முஹம்மது தன் இறைச்செய்தியை மக்காவில் அறிவித்த போது, அவரது சொந்த ஜனங்கள், அதாவது குறைஷி மக்கள் அவரை எதிர்த்தார்கள். அவரையும் இஸ்லாமை ஏற்ற முஸ்லிம்களையும் கொடுமைப்படுத்தினார்கள். சிலர் மக்காவை விட்டு, வேறு நாட்டுக்கு இடம்பெயர்ந்து போனார்கள். கடைசியாக, முஹம்மதுவையும் கொல்வதற்கு அந்த குறைஷிகள் திட்டம் தீட்டியபோது, முஹம்மது மதினாவிற்கு இரகசியமாக சென்றுவிட்டார். இந்த இடம் பெயர்தலை ஹிஜ்ரி என்றுச் சொல்வார்கள்.
மதினாவில் முஹம்மது:
குறைஷிகள் முஹம்மதுவிற்கும், முஸ்லிம்களுக்கும் அனேக தொல்லைகளை மக்காவில் கொடுத்தனர். நான் இஸ்லாமை விட்டு, உங்கள் தெய்வங்களை வணங்குகிறேன் என்று முஹம்மது சொல்லியிருந்தால், அவர் நிம்மதியாக மக்காவில் இருந்திருப்பார்.
பத்ரூ என்ற இடத்தில் குறைஷிகளை தாக்கிய எதிரிகள், உதவிய முஸ்லிம்கள்:
மக்காவில் முஹம்மதுவும் முஸ்லிம்களும் அமைதியான வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டு இருந்தார்கள். ஒரு முறை குறைஷிகளின் வியாபாரக் கூட்டம், சிரியாவிலிருந்து மக்காவிற்கு திரும்பிக்கொண்டு இருந்தது. அவர்களிடம் இருந்த் செல்வங்களை கொள்ளையிடுவதற்கு ஒரு கொள்ளைக்கூட்டம் அவர்களைத் தாக்க முடிவு செய்தது. குறைஷிகள் முஹம்மதுவையும், முஸ்லிம்களையும் கொடுமைப்படுத்தினாலும், அவர்களை எதிர்களாக முஹம்மது பார்க்கவில்லை.
குறைஷிகளை ஒரு எதிர்க்கூட்டம் தாக்க வருகிறார்கள் என்பதை அறிந்த முஹம்மது, 313 முஸ்லீம்களை அழைத்துக்கொண்டு குறைஷிகளுக்கு உதவச் சென்றார்கள். மதினாவிலிருந்து கிட்டத்தட்ட 150 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து பத்ரூ என்ற இடத்தை அடைந்தார். அந்த பத்ரூ என்ற இடத்தில் குறைஷிகளை தாக்க வந்தவர்களோடு சண்டையிட்டு, குறைஷிகளின் வியாபார கூட்டத்தை காப்பாற்றினார். குறைஷிகளின் செல்வங்களும், இதர மக்களும் முஹம்மதுவினாலும், முஸ்லிம்களாலும் காப்பாற்றப்பட்டனர். இந்த சண்டையின் போது, 14 முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள்.
குறைஷிகளின் மனமாற்றம்:
வள்ளுவரின் "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் " என்ற குறளுக்கு விளக்கமாக முஹம்மது திகழ்ந்தார். குறைஷிகள் வெட்கத்தால் தலைகுனிந்தனர். இவரும் இவருடைய கூட்டமும் அழிய வேண்டுமென்று விரும்பி அவர்களை கொடுமைப்படுத்தியவர்களாகிய எங்களை முஹம்மது காப்பாற்றினாரே! என்ன ஒரு மார்க்கம், என்னே ஒரு மன்னிக்கும் மனப்பான்மை.
எதிரிகளையும் மன்னிக்கும் மனம் யாருக்கு வரும்? என்று பலவாறு எண்ணி குறைஷிகள் முஹம்மதுவையும் அவரது மார்க்கத்தையும் புகழ்ந்தார்கள்.
"பத்ரூ போரின் போது" உதவி வேண்டும் என்று கேட்காத போதும், தங்கள் உயிரையும், உடமைகளையும் காப்பாற்றிய முஹம்மதுவையும், முஸ்லிம்களையும் குறைஷிகள் மெச்சிக்கொண்டார்கள்.
முஸ்லிம்களை இப்படிப்பட்ட நற்சாட்சி பெற உதவியது எது? இஸ்லாம் தானே! இஸ்லாமின் போதனைகள் தானே! குர்ஆன் தானே என்று அறிந்து குறைஷிகளில் அனேகர் அன்று இஸ்லாமை ஏற்றனர்.
ஆனால், பத்ரூவில் நடந்தது என்ன?
இஸ்லாம் பற்றிய அடிப்படை விவரங்கள் அறியாத வாசகர்கள் மேற்கண்ட விவரத்தை படித்தவுடன், முஹம்மதுவின் மன்னிக்கும் செயலைக் கண்டு, மனம் நெகிழ்ந்து இருப்பார்கள். ஆனால், பத்ரூவில் நடந்தது என்ன? பத்ரூ போரில் கலந்துக்கொண்டவர்கள் யார்? மதினாவிற்கு 150 கிலோமீட்டர் தூரத்தில் சென்றுக்கொண்டு இருந்த குறைஷி வியாபார கூட்டத்தை தாக்கியது யார்? போன்ற கேள்விகளுக்கு இஸ்லாமிய புத்தகங்களிலிருந்தே நாம் பதில்களைக் காண்போம்.
பத்ரூ போர் பற்றி முஹம்மதுவின் வரலாறு கூறுபவை:
போருக்குரிய காரணம்
"உஷைரா' என்ற போரைப் பற்றி நாம் முன்பு குறிப்பிட்டபோது மக்காவிலிருந்து ஷாமிற்கு சென்று கொண்டிருந்த வியாபாரக் கூட்டம் ஒன்று நபி (ஸல்) அவர்களிடமிருந்து தப்பித்து விட்டது என்று கூறியிருந்தோம். இந்த வியாபாரக் கூட்டம் ஷாமிலிருந்து மக்காவிற்கு திரும்பும் நாள் நெருங்கிய போது இதன் செய்தியை அறிந்து வருவதற்காக தல்ஹா இப்னு உபைதுல்லாஹ், ஸஈது இப்னு ஜைது (ரழி) ஆகிய இருவரை நபி (ஸல்) மதீனாவின் வடக்குத் திசையின் பக்கம் அனுப்பினார்கள். இவ்விருவரும் 'ஹவ்ரா' என்ற இடத்தை அடைந்து அங்கு தங்கியிருந்தனர். அபூ ஸுஃப்யான் வியாபாரக் கூட்டத்துடன் அவ்விடத்தை அடைந்த போது அவ்விருவரும் மதீனாவிற்குத் திரும்பி, செய்தியை நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்.
இந்த வியாபாரக் கூட்டம் மிகப்பெரிய அளவில் குறைஷித் தலைவர்களுக்குரிய செல்வங்களுடன் சென்று கொண்டிருந்தது. இவர்களிடம் 50,000 தங்க நாணயங்களுக்குக் குறையாத அளவு வியாபாரப் பொருட்கள் 1,000 ஒட்டகங்களில் வந்து கொண்டிருந்தன. ஆனால், இவ்வளவு பெரிய வியாபாரக் கூட்டத்தைப் பாதுகாப்பதற்கு 40 வீரர்கள் மட்டுமே இருந்தனர்.
மக்காவாசிகளுக்கு பொருளாதார ரீதியாக மிகப்பெரிய சேதத்தை உண்டு பண்ணுவதற்கு இது முஸ்லிம்களுக்கு கிடைத்த பெரும் வாய்ப்பாகும். இந்த சேதத்தை ஏற்படுத்திவிட்டால் காலங்காலமாக காஃபிர்களின் உள்ளங்கள் துடிதுடித்துக் கொண்டேயிருக்கும். இப்போது நபி (ஸல்) முஸ்லிம்களுக்கு அறிவிப்புச் செய்தார்கள். "இதோ... குறைஷிகளின் வியாபாரக் கூட்டம் அவர்களது பொருட்களுடன் வருகிறது. அக்கூட்டத்தை நோக்கி நீங்கள் புறப்படுங்கள். அல்லாஹ் அந்தப் பொருட்களை உங்களுக்கு அளிக்கக் கூடும்" என்று நபி (ஸல்) கூறினார்கள்.
இப்போரில் கலந்துகொள்ள வேண்டுமென நபி (ஸல்) எவரையும் வலியுறுத்தவில்லை. காரணம் வியாபாரக் கூட்டத்திற்குப் பதிலாக மக்காவின் படையினருடன் பத்ர் மைதானத்தில் பெரிய அளவில் மூர்க்கமான சண்டையும் மோதலும் நிகழுமென்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அதாவது, செல்வங்களுக்குப் பதில் சண்டை நிகழுமென்று அப்பொழுது நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாததால் இப்பயணத்தில் கலந்து கொள்வது அவரவரின் விருப்பம் என்று நபி (ஸல்) விட்டு விட்டார்கள். இதற்கு முன்பு தாங்கள் கண்ட சிறிய பெரிய ராணுவப் பயணங்களில் நிகழ்ந்ததைப் போன்றுதான் இந்தப் பயணத்திலும் நிகழும் என்றெண்ணி அதிகமான நபித்தோழர்கள் இப்பயணத்தில் கலந்துகொள்ளாமல் மதீனாவிலேயே தங்கிவிட்டனர். அதை நபி (ஸல்) அவர்களும் குற்றமாகக் கருதவில்லை.
மூலம்: http://www.tamililquran.com/history.php?page=220 (ஆசிரியர் : ஸஃபியுர் ரஹ்மான் முபாரக்பூரி, தமிழாக்கம் : முஃப்தி அ. உமர் ஷரீஃப் காஸிமி)
மேற்கண்ட தொடுப்பைச் சொடுக்கி, இன்னும் அதிக விவரங்களை வாசகர்கள் அறிந்துக்கொள்ளலாம்.
பத்ரூ முஹம்மதுவிற்கு ஹலால்:
- குறைஷிகளின் வியாபாரக்கூட்டத்தை தாக்கி, அவர்களை கொள்ளை அடித்ததே முஹம்மது தான்.
- தன் இறைச்செய்தியை ஏற்கவில்லை என்பதற்காகவும், தங்களை துன்பப்படுத்தினதற்காகவும் பழிக்கு பழி வாங்கவே முஹம்மது சண்டையிட்டார்.
- மன்னிப்பு என்ற வார்த்தைக்கு இடமில்லை முஹம்மதுவிடம்.
- பத்ரூ வழிப்பறி கொள்ளையின் பது, 14 முஸ்லிம்களும், 70 குறைஷிகளும் கொல்லப்பட்டார்கள்.
- முஹம்மதுவின் படி, பழிக்கு பழி வாங்குவது ஹலால் ஆகும்.
பத்ரூ இயேசுவின் படி ஹராம்:
பத்ரூ போரின் பின்னணியையும், இதர சேதங்களையும், அதன் பின்பு நடந்தவைகளையும் பார்த்தால் இயேசு என்னவென்றுச் சொல்வார்? முஹம்மது செய்தது ஒரு ஹராமான காரியம் என்று இயேசு கூறுவார்.
மத்தேயு 5:44ன் படி முஹம்மது செய்தது ஹராம்:
மத்தேயு 5:44 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
தங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களை சுட்டெரிக்க விரும்பிய சீடர்கள் அதட்டிய இயேசு:
லூக்கா 9;54-56
54. அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள்.
55. அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி,
56. மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போனார்கள்.
இயேசு ஒரு போதும் வன்முறையை கையாளவில்லை. முக்கியமாக இறைவனின் தூதனாக இருக்கும் எந்த ஒரு நபரும், அவர் முஹம்மதுவே ஆனாலும் சரி, வன்முறையை கையாண்டு இருந்திருக்கக்கூடாது.
முஹம்மதுவின் பழிவாங்கும் குணம் இன்று முஸ்லிம்களிடம் காணப்படுகிறது:
அன்று முஹம்மது செய்தது போலவே, இன்று முஸ்லிம்கள் செய்கிறார்கள். அரசாங்கத்தை எதிர்க்கிறோம் என்றுச் சொல்லி, தீவிரவாத பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள். அப்பாவி மக்களைக் கொல்கிறார்கள்.
நான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் எழுதியது போன்று, முஹம்மது நடந்துக்கொண்டு இருந்திருப்பாரானால், இஸ்லாம் எங்கேயோ சென்று இருக்கும். உலக மக்கள் இஸ்லாமை தங்கள் தலையில் வைத்துக்கொண்டாடி இருந்திருப்பார்கள். ஆனால், இன்றோ பயங்கரவாத செயல் எங்கு நடந்தாலும் சரி, இஸ்லாமுடைய பெயர் தான் நினைவுக்கு வருகிறது, 10க்கு 9 முறை அதுதான் உண்மையாகவும் மாறுகிறது என்பதால் தான் உலகம் இஸ்லாமை புறக்கணிக்கிறது.
ஒவ்வொரு நாளும் இஸ்லாம் அனேகரை இழந்துக்கொண்டு இருக்கிறது. முஸ்லிம்கள் கிறிஸ்தவராகவும், நாத்தீகர்களாகவும், பெயரளவிற்கு முஸ்லிம்களாக வாழ்ந்து நடிப்பவர்களாகவும் மாறுவதற்கு முக்கிய காரணம் இஸ்லாமின் பழிவாங்கும் கோட்பாடு தான்.
நான் சொல்வதை வாசகர்கள் நம்பவேண்டாம், மேலே கொடுத்த முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று நூலை முஸ்லிம்களின் தளத்திற்கே சென்று படித்து அறிந்துக்கொள்ளுங்கள்.
முஹம்மதுவின் படி பத்ரூ போர் என்பது ஒரு ஹலால் செயல், இயேசுவின் படி பத்ரூ ஒரு ஹராமான அறுவருக்கத்தக்கச் செயலாகும்.
தேதி: 14th May 2019
2019 ரமளான் கட்டுரைகள்
அனைத்து ரமளான் தொடர் கட்டுரைகளை படிக்க
உமரின் இதர கட்டுரைகள்/மறுப்புக்கள் பக்கம்
Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2019ramalan/2019-ramalan-7.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக