கேள்வி: ஏன் இயேசு யூத மத குருக்களை அதிகமாக தாக்கி பேசினார் (மத்தேயு 23:13-33; 21:45; 16:4) இந்த கேள்வியை அஹமத் தீதத் கேட்டார்.
பதில்: இந்த கேள்விக்கு பதிலை கொடுப்பதற்கு முன்பு, ஒரு முக்கியமான விவரத்தையும் சொல்லிவிடுகிறேன். இயேசு தம்மை ஏற்றுக்கொள்ளாத மத குருக்களை, தலைவர்களை எதிர்த்தது மட்டுமல்ல, அவர்கள் செய்கின்ற (தம்மை புறக்கணிக்கின்ற) செயலினால், நரகத்தில் தள்ளப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார். இப்படி வெறும் வார்த்தைகளோடு இயேசு நின்றுவிடவில்லை, ஒரு சாட்டையை தயார் செய்து, தேவாலயத்தில் வியாபாரம் செய்கின்றவர்களை தாக்கினார், ஆம், வியாபாரிகளின் கடைசிகளை உடைத்து தும்சம் செய்தார், தேவனுடைய ஆலயத்தை கள்ளர் குகை ஆக்காதீர்கள் என்றுச் சொல்லி கடினமாக நடந்துக்கொண்டார்.
இதனை மனதில் வைத்துக்கொள்ளவும், இப்போது ஏன் இப்படி இயேசு செய்தார் என்பதற்கான பதிலைக் காண்போம்.
முதலாவதாக, யூத மத தலைவர்களைக் காட்டிலும் இயேசுவிற்கு அதிகபடியான அதிகாரம் உள்ளது. யூதர்களின் மேசியாவாக வந்த இயேசுவிற்கு தம் 'மேசிய அதிகாரத்தை' பயன்படுத்தி, அவர்களுக்கு வழிகாட்ட அவருக்கு அதிகாரம் உள்ளது. மேலும் தாம் மேசியா என்பதை நிருபிக்க பல அற்புத அடியாளங்களை இயேசு செய்துக் காட்டினார். உண்மையான இறைவன் "நாம் நம் வாழ்வில் எந்த ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டாலும், நம்முடைய அனுமதியின்று அவைகளை சரி செய்ய அவருக்கு அதிகாரம் உண்டு'. ஏன் யூத தலைவர்களை அவர் கடிந்துகொண்டார்? மனிதனை படைத்த இறைவனுக்கு மனிதனின் தவறான வழியை சுட்டிக்காட்ட உரிமை உள்ளது.
இரண்டாவதாக, தாங்கள் மட்டும் நரகத்திற்குப் போகாமல், மற்றவர்களையும் அங்கு அழைத்துச் செல்ல அந்த மத தலைவர்கள் முயன்றதால், இன்னும் அதிகமாக அவர்களை கடிந்துகொள்ள மெய்யான தெய்வத்திற்கு உரிமையுண்டு, இதனை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
மத்தேயு 23:15. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.
ஆபிரகாமைக் காட்டிலும், மோசேயைக் காட்டிலும், சாலொமோனைக் காட்டிலும், தேவாலயத்தைக் காட்டிலும், அவ்வளவு ஏன் பழைய ஏற்பாட்டிற்கும் மேலாக இருக்கும் மேசியாவிற்கு, தன் முழு அதிகாரத்தை பயன்படுத்த உரிமையுண்டு என்பதை நாம் அறிந்துக்கொள்ளவேண்டும். அதனால் தான் மாய்மாலம் செய்த யூத தலைவர்களை கண்டித்தார், அதே நேரத்தில் நேர்மையாக நடந்துக்கொண்ட யூத மத தலைவர்களை மெச்சிக்கொண்டார், அவர்களை உற்சாகப்படுத்தினார்.
யோவான் 1:47 இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.
இதன் மூலம் நாம் பெறும் பாடம் என்ன? தவறான மத தலைவர்களை நாம் பின்பற்றக்கூடாது. இந்த வகையில் வந்தவர் தான் 'இஸ்லாமிய நபி முஹம்மது', இவர் ஒரு கள்ளத் தீர்க்கதரிசி.
தீத்து 1:13. இந்தச் சாட்சி உண்மையாயிருக்கிறது; இது முகாந்தரமாக, அவர்கள் யூதருடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய கற்பனைகளுக்கும் செவிகொடாமல்,
14. விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள்.
பொய்யான மத தலைவர்களை நாம் கடிந்துக்கொள்ளவேண்டும், அவர்களை உலகத்திற்கு அடையாளப்படுத்தி காட்டவேண்டும். ஒரு துக்ககரமான விஷயம் என்னவென்றால் தங்கள் மத தலைவர் எப்படிப்பட்டவர் என்று தெரிந்துக்கொள்ளாமல், கோடிக்கணக்கான மக்கள், அப்படிப்பட்டவர்களை பின்பற்றுவது தான். இந்த நிலையில் தான் முஸ்லிம்கள் உள்ளார்கள், அவர்கள் அறியாமையில் இருக்கிறார்கள், அவர்களின் அறியாமை போக்கப்படவேண்டும்.
ஆக, நேர்மையற்ற யூத மதத்தலைவர்களை இயேசு கடிந்துக்கொண்டதில் தவறு இல்லை. இதே போன்று இஸ்லாமிய நபியாகிய முஹம்மது போன்றவர்களின் உண்மை முகத்தை உலகிற்கு காட்டி, கடிந்துக்கொள்ளவேண்டியது நம் கடமையாகும். தவறான வழியில் செல்கின்ற முஸ்லிம்களுக்கு நேரான வழியை அதாவது இயேசுவைக் காட்டவேண்டியது நம் கடமையாகும்.
Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2020ramalan/2020-ramalan-19.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக