இவ்வசனங்களில் பெண்கள் 'சுத்திகரிப்பு' செய்வதற்காக 12 மாதங்கள் செலவழித்தார்கள் என்று சொல்லப்பட்டது, இது தேவன் கொடுத்த கட்டளையன்று, இது பெர்சிய அரசாங்கம் விதித்த கட்டளையாகும். பைபிளில் குற்றம் பிடிப்பதற்கென்றே வேண்டுமென்றே சரியாக ஆய்வு செய்யாமல், முஸ்லிம்கள் இந்த கேள்வியை கேட்டிருக்கிறார்கள்.
எஸ்தர் 2:9. அந்தப் பெண் அவன் பார்வைக்கு நன்றாயிருந்ததினால், அவளுக்கு அவன் கண்களிலே தயை கிடைத்தது; ஆகையால் அவளுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளையும், அவளுக்குத் தேவையான மற்றவைகளையும் அவளுக்குக் கொடுக்கவும், ராஜ அரமனையிலிருக்கிற ஏழு தாதிமார்களை அவளுக்கு நியமிக்கவும் ஜாக்கிரதைப்பட்டு கன்னிமாடத்தில் சிறந்த ஒரு இடத்திலே அவளையும் அவள் தாதிமார்களையும் வைத்தான்.
பெர்சிய அரசாங்கமோ, அல்லது பைபிளோ பெண்கள் அழுக்காக இருக்கிறார்கள் என்று இங்கு சொல்லவில்லை. இங்கு அரசருக்கு முன்பாக பெண்கள் வருவதற்கு முன்பாக, செய்யப்பட்டவேண்டிய "அழகு சுத்திகரிப்பு ஆகும்" இது.
பெண்களின் அழகு நிலையங்கள்: இன்றும் பெண்களுக்கென்று அழகு நிலையங்கள் இருக்கின்றன அல்லவா? பொதுவாகவே வசதி படைத்த பெண்கள் இன்றும், வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறை அழகு நிலையங்களுக்குச் சென்று தங்கள் தலைமுடி, நகங்கள், முகம், கை கால்கள் போன்றவைகளை மேலும் அழகுபடுத்திக்கொள்கிறார்கள்.
முக்கியமாக, திருமணத்திற்கு முன்பு மணப்பெண்ணை அழகு நிலையத்துக்குச் அழைத்துச் சென்று, பல மணி நேரம் அலங்காரம் செய்து, தயார் படுத்துகிறார்கள் அல்லவா! இதைத் தான் நாம் எஸ்தர் புத்தகத்தில் "சுத்திகரிப்பு" என்று பார்க்கிறோம்.
இதனை 12ம் வசனம் தெளிவாக விளக்குகிறது, இங்கு சுத்திகரிப்பு என்பது அழுக்கை நீக்குவது அல்ல, இன்னும் அழகாக மாற்றுவது.
எஸ்தர் 2:12. ஒவ்வொரு பெண்ணும் ஆறுமாதம் வெள்ளைப்போளத் தைலத்தினாலும், ஆறுமாதம் சுகந்தவர்க்கங்களினாலும், ஸ்திரீகளுக்குரிய மற்றச் சுத்திகரிப்புகளினாலும் ஜோடிக்கப்படுகிற நாட்கள் நிறைவேறி, இவ்விதமாய் ஸ்திரீகளின் முறைமைப்படி பன்னிரண்டு மாதமாகச் செய்யப்பட்டுத் தீர்ந்தபின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவினிடத்தில் பிரவேசிக்க, அவளவளுடைய முறை வருகிறபோது,
முஸ்லிம்கள் பைபிளிலிருந்து ஒரு கேள்வியை எழுப்புவதற்கு முன்பு, முழு அத்தியாயத்தையும் படித்தால், கேள்வி கேட்கவேண்டிய அவசியம் ஏற்படாது என்பது என் கருத்து.
இஸ்லாம் தான் பெண்களை அழுக்கானவர்களாக பாவிக்கிறது:
இஸ்லாமில் பெண்கள் தங்கள் மாதவிடாய் நேரங்களில் குர்ஆனை தொடக்கூடாது, தொழக்கூடாது, மசூதிக்கு வரக்கூடாது, நோன்பு நோர்க்கக்கூடாது ஏன்? ஏனென்றால் அல்லாஹ் அவர்களை அந்த சமயத்தில் அழுக்கானவர்களாக பார்க்கிறார்.
ஆனால், கிறிஸ்தவத்தில் பெண்கள் அப்படிப்பட்ட நேரங்களில் ஜெபம் செய்யலாம், சர்சுக்குச் சென்று எல்லா மக்களோடு சேர்ந்து தேவனை தொழுதுக்கொள்ளலாம், ஆராதனை செய்யலாம், பைபிளும் படிக்கலாம், ஏனென்றால், சரீர சூழ்நிலைகளை தேவன் பார்ப்பதில்லை, அவர் இருதயத்தை மட்டுமே பார்க்கிறார்.
இதை படித்துக்கொண்டு இருக்கின்ற நீங்கள் ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்தால், 'உண்மையைச் சொல்லுங்கள், உங்களை அழுக்கானவர்கள் என்று முத்திரை குத்துவது யார்? அல்லாஹ்வா? அல்லது இயேசுவா?'
Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2020ramalan/2020-ramalan-18-html.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக