கேள்வி: தேவனுக்கு எப்படி இரண்டு சேஷ்டபுத்திரர்கள் இருக்கமுடியும்? யாத் 4:22ன் படி யாக்கோபு, எரேமியா 31:9ன் படி எப்பிராயீம் சேஷ்ட புத்திரன்? இது முரண்பாடு அல்லவா?
இந்த கேள்வியை இஸ்லாமிய அறிஞர் அஹமத் தீதத் கேட்டார்
பதில்: இஸ்லாமிய அறிஞர் பைபிளை சரியாக படிக்கவில்லை, ஆய்வு செய்யவில்லை என்று இதன் மூலம் அறியமுடிகின்றது.
ஒரு விவரத்தை மனதில் வைக்கவேண்டும், தேவன் ஒருவரைப் பார்த்து "இவன் என் குமாரன், என் சேஷ்ட புத்திரன், என் மகள்" என்று சொல்கிறார் என்று வைத்துகொண்டால், அவர் ஆவிக்குரிய/ஆன்மீக வகையில் சொல்கிறார் என்று பொருளே தவிர, மனித முறையில் (உடலுறவு மூலமாக) பிறந்த பிள்ளைகள் என்று சொல்கிறார் என்று பொருள் கொள்ளக்கூடாது. முஸ்லிம்களிடம் பேசும் போது, இந்த விவரத்தை நாம் முதலாவது தெளிவு படுத்தவேண்டும். தேவனுக்கு சேஷ்ட புத்திரன் என்றுச் சொன்னால், அவருக்கும் அந்த மனிதனுக்கும் இடையே இருக்கும் விசேஷித்த உறவுமுறையை, உரிமையை வெளிப்படுத்துவதாக அது உள்ளது.
சரி, இப்போது பதிலுக்குச் செல்வோம், முதலாவது அஹமத் தீதத் அவர்கள் குறிப்பிட்ட வசனங்களை வாசிப்போம்.
யாத்திராகமம் 4:22
அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன்.
எரேமியா 31:9
அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழிநடத்துவேன்; அவர்களைத் தண்ணீருள்ள நதிகளண்டைக்கு இடறாத செம்மையான வழியிலே நடக்கப்பண்ணுவேன்; இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான்.
யாக்கோபு/இஸ்ரவேல்:
ஈசாக்கு மற்றும் ரெபேக்கள் தம்பதியினருக்கு பிறந்த இரண்டாவது மகன் தான் யாக்கோபு (இஸ்ரவேல் என்ற இன்னொரு பெயரை தேவன் இவருக்கு பிறகாலத்தில் கொத்தார்). ஈசாக்குக்கு பிறந்த இரண்டாவது மகனைத் தான் தேவன் "என் சேஷ்ட புத்திரன்" என்கிறார்.
எப்பிராயீம்:
யாக்கோபுக்கு பிறந்த முதலாவது மகன் "ரூபன்" என்பவர், ஆனால் இங்கே தேவன் "எப்பிராயீம்" என் சேஷ்ட புத்திரன் என்கிறார்.
ஈசாக்கின் முதல் மகன் ஏசாவை விட்டுவிட்டு, ஏன் இரண்டாவது மகன் யாக்கோபை தேவன் தெரிவு செய்தார்? இதே போன்று, யாக்கோபின் முதல் மகனாகிய "ரூபனை" விட்டுவிட்டு, ஏன் யாக்கோபின் பேரனை (எப்பிராயீமை) தெரிவு செய்தார்? ஆவிக்குரிய விதத்தில் அவர் மக்களை தெரிவு செய்கின்றார்.
சில வேளைகளில் வேறு காரணங்களும் இருக்கும், உதாரணத்திற்கு, யாக்கோபின் முதல் மகன், "ரூபன்" ஒரு கட்டளையை மீறி பெரும் பாவத்தை செய்தான், அதனால் சேஷ்ட புத்திர உரிமை "யோசேப்பின் குடும்பத்துக்கு" கொடுக்கப்பட்டது. பார்க்க I நாளாகமம் 5:1.
I நாளாகமம் 5:1
ரூபன் இஸ்ரவேலுக்கு முதற்பிறந்த சேஷ்டபுத்திரன்; ஆனாலும் அவன் தன் தகப்பனுடைய மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தினபடியினால், கோத்திரத்து அட்டவணையிலே அவன் முதற் பிறந்தவனாக எண்ணப்படாமல், அவனுடைய சேஷ்டபுத்திர சுதந்தரம் இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின் குமாரருக்குக் கொடுக்கப்பட்டது.
யோசேப்பிற்கு மனாசே என்பவர் தான் முதல் மகன் (சேஷ்ட புத்திரன்), அவனை விட்டுவிட்டு, இரண்டாவது மகன் "எப்பிராயீம்" என்பவரை தெரிவு செய்தார் தேவன் ஏன்? இதன் காரணத்தை அறிய கீழ்கண்ட வசனங்களையும் பார்க்கவும்.
யாக்கோபு மரிக்கும் நேரம் வந்தது, அவர் அனைவரையும் அழைத்து ஆசீர்வதிக்கிறார், அந்த நேரத்தில் யோசேப்பின் பிள்ளைகளை ஆசீர்வதிக்கும் போது, என்ன நடந்தது என்பதை பாருங்கள்.
ஆதியாகமம் 48: 13-20
13. பின்பு, யோசேப்பு அவ்விருவரையும் கொண்டுவந்து, எப்பிராயீமைத் தன் வலது கையினாலே இஸ்ரவேலின் இடது கைக்கு நேராகவும், மனாசேயைத் தன் இடதுகையினாலே இஸ்ரவேலின் வலதுகைக்கு நேராகவும் விட்டான்.
14. அப்பொழுது இஸ்ரவேல், மனமறிய, தன் வலதுகையை நீட்டி, இளையவனாகிய எப்பிராயீமுடைய தலையின்மேலும், மனாசே மூத்தவனாயிருந்தும், தன் இடதுகையை மனாசேயுடைய தலையின்மேலும் வைத்தான்.
. . .
17. தகப்பன் தன் வலதுகையை எப்பிராயீமுடைய தலையின்மேல் வைத்ததை யோசேப்பு கண்டு, அது தனக்குப் பிரியமில்லாதபடியால், எப்பிராயீமுடைய தலையின்மேல் இருந்த தன் தகப்பனுடைய கையை மனாசேயினுடைய தலையின்மேல் வைக்கும்படிக்கு எடுத்து:
18. என் தகப்பனே, அப்படியல்ல, இவன் மூத்தவன், இவனுடைய தலையின்மேல் உம்முடைய வலதுகையை வைக்கவேண்டும் என்றான்.
19. அவன் தகப்பனோ தடுத்து: அது எனக்குத் தெரியும், என் மகனே, எனக்குத் தெரியும்; இவனும் ஒரு ஜனக்கூட்டமாவான், இவனும் பெருகுவான்; இவனுடைய தம்பியோ இவனிலும் அதிகமாய்ப் பெருகுவான்; அவனுடைய சந்ததியார் திரளான ஜனங்களாவார்கள் என்றான்.
20. இவ்விதமாக அவன் அன்றைத்தினம் அவர்களை ஆசீர்வதித்து: தேவன் உன்னை எப்பிராயீமைப்போலவும் மனாசேயைப்போலவும் ஆக்குவாராக என்று இஸ்ரவேலர் உன்னை முன்னிட்டு வாழ்த்துவார்கள் என்று சொல்லி, எப்பிராயீமை மனாசேக்கு முன்னே வைத்தான்.
இதன் படி, முதலாவது தேவனுக்கு 'யாக்கோபு' சேஷ்ட புத்திரன், அதன் பிறகு யாக்கோபின் பிள்ளைகளில் ரூபனை விட்டுவிட்டு, அது யோசேப்பின் இரண்டாவது மகனுக்கு 'சேஷட புத்திர உரிமை' கொடுக்கப்பட்டது.
எனவே, தேவனுக்கு 'யாக்கோபு சேஷ்ட புத்திரன்', அதன் பிறகு 'எப்பிராயீம் சேஷ்ட புத்திரன்'. இந்த விவரம் தோறாவில் (ஐந்தாகமங்களில்) இருப்பதினால் யூதர்களுக்கு எந்த குழப்பமும் இல்லை. அஹமத் தீதத் போன்ற முஸ்லிம்கள் பைபிளை சரியாக படிக்காததினால், ஆய்வு செய்யாததினால் இப்படி குழம்புகிறார்கள்.
source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2020ramalan/2020-ramalan-19.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக