இது முரண்பாடு இல்லை, இவ்விரு வசனங்களையும் கூர்ந்து ஆய்வு செய்தால், உண்மை புரியும்.
ஆதியாகமம் 25
25:1. ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீயையும்(ishshah) விவாகம் பண்ணியிருந்தான்.
25:6. ஆபிரகாமுக்கு இருந்த மறுமனையாட்டிகளின்(pilegesh) பிள்ளைகளுக்கோ ஆபிரகாம் நன்கொடைகளைக் கொடுத்து, தான் உயிரோடிருக்கும்போதே அவர்களைத் தன் குமாரனாகிய ஈசாக்கைவிட்டுக் கிழக்கே போகக் கீழ்தேசத்துக்கு அனுப்பிவிட்டான்.
பொது மொழிப்பெயர்ப்பு:
ஆதியாகமம் 25:1 ஆபிரகாம் மீண்டும் திருமணம் செய்தான். அவனது மனைவியின் பெயர் கேத்தூராள்.
I நாளாகமம் 1:32. ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய(pilegesh) கேத்தூராள் பெற்ற குமாரர், சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்ஷானின் குமாரர், சேபா, தேதான் என்பவர்கள்.
எபிரேய மொழியில் "பெண்,மனைவி" போன்ற அர்த்தங்களுக்கு "இஷ்ஷாஹ்(ishshah – H802)" என்ற வார்த்தை பயன்படுகின்றது. "வைப்பாட்டி" என்ற வார்த்தைக்கு " பிலெகெஷ்- piylegesh - H6370 " என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆதியாகமம் 25ம் அத்தியாயம் 1ம் வசனத்தில், கேதுராள் என்ற பெண்ணை (இஷ்ஷாஹ்) ஆபிரகாம் எடுத்துக்கொண்டான் என்று உள்ளது, அதனை தமிழில் "விவாகம் பண்ணியிருந்தான்" என்று மொழியாக்கம் செய்துள்ளார்கள்.
ஆங்கிலத்தில் "Took a wife" என்று மொழியாக்கம் செய்திருப்பார்கள். இந்த வசனத்தில் "விவாகம்" என்ற வார்த்தை வருவதில்லை. அதே போன்று ஆங்கிலத்தில் "மனைவி(Wife)" என்ற வார்த்தை பயன்படுத்தியிருப்பார்கள்.
இஷ்ஷாஹ் என்ற வார்த்தை மனைவிக்கும் பயன்படுத்துவார்கள், பெண்ணுக்கும் (ஸ்திரிக்கும்) பயன்படுத்துவார்கள். இவ்வசனத்தின் படி, கேதுராள் என்பவர் ஆபிரகாமின் மனைவியா? அல்லது வைப்பாட்டியா? என்பதை எப்படி அறிவது?
இதனை அறிய, இதே 25வது அத்தியாயம், ஆறாம் வசனத்தை கவனிக்கவேண்டும்.
ஆதியாகமம் 25: 6. ஆபிரகாமுக்கு இருந்த மறுமனையாட்டிகளின்(pilegesh) பிள்ளைகளுக்கோ ஆபிரகாம் நன்கொடைகளைக் கொடுத்து, தான் உயிரோடிருக்கும்போதே அவர்களைத் தன் குமாரனாகிய ஈசாக்கைவிட்டுக் கிழக்கே போகக் கீழ்தேசத்துக்கு அனுப்பிவிட்டான்.
இந்த வசனத்தில் ஆபிரகாம், மற்ற மறுமனையாட்டிகளுக்கு பிறந்த பிள்ளைகளுக்கு பரிசுகளை கொடுத்து ஈசாக்கை விட்டு தூரமாக அனுப்பிவிட்டதாக காண்கிறோம். முதல் வசனத்தில் வரும் கேதுராள் கூட இந்த இடத்தில் மறுமனையாட்டியாகத் தான் கருதப்பட்டு, அவர்களின் பிள்ளைகளுக்கு பரிசுகளை கொடுத்து அனுப்பிவிட்டான் ஆபிரகாம்.
இந்த வசனத்தில் எபிரேய வார்த்தை "பிலெகெஷ்" என்பது தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆக, கேதுராள் என்ற பெண் ஆபிரகாமின் மறுமனையாட்டி ஆவார் என்பது புரியும்.
இதைத் தான் 1 நாளாகமம் 1:32ல், "ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய (pilegesh) கேத்தூராள் " என்று குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும், இவ்வசனத்திலும் "பிலெகேஷ்" என்ற வார்த்தைத் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
முடிவுரையாக, கேதுராள் என்பவர் ஆபிரகாமின் மறுமனையாட்டியாவார், இதை ஆதியாகமம் 25:6 மற்றும் 1 நாளாகமம் 1:32ல் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. இதில் முரண்பாடு எதுவுமே இல்லை.
பழைய ஏற்பாட்டின் படி மனைவி மற்றும் மறுமனையாட்டி:
பழைய ஏற்பாட்டின் காலத்தில் மனைவி மற்றும் மறுமனையாட்டி என்ற இரண்டு பிரிவுகளுக்கு உள்ள வித்தியாசம் என்னவென்றால், தகப்பனின் சொத்துக்களில் "மனைவி" என்ற ஸ்தானத்தில் உள்ள பெண்களுக்கு பிறந்த பிள்ளைகளுக்கு அதிக உரிமை உண்டு. ஆனால், மறுமனையாட்டி என்ற ஸ்தானத்தில் இருக்கும் பெண்களுக்கு பிறந்த பிள்ளைகளுக்கு அவ்வளவு உரிமைகள் இல்லை, அதனால் தான் "ஆபிரகாம் கேதுராளின் பிள்ளைகளுக்கு பரிசுகளை கொடுத்து தூரமாக அனுப்பிவிட்டான்".
ஆகார் யார்? இஸ்மாயீல் யார்: மறுமனையாட்டி கேதுராளுக்கு நடந்தது போன்று தான், ஆகாருக்கும் இஸ்மவேலுக்கும் நடந்தது. ஆபிரகாமின் சொத்துக்களில் (வாக்குதத்தங்களில்) ஈசாக்கிற்கு தான் உரிமையே ஒழிய, இஸ்மாயீலுக்கு அல்ல. சாராள் ஆபிரகாமின் மனைவி, ஆகார் மற்றும் கேதுராள் ஆபிரகாமின் மறுமனையாட்டியாவார்கள்.
இஸ்லாமின் படி மனைவி மற்றும் செக்ஸ் அடிமைகள்:
பைபிளின் படி பழைய ஏற்பாட்டு காலத்தில், ஒரு ஆணுக்கு மனைவி இருப்பார்கள், சிலருக்கு மறுமனையாட்டிகளும் (வைப்பாட்டிகளும்) இருப்பார்கள்.
ஆனால், குர்ஆனின் படி முஸ்லிமுக்கு மனைவி இருப்பார்கள், உடலுறவு மட்டும் வைத்துக்கொள்வதற்கு அடிமைப்பெண்களும் இருப்பார்கள். இதனை குர்ஆன் "வலக்கரத்துக்கு சொந்தமானவர்கள்" என்று அழைக்கிறது. முஹம்மதுவிற்கு மரியம் என்ற ஒரு காப்டிக் கிறிஸ்தவ பெண் அடிமைப்பெண்ணாக இருந்தார். சில முஸ்லிம்கள் இவர் முஹம்மதுவின் மனைவி என்றார்கள், சிலர் இல்லை இவர் செக்ஸ் அடிமைத் தான் என்கிறார்கள்.
செக்ஸ் அடிமைத்தனத்தை யெகோவா தேவன் பைபிளில் தடுத்து இருக்கிறார். போரில் பிடிபட்ட அடிமைப் பெண்களை திருமணம் செய்து, மனைவியாக்கிய பிறகு தான் அவளை தொடவேண்டும். திருமணத்திற்கு வெளியே உடலுறவு கொண்டால், அது விபச்சாரமாகும்.
ஆனால், இஸ்லாமில் இது விபச்சாரமாகாது, இது ஹலால் ஆகும். எனவே தான் கிறிஸ்தவர்கள் "யெகோவா தேவன் வேறு, அல்லாஹ் வேறு" என்று சொல்கிறார்கள். ஒரே விவரத்தை ஒருவர் விபச்சார பாவம் என்கிறார், இன்னொருவர் "அது பாவமில்லை, அது அனுமதிக்கப்பட்டது" என்கிறார். இது எப்படி சாத்தியமாகும்? யெகோவாவும், அல்லாஹ்வும் வெவ்வேறானவர்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.
எபிரேய பைபிள் அகராதி தொடுப்புக்கள்: Hebrew Bible Lexicon Links:
- Genesis 25:1 www.blueletterbible.org/kjv/gen/25/1/t_conc_25001
- H802 Ishshah: www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm
- H6370 – piylegesh: www.blueletterbible.org/lang/lexicon/lexicon.cfm
3 கருத்துகள்:
போதுமான விவரம் தந்துள்ளீர்
கேதுராலின் பிள்ளைகள் யாராகிலும் இருக்கிறார்கள் வரலாறு
கேதுராளுக்கும் ஆபிரகாமுக்கும் 6 மகன்கள் பிறந்துள்ளார்கள், இவர்கள் பற்றிய விவரங்களை, ஆதியாகமம் 25வது அதிகாரத்தில் படிக்கலாம்
ஆதியாகமம் 25
1. ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான்.
2. அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள்.
கருத்துரையிடுக