இஸ்லாமில் "கிப்லா" முக்கிய இடத்தை பிடித்துள்ளது. முஸ்லிம்கள் தொழுகை செய்யும் போது, ஒரு திசையை நோக்கி தொழுதுக்கொள்வார்கள், அந்த திசைக்கு கிப்லா என்பார்கள்.
முஸ்லிம்கள் உலகில் எந்த பகுதியில் வாழ்பவராக இருந்தாலும் சரி, அவர் நமாஜ் (தொழுகை) செய்யும் போது, தன் முகத்தை சௌதி அரேபியாவில் உள்ள மக்கா நகரத்திற்கு நேராக திருப்பிக்கொண்டு தொழவேண்டும். மக்கா நகரத்தில் தான் "காபா" என்ற ஆலயம் உள்ளது என்பதால், முஸ்லிம்கள் கேள்வி கேட்காமல் அதன் பக்கம் திரும்பியே தொழவேண்டும். உலகின் மசூதிகள் அனைத்தும், இதன் அடிப்படையில் தான் கட்டப்படுகின்றன.
உதாரணத்திற்கு:
- தமிழ் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் தொழும்போது, வடக்கு நோக்கி (கிப்லா) தொழுவார்கள்.
- அமெரிகாவில் உள்ளவர்கள், கிழக்கு நோக்கி தொழுவார்கள், ஏனென்றால் அமேரிக்காவிற்கு கிழக்கில் சௌதி அரேபியா (மக்காவும், காபாவும்) இருப்பதினால்.
- மக்காவிற்கு புனித ஹஜ் பயணம் செய்யும் போது, காபாவை நோக்கி முஸ்லிம்கள் 360 டிகிரியில் தொழுவதைக் காணலாம்.
சில வேளைகளில் கிப்லா திசை எது என்று முஸ்லிம்களுக்கு தெரியாத பட்சத்தில் அதாவது ஹோட்டல்களில், விமான நிலையங்களில் "கிப்லா இந்த பக்கம்" உள்ளது என்ற அடையாளத்தை முஸ்லிம்கள் அறிவிப்பு பலகையாக எழுதி வைத்திருப்பார்கள். அதைப் பார்த்து முஸ்லிம்கள் தொழுவார்கள்.
முஹம்மதுவின் படி கிப்லாவை (திசையை) மாற்றி தொழுதால் அது ஹராம்:
இஸ்லாமின் படி, மக்காவை நோக்காமல், வேறு திசையை நோக்கி தொழுதால் அது ஹராம் ஆகும். அந்த தொழுகையை அல்லாஹ் ஏற்கமாட்டான். இப்படி தொழுபவன் முஸ்லிம் ஆகமாட்டான். அல்லாஹ்வின் கட்டளையை புறக்கணிப்பவன் எப்படி முஸ்லிமாவான்?
கீழ்கண்ட குர்ஆன் வசனங்களை படியுங்கள்:
2:143. இதே முறையில் நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம்; (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸூல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்; யார் (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள் யார் (அவரைப் பின்பற்றாமல்) தம் இரு குதிங் கால்கள் மீது பின்திரும்பி செல்கிறார்கள் என்பதை அறி(வித்து விடு)வான் வேண்டி கிப்லாவை நிர்ணயித்தோம்; இது அல்லாஹ் நேர்வழி காட்டியோருக்குத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு பளுவாகவே இருந்தது; அல்லாஹ் உங்கள் ஈமானை (நம்பிக்கையை) வீணாக்கமாட்டான்; நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன்.
2:145. வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் நீர் எல்லாவிதமான அத்தாட்சிகளையும் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உம் கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள்;; நீரும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றுபவர் அல்லர்; இன்னும் அவர்களில் சிலர் மற்றவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவர்களும் அல்லர்; எனவே (இதைப் பற்றிய) ஞானம் உமக்குக் கிடைத்த பின் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றி நடப்பீராயின், நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராக இருப்பீர்.
2:147. (கிப்லாவைப் பற்றிய) இவ்வுண்மை உம் இறைவனிடமிருந்து வந்ததாகும்; ஆகவே (அதனைச்) சந்தேகிப்போரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம்.
(டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்)
இயேசுவின் படி கிப்லா தொழுகை ஹராம்:
இயேசுவின் படி, இறைவன் எல்லா இடங்களில் நிறைத்துள்ளான், அனைத்து திசைகளிலும் அவன் இருக்கிறான், எனவே அவனை தொழுதுக்கொள்வதில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்கக்கூடாது என்பதால், தொழுகைக்கு ஜெபத்திற்கு திசை முக்கியமில்லை, முழு மனதுடன் அன்பு கூர்ந்து தொழுதுக்கொள்வது தான் உண்மையான பக்தி ஆகும்.
ஒரு முறை சமாரியா என்ற ஊரில் வாழ்ந்த ஒரு பெண்ணோடு இயேசு பேசும் போது, பிதாவை ஒரு குறிப்பிட்ட மலையில், குறிப்பிட்ட ஆலயத்தில் தொழுதுக்கொள்வது இனி தேவையில்லை, எல்லா இடங்களிலும் அவரை தொழுதுக்கொள்ளும் காலம் வருகிறது என்று கூறினார். இறைவனை எப்படி தொழுதுக் கொள்ளவேண்டும் என்றும் சுருக்கமாக கூறினார். இதனை கீழ்கண்ட வசனங்களில் காணலாம்:
யோவான் 4:20-24
20 எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டு வந்தார்கள்; நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே என்றாள்.
21 அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.
22 நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது.
23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
பழைய ஏற்பாட்டுக் காலத்தில், சலொமோன் எருசலேமில் தேவாலயம் கட்டுவதற்கு முன்புவரை, யூதர்கள் திசை இல்லாமல் தேவனை தொழுதார்கள். ஒரு பலிபீடத்தை கட்டி, அதே இடத்தில் தொழுதார்கள். ஆதாம் முதற்கொண்டு அனைவரும் அதாவது சலொமோனுக்கு முன்பு வரை தேவ மக்கள் தேவனை எல்லா திசைகளிலும் தொழுதார்கள். தேவன் அதனை தனக்கு விருப்பமான தொழுகையாக ஏற்றுக்கொண்டார். தன்னை தொழுதுக்கொள்கின்ற இடங்களில் வந்து மனிதனோடு பேசினார். தேவாலயம் எருசலேமில் கட்டியபிறகு அனைவரும் அதனை நோக்கியே தொழுதார்கள். தனக்கு ஒரு தேவாலயம் கட்டவேண்டும் என்று தேவன் கட்டளையிடவில்லை. தாவீது தேவனுக்கு ஆலயம் கட்டவிரும்பினார், சாலொமோன் அதனை கட்டிமுடித்தார். தானியேல் பாபிலோனுக்கு சிறையாக பிடிக்கப்பட்ட பிறகு, அவர் எருசலேமை நோக்கியே ஜெபம் செய்தார்.
சமாரியர்கள் யூதர்களிடமிருந்து பிரிந்த பிறகு அவர்கள் தங்களுக்கென்று ஒரு மலையை நிர்ணயித்துக்கொண்டு தேவனை அதில் தொழுதுக்கொண்டார்கள். மேற்கண்ட வசனங்களில் இயேசு, தனக்கு பிறகு தேவனை எப்படி தொழவேண்டும் என்று முதல் நூற்றாண்டிலேயே சொல்லிவிட்டார். தேவனை எங்கும் தொழுதுக் கொள்ளவேண்டும், ஒரு இடம், ஒரு திசை, ஒரு வகை என்று இல்லாமல், சுதந்திரமாக ஆவியாக உள்ள பிதாவை எப்படி தொழவேண்டும் என்று இயேசு முஹம்மதுவிற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே கட்டளை கொடுத்துவிட்டார். பிதாவானவர் இப்படிப்பட்ட தொழுகையைத் தான் விரும்புகிறார் என்றும் இயேசு தெளிவாக கூறிவிட்டார். இப்படி சொல்லிய பிறகும் ஏன் முஹம்மது கிப்லா என்ற கோட்பாட்டை உருவாக்கினார்?
கடைசியாக சொல்லவேண்டுமென்றால்,
- இயேசுவின் படி, எங்கும் இறைவனை தொழுதுக்கொள்வது தான் ஹலால்.ஒரு திசையை நோக்கி தொழுதுக்கொள்வது ஹராம்.
- இதே போல, முஹம்மதுவின் படி மக்காவை நோக்கி தொழுவது தான் ஹலால், இயேசு சொன்னது போல எல்லா திசைகளிலும் தொழுவது ஹராம் ஆகும்.
இந்த தொழுகை என்ற வித்தியாசமே, இவ்விரு மார்க்கங்களும் ஒன்றோடு ஒன்று முரண்படுவதை காணமுடியும். பைபிளின் படி வந்த நபி முஹம்மது அல்ல என்பது இதன் மூலம் தெளிவாக புரிந்துக் கொள்ளலாம்.
கிப்லா என்பது நடைமுறைக்கு ஏற்றதல்ல:
இயேசு மற்றும் முஹம்மதுவின் போதனைகளில் உள்ள வித்தியாசங்களை இப்போதைக்கு பக்கத்தில் வைத்துவிட்டு, கிப்லா என்பது நடைமுறைக்கு ஏற்றதா என்பதை சுருக்கமாக பார்ப்போம்.
வானத்தை நோக்கி தொழுதுக்கொள்ளும் முஸ்லிம்கள்:
கீழ்கண்ட படத்தைப் பாருங்கள்(படம் A). மக்கா மற்றும் காபாவிற்கு எதிர் முனையில் உள்ள நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் தொழும் போது, அவர்கள் உண்மையில் வானத்தை நோக்கியே தொழுதுக்கொள்கிறார்கள் அல்லது வெட்டவெளியை நோக்கியே தொழுதுக்கொள்கிறார்கள்.
படம் A:
இன்னும் சொல்லவேண்டுமென்றால், வானத்தில் உள்ள சூரியன் மற்றும் நட்சத்திரங்கள் போன்ற கோள்களை நோக்கியே அவர்கள் தொழுகின்றார்கள்.
நேர்க்கோடு ஏன் போடுகிறீர்கள், வளைவுக்கோடு போட்டுப்பாருங்கள் என்று முஸ்லிம்கள் சொல்லக்கூடும், பார்க்க படம் B:
படம் B:
இதிலும் பிரச்சனை உள்ளது. நீங்கள் வளைவுக்கோடு போடும் போது, தொழுதுக்கொள்ளும் நபரின் பின்புறத்திலிருந்தும் வளைவு கோடு தானாகவே போடப்படும். அதாவது தொழுதுக் கொள்ளும் நபரின் பின் புறமும் காபாவை நோக்கியே இருப்பதால், இஸ்லாமின் படி, இது பெரும் பாவமாகும்: பார்க்க படம் C:
படம் C:
இஸ்லாமின் படி, எந்த ஒரு முஸ்லிமும் தன் பின்புறத்தை காபாவிற்கு காட்டிக்கொண்டு தொழுதல் கூடாது. நாம் வளைவு கோடு போடுவோமென்றால், காபாவை அவமானப்படுத்தியவர்களாக ஆகிவிடுவோமில்லையா! பார்க்க படம் D.
தொழுகை புரியும் நபரின் முன் பின் இருபுறத்திலிருந்தும் வளைவு கோடு போடப்படும் போது, படம் இப்படி இருக்கும்.
படம் D:
இந்த கிப்லா பிரச்சனையை தீர்க்க ஒன்று செய்யலாம், அது என்னவென்றால், காபாவிற்கு நேரடியாக உள்ள நாடுகளில் இருப்பவர்கள், பூமியை நோக்கி (தரையைப் பார்த்து) தொழுதுக் கொள்ளலாம். அப்பொழுது நேர்க்கோட்டில் நாம் காபாவை தொழுவது போல ஆகும். பார்க்க படம் E.
படம் E
இதிலும் இன்னொரு பிரச்சனை உள்ளது, அதாவது மேலே தொழுகை புரியும் அந்த முஸ்லிம் உட்காரும் போது அவருடைய அடிபாகம் (மர்ம உறுப்புக்கள்) தரையில் தொட்டு இருப்பதினால், அவர் காபாவிற்கு நேராக அவருடைய மர்ம உறுப்புக்களை காட்டுவது போன்று ஆகிவிடுமே, இதுவும் இஸ்லாமின் படி பெரும் தவறாயிற்றே!
இஸ்லாமின் கிப்லாவை நாம் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல், பின்பற்ற விரும்பினால், ஒரே வழி தான் உள்ளது. அது என்னவென்றால், பூமி உருண்டை என்பதை ஒப்புக்கொள்ளாமல், அது தட்டையானது என்று நம்பினால் (இன்றும் முஸ்லிம் அறிஞர்களில் சிலர் இதனை நம்புகிறார்கள்), இது சாத்தியமாகும். ஆனால், இக்காலத்தில் முஸ்லிம்களில் யாராவது பூமி தட்டையானது என்றுச் சொல்லுவார்களா?
தேதி: 7th May 2019
அனைத்து ரமளான் தொடர் கட்டுரைகளை படிக்க
உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்
Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2019ramalan/2019-ramalan-2.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக