கேள்வி: ஏன் தேவன் ஓசியா என்ற தீர்க்கதரிசியை விபச்சாரம் செய்ய கட்டளையிட்டார் (ஓசியா 1:2-3)? ஒரு முஸ்லிம் இந்த கேள்வியை கேட்டார்.
பதில்: இந்த கேள்வியைக் கேட்ட முஸ்லிம் சகோதரர், சரியாக ஓசியா புத்தகத்தை படிக்கவில்லை.
இந்த புத்தகத்தில் தேவன் ஓழியாவை விபச்சாரம் செய்யச் சொல்லவில்லை. இஸ்ரவேல் மக்கள் சோரம் போனார்கள், அதாவது மெய்யான தெய்வமாகிய யெகோவாவை தொழுதுக்கொள்ளாமல், அந்நிய தெய்வங்களை வணங்கினார்கள். இருந்தபோதிலும் தம் அன்பினால் தேவன் அவர்களை மறுபடியும் தம்மிடம் சேர்த்துக்கொண்டார், அவர்களின் துன்பங்களை நீக்கினார். ஆனால், அவர்கள் மறுபடியும் அந்நிய தெய்வங்களை வணங்க ஆரம்பித்தார்கள்.
இதனை விளக்கவும், இஸ்ரேல் மக்களின் கீழ்படியாமையையும் விளக்கவே, தம் தீர்க்கதரிசி ஓசியாவிடம் "நீ போய் ஒரு சோரம் போன ஸ்திரியை திருமணம் செய்துக்கொள்" என்றார். இங்கு திருமணம் பற்றி பேசப்படுகின்றது, விபச்சாரம் பற்றியல்ல.
ஓசியா 1:2-3
2. கர்த்தர் ஓசியாவைக்கொண்டு உரைக்கத்தொடங்கினபோது, கர்த்தர் ஓசியாவை நோக்கி: நீ போய், ஒரு சோர ஸ்திரீயையும் சோரப்பிள்ளைகளையும் உன்னிடமாகச் சேர்த்துக்கொள்; தேசம் கர்த்தரை விட்டு விலகிச் சோரம்போயிற்று என்றார்.
3. அவன் போய், திப்லாயிமின் குமாரத்தியாகிய கோமேரைச் சேர்த்துக்கொண்டான்; அவள் கர்ப்பந்தரித்து, அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.
ஓசியா தீர்க்கதரிசி தேவனுக்கு ஒப்பாகவும், அவர் திருமணம் செய்த அந்த சோரம் போன பெண், இஸ்ரேல் மக்களுக்கு ஒப்பாகவும் பாவித்து வசனங்கள் சொல்லப்பட்டுள்ளது. ஒரு தீய பெண்ணை திருமணம் செய்து, அவளுக்கு நல்ல வாழ்க்கை கொடுத்த பிறகு, அவள் மறுபடியும் தன் பழைய வாழ்க்கைக்கே திரும்பினால், தன் கணவருக்கு எவ்வளவு துக்கம் வருமோ, அதே போன்று, இஸ்ரவேல் மக்களின் செயல்களினால் தேவனின் மனதும் துக்கப்படுகின்றது என்பதைக் காட்டுகின்றது இந்த ஓசியா புத்தகம்.
தேவனின் சிறந்த நிபந்தனையற்ற அன்பைக் காட்டும் சிறப்பான புத்தகம் தான் ஓசியா. பரிசுத்தமான இறைவனுக்கு முன்பாக நாம் அனைவரும் 'பரிசுத்தமில்லாதவர்கள் என்றும், நாம் தவறு செய்துவிட்டு, மறுபடியும் மனந்திருந்தும் போது, நம்மை சேர்த்துக்கொள்கின்ற இறைவனாக' தேவன் இருக்கிறார் என்பதைத் தான் இந்த புத்தகம் காட்டுகின்றது.
எனவே, இந்த கேள்வியைக் கேட்ட முஸ்லிம் சகோதரர் ஓசியா புத்தகம் முழுவதையும் படிக்கும் படி நான் கேட்டுக்கொள்கிறேன்(ஓசியா புத்தகத்தில் 14 அத்தியாயங்கள் மட்டுமே உள்ளன, எனவே, சுலபமாக படித்து புரிந்துக்கொள்ளலாம்).
Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2020ramalan/2020-ramalan-19.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக