இந்த வசனம் 'பெண்கள் ஆண்களின் உடைமைகள்" என்று சொல்லவில்லை.
உபாகமம் 5:21 பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய வீட்டையும், அவனுடைய நிலத்தையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார்.
ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் மனைவியையோ, மற்ற உடைமைகளையோ "இச்சிக்காமல், ஆசைப்படாமல்" இருக்கவேண்டும் என்று சொல்கிறதே ஒழியே, ஆண்களுக்கு பெண்கள் உடைமைகள் என்றுச் சொல்லவில்லை.
மேலும் கடைசி வார்த்தைகளைப் பாருங்கள் "பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக". அதாவது இவ்வசனத்தில் சொல்லப்படாத மற்றவனுக்குள்ளதை எதையுமே இச்சிக்கூடாது.
மற்றவனின் மனைவியை "இச்சிக்கக்கூடாது" என்று சொல்லப்பட்டுள்ளது, அதனால் "மற்றவனுடைய மகளை, மருமகளை, சகோதரிகளை" இச்சிக்கலாம் என்று அர்த்தம் கொள்ளமுடியுமா? இல்லையல்லவா?
ஆண்களுக்கு சொல்லப்பட்டது போன்று இவ்வசனம் பெண்களுக்கும் பொருந்துமல்லவா? வேறு ஒருவருடைய மனைவியை இச்சிக்கக்கூடாது என்பது போன்று, மற்ற பெண்ணின் 'கணவனை' இச்சிக்கக்கூடது அல்லவா? மேற்கண்ட வசனம் இருவருக்கும் பொருந்தும்.
எனவே, பத்தாவது கட்டளை பெண்களை 'சொத்துக்கள்' என்ற நிலையில் பழைய ஏற்பாடு வைக்கவில்லை என்பது தான் உண்மை.
குர்ஆனின் படி மனைவிகள் தான் முஸ்லிம்களின் விளைநிலங்கள் (சொத்துக்கள்)
2:223. உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்; உங்கள் ஆத்மாக்களுக்காக முற்கூட்டியே (நற்கருமங்களின் பலனை) அனுப்புங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! (முஹம்மது ஜான்).
இஸ்லாமில் பெண்கள், ஆண்களின் சொத்துக்கள் ஆவார்கள். மனைவியை அடிப்பதற்கு அல்லாஹ் முஸ்லிம்களுக்கு உரிமை கொடுத்துள்ளார். விவாகரத்து என்று வந்தால், பெண்களுக்கு ஒரு சட்டம் ஆண்களுக்கு ஒரு சட்டம். பெண்களின் சாட்சி, ஆண்களின் சாட்சியைவிட பாதி மட்டுமே. பெண்கள் தான் நரகத்தில் அதிகமாக இருப்பார்கள். இவைகள் எல்லாம் இஸ்லாமில் பெண்களின் நிலை.
தபரி சரித்திரத்தில் முஹம்மது என்ன கூறியுள்ளார் என்பதை கவனியுங்கள்:
முஹம்மது தமது கடைசி செய்தியிலே முஸ்லிம்களுக்கு சொன்ன அறிவுரைகளில் ஒன்று, கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்களே, பெண்கள் உங்களுடைய வீட்டு மிருகங்கள் போன்றவர்கள், அவர்களுக்கு எந்த சொத்துக்களையும் கொடுக்காதீர்கள் என்று அறிவுரை கூறுகின்றார்.
"Now then, O people, you have a right over your wives and they have a right over you. You have [the right] that they should not cause anyone of whom you dislike to tread your beds; and that they should not commit any open indecency (fahishah). If they do, then God permits you to shut them in separate rooms AND TO BEAT THEM, but not severely. If they abstain from [evil], they have the right to their food and clothing in accordance with custom (bi'l ma'ruf)." Treat women well, FOR THEY ARE [like] DOMESTIC ANIMALS ('awan) WITH YOU AND DO NOT POSSESS ANYTHING FOR THEMSELVES. (The History of Al-Tabari: The Last years of the Prophet, translated and annotated by Ismail K. Poonawala [State University of New York Press, Albany], Volume IX, p. 113; capital emphasis ours)
Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2020ramalan/2020-ramalan-18-html.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக