இது முஸ்லிம்களின் மிகப்பெரிய அறியாமையாகும்.
ஏசாயா 21:13
13. அரபியாவின் பாரம். திதானியராகிய பயணக்கூட்டங்களே, நீங்கள் அரபியாவின் காடுகளில் இராத்தங்குவீர்கள்.
அஹம்த் தீதத் போன்றவர்கள் இப்படிப்பட்ட முட்டாள்தனமான ஆய்வுகளை செய்வார்கள் என்று முஸ்லிம்கள் எதிர்ப்பார்த்து இருந்திருக்கமாட்டார்கள்.
இந்த வசனத்தில் அரபியாவின் பாரம் என்றுச் சொன்னால், அந்த நாட்டினருக்கு வரும் ஆபத்து அல்லது தீர்க்கதரிசனம் என்று பொருள், தேவன் அந்த மக்கள் மீது, அவர்களின் குற்றங்களுக்குத் தக்கதாக தண்டனை அளிக்கப்போகிறார் என்று பொருள்.
முஸ்லிம்களின் படி, "அரபியாவின் பாரம்" என்றால் "முஹம்மதுவின் இறைச்செய்தியை அறிவிப்பது என்பது பற்றியது" என்று அவர்கள் கருதினால், அதே ஏசாயா தீர்க்கதரிசன புத்தகத்தில் கீழ்கண்ட "நாடுகளின் பாரமும்" சொல்லப்பட்டுள்ளது. இப்போது முஸ்லிம்கள் தான் பதில் சொல்லவேண்டும், கீழ்கண்ட நாடுகளிலும் தீர்க்கதரிசிகள் எழும்பி இறைச்செய்தியை அறிவித்தார்களா? அந்த நபிகள் யார் என்று முஸ்லிம்கள் கூறுவார்களா? அவர்களை முஸ்லிம்கள் நம்புவார்களா?
ஏசாயா புத்தகத்தில் வரும் சில தண்டனைகள்/தீர்க்கதரிசன நாடுகள்/பகுதிகள்:
- பாபிலோன்மேல் வரக்கண்ட பாரம். (13:1)
- மோவாபின் பாரம் (15:1)
- தமஸ்குவின் பாரம். (17:1)
- எகிப்தின் பாரம் (19:1)
- கடல் வனாந்தரத்தின் பாரம். (21:1)
- தூமாவின் பாரம் (21:11)
- அரபியாவின் பாரம் (21:13)
- தரிசனப் பள்ளத்தாக்கின் பாரம் (22:1)
- தீருவின் பாரம் (23:1)
கடந்த நூற்றாண்டின் சிறந்த இஸ்லாமிய அறிஞர் என்று அழைக்கப்பட்ட அஹமத் தீதத் (மறைவு 2005) எவ்வளவு கீழ்தரமாக ஆய்வு செய்துள்ளார் பார்த்தீர்களா? இவருடைய பாணியில் வந்த இவருடைய சீடர் தான் ஜாகிர் நாயக் அவர்கள். இவர் நாட்டை விட்டு வெளி நாடுகளில் தலைமறைவாக வாழுகின்றார்.
Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2020ramalan/2020-ramalan-18-html.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக