(கிறிஸ்தவத்தில் ஹலால்/ஹராம் vs இஸ்லாமில் ஹராம்/ஹலால்)
முஹம்மது அவர்கள் கொண்டு வந்த செய்தியும், முந்தைய நபிமார்கள் கொண்டு வந்த செய்தியும் ஒன்று தான் என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள். இதற்கு குர்ஆனையும் ஹதீஸ்களையும் ஆதாரமாக காட்டுவார்கள்.
உதாரணத்திற்கு கீழ்கண்ட குர்ஆன் வசனத்தை கவனிக்கவும்:
2:136. (முஃமின்களே!)"நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்" என்று கூறுவீர்களாக. (டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்)
முக்கியமாக, யூத கிறிஸ்தவ நபிமார்களின் வழியில் தான் முஹம்மது வந்தார் என்பதை நிருபிக்க இப்படி முஸ்லிம்கள் கூறுகிறார்கள். முஹம்மது என்பவர் இயேசுவின் வழியில் வந்த நபி அல்ல என்பதை பைபிளை படிக்கும் கிறிஸ்தவர்கள் நன்கு அறிவார்கள். ஆனால், முஸ்லிம்களோ "இல்லை, இயேசுவின் செய்தியும் முஹம்மதுவின் செய்தியும் ஒன்று தான்" என்று அழுத்தமாக கூறுவார்கள்.
இப்படிப்பட்ட முஸ்லிம்கள் குர்ஆனையும் படிப்பதில்லை, பைபிளையும் படிப்பதில்லை. குறைந்தபட்சம் புதிய ஏற்பாட்டையும் படிப்பதில்லை. ஆகையால், அவர்களால் இயேசுவின் செய்திக்கும் முஹம்மதுவின் செய்திக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை அறியமுடிவதில்லை.
முஹம்மதுவையும், இயேசுவையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்து பார்க்கிறார்கள் முஸ்லிம்கள். உண்மையில், இவ்விருவரும் நேர் எதிர் துருவங்கள் என்பதை முஸ்லிம்கள் அறியார்கள். இந்த விவரம் பற்றிய விழிப்புண்ர்வை முஸ்லிம்களுக்கு கொண்டுவரவேண்டும் என்பதற்காக, இந்த தொடர் கட்டுரைகள் எழுதப்படுகின்றன. முக்கியமான கோட்பாடுகளில், இவ்விரு மார்க்கங்களும், நேர் எதிர் கருத்தை கொண்டுள்ளது என்பதை விளக்குவது தான் இக்கட்டுரைகளின் நோக்கம்.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், இயேசு எவைகளை ஹலால் என்று சொல்லியுள்ளாரோ, அதனை முஹம்மது ஹராம் என்று போதனை செய்துள்ளார். இயேசு எவைகளை ஹராம் என்று போதித்துள்ளாரோ, அவைகளை முஹம்மது ஹலால் என்று போதனை செய்துள்ளார்.
ஹலால் / ஹராம்:
இஸ்லாமில் இவ்விரு வார்த்தைகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. ஒரு அசைவ உணவகத்திற்குள் நுழையும் போது ஹலால் என்ற ஒரு அரபி வார்த்தையை ஒரு விளம்பரபலகையாக ஒட்டியிருப்பதை பார்த்து இருந்திருப்பீர்கள். அதன் அர்த்தம், இந்த ஹோட்டலில் "இஸ்லாமின் முறைப்படி அறுக்கப்பட்ட மாமிசம் பயன்படுத்தப்பட்டுள்ளது" என்று பொருளாகும்.
- "ஹலால்" என்றால் அனுமதிக்கப்பட்டது என்று அர்த்தம்
- "ஹராம்" என்றால் தடுக்கப்பட்டது (அனுமதிக்கப்படாதது) என்று அர்த்தம்
இந்த ரமலான் மாதம் முழுவதும், இந்த தலைப்பில் நாம் ஆய்வுக் கட்டுரைகளை காண்போம். இதன் மூலமாக, இஸ்லாமின் மற்றும் கிறிஸ்தவத்தின் கோட்பாடுகளை சுருக்கமாக அறிந்துக் கொள்ளமுடியும்.
1) தொழுகை முறைகள்:
முதலாவதாக, நம் ஆய்விற்கு 'தொழுகை' பற்றி பார்ப்போம். அதாவது இயேசு சொல்லிக்கொடுத்த தொழுகையானது/ஜெப வழிமுறையானது, எப்படி முஹம்மது சொல்லிக் கொடுத்த தொழுகைக்கு எதிராக உள்ளது என்பதை பார்ப்போம். முஹம்மது கற்றுக்கொடுத்த தொழுகை, இயேசுவின் படி ஹராம். அதே போல, இயேசு சொல்லிக்கொடுத்த தொழுகையானது, முஹம்மதுவிற்கு ஹராம்.
இஸ்லாமின் ஐந்து தூண்களில் ஒன்றாக தொழுகை உள்ளது. இதனை "இறைவனை வழிபடுதல்" என்று கூட சொல்லலாம். ஒவ்வொரு மார்க்கத்தாருக்கும் வெவ்வேறு வகையான தொழுகை/ஆராதனை முறைகள் உள்ளன. இவைகளை நாம் குற்றம் சொல்லமுடியாது. நாம் பின்பற்றும் மார்க்கத்தில் எப்படி தொழுதுக்கொள்ள கற்றுக் கொடுக்கிறார்களோ, அப்படித் தான் நாம் இறைவனை தொழுதுக் கொள்கிறோம்.
இயேசுவும் இஸ்லாமிய முறைப்படித் தான் தொழுதுக்கொண்டார் என்று முஸ்லிம்கள் அறியாமையினால் சொல்வதினால் நாம் அவர்களுக்கு இவ்விரு மார்க்கங்களின் தொழுகையில் உள்ள வித்தியாசத்தை விளக்கவேண்டிய அவசியத்தில் உள்ளோம்.
இயேசுவின் படி ஜெபம்/தொழுகை:
எப்படி ஜெபிக்கவேண்டும் என்று இயேசு தெளிவாகவும், சந்தேகத்திற்கு இடமில்லாமலும் சொல்லிகொடுத்தார். ஜெபம் அல்லது தொழுகை என்பது மனிதனுக்கு இறைவனுக்கு இடைப்பட்ட ஒரு உரையாடல், இதில் எந்த ஒரு பந்தாவோ, பகட்டு புகழ்ச்சியோ, பெருமைப்பட்டுக் கொள்வதோ கூடாது என்பது இயேசுவின் போதனையாகும்.
மத்தேயு 6:5-13
5. அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
6. நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.
7. அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.
8. அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.
9. நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;
10. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
11. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.
12. எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
13. எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.
நாம் இறைவனோடு பேசும் போது, தொழுதுக்கொள்ளும் போது, உட்கார்ந்து ஜெபிக்கலாம், நின்றுக்கொண்டு ஜெபிக்கலாம், பயணம் செய்துக்கொண்டு இருக்கும் போதும் மனதுக்குள் ஜெபிக்கலாம். பயணம் செய்யும் போது, நம்மோடு யார் உட்கார்ந்து இருக்கிறார்கள், எப்படிப்பட்ட இடம் போன்றவைகளை கவனிக்கத்தேவையில்லை. எங்கும் வியாபித்து இருக்கும் தேவனிடம் பேசுவதற்கு இடம் சுத்தம், உடல் சுத்தம் தேவையா என்ன? மனது சுத்தமாக வைத்துக்கொண்டால் போதாதா?
மேற்கண்ட வசனங்களை படித்துப்பாருங்கள், அவைகளில் தொழுதுக்கொள்ளும் விதத்தை இயேசு சொல்லிக் கொடுத்துள்ளார். இயேசுவின் படி இது தான் ஹலால் (அனுமதிக்கப்பட்டது), இதில் மனிதனின் மேன்மை வெளியே தெரியாது. ஒரு அறைக்குள் சென்று யாருமே பார்க்காத போது, தனியாக இறைவனை தொழுதுக் கொள்ளும் போது, ஜெபிக்கும் போது, நம் ஆன்மீக பகட்டு வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. நான் இறைவனை தொழுதுக் கொள்வதை மற்றவர்கள் பார்க்கவேண்டும், தனக்கு புகழ்ச்சி வரவேண்டும் என்று யூத தலைவர்கள் செய்வது போல செய்யவேண்டாம் என்று இயேசு எச்சரித்தார். தனிப்பட்ட முறையில் தொழுகை புரிவதில், இயேசுவின் படி, இப்படிப்பட்ட தொழுகைதான் ஹலால் தொழுகை.
முஹம்மதுவின் படி தொழுகை:
முஹம்மது அல்லது இஸ்லாம் சொல்லிகொடுக்கும் தொழுகையைப் பாருங்கள். தொழுகை என்றால் ஒரு வகையான உடற்பயிற்சி போல அது தோன்றும். நிற்பது, பாதியாக குனிவது, உட்காருவது, நெற்றி பூமியில் படுவதுபோல குனிவது, மறுபடியும் எழுந்திருப்பது, வலது பக்கமும் இடது பக்கமும் முகத்தைத் திருப்பி ஊதுவது என்று பல வழிமுறைகள் இஸ்லாமில் உண்டு.
முஸ்லிம்களின் தொழுகை முறையை அறியாதவர்கள், இஸ்லாமிய தொழுகையில் வழிமுறைகளை படங்களாக பார்க்க இந்த தொடுப்பை சொடுக்கவும்.
முஹம்மதுவின் காலத்தில் இருந்த பலதெய்வ வழிப்பாட்டு மக்களின் மார்க்க வழக்கங்களை முஹம்மது இஸ்லாமில் புகுத்திவிட்டார். உதாரணத்திற்கு ஸாபியீன்கள் என்ற ஒரு இன மக்களைச் சொல்லலாம். இவர்களது வழிபாடுகளில் பலவற்றை இஸ்லாமில் காணலாம். இதைப் பற்றிய ஒரு சிறுகுறிப்பை கீழ்கண்ட கட்டுரையில் படிக்கலாம்: இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் எங்கேயிருந்து வந்தன?
இயேசுவின் படி ஹராம் - இஸ்லாமிய தொழுகை முறை:
ஆவியாக இருக்கின்ற தேவனிடம், முழு இருதயத்தோடு அன்புகூர்ந்து தொழுதுக்கொள் என்று இயேசு கூறினார், மக்கள் காணும்படி தொழவேண்டாம் என்றார், ஆனால், முஸ்லிம்கள் சாலைகளிலும், பேருந்து நிலையங்களிலும் மக்கள் தங்களை காணும்படி தொழுதுக் கொள்கிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட சடங்காச்சாரங்கள் இல்லாமல், சுதந்திரமாக தேவனை தொழுதுக் கொள்ளுங்கள் என்று இயேசு போதித்தார், இஸ்லாமியர்களோ ஒரு உடற்பயிற்சி அல்லது யோகா என்றுச் சொல்லக்கூடிய பயிற்சி போன்று, முந்தைய கால மக்களின் பழக்கங்களை அப்படியே பின்பற்றி அல்லாஹ்வை தொழுதுக் கொள்கிறார்கள். முஸ்லிம்களின் இந்த தொழுகை, இயேசுவின் படி ஒரு ஹராம் தொழுகையாகும். முஸ்லிம்கள், இதனைக் கேட்டு துக்கமடையலாம். ஆனால், வேறு வழியில்லையே, பைபிளில் இயேசு இப்படித்தான் போதித்துள்ளார்.
எங்கும் வியாபித்து இருக்கின்ற தேவனை, கிறிஸ்தவர்கள் தங்கள் முழு இருதயத்தோடு அன்பு கூர்ந்து தொழுதுக் கொள்கிறார்கள்.
- நின்று தொழுகிறார்கள்,
- முழங்கால் படியிட்டு தொழுகின்றார்கள்,
- நடந்துக்கொண்டு ஜெபிக்கிறார்கள்,
- பாடல்கள் பாடி மகிழ்கிறார்கள், ஜெபிக்கிறார்கள்.
கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருப்பதே உங்கள் பலன் என்று பைபிள் சொல்வதினால், ஒரு தனி அறையில் சில நிமிடங்கள் ஜெபித்துவிட்டு வெளியே வரும் கிறிஸ்தவனின் மனநிலை(ஆவி) உயர்ந்து இருக்கும், உற்சாகம் அடைந்து இருக்கும், நம்பிக்கையோடு இருக்கும். எதிர்காலம் பற்றி ஒரு தெளிவோடு கிறிஸ்தவன் வாழ்வதற்கு காரணம், அவன் எப்படி தன்னை தொழுதுக் கொள்ளவேண்டும் என்ற ஒரு தெளிவான வழிமுறையை இயேசு சொல்லிக்கொடுத்து இருப்பதினாலும், அதனை கிறிஸ்தவன் செய்வதினாலும் தான்.
நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சரி, சத்தியம் இது தான். இயேசுவின் படி இஸ்லாமிய தொழுகை முறையானது ஹராமாகும். முஹம்மதுவின் படி, கிறிஸ்தவ முறையான தொழுகை முறை ஹராமாகும்.
இவ்விருவரும் நேர் எதிர் துருவங்கள் ஆவார்கள்.
குறிப்பு:
இஸ்லாமின் தொழுகை முறையை பைபிள் புறக்கணிக்கிறது என்பதை கவனித்த முஸ்லிம்கள், பைபிளின் வசனங்களை ஆதியாகமத்திலிருந்து புதிய ஏற்பாடு வரை ஆங்காங்கே எடுத்து, "பார்த்தீர்களா! பைபிளின் படி தொழுகையானது இஸ்லாமிய தொழுகையே என்று பொய்யான பிம்பத்தை உருவாக்கி மக்களை ஏமாற்றுகிறார்கள்". முஸ்லிம்களால், பைபிளில் ஒரே இடத்தில் இஸ்லாமிய தொழுகையை ஆதரிக்கின்ற வசனங்களை மேற்கோள் காட்டமுடியாது. பைபிளின் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை, எந்த ஒரு நபியாவது முஸ்லிம்கள் தொழுவதுபோன்று அனைத்து நிலைகளையும் கடைபிடித்து தொழுததாக ஒரு ஆதாரத்தை முஸ்லிம்களால் காட்டமுடியாது என்பதை ஒரு சவாலாக முன்வைக்கமுடியும். பைபிளின் வழியில் வந்த நபி முஹம்மது அல்ல என்பதற்கு இது ஒரு முக்கியமான நிருபனமாகும்.
2019 ரமளான் கட்டுரைகள்
அனைத்து ரமளான் தொடர் கட்டுரைகளை படிக்க
உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்
Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2019ramalan/2019-ramalan-1.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக