கு பெற்ற வழிப்பறி கொள்ளைகள், பழிக்கு பழிவாங்கும் சண்டைகள், போர்கள் என்று அனைத்தையும் கூட்டும் போது 28 வருகின்றது (இந்த பட்டியலில் முஹம்மது பங்கு பெற்ற விவரங்களை சரி பார்க்கவும்: en.wikipedia.org/wiki/List_of_expeditions_of_Muhammad)

புகாரி ஹதீஸ்: 3949. அபூ இஸ்ஹாக்(ரஹ்) அறிவித்தார்

நான் ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களுக்கும் அருகிலிருந்தபோது, 'நபி(ஸல்) அவர்கள் புரிந்த போர்கள் எத்தனை?' என்று அவர்களிடம் வினவப்பட்டது. 'பத்தொன்பது' என்று அவர்கள் பதிலளித்தார்கள். 'நபி(ஸல்) அவர்களுடன் நீங்களும் பங்கெடுத்த போர்கள் எத்தனை?' என்று வினவப்பட்டபோது, 'பதினேழு' என்றார்கள். 'இவற்றில் முதல் போர் எது?' என்று நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள், 'உஸைரா' அல்லது 'உஷைர்' என்று பதிலளித்தார்கள்.

மேற்கண்ட அட்டவணையை பார் சார்ட் (Bar Chart) வரைபடமாக பார்க்கும் போது, விவரம் இன்னும்  தெளிவாக புரியும்:

வரைபட விளக்கம் - உதாரணம்:

ஹிஜ்ரி ஆண்டு 1: மதினாவிற்கு முஹம்மது ஹிஜ்ரத் செய்த பிறகு முதலாம் ஆண்டில், நான்கு வன்முறைகளை கட்டளையிட்டுள்ளார். அதில் ஒரு வன்முறையில் முஹம்மது சுயமாக பங்கு பெற்றுள்ளார், மீதமுள்ள 3 வன்முறைகளில் அவர் பங்கு பெறவில்லை, முஸ்லிம்கள் மட்டுமே பங்கு பெற்றுள்ளனர்.

ஹிஜ்ரி ஆண்டு 8: முஹம்மது மதினாவிற்குச் சென்ற 8ம் ஆண்டை கவனித்தால், முஹம்மது கட்டளையிட்ட வன்முறைச் செயல்கள் 20 ஆகும், அதில் 4ல் அவரே சுயமாக பங்கு பெற்றுள்ளார்.

கேள்வி 349:  முஹம்மது பற்றி ஸஹீஹ் ஹதீஸ்கள் சொல்வதை நம்பலாமா?

பதில் 349: ஹதீஸ்கள் முஹம்மதுவிற்கு 200 ஆண்டுகளுக்கு பிறகு தொகுக்கப்பட்டன. அவைகளில் பல பொய்கள் கலந்துள்ளன. ஹதீஸ்களை தொகுத்த இமாம் புகாரி போன்றவர்கள், லட்சக்கணக்கான ஹதீஸ்களை தொகுத்தார்கள், அவைகளை வகைப்படுத்தி வெறும் 1.3 சதவிகித ஹதீஸ்கள் தான் உண்மையானவை என்று கூறினார்கள்.

உதாரணத்திற்கு, புகாரி இமாம் ஆறு லட்சம் ஹதீஸ்களை தொகுத்தார், அவைகளில் 7397 (1.23%) ஹதீஸ்கள் உண்மையானவை என்று வேறு பிரித்தார். அப்படியென்றால் மூதமுள்ள 98.77% ஹதீஸ்கள் பொய்யானவை என்று அர்த்தம். இன்றைய இஸ்லாமிய அறிஞர்கள், அந்த 7397 ஹதீஸ்களிலும் பொய்கள் உள்ளன என்று கூறுகிறார்கள்.

ஹதீஸ்களில் நடைமுறைக்கு ஏற்காத, முஸ்லிம்களை தர்ம சங்கடத்தில் தள்ளும் ஹதீஸ்கள் உள்ளன. இவைகளை நம்பினால், முஹம்மதுவிற்கு அவப்பெயர் வருமென்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள்.

ஹதீஸ்களை நம்பலாமா இல்லையா? என்ற கேள்விக்கு நேரடி பதில் கொடுப்பதாக இருந்தால், இந்த கேள்வியை யாரிடம் கேட்கிறோமோ, அவரைப் பொருத்து பதில் அமையும்.

கண்மூடித்தனமாக ஹதீஸ்களை நம்பும் முஸ்லிம்களிடம் கேட்டால், அவர்களுக்கு ஹதிஸ்கள் பற்றிய ஞானம் இல்லாதபடியினால், ஹதீஸ்கள் எல்லாவற்றையும் நம்பவேண்டும் என்று கூறுவார்கள். இஸ்லாமை நன்கு அறிந்த முஸ்லிம் அறிஞர்களிடம் கேட்டால், ஹதீஸ்கள் அனைத்தையும் ஏற்கமுடியாது, இன்னும் புறக்கணிக்கவேண்டிய ஹதீஸ்கள் அனேகம் உண்டு என்பார்கள்.  இஸ்லாமியரல்லாத ஆய்வாளர்களிடம் கேட்டால், பெருமபான்மையான ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டு உள்ளது என்று கூறுவார்கள்.

கேள்வி 350: முஹம்மதுவின் பற்களில் ஒரு குறிப்பிட்ட‌ போரின் போது காயம்பட்டதாக சொல்லப்படுவது எந்த போரில்?

பதில் 350: கி.பி. 624ம் ஆண்டு நடைப்பெற்ற உஹுத் என்ற போரில், எதிரிப்படை வீரர்களில் ஒருவன் எறிந்த கல் முஹம்மது அவர்களின் வாயில் பட்டு, அவர்களின் பல் ஒன்று உடைந்ததால் வாயிலிருந்து இரத்தம் கொட்டியது. இரத்தம் கொட்டியதை அறிந்த எதிரிப் படையினர் 'முகம்மது இறந்து விட்டார்' என்று கோஷ‌மிட்டனர். இந்த போர் முஸ்லிம்களுக்கு ஒரு தோல்வியை கொடுத்தது.

கேள்வி 351: முஹம்மது எத்தனை ஹஜ் செய்தார்? எத்தனை உம்ரா செய்தார்?

பதில் 351: முஹம்மது ஒரு ஹஜ் செய்ததாகவும், நான்கு உம்ரா செய்ததாகவும் முஸ்லிம் ஹதீஸ் நூல் கூறுகிறது.

