இறை நம்பிக்கையுள்ளவன் அற்புதங்களையும் நம்புவான். தேவனால் எதுவும் சாத்தியம்.
எண்ணாகமம் 22:28-31
28. உடனே கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார்; அது பிலேயாமைப் பார்த்து: நீர் என்னை இப்பொழுது மூன்று தரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன் என்றது.
29. அப்பொழுது பிலேயாம் கழுதையைப் பார்த்து: நீ என்னைப் பரியாசம் பண்ணிக்கொண்டு வருகிறாய்; என் கையில் ஒரு பட்டயம்மாத்திரம் இருந்தால், இப்பொழுதே உன்னைக் கொன்றுபோடுவேன் என்றான்.
30. கழுதை பிலேயாமை நோக்கி: நீர் என்னைக் கைக்கொண்ட காலமுதல் இந்நாள்வரைக்கும் நீர் ஏறின கழுதை நான் அல்லவா? இப்படி உமக்கு எப்போதாகிலும் நான் செய்தது உண்டா என்றது. அதற்கு அவன்: இல்லை என்றான்.
31. அப்பொழுது கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறந்தார்; வழியிலே நின்று உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்திருக்கிற கர்த்தருடைய தூதனை அவன் கண்டு, தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான்.
இயற்கையாகவே கழுதை பேசியது என்று சொன்னால், அது எப்படி சாத்தியம் என்று கேட்கலாம், ஆனால், மேற்கண்ட வசனத்தில் "கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார்" என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே, கர்த்தர் செய்த அற்புதத்தின் மூலமாகத் தான் கழுதை பேசியதே தவிர, இயற்கையான நிகழ்ச்சி அல்ல அது.
இந்த கேள்வியை ஒரு முஸ்லிம் சகோதரர் கேட்டதால், இஸ்லாமிலிருந்து ஒரு விவரத்தை காட்ட விரும்புகிறேன்.
மரம் அழுதது, முஹம்மது ஆறுதல் சொன்னார்
ஸஹீஹ் புகாரி 3583. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தூணாக இருந்த) ஒரு பேரீச்ச மரத்தின் அடிப்பகுதியின் மீது சாய்ந்தபடி உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் (மிம்பர்) உரைமேடையை அமைத்த பின்னால் அதற்கு மாறிவிட்டார்கள். எனவே, (நபி-ஸல்- அவர்கள் தன்னைப் பயன்படுத்தாததால் வருத்தப்பட்டு) அந்த மரம் ஏக்கத்துடன் முனகியது. உடனே, நபி(ஸல்) அவர்கள் அதனிடம் சென்று (அதை அமைதிப்படுத்துவதற்காக) அதன் மீது தன் கையை வைத்து (பரிவுடன்) வருடிக் கொடுத்தார்கள்.
மேற்கண்ட நிகழ்ச்சியில், மரம் அழுதது என்றுச் சொல்லப்படுவது ஒரு சாதாரண நிகழ்ச்சியாக சொல்லப்பட்டுள்ளது. அல்லாஹ் ஒரு அற்புதம் செய்து இதனை நிகழ்த்தியதாகச் சொல்லப்படவில்லை.
கழுதை பேசிய நிகழ்ச்சி என்பது, தேவைப்பட்ட நேரத்தில் தேவன் வந்து செய்த அற்புதமாகும். ஆனால், முஹம்மது பற்றிய நிகழ்ச்சி 'முஹம்மதுவின் பெயரை உயர்த்திக்காட்டுவதற்காக இஸ்லாமுக்கு 200 ஆண்டுகளுக்கு பிறகு இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸாகும்'.
அல்லாஹ் ஒரு இறைவனாக இருந்திருந்தால், அவனால் மரத்தை பேசவைக்க முடியும், இதனை நான் மறுக்கவில்லை, ஆனால் மேற்கண்ட ஹதீஸில் சொல்லப்பட்டது ஒரு இட்டுக்கட்டப்பட்ட நிகழ்ச்சி என்று சொல்கிறேன். அதுவும் எந்த ஒரு தகுந்த காரணமும் இல்லாமல் நடந்த நிகழ்ச்சியாக அது சொல்லப்பட்டுள்ளது, இது இட்டுக்கட்டவையேயாகும்.
Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2020ramalan/2020-ramalan-18-html.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக