பரிசுத்த பைபிளை உறுதிப்படுத்தும் குர்-ஆன்
வசனங்களின் பட்டியல்
தொகுத்தவர்: சாம் ஷமான்
பரிசுத்த பைபிளை குர்-ஆன் எப்படி நோக்குகிறது என்பதைப் பற்றி அதிகமாக நாம் எழுதியுள்ளோம், அவைகளை இங்கு சொடுக்கி படிக்கலாம்.
நாம் அனேக கட்டுரைகளை எழுதியுள்ளோம், மேலும் இஸ்லாமியர்களோடு அனேக விவாதங்களில் பங்கு பெற்று, குர்-ஆன் எப்படி பரிசுத்த பைபிளை நோக்குகிறது, உறுதிப்படுத்துகிறது மேலும் கனப்படுத்துகிறது என்பதை விளக்கியுள்ளோம். தற்காலத்தில் பைபிள் பற்றி இஸ்லாமியர்கள் கருதுவது போல, குர்-ஆனோ அல்லது ஆரம்பகால இஸ்லாமியர்களோ கருதவில்லை. அதாவது பைபிள் பாதுகாக்கப்படவில்லை என்றோ அல்லது தீர்க்கதரிசிகள் மற்றும் இறைத்தூதர்களின் உண்மையான செய்தியை பைபிள் கொண்டு இருக்கவில்லை என்றோ குர்-ஆன் கூறுவதில்லை.
இந்த கட்டுரையில் நாம் என்ன செய்யப்போகிறோம் என்றால், குர்-ஆன் எந்தெந்த வசனங்களில் வெளிப்படையாக முந்தைய தீர்க்கதரிசிகள் மூலமாக கொடுக்கப்பட்ட முந்தைய வேதங்களை உறுதிப்படுத்துகிறதோ, அந்த வசனங்களை தொகுத்து கொடுக்கிறோம். இந்த பட்டியலின் மூலமாக, வாசகர்களுக்கு நன்மை உண்டாகும், அதாவது "எப்படி குர்-ஆன் பரிசுத்த பைபிளை உறுதிப்படுத்துகிறது" என்ற தலைப்பில் இஸ்லாமியர்களோடு உரையாடும் போது ஒரு கோர்வையான வசன பட்டியலின் இந்த தொகுப்பு அவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
இந்த கட்டுரையில் நாம் முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியிட்ட குர்-ஆன் தமிழாக்கத்திலிருந்து வசனங்களை குறிப்பிடுகிறோம்.
இன்னும் நான் இறக்கிய(வேதத்)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது; நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்; இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி(ஒழுகி) வருவீர்களாக. (குர்-ஆன் 2:41)
அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது; இ(ந்த குர்ஆன் வருவ)தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக (இந்த குர்ஆன் மூலமே அல்லாஹ்விடம்) வேண்டிக்கொண்டிருந்தார்கள். (இவ்வாறு முன்பே) அவர்கள் அறிந்து வைத்திருந்த(வேதமான)து அவர்களிடம் வந்த போது, அதை நிராகரிக்கின்றார்கள் இப்படி நிராகரிப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது! (குர்-ஆன் 2:89)
"அல்லாஹ் இறக்கி வைத்த (திருக்குர்ஆன் மீது) ஈமான் கொள்ளுங்கள்" என்று அவர்களுக்கு சொல்லப்பட்டால், "எங்கள் மீது இறக்கப்பட்டதன் மீதுதான் நம்பிக்கை கொள்வோம்" என்று கூறுகிறார்கள் அதற்கு பின்னால் உள்ளவற்றை நிராகரிக்கிறார்கள். ஆனால் இதுவோ(குர்ஆன்) அவர்களிடம் இருப்பதை உண்மைப் படுத்துகிறது. "நீங்கள் உண்மை விசுவாசிகளாக இருந்தால், ஏன் அல்லாஹ்வின் முந்திய நபிமார்களை நீங்கள் கொலை செய்தீர்கள்?" என்று அவர்களிடம் (நபியே!) நீர் கேட்பீராக. (குர்-ஆன் 2:91)
யார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதியாவான்) என்று (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார்; அது, தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது;இன்னும் அது வழிகாட்டியாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது. (குர்-ஆன் 2:97)
அவர்களிடம் உள்ள(வேதத்)தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது, வேதம் வழங்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வேதத்தைத் தாங்கள் ஏதும் அறியாதவர்கள் போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டார்கள். (குர்-ஆன் 2:101)
(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான்; இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான். (குர்-ஆன் 3:3)
(நினைவு கூருங்கள்:) நபிமார்(கள் மூலமாக அல்லாஹ் உங்கள் முன்னோர்)களிடம் உறுதிமொழி வாங்கியபோது, "நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்திருக்கின்றேன். பின்னர் உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் ரஸூல் (இறைதூதர்) வருவார். நீங்கள் அவர்மீது திடமாக ஈமான் கொண்டு அவருக்கு உறுதியாக உதவி செய்வீர்களாக" (எனக் கூறினான்). "நீங்கள் (இதை) உறுதிப்படுத்துகிறீர்களா? என்னுடைய இந்த உடன்படிக்கைக்குக் கட்டுப்படுகிறீர்களா?" என்றும் கேட்டான்; "நாங்கள் (அதனை ஏற்று) உறுதிப்படுத்துகிறோம்" என்று கூறினார்கள்; (அதற்கு அல்லாஹ்) "நீங்கள் சாட்சியாக இருங்கள்; நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் (ஒருவனாக) இருக்கிறேன்" என்று கூறினான். (குர்-ஆன் 3:81)
வேதம் வழங்கப்பட்டவர்களே! நாம் உங்கள் முகங்களை மாற்றி, அவற்றைப் பின்புறமாகத் திருப்பிவிடுவதற்கு முன்னே அல்லது (சனிக்கிழமையில் வரம்பு மீறிய) "அஸ்ஹாபுஸ் ஸப்து" என்றோரை நாம் சபித்த பிரகாரம் சபிக்கும் முன்னே, உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மையாக்கி அருளப் பெற்ற இ(வ்வேதத்)தை (குர்ஆனை) நம்புங்கள்; அல்லாஹ்வின் கட்டளை, நிறைவேற்றப்பட்டே தீரும். (குர்-ஆன் 4:47)
மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக; உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்; அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம்; ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்); எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும், அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது; நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான். (குர்-ஆன் 5:48)
இந்த வேதத்தை - அபிவிருத்தி நிறைந்ததாகவும், இதற்குமுன் வந்த (வேதங்களை) மெய்ப்படுத்துவதாகவும் நாம் இறக்கி வைத்துள்ளோம்; (இதைக்கொண்டு) நீர் (நகரங்களின் தாயாகிய) மக்காவில் உள்ளவர்களையும், அதனைச் சுற்றியுள்ளவர்களையும் எச்சரிக்கை செய்வதற்காகவும், (நாம் இதனை அருளினோம்.) எவர்கள் மறுமையை நம்புகிறார்களோ அவர்கள் இதை நம்புவார்கள். இன்னும் அவர்கள் தொழுகையைப் பேணுவார்கள். (குர்-ஆன் 6:92)
இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று; (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து வந்தது என்பதில் சந்தேகமேயில்லை.(குர்-ஆன் 10:37)
(நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது; இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது. (குர்-ஆன் 12:111)
(நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்துள்ள இவ்வேதம் உண்மையானதாகவும், தனக்கு முன்னால் உள்ள (வேதத்)தை மெய்ப்பிப்தும் ஆகும்;நிச்சயமாக அல்லாஹ், தன் அடியார்களை நன்குணர்ந்தவன்; பார்த்துக் கொண்டிருப்பவன். (குர்-ஆன் 35:31)
அப்படியல்ல! அவர் சத்தியத்தையே கொண்டு வந்திருக்கிறார்; அன்றியும் (தமக்கு முன்னர் வந்த) தூதர்களையும் உண்மைப்படுத்துகிறார். (குர்-ஆன் 37:37)
இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் (நேர்வழி காட்டியாகவும்) ரஹ்மத்தாகவும் இருந்தது; (குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும்; இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது. (குர்-ஆன் 46:12)
(ஜின்கள்) கூறினார்கள்: "எங்களுடைய சமூகத்தார்களே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவிமடுத்தோம், அது மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டிருக்கின்றது, அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மை படுத்துகிறது. அது உண்மையின் பக்கமும், நேரான மார்க்கத்தின் பாலும் (யாவருக்கும்) "வழி" காட்டுகின்றது.(குர்-ஆன் 46:30)
முந்தைய வேதங்கள் பற்றி குர்-ஆனின் நிலைப்பாடு மேற்கண்ட வசனங்களில் வெளிப்படையாக தெரிகிறது. குர்-ஆன் ஆக்கியோன், தன்னுடைய காலத்தில் வாழ்ந்த யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடம் இருந்த வேதமானது, உண்மையான இறைவனின் வார்த்தையாகும் என்று நம்புகிறார், மேலும் அந்த இறைவனின் வார்த்தையாகிய பரிசுத்த வேதாகமம் பாதுக்காக்கப்பட்டுள்ளது, அதனை உறுதிப்படுத்துவதே குர்-ஆனின் வேலையாகும் என்றும் அவர் நம்புகிறார். எந்த ஒரு நபர் பரிசுத்த பைபிள் மற்றும் குர்-ஆனை படிப்பாரோ, அவர் "குர்-ஆனின் வேலை பைபிளை உறுதிப்படுத்துவதே" என்பதை அறிந்துக்கொள்வார். இதுவரை நாம் கண்ட விவரங்களின் மூலம் கிடைக்கும் முடிவு என்னவென்றால், குர-அன் என்பது ஒரு இறைவனின் வேதமல்ல என்பதாகும். அதாவது, எந்த வேலைக்காக குர்-ஆன் அனுப்பப்பட்டதோ அந்த வேலையை செய்வதில் (முந்தைய வேதங்களை உறுதிப்படுத்துதல்) குர்-ஆன் தோல்வி அடைந்துவிட்டது. மேலும் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், குர்-ஆன் தனக்குத் தானே குற்றப்படுத்திவிட்டது, அதாவது. பைபிள் இறைவனின் வேதம் என்று ஒரு பக்கம் பறைசாற்றுகிறது, அதே நேரத்தில், அதே பைபிளின் அடிப்படை கோட்பாடுகளுக்கு சத்தியங்களுக்கு எதிராக, தன்னிடம் வசனங்களையும் கொண்டுள்ளது. இது தான் தன் மீது தானே மண்ணை வாரி இறைத்துக் கொள்வதாகும்.
பைபிள் பற்றி குர்-ஆன் – கட்டுரைகள்
சாம் ஷமான் அவர்களின் இதர கட்டுரைகள்
ஆங்கில மூலம்: The Quran as a Confirmation of the Holy Bible
© Answering Islam, 1999 - 2013. All rights reserved.
2 கருத்துகள்:
மிக நீண்ட நாட்களின் பின் இக்கட்டுரை உயிர்பிக்கப்பட்டுள்ளது. கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும்.
கிறிஸ்தவர்களுக்கு இதனால் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுகின்றது. காதல் என்ற பெயரால் ஏமாறும் கத்தோலிக்க ஆண்களும் பெண்களும் ஏராளமானோர் இருக்கிறார்கள்.
கர்த்தர் தாமே அவர்களின் கண்களை திறப்பாராக.
அன்பான சகோதரருக்கு,
நீங்கள் கீழ்கண்ட கட்டுரையை குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் – பாகம் 5 - போதகரின் மகள் இமாமின் மகனை திருமணம் செய்தால்?
முடிந்தால், இந்த தொடர் கட்டுரைகளை சபை போதகர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள், பிரிண்ட் எடுத்து கொடுங்கள், அவர்களுக்கும் இஸ்லாமை அறிய இது உதவியாக இருக்கும்.
கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும்.
கருத்துரையிடுக