முஸ்லிம் நண்பரே நீங்கள் மேற்கோள் காட்டிய வசனம் நீங்கள் சொல்வது போல சொல்லவில்லை. ஒருவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தால், ஒரு பெண்ணை நேசித்து, இன்னொரு பெண்ணை வெறுக்கும்படி தேவன் சொல்லவில்லை.
இவ்வசனத்தின் பின்னணி வேறு விதமாக உள்ளது, அதாவது தேவன் நீதி செய்கின்ற இறைவன் என்பதைத் தான் இவ்வசனமும் இதற்கு அடுத்து வரும் வசனங்களும் சொல்கின்றன.
உண்மையில் இவ்வசனங்கள் 'ஆண்களுடைய அநியாயமான செயல்பாட்டை தடுக்கும் வண்ணமாக உள்ளன'. சரி, வாருங்கள், இவ்வசனங்களை படிப்போம்:
உபாகமம் 21:15-17
15. இரண்டு மனைவிகளையுடைய ஒருவன், ஒருத்தியின்மேல் விருப்பாயும் மற்றவள்மேல் வெறுப்பாயும் இருக்க, இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றார்களேயாகில், முதற்பிறந்தவன் வெறுக்கப்பட்டவளின் புத்திரனானாலும்,
16. தகப்பன் தனக்கு உண்டான ஆஸ்தியைத் தன் பிள்ளைகளுக்குப் பங்கிடும்நாளில், வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்த முதற்பேறானவனுக்கு சேஷ்டபுத்திர சுதந்தரத்தை கொடுக்கவேண்டுமேயல்லாமல், விரும்பப்பட்டவளிடத்தில் பிறந்தவனுக்குக் கொடுக்கலாகாது.
17. வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்தவனை சேஷ்டபுத்திரனாக அங்கிகரித்து, தனக்கு உண்டான ஆஸ்திகளிலெல்லாம் இரண்டு பங்கை அவனுக்குக் கொடுக்கவேண்டும்; அவன் தன் தகப்பனுடைய முதற்பலன், சேஷ்டபுத்திர சுதந்தரம் அவனுக்கே உரியது.
அக்காலத்தில் ஒரு ஆணுக்கு முதலாவதாக பிறக்கும் ஆண் பிள்ளைக்கு, தகப்பனின் சொத்துக்களில் இரண்டு பங்குகள் கொடுக்கவேண்டும் என்ற சட்டம் இருந்தது. ஒருவேளை ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள் இருந்து, ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு மனைவியை அந்த ஆண் அதிகமாக நேசித்து, இன்னொரு மனைவியை வெறுத்து இருந்திருந்தாலும், முக்கியமாக இந்த வெறுக்கப்பட்ட பெண்ணுக்கு முதலாவதாக ஒரு ஆண் மகன் பிறந்திருந்தால். இந்த ஆண், தன் சொத்துக்களை பங்கிடும் போது, இந்த மகனுக்கு அவன் இரண்டு மடங்கு கொடுக்கவேண்டும் என்று தேவன் கட்டளையிடுகின்றார்.
இவ்வசனங்களின் மூலம் நமக்கு வெளிப்படும் விவரங்கள் இவைகள் தான்:
1) ஆண்கள் விரும்பி பல திருமணங்களைச் செய்தாலும், தங்களுடைய வக்கிர புத்தியினால், யார் அழகாக இவர்களுக்கு தென்படுவார்களோ, அவர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதை இஸ்லாமிய நபி முஹம்மதுவின் வாழ்விலும் காணலாம். முஹம்மது தமக்கு 53 வயது ஆகும் போது, 9 வயது சிறுமி ஆயிஷாவை திருமணம் செய்தார். இவருக்கு மொத்தம் 11 மனைவிகள். முதல் மனைவி இறந்த விட்டார்கள். இவருக்கு மற்ற மனைவிகளைக் காட்டிலும் இந்த பேத்தி வயது மனைவி தான் மிகவும் பிடித்தமான மனைவி (இந்த ஆயிஷா அவர்கள் தான் முஹம்மது கன்னிப்பெண்ணாக இருக்கும் போது திருமணம் செய்தார்). ஆயிஷா அவர்களுக்கு முஹம்மது அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தார்.
2) ஒரு ஆண் தான் அதிகமாக நேசிக்கும் மனைவிக்கு பிறந்த பிள்ளைகளுக்கு அதிகமான சொத்துக்களை கொடுப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. தன்னை தன் கணவர் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக நேசிக்கிறார் என்று அந்தப் பெண் பார்க்கும் போது, தன் பிள்ளைகளுக்கு அதிக சொத்துக்கள் வருவதற்கு அப்பெண், தன் கணவனிடம் பேசி, மற்றவர்களுக்கு அநீதி நடக்கும் படி செய்ய வாய்ப்பு உள்ளது.
3) இந்த அநீதியை தடுக்கவே மேற்கண்ட வசனங்களை தேவன் கட்டளையாக கொடுத்தார்.
4) மேலும் இந்த வசனங்களில் தேவன் நீங்கள் இப்படி பல திருமணம் செய்யுங்கள், சிலரை நேசித்து, சிலரை வெறுத்துவிடுங்கள் என்று சொல்லவில்லை. தேவனின் திட்டம் "ஒரு ஆணுக்கு ஒரு பெண்" என்பது தான், மனிதனின் ஆசையினால் அவன் பல திருமணங்களைச் செய்தான். இப்படிப்பட்ட நிலையிலும் சில சட்டங்களை மனிதன் மீறக்கூடாது, அநீதி நடக்கக்கூடாது என்பதற்காகத் தேவன் மேற்கண்ட அருமையான சட்டங்களைக் கொடுத்தார்.
முஸ்லிம்களே, பைபிளில் ஒரு வசனத்தை மட்டும் படிக்காமல், அதைச் சுற்றியுள்ள வசனங்களையும் படித்தால், பதில் கிடைக்கும். ஆனால், குர்ஆனில் அல்லாஹ் முஹம்மதுவின் மனைவிகளை பயமுறுத்துகிறார், "நீங்கள் பிரச்சனைகள் செய்தால், உங்களை முஹம்மது விவாகரத்து செய்துவிடுவார்" என்று பயமுறுத்தியுள்ளார்.
இதைப் பற்றி அறிய கீழ்கண்ட கட்டுரைகளை படியுங்கள்:
- தலாக் 3 – முஸ்லிம்களின் அன்னையர்களை மிரட்டிய (blackmail) அல்லாஹ்
- தலாக் 4 – இஸ்லாமிய அன்னையர்களுக்கு இரண்டாம் (தலாக்) மிரட்டல் விடுத்த அல்லாஹ்
- தலாக் 5 – நபிவழி: மனைவிக்கு வயதாகிவிட்டால் விவாகரத்து செய்யலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக