ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

திங்கள், 28 ஜனவரி, 2008

Answering PJ: "பின்னாகப் போ சாத்தானே" என்றார்

         
Answering PJ: "பின்னாகப் போ சாத்தானே" என்றார்

(பிஜே அவர்களின் "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்திற்கு ஈஸா குர்‍ஆன் மறுப்பு)


பிஜே அவர்களின் குற்றச்சாட்டு:
"இயேசுவிற்கு சரியாக மனிதர்களை மதிப்பிடத் தெரியவில்லை, தனக்கு பின் கிறிஸ்தவத்தை தலைமை தாங்க பேதுருவை இயேசு தெரிவு செய்தது தவறு"


முன்னுரை: பிஜே அவர்களின் இயேசு இறைமகனா? என்ற புத்தகத்திற்கு "ஈஸா குர்ஆன்" தளம் மறுப்பு எழுதிக்கொண்டு வருகிறது. இக்கட்டுரையில் "தவறாக மதிப்பிடுதல் கடவுள் தன்மை அன்று " என்ற தலைப்பின் கீழ் பிஜே அவர்கள் எழுதிய விவரங்களுக்கு பதில்/மறுப்பு தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் பதில்:

இக்கட்டுரைக்கான பதிலை நான் இரண்டு பாகங்களாக பிரித்து சொல்லவிரும்புகிறேன்.

பாகம் – 1: பிஜே அவர்கள் எழுதிய வரிகளில் உள்ள விவரங்களுக்கு பதில்

பாகம் - 2: இயேசுவிற்கு பிறகு தலைமைத்துவம் பெற தகுதியானவர் பேதுரு தான். பிஜே அவர்களின் கணிப்பு தவறானது.


பாகம் – 1 : பிஜே அவர்கள் எழுதிய வரிகளில் உள்ள விவரங்களுக்கு பதில்


பிஜே அவர்கள் எழுதிய எல்லா விவரங்களுக்கும் நாம் ஒவ்வொன்றாக பதிலைக் காண்போம்.

1. பைபிள் வசனங்களை தவறாக புரிந்துக்கொள்ளும் பிஜே அவர்கள்:

பிஜே அவர்கள் இயேசுவைப் பற்றி பல தவறான கருத்துக்களையும், பைபிள் வசனங்களுக்கு புதுப்புது அர்த்தங்களையும் கண்டுபிடித்து தன் புத்தகத்தில் எழுதியுள்ளார்.


பிஜே அவர்கள் எழுதியது:

3. தவறாக மதிப்பிடுதல் கடவுளின் தன்மை அன்று

துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும் நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள் (நீதிமொழிகள் 17:15)

கெட்டவனை நல்லவன் என்றும் நல்லவனைக் கெட்டவன் என்றும் தீர்ப்பது கடவுளுக்குரிய இலக்கணமன்று. இவ்வாறு தீர்ப்பது கடவுளுக்குப் பிடிக்காததும் கூட. இயேசுவிடம் இந்தத் தகுதி இருந்ததா என்றால் இல்லை என்று பைபிள் சொல்கிறது.



ஈஸா குர்ஆன் பதில்:

இயேசு தன் சீடனாகிய பேதுருவை தனக்கு பின்பு தன் ஆடுகளை மேய்க்க நியமித்தது மிகவும் பொருத்தமானதும், இதில் இயேசு வெற்றியைப் பெற்றார் என்பதையும், இயேசுவின் சபையை நடத்துவதற்கு 12 சீடர்களில் "சீமோன் பேதுரு" தான் மிகச் சரியான ஒரு நபர் என்பதையும் பிஜே அவர்களுக்கு விளக்குவதற்கு முன்பாக பிஜே அவர்கள் குறிப்பிட்ட நீதிமொழிகள் வசனத்திற்கு பதிலைத் தருகிறேன்.
பிஜே அவர்களே, நீதிமொழிகள் 17:15ம் வசனத்தின் பொருள் என்னவென்றால், ஒரு நீதிபதி அல்லது அரசன் மக்களுக்கு தீர்ப்புச் சொல்ல "நீதிபதி இருக்கையில்" உட்கார்ந்து தீர்ப்புச் சொல்லும் போது, குற்றவாளியை குற்றவாளி என்றும், நீதிமானை நீதிமானாகவும் தீர்ப்பு செய்யவேண்டும் என்றுச் சொல்கிறது, அப்படியில்லாமல் மாற்றித்தீர்ப்பு செய்பவன் கர்த்தருக்கு அருவருப்பானவன் என்று இவ்வசனம் சொல்கிறது.

இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் தான் ஒரு "நீதிபதியாக" வரவில்லை அதற்கு பதிலாக நம்மை இருட்டிலிருந்து மீட்கவே வந்தார் என்று பல முறை அவர் சொல்லியுள்ளார். அதே நேரத்தில் தன்னுடைய இரண்டாம் வருகையில் தான் ஒரு "நீதிபதியாக" இருந்து உலக மக்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்வார் என்றும் சொல்லியுள்ளார்.

ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற் போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். (யோவான் 12:47 )



அதாவது, இலஞ்சம் பெற்றுக்கொண்டு ஒரு நீதிபதி நியாயத்தை புரட்டுபவனைப் பற்றி இவ்வசனம் சொல்கிறது. முக்கியமாகச் சொன்னால், நியாயம் தீர்க்க உட்காரும் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் ஒரு கிராமத்தில் பஞ்சாயத்து என்றுச் சொல்லக்கூடிய ஒரு அமைப்பிலிருந்து, உச்ச நீதி மன்ற நீதிபதி வரை, பணத்தை இலஞ்சமாக பெற்றுக்கொண்டு, நல்லவனை கெட்டவன் என்றும் கெட்டவனை நல்லவன் என்றும் நியாயம் தீர்ப்பவன் தேவனுக்கு அருவருப்பானவன் என்று இவ்வசனம் சொல்கிறது. இதையே ஏசாயா 5:23ல் "இப்படிப்பட்டவனுக்கு ஐயோ" என்று சொல்லப்படுகிறது.

பரிதானத்திற்காகக் குற்றவாளியை நீதிமானாகத் தீர்த்து நீதிமானின் நியாயத்தை அவனுக்கு விரோதமாய்ப் புரட்டுகிறவர்களுக்கு ஐயோ!(ஏசாயா: 5:23)



ஆக, நீங்கள் இயேசுவின் முதல் வருகையில் அவரை நீதிபதியாக பார்த்தது மிகவும் தவறான பார்வையாகும். ஆனால், அவரது இரண்டாம் வருகையில் நீங்கள், நான், உங்கள் முகமது மற்றும் மற்ற உலக மக்கள் எல்லாரும் அவருக்கு முன்பாக நியாயத்தீர்ப்பிற்காக நிற்போம். அப்போது அவர் நீதி செலுத்துவார். எனவே, இவ்வசனம் இயேசுவின் முதல் வருகைக்கு சம்மந்தப்பட்ட வசனம் அல்ல.

இயேசு தன்னை நீதிபதியாக தன்னை காட்டிக்கொள்ளவும் இல்லை. அன்பே உருவான தெய்வமாக தன்னை முதலாவது காட்டவே அவர் வந்தார். அதனால், ஒரு விபச்சார பெண்ணை நீயாயம் தீர்க்கும்படி யூத ஆசாரியர்கள் சொன்னாலும், அப்பெண்ணை மன்னித்து, இனி அப்படி செய்யாதே என்றுச் சொல்லி, அனுப்பிவிட்டார். அதுபோல பல சந்தர்பங்களில் அவர் முதலில் மன்னித்து பிறகு சுகப்படுத்தியுள்ளார். ஆனால், அவரது இரண்டாம் வருகையில், அவரது வாயிலிருந்து "நியாயத்தீர்ப்பு" மட்டும் தான் வெளிப்படும். விபச்சாரக்காரர்களையும், திருடர்களையும், கொலை செய்பவர்களையும், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு அப்பாவி மக்களை கொல்பவர்களையும், பெண்களை கற்பழிப்பவர்களையும் அவர் நியாயம் தீர்ப்பார், இதிலிருந்து யாரும் தப்பமுடியாது.

எனவே, உம்முடைய கருத்து அல்லது புரிந்துக்கொள்ளுதல் மிகவும் தவறானதாகும்.

இருந்த போதிலும், ஒரு பேச்சுக்காக நீங்கள் சொல்வது போல இயேசு நியாயம் தீர்த்தார் என்று வைத்துக்கொண்டாலும், அப்போது கூட நீங்கள் இயேசுவை குற்றப்படுத்த முடியாது. ஏனென்றால், இயேசுவின் சீடர்களில் தலைமைத் துவத்திற்கு மிகவும் பொருத்தமானவர் "பேதுரு" தான் என்பதை பேதுருவின் வாழ்க்கையிலிருந்து நாம் கண்டுக்கொள்ளமுடியும் . உங்களுடைய "கணிப்பு" தவறு என்பதை பைபிளின் உதவியோடு இப்போது விளக்குகிறேன்.

2. எதற்காக பேதுருவை "பின்னாகப்போ சாத்தானே" என்று இயேசு சொன்னார்?

பேதுருவை இயேசு ஒரு சமயத்தில் "பின்னாகப்போ சாத்தானே" என்றுச் சொன்னார். பேதுரு இடறலாகவும், தேவனுக்கு ஏற்றவைகளை சிந்திக்காமல் மனுஷருக்கு ஏற்றவைகளை சிந்திக்கிறார் என்று இயேசு சொன்னார். இதை பிஜே அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ தன் புத்தகத்தில் எழுதிவிட்டார். அதாவது பிஜே அவர்கள் குறிப்பிட்ட இவ்விவரங்கள் இஸ்லாமுக்கு ஒரு மிகப்பெரிய அடியாக மாறப்போகிறது என்பதை பிஜே அவர்கள் அறியவில்லை.

பிஜே அவர்கள் எழுதியது:

அவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார். (மத்தேயு 16:23)

பேதுரு என்ற சீடனைச் சாத்தான் என்றும்
இயேசுவையே தடம் புரளச் செய்தவன் என்றும்
கடவுளுக்குரியவைகளைச் சிந்திக்காதவன் என்றும்

இயேசு எடை போட்டிருக்கிறார்



அ) ஏன் இயேசு பேதுருவை "பின்னாகப்போ சாத்தானே " என்றுச் சொன்னார்?

ஆ) யார் இயேசுவிற்கு இடறலாக இருக்கிறார்கள்?

இ) எப்படிப்பட்டவர்கள் தேவனுக்குரியதை தேடாமல் மனுஷனுக்குரியதை தேடுகிறார்கள்?

இப்படி இயேசு பேதுருவிற்கு சொல்வதற்கு காரணம் ஒன்றே ஒன்று தான், அதாவது " இயேசுவின் சிலுவைப்பாடு, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் போன்றவைகள் இயேசுவிற்கு நேரிடக்கூடாது என்று அவரிடம் பேதுரு சொன்னதால் தான்".

இப்பொழுது பிஜே அவர்கள் குறிப்பிட்ட மத்தேயு 16:23ம் வசனத்தின் முந்தைய இரண்டு வசனங்களைப் (மத்தேயு 16:21-22) பாருங்கள், அப்பொழுது உங்களுக்கே புரியும்.


மத்தேயு 16:21 அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்.

மத்தேயு 16:22 அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான்.

மத்தேயு 16:23 அவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.



பிஜே அவர்கள் குறிப்பிட்ட மற்றும் இயேசு பேதுருவோடு சொன்ன வார்த்தைகளின் படி:

இயேசுவிற்கு சிலுவைப்பாடுகள் வரக்கூடாது என்று சொல்பவர்களைப் பார்த்து ,

இயேசு சிலுவையில் மரிக்கக்கூடாது அல்லது மரிக்கவில்லை என்றுச் சொல்பவர்களைப் பார்த்து,

இயேசு மரித்து உயிர்த்தெழக்கூடாது அல்லது உயிர்த்தெழவில்லை என்று சொல்பவர்களைப் பார்த்து,



இயேசு "பின்னாகப் போ சாத்தானே" என்றுச் சொல்கிறார்.

இப்படிப் பட்டவர்கள் "தனக்கு இடறலாக இருக்கிறார்கள்" என்று இயேசு சொல்கிறார்,

இப்படிப் பட்டவர்கள் "தேவனுக்குரியதை தேடாமல், மனுஷருக்குரியதை தேடுகிறவர்கள் " என்று இயேசு சொல்கிறார்.

இயேசுவின் மீது வைத்த அன்பின் காரணத்தினாலும், தன் குருவிற்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்ற கரிசனையினாலும், நிறைந்தவராய் பேதுரு, இயேசுவை தனியே அழைத்து, "இப்படி உமக்கு பாடுகள், மரணம்" வரக்கூடாது என்றுச் சொன்னார்.

ஆனால், இயேசு சிலுவையில் மரித்து உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்பது தேவனின் திட்டம், இதை சரியாக புரிந்துக்கொள்ளாமல் பேதுரு பேசியதால், தான் இயேசு பேதுருவைப் பார்த்து "எனக்கு பின்னாகப்போ சாத்தானே" என்றுச் சொல்கிறார். ஆனால், இயேசு மரித்து உயிரோடு எழுந்துவிட்ட பிறகு, இதே பேதுரு எருசலேம் மக்களுக்கு சாட்சியாக எழுந்து நின்று இயேசுவின் சிலுவை மரணம் உயிர்த்தெழுதல் பற்றி சாட்சி சொல்கிறார், பல இடங்களுக்கும், ஊர்களுக்கும் சென்று இயேசு மரித்தார், மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்று சாட்சி பகிர்ந்தார், இந்த காரணத்திற்காகவே மரித்தார். இதனை நாம் அப்போஸ்தலர் நடபடிகளில் (புதிய ஏற்பாடு) பார்க்கலாம்.

பேதுரு ஒரு முறை தவறு செய்தார், அதற்காக இயேசு அவரை கடிந்துக்கொண்டார், உண்மை தெரிந்த பிறகு பேதுரு மாறிவிட்டார், அவ்வளவு தான், ஆனால், பிஜே அவர்கள் சொல்வது எப்படி உள்ளதென்றால், இயேசு தொடர்ந்து பேதுருவை "நீ சாத்தான்" என்று முத்திரை குத்திவிட்டதாகவும், பேதுருவோடு சேராதீர்கள் என்று இயேசு மற்றவர்களுக்குச் சொன்னதாகவும், பேதுருவினால் இயேசு தடம் புரண்டு போய்விட்டதாகவும், பிஜே அவர்கள் கற்பனை செய்துக்கொண்டு எழுதுகிறார். இந்த பேதுருவைக்கொண்டு, இந்த பேதுருவின் ஊழியத்தின் மூலமாக இயேசு இஸ்லாமையும், இருட்டின் அதிகாரத்தையும் இன்று வரை தட‌ம் புரட்டிக்கொண்டு இருக்கிறார் என்பதை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

பிஜே அவர்களுக்கு நான் எழுதும் இரண்டாவது பதிலில் இயேசு எப்படி பேதுருவை ஆரம்பத்திலிருந்து தயார்படுத்தினார் என்பதையும், எப்படி அவரை உட்சாகப்படுத்தினார் என்பதையும், பேதுரு எப்படி தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றுவதில் முழுமூச்சாக உழைத்தார் என்பதையும் காணலாம்.

3. முகமதுவையும், இஸ்லாமைப் பின்பற்றுகிறவர்களையும் பார்த்து இயேசு "பின்னாகப்போ சாத்தானே" என்றுச் சொல்கிறார்:

இதுவரையில் நாம் பார்த்த விவரங்களின் படி, கிறிஸ்தவத்தின் அடிப்படையாகிய "இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை" மறுப்பவர்களை, அல்லது இவைகள் நடக்கக்கூடாது என்றுச் சொல்பவர்களை அல்லது இவைகள் நடக்கவில்லை என்றுச் சொல்பவர்களைப் பார்த்து இயேசு " எனக்கு பின்னாகப்போ சாத்தானே" என்றுச் சொல்கிறார், என்பது நமக்கு தெளிவாக விளங்கி இருக்கும்.

இஸ்லாம் படி, முகமது "இயேசு சிலுவையில் மரிக்கவில்லை" என்றுச் சொன்னார். இயேசு உயிர்த்தெழவில்லை என்றுச் சொன்னார். எனவே, பேதுருவிற்கு இயேசு சொன்ன அதே வார்த்தைகள் இவருக்கும் பொருந்தும். இப்படிச் சொல்லும் எல்லாருக்கும் பொருந்தும்.

இப்படி நான் என் சொந்தமாகச் சொல்லவில்லை, பைபிளில் இயேசு சொன்ன வசனங்கள் இப்படிச் சொல்கின்றன. இந்த வசனங்களை பிஜே அவர்களும் குறிப்பிட்டார்கள், பேதுருவிற்கு இயேசு இப்படி சொல்லியுள்ளார் என்று பிஜே அவர்களே சாட்சியும் கொடுக்கிறார் .

எனவே, பிஜே அவர்களின் வார்த்தைகளின் படி, முஸ்லீம்களைப் பார்த்து இயேசு "பின்னாகப் போ சாத்தானே" என்றுச் சொல்கிறார். முஸ்லீம்கள் இயேசுவிற்கு இடறலாக இருக்கிறார்கள் என்று இயேசு சொல்கிறார். முஸ்லீம்கள் இறைவனுக்கு ஏற்றதை சிந்திக்காமல், மனிதர்களுக்குரியதை சிந்திக்கிறார்கள் என்று இயேசு சொல்கிறார்.

இப்படி நான் எழுதுகிறேன் என்று என் மீது கோபம் கொள்ளவேண்டாம். அதற்கு பதிலாக பிஜே அவர்கள் குறிப்பிட்ட வசனத்தின் அடிப்படையில் சிந்தித்துப்பாருங்கள்,

ஏன் பேதுருவைப் பார்த்து இயேசு இந்த மூன்று வார்த்தைகளைச் சொன்னார்?

இப்படி சொல்லும் மற்றவர்களுக்கும் இந்த வார்த்தைகள் பொருந்துமா? இல்லையா? என்று சிந்தித்துப்பாருங்கள்.

குர் ஆனைப் பொருத்தவரையில்:
இயேசு சிலுவையில் அறையப்படவில்லை,

இயேசு மரிக்கவில்லை, இயேசுவை அல்லா உயிரோடு எடுத்துக்கொண்டார்,

இயேசு உயிர்த்தெழவில்லை


இயேசுவின் வார்த்தைகளின் படி பைபிளைப் பொருத்தவரையில்:

இயேசுவின் சிலுவை பாடுகள்,

அவரது மரணம்,

உயிர்த்தெழுதல்

இவைகளை மறுத்தவர்கள்:

அது யாராக இருந்தாலும் சரி, தன்னோடு 3 ஆண்டுகளுக்கு அதிகமாக சீடனாக இருந்தவனானாலும் சரி, தனக்கு பின் தன் ஊழியத்தை நேர்த்தியாகச் செய்து சாட்சியாக மரிக்கப்போகிறவனானாலும் சரி, இயேசுவிற்கு பல நூறு ஆண்டுகளுக்கு பின் தோன்றும் எந்த மார்க்கமானாலும் சரி, "இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் " போன்றவைகளை மறுப்பவர்களைப் பார்த்து இயேசு கூறும் வார்த்தைகள் இவைகள்:

"பின்னாகப்போ சாத்தானே"

"நீ எனக்கு இடறலாக இருக்கிறாய்"

"நீ இறைவன் சம்மந்தப்பட்ட விவரங்களுக்கு செவி சாய்க்காமல், மனுஷனுக்கு சம்மந்தப்பட்டதற்கு செவி கொடுக்கிறாய்"

என்பதாகும்.

இதன் படி, "இஸ்லாமைப் பார்த்து" எனக்கு பின்னாகப்போ சாத்தானே என்று இயேசு சொல்கிறார். 
"இஸ்லாம் இறைவனின் சித்தத்திற்கு இடறலாக இருக்கிறது" என்று இயேசு சொல்கிறார். 
"இஸ்லாமின் கோட்பாடுகள், இறைவனுக்கு ஏற்றதைப் பற்றி சொல்வதில்லை, மனுஷனுக்கு ஏற்றதைப் பற்றி சொல்கிறது" என்று இயேசு சொல்கிறார்.

பிஜே அவர்களின் வார்த்தைகளின் படி, இயேசு பேதுருவை சாத்தான் என்று சொல்லி எடை போட்டாராம், இப்போது இதே வார்த்தைகள் இஸ்லாமையும், முஸ்லீம்களையும் எடை போட்டுக்கொண்டு இருக்கின்றன.

நான் இந்த பதிலில் சொன்ன விவரங்கள் சரியானவை அல்ல என்று யாராவது நினைப்பீர்களானால், எனக்கு தெரிவியுங்கள். பேதுருவிற்கு இயேசு சொன்ன வார்த்தைகள் எப்படி இஸ்லாமுக்கு பொருந்துகிறது என்றுச் சொல்லியுள்ளேன். இஸ்லாமுக்கு பொருந்தாது என்று சொல்வீர்களானால்? எப்படி பொருந்தாது? என்று விவரமாக எனக்கு பதில் அளிக்கும்மாறு கேட்டுக்கொள்கிறேன்.

பிஜே அவர்கள் எழுதியது:

அது மட்டுமின்றி இயேசுவையே அவன் மூன்று தடவை மறுப்பான் என்றும் இயேசு கூறியதாக நான்கு சுவிசேஷங்களும் கூறுகின்றன.



ஈஸா குர்‍ஆன் பதில்:

பிஜே அவர்கள் ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டும். ஒரு மனிதனை தவறாக மதிப்பிடுவது வேறு, ஒரு மனிதம் இப்படி நடந்துக்கொள்வான் என்று முன்கூட்டியே சொல்வது வேறு.

இந்த இடத்தில், இயேசு பேதுருவை தவறாக மதிப்பிடவில்லை, அதற்கு பதிலாக தான் ஞானத்தின் ஊற்று என்பதை நிருபித்தார், எதிர் காலத்தில் நடப்பதை துள்ளியமாக சொன்னார்.

ஒரு வேளை, பேதுருவைப் பார்த்து இயேசு, "நீ என்னை மறுதலிக்கமாட்டய் என்று நான் நினைத்தேன்(மதிப்பிட்டேன்), ஆனால், என் நம்பிக்கையை வீணாக்கிவிட்டாய்" என்று சொல்லியிருந்தால், நீங்கள் சொல்வது போல "மனிதர்களை மதிப்பிட அல்லது எடை போட இயேசுவிற்கு தெரியவில்லை" என்று நான் ஏற்றுக்கொண்டு இருப்பேன்.

ஆனால், நடந்தது என்ன?
பேதுரு சொல்கிறார்: நான் உம்மை எப்பொதும் மறுதலிக்கமாட்டேன் (எனக்கு இயேசு தெரியாது என்று சொல்லமாட்டேன்) என்றுச் சொல்கிறார். என் உயிர் போனாலும் நான் அப்படி சொல்லமாட்டேன் என்றுச் சொல்கிறார்.

இதற்கு இயேசு பதில் சொல்கிறார்: அப்படியா? "எனக்கு இயேசு என்றால் யார் என்று தெரியாது" என்று நீ சொல்லுவாய்(மறுதலிப்பாய்) என்றார்.

உண்மையில் நடந்தது என்ன? இயேசு சொன்னது போல பேதுரு மறுதலித்தார். அதாவது இயேசு சொன்னது தான் நடந்தது, இயேசு எடை போட்டது சரியாக நடந்தது. இயேசு மதிப்பிட்டது சரியாக நடந்தது.

பிஜே அவர்களே இந்த நிகழ்ச்சி இயேசு எல்லாம் அறிந்தவர் என்று தெளிவாகச் சொல்லும் போது, உமக்கு மட்டும், இயேசுவிற்கு மனிதர்களை மதிப்பிடத்தெரியவில்லை என்று எப்படி தெரிந்தது?

ஒரு வேளை, இயேசு சொன்னது போல நடக்காமல், பேதுரு இயேசுவை மறுதலிக்காமல் இருந்து இருந்தால், நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம். அதாவது, இயேசு "இப்படி பேதுரு நடந்துக்கொள்வான் "என்று மதிப்பிட்டு இருந்து, ஆனால், அதற்கு எதிர்மாறாக பேதுரு நடந்து இருந்திருந்தால். அதனால், எதிர் காலத்தைப் பற்றிய அறிவு இயேசுவிற்கு இல்லை, மனிதர்களை தவறாக இயேசு மதிப்பிட்டு விட்டார் என்று சொல்லலாம். ஆனால், அப்படி நடக்கவில்லையே? இயேசு சொன்னதே நடந்ததே, இயேசு சொன்னது போலவே பேதுரு மறுதலித்தாரே, பிறகு பேதுரு மனங்கசந்து அழுதார் என்று பைபிள் சொல்கிறதே? பிஜே அவர்களுக்கு மட்டும் எப்படி எல்லாம் எதிர்மறையாக தெரிகிறது.

இயேசு சொன்னது போலவே அப்படியே 100 சதவிகிதம் நடந்தது. இயேசு இறைவன் என்பதை நிருபிக்கும் ஒரு நிகழ்ச்சி எப்படி பிஜே அவர்களுக்கு வேறுமாதிரியாக தென்படுகிறது. இயேசு சொன்னது போல பேதுரு நடந்துக்கொண்டுள்ளார், அப்படியானால், தோல்வி அடைந்தது யார்? பேதுருவா? இயேசுவா? பேதுரு தானே, அதனால், தான் அவர் மனம் கசந்து அழுதார், மறுபடியும் விழுந்த இடத்திலிருந்து எழுந்து நின்றார். வெற்றிப் பெற்றது இயேசு அல்லவா? பிஜே அவர்களுக்கு எப்படி இது தெரியாமல் போனது?

4. இயேசுவிற்கு எத்தனை சீடர்கள் என்று பிஜே அவர்களுக்கு தெரியுமா?

பிஜே அவர்களுக்கு இயேசுவின் சீடர்கள் எத்தனைப்பேர் என்று கூட தெரியவில்லை

பிஜே அவர்கள் எழுதியது:

பரலோகத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்தில் நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார். (மத்தேயு 16:19)

பேதுருவை விடச் சிறந்த சீடர்கள் ஒன்பது பேர் இருக்கும் போது பேதுருவைச் சரியாக எடை போடாமல் அவனிடம் பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோலை வழங்கியது கடவுள் செய்யக் கூடியதா? இயேசு கடவுளாக இருக்க முடியாது என்பதை இதிலிருந்து ஐயமற அறியலாம்.

Formats mine


ஈஸா குர்ஆன் பதில்:

அருமையான பிஜே அவர்களே, இயேசுவிற்கு எத்தனை சீடர்கள் இருந்தார்கள் என்று உமக்குத் தெரியுமா?

அதாவது, கிறிஸ்தவத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யாத சாதாரண மனிதர்களுக்கும், இயேசுவின் சீடர்கள் 12 பேர் என்று தெரிந்து இருக்கும், ஆனால், கிறிஸ்தவத்தில் ஆராய்ச்சி செய்து புத்தகம் எழுதி, பல மேடைப் பேச்சுக்கள் ஆற்றிய உமக்கு தெரியாமல் போனது தான் மிகவும் வேதனைக்குரிய விசயம்.
1. எப்படி பேதுரு தவிர, இயேசுவிற்கு இருந்த மீதமுள்ள சீடர்கள் 9 பேர் என்றுச் சொல்கிறீர்?

2. இயேசுவை காட்டிக்கொடுத்த யூதாஸ் என்ற சீடனை நீக்கிவிட்டாலும், பேதுரு அல்லாமல், இயேசுவிற்கு 10 சீடர்கள் இருந்தார்கள் அல்லவா? உமக்கு இந்த 9 எப்படி வந்தது?

3. பேதுரு தவிர சிறந்த சீடர்கள் என்று 9 பேரை எப்படி நீங்கள் தீர்மானித்தீர்கள் (கண்டுபிடித்தீர்கள்), பிஜே அவர்களே?

4. அதாவது, சில சீடர்கள் பற்றிய முழுவிவரங்கள் நான்கு சுவிசேஷங்களில் அதிகமாக சொல்லப்படவில்லை. அப்படி இருக்கும் போது, 10 பேரில், மிகவும் சிறந்தவர்கள் 9 பேர் என்று எப்படி உங்களால் கண்டுபிடிக்கமுடிந்தது?

5. சில சீடர்கள் அதிகமாக இயேசுவோடு பேசியதையோ, மற்ற விவரங்களையோ சுவிசேஷங்களில் காணமுடியாது? அப்படி இருக்கும் போது, சிறந்தவர்கள் என்று எப்படி சொல்கிறீர்கள் நீங்கள்?


கேட்க யாரும் இல்லை என்று நீங்கள் எது சொன்னாலும், கேட்டுக்கொண்டு தமிழ் கிறிஸ்தவர்கள் இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டீர்களா?

பிஜே அவர்களே நான் உங்களுக்கு முன்பாக ஒரு சவாலை வைக்கிறேன், பேதுருவைத் தவிர மீதமுள்ள 10 சீடர்களில், எப்படி 9 பேர் சிறந்தவர்கள் என்பதை நீங்கள் தமிழ் கிறிஸ்தவர்களுக்கு விளக்க கடமைப்பட்டுள்ளீர்கள்? சில சீடர்கள் பற்றிய இதர விவரங்கள் அதிகமாக பைபிளில் சொல்லாப்படாத போது, எந்த தகுதிகளை வைத்து பேதுருவை விட சிறந்தவர்கள் என்று நீங்கள் முடிவு செய்தீர்கள் என்பதை விளக்குங்கள்?

ஆனால், மற்ற சீடர்களை விட இயேசுவின் சபையை நிர்வாகிக்கும் தகுதி பேதுருவிற்குத் தான் அதிகமாக உள்ளது என்பதை, இக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் விளக்குகிறேன். சீடர்களின் இடையில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதங்கள் வரக்கூடாது என்று இயேசு சீடர்களுக்கு கற்றுக்கொடுத்தாலும், தலைமையை ஏற்றுக்கொள்ளும்படி ஒருவரை தயார்படுத்தினார். இதற்கான தகுதிகள் பேதுருவிற்கு இருந்தது என்பதையும் நான் விளக்குகிறேன்.

ஏன் பரலோகத்தின் திறவுகோலை பேதுருவிடம் இயேசு கொடுத்தார்? அதற்கு பேதுரு தகுதியானவரா? பேதுரு தன் கடமையை சரியாக செய்தாரா? என்பதை அடுத்த பாகத்தில் விளக்குகிறேன்.

முடிவுரை:

கடைசியாக நான் பிஜே அவர்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புவது:
1. பேதுரு "இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல்" நடக்கக்கூடாது என்று அறியாமையினால் சொன்னதினால், தான் இயேசு "பின்னாகப்போ சாத்தானே" என்றுச் சொன்னார்.

2. இப்படிச் சொன்னது "இயேசு" இவ்வுலகில் வந்த நோக்கத்தை பேதுரு எதிர்த்ததால் தானே தவிர‌ , மற்றபடி, பேதுருவை இயேசு "சாத்தான்" என்று முத்திரை குத்திவிட்டதாக அர்த்தமில்லை.

3. அதே இயேசு பல முறை பேதுருவை புகழ்ந்துள்ளார், "நீ ஒரு திடமான‌ கல்" என்று சொல்லியுள்ளார், என் ஆடுகளை மேய்ப்பாயாக என்று சொல்லியுள்ளார். இயேசுவை "நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து" என்று பேதுரு அறிக்கையிட்டபோது, இயேசு பேதுருவைப் பார்த்து, "நீ பாக்கியவான்" என்றார், உனக்கு இதை பிதா வெளிப்படுத்தினார் என்றுச் சொன்னார் (மத்தேயு 16:13 18). இவைகள் எல்லாம், உங்களுக்கு தெரியவில்லையா பிஜே அவர்களே. ஒரு முறை கடிந்துக்கொண்டதை மிகவும் இமயமலை போல பெரிது படுத்தி காட்டுகிறீர்கள்?

4. இயேசுவின் வார்த்தைகளின் படி, சிலுவை மரணத்தை, உயிர்த்தெழுதலை மறுக்கும் இஸ்லாமைப்பார்த்து "எனக்கு பின்னாகப்போ சாத்தானே" என்று ஈயேசு சொல்கிறார் என்பதை அறியுங்கள்.

5. முதலாவது இயேசுவிற்கு எத்தனை சீடர்கள் இருந்தார்கள் என்பதை தெரிந்துக்கொண்டு புத்தகங்கள் எழுதுங்கள். முகமதுவிற்கு எத்தனை மனைவிகள் இருந்தார்கள் என்று தெரிந்துக்கொள்ளாமல் நான் ஒரு எண்ணிக்கை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளலாம் ஏனென்றால், இஸ்லாமியர்கள் அங்கீகரிக்கும் எண்ணிக்கை வேறு, ஹதீஸ்கள், முகமதுவின் வாழ்க்கை வரலாறு சொல்லும் எண்ணிக்கை வேறு. ஆனால், இயேசுவின் சீடர்கள் எத்தனை பேர் என்பது உங்களைப்போன்ற மக்கள் மத்தியிலே மார்கங்களைப் பற்றி பேசி, பதில்கள் சொல்பவர்கள் சரியாக தெரிந்துக்கொண்டு இருக்கவேண்டும் என்பதை அறியுங்கள்.

6. பரலோகத்தின் சாவியை பேதுருவின் கையில் இயேசு கொடுத்தேன் என்றுச் சொன்னது மிகச்சரியான கூற்று என்பதையும், இயேசுவிற்கு பின்பு, கிறிஸ்தவ சபை தலைமைத்துவம் பெற தகுதியானவர் பேதுரு என்பதையும் என் இரண்டாம் பதிலில் சொல்கிறேன்.


மற்றபடி, நீங்கள் முன்வைத்த விவரங்கள் வேதவசனங்களை புரிந்துக்கொள்ளாமல், மேலோட்டமாக படித்து, ஏதோ ஒரு குறை சொல்லவேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டது என்பதை என் பதில்களை படிப்பவர்கள் புரிந்துக்கொள்வார்கள். உங்கள் புத்தகமாகிய "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்திற்கு நான் எழுதும் மறுப்பைப் பற்றி விமர்சிக்க விரும்புகிறவர்களை, பதில் சொல்ல விரும்புகிறவர்களை நான் வரவேற்கிறேன்.

"பேதுரு ஒரு பேரொளி", "பேதுரு ஒரு சிறந்த தலைவர்" என்ற விவரங்களோடு அடுத்த பாகத்தில் சந்திக்கும் வரை , தேவனின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.


பிஜே அவர்களுக்கு ஈஸா குர்ஆனின் இதர பதில்கள்:

1. பி.ஜைனுல் ஆபிதீனும், திரித்துவமும் & பவுலும்: பதில்

2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்ஆன் பதில்

3. பி.ஜைனுல் ஆபிதீனும் பரிசுத்த ஆவியும் : ஈஸா குர்‍ஆன் பதில்

4. பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 1

5. பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 2

6. Answering - PJ: இயேசு நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்படுவாரோ?



Isa Koran Home Page Back - Answering PJ index Page

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/pjonline/PjPeter1.htm

 
 

வெள்ளி, 25 ஜனவரி, 2008

எம். எம் அக்பருக்கு (இஸ்லாம் கல்விக்கு) பதில்: குர்ஆனில் குலறுபடிகள்

     
எம். எம் அக்பருக்கு (இஸ்லாம் கல்விக்கு) பதில்: குர்ஆனில் குலறுபடிகள்


முன்னுரை:

இஸ்லாம் கல்வி தளத்தில் அக்பர் என்பவரின் கட்டுரையை தமிழில் மொழி பெயர்த்து பதித்து இருந்தார்கள். பைபிள் பற்றி பல கருத்துக்களை முன்வைத்தார்கள். மற்றும் பைபிளில் பல முரண்பாடுகள் இருக்கிறது என்று எழுதியிருந்தார்கள். அவர்கள் முன்வைத்த விவரங்களுக்கு பதில் தருவது கிறிஸ்தவர்களின் கடமை என்பதால், இந்த பதிலை ஒரு தொடர் கட்டுரையாக எழுதுகிறேன். ஆனால், இஸ்லாம் அறிஞர்கள் மட்டும் " குர்ஆனில் உள்ள முரண்பாடுகளை, தவறுகளை" கிறிஸ்தவர்கள் சுட்டிக்காட்டினால் பதில் தருவதில்லை. இது ஒன்றே போதும், குர்ஆன் ஒரு வேதம் இல்லை என்பதற்கு. அப்படி எங்கள் கேள்விகளுக்கு பதில் தர விரும்புகிறவர்கள் என் தளத்தில் (
www.geocities.com/isa_koran ) பதித்து இருக்கும் பல இஸ்லாமிய கட்டுரைகளை படித்து பதில் தரமுயற்சி செய்யும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இதே கட்டுரையை வாழ்க்கை கல்வி என்ற தளமும் வெளியிட்டுள்ளது.

இஸ்லாம் கல்வி எழுதியது:

மூலம்: M.M.அக்பர் - தமிழில் தேங்கை முனீப், பஹ்ரைன்
Source: http://www.islamkalvi.com/religions/quran_bible_compare.htm


தேங்கை முனீப் அவர்களுக்கு ஈஸா குர்ஆன் பதில்:

அருமையான நண்பரே, எம். எம். அக்பர் அவர்கள் எழுதிய மூல கட்டுரையின் தொடுப்பை கொடுப்பீர்களானால் மிகவும் எனக்கு உதவியாக இருக்கும். அல்லது இக்கட்டுரை எம். எம். அக்பர் அவர்கள் பேசிய பேச்சிலிருந்து எடுத்து மொழி பெயர்த்து இருந்தால், அதன் தொடுப்போ அல்லது அங்கு எங்கு கிடைக்கும் என்று தெரிவித்தால், மிகவும் உதவியாக இருக்கும்.

ஏன் நான் மூல தொடுப்பை கேட்கிறேன் என்றால், எம். எம். அகபர் அவர்கள் கிறிஸ்தவத்தைப் பற்றி சொன்ன மற்ற விவரங்களை நான் தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன். ஒருவேளை என் பதிலுக்கு அவர் மறுப்புச் சொல்ல இது ஏதுவாகும்.

அன்பு நண்பர் முனீப் அவர்களே, இந்த கணினி, மற்றும் இணையம் யுகத்தில் ஒரு கட்டுரையை மொழிப் பெயர்க்கும் போது, மூல தொடுப்பை கொடுக்காமல், அல்லது அதன் மற்ற விவரங்களை கொடுக்காமல் எழுதுவது எப்படி நியாயமாகும் என்று நினைக்கிறீர்கள்?

இஸ்லாம் கல்வி எழுதியது:

இறைவெளிப்பாட்டின் அடிப்படையில் சமுதாயத்தை வழிநடத்திய இறைதூதர்கள் மற்றும் அவர்களுக்கு அருளப்பட்ட இறைவசனங்களின் தாக்கத்தை உட்கொண்ட ஒரு நூலே பைபிள் என்பதில் முஸ்லிம்களுக்கு மாற்று அபிப்பிராயம் இல்லை. இறைவசனங்களும் தீர்க்கதரிசிகளின் உபதேசங்களும் வரலாற்றாசிரியர்களின் அபிப்பிராயங்களும் புரோகிதக் கருத்துக்களும் சேர்ந்த ஒரு கலவையே பைபிள். தீர்க்கதரிசிகளின் வாழ்க்கைப் புராணங்கள் பைபிளின் முதுகெலும்பு எனலாம். இந்த வாழ்க்கைப் புராணங்களின் மேல் புரோகிதக் கருத்துக்களைப் பொதிந்து உருவாக்கப்பட்டதே இன்று நடைமுறையில் உள்ள பைபிள் என்று கூறினால் வியப்படையத் தேவையில்லை.

பைபிளில் காணப்படும் பல வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் தீர்க்கதரிசனங்கள் திருக்குர்ஆனில் உள்ள தகவல்களை ஒப்ப அமைந்திருப்பதைக் காணலாம். பைபிளில் காணப்படும் அத்தகைய தகவல்கள் இறைவசனங்கள், கண்ணால் கண்ட காட்சிகள் மற்றும் பிறர் கூறக் கேட்ட கருத்துக்களின் அடிப்படையில் பிற்கால எழுத்தாளர்களால் பதிவுசெய்யப்பட்டவை ஆகும். புரோகிதர்களின் மனித அபிப்பிராயங்கள் பைபிளில் மலிந்து காணப்படுவதால் முன்னுக்குப் பின் முரண்பட்ட தகவல்களும், அறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களும் பைபிளில் நிறைந்து காணப்படுகின்றது.


ஈஸா குர்ஆன் பதில்:

இயேசுவின் பிறப்பைப் பற்றி பைபிள் சொல்லும் விவரங்களை மாற்றி முகமது சொன்ன அல்லது குர்ஆனில் உள்ள விவரங்கள் தவறானவை என்று " இயேசுவிற்கு நேர்ந்ததென்ன?" என்ற தொடர் கட்டுரைகளில் நான் விவரித்துள்ளேன். அவைகளுக்கு இது வரை பதில் இல்லை. இவைகளை படிப்பவர்கள் "குர்ஆன் சொல்லும் விவரங்களில் பல தவறுகள் இருப்பதை " நன்றாக புரிந்துக்கொண்டு இருப்பார்கள்.

பைபிள் மீது நீங்கள் வைத்த குற்றச்சாட்டிற்கு என் பதிலாக கீழ் கண்ட கட்டுரைகளை முன்வைக்கிறேன். பைபிள் மட்டும் தான் இறைவனின் வார்த்தை என்பதை நிருபிக்க நான் பதில் தருகிறேன், அது போல, குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதை நிருபிக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பை தருகிறேன். இக்கட்டுரைகளுக்கு பதில் தாருங்கள்.

இயேசுவிற்கு நேர்ந்ததென்ன?
பாகம் 1 , பாகம் 2 , பாகம் 3 , பாகம் 4 , பாகம் 5 , பாகம் 6

(இந்த கட்டுரைகள் இது தான் இஸ்லாம் தளத்தின் கட்டுரைக்கு பதிலாக நான் எழுதினாலும், இஸ்லாம் பற்றியுள்ள விவரங்களை, குர் ஆன் பற்றிய என் கேள்விகளை, குற்றச்சாட்டுகளை மட்டுமே எடுத்துக்கொண்டு பதில் தர முயலுங்கள்.)



இஸ்லாம் கல்வி எழுதியது:

திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள வரலாற்றுத் தகவல்கள் இதிலிருந்து முற்றிலும் வேறபட்டுள்ளது. அது அருளப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை எந்த மனிதக் கரங்களாலும் மாசுபடாமல் அதன் பரிசுத்தத் தன்மையிலேயே நிலைத்திருக்கின்றது. எனவே அது கூறும் வரலாற்றுத் தகவல்கள் முற்றிலும் உண்மையானவையகவும் முரண்பாடுகளற்றவையாகவும் பரிபூரணத் தன்மை வாய்ந்ததாகவும் நிலைத்து நிற்கின்றன. எனவே திருக்குர்ஆனில் எந்த முரண்பாடுகளையும் விமர்சகர்களால் கூறமுடியாது. அவ்வாறு விமர்சித்தாலும் சான்றுகளின் துணையோடு அவற்றை நிரூபிக்க இயலாது என்பதே உண்மை.

இறைவசனங்களின் தாக்கம் உள்ள பைபிளிலும் இறைவசனங்களை மட்டுமே கொண்ட திருக்குர்ஆனிலும் வரலாற்றுத் தகவல்கள் அடிப்படையில் ஒன்றாகத் தோன்றினாலும் அவற்றை விளக்கும் தொனியில் இரண்டிற்கு மத்தியிலும் பாரிய வேறுபாடுகள் நிலவுகின்றன. இத்தகைய வேறுபாடுகள் திருக்குர்ஆன் இறைவாக்கு என்பதை உண்மைப் படுத்துவதோடு

பைபிள் மனிதக் கற்பனைகளின் கலவை என்பதையும் நிரூபிக்கின்றன. சில உதாரணங்களைக் கொண்டு இதனை நிரூபிப்போம்.


ஈஸா குர்ஆன் பதில் :

பைபிளை மாற்றிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டும் அறிஞர்களே, முதலில்:


குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

அதை அல்லா இறக்கினாரா?

ஏன் முந்தைய வேதங்களை மக்கள் மாற்றும் போது, அதை தடுக்க சக்தி இல்லாமல் அல்லா சும்மா இருந்துவிட்டார்?

அல்லது

மக்கள் முந்தைய வேதங்களை மாற்றினால் மாற்றட்டும் என்று அவராகவே வேண்டுமென்றே விட்டுவிட்டாரா?"

போன்ற கேள்விகளை கேட்டுப்பாருங்கள்.

இந்த விவரங்கள் குர்ஆன் இறைவனின் வேதம் அல்ல என்பதை நிருபிக்கிறது. இதோ கீழ் கண்ட கட்டுரையை பைபிள் மீது நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டிற்கு பதிலாக முன் வைக்கிறேன்.

கட்டுரை:
குர் ஆன் பாதுகாக்கப்பட்டதா?  

குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா? என்ற கேள்வியை மிகவும் ஆணித்தரமாக இக்கட்டுரை கேட்கிறது. இதற்கு பதில் தாருங்கள்.

இயேசுவின் பிறப்பில் கைவைத்து சரியான விவரங்களை தரமுடியாமல் திணறும் குர்ஆன், இயேசுவின் சிலுவை மரண விஷயத்திலும் கைவைத்துவிட்டு மாட்டிக்கொண்டுள்ளது.

"ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸீஹா " என்ற கட்டுரையை உங்களுக்கு நான் பதிலாக முன்வைக்கிறேன்.

கட்டுரை:
ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸீஹா (அறியாமையில் கிறிஸ்தவத்தை துவக்கிய அல்லா)


கிறிஸ்தவம் ஆரம்பிப்பதற்கு காரணம் அல்லா தான்.

கிறிஸ்தவம் இஸ்லாமை விட அதிகமாக இப்போது வளர்ந்துள்ளது என்பதற்கு காரணம் அல்லா தான்.

அவ்வளவு ஏன், கிறிஸ்தவத்தை வளர்த்ததே அல்லா தான் என்று இக்கட்டுரைச் சொல்கிறது.

பைபிளில் வரலாற்று தவறுகள் உள்ளது, மக்கள் அதை மாற்றி விட்டார்கள் , அதில் முரண்பாடுகள் உள்ளது என்றுச் சொல்லும் நண்பரே, இதோ இந்த கட்டுரைகள் நீங்கள் சொன்ன எல்லா குற்றச்சாட்டுகள் அனைத்தும் குர்ஆனுக்கு பொருந்துகிறது என்றுச் சொல்கிறது. இதற்கு பதில் கொடுத்து உங்கள் நிலையை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

பைபிளோடு ஒப்பிட குர்ஆன் தகுதியானது அல்ல:

எம். எம். அக்பர் அவர்களே, முனீப் அவர்களே கீழ் கண்ட கட்டுரையை படித்துப்பாருங்கள். அதாவது, பைபிளோடு குர்ஆனை ஒப்பிடக்கூடாது, அது தவறானது என்று இக்கட்டுரை சொல்கிறது. ஏனென்றால், பைபிள் தன் வசனங்கள் எந்த சூழலில் சொல்லப்பட்டது என்ற விவரங்களை தன்னிடம் கொண்டுள்ளது. எனவே, அவைகளை புரிந்துக்கொள்ள ஹதீஸ்கள் போல புத்தகங்கள் தேவையில்லை. ஆனால், குர்ஆனின் வசனங்கள் புரிந்துக்கொள்ள ஹதீஸ்கள் (இவைகளின் உண்மையும், பொய்யும் இருக்கிறது என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள்), முகமதுவின் வாழ்க்கை வரலாறுகள் (சீராக்கள்) தேவைப்படுகின்றது. ஒரு சராசரி மனிதன் ஹதீஸ்கள், சீராக்கள் உதவியில்லாமல் குர்ஆனை புரிந்துக்கொள்ளமுடியாது. ஆனால், எந்த ஒரு புத்தகத்தின் உதவி இல்லாமல் பைபிளின் அடிப்படை கோட்பாடுகள், சத்தியங்கள் என்ன என்று சரியாக பைபிள் ஒன்றை படிப்பதன் மூலம் ஒரு சராசரி மனிதன் புரிந்துக்கொள்ளமுடியும்.

எனவே, குர்ஆன் முழுமை அடைந்தது என்றுச் சொல்லும் நீங்கள் நேர்மையானவர்களாக இருந்தால், இனி அப்படி சொல்லவேண்டாம் என்று கீழ் கண்ட கட்டுரையின் ஆசிரியர் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே, உங்கள் குற்றச்சாட்டிற்கு பதிலாக அக்கட்டுரையை நான் முன்வைக்கிறேன்.

தமிழ் கட்டுரை:
பைபிளையும், குர் ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி? ஆசிரியர் சாமுவேல் கிரீன்


எம். எம். அக்பர் அவர்கள் எழுதிய இக்கட்டுரையில் சொல்லப்பட்ட மற்ற விவரங்களுக்கு அடுத்த கட்டுரையில் பதில் தருகிறேன். தேவன் ஆதாமை, ஏவாளை படைத்தது முதல் கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் கூடிய சீக்கிரத்தில் கர்த்தருக்கு சித்தமானால் பார்க்கலாம். என் பதில்களோடு கூட, படைப்பு விவரங்களிலும் குர்ஆன் செய்துள்ள தவறுகள் என்ன என்பதையும் தெரிந்துக்கொள்ளலாம். அதே நேரத்தில் பைபிள் சொல்லும் விவரங்கள் எவ்வளவு சரியானவை என்பதையும் அடுத்த கட்டுரைகளில் தெரிந்துக்கொள்ளலாம். 





Isa Koran Home Page Back - Islam Kalvi Rebuttals Index
1
 

புதன், 23 ஜனவரி, 2008

Answering - PJ: இயேசு நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்படுவாரோ?

        
Answering - PJ: இயேசு நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்படுவாரோ?

(பி.ஜைனுல் ஆபீதீன் அவர்களுக்கு ஈஸா குர்ஆன் பதில்)


இயேசு கடவுள் என்றால் ஏன் அவர் நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்பட்டார் ? என்பது தான் பிஜே அவர்கள் கேட்கும் கேள்வி. பிஜே அவர்கள் "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்தை பைபிளின் வசனங்களை சரியாக ஆராயாமல் மேலோட்டமாக படித்து எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் அவர் முன்வைக்கின்ற கேள்விகளுக்கு தொடர் கட்டுரைகளாக நான் பதில் எழுதிக்கொண்டு வருகிறேன்.

இந்த வரிசையில் இயேசு ஏன் நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்பட்டார்? என்று பிஜே அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலை இக்கட்டுரையில் பார்க்கலாம்.



பிஜே அவர்கள் எழுதியது:

27. கடவுள் நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்படுவாரா?


ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அவர் போஜனபந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள். அவருடைய சீஷர்கள் அதைக்கண்டு விசனமடைந்து: இந்த வீண் செலவு என்னத்திற்கு? இந்தத் தைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்றார்கள்.

இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். (மத்தேயு 26:7-10 மூலம் :
இயேசு இறைமகனா?



1. சில விவரங்களை வேண்டுமென்றே குறிப்பிடாமல் விட்டுவிடும் இஸ்லாமிய அறிஞர்கள்

சாதாரணமாக பைபிளிலிருந்து ஒரு நிகழ்ச்சியை குறிப்பிடும் போது அந்த நிகழ்ச்சி சம்மந்தப்பட்ட எல்லா விவரங்களையும் பைபிள்  அதே இடத்தில் சொல்லிவிடும். ஆனால் குர்ஆன் அப்படி அல்ல, அல்லா சொன்ன வசனங்களை குர்ஆனில் பார்க்கவேண்டும், இவ்வசனங்கள் எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்று அறிய ஹதீஸ்களின் உதவியை நாடவேண்டும். ஹதீஸ்கள் இல்லாமல் குர்ஆனின் வசனங்களை புரிந்துக்கொள்வது மிகவும் கடினம்.

குர்ஆனை படிப்பது போல, புரிந்துக்கொள்வது போல பிஜே அவர்கள் பைபிளை புரிந்துக்கொண்டுள்ளார். அதாவது, ஒரு நிகழ்ச்சியை குறிப்பிடும் போது, அவருக்கு (பிஜே) தேவையான வசனங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு அந்நிகழ்ச்சியின் அடுத்தடுத்துள்ள வசனங்களை வேண்டுமென்றே, பைபிளுக்கு, இயேசுவிற்கும் விரோதமாக வித்தியாசமான பொருள் கொண்டுவரவேண்டும் என்று விட்டுவிட்டார் நம்முடைய இஸ்லாமிய அறிஞர், பல ஆண்டுகள் இஸ்லாமிய ஊழியம் செய்துகொண்டு வந்துக்கொண்டு இருக்கும் மதிப்பிற்குரிய பிஜே அவர்கள்.

பிஜே அவர்கள் எந்த வசனங்களை வேண்டுமென்றே குறிப்பிடாமல் விட்டுவிட்டார் என்பதை அறிய மேலும் படியுங்கள்
.

2. பிஜே அவர்கள் சொல்வது உண்மையா? 

பிஜே அவர்கள் குறிப்பிட்ட வசனங்களை இன்னொரு முறை படியுங்கள். அவர் குறிப்பிட்ட வசன எண்கள்: மத்தேயு 26:7-10 இவைகள் ஆகும்
.


27. கடவுள் நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்படுவாரா?


ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற பரிமள தைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அவர் போஜனபந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள். அவருடைய சீஷர்கள் அதைக்கண்டு விசனமடைந்து: இந்த வீண் செலவு என்னத்திற்கு? இந்தத் தைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்றார்கள்.

இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். (மத்தேயு 26:7-10)



1. இயேசு சீமோன் என்பவனுடைய வீட்டில் இருந்தார்.

2. அந்த சமயத்தில் ஒரு பெண் மிகவும் விலை உயர்ந்த தைலத்தை(நறுமணத்தை)  கொண்டு வந்து இயேசுவின் தலையிலே ஊற்றுகிறாள்.

3. இதைக்கண்டு இயேசுவின் சீடர்கள் இந்த வீண் செலவு எதற்கு, அந்த பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கலாம் அல்லவா? என்று கேட்கிறார்கள்.

4. இயேசு அப்போது அவர்களுக்கு பதில் தருகிறார்.



3. இயேசு பேசிய வசனங்களில் பாதியை மட்டும் குறிப்பிட்ட பிஜே அவர்கள்

பிஜே அவர்கள் உண்மையில் நேர்மையாக பைபிள் வசனங்களுக்கு பொருள் கூறுவதாக இருந்தால், இந்த நிகழ்ச்சி நடக்கும் போது தன் சீடர்களுக்கு இயேசு என்ன பதில் சொன்னாரோ அதை முழுவதுமாக குறிப்பிட்டு இருக்கவேண்டும். ஆனால், பிஜே அவர்கள் இயேசு பேசிய நான்கு வசனங்களில் ஒரு வசனத்தை மட்டும் குறிப்பிட்டுள்ளார். இப்படி செய்வது ஏமாற்றுவேலை ஆகுமா? அல்லது நேர்மையாக நடந்துக்கொண்டு செயல்படுவது ஆகுமா? என்பதை இக்கட்டுரையை படிக்கும் நீங்களே முடிவு செய்யுங்கள். இப்படிப்பட்ட செயல்கள் ஒரு மிகப்பெரிய புகழ்பெற்ற இஸ்லாமிய ஊழியரிடம் மக்கள் எதிர்பார்க்கமாட்டார்கள்.

சரி பிஜே அவர்கள் குறிப்பிடாமல் விட்ட அந்த வசனங்கள் என்னவென்று பாருங்கள்.



மத்தேயு 26:10 இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்.

மத்தேயு 26:11 தரித்திரர் எப்போதும் உங்களிடத்திலிருக்கிறார்கள். நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன்.

மத்தேயு 26:12 இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின் மேல் ஊற்றினது என்னை அடக்கம் பண்ணுவதற்கு எத்தனமான செய்கையாயிருக்கிறது.

மத்தேயு 26:13 இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.



இயேசு பேசிய நான்கு வசனங்களில் (மத்தேயு 26:10, 11, 12,13) ஒரு வசனத்தை (மத்தேயு 26:10) மட்டும் பிஜே குறிப்பிட்டார்கள். அதாவது, இயேசு பேசிய 100% ல், 25% மட்டும் குறிப்பிட்டு, மீதி 75% வேண்டுமென்றே மறைத்துள்ளார் பிஜே அவர்கள்.

4. சரி, பிஜே அவர்கள் மறைத்த வசனங்களில் இயேசு என்ன சொல்கின்றார்?

முதலாவது நறுமணத்தைப் பற்றிய சில விவரங்களை அறிந்துக்கொள்ளலாம்.

அ) நறுமணத்தை எப்போது பயன்படுத்துவார்கள்?

முக்கியமாக இயேசு வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் நறுமணத்தை கீழ் கண்ட காரணங்களுக்காக பயன்படுத்தினார்கள்:
1) தேவனுடைய வேலைக்காக ஒரு ஆசாரியனை அல்லது அரசனை பிரதிஷ்டை செய்ய பயன்படுத்துவார்கள் ( 1 சாமுவேல் 16:1 , 2 இராஜாக்கள் 9:6 சங்கீதம் 89:20)

2) மகிழ்ச்சியான நேரங்களில் பயன்படுத்துவார்கள் (நீதிமொழிகள் 27:9, ஏசாயா 61:3)

3) அரசர்களை, பெரியவர்களை சந்திக்கப்போகும் பொது மரியாதைக்காக விலை உயர்ந்த தைலத்தை நறுமணங்களைக் கொண்டுச்செல்வார்கள் (ஆதியாகமம் 43:11, மத்தேயு 2:11)

4) இறைவனுடைய ஆலய வேலைகளில் நறுமணமுள்ள தைலத்தை பயன்படுத்துவார்கள் (யாத்திராகமம் 30:25-32).

5) ஒருவர் மரித்துவிட்டால், அவரை அடக்கம் செய்யும் போது நறுமண தைலத்தை பூசி துணிகளால் சுற்றி அடக்கம் செய்வார்கள் (மத்தேயு 26:12, லூக்கா 23:55, 56, லூக்கா 24:1).



ஆ) தன் மரண அடக்க சடங்கிற்காக இயேசு இந்த நறுமணம் பூசப்பட்டது என்றார்

ஏன் பிஜே அவர்கள் இயேசு சொன்ன மற்ற வசனங்களை குறிப்பிடவில்லை? என்பது இப்போது புரிந்திருக்கும். அதாவது, அந்தப்பெண் தன் பாவங்களை இயேசு மன்னிக்கவேண்டும் என்பதற்காகவும், மதிப்பின் அடிப்படையிலும் அந்த தைலத்தை அவர் மீது ஊற்றினாலும், இயேசு அதை தன் மரணத்தின் பின்பு அடக்கத்தின் போது பயன்படுத்தும் நறுமணமாகவே எடுத்துக்கொண்டார் , அதையே அவர்கள் எல்லாருக்கும் முன்பாக அறிக்கையும் செய்தார். அதாவது இயேசு, தன் மீது ஊற்றப்பட்ட நறுமணத்தை கல்யாண வீட்டு சந்தோஷ நறுமணமாகக் கருதாமல், சாவு வீட்டில் வரும் நறுமணமாகவே அவர் கருதினார். ஆனால், பிஜே அவர்களுக்கு மட்டும், இயேசு அழகாக மேக் அப் (Make Up) செய்துக்கொண்டு, பணம் கொடுத்து நறுமணம் வாங்கி உடலெல்லாம் பூசிக்கொண்டது போல் இந்நிகழ்ச்சி தெரிந்து இருக்கிறது. எப்படி மற்றவர்களின் வேதங்களை இஸ்லாமிய அறிஞர்கள் வியாக்கீனம் செய்கிறார்கள் பார்த்தீர்களா?

சாவு வீட்டில் கூட வாசனைக்கு சில நறுமணங்களை தெளிப்பார்கள், அது ஏன் என்று எல்லாருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். அதாவது இந்தியாவில் ஒரு பிணத்தின் மீது தெளிக்கும் ரோஸ் வாடர் (Rose Water) என்று சொல்லக்கூடிய நறுமணத்திற்கு நிகராக இயேசு பேசியுள்ளார். ஆனால், அதை மறைப்பதற்காக பிஜே அவர்கள் வசனத்தை மறைத்தார்கள்.

மத்தேயு 26:11-13 வசனங்களை தன் புத்தகத்தில் குறிப்பிட்டால், தான் சொன்னவந்த செய்திக்கு அது எதிராக இருக்கும் என்பதற்க்காகவே, பிஜே அவர்கள் அதை குறிப்பிடவில்லை என்பது இப்போது புரிந்திருக்கும். இப்படித்தான் இஸ்லாமிய அறிஞர்கள் தவறான விவரங்களை சொல்லிக்கொண்டு முஸ்லீம்களையும், மற்றவர்களையும் முட்டாள்களாக்கிக் கொண்டு வருகிறார்கள்
.

தன் மரணத்தைப் பற்றித் தான் இயேசு பேசினார் என்பதற்கு பிஜே அவர்கள் குறிப்பிட்ட அதே அதிகாரத்திலிருந்து(26) இன்னும் சில விவரங்கள் :

1. மத்தேயு 26ம் அதிகாரம் 1-2ம் வசனங்களில், தன்னை சிலுவையில் யூதர்கள் அறைவார்கள் என்று இயேசு முன்னுரைக்கிறார்.

2. அப்படியே ஆசாரியர்களும் இயேசுவை பிடித்துகொலை செய்ய திட்டம் தீட்டுகிறார்கள் (மத்தேயு 26:3-5).

3. பிறகு தான் இந்த நறுமணம் பற்றிய நிகழ்ச்சி நடக்கிறது (மத்தேயு 26:7-13) இதில் வசனங்கள் 11லிருந்து 13 வரை பிஜே அவர்கள் வேண்டுமென்றே குறிப்பிடாமல் மறைத்தார்.

4. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இயேசு மறுபடியும் தன் மரணத்தைப்பற்றி முன்னுரைக்கிறார். ஏழைகள் உங்களிடத்தில் எப்போதும் இருப்பார்கள், ஆனால், நான் இருக்கமாட்டேன் என்று இயேசு சொல்கிறார்.

5. பிற்கு யூதாஸ் காரியோத்து என்ற சீடன் இயேசுவை காட்டிக்கொடுக்க யூதர்களிடம் பேசுகிறான் (மத்தேயு 26:14-16)

இப்படி ஆதாரங்களை அடுக்கிக்கொண்டுப் போகலாம்.

பிஜே அவர்களுக்கும் மற்ற அறிஞர்களுக்கும் சிந்திக்க சில கேள்விகள்:

1. எந்த சூழ்நிலையிலாவது இயேசு சீடர்களை அனுப்பி நறுமணங்களை கொண்டுவரும்படிச் சொல்லி, தினமும் பூசிக்கொண்டார் என்று உங்களால் ஆதாரம் காட்டமுடியுமா?

2. இயேசுவின் சீடர்கள் இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியில் "ஏன் இந்த வீண் செலவு ?" என்று விசனப்பட காரணமென்ன? காரணத்தை நான் சொல்கிறேன், இயேசு ஒரு முறை கூட இப்படி அதிக விலை உயர்ந்த தைலத்தை பணம் செலவு செய்து வாங்கிக்கொண்டு வரும்படி தன் சீடர்களுக்கு சொல்லவில்லை என்பதும், இயேசு இப்படி வீணான செலவுகள் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர் என்பதையும் சீடர்கள் அறிந்திருந்தனர்.

3. மட்டுமல்ல, இந்த சீடர்கள் அந்த பெண்ணின் மீது கோபப்பட்டார்களே தவிர இயேசுவின் மீதல்ல? காரணம் இயேசு அவராகவே ஏற்பாடு செய்துக்கொண்டு தைலத்தை தன் உடலில் பூசிக்கொள்ளவில்லை என்பதும், அந்தப்பெண் தானாகவே வந்து இப்படி செய்தாள் என்பதும் சீடர்கள் அறிந்திருந்தார்கள். எனவே தான் இயேசு அந்தப் பெண்ணின் மீது கோபப்படாதீர்கள், இது என் மரண சடலத்தின் மிது பூசப்படப்போகும் நறுமணம் என்று சீடர்களுக்குச் சொன்னார்.

4. எல்லாரும் இயேசுவோடு சாப்பிட உட்கார்ந்து இருக்கும் போது, மரணத்தைப் பற்றியும், அடக்க ஆராதனைப் பற்றியும் யாராவது பேசுவார்களா? பேசமாட்டார்கள். ஆனால், இயேசு பேசினார். காரணம் பிஜே அவர்கள் சொல்வது போல, இயேசு விரும்பி நறுமணங்களை பூசிக்கொள்ள ஆசைப்படவில்லை. எல்லா சூழ்நிலைகளையும் தன் மரணத்தைப்பற்றிப் பேச இயேசு பயன்படுத்திக்கொண்டார் என்பது தான் உணமை.

5. அரசாங்கத்திற்கு வரி கட்ட, தூண்டில் போட்டு அதில் முதலாவது பிடிக்கும் மீனின் வயிற்றில் இருக்கும் நாணயத்தை எடுத்து கட்டும் படி இயேசு பேதுருவிடம் சொன்னார்(மத்தேயு 17:24-27). ஒருவேளை இயேசு அதிக விலையுள்ள நறுமணங்களை பூசிக்கொண்டு, பணத்தை வீண் செலவு செய்துக்கொண்டு இருந்து, ஆனால், அரசாங்கத்திற்கு வரிகட்ட மட்டும் பேதுருவிற்கு மீன்பிடித்து கட்டுங்கள் என்று சொல்லியிருந்தால், சீடர்கள் என்ன சொல்லியிருப்பார்கள் என்பதை நீங்களே சிந்தித்துக்கொள்ளுங்கள். "இவர் மட்டும் வீண்செலவு செய்துக்கொண்டு விலை உயர்ந்த நறுமணத்தை பூசிக்கொள்வார், ஆனால், வரி கட்ட மட்டும், நாங்கள் உழைத்து கட்டவேண்டுமா?" என்று கேட்டு இருப்பார்கள். அவரை யாரும் பின்பற்றி இருக்கமாட்டார்கள்.

முடிவுரை:

முடிவாக பிஜே அவர்களே, முதலாவது நேர்மையான முறையில் எல்லா வசனங்களையும் படித்து கேள்வி கேளுங்கள். உண்மை பாதி பொய் பாதி என்பது உம்மைப்போன்ற மக்கள் மத்தியில் ஊழியம் செய்பவர்களுக்கு அழகல்ல என்பது என் கருத்து.

நீங்கள் கேட்ட கேள்வி தவறானது, அதற்கு நீங்கள் காட்டிய வசனங்களும் முழுமையாக காட்டப்படவில்லை. உங்கள் அல்லா போல, பாதி விவரங்கள் குர்ஆனில் சொல்லிவிட்டு, மீதி விவரங்கள் ஹதீஸ்களில் சொல்வது போல பைபிள் இல்லை. எல்லா விவரங்களும் ஒரே இடத்தில் சொல்லப்பட்டிருக்கும், இந்த வசனத்திற்கு ஏற்ற ஹதீஸ் எது என்று மற்ற புத்தகங்களில் தேடி கண்டுபிடிக்க வேண்டிய கஷ்டம் இல்லை. எனவே, முழுவதுமாக படித்து கேள்விகள் கேளுங்கள்.

ஒரு வேளை இயேசு நறுமணம் விருப்பமாக பூசிக்கொண்டாலும் சரி, அது உங்கள் "அல்லா" உண்மையான இறைவன் என்பதையும், "குர்ஆன் " என்பது இறைவேதம் என்பதையும் நிருபிக்க உதவாது என்பதை சொல்லிக்கொள்கிறேன்.

எங்களுக்கு அல்லாவைப்பற்றியும், முகமதுவைப்பற்றியும் சொல்வதற்கு முன்பாக உங்களிடம் நாங்கள் எதிர்ப்பார்ப்பது நேர்மையும், உண்மையையும் தான் என்பதை முதலாவது புரிந்துக்கொள்ளுங்கள்.

உங்கள் மார்கத்திற்காக மற்றவர்களின் வேதங்களில் (நாங்கள் தினமும் படிக்கும், தியானிக்கும் வேதத்தில்) இல்லாததை கற்பனை செய்துக்கொண்டுச் சொல்லும் நீங்கள், உங்கள் வேதத்தைப் பற்றி(நாங்கள் தினமும் படிக்காத, தியானிக்காத குர்ஆன் பற்றி) எங்களுக்கு விவரிக்கும் போது எவ்வளவு பொய்யான தகவல்களை சொல்லுவீர்கள் என்பதை கற்பனை கூட செய்துப்பார்க்க முடியாது.

பிஜே அவர்களுக்கு ஈஸா குர்ஆனின் இதர பதில்கள்:

1. பி.ஜைனுல் ஆபிதீனும், திரித்துவமும் & பவுலும்: பதில்

2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்ஆன் பதில்

3.
பி.ஜைனுல் ஆபிதீனும் பரிசுத்த ஆவியும் : ஈஸா குர்‍ஆன் பதில்

4.
பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 1

5. பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 2



Isa Koran Home Page Back - Answering PJ index Page
 1

திங்கள், 14 ஜனவரி, 2008

முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்(MUHAMMAD'S USE OF TORTURE)

        

முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்

ஆசிரியர்: சாமுவேல் கிரீன்

MUHAMMAD'S USE OF TORTURE

By Samuel Green

தமிழாக்கம்

( ஆங்கிலத்தில் இக்கட்டுரையை படிக்க
MUHAMMAD'S USE OF TORTURE - By Samuel Green ஐ சொடுக்கவும்)


இஸ்லாமை வளர்க்கவேண்டும் என்று உழைக்கும் இஸ்லாமிய அறிஞர்கள் "முகமது எவ்வளவு நல்லவராக வாழ்ந்தார்" என்று மற்றவர்களுக்கு போதிப்பார்கள். " இன்றைய மனித இனத்திற்கு முகமதுவின் வாழ்க்கை ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது" என்றுச் சொல்லுவார்கள். பல முஸ்லீம்களிடமும் முஸ்லீம்களில்லாதவர்களிடமும் முகமதுவைப் பற்றிப் பேசிப் பார்த்ததில் ஒன்று மட்டும் எனக்கு மிகவும் தெளிவாக புரிந்துவிட்டது. அது என்னவென்றால், இவர்கள் முகமதுவின் உண்மையான வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும் விவரங்களை, புத்தகங்களை படிக்கவில்லை என்பது தான் அது. மற்றும் முகமது தன் வாழ்க்கையில் என்னென்ன செய்தார் என்று இவர்களுக்கு தெரியவில்லை. அவர் செய்த பல செயல்களில் ஒன்று தான் " மற்றவர்களை கொடுமைப்படுத்துவது ". 

முதன் முதலாக முகமதுவின் வாழ்க்கை சரிதையை எழுதியவர் மதினாவில் பிறத இபின் இஷாக் (85-151 ஹிஜரி)  என்பவராவார். இந்த சரிதையில் "கைபர்" என்ற பட்டணத்தை முகமது கைப்பற்றிய பிறகு என்னென்ன செய்தார் என்பதைப் பற்றி தெரிந்துக்கொள்ளமுடியும். இந்த நிகழ்ச்சியை இபின் கதிர்[1] ஏற்றுக்கொண்டுள்ளார் மற்றும் அதைப் பற்றி எழுதியும் உள்ளார்.

கைபர் பட்டணம் பற்றிய மிதமுள்ள விவரங்கள் ( THE REST OF THE AFFAIR OF KHAYBAR )

கினானா பி. அல்-ரபி என்பவர் அல்-நதிர் என்பவரின் பொக்கிஷங்களின் பாதுகாவலன் ஆவார். இவரை நபியிடம் அழைத்துக்கொண்டு வந்தார்கள், முகமது பொக்கிஷங்களைப் பற்றி இவரிடம் கேட்டார். பொக்கிஷங்கள் எங்கே உள்ளது என்று தனக்கு தெரியாது என்று அவர் மறுத்தார். ஒரு யூதன் நபியிடம் வந்தான்(T. was brought) , "இந்த கினானா ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஒரு பாழடைந்த இடத்திற்கு சென்று வருவதை நான் கண்டு இருக்கிறேன்" என்றுச் சொன்னான். நபியவர்கள் கினானாவிடம் " நாங்கள் அந்த பொக்கிஷங்கள் உன்னிடம் இருப்பதாக கண்டுபிடித்தால், உன்னை கொன்றுவிடுவோம்" என்றுச் சொன்னார்கள், அதற்கு கினானா, "அப்படியே என்னை கொன்றுவிடுங்கள்" என்றுச் சொன்னான். நபியவர்கள் அந்த பாழடைந்த இடத்தை தோண்டி தேடிப்பார்க்கும் படி கட்டளையிட்டார்கள். அப்படி தேடிப்பார்க்கும் போது, அந்த இடத்தில் கொஞ்சம் பொக்கிஷங்களை அவர்கள் கண்டுபிடித்தார்கள். பின்பு நபியவர்கள் கினானாவிடம் மீதமுள்ள பொக்கிஷங்கள் எங்கே மறைத்து இருக்கிறாய்? என்று கேட்டபோது, அதை தெரிவிக்க கினானா மறுத்துவிட்டான். எனவே, நபியவர்கள் அல்-ஜுபைர் பி.அவ்வம் என்பவருக்கு கட்டளையிட்டு, " இவனிடம் மிதமுள்ள பொக்கிஷங்களை நீங்கள் தெரிந்துக்கொள்ளும் வரை இவனை கொடுமைப்படுத்துங்கள்(Torture)" என்றுச் சொன்னார். எனவே, அல்-ஜுபைர் நெருப்பை மூட்டி, இரும்பை சூடுபடுத்தி கினானாவின் மார்பிலே வைத்தான். கினானா கிட்டத்தட்ட மரித்தவன்போல் ஆகிவிட்டான். பிறகு நபி கினானாவை முஹம்மத் பி. மஸ்லமாவிடம் ஒப்புக்கொடுத்தார், அவன் தன் சகோதரன் மஹ்மத்காக பழிக்கு பழிவாங்க கினானாவின் தலையை துண்டித்து விட்டான். (Ibn Ishaq, Sirat Rasul Allah, translated as, The Life of Muhammad, (tr. A. Guillaume), Karachi: Oxford University Press, 1998, p. 515.)


THE REST OF THE AFFAIR OF KHAYBAR

Kinana b. al-Rabi`, who had the custody of the treasure of B. al-Nadir, was brought to the apostle who asked him about it. He denied that he knew where it was. A Jew came (T. was brought) to the apostle and said that he had seen Kinana going round a certain ruin every morning early. When the apostle said to Kinana, "Do you know that if we find you have it I shall kill you?" he said Yes. The apostle gave orders that the ruin was to be excavated and some of the treasure was found. When he asked him about the rest he refused to produce it, so the apostle gave orders to al-Zubayr b. al-`Awwam, " Torture him until you extract what he has," so he kindled a fire with flint and steel on his chest until he was nearly dead. Then the apostle delivered him to Muhammad b. Maslama and he struck off his head, in revenge for his brother Mahmud. (Ibn Ishaq, Sirat Rasul Allah, translated as, The Life of Muhammad, (tr. A. Guillaume), Karachi: Oxford University Press, 1998, p. 515.)


முகமதுவின் இந்த செயல், அவருடைய நடத்தையைப் பற்றிய மிகவும் முக்கியமான விவரத்தை நமக்கு போதிக்கிறது. தன் இலக்கை அடைவதற்கு கொடுமைபடுத்துவதை ஒரு ஆயுதமாக பயன்படுத்திய மனிதனாக முகமது உள்ளார். இந்த நிகழ்ச்சியில், முகமதுவிற்கு அல்-நதிர் என்ற இனமக்களின் "பொக்கிஷங்கள்" தேவைப்பட்டது. அந்த பொக்கிஷ சாலையின் பாதுகாவலன் அதை முகமதுவிற்கு கொடுக்கவில்லை. அதனால், அவனை கொடுமைப்படுத்தும் படி முகமது கட்டளையிட்டார். முகமதுவின் தோழர்களுக்கு ஒரு மனிதனை எப்படி கொடுமைப்படுத்தவேண்டும் என்று நன்றாகத் தெரியும், எனவே, அவனை கொடுமைப்படுத்த ஆரம்பித்தனர். இப்படிப்பட்டவர் தான் முகமது என்பவர். முகமது விரும்பினால் மற்றவர்கள் மீது பரிதாபப்பட்டு அவர்களை மன்னிக்கமுடியும், அதே நேரத்தில் தன் அரசாங்கத்தை விஸ்தரிக்கச் செய்வதற்காகவும் பணத்திற்காகவும் மற்றவர்களை கொடுமைப்படுத்தவும் அவரால் முடியும். இந்த வகையில் பார்க்கும் போது, உலக சரித்திரத்தில் வாழ்ந்த சாதாரண அரசர்கள் மற்றும் சர்வாதிகாரிகள் போல இவரும் செயல்பட்டுள்ளார். 

முகமதுவைப் பற்றி பெரும்பான்மையான மக்களுக்கு தெரிந்திருப்பது உண்மையின் ஒரு பாதி மட்டும் தான் என்பது மிகவும் கொடுமையானது, வருந்தப்படத் தக்கது. இஸ்லாமையும், முகமதுவையும் பற்றிச் சொல்லி இஸ்லாமை வளர்க்கும் அறிஞர்கள் நேர்மையானவர்களாக இருந்து, "முகமதுவின் உண்மையான வாழ்க்கையைப் பற்றியுள்ள எல்லா விவரங்களையும்" சொல்லவேண்டும். "முகமது ஒரு பின்பற்றத்தகுந்த எடுத்துக்காட்டாக இருக்கிறாரா இல்லையா" என்று நாங்கள் முடிவு செய்வதற்கு முன்பு, அவருடைய வாழ்க்கையைப் பற்றிய எல்லா விவரங்களையும் நாங்கள் அறிய விரும்புகிறோம்.

இயேசுவின் வாழ்க்கையே எல்லாரும் பின்பற்றத் தகுந்த எடுத்துக்காட்டாக உள்ளதென்று நான் சொல்வேன். நீங்கள் இயேசுவின் வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துக்கொள்ளவும், அவரை பின்பற்றவும் உங்களை நான் அன்புடன் அழைக்கிறேன். பைபிளில் இயேசுவைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறது என்று தெரிந்துக்கொள்ள
இந்த தொடுப்பை க்ளிக் செய்யவும்.


Endnotes

[1] Ibn Kathir, Al-Sira al-Nabawiyya, translated as, The Life of the Prophet Muhammad, (tr. Prof. Trevor Le Gassick), Reading, UK: Garnet Publishing Limited, 2000, vol. 3, p. 268.

Further Reading

Read about
Muhammad's use of assassins and intimidation to spread Islam.

ஆசிரியர் சாமுவேல் கிரீன் அவர்களோடு தொடர்பு கொள்ள: மெயில் விலாசம்
ஆசிரியருடைய இதர கட்டுரைகள் ஆங்கிலத்தில் படிக்க : இங்கே சொடுக்கவும்.


Christian-Muslim Discussion Papers © 2005

மூலம்:
MUHAMMAD'S USE OF TORTURE - By Samuel Green


தமிழாக்கம் முற்றிற்று

மேலும் படிக்க : Thoughts on the Prophethood of Muhammad

Source:  http://www.answering-islam.org/Silas/index.htm



Isa Koran Home Page Articles Index Author Samuel Green's Index
1
 
 
 

புதன், 9 ஜனவரி, 2008

பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி? - சாமுவேல் கிரீன்

                      

பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?

ஆசிரியர்: சாமுவேல் கிரீன்

COMPARING THE BIBLE AND THE QUR'AN
(How to do it Accurately)
By Samuel Green

தமிழாக்கம்
( ஆங்கிலத்தில் இக்கட்டுரையை படிக்க
இங்கு சொடுக்கவும்)


கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் சில விவரங்களைப் பற்றி விவாதிக்கும் போது, சில நேரங்களில் பைபிளையும் குர்ஆனையும் ஒன்றையொன்று ஒப்பிடுகிறார்கள். அவர்கள் பெரும்பான்மையாக கீழ் கண்ட விதங்களில் (தலைப்புக்களில்) அவைகளை ஒப்பிடுகிறார்கள்.
வேதங்கள் எப்படி பாதுகாக்கப்பட்டது (Preservation of text )

வேதங்களின் அதிகாரபூர்வமான தொகுப்புக்கள் (Formation of canon )

இயேசு, பெண்கள், போர்கள் போன்ற தலைப்புகள் குறித்து வேதங்கள் என்ன போதிக்கின்றன (Teaching about Jesus, women, warfare, etc. )

விஞ்ஞான பிழையின்மை (அ) ஆதாரம் (Scientific accuracy )

முரண்பாடுகள் (Contradictions)


நானும் இப்படிப்பட்ட ஒப்பிட்டு முறையைத் தான் கடந்த காலத்தில் செய்துவந்தேன்.  உண்மையில் இது ஒரு பிழையுள்ள மற்றும் நம்மை தவறான வழியில் நடத்தக்கூடிய "ஒரு ஒப்பிட்டு முறையாகும்". இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

காரணம் 1: பைபிள் மற்றும் குர்‍ஆன் வசனங்களின் சூழ்நிலை (Reason 1. The Context of the Bible and Qur'an)

குர்ஆன் முகமதுவின் வாழ்க்கையைச் சுற்றியுள்ள விவரங்களையும் மற்றும் வெளிப்பாடுகளையும் சொல்கிறது. முகமது, தன் வாழ்க்கையில் நிகழ்ந்த பல சூழ்நிலைகளுக்கு பதிலாக குர்‍ஆன் வசனங்களைச் சொன்னார் அல்லது அவருக்கு வசனங்கள் வெளிப்பட்டது. ஆனால், அந்த சூழ்நிலைகள் (அ) சந்தர்பங்கள் என்ன? போன்ற விவரங்கள் குர்‍ஆனில் எழுதப்படவில்லை. அதாவது, குர்‍ஆன் தன் சொந்த வசனங்கள் வெளிப்பட்ட சூழ்நிலையையும்(Context), கால வரிசை விவரங்களையும்(Chronology) கொண்டு இருக்கவில்லை. குர்‍ஆனை சரியாக புரிந்துக்கொள்வதற்கு, அதன் வசனங்கள் வெளிப்பட்ட சூழ்நிலையையும்(Context), காலவரிசை விவரங்களையும்(Chronology) தெரிந்துக்கொள்வது மிக மிக அவசியமாக உள்ளது. ஆனால், இந்த சூழ்நிலையையும், காலவரிசை முறையையும் நாம் தெரிந்துக்கொள்ளவேண்டுமானால், குர்‍ஆனுக்கு வெளியே உள்ள "இஸ்லாமிய பாரம்பரிய" நூல்களாகிய "ஹதீஸ்களையும், சீராவையும் (Hadith or Sira literature)" நாம் படித்து தெரிந்துக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட நூல்கள் நமக்கு குர்‍ஆன் வசனங்கள் வெளிப்பட்ட சூழ்நிலையை சொல்கின்றன. இஸ்லாமிய அறிஞர் Habib Ur Rahman Azami (ஹபீப் உர் ரஹ்மான் அஜாமி) "குர்‍ஆன் ஹதீஸ்கள் மீதும் சீராவின் மீதும் ஆதாரப்பட்டுள்ளது " என்று மிகவும் தெளிவாகச் சொல்லியுள்ளார்.
ஹதீஸ்கள் பயனற்றவை என்றும், அதிகார பூர்வமற்றது என்றும் அவைகளை ஒதுக்கிவிட்டால், குர்‍ஆனில் உள்ள பெரும்பான்மையான வசனங்களின் பொருளும், அவைகளை புரிந்துக்கொள்வதும் முடியாமல் போய்விடும். (Habib Ur Rahman Azami, The Sunnah in Islam, pp. 29-31.)

(I)t is almost impossible to understand or explain the meaning of a large number of Qur'anic verses if the Traditions are rejected as useless and inauthentic. (Habib Ur Rahman Azami, The Sunnah in Islam, pp. 29-31.)

ஆனால், பைபிள் வித்தியாசமானது. பைபிள் தன் வசனங்களை புரிந்துக்கொள்ள தேவையான சூழ்நிலையையும்(Context), காலவரிசை விவரங்களையும்(Chronology) தன்னுள் கொண்டுள்ளது. பைபிளின் வெளிப்பாடுகள் உலகம் உண்டானது எப்படி என்ற விவரங்களோடு ஆரம்பிக்கிறது, அதன் பிறகு நடந்த நிகழ்வுகளை சொல்லிக்கொண்டு வந்து கடைசியில், உயிர்த்தெழுதல் காலத்தைப் பற்றி சொல்லி விட்டு, சரியாக முடிவடைகிறது. பைபிள் பல கட்டளைகளை கொடுக்கும் போது அல்லது நற்செய்தியை அறிவிக்கும் போது, அவ்வசனங்கள் எந்த சூழ்நிலையில்(Context) வெளிப்பட்டது என்ற விவரங்களை மிகவும் தெளிவாகச் சொல்கிறது. ஆகவே, நீங்கள் பைபிளை புரிந்துக்கொள்ள வேண்டுமானால், உங்களுக்கு தேவை பைபிள் மட்டும் தான்.

இறைவனுடைய வார்த்தைகள் எப்படி இருக்கவேண்டுமோ அது போல, பைபிள் தன் சுயதேவையை தானே பூர்த்திசெய்துக்கொள்ளும் தகுதியுடையதாக உள்ளது. எனவே, பைபிளை குர்‍ஆனோடு மட்டும் ஒப்பிட்டு பார்ப்பது பிழையுள்ளதாகும் மற்றும் அது தவறான முடிவுக்கு கொண்டுபோகும்.
(The Bible is self-sufficient, as the word of God should be. Therefore to compare the Bible to the Qur'an alone is misleading and inaccurate.)

காரணம் 2: பழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் (Practices and Beliefs)

இஸ்லாமின் பெரும்பான்மையான அடிப்படை கோட்பாடுகள், நம்பிக்கைகள் பற்றிய விவரங்கள் குர்ஆனில் இல்லை.

"முகமது சொன்னது, செய்தது" என்று சொல்லக்கூடிய "சுன்னா-Sunnah" என்பது குர்‍ஆனுக்கு துணையாக உள்ள அடுத்தபடியான நூல்கள் ஆகும். உண்மையைச் சொல்லவேண்டுமானால் சில சந்தர்பங்களில் இந்த "சுன்னா" குர்‍ஆனை விட அதிக முக்கியத்துவம் பெறுகிறது அல்லது "சுன்னா" வின் கை குர்‍ஆனைவிட ஒரு படி மேலே நிற்கிறது.

உதாரணத்திற்கு ஒரு எடுத்துக்காட்டை இங்கு சொல்லட்டும், அதாவது குர்‍ஆன் தினமும் மூன்று முறை நமாஜ் செய்யவேண்டும்(24:58 and 11:114) என்று சொல்லும் போது, சுன்னா "ஐந்து முறை" தினமும் நமாஜ் செய்யவேண்டும் என்று சொல்கிறது (முஸ்லீம்கள் இன்று பின்பற்றுவது "சுன்னா" நிர்ணயித்த தினமும் 5 முறை நமாஜ் செய்வதைத்தான், குர்‍ஆன் சொல்வதை அல்ல‌ ).


இன்னும் சில சந்தர்பங்களில் இஸ்லாமின் ஆரம்ப கால பழக்கவழக்கங்களை பார்க்கும் போது, சில பழக்கங்கள், "சுன்னா" விற்கு முரண்பட்டவையாக கூட இருந்தது. உண்மையைச் சொல்லவேண்டுமானால், குர்‍ஆன் வெளிப்படையாக எல்லா கட்டளைகளையும் சொல்லவில்லை , இஸ்லாமின் அடிப்படை கட்டளைகளையாவது குர்‍ஆன் முழுமையாக சொல்வதில்லை. அதாவது, குர்‍ஆன் "நமாஜ் (தொழுகை)" செய்யவேண்டும் என்று கட்டளையிடுகிறது, ஆனால், எப்படி செய்யவேண்டும்? என்று சொல்வதில்லை. எப்படி நமாஜ் செய்யவேண்டும்? என்ற வழிமுறை முழுக்க முழுக்க "சுன்னா"வின் மீது ஆதாரப்பட்டுள்ளது. (Cyril Glass鬠"Sunnah", The Concise Encyclopedia of Islam, pp. 381-382.)

குர்ஆன் தினமும் தொழவேண்டிய தொழுகையாகிய "நமாஜ்" என்ற சலாவை(Salah) கடமையாக்கி அதை கட்டளையிட்டுள்ளது, மற்றும் அதை எப்படி செய்யவேண்டும் என்ற சில விவரங்களை (like Qiyam, Ruku`, Sujud and Qira'ah) குர்ஆன் சொல்கிறது. ஆனால், நமாஜை சரியான முறையில் எப்படி செய்யவேண்டும் என்பதையும், இந்த நமாஜ் சம்மந்தப்பட்ட இதர செயல்பாடுகள் எந்த வரிசையில் செய்யவேண்டும் என்பதைப் பற்றிய விவரங்கள் குர்ஆனில் சொல்லப்படவில்லை. அதே போல, ஹஜ்(Hajj) என்னப்பட்ட "மக்காவிற்குச் செல்லும் புனித யாத்திரை" என்பது ஒரு மதசம்மந்தப்பட்ட கடமை என்று குர்ஆன் சொல்கிறது. ஆனால், ஹஜ் என்பதை எந்த ஒழுங்கில்(Method) செய்யவேண்டும்? ஹஜ் செய்யும் போது என்னென்ன சாம்பிரதாயங்களை(Formalities) எப்படி செய்யவேண்டும்? போன்ற விவரங்களை குர்ஆன் விவரிப்பதில்லை. ஹஜ்ஜை எப்படி செய்யவேண்டும் என்று சரியான வழிமுறையை நபியே செய்துகாட்டியுள்ளார். (Habib Ur Rahman Azami, pp. 10-11.)

குர்ஆன் மற்றும் சுன்னா(Sunnah) என்ற இரண்டின் உதவியுடன் மட்டுமே இஸ்லாம் சட்டம்(Islamic Shariah) முழுமைபெறும். (Habib Ur Rahman Azami, p. 5.)


எப்படி தொழவேண்டும்? எப்போது தொழவேண்டும்? மற்றும் என்ன சொல்லி தொழவேண்டும்? ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது அதை எப்படி செய்யவேண்டும்? சுன்னத்து(circumcision) எப்படி செய்யவேண்டும்? போன்ற, இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகள் பெரும்பான்மையாக முகமதுவின் செயல்பாடுகளிலிருந்து(சுன்னா) வருகிறது . இஸ்லாமுக்கு சுன்னா(Sunnah) என்பது மிக முக்கியமானது, ஆனால், சுன்னா என்பது குர்ஆனிலிருந்து வரவில்லை, அதற்கு பதிலாக அது ஹதீஸ்களிலிருந்தும், சீராவிலிருந்தும் வருகிறது. மறுபடியும் நாம் கவனிக்கும் பொது, பைபிள் கோட்பாடுகள் இப்படி இல்லை. ஒரு கிறிஸ்தவனுக்கு தேவையான எல்லாவற்றையும் பைபிள் தன்னகத்தே கொண்டுள்ளது. இறைவன் நம்மை இரட்சிப்பதற்காக என்ன செய்தார்? மற்றும் இதனால் தன் பெயர் எப்படி கனப்படுத்தப்படும் மற்றும் நாம் எப்படி வாழவேண்டும்? போன்றவற்றை பைபிள் தெளிவாகச் சொல்கிறது. பைபிள் நம்முடைய ஞானத்திற்கும் விடுதலைக்கும் ஆதாரமாக உள்ளது. எனவே, பைபிளை குர்‍ஆனோடு மட்டும் ஒப்பிட்டு பார்ப்பது பிழையுள்ளதாகும் (inaccurate) மற்றும் அது தவறான முடிவுக்கு(misleading) கொண்டுபோகும்.

மிகச் சரியான ஒப்பிடும் முறை ( A More Accurate Comparison )

இப்போது ஒன்று மட்டும் தெளிவாக புரிந்துவிட்டது, அதாவது பைபிளை குர்ஆனோடு ஒப்பிடுவது என்பது சரியான ஒப்பிடுதல் அல்ல. ஏனென்றால், பைபிள் கிறிஸ்தவத்தின் அஸ்திபாரம் ஆகும். ஆனால், குர்ஆன் இஸ்லாமின் அஸ்திபாரம் அல்ல. மாறாக, குர்ஆன், ஹதீஸ்கள், மற்றும் சீரா இவை மூன்றும் இஸ்லாமின் அஸ்த�=As��Aாரமாக உள்ளது. நீங்கள் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய புத்தகங்களை நேர்மையாகவும், சரியான முறையிலும் ஒப்பிட்டு பார்க்கவேண்டும் என்று விரும்பினால், நீங்கள் இவ்விரு மார்க்கங்களின் முக்கியமான புத்தகங்களை ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும்.
( If you want an honest and accurate comparison between the books of Christianity and Islam then you must compare the essential books of both religions.)

ஹதீஸ்கள் பற்றிய சில விவரங்கள்: "ஹதீஸ் - hadith" என்ற வார்த்தையின் அர்த்தம் "ஒரு பொருளின் விவரம் அல்லது செய்தி (an account or news about something) " என்பதாகும். ஒரு ஹதீஸின் அளவு ஒரு வாக்கியமாகவோ அல்லது ஒரு பக்கம் அளவிற்கோ இருக்கும். இஸ்லாமைப் பொருத்தவரை முகமது என்ன சொன்னாரோ மற்றும் அவர் என்ன செய்தாரோ அது தான் ஹதீஸ்களின் முக்கிய கருப்பொருளாக உள்ளது. இதைத் தான் "சுன்னா" என்றுச் சொல்வார்கள், ஆக, ஹதீஸ்களில் இருப்பது "சுன்னா" ஆகும். ஹதீஸ்கள் பலவகையில் மிகப்பெரிய தொகுப்புகளாக உள்ளது. முக்கியமான ஹதீஸ் தொகுப்புக்கள் என்ன என்று பேராசிரியர். மசுத்-உல்-ஹசன் அவர்கள் விளக்குகிறார்.

முசன்னப் ("Musannaf"[1]) முறைப்படி அங்கீகரிக்கப்பட்ட ஹதீஸ்களின் தொகுப்புக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அல்-புகாரி (கி.பி. 870 ) [7658 ஹதீஸ்களின் தொகுப்பு]

முஸ்லீம் (கி.பி. 875 ) [7748 ஹதீஸ்களின் தொகுப்பு]

அபு தாவுத் (கி.பி. 875 ) [5276 ஹதீஸ்களின் தொகுப்பு]

அல்-திர்மிதி (கி.பி. 892) [4415 ஹதீஸ்களின் தொகுப்பு]

அல்-நசய் (கி.பி. 915) [5776 ஹதீஸ்களின் தொகுப்பு]

இபின் மஜா (கி.பி. 886) [4485 ஹதீஸ்களின் தொகுப்பு]

... அல்-புகாரி மற்றும் முஸ்லீம் ஹதீஸ் தொகுப்புக்கள் மிகவும் உயர்ந்ததாகவும் உண்மையானதாகவும் மதிக்கப்படுகிறது, எனவே இவை இரண்டும் "அல்-சஹிஹை - Al-Sahihain" ஆதாரப்பூர்வமான மற்றும் அதிகாரபூர்வமான ஹதீஸ்கள் என்று அழைக்கப்படுகிறது.
Al-Bukhari
The collection of hadith 
by Imam Bukhari.
9 volumes in the 
English/Arabic translation.
Muslim
The collection of hadith 
by Imam Muslim.
8 volumes in the 
English/Arabic translation.


மஸ்நத் - "Musnad"[2] முறைப்படி மிகவும் புகழ்பெற்ற ஹதீஸ் "அஹமத் இபின் ஹன்பல் " (கி.பி. 855 )தொகுத்த ஹதீஸ் தொகுப்பாகும்.

ஷியா முஸ்லீம் பிரிவினரின் ஹதீஸ் தொகுப்புக்களில், முகமது நபி என்ன சொன்னாரோ அல்லது செய்தாரோ போன்ற செய்திகளை மட்டும் அது உள்ளடக்கிக் கொண்டு இருப்பதோடு மட்டுமல்லாமல், ஷியா இமாம்கள்(அறிஞர்கள்)சொன்னதும் செய்ததும் அது உள்ளடக்கியுள்ளது.


ஷியா முஸ்லீம் பிரிவினரின் ஹதீஸ் தொகுப்புக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


முஹம்மத் இபின் யாகுப் அல்-குல்லுனி (கி.பி. 939)

முஹம்மத் அல்-ஹும்மி (கி.பி. 991)

தஹிர் அல்-ஷரிப் அல்-முர்தஜா (கி.பி. 1004)

முஹம்மத் அல்-துசி (கி.பி. 1067) (Prof. Masud-ul-Hasan, History of Islam, vol. 1, p. 613.)

"முவட்டா மாலிக் - Muwatta of Malik" என்ற பெயரில் ஒரு முக்கியமான ஹதீஸ் தொகுப்பும் உள்ளது.

சீராவைப் பற்றிய சில விவரங்களைத் தெரிந்துக்கொள்ளலாம். "சீரா"க்கள் என்பது முகமதுவின் வாழ்க்கையைப் பற்றிய சரிதைகள் ஆகும். இவைகள் முகமதுவின் வாழ்க்கையின் சூழ்நிலையையும், கால வரிசை முறையையும் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையும், கால வரிசை முறையும் தான் குர்ஆன் வசனங்களின் சூழ்நிலையும்(Context), காலவரிசையு(Chronology)மாக இருக்கிறது. பழமைவாய்ந்த இரண்டு சீராக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

முஹம்மத் இபின் இஷாக் (கி.பி. 773) Via இபின் ஹிஸம் (கி.பி. 840) recension, சீரத் ரசூல் அல்லாஹ் (English translation 798 pages[3].)

முஹம்மத் இபின் சைத் (கி.பி. 852), கிதாப் அல்-தபாகத் அல்-கபீர் (English translation, 1097 pages[4].)


( Muhammad ibn Ishaq (d. 773 C.E.) via ibn Hisham's (d. 840 C.E.) recension, Sirat Rasul Allah. (English translation 798 pages[3].)

Muhammad ibn Sa'd (d. 852 C.E.), Kitab al-Tabaqat al-Kabir, (English translation, 1097 pages[4].))

Ibn Ishaq
Ibn Ishaq, Sirat Rasul Allah 
translated as 'The Life of Muhammad'
Ibn Sa'd
Ibn Sa'ad, Kitab
Al-Tabaqat Al-Kabir

இக்கட்டுரையை படிக்கும் நீங்கள், இஸ்லாம் மார்க்கத்திற்கு குர்ஆன் மட்டுமல்லாமல், இன்னும் பல முக்கியமான புத்தகங்கள் இருப்பதை கவனிக்கமுடியும். இந்த இதர புத்தகங்களின் அளவை பார்க்கும் போது அவைகள் குர்ஆனை விட மிகவும் பெரியதாக காணப்படுகிறது.

புகாரி மற்றும் முஸ்லீம் ஹதீஸ்களில் உள்ள வசனங்களின் எண்ணிக்கை குர்ஆனின் மொத்த வசனங்களாகிய 6236 வசனங்களை விட அதிகமாக உள்ளது. ஒரு முன்னாள் இஸ்லாமிய அறிஞர் ஒரு முறை எனக்கு கீழ்கண்டவாறுச் சொன்னார், அதாவது, "இஸ்லாமில் 10% குர்ஆன் மற்றும் 90% ஹதீஸ்கள் (ஹதீஸ் மற்றும் சீரா)" என்றார். குர் ஆன் என்பது ஒரு "வரை படத்தின்" நான்கு பக்கங்களிலும் போடப்பட்டு இருக்கும் சட்டங்கள்(Frame) போன்றது. குர்ஆன் சில எல்லைகளை குறித்துக் கொடுக்கும், ஆனால் அந்த படத்தில் வரையப்பட்டிருக்கும் விவரங்கள் அனைத்தும் ஹதீஸ்கள் மூலமாக கொடுக்கப்படுகிறது. ( The Quran is like the frame of a picture. It sets some boundaries, but the details of the picture are provided by the traditions. )

சில செயல்முறை விளக்கங்கள்: (Some Application)

1. பைபிளை குர்ஆனோடு ஒப்பிடும் இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் தலைவர்கள் நேர்மையுள்ளவர்களாக நடந்துக்கொண்டு மக்களை ஏமாற்றுவதை இனி நிறுத்திவிடவேண்டும். அவர்கள் இனி "குர்ஆன் தனக்குள் தானே முழுமையானது அல்ல" என்று மக்களுக்கு போதிக்கவேண்டும். இனி பைபிளோடு குர்ஆனை மட்டும் ஒப்பிடுவதோடு மட்டுமல்லாமல், இஸ்லாமில் உள்ள முக்கியமானதாக கருதப்படும் இதர அனைத்து புத்தகங்களையும் ஒப்பிடுங்கள். ஒரு இஸ்லாமிய அறிஞர் இப்படி நேர்மையற்ற முறையில் பைபிளோடு குர்ஆனை மட்டும் ஒப்பிட்டு வாதாடுவதை, இக்கட்டுரையை படிக்கும் நீங்கள் கவனிக்க நேர்ந்தால், உடனே தைரியம் கொண்டு அவர் செய்துக்கொண்டு இருக்கும் இந்த தவறை அவருக்கு எடுத்துக்கூறுங்கள்.

2. "பைபிளோடு குர்ஆனை மட்டும் ஒப்பிடுவது சரியானது" தான் என்று கிறிஸ்தவர்கள் நினைத்துக்கொண்டு ஏமாந்துப் போகாதீர்கள். இதைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். கிறிஸ்தவம் என்பது பைபிள் ஒன்றின் மீது மட்டும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஆனால், இஸ்லாம் குர்ஆன் மீது மட்டுமல்ல, அதோடு கூட ஹதீஸ்கள் மீதும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஒரு முஸ்லீம் "இரண்டு புத்தகங்களையும்" ஒப்பிடுங்கள் என்று உங்களிடம் கூறினால், உடனே நீங்கள் "நேர்மையான முறையில்" ஒப்பிடவேண்டுமானால், குர்ஆனோடு கூட ஹதீஸ்களையும், சீராவையும் பைபிளோடு ஒப்பிடவேண்டும் என்று அழுத்திச்சொல்லுங்கள்.

3. ஒரு வேளை இக்கட்டுரையை படிக்கும் நீங்கள் ஒரு "கிறிஸ்தவரல்லாதவராகவோ" அல்லது ஒரு "முஸ்லீமாகவோ" இருப்பீர்களானால்,"உண்மையில் குர்ஆனும் பைபிளும் ஒரே வகையான புத்தகங்கள் இல்லை" என்பதை நினைவில் கொள்ளவும். குர்ஆன் என்ன வசனங்கள் சொல்கிறதோ அந்த வசனங்கள் வெளிப்பட்ட சந்தர்ப்பத்தை(சூழ்நிலையை - Context )அது சொல்வதில்லை அல்லது இஸ்லாமில் பின்பற்றப்படும் பல கோட்பாடுகளைப் பற்றிய சூழ்நிலையை குர்ஆன் சொல்வதில்லை. இவைகள் வேறு புத்தகங்களிலிருந்து வருகிறது. ஆனால், ஒரு கிறிஸ்தவனுக்கு தேவையான நம்பிக்கை மற்றும் அவன் பின்பற்றவேண்டிய எல்லா கோட்பாடுகளையும் பைபிள் தன்னிடம் கொண்டுள்ளது.

4. நாங்கள் "இயேசுவை உங்கள் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று உங்களுக்கு அழைப்பு விடுக்கும் போது, பைபிள் ஒன்றை மட்டும் நீங்கள் நம்பினால் போதும் என்றுச் சொல்கிறோம்.

5. ஒரு சாதாரண கிறிஸ்தவன் "பைபிள் முழுவதையும் படித்து அதன் கோட்பாடுகளை நன்றாக புரிந்துக்கொள்ள" அவனால் முடியும், ஆனால், ஒரு சாதாரண முஸ்லீம் குர்ஆனையும் மற்றும் இஸ்லாமில் உள்ள எல்லா புத்தகங்களையும் படித்து புரிந்துக்கொள்வது என்பது மிகவும் கடினமான வேலையாகும். ஏனென்றால், இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகள் அடங்கிய புத்தகங்கள் அதிக அளவில் உள்ளது, மட்டுமல்லாமல் அவைகள் எல்லாம் இன்னும் மொழிபெயர்க்கப்படவில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமானால், முகமதுவின் வாழ்க்கையை முதன் முதலில் சரிதையாக எழுதிய, இபின் இஷாக் அவர்களின் புத்தகமாகிய "சூரத் ரசூல் அல்லா - Ibn Ishaq's, Sirat Rasul Allah" என்ற புத்தகத்தை பெரும்பான்மையான முஸ்லீம்கள் படிப்பதில்லை.

பின் குறிப்புகள் :


[1] Where the hadiths are ordered according to topic.
[2] Where the hadiths are ordered according to narrator.
[3] Ibn Ishaq, Sirat Rasul Allah, translated as, The Life of Muhammad, (tr. A. Guillaume), Karachi: Oxford University Press, 1998.
[4] Ibn Sa'ad, Kitab Al-Tabaqat Al-Kabir, (tr. S Moinul Haq) New Delhi: Kitab Bhavan, 2 volumes, no date.

References

Habib Ur Rahman Azami, The Sunnah in Islam, U.K.: UK Islamic Academy, 1995.
Prof. Masud-ul-Hasan, History of Islam, Delhi: Adam Publishers & Distributors, 2002.
Cyril Glass鬠The Concise Encyclopedia of Islam, San Francisco: Harper & Row, 1989.

Copyright © 2007 Samuel Green.

மூலம்:
http://answering-islam.org/Green/compare.htm

ஆசிரியர் சாமுவேல் கிரீன் அவர்களோடு தொடர்பு கொள்ள: மெயில் விலாசம்
ஆசிரியருடைய இதர கட்டுரைகள் ஆங்கிலத்தில் படிக்க : இங்கே சொடுக்கவும்.


தமிழாக்கம் முற்றிற்று

நன்றியுரை: நான் சகோதரர் சாமுவேல் கிரீன் அவர்களுக்கு மெயில் அனுப்பி,
ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் வெளியாகியுள்ள அவருடைய கட்டுரைகளை மொழிபெயர்க்க அனுமதி கெட்டபோது, உடனே எனக்கு அனுமதி கொடுத்தார். அதற்காக அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.



Isa Koran Home Page Articles Index Author Samuel Green's Index

 

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/samuelgreen/CompareGreen.htm

 

 



Download prohibited? No problem. CHAT from any browser, without download.