முஸ்லிம் ஹதீஸ் 2404. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான்கு உம்ராக்கள் செய்தார்கள். தமது ஹஜ்ஜுடன் செய்த உம்ராவைத் தவிர மற்ற அனைத்தையும் துல்கஅதா மாதத்திலேயே அவர்கள் செய்தார்கள்;

1. "ஹுதைபியாவிலிருந்து" அல்லது "ஹுதைபியா ஒப்பந்தம் நடந்தபோது" துல்கஅதா மாதத்தில் செய்த உம்ரா.

2. அடுத்த ஆண்டு துல்கஅதா மாதத்தில் செய்த உம்ரா.

3. ஹுனைன் போரில் கிடைத்த போர்ச் செல்வங்களைப் பங்குவைத்த இடமான ஜிஃரானாவிலிருந்து துல்கஅதா மாதத்தில் செய்த உம்ரா.

4. அவர்கள் தமது ஹஜ்ஜுடன் செய்த உம்ரா (ஆகிய நான்குமே அவை). - கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் (ரலி) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எத்தனை ஹஜ் செய்தார்கள்?" என்று கேட்டேன். அதற்கு, "அவர்கள் ஒரேயொரு ஹஜ் மட்டுமே செய்தார்கள்; நான்கு உம்ராக்கள் செய்தார்கள்" என்று விடையளித்தார்கள். மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

கேள்வி 352: முஹம்மதுவை எங்கு அடக்கம் செய்தார்கள்?

பதில் 352: முஹம்மதுவின் கல்லறை மதினாவில் உள்ளது என்று இஸ்லாம் சொல்கிறது. ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம்கள் மக்காவிற்கு ஹஜ் பயணம் மேற்க்கொள்ளும் போது, மதினாவிற்கும் சென்று முஹம்மதுவின் கல்லறையைப் பார்த்துவருகிறார்கள்.

கலீஃபாக்களின் காலத்தில், முஹம்மது அடக்கம் செய்யப்பட்ட கல்லறை இருந்த அறையின் சுவர் இடிந்து விழுந்தது, இதைப்  பற்றி ஒரு ஹதீஸ் வருகிறது.

நூல் புகாரி, எண்: 1390:

1390. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்)அவர்கள் மரண நோயுற்றிருந்தபோது, 'யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களது மண்ணறைகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிவிட்டார்கள்' எனக் கூறினார்கள். இந்த பயம் மட்டும் இல்லாதிருந்தால் நபி(ஸல்) அவர்களின் கப்ரும் திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருக்கும். எனினும் நபி(ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் பயந்தே உள்ளார்கள்; அல்லது அவர்களின் கப்ரும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டு விடும் என்ற பயம் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அவர்களின் கப்ரு ஒட்டகத்தின் திமில் போன்று உயரமாக இருந்ததைத் தாம் பார்த்ததாக சுஃப்யான் அத் தம்மார் அறிவித்தார். இப்னு அப்தில் மலிக்கின் (ஆட்சிக்) காலத்தின்போது நபி(ஸல்) அடக்கம் செய்யப்பட்ட அறையின் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. அதைப் புனர் நிர்மாணம் செய்வதில் மக்கள் ஈடுபட்டபோது ஒரு பாதம் வெளியில் தெரிந்தது. உடனே மக்கள் பதறிப் போய் அது நபி(ஸல்) அவர்களின் பாதமாக இருக்குமோ என நினைத்தனர். இது பற்றித் தெரிந்தவர் யாருமில்லாதிருந்தபோது நான் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது நபி(ஸல்) அவர்களின் பாதமே இல்லை; மாறாக, இது உமர்(ரலி) அவர்களின் பாதகமாகும் என்றேன்' என உர்வா கூறுகிறார்.

கேள்வி 353: நபித்துவம் அடையாளமாக முஹம்மதுவிற்கு இருப்பது எது?

பதில் 353: முஹம்மது, "நபிமார்களின் முத்திரையானவர்" என்று குர்‍ஆன் சொல்கிறது:

குர்‍ஆன் 33: 40

முஹம்மது (ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார் மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன். 

Muhammad is not the father of any of your men, but (he is) the Apostle of God, and the Seal of the Prophets: and God has full knowledge of all things. S. 33:40 Y. Ali

முதன் முதலில் மேலுள்ள வசனத்தை படித்தவுடன், நமக்கு, "முஹம்மது தான் நபித்துவத்தின் முடிவானவர் என்றும், அல்லாவால் அனுப்பபட்ட நபிகளின் வரிசையில் இவரே இறுதியானவர் என்றும்" விளங்கும். ஹதீஸ் தொகுப்புக்களை படிக்கும் போது, இஸ்லாமிய ஆதாரங்களின் படி பார்த்தால், முஹம்மதுவுக்கு முன்னிருந்த நபிமார்களின் நிலைகளோடு (Status) , முஹம்மதுவின் நிலையைப் பற்றிப் பார்க்கும் போது இந்த 'முத்திரை" என்பது சாதாரண ஒரு கூற்றை விட அதிகமானது.

ஸஹீஹ் புகாரி எண்கள்: 190, 6352

190. 'என்னுடைய சிறிய தாயார் என்னை நபி(ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரி மகன் இரண்டு பாதங்களிலும் வேதனையால் கஷ்டப்படுகிறான்' எனக் கூறியபோது, நபி(ஸல்) அவர்கள் என்னுடைய தலையைத் தடவி என்னுடைய அபிவிருத்திக்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அவர்கள் மீதி வைத்த தண்ணீரிலிருந்து நான் குடித்தேன். பின்னர் நபி(ஸல்) அவர்களின் முதுகிற்குப் பின்னால் எழுந்து நின்றேன். அப்போது அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் நபித்துவத்தின் முத்திரையை பார்த்தேன். அது ஒரு புறா முட்டை போன்று இருந்தது' என ஸாயிப் இப்னு யஸீது(ரலி) அறிவித்தார்.

6352. சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.

(சிறுவனாயிருந்த) என்னை என் தாயாரின் சகோதரி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டுசென்று, 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரி மகனுக்கு (பாதங்களில்) நோய் கண்டுள்ளது' என்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் (அன்புடன்) என் தலையை வருடிக் கொடுத்து என் சுபிட்சத்திற்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அவர்கள் அங்கசுத்தி செய்து மிச்சம் வைத்த தண்ணீரிலிருந்து சிறிது பரும்னேன். பிறகு நான் அவர்களின் முதுகுக்குப் பின்னே நின்று கொண்டு அவர்களின் இரண்டு தோள்களுக்கிடையே இருந்த நபித்துவ முத்திரையைப் பார்த்தேன். அது மணவறைத் திரையில் பொருத்தப்படும் பித்தானைப் போன்றிருந்தது.

இதே விவரம் இன்னும் பல ஹதீஸ் நூல்களிலும், இதர இஸ்லாமிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது, அவைகளை படிக்க இந்த தமிழ் கட்டுரையை படிக்கவும்: முஹம்மது மற்றும் நபித்துவத்தின் முத்திரை: இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?

சிந்திக்க சில கேள்விகள்:

1) இங்கே முஹம்மதுவுடைய நபித்துவத்தின் முத்திரை என்பது ஒரு சரீர குறைபாடு என்று புலனாகிறது, புள்ளிகள் நிறைந்த மச்சம் ஒரு ஆப்பிள் போல, ஒரு சிறிய பொத்தானைப் போல அல்லது புறாவுடைய முட்டையைப் போல இருந்ததாக கூறப்படுகிறது. முஹம்மதுவின் நபித்துவத்தை நிருபித்து மக்கள் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு இந்த மச்சம் போன்ற அடையாளம் எப்படி உதவமுடியும்?

2) இறைவன் தன் நபிகளை அனுப்பும்  போது, அவர்களின் நபித்துவத்தை நிருபிக்க, அற்புத அடையாளங்களைச் செய்வான். இப்படிப்பட்ட இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்கள் மூலமாக இவர் ஒரு நபி என்று நம்புவார்கள். ஆனால், அல்லாஹ்வோ, முஹம்மதுவிற்கு ஒரு சரீர குறைபாட்டை, ஒரு மச்சம் போன்ற ஒரு விஷயத்தைக் கொடுத்து, அது நபித்துவ முத்திரை என்றுச் சொல்வது வேடிக்கையாகவும், ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் உள்ளது.

இந்த மச்சம் எப்படி இருக்கும் என்று மேற்கண்ட‌ ஹதீஸ்கள் சொல்கின்றன. உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால், கீழ்கண்ட தொடுப்பை சொடுக்கி ஒரு கார்ட்டூன் படத்தை பார்க்கவும், அப்போது இந்த ஹதீஸ் சொல்வது புரியும்.

கேள்வி 354: முஹம்மது தனக்கு தனிச்சலுகைகள் வேண்டுமென்று குர்‍ஆனில் வசனங்களை சுயமாக சொல்லியுள்ளாரா?

பதில் 354: முஹம்மது தமது வசதிக்காகவும், தன் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளவும், குர்‍ஆனில் வசனங்களை இறக்கியதாக நாம் பார்க்கமுடியும்.

"இப்படியெல்லாம் நடக்கவில்லை" அல்லாஹ் தான் இவ்வசனங்களை இறக்கினான் என்று முஸ்லிம்கள் சொல்வார்கள். ஆனால், மேலோட்டமாக இவ்வசனங்களை பார்த்தால் கூட‌, நமக்கு உண்மை புரியும்.

மூன்று உதாரணங்களை மட்டும் இங்கு தருகிறேன்:

1) நான்கு மனைவிகளுக்கு மேல் தனக்கு தேவை நோக்கத்தை முஹம்மது கீழ்கண்ட வசனத்தின் மூலம் நிறைவேற்றினார் (குர்‍ஆன் 33:50).  

இந்த ஒரு வசனம் மட்டும் குர்‍ஆனில் இல்லாமல் இருந்திருந்தால், முஹம்மது முஸ்லிம்களைப்போன்று அதிகபட்சமாக 4 திருமணங்களை மட்டுமே செய்திருப்பார். இதனை எந்த முஸ்லிமாவது மறுக்கமுடியுமா?

33:50. நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்); இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்); மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.

2)  தன் வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்ய முஹம்மதுவிற்கு இறங்கிய குர்‍ஆன் வசனம்: 33:37

33:37. (நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்: "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.

3) தாம் வீட்டில் இருக்கும் போது, தம் தோழர்கள் அதிக தொல்லை தரக்கூடாது என்று விரும்பிய முஹம்மதுவிற்கு இறக்கப்பட்ட குர்‍ஆன் வசனம்:

33:53. முஃமின்களே! (உங்களுடைய நபி) உங்களை உணவு அருந்த அழைத்தாலன்றியும், அது சமையலாவதை எதிர்பார்த்தும் (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்; ஆனால், நீங்கள் அழைக்கப்பட்டீர்களானால் (அங்கே) பிரவேசியுங்கள்; அன்றியும் நீங்கள் உணவருந்தி விட்டால் (உடன்) கலைந்து போய் விடுங்கள்; பேச்சுகளில் மனங்கொண்டவர்களாக (அங்கேயே) அமர்ந்து விடாதீர்கள்; நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாகும்; இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுவார்; ஆனால் உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை; நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல; அன்றியும் அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒருபோதும் கூடாது; நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் (பாவ) காரியமாகும்.

கேள்வி 355: முஹம்மது தம் முதல் மனைவி உயிரோடு இருந்த காலக்கட்டத்தில், வேறு எத்தனை பெண்களை திருமணம் செய்தார்?

பதில் 355: முஹம்மதுவின் முதல் மனைவி கதிஜா அவர்கள் உயிரோடு இருந்த காலக்கட்டத்தில், முஹம்மது வேறு பெண்களை திருமணம் செய்யவில்லை. இவர் நபியாக மாறிய பிறகும் வேறு பெண்களை திருமணம் செய்யவில்லை.  மக்கா மக்கள் இவருக்கு பெண்களைக் காட்டி ஆசை காட்டினாலும் இவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. எனக்கு பெண்கள் வேண்டாம், அல்லாஹ்வின் செய்தியைச் சொல்வது தான் என் பிரதானமான நோக்கம் என்று வாழ்ந்தார்.

ஆனால், முதல் மனைவி கதிஜா அவர்கள் மரித்த பிறகு, இவர் பல மனைவிகளை திருமணம் செய்தார். முஸ்லிம் அறிஞர்களின் கூற்றுப்படி 11 மனைவிகள் இவருக்கு இருந்தார்கள். வேறு அனேக பெண்களை திருமணம் செய்யவும் ஒப்பந்தம் செய்தார், ஆனால் பல காரணங்களுக்காக அந்த திருமணங்கள் நடைபெறவில்லை. மேலும் தம் வலக்கரங்களுக்கு சொந்தமான அடிமைப் பெண்களோடு திருமணம் செய்துக்கொள்ளாமலேயே உடலுறவு கொண்டார்.

கேள்வி 356: முஹம்மதுவின் கடைசி ஆசை என்னவாக இருந்தது? அது நிறைவேறியதா? 

பதில் 356: முஹம்மதுவின் கடைசி ஆசை நிறைவேறவில்லை? புகாரி சொல்லும் சரித்திரத்தை சிறிது புரட்டுவோம்.

புகாரி 7366. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது, அவர்களின் இல்லத்தில் உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்கள் உள்பட பலர் இருந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'வாருங்கள்; உங்களுக்கு நான் ஒரு மடலை எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்' என்றார்கள். உமர்(ரலி) அவர்களை (நோயின்) வேதனை மிகைத்துவிட்டது. (எழுதித் தருமாறு அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்.) உங்களிடம் தான் குர்ஆன் இருக்கிறதே! நமக்கு (அந்த) இறைவேதமே போதும்' என்றார்கள். வீட்டிலிருந்தவர்கள் கருத்து வேறுபட்டு சச்சரவிட்டுக் கொண்டார்கள். அவர்களில் சிலர், '(நபியவர்கள் கேட்ட எழுது பொருளை அவர்களிடம்) கொடுங்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உங்களுக்கு ஒரு மடலை எழுதித் தருவார்கள். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்' என்றார்கள். வேறு சிலர் உமர்(ரலி) அவர்கள் சொன்னதையே சொன்னார்கள். நபி(ஸல்) அவர்களுக்கு அருகே மக்களின் கூச்சலும் குழப்பமும் சச்சரவும் மிகுந்தபோது நபி(ஸல்) அவர்கள், 'என்னைவிட்டு எழுந்து செல்லுங்கள்' என்றார்கள். 

அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் (இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு), 'மக்கள் கருத்து வேறுபட்டு கூச்சலிட்டுக் கொண்டதால் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கும் அவர்கள் எழுதித்தர நினைத்த மடலுக்கும் இடையே குறுக்கீடு ஏற்பட்டதுதான் சோதனையிலும் பெரும் சோதனையாகும்' என்று கூறுவார்கள். 

இந்த நிகழ்ச்சியில் நடந்தவற்றை சுருக்கமாக நான் உனக்கு தருகிறேன்.

அ) முஹம்மது மரண படுக்கையில் இருக்கிறார்

ஆ) உமர் உட்பட சிலர் அங்கு இருக்கிறார்கள்.

இ) இந்த கூட்டத்தைக் கண்டு, "ஒரு மடலை நான் எழுதித் தருகிறேன், இதன் மூலமாக நீங்கள் வழிதவறிப் போகமாட்டீர்கள் என்று" முஹம்மது  சொல்கிறார்.

ஈ) எங்களுக்கு குர்-ஆனே போதும், இப்போது எதுவும் எழுதத்தேவையில்லை என்று உமர் மறுக்கிறார்.

உ) ஒரு சிலர் முஹம்மது கேட்டதை கொடுப்போம், அவர் முக்கியமான ஒன்றை எழுதித்தருவதாகச் சொல்கிறார் எனவே தடை செய்யவேண்டாமென்றுச் சொல்கிறார்கள்.

ஊ) வேறு சிலர், உமரின் வார்த்தைகளுக்கு இணங்க, கொடுக்க மறுக்கிறார்கள்.

எ) கூச்சல் அதிகமாவதைக் கண்ட முஹம்மது அனைவரையும் வெளியே போகும் படி கட்டளையிடுகிறார்.

ஏ) உமர் எண்ணியதுபோலவே நடந்தது.

உமரின் கவனக்குறைவா? அல்லது உள்ளார்ந்த அர்த்தம் ஏதாவது உள்ளதா?

23 ஆண்டு ஊழியம், ஆறு ஆயிரத்துக்கும் அதிகமான குர்-ஆன் வசனங்கள்(6236), பல வழிப்பறி கொள்ளைகள், பல போர்கள், பல கொலைகள், பல பெண்களின் கற்பு பாலைவன சூட்டில் சூரையாடப்பட்டது அதாவது,  போரில் பிடிபட்ட பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள், அடிமைகளாக விற்கப்பட்டார்கள். எத்தனை முறை ஜிப்ராயீல் தூதன் இறங்கி வந்து வசனத்தை இறக்கினானோ, எண்ணிக்கை முஹம்மதுவிற்குத் தான் தெரியும். மேற்கண்ட அனைத்து காரியங்களுக்கும் வெளிப்பாடுகளைப் பெற்ற முஹம்மது இன்று மரணப் படுக்கையில் கிடக்கிறார். 

இவர் கேட்டுக்கொண்டதெல்லாம் ஒரு பேனாவையும், ஒரு பேப்பரையும் தான். அதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. நான் உங்களுக்கு பயன்படும் ஒன்றை எழுதித் தருகிறேன் என்றார்.  நீங்கள் எழுதுவது எங்களுக்கு தேவையில்ல என்று மறுத்துவிட்டார். கூச்சலும் குழப்பமும் தொடங்கிவிட்டது. (முஹம்மதுவிற்கு எழுதவோ, படிக்கவோ தெரியாது என்று தானே முஸ்லிம்கள் இன்றுவரை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள், இங்கு எப்படி இவர் பேனாவையும், பேப்பரையும் கேட்கிறார்…? இதைப் பற்றி மற்றொரு நேரத்தில் சிந்திப்போம்).

உமர் ஏன் தடை செய்யவேண்டும்? உமர் அறியாமையில் இதனைச் செய்தாரா? அல்லது இதற்கு உள்ளார்ந்த அர்த்தம் ஏதாவது இருக்கின்றதா? 

சஹாபாக்களின் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசைகளை தீர்த்துவைத்த முஹம்மதுவின் கடைசி (பென்) ஆசை அலட்சியம் செய்யப்பட்டுவிட்டது.

பாவம் முஹம்மது, ஒரு கைதிக்கு கூட உன் கடைசி ஆசை என்னவென்று கேட்டு நிறைவேற்ற முயற்சி எடுப்பார்கள், ஆனால் இவருக்கு வந்த நிலை வேறு எவருக்கும் வரக்கூடாது.

உங்கள் மூலமாக கொடுக்கப்பட்ட குர்-ஆன் எங்களுக்கு உண்டு, அதுவே போதும் என்று உமர் கூறினார். குர்-ஆன் போதுமென்று முஹம்மதுவிற்குத் தெரியாதா? உமர் முஹம்மதுவிற்கு புதிதாக ஏதாவது கற்றுக்கொடுக்க முடியுமா என்ன?

ஒரு வேளை, முஹம்மதுவிற்கு அடுத்தபடியாக, யார் தலைவராக வரவேண்டும் என்று முஹம்மது எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டால், என்ன செய்வது? மதினாவின் முஸ்லிம்களாகிய அன்சாரிகளுக்கு அந்த நாற்காலி சென்றுவிட்டால் என்ன செய்யமுடியும்? முஹம்மது ஒரு முறை எழுதிவிட்டால், அதனை யாரும் மாற்றமுடியாது அல்லவா?  இந்த சூழல் வருவதற்கான வாய்ப்பை ஏன் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்?  தானாக வாய்ப்பு வந்தாலும் அதனை எப்படியாவது கெடுத்துவிடலாம் என்ற எண்ணம் உமரின் உள்ளத்தில் தோன்றியதோ? 

கட்டாயம் இந்த ஹதீஸை படித்தே ஆகவேண்டும்.

புகாரி 4447. முஹம்மத் இப்னு முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார் 

அப்துல்லாஹ் இப்னு கஅப் இப்னு மாலிக் அல் அன்சாரி(ரலி) - (இவருடைய தந்தை) கஅப்பின் மாலிக்(ரலி) (தபூக் போரில் கலந்துகொள்ளத் தவறியதற்காக) பாவமன்னிப்பு வழங்கப்பட்டவர்களில் ஒருவராயிருந்தார். அன்னார் எனக்கு அறிவித்தார்கள்: 

அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) எனக்குத் தெரிவித்தார்கள். 

இறைத்தூதர்(ஸல்) எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது அவர்களிடமிருந்து அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) (அவர்களை நலம் விசாரித்துவிட்டு) வெளியேறினார்கள். உடனே மக்கள், 'அபுல் ஹசனே! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எப்படியுள்ளார்கள்?' என்று (கவலையுடன்) விசாரிக்க, அதற்கு அவர்கள், 'அல்லாஹ்வின் அருளால் நலமடைந்துவிட்டார்கள்" என்று கூறினார்கள். உடனே அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி), அலீ(ரலி) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு அவர்களிடம், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் மூன்று நாள்களுக்குப் பிறகு, (பிறரின்) அதிகாரத்திற்குப் பணிந்தவராக ஆம்விடப்போகிறீர்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விரைவில் தம் இந்த நோயின் காரணத்தால் இறந்துவிடப் போகிறார்கள் என்றே கருதுகிறேன். மரணத்தின்போது அப்துல் முத்தலிபுடைய மக்களின் முகங்களை(ப் பார்த்து மரணக் களையை) அடையாணம் கண்டுகொள்பவன் நான். எனவே, எங்களை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். 'இந்த ஆட்சியதிகாரம் (அவர்கள் இறந்த பிறகு) யாரிடமிருக்கும்?' என்று கேட்டுக் கொள்வோம். நம்மிடம்தான் இருக்கும் என்றால் அதை நாம் அறிந்துகொள்வோம். அது பிறரிடம் இருக்கும் என்றால் அதையும் நாம் அறிந்துகொள்வோம். (தமக்குப் பின் யார் பிரதிநிதி என்பதை அறிவித்து) அவர்கள் நமக்கு இறுதி உபதேசம் செய்வார்கள்" என்று கூறினார்கள். அதற்கு அலீ(ரலி), 'நமக்கு அதைத் தர மறுத்துவிட்டால் அவர்களுக்குப் பிறகு மக்கள் நமக்கு (ஒருபோதும்) அதைத் தரமாட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்கமாட்டேன்" என்று பதிலளித்தார்கள். 

இறைத்தூதரிடம் ஒரு முக்கியமான கேள்வியை கேட்டுவிடுவோம் என்று சிலர் சொல்லும் போது, அலி அவர்கள் மறுத்துவிட்டார்கள்.  அவருக்கு அடுத்தபடியாக யார் நாற்காலியை பிடிப்பது என்பதைப் பற்றி கேட்பது இந்த சூழலில் மிகவும் முக்கியமான விஷயமாக உள்ளது. எனவே கேட்போம் என்றுச் சொன்னபோது, இதனை அலி மறுத்துவிட்டார். முஹம்மது மீது அலி அவர்களுக்கு நம்பிக்கையில்லை, ஒருவேளை ஆட்சி அதிகாரம் அன்சாரிகளுக்கு (மதினா முஸ்லிம்களுக்கு) என்று முஹம்மது சொல்லிவிட்டால், அதன் பிறகு  தனக்கு அதிகாரம் வராது என்பதால், அலி மறுத்துவிட்டார்.

முஹம்மது சொன்னது கூட வஹி தான் என்று ஓயாமல் சொல்லிக்கொண்டும், நம்பிக்கொண்டும் இருக்கிறார்கள் முஸ்லிம்கள். அப்படிப்பட்ட வஹி மூலமாக வரும் செய்தி எங்களுக்கு வேண்டாம் என்று உதறி தள்ளிவிட்டார், ஒரு சஹாபா அலி, இவர் முஹம்மதுவின் அன்பான மகளின் கணவராவார். அல்லாஹ் எடுக்கும் முடிவு, தங்களுக்கு சாதகமாக இல்லாமல் போய்விட்டால் என்ன செய்வது? எனவே, வாய்ப்பையை உருவாக்கக்கூடாது என்றுச் சொல்லி, அல்லாஹ்வையே ஜெயித்துவிட்டார் அலி.

அலி அவர்களுக்கு ஆட்சி அதிகாரம் செல்லக்கூடாது என்று ஆயிஷா அவர்கள் விரும்பியதாக, இன்னொரு ஹதீஸும் சொல்கிறது. முஹம்மது தனக்கு அடுத்து ஆட்சியை நடத்த அலியை தெரிவு செய்தாராமே என்று கேட்டதற்கு, அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை என்று ஆயிஷா அவர்கள் மறுத்தார்கள். இதனையும் நாம் புகாரி ஹதீஸில் காண்லாம்.

புகாரி 4459. அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார் 

"நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களிடம் (தமக்குப் பின் ஆட்சியாளராக இருக்கும்படி) இறுதிவிருப்பம் (வஸிய்யத்) தெரிவித்துவிட்டார்களாமே" என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கவர்கள், 'இதைச் சொன்னவர் யார்?' என்ற கேட்டுவிட்டு, '(நபி(ஸல்) அவர்களின் இறுதி வேளையில்) நான் அவர்களை என் நெஞ்சோடு அணைத்துக்கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் (எச்சில் துப்புவதற்காகப்) பாத்திரம் கொண்டு வரும்படி கூறிவிட்டு அப்படியே ஒரு பக்கம் சரிந்து இறந்துபோய்விட்டார்கள். (அவர்கள் இறந்ததைக் கூட) நான் உணரவில்லை. (நடந்தது இவ்வாறிருக்க) அலீ அவர்களுக்கு (ஆட்சிப் பொறுப்பை) எப்படி அவர்கள் சாசனம் செய்திருப்பார்கள்?' என்று கேட்டார்கள். Book :64

சஹாபாக்கள் - பொறுக்கி எடுத்த இஸ்லாமிய முத்துக்கள்:

அ) அலி அவர்கள் நல்ல வாய்ப்பை உருவாக்க மறுத்துவிட்டார்.

ஆ) உமர் அவர்கள், முஹம்மதுவினால் உண்டான வாய்ப்பையே தட்டிக் கழித்துவிட்டார்.

வாழ்க இஸ்லாம், வாழ்க இஸ்லாமிய ஆரம்ப கால முஸ்லிம்கள். பாவம் முஹம்மது, அல்லாஹ்வே தனக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் போது, இவரால்  என்ன செய்யமுடியும்? அல்லாஹ் சூழ்ச்சி செய்வதில் வல்லவராமே!

"அல்லாஹ்வா! சூழ்ச்சி செய்தான்! இல்லை இல்லை, சஹா பாக்கள் செய்த குழப்பத்தினாலும், ஆட்சி அதிகாரத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த ஆசையினாலும் இப்படி எங்கள் இறைத்தூதருடைய கடைசி ஆசை நிறைவேறவில்லை" என்று சில முஸ்லிம்கள் சொல்லக்கூடும். ஆனால், இது தவறு, இவர்களுக்கு இஸ்லாம் தெரியாது, குர்-ஆன் தெரியாது, அல்லாஹ்வைத் தெரியாது.  இவைகள் எல்லாம், அல்லாஹ்வின் அனுமதிக்கு உட்பட்டுத் தான் நடந்தது. புரியவில்லையா! அடுத்த தலைப்பில் தரப்படும் குர்-ஆன் வசனங்களைப் பாருங்கள். உண்மை புரியும்.

முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற தவறிய அல்லாஹ்

மேலோட்டமாக, மேற்கண்ட ஹதீஸ்களை பார்த்தால், உமரின் செயலினால் தான்  முஹம்மதுவின் கடைசி ஆசை நிறைவேறாமல் போய்விட்டது என்று சொல்லத்தோன்றும். ஆனால் உண்மையில், அல்லாஹ் நாடவில்லை, அதனால், முஹம்மதுவின் ஆசை நிறைவேறவில்லை என்பதை உணர்ந்துக் கொள்ளலாம்.

அ) உச்சு சப்பு இல்லாத அற்பமான விஷயங்களுக்கு அல்லாஹ் வசனங்களை இறக்குவார்.

ஆ) முஹம்மதுவின் ஆசைகளை பூர்த்திசெய்ய அல்லாஹ்விடமிருந்து ஈமெயில் சீக்கிரமாக வரும்.

இ) வளர்ப்பு மகனின் மனைவியை எடுத்து முஹம்மதுவிற்கு கொடுப்பதற்கு அல்லாஹ்வின் வஹி இறங்கிவரும்.

ஆனால், 23 ஆண்டுகள் உழைத்த உழைப்பின் கனி கனிந்துவரும் நேரத்தில், சஹாபாக்கள் செய்யப்போக்கும் கூச்சல் குழப்பம், அதிகார துர்பியரோகம், கொலைகள், அவமானங்கள் போன்றவைகள் நடக்கப்போகின்ற நேரத்தில் "அந்த சமுதாயத்துக்கு தேவையான வஹி அல்லாஹ்விடமிருந்து வராது". ஒரு வேளை வந்திருந்தாலும், அதனை உமர் போன்ற ஒரு மனிதரால் தடை செய்யமுடியும் என்றுச் சொல்லத்தோன்றுகிறது.

அடுத்த தலைவர் யார் வரவேண்டும் என்ற ஒரு தெளிவான வசனம் குர்-ஆனில் இல்லை, ஹதீஸில் இல்லை, சாவதற்கு முன்பாக யாரோ ஒருவரை விரல் நீட்டி காட்டிவிட்டுச் செல்லலாம் என்று விரும்பினாலும், அல்லாஹ் நாடவில்லை. 

குறைந்தபட்சம் ஒரு காகிதத்தில் எழுதி கொடுக்கலாம் என்று விரும்பினாலும், இஸ்லாமிய உம்மா மக்கள் சும்மாவே சண்டை போட்டுக்கொள்கிறார்கள். 

ஒலி வடியில் தான் எங்கள் குர்-ஆன் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது என்றுச் சொல்கின்ற முஸ்லிம்கள், ஏன் முஹம்மது ஒலிவடியில் தன் கடைசி ஆசையை சொல்லிவிட்டுச் சென்று இருக்கக்கூடாது என்று சிந்திக்கவேண்டும்.  கடைசி ஆசையைச் சொல்ல ஏன் கடைசி வரைக்கும் முஹம்மது காத்திருக்கும் படி அல்லாஹ் செய்தார்? ஒரு வாரம் அல்லது மாதத்துக்கு முன்பாகவே சொல்லிவிட்டுச் சென்று இருக்கலாம் அல்லவா?

இதுவரை முன்வைத்த விவரங்களுக்கு ஆமீன் என்றுச் சொல்லும் குர்-ஆன் வசனங்கள்:

அல்லாஹ்வின் சித்தமில்லாமல், எதுவும் உலகில் சிந்தாது:

குர்-ஆன் 9:51. "ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்" என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!

முஹம்மதுவின் கடைசி ஆசை, ஆசையாகவே நின்றுவிடும் என்று அல்லாஹ்வின் ஏட்டில் அல்லாஹ்வே முன்குறித்துள்ளான்:

குர்-ஆன் 57:22. பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.

குர்-ஆன் 57:23. உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.

இவ்விவரங்களை கீழ்கண்ட கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/ramalan2015day8.html

கேள்வி 357: அல்லாஹ்வை தொழுவது அல்லது முஹம்மதுவிற்கு பதில் சொல்வது எது முக்கியம்? அல்லாஹ்வா? அல்லது முஹம்மதுவா?

பதில் 357: அதிகார‌பூர்வமானதாக‌ கருதப்படும் ஹதீஸ்களின்படி, முஹம்மது தொழுகையில் (நமாஜ்) இருக்கும் போது, யாராவது அவருக்கு சலாம் (வணக்கம்) கூறினால், உடனே அவர்களுக்கு அவர் சலாம் கூற மறுத்துள்ளார். 

கீழ்கண்ட ஹதீஸ்களை படிக்கவும்:

புகாரி எண்:  3875

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது நாங்கள் அவர்களுக்கு சலாம் சொல்லுவோம். உடனே, அவர்கள் எங்களுக்கு பதில் சலாம் சொல்வார்கள். நாங்கள் (அபிசீனிய மன்னர்) நஜாஷீயிடமிருந்து திரும்பி வந்தபோது நபி(ஸல்) அவர்களுக்கு (அவர்கள் தொழுகையிலிருக்கும் போது) சலாம் சொன்னோம். அப்போது அவர்கள் எங்களுக்கு பதில் சலாம் சொல்லவில்லை. நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! (நீங்கள் தொழும் போது) நாங்கள் உங்களுக்கு சலாம் சொல்ல, நீங்களும் அதற்கு பதில் சலாம் சொல்லி வந்தீர்களே" என்று கேட்டோம். அதற்கு அவர்கள், 'நிச்சயமாக! தொழுகையில் கவனம் தேவைப்படுகிறது" என்று பதிலளித்தார்கள்.

புகாரி  எண்: 1217

ஜாபிர்பின் அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.

அவர்கள் என்னை தம் அலுவல் விஷயமாக (வெளியூர்) அனுப்பினார்கள். நான் அந்த வேலையை முடித்துத் திரும்பி வந்து நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினேன். அவர்கள் எனக்கு மறுமொழி கூறவில்லை. என் மனதில் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரிந்த சில எண்ணங்கள் தோன்றின. நான் தாமதமாக வந்ததால் என்மேல் நபி(ஸல்) கோபமாக இருக்கக் கூடும் என்று மனதிற்குள் கூறிக் கொண்டேன். பிறகு மறுபடியும் ஸலாம் கூறினேன். அவர்கள் பதில் கூறவில்லை. முன்பைவிடக் கடுமையாக சந்தேகங்கள் ஏற்பட்டன. பின்னர் மீண்டும் ஸலாம் கூறினேன். எனக்கு பதில் ஸலாம் கூறிவிட்டு நான் தொழுது கொண்டிருந்ததால்தான் உமக்குப் பதில் கூறவில்லை என்று கூறினார்கள். (நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்தபோது) கிப்லா அல்லாத திசையை நோக்கி தம் வாகனத்தின் மீதமர்ந்து தொழுது கொண்டிருந்தனர். 

இது ஒரு சிறந்த கோட்பாடு அல்லது சிறந்த கட்டளையாகும், அதாவது ஒருவர் தன்னை படைத்தவனை, காப்பவனை தொழுதுக்கொண்டு இருக்கும் வேலையில், அதைவிட முக்கியமான வேலை அவருக்கு என்ன இருக்கப்போகிறது? 

ஆனால், முஹம்மது இதற்கு நேர் எதிராக‌ நடந்துக்கொண்டு, தான் சொன்னதை தானே செய்யாமல் இருந்திருக்கிறார். அதாவது ஒரு மனிதன் தொழுகையில் இருக்கும் போது, முஹம்மது அவரை அழைத்தார், அதற்கு அம்மனிதர் தொழுகையில் இருந்தவாரே பதில் தரவில்லை என்றுச் சொல்லி, அம்மனிதரை முஹம்மது கடிந்துக்கொண்டார். இதில் இன்னும் மோசமான‌ விவரம் என்ன‌வென்றால், அந்த‌ முஸ்லீம் தன் தொழுகையை பாதியில் நிறுத்திவிட்டு அல்லாஹ்வின் தூதருக்கு பதில் தரவேண்டும் என்பதை நியாயப்படுத்த‌ முஹம்மது குர்ஆன் வசனத்தையே ஆதாரமாக‌ காட்டியது தான்!

புகாரி எண்: 4647

அபூ ஸயீத் இப்னு முஅல்லா(ரலி) அறிவித்தார்

நான் ('மஸ்ஜிதுந் நபவீ' பள்ளிவாசலில்) தொழுது கொண்டிருந்தேன். அப்போது என்னைக் கடந்து சென்ற இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். நான் தொழு(து முடிக்கு)ம்வரை அவர்களிடம் செல்லவில்லை. பிறகு நான்  அவர்களிடம் சென்றேன். அவர்கள் என்னிடம், 'நீங்கள் ஏன் என்னிடம் உடனே வரவில்லை? அல்லாஹ், 'இறைநம்பிக்கையாளர்களே! இறைத்தூதர் உங்களை அழைக்கும்போது அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரைந்து பதில் அளியுங்கள்' என்று கூறவில்லையா?' எனக் கேட்டார்கள். . . .

புகாரி எண்: 5006

அபூ ஸயீத் இப்னு முஅல்லா(ரலி) அறிவித்தார்

நான் (பள்ளிவாசலில்) தொழுது கொண்டிருந்தபோது என்னை நபி(ஸல்) அவர்கள் அழைத்தார்கள். (தொழுகையில் இருந்தமையால்) நான் அவர்களுக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை. (தொழுது முடித்த பிறகு) 'இறைத்தூதர் அவர்களே! நான் தொழுது கொண்டிருந்தேன். (எனவேதான் உடனடியாக தங்களுக்கு நான் பதிலளிக்கவில்லை)' என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ், '(இறைநம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வும் (அவனுடைய) தூதரும் உங்களை அழைக்கும்போது அவர்களுக்கு பதிலளியுங்கள்' என்று (திருக்குர்ஆன் 08:24 வது வசனத்தில்) சொல்லவில்லையா?' என்று கேட்டார்கள். . . . 

தன்னை படைத்த இறைவனை தொழுதுக்கொள்ளும் செயலைவிட தனக்கு மதிப்பு அதிகமாக தரவேண்டும் என்று முஹம்மது எண்ணியுள்ளார் என்பதை இதன் மூலம் அறியலாம். இந்த விவரம் பற்றி மேலதிக விவரங்களுக்காக‌ கீழ்கண்ட கட்டுரைகளை படிக்கவும்: 

இந்த நிகழ்ச்சி முஹம்மதுவின் முரண்பட்ட செயலுக்கான இன்னொரு உதாரணமாகும். அதாவது தான் எதை பிரச்சாரம் செய்தாரோ அதை அவரே (முஹம்மதுவே) பின்பற்றவில்லை. தன்னை பின்பற்றுகிறவர்கள் தங்கள் தொழுகையை பாதியிலே நிறுத்திவிட்டு, தனக்கு பதில் தரவேண்டும் என்று எதிர்ப்பார்த்தார், ஆனால் அதே போல அவர்களுக்கு இவர் செய்யவில்லை. 

கேள்வி 358: முஹம்மதுவின் பேரப்பிள்ளைகள் யார்?

பதில் 358: முஹம்மதுவிற்கு மூன்று மகன்களும், நான்கு மகள்களும் இருந்தார்கள். இவர்களில் மகன்கள் அனைவரும் சிறு வயதிலேயே மரித்துவிட்டார்கள். முஹம்மதுவிற்கு மகள்கள் மூலமாகத் தான் பேரப்பிள்ளைகள் பிறந்தார்கள்.

இஸ்லாமிய அறிஞர்களின் படி, முஹம்மதுவிற்கு 8 (எட்டு) பேரப்பிள்ளைகள் இருந்ததாக கூறப்படுகின்றது.

மகள் ஃபாத்திமா மற்றும் மருமகன் அலி மூலமாக, 5 பேரப்பிள்ளைகள் பிறந்தார்கள். முன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள்:

  • மகன்கள்: ஹசேன், ஹுசேன், முஹஸ்ஸன் 
  • மகள்கள்: ஜைனப், உம் குல்தும்

மகள் ஜைனப்விற்கு(கணவர்: அபி அஸ் இப்னு அர்ரபி) இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள்: அலி (குழந்தையாக இருக்கும் போது மரித்துவிட்டார்), மகள் அமாமா.

மகள் ருகைய்யாவிற்கு மருமகன் உஸ்மான் மூலமாக ஒரு மகன் 'அப்துல்லாஹ்' பிறந்தார்.

இந்த எட்டு பேர் தான் முஹம்மதுவின் பேரப்பிள்ளைகள்.

கேள்வி 359: முஹம்மதுவின் பேரன்களில் யார் 'இஸ்லாமிய அரசு தலைவராக (கலீஃபாவாக) பதவி வகித்தார்'?

பதில் 359: ஃபாத்திமாவிற்கும் அலிக்கும் பிறந்த ஹசேன் என்ற மகன் ஐந்தாவது கலீஃபாவாக பதவி ஏற்றார். நான்காவது கலிஃபாவாக இருந்தவர் இவரது தந்தை அலி ஆவார். இவர் ஆறு அல்லது ஏழு மாதங்கள் தான் கலீஃபாவாக இருந்தார், இவரிடமிருந்து இந்த பதவியை வலுக்கட்டாயமாக பிடுங்கப்பட்டு, முஅவியா 1 என்பவர் கலீஃபாவாக மாறினார்.

அதன் பிறகு ஹசேன், மதினாவில் தமது 45 வயது வரை உயிரோடு இருந்ததாகவும், இவரது மனைவியே இவருக்கு விஷம் வைத்து கொன்றதாகவும் கூறப்படுகின்றது.

கேள்வி 360: ஓமன் நாட்டு அரசனுக்கு  முஹம்மது அனுப்பிய செய்தி என்ன? இஸ்லாமிய அழைப்பு எப்படி விடுக்கப்பட்டது?

பதில் 360: ஓமன் நாட்டின் ஜுலந்தா சகோதரர்களுக்கு (Julanda Brothers) முஹம்மது நபி தன் சகாக்கள் 'அமர் பின் அல்-'அஸ் அல்-சஹமி மற்றும் அபு ஜையத் அல்-அன்சாரி' மூலமாக அனுப்பிய செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"நேர்வழியில் நடப்பவன் மீது சாந்தி உண்டாகட்டும்! இஸ்லாமிற்கு நான் உங்களை அழைக்கிறேன். என் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் சேதமாகாமல் இருப்பீர்கள். நான் மனித இனத்திற்காக வந்த இறைவனின் தூதுவன் (தீர்க்கதரிசி) ஆவேன், தீமை செய்பவர்கள் மீது இறைவனின் வார்த்தையை காட்டுவதற்காக வந்தேன். எனவே, நீங்கள் இஸ்லாமை அங்கீகரித்தால், என் வலிமையை (POWER) உங்களுக்குத் தருவேன். ஆனால், நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்தால், உங்கள் வலிமை (POWER) அழிக்கப்படும். என் குதிரைகள் உங்கள் நாட்டின் நிலத்தில் பாளயமிறங்கும், என் தீர்க்கதரிசனம் உங்கள் நாட்டின் மீது வெற்றிக்கொள்ளும்."

In English:

"Peace be upon the one who follows the right path! I call you to Islam. Accept my call, and you shall be unharmed. I am God's Messenger to mankind, and the word shall be carried out upon the miscreants. If, therefore, you recognize Islam, I shall bestow power upon you. But if you refuse to accept Islam, your power shall vanish, my horses shall camp on the expanse of your territory and my prophecy shall prevail in your kingdom."

[அரபி மொழியில் எழுதப்பட்ட இந்த கடிதத்தின் உண்மை புகைப்படத்தை இங்கு (sizes 27K or 772K) காணலாம், மற்றும் இச்செய்தியின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் இங்கு (31K) காணலாம். இந்த இரண்டும் "ஓமன் நாட்டின் சோஹார் கோட்டையில், பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது]

சோஹருக்கு முஹம்மதுவின் செய்தியாளர்கள் வந்துச் சென்ற இரண்டரை நூற்றாண்டுகளுக்கு பின்பு, சரித்திர ஆசிரியர் அல்-பலதூரி (al-Baladhuri) கீழ் கண்டவாறு விவரிக்கிறார்.

"ஓமன் நாட்டு மக்கள் சத்தியத்தின் ஆதாரத்திற்கும், மற்றும் இறைவனுக்கும் அவரது நபிக்கும் கீழ் படிவதற்கு உறுதியளித்தபோது, அமர், அவர்களது அமீர் மற்றும் அபு ஜையத் இவர்கள் தொழுகையை நடத்துவதற்கும், இஸ்லாம் பற்றி விவரிப்பதற்கும், குர்‍ஆனை கற்றுக்கொடுப்பதற்கும் மற்றும் இஸ்லாம் மதத்தின் பிரமாணங்களை கற்றுக் கொடுப்பதற்கும் பொறுப்பாளிகளாக்கப்பட்டார்கள்."

மேற்கத்திய நாடுகளில் வாழும் முஸ்லீம்கள் "எங்கள் மார்க்கத்தில் கட்டாயம் இல்லை" என்று வாதம் புரிவார்கள். இப்படிப்பட்டவர்களின் சொந்த நபியினுடைய சுன்னா இவர்களின் இந்த வாதத்திற்கு முரண்பட்டதாக இவர்களுக்குத் தெரியவில்லை?

இதைப் பற்றிய மேலதிக விவரங்களை அறிய கீழ்கண்ட தமிழ் கட்டுரையை படிக்கவும்:

கருத்துகள் இல்லை: