ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

செவ்வாய், 26 பிப்ரவரி, 2008

உமருக்கு ஏகத்துவம் பதில்: இயேசு தாயை அவமதித்தார் : உமர் மறுமொழி

உமருக்கு ஏகத்துவம் பதில்: இயேசு தாயை அவமதித்தார்

முன்னுரை: கேரள இஸ்லாமிய அறிஞர் எம். எம். அக்பர் அவர்கள், சுருக்கமாக "இயேசு தன் தாயை அவமதித்தவராக" இருக்கிறார் என்று பைபிள் சொல்கின்றது என்று சாட்டும் குற்றத்திற்கு, நாம் "இயேசு தன் தாயை அவமதித்தாரா?" என்ற கட்டுரையை பதிலாக கொடுத்தோம். இந்த கட்டுரைக்கு, ஏகத்துவம் என்ற தளம் கொடுத்துள்ள பதில், அதற்கு உமரின் மறுமொழியை இங்கு காணலாம்:

Quote:
தாயை (மரியாளை) இயேசு அவமதித்தாரா?
பைபளின்படி - தனது தாய் மரியாளை மட்டுமல்ல மற்றவர்களின் பெற்றோர்களையும் அவமதித்த இயேசு :

(கிறிஸ்தவம் பற்றிய உன்மை நிலையை மக்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் இஸ்லாத்தைப் பற்றியும் நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் பற்றியும்; தரக்குறைவாக விமர்சனம் செய்யும் சில வக்கிர புத்தி கொண்ட கிறிஸ்தவர்களின் பொய்ப் பிரச்சாரதின் உன்மைநிலையை பொதுமக்களுக்கு விளக்கியாக வேண்டும் என்ற கட்டாயத்தாலும், நாம் பைபிள் பற்றியும், இயேசுவின் உன்மைநிலைப் பற்றியும், இன்னும் சொல்லப்போனால் உன்மையிலேயே இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் - இஸ்லாத்தையே தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான காரணகாரியங்களையும் மிக ஆறிவுப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும், வரலாற்றுத் தகவல்களுடனும் விளக்க இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ்.



அன்பு இஸ்லாமிய நண்பர்களே,

எங்களுக்கு வக்கிர புத்தி இல்லை. உங்கள் முகமதுவை நாங்கள் ஒன்றும் தரக்குறைவாக எங்கள் சொந்த புத்தத்திலிருந்து எடுத்து எழுதுவதில்லை, உங்கள் குர்‍ஆனும், உங்கள் ஹதீஸ்களும், உங்கள் இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்களும் எழுதிய புத்தகத்திலிருந்து தான் நாங்கள் மேற்கோள் காட்டுகின்றோம்.

முகமது எத்தனை போர்கள் புரிந்தார் என்று கிறிஸ்தவ புத்தகங்களா சொல்கின்றன, உங்கள் ஹதீஸ்கள் தானே, உங்கள் குர்‍ஆன் தானே.

1. முகமது தன் வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்துக்கொண்டார் என்று கிறிஸ்தவ புத்தகங்களா சொல்கின்றன? இல்லையே அல்லா தானே குர்‍ஆனில் சொல்கின்றார்.

2. முகமது எப்படி தன்னை எதிர்த்தவர்களை கொன்றார் என்று கிறிஸ்த புத்தகங்களா சொல்கின்றன? இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்களும், சீராக்களும், ஹதீஸ்களும் தானே சொல்கின்றன.

3. முகமது செய்த எல்லா குற்றங்களுக்கு புது அர்த்தத்தை கொடுத்து, மக்களை குழப்புகிறவர்கள் யார்? நாங்களா? இல்லையே நீங்கள் தானே, அவர் செய்தது எல்லாம் சரி என்றுச் சொல்கின்றீர்கள்.

உங்கள் புத்தகங்களில்(குர்‍ஆன், ஹதீஸ்கள், சீராக்கள்) உள்ள விவரங்களுக்கு உண்மை விளக்கத்தை நாங்கள் கொடுக்கிறோம், அவ்வளவு தான். நாங்கள் சொல்வது சரியான விளக்கம் இல்லை என்று நீங்கள் கருதினால்:

1)எந்த குர்‍ஆன் வசனத்திற்கு நாங்கள் தவறான பொருள் கூறுகிறோம் என்று அதை "சுட்டிக்காட்டி", அதற்கு நாங்கள் என்ன பதில் சொன்னோம் என்று அதன் கீழே எழுதி, விளக்குங்கள். உங்கள் பதிலை படிப்பவர்கள் புரிந்துக்கொள்வார்கள், யார் சொல்வது உண்மை என்று?

2)ஒரு கர்ப்பிணிப் பெண்ணை அவள் கணவன் "முகமதுவை அப்பெண் ஓயாமல் திட்டிக்கொண்டு இருக்கிறாள்" என்பதற்காக் கொலை செய்து வந்து முகமது கேட்கும் போது, அவர் எதிரே நின்றால், எல்லாருக்கும் சாட்சியாக, "இந்த கொலைக்கு பலி எடுக்கப்படாது" என்றுச் சொல்லி, அந்த மனிதனுக்கு முகமது தண்டனை அளிக்கவில்லை என்று ஹதீஸ் சொல்வதாக நீங்களே ஒப்புக்கொள்கிறீர்கள் அல்லவா?

அப்படியானால், இந்த நிகழ்ச்சி மூலமாக மக்களுக்கு

"முகமது ஒரு அமைதிப்புறா",

"இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்",

"இஸ்லாம் என்றால் அமைதி என்றுப் பொருள்"


என்று விளக்கப்போகிறீர்கள்?

இந்த எல்லா விவரங்களும் எங்கள் புத்தகங்களில் இல்லை, உங்கள் புத்தகங்களில் தான் இன்றும் உள்ளது, இனியும் உலகம் இருக்கும் வரை இருக்கும்.



Quote:
அதை தொடராக வரிசைபடுத்தி எழுத இருந்த நேரத்தில் சகோதரார் உன்மையடியான் என்பவர் 'இஸ்லாம் கல்விக்கு பதில் : இயேசு தாயை (மரியாளை) அவமதித்தாரா?' என்ற தலைப்பில் இஸ்லாம் கல்வியில் வெளிவந்த சகோதரர் எம்;. எம். அக்பர் அவர்கள் எழுதிய கட்டுரையான 'திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் ஓர் ஒப்பீடு (பகுதி - 2)' க்கு மறுப்பு எழுதியிருந்தார். இதற்கு மறுப்பளிக்கும் விதமாகவும், 'பைபளின் படி இயேசு தனது தாயை (மரியாளை) மட்டுமல்ல - அடுத்தவர்களின் பெற்றோர்களையும் மதிக்காதவர்'
என்பதை விளக்கும் முகமாகவும் இந்தக்கட்டுரையை வெளியிடுகிறோம். )



ஈஸா குர்‍ஆன் எழுதிய கட்டுரையை எப்படி "உண்மையடியான்" எழுதினார் என்று சொல்கிறீர்கள். கட்டுரைக்கு கீழே "http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/islamkalvi/Jesusandmary1.htm" என்று எழுதி என் தளத்தின் தொடுப்பு கொடுத்திருக்கிறாரே அது தெரியவில்லையா உங்களுக்கு? நான் எழுதிய கட்டுரைக்கு, பதிலுக்கு என்னிடம் பதில் கேட்டால் கொடுக்கிறேன், அதை விடுத்து, ஏன் வீணாக அவர் பெயரை இழுக்கிறீர்கள்.


Quote:
இறைவனுடைய வழிகாட்டுதல்களை மக்களுக்கு எடுத்துச்சொல்லி அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகள் பலரை ஏற்றுக்கொள்ளாதது மட்டுமல்லாமல்லாமல், அவர்களை துன்புறுத்தியும், அவர்களில் பலரை கொலை செய்ததும், அதுமட்டுமல்லாமல் தாங்கள் செய்த அந்த அநியாய - அநாகரீகச் செயல்களை பிற்கால மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக அந்த தீர்க்கதரிசிகள் மீதே கலங்கம் கற்பிக்கும் வகையில் அனைத்து தீர்க்கதரிசிகளையும் ஏதாவது ஒரு வகையில் அசிங்கமாகவும் ஆபாசமாகவும் இன்னும் சொல்லப்போனால் ஒரு சாமானியன் கூட செய்யத்துணியாத செயல்களை எல்லாம் அந்த தீர்க்கதரிசிகள் செய்தார்கள் என்று வரலாற்றைத் திரித்து எழுதியவர்கள் தான் யூதர்கள்.


நீங்கள் யாருக்காக இப்படி மற்ற நபிகளுக்காக பரிந்து பேசுகிறீர்கள் என்று எல்லாருக்கும் தெரியும். உங்கள் முகமதுவை காப்பாற்ற இப்படிப்பட்ட பரிந்து பேசுதலை செய்கின்றீர்கள். அல்லாவே முகமதுவிற்காக பரிந்து பேசும் போது, நீங்கள் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது. முகமது என்ன ஆசைப்பட்டாலும் உடனே அதை தீர்த்து வைப்பதில் அல்லா மிகவும் சந்தோஷப்பட்டாரே.

வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்துக்கொள், அதற்கு அனுமதி நான் தருகிறேன், வயது ஒரு கணக்கா, கவலைப்படவேண்டாம், சிறுமிக்கு 6 வயது இருக்கும் போது திருமணம் செய்துக்கொள், 9 வயது ஆனபிறகு (ருதுவு எய்திய பிறகு) உன்னுடன் சேர்த்துக்கொள். எல்லாரும் 4 திருமணம் தான் செய்யவேண்டும், உனக்கு மட்டும் கணக்கில்லை, தன்னை உனக்கு யார் யார் தரவிரும்புவார்களோ அவர்கள் அனைவரையும் நீ திருமணம் செய்துக்கொள்ளலாம். இப்படி அல்லவா அல்லா முகமதுவின் ஆசையை தீர்த்துவைத்தார்.



Quote:
அந்த யூதர்களால் சிதைக்கப்பட்டு தங்களுக்கு சாதகமாக கூட்டியும், குறைத்தும், திரித்தும் எழுதப்பட்ட புத்தகங்களின் தொகுப்புகளைத்தான் 'பைபிள்' என்றப் பெயரில், இறைவனிடம் இருந்து வந்த புனித வேதமாக இன்றும் போற்றிவருகின்றனர் யூதர்களும், கறிஸ்தவர்களும்.

இந்த வரலாற்றுத் திரிபுகளின் தொடர்ச்சி தான் புதிய ஏற்பாட்டில் வரும் இயேசுவின் வரலாறும் அதன் பின் நடந்ததாக சொல்லப்படும் சம்பவங்களும்.



ஆமாம், யூதர்கள் திருத்தும் போது, ஒன்றுக்கும் கையாளாகதவராக அந்த வேதத்தை கொடுத்தவர் சும்மா பார்த்துக்கொண்டு இருந்தார்.

அவருக்கு மக்கள் திருத்தும் போது, அதை தடுக்க சக்தி இல்லாமல் போய்விட்டது.

என்ன செய்வது. உலகத்திலே, எந்த சக்தியும் வலிமையும் இல்லாத சாதாரண மனிதனே, அவன் வீட்டை ஒருவன் வீணாக இடித்துக்கொண்டு இருந்தால், சில கேள்விகளாவது கேட்பான், கதறுவான், தன்னால் முடிந்தால் அதை தடுக்க முயற்சி எடுப்பான், ஆனால், அந்த வேதத்தை கொடுத்த சர்வ வல்லவர் வலிமை மிக்கவர் அல்லா இருக்காரே, ஒன்றுமே செய்யாமல், அப்படியே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார், அதனால், தான் யூதர்கள் அதை மாற்றினார்கள்.

உன் வேதம் என்றால், அதை பாதுகாப்பது உன் பொறுப்பா இல்லையா?
ஒரு வேளை , மாற்றினால் மாற்றட்டும் என்று சும்மா இருந்து விட்டாரா அல்லா?

எதை ஏற்றுக்கொள்கிறீர்கள் சகோதரர்களே, நான் தான் அந்த வேதத்தை இறக்கினேன் என்று 1000 முறை சொல்லி மார்தட்டுவது அல்ல அழகு, அதை பாதுகாக்கவேண்டும், அப்படி பாதுகாக்கவில்லையானால், யாருடைய தப்பு, அதை கொடுத்தவனுடையது தானே!


Quote:
இயேசுவைக் கொலைசெய்ய முயற்சித்ததற்கான காரணங்களை பிற்கால மக்கள், யூதர்களை குற்றம் பிடித்து விடக்கூடாது என்பதற்காக அவரைப்பற்றி தரக்குரைவாகவும், இன்னும் சொல்லப்போனால் அவர் தன்னை கடவுளின் குமாரனாக காட்ட முயற்சித்தார் என்றும் அவர் யூதர்களை கடுமையாக திட்டித்தீர்த்தார் என்றும் இன்னும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வரலாற்றைத்திரித்ததோடு, அந்த இயேசுவை உயர்வாக மதிக்கக்கூடிய மக்களை, 'இது தான் உன்மையான இயேசுவின வரலாறு' என்று அவர்களை நம்பவைத்து அதையே பின்பற்றவும் வைத்த சூழ்சிக்காரர்கள் தான் இந்த யூதர்கள். (இது சம்பந்தமாக விரைவில் பல ஆதாராங்களுடன் கூடிய ஆக்கங்கள் நமது தளத்தில் இடம் பெறும் இன்ஷா அல்லாஹ்)




பாவம் நீங்கள், உங்களுக்கு பைபிள் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. யூதர்கள் "புதிய ஏற்பாட்டை" எழுதினார்கள் அப்படித்தானே? என்ன அருமையாக எழுதுகிறீர்கள்.

இயேசு தேவன் என்று "யூதர்கள் எழுதுவார்களா?"
இயேசு தனக்கு தேவன் சமம் என்று சொன்னார் என்று யூதர்கள் எழுதுவார்களா?
இயேசு மரித்தவர்களை எழுப்பினார் என்று யூதர்கள் எழுதுவார்களா?
இயேசு அற்புதங்கள் செய்தார் என்று யூதர்கள் எழுதுவார்களா?
இயேசு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் என்று யூத‌ர்க‌ள் எழுதுவார்க‌ளா?
இயேசு மறுபடியும் வந்து உலகத்தை நியாயம் தீர்ப்பார் என்று யூதர்கள் எழுதுவார்களா?

என்ன‌ ந‌ண்ப‌ர்க‌ளே! இப்ப‌டி இருக்கிறீர்க‌ள்.

நீங்கள் சொல்வது எப்படி உள்ளது என்றால், "பின் லாடன் தன்னை பிடிக்க தானே அமெரிக்க உளவுத்துறையில் சேர்ந்து திட்டம் தீட்டி, அதை மிகவும் வெற்றிகரமாக முடித்து கொடுத்தார்" என்று சொல்வது போல் உள்ளது
.


Quote:
இவர்களின் இந்த அபாண்டமான குற்றச்சாட்டுகளை மறுத்தும் - இவர்கள் தங்கள் வேதங்களில் செய்த தில்லுமுள்ளுகளையும், வரலாற்றுத் திரிபுகளையும் மக்களுக்கு வெளிக்காட்டி, சத்தியத்தை எடுத்துச்சொல்ல வந்தது தான் திருக்குர்ஆன் என்னும் இறுதி இறைவேதம்.



இவர்கள் தில்லுமுல்லு செய்யும் போது, அதை கொடுத்த இறைவன் எங்கு சென்று இருந்தான்?

இவர்கள் வரலாற்று திரிபுகள் செய்யும் போது, அதை கொடுத்த இறைவன் என்ன செய்துக்கொண்டு இருந்தான்?
இது வரையில், இயேசுவின் வரலாறு என்று தொடர் கட்டுரைகள் எழுதி, அதற்கு நான் பதில் கொடுத்தால், இதுவரை ஒரு இஸ்லாமிய தளங்களிலும் அதற்கு பதில் இல்லை. வரலாறு பற்றி உங்களுக்கு பேச என்ன இருக்கிறது சொல்லுங்கள்.

1.இயேசுவிற்கு நேர்ந்தது என்ன? என்ற கட்டுரை எழுதியவருக்கு என்ன நேர்ந்தது? என்று கேள்விகள் கேட்கும் அளவிற்கு, அவர் "இயேசு பக்கம் தலை காட்டுவதே இல்லை".

2.கி.பி. 7ம் நூற்றாண்டில், முகமது உறுவாக்கிய ஜகாத் என்பதை, முதல் நூற்றாண்டில் இயேசு தருவதாக சொன்னார் என்று சொல்லும் குர்‍ஆன், வரலாற்று தவறில்லையா?

3.மரியாளை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று "வில் எரிந்து" பார்த்தார்கள் என்று குர்‍ஆன் சொல்கின்றதே, இது வரலாற்று தவறில்லையா? யூதர்கள் வில் எரிந்து முடிவு செய்யமாட்டார்கள் என்பதையும் அல்லாவிற்கு தெரியாமல் போய் இருக்கிறது
.


Quote:
இதையே அல்லாஹ் தன் திருமறையில் :

உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன். (அல்குர்ஆன் 25 : 1)

இது மனிதர்களுக்கு (சத்தியத்தின்) தெளிவான விளக்கமாகவும், பயபக்தியுடையோருக்கு நேர் வழிகாட்டியாகவும், நற்போதனையாகவும் இருக்கின்றது. (அல்குர்ஆன் - 3:138)


இஸ்லாமிய‌ உலகம் நேர்வழியில் சென்றுக்கொண்டு இருக்கிறதை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.
 
Quote:
தன் தாயை (மரியாளை) மதிக்காத இயேசு :

இயேசு என்னும் ஈஸா (அலை) அவர்களின் 'நற்குணங்களில் ஒன்றை' திருக்குர்ஆன் பின்வருமாறு பறைசாற்றுகிறது :

'என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்). நற்பேறு கெட்டபெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை. (குர்ஆன் - 19:32)

குர்ஆன் இந்த ஒரே வசனத்தில் இயேசுவின் இரு நற்குணங்களை பறைசாட்டுகிறது.

1. தாயாருக்கு நன்றி செய்வார்.
2. கெட்ட பெருமைக்காரனாக இருக்கமாட்டார்

இவ்வாறு தனது தாயை மற்றவர்களைக் காட்டிலும் அதிகம் மதிக்கக்கூடியவராகத்தான் இயேசு இருந்துள்ளார் என்பதை திருக்குர்ஆன் உலகுக்கு எடுத்துரைக்கின்றது.


இயேசு கெட்டவர் என்று குர்‍ஆன் எப்படி சொல்லும், எங்கு பார்த்தாலும், அவர் பாவம் செய்யவில்லை, சாத்தான் இயேசுவை தொடவில்லை, என்று முகமதுவை விட அதிகமாகத்தானே இஸ்லாம் சொல்கின்றது. இப்போது முகம்துவைப் பற்றித் தானே பிரச்சனை.

பிறந்த எல்லாரையும் சாத்தான் தொட்டானாம், முகமதுவையும் சேர்த்துத் தான் , ஆனால், இயேசுவையும், மரியாளையும் தொடவில்லையாம்.

இயேசு முகமதுவை விட ஆயிரமாயிர மடங்கு நல்லவர் என்பதை உலகம் அறியுமே. ஒன்று செய்வோம், ஒரு சராசரி மனிதனில் கையில் குர்‍ஆனையும், முகமதுவின் சரித்திரத்தையும் கொடுப்போம். அதே மனிதனில் கையில் பைபிள் கொடுப்போம். அவன் நடுநிலையோடு படிக்கட்டும், பிறகு அவர் யார் மிகவும் நல்லவர் என்று சொல்வான் என்பதை கவனிப்போம். சரியா?


 
Quote:
ஆனால் நான்கு நபர்களால் இயேசுவின் வரலாற்றை எழுதியதாக சொல்லப்படும் பைபிலோ அவர் தாயை மதிக்காதவர் மட்டுமல்லாமல் திருக்குர்ஆன் எந்த இரண்டு குணங்கள் அவரிடம் இருந்ததாக சொன்னதோ அந்த இரு குணங்களும் அறவே இல்லாதவர் என்றே நிரூபிக்க முற்படுகின்றது. இதை சகோதரார் எம். எம். அக்பர் அவர்கள் சுருக்கமாக எழுதியதற்கு மறுப்பாக, இயேசுவை மதிக்கிறோம்(?) என்று தன்னைத் தானே சொல்லிக்கொள்கிற 'உன்மையடியான்' என்பவர் யூதர்களுக்கு ஆதராவாக எகிரி குதிக்கின்றார்.


அருமை நண்பர்களே யார் யூதர்களுக்காக பரிந்துப்பேசுவது? சுருக்கமாக எம். எம். அக்பர் அவர்கள் எழுதினால், அதற்கு நாங்கள் பதில் அளிக்கக்கூடாதா? தப்பு செய்தால் இது இப்படி அல்ல, இதற்கு பொருள் வேறு விதமாக உள்ளது என்று ஆதாரத்தோடு எழுதுகிறோம். நீங்களும் எழுதுங்கள், ஆதாரத்தோடு, யார் வேண்டாமென்று சொல்கின்றார்கள்.


ஆமாம், இயேசு பற்றி சுருக்கமாக இரண்டே வார்த்தைகளை எம். எம். அக்பர் அவர்கள் எழுதினார்கள், "இயேசு தாயைமதிக்காதவராக" என்று, அதற்கு நாங்கள் விவரமாக பதில் கொடுத்தோம். நாங்கள் இவ்வளவு விவரமாக பக்கம் பக்கமாக ஆதாரங்களை தொகுத்து கேள்விகள் கேட்டால், நீங்கள் சுருக்கமாக இரண்டு வரிகளில் "கிறிஸ்தவர்கள் அவதூறு தூற்றுகிறார்கள்" என்றுச் சொல்லி, நழுவி விடுகிறீர்கள்.


 
Quote:
இயேசு நாதர் தன் தாயை மதித்தார் என்று நிரூபிப்பதற்காக படாது பாடு படுகிறார்.


நீங்கள் முகமதுவை காப்பாற்ற படும் பாடுகளைவிட இது ஒன்றும் அதிகம் இல்லை நண்பர்களே.

குர்‍ஆனையும், முகமதுவின் சரிதையையும் (நீங்கள் சென்சார் கட் செய்த‌ சரிதை அல்ல, உண்மை சரிதையை அப்படியே) ஒரு மனிதனிடம் கொடுத்துப்பாருங்கள், அவைகளை அவன் படித்துவிட்டு கேட்கும் கேள்விகளுக்கு, நீங்கள் பதில் சொல்ல எவ்வளவு பாடுபடுவீர்கள் என்று எல்லாருக்கும் தெரியும்.


 
Quote:
இயேசு நாதர் அவர் தாயை அவமதித்த சம்பவம் அந்த யோவான் 2:1-8ம் வசனம் மட்டும் தான் வந்துள்ளது என்றால் கூட நாம் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். ஆனால் இயேசுவையும் அவர் தாயையும் பற்றி பைபிளில் வரும் பல வசனங்களில் அவர் ஒரு இடத்திலும் அவரை மதித்ததாக தெரியவில்லை. இயேசுநாதர், தன் தாயை மதிக்காதது மட்டுமல்லாமல் அவரை பார்க்கும் நேரமெல்லாம் உதாசீனப்படுத்தியும் - அந்தப்பரிசுத்தமான தன் தாயை 'ஸ்திரியே' அதாவது 'பெண்ணே' என்று ஒரு மாற்றார் வீட்டு பெண்மனியை அழைப்பது போல் தான்; அழைத்தார் என்று கூறுகிறது. அவர் ஒரு இடத்தில் கூட மரியாளை 'தன் தாய்' என்று கூறியதாக பைபிளில் கிடையாது.

பைபிளின் மத்தேயு 12 : 50 - 56 வரை வரும் வசனங்களில் :

இப்படி அவர் ஜனங்களோடே பேசுகையில், அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள். அப்பொழுது, ஒருவன் அவரை நோக்கி: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான். தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார். - மத்தேயு 12 : 56 - 50

மேற்குறிப்பிட்டுள்ள வசனங்களில் இயேசுவை அவரைப் பெற்றெடுத்த தாய் மரியால் பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள்வைக்கின்றார். அதற்கு அவர் அளித்த பதிலுக்கும், தாயை மதித்தலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கின்றதா? பொதுவாகவே ஒருவனுடைய தாய் எப்படிப்பட்ட கெட்டகுணம் உடையவராக இருக்கட்டும். எவ்வளவு மோசமானவராக கூட இருக்கட்டும். அதற்காக தன்னை பல கஷ்டங்களை அனுபவித்து பெற்றெடுத்த தாயுக்கு செய்யும் நன்றி உபகாரம் இப்படித்தான் இருக்குமா? இது தான் தாயை மதிக்கும் லட்சனமா? வெளியே நின்றுக்கொண்டு பார்க்க வேண்டும் என்று அனுமதிகேட்ட தாய்க்கு, இயேசு எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் இப்படி பதில் அளிப்பது தான் மரியாதையா?

அதுவும் மரியாள் என்ற அந்த பரிசுத்த பெண்மணி, ஏதோ உங்கள் தாய் என் தாய் போன்ற சாதாரன பெண்மணியா? அவருடைய தியாகம் என்ன சாதாரண தியாகமா? புரோகிதமும், மூடநம்பிக்கைகளும் புரையோடிப்போயிருந்த அன்றைய காலத்தில் திருமணமே முடிக்காத ஒரு கண்ணிப்பெண், இறைவனின் கட்டளைப்படி ஒரு குழந்தையை பெற்றெடுத்து அதை சமூகம் அங்கீகரிக்க என்ன பாடு பட்டிருப்பார்கள்? எவ்வளவு துன்பங்களை அனுபவித்திருப்பார்கள்? என்று யோசித்து பாருங்கள். இந்த மரியாள் என்ற மரியம் (அலை) அவர்களின் தியாகத்தைப் பெருமைப்படுத்தும் விதமாக நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: 'உலகிலேயே மிகச் சிறந்த இரண்டு பெண்மணிகளில் ஒருவர் மரியம் (அலை) என்று புகழ்ந்துரைத்தார்கள் (நூல் : புஹாரி) அப்படிப்பட்ட அற்புதமான தாயை -தியாகத்தின் மறுஉருவத்தை இயேசு இப்படித்தான மதித்திருப்பாரோ?



இதற்கு தனியாக ஒரு பதிலை நான் கூடிய சீக்கிரத்தில் தருகிறேன்.

இரண்டு வார்த்தைகளில் எங்களுக்கு கேள்விகள் கேட்டாலும், நாங்கள் விவரமாக பதில் சொல்லதயாராக இருக்கிறோம். இத்தனை வரிகள் கேள்விகள் கேட்டால் பதில் தராமலா இருக்கப்போகிறோம், எனவே, இதற்காக தனி கட்டுரையில் பதில் தருகிறேன்.



 
Quote:
அடுத்து பைபிளின் யோவான் 2 : 1-8 ல்:

மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது. இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். அதற்கு இயேசு 'ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை' என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள் என்றாள். யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார். அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டு போங்கள் என்றார். அவர்கள் கொண்டுபோனார்கள்.

இந்த வசனத்திலும் இயேசுவிடம் அவரது தாய் ஒரு வேண்டுகோள் வைக்கின்றார். அதற்கு அவர் பதிலாக 'செய்கிறேன்' என்று சொல்லியிருந்தால் மரியாதை எணலாம். ஆனால் அதற்கு அவர் கொடுக்கும் பதிலென்ன? 'ஸ்த்ரியே' அதாவது பெண்னே - 'உனக்கும் எனக்கும் என்ன?' என்கிறார் என்றால் இதில் எங்கே மரியாதை இருக்கின்றது? சகோதரர் உன்மையடியான் 'ஸ்தியே' என்ற வார்த்தைக்கு பக்கம் பக்கமாக விளக்க அளித்தவர் அதற்கு அடுத்து வரக்கூடிய வாசகத்தில் தியாகத்தின் மறுஉருவமான பரிசுத்த மரியளை அதட்டும் விதமாக - முகத்தில் அறைந்தார்போல் 'உனக்கும் எனக்கும் என்ன' என்று பதில் அளித்துள்ளாரே, அது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையோ? அந்த வார்த்தையை மட்டும் உங்கள் எழுத்துக்களில் அப்படியே மறைத்துக்காட்டுவதன் நோக்கம் என்ன?


மரியாளை நீங்கள் அதிகம் மதிப்பதாக இருந்தால், அவர்கள் "இயேசுவை" ஆராதித்தது போல, ஆராதியுங்கள், அவர்கள் இயேசுவின் ஊழியம் செய்தது போல, நீங்களும் செய்யுங்கள். அது தான் உண்மை மரியாதை.

உங்கள் முகமதுவிற்கு, இயேசுவின் தாய் மரியாளை அல்லா சொர்க்கத்தில் மனைவியாக கொடுப்பார் என்று சில இஸ்லாமிய அறிஞர்கள் சொல்கின்றார்களே, அதை விட ஒரு கேவளமான மதிப்பு, மரியாளுக்கு தேவையா?


முகமதுவிற்கு 10க்கும் அதிகமான மனைவிகள் இந்த உலகத்தில் போதவில்லையா? சொர்க்கத்திலும் மனைவிகள் தேவையா? அதுவும் இயேசுவின் தாய் (இஸ்லாம் படி ஒரு நபியின் தாய்) தேவையா இவருக்கு? இதை அல்லா அவருக்கு கொடுப்பாரா? அல்லாவிற்கு சொர்க்கத்தில் என்ன வேலை? வருபவர்களுக்கு பெண்களை தயார்படுத்தி கொடுப்பது தான் இவருக்கு வேலையா?



 
Answering-Islam.org wrote:


The late Iranian Islamic scholar, Ali Dashti, wrote:

... According to the Cambridge Tafsir, the word thayyebat (widows or divorcees) refers to Pharaoh's wife Asiya, and the word virgins (abkar) refers to Jesus' mother Mary, both of whom are waiting to be married to the Prophet Mohammad in heaven. (Dashti, 23 Years: A Study of the Prophetic Career of Mohammad [Mazda Publishers, Costa Mesa, CA 1994], p. 138)
And:


... It has already been mentioned that one Qor'an-commentary takes "widowed" to mean Pharaoh's wife Asiya and "virgin" to man Jesus' mother Mary, and states that both will be married to the Prophet in heaven; since the Qor'an says nothing to this effect, the only significance of the statement is that it illustrates the mentality of the commentator. (Ibid., p. 144)

There is a note indicating what the Cambridge Tafsir is:

43 The Library of the University of Cambridge possesses the unique manuscript of the third part of a Persian Tafsir (Qor'an commentary and translation) written by an unknown author probably ca. 1000 A.D. and copied in 628/1231. It covers suras 19-114 and is the only surviving part. It is thought to be the oldest work of its kind in the Persian language. The text was printed by the Bonyad-e Farhang-e Iran, Tehran , 1349/1970 (2 vols, ed. and introd. by Jalal Matini)


This means that Muhammad believed that he would be married to our blessed Lord's mother and have sexual intercourse with her in Paradise! Such an idea not only shocks Christians, but actually exposes the sick perversions of this religion. We are thankful to God that Islam is not true and Muhammad is not God's prophet. Mary will never be married to Muhammad, nor will she be married to anyone else in Paradise, since the Holy Bible, God's true and pure word, teaches:


"Jesus replied, 'The people of this age marry and are given in marriage. But those who are considered worthy of taking part in that age and in the resurrection from the dead will neither marry nor be given in marriage, and they can no longer die; for they are like the angels. They are God's children, since they are children of the resurrection.'" Luke 20:34-36
"For the kingdom of God is not a matter of eating and drinking, but of righteousness, peace and joy in the Holy Spirit." Romans 14:17

In the service of the true God and eternal life, our risen Lord and Savior Jesus Christ, forever and ever. Amen. Come Lord Jesus. We love you Lord of eternal glory.

Source: http://answering-islam.org.uk/Shamoun/mary.htm (Mary the Mother of Jesus: A Houri in Paradise?)


சொர்க்கத்தில் மரியாளை முகமதுவிற்கு கொடுப்பதற்கு பதிலாக மரியாளை நரகத்தில் அனுப்பிவிடுவது மரியாளுக்கு நலமாக இருக்கும். இது தான் நீங்கள் பரிசுத்த தாய்க்கு கொடுக்கும் மதிப்பா?

நான் மேலே காட்டிய விவரங்கள் தவறாக இருக்குமானால்? முதலில், இப்படி பொருள் கூறியுள்ள,

1)ஈரான் இஸ்லாமிய அறிஞர் அலி தஸ்தியின் வார்த்தைகள் பொய் என்று நிருபியுங்கள். (The late Iranian Islamic scholar, Ali Dashti,)

2)பெர்சியன் தஃப்சீர் (காம்பிரிட்ஜில் உள்ள தஃப்சீர் - Cambridge Tafsir) தவறு என்று ஆதாரத்தோடு நிருபியுங்கள்.


இப்படி பொருள் கூறுகின்ற இவர்கள் இஸ்லாமிய ஊழியர்களே கிடையாது, இஸ்லாமுக்கு கெட்ட பெயர் உண்டாக்கும்படி பொருள் கூறுகிறார்கள் என்று ஆதாரத்தோடு நிருபியுங்கள்.

அதை விடுத்துவிட்டு, அவதூறு அவதூறு என்று ஓயாமல் சொல்லிக்கொண்டு இருக்காதீர்கள், முதலாவது உங்கள் நிலையை நிருபியுங்கள். இப்படிப்பட்ட இஸ்லாமிய அற்ஞர்கள் எழுதியது தவறு என்று நிருபியுங்கள்.

"எனக்கும் உனக்கும் என்ன?" என்பதின் பொருள், "இந்த கலியாண வீட்டில் ஒரு குறை உண்டானால், அது இந்த கல்யாணம் நடத்தும் நபர்களின் பாடு, எனக்கும் சரி, உங்களுக்கும் சரி சம்மந்தமில்லை, இதற்காக தேவனுடைய வல்லமையை காட்டமுடியாது, எப்போது அற்புதம் செய்யவேண்டும் என்று எனக்கு தெரியும், ....." என்று இயேசு சொன்னார். இதை எவ்வளவு விளக்கியும் என்ன லாபம், அதை விட்டுவிட்டு, கிளிப்பிள்ளைப் போல சொன்னதேயே சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்?

 
Quote:
//அதற்கு பதிலாக இயேசு ஸ்திரியே என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்கிறார்கள். இதை பைபிள் வசனங்கள் கொண்டு படியுங்கள், இதில் இயேசு மரியாளை எங்கு அவமதித்துள்ளார் என்பதை நீங்களே கண்டுபிடியுங்கள்.//

//பெண்ணே என் வேளை இன்னும்வரவில்லை, நான் எப்போது அற்புதங்கள் செய்யவேண்டும், எப்போது செய்யக்கூடாது என்று எனக்கு தெரியும். இறைவன் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் இப்படி மனிதர்களின் இடையூறு தேவையில்லை என்ற தோரணையில் இயேசு பதில் அளிக்கிறார். இதில் எந்த தவறும் இல்லை. இதே போல பல சந்தர்பங்களில், இயேசு என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்லியுள்ளார் (யோவான் 7:6, 8, 30, 8:20) //



உன்மையடியான் தனது கட்டுரையில் இடையிலே வரவேண்டிய அந்த 'உனக்கும் எனக்கும் என்ன?' என்று இயேசு திமிர்தனமாக பேசியதாக சொல்லப்படும் அந்த வாத்தைகளை அழகாக நழுவிட்டுள்ளதற்கான காரணம் என்ன? இவருடைய மனசாட்சிக்கே உறுத்தியதால் தானே இந்த தந்திர வேலை இவர் செய்துள்ளார்?


அருமையான இஸ்லாமிய அண்ணன்மார்களே, மறைத்தது நானா? அல்லது நீங்களா? நான் தான் முழு வசனத்தையும் குறிப்பிட்டு இருந்தேனே அதை நீங்கள் இந்த கட்டுரையில் ஏன் குறிப்பிட மறந்துவிட்டீர்கள்?
நான் என்ன எழுதினேன் என்று மறுபடியும் கீழே தருகிறேன், நான் வசனத்தில் கைவைத்து இருந்தால், நீங்கள் குற்றம் பிடிப்பது சரியானதாக இருக்கும். உங்களைப்போல வசனத்தில் கைவைக்கும் பழக்கம் எங்களுக்கு இல்லை அண்ணன்களே. நான் எழுதியதை அப்படியே தருகிறேன், பாருங்கள்.


 
Quote:
அதற்கு பதிலாக இயேசு ஸ்திரியே என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்கிறார்கள். இதை பைபிள் வசனங்கள் கொண்டு படியுங்கள், இதில் இயேசு மரியாளை எங்கு அவமதித்துள்ளார் என்பதை நீங்களே கண்டுபிடியுங்கள்.

Quote:
யோவான் 2:1-5 மூன்றாம்நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். திராட்சரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை எனறாள். அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படிசெய்யுங்கள் என்றாள்.

பெண்ணே என் வேளை இன்னும்வரவில்லை, நான் எப்போது அற்புதங்கள் செய்யவேண்டும், எப்போது செய்யக்கூடாது என்று எனக்கு தெரியும். இறைவன் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் இப்படி மனிதர்களின் இடையூறு தேவையில்லை என்ற தோரணையில் இயேசு பதில் அளிக்கிறார். இதில் எந்த தவறும் இல்லை. இதே போல பல சந்தர்பங்களில், இயேசு என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்லியுள்ளார் (யோவான் 7:6, 8, 30, 8:20).


மேலே நான் எழுதியதை படித்துப்பாருங்கள், "எனக்கு உனக்கும் என்ன?" என்று இருக்கும் வார்த்தையை இன்னும் கடினமாக்கி நான் விளக்கமளித்துள்ளேன், அது அது உங்களுக்கு தெரியவில்லையா?

நான் எழுதிய வரிகளை படித்து சில கிறிஸ்தவர்களே என் மீது கோபம் கொண்டாலும் கொண்டு இருக்கலாம், ஆனால், அதற்காக நான் கவலைப்படப்போவதில்லை, உண்மையைச் சொன்னேன்.

உங்களைப் போல, பொய்யான சாட்சிகளை பதிப்பது, அடிக்கடி வார்த்தைகளை மாற்றிக்கொள்வது, இல்லாததை இருப்பதாக சொல்வது, இதிலெல்லாம் சில இஸ்லாமியர்கள் கைதேர்ந்தவர்கள்.



 
Quote:
இப்படி 'உனக்கும் எனக்கும் என்ன' என்று கூறி தன் தாயை ஊர் மக்கள் கூடிஇருக்கின்ற திருமன சபையில், அங்கே வந்துள்ள அத்தனைப் பேருக்கும் முன்பாக - இப்படி எதிர்த்து பேசி மரியாளை அவமரியாதை செய்தவர்தான் இயேசு என்கின்றனர் பைபிள் எழுத்தாளர்கள். இது தான் தாயை மதித்தவர் என்பதற்கான அடையாளமா? இப்படித்தான் ஒவ்வொருவரும் தனது பெற்றோரை எல்லோருக்கும் முன்பாகவும் அசிங்கப்படுத்தி மதிக்க வேண்டும் (?) என்று இயேசு கற்றுத்தருகிறாரா?



அப்படியா! ஊர் மக்கள் முன்பு இயேசு இப்படி சொன்னாரா? அப்படியானால், இந்த திராட்சை ரசம் அற்புதம் வேலைக்காரர்களுக்கும், இயேசுவின் சீடர்களுக்கும், மரியாளுக்கும் மட்டும் தான் தெரியும் என்று பைபிள் சொல்கின்றதே அதை நீங்கள் படிக்கவில்லையோ? அய்யோ பாவம் நீங்கள். கீழே உள்ள வசனத்தை படித்துப்பாருங்கள், அந்த கலியாண விருந்தை நிர்வாகிக்கும் நிர்வாகிக்கு கூட தெரியவில்லையாம், அதாவது யாருக்கும் தெரியாமல், அமைதியாக அற்புதம் நடந்தேரியது. சமையல் அறையில் அல்லது தனியான அறையில் நடந்தது என்பது தெளிவாக புரிகிறது.

Joh 2:9 அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து:
Joh 2:10 எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசிகுறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான்
.



 
Quote:
அது மட்டுமல்ல உண்மைஅடியான் 'ஸ்திரி' என்பது ஒன்றும் மரியாதைக்குறைவான வார்த்தை இல்லை என்று கூற முயற்ச்சிக்கின்றார். ஆனால் இதே இயேசு அதே 'ஸ்த்ரி' என்ற வார்த்தையை பலருக்கும் பயன்படுத்தியது போல் 'விபச்சாரி' ஒருவருக்கும் பயன்படுத்துகிறார். (பார்க்க யோவான் - 8 : 10) அந்த விபச்சாரிக்கு என்ன வார்த்தையை பயன் படுத்தினாரே அதே 'ஸ்த்ரி' என்ற வார்த்தையைத் தான் தனது பரிசுத்த தாயுக்கும் பயன் படுத்தினார் என்பதையும் இதன் மூலம் 'ஸ்த்ரி' என்றுக்கூறி மற்ற பெண்களையள்ள தன் பரிசுத்த தாயை அவமதித்ததாகத்தான் பைபிள் கூறுகின்றது.

இப்படி தன் தாயை எந்தவிதத்திலும் மதிக்காதவராகவே பைபிளில் இயேசு காட்டப்படுகிறார். யூதஎழுத்தாளர்கள் இப்படித்தான் அவரைக் காட்ட முயற்ச்சிக்கின்றனர். தன் தாயை மட்டுமல்ல ஒட்டு மொத்த தாய் வர்க்கத்தையே மதிக்கதவராகவும், கோபக்காரராகவும், பெருமைக்காரராகவும் தான் யூதர்களால் எழுதப்பட்டு பைபிளில் இயேசுவைப் பற்றி காட்டப்படுகிறது.



நீங்கள் யூதர்கள் மீது எவ்வளவு அதிகமாக கோபமாக இருக்கிறீர்கள் என்பது தெளிவாக புரிகிறது. அதிகமாக கல்ஃப் செய்திகளை(Gulf News, Middle East News, Israel Palastine news), இஸ்ரவேல், பாலஸ்தீன செய்திகளை கேட்பீர்கள் போல் இருக்கிறது, இத்தனை நாட்களாக கிறிஸ்தவர்கள் மாற்றி எழுதினார்கள் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள் இஸ்லாமியர்கள், இப்போது யுதர்கள் வரை வந்துள்ளது, இன்னும் சில நாட்கள் கடந்து "இந்துக்கள்" தான் பைபிளை திருத்தினார்கள் என்று சொன்னாலும் யாரும் ஆச்சரியப்படவேண்டியதில்லை. இது எல்லாம் இஸ்லாமில் சகஜமப்பா?


 
Quote:
அடுத்தவன் பெற்றோர்களையும் மதிக்காதவரா இயேசு?

பைபிளில் இயேசுவிடம் பரிசேயர்கள் ஒரு அடையாளத்தை கேட்கின்றார்கள். அதை மத்தேயு பின்வருமாறு சொல்கிறார் :

'இந்தப் பொல்லாத 'விபசார சந்ததியார்' அடையாளம் தேடுகிறார்கள் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களை விட்டுப் புறப்பட்டுப்போனார். மத்தேயு 16 : 3-4 .....



இந்த தலைப்பில் அவர்கள் எழுதிய வரிகளை நான் இங்கு கொடுக்கவில்லை, இயேசு "விபச்சார சந்ததியார்.." என்று குறிப்பிட்டதை நம் தமிழ் நாடு மொழியில் அழகான வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்தி எழுதியுள்ளார்கள்.

ஏன் இயேசு அவரிடம் அற்புதம் கேட்ட யூத ஆசாரியர்களைப் பார்த்து, "விபச்சார சந்ததியார்" என்று கூப்பிட்டார், என்ற தலைப்பில் வேறு ஒரு கட்டுரையாக நான் பதில் அளிக்கிறேன்.

இவர்கள் இந்த தலைப்பில் வேறு என்ன எழுதினார்கள் என்பதை காண அவர்களின் தொடுப்பில் சென்று படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இதோ அவர்களின் தொடுப்பு:
http://egathuvam.blogspot.com/2008/02/blog-post_25.html

இந்த தொடுப்பில் சென்று படித்து, தமிழ் கிறிஸ்டியன்ஸ் தள நிர்வாகிகள் அதை பதிக்கலாம் என்று விரும்பினால், நானோ அல்லது மற்றவர்களோ அதை இங்கு பதிக்கின்றோம், அதுவரை இந்த தளத்தில் அதை பதிக்கவேண்டாம் என்று TamilChristians தள வாசகர்களை கேட்டுக்கொள்கிறேன்.

நான் வேறு ஒருகட்டுரையில் பதில் தருகிறேன் என்று சொன்னதால் நான் பயந்துவிட்டேன் என்று எண்ணவேண்டாம், கண்டிப்பாக பதில் தருவேன். நான் ஏன் தாமதிக்கிறேன் என்றால், என் பதில்களில் 80% கிறிஸ்தவத்திற்கு எதிராக வைத்த குற்றச்சாட்டிற்கு பதில் இருக்குமானால், 20% இஸ்லாமியர்களுக்கு என் கேள்விகள் இருக்கும். எனவே, இன்னும் பல விவரங்கள் இந்த தலைப்பு சம்மந்தப்பட்டதை நான் சேகரிக்கவேண்டாமா? அதற்காகத்தான் அவகாசம்.


 
Quote:
தந்தையின் மரணத்திற்கு செல்லக்கூடாது என்று தடுத்த இயேசு:

அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார். - மத்தேயு - 8 :21 - 22

ஒருவனுடைய தகப்பன் இறந்திருக்க, அவன் தன் தகப்பனை இறுதியாகப் பார்த்து விட்டு அவரை அடக்கம் பண்ணிவிட்டு வரவா? என்று கேட்டதற்கு, அதை தடுக்கின்றார் என்றால் இவர் எப்படிப்பட்ட அப்பட்டமான மனித உரிமை மீறலை செய்திருக்கின்றார் என்று புரிந்துக்கொள்ளுங்கள். சாதாரனமாகவே ஒருவர் இறந்து விட்டால் மற்றவர் அதற்கு உரிய அனைத்து உதவிகளும் செய்யவேண்டும் என்பது சாதாரண சாமானியனும் ஒத்துக்கொள்ளக்கூடிய ஒரு நியதி. ஆனால் இந்த உலகத்திற்கே நல்வழிக்காட்ட வந்தவர் தன் தகப்பனுடைய மரனத்திற்கு கூட செல்லாதே என்று தடுக்கின்றார் என்றால், இயேசு அவர்களை பைபிள் எவ்வளவு கீழ்தரமானவராக சித்தரிக்கின்றது என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

இயேசு அவர்களை தாயை மதிக்கக்கூடியவராக, தற்பெருமையற்றவராக, மிகுந்த ஒழுக்கசீலராக காட்டுகிறது திருக்குர்ஆன். ஆனால் பைபிளோ இவை அனைத்திற்கும் மாற்றமாக நடந்தவர்தான் என்று கூறுகிறது. இதை கிறிஸ்தவ சகோதரார்களும், மாற்று மத அன்பர்களும் சற்று சிந்திக்க வேண்டும்.

இது போண்று இன்னும் பலவகையில் இயேசுவைத் திருக்குர்ஆன் உயர்த்துவதையும், பைபிள் அவரைத் தரக்குறைவானவராக காட்ட முயற்சிப்பதையும் அடுத்தடுத்த ஆக்கங்களில் விளக்குவோம். இன்ஷா அல்லாஹ்! இறைவனே அனைத்தையும் நன்கறிந்தவன்.

பெற்றோரைப் பேணுவது பற்றி இஸ்லாம் எவ்வாறு வலியுறுத்துகின்றது என்பதையும் இது போண்று தான் தனது தாயையும் இயேசு அவர்கள் மதித்து நடந்திருப்பார் என்பதையும் கான இங்கே அழுத்தவும்.

(குறிப்பு : நாம் சில வார்த்தைகளை அநாகரீகமாக எழுதிஇருப்பது போல் தோன்றலாம். ஆனால் அது நம்முடைய வார்த்தை இல்லை என்பதையும் அது பைபிளில் உள்ள ஒரு புனித (?) வார்த்தை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த புனித(?) வார்த்தையைத் தான் நாம் மேற்கோள் காட்டிஇருக்கின்றோமே யொழிய நாமாக எதையும் எழுதவில்லை என்பதையும் கவனிக்வும்.)

http://egathuvam.blogspot.com/2008/02/blog-post_25.html



இதற்கு தனி "பைபிள் கேள்வி பதில் " என்ற முறையில் பதில் தருகிறேன், அதற்கு முன்பாக சில கேள்விகள்:

ஒரு நாட்டோடு சண்டை போட்டு, சகோதர்களை, தந்தைகளை கொன்றுப் போட்டு, அவர்களின் பெண்களை அடிமையாக கொண்டு, ஒரு பெண்ணின் குடும்பத்தின் இரத்தத்தை குடித்துவிட்டு, அந்த பெண்ணோடு அன்றே உடலுறவு கொண்டாரே ஒரு மஹான், அவரைப் பற்றி சிறிது சொல்லுங்களேன்.

நான் கொடுத்த பதிலில் இயேசு பற்றி சொல்லியுள்ளவற்றைப் பற்றி எழுதினீர்களே, அதே கட்டுரையில், முகமது பற்றி எழுதிய வரிகளைப் பற்றி ஒன்றுமே எழுதவில்லையே, ஏன்? "முகமது மீது அவதூறு" சொல்கிறார் என்று நான்கு வார்த்தைகளில் எழுதி முடித்துவிட்டீர்கள். அவதூறு சொல்வது உண்மையானால், மறுபடியும் நான் எழுதியதை கீழே தருகிறேன், எந்த வரி அவதூறு என்று விளக்குங்கள்?


 
Quote:

9. தன்னை எதிர்த்த பெண்ணை கொலை செய்ய துடித்த முகமது:

இயேசு தன் தாயை "ஸ்திரியே" என்று அழைத்தார், இது ஒரு நபிக்கு இருக்கக்கூடிய தகுதி அல்ல. நபி என்பவர்கள் இப்படி சொல்லமாட்டார்கள் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள், முகமது தன்னை ஒரு பெண் எதிர்த்தாள் (அதுவும் பல பிள்ளைகளுக்கு தாய்) என்பதற்காக "எனக்காக அவளை கொல்பவர் யார்?" என்று கேட்டு, அந்தப் பெண்ணை கொலை செய்யவைத்தவர் முகமது. இது ஒரு நபிக்கு இருக்கக்கூடிய தகுதியா? (படிக்க "முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் ")

தன் அனுமதி இல்லாமல், ஒரு மனிதன், தன் மனைவி "முகமதுவை" தொடர்ந்து திட்டிக்கொண்டு இருக்கிறாள் என்பதற்காக கொலை செய்துவிட்டு, முகமது கேட்கும் போது, நான் தான் செய்தேன் என்று சொல்லும் போது:


என்னை திட்டினால் எப்படி உன் மனைவியை நீ கொலை செய்வாய்?

அதுவும் ஒரு கர்ப்பிணிப் பெண் என்றுச் சொல்கிறாய்! எப்படி உன்னால் இது முடிந்தது?

என் அனுமதி இல்லாமல் இப்படி கொலை செய்ததால், இஸ்லாமுக்கு கெட்டப்பெயர் நீ கொண்டு வந்தாய்?

சட்டத்தை ஏன் கையில் எடுத்துக்கொண்டாய்? அரசு எடுக்கவேண்டிய முடிவை எப்படி நீ எடுத்தாய்?



என்று கேள்விகள் கேட்டு, முகமது அந்த மனிதனுக்கு தகுந்த தண்டனை அளிக்காமல், எல்லாருக்கும் முன்பாக, " சாட்சியாளர்களாக அமர்ந்திருப்போரே ! அவளின் இரத்தத்திற்கு பலி எடுக்கப்படாது." என்றுச் சொன்னதாக ஹதீஸ் சொல்கிறதே. இப்படிப்பட்டவரையா நீங்கள் நபி என்றும், இப்படிப்பட்ட மார்க்கத்தையா அமைதியின் மார்க்கம் என்றுச் சொல்கிறீர்கள்?

இயேசு தன் தாயை "ஸ்திரியே" என்று அழைத்தது பைபிளில் சொல்லப்பட்டதால், அது வேதமல்ல என்று சொல்லும் நீங்கள், உங்கள் முகமது, வயிற்றில் இருக்கும் பிள்ளையோடு கொன்ற ஒரு மனிதனுக்கு மன்னிப்பு அளித்தாரே, இந்த பெண்ணுக்காக பலி கொடுக்கப்படாது என்று சொன்னாரே, இவர் நபியா? இதை படிப்பவர்கள் சிந்திக்கட்டும்.( படிக்க : கர்ப்பிணி பெண்ணை கொன்ற மனிதனை தண்டிக்காத முகமது http://unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_16.html )


முடிவாக, ஏகத்துவம் சகோதரர்களே, வாருங்கள் நாம் இயேசுவின் வாழ்க்கை வரலாறையும், நடத்தையையும், அவரின் வார்த்தைகளையும் ஆராய்ச்சி செய்வோம், அலசுவோம். அதே போல, முகமதுவின் வாழ்க்கை வரலாறையும், நடத்தையையும் , அவரின் வார்த்தைகளையும் ஆராய்ச்சி செய்வோம், அலசுவோம்.


நீங்கள் சொலவது தான் சத்தியம் என்று நீங்கள் சொல்கின்றீர்கள், அதே போல நாங்களும் சொல்கின்றோம். நாங்கள் இயேசுவைப்பற்றி எதையும் மறைக்கவிரும்பவில்லை, இரண்டு வார்த்தைகள் இயேசுவைப்பற்றி தவறான கருத்தை இஸ்லாமியர்கள் சொன்னால், அதற்கு 200 வரிகளில் பதில் தருகிறோம்.

எம். எம். அக்பர் அவர்கள் எழுதிய இரண்டு வார்த்தைகளை(இயேசு தாயைமதிக்காதவராக) நாங்கள் கண்டுக்கொள்ளாமல் விட்டு இருந்தால், அது உலகிற்கு தெரிந்து இருக்கப்போவதில்லை, ஆனால், அதையும் நாங்கள் அம்பளப்படுத்தினோம், காரணம் சத்தியம் எங்களிடம் உள்ளது. அதே போல, வெளிப்படையாக முகமதுவின் வாழ்க்கையை அலச முன்வாருங்கள். அப்போது, உலகிற்கு சத்தியம் என்ன என்பது தெரியவரும்.

இயேசுவே, நாங்கள் உம்மை நேசிக்கிறோம், தொழுகின்றோம், உமக்காக சில வரிகளை எழுதுகிறோம், நாங்கள் இந்த காலத்தில் சும்மா இருந்தால், உமக்காக கல்லுகளை பேசவைப்பீர் நீர், என‌வே, நாங்க‌ளே பேசுகின்றோம். எங்கள் வாயில் உம் வார்த்தைகளை போடும், எங்கள் எழுத்துக்கள் உப்பால் சாரமேற்றப்படுவதாக என்று வேண்டிக்கொள்கின்றோம். சீக்கிர‌மாக வாரும். ஆமென்.

 
 
 

புதன், 20 பிப்ரவரி, 2008

இஸ்லாம் கல்விக்கு பதில்: இயேசு த‌ன் தாயை (மரியாளை) அவமதித்தாரா?

 
இஸ்லாம் கல்விக்கு பதில்: இயேசு த‌ன் தாயை (மரியாளை) அவமதித்தாரா?

(M.M. அக்பர் மற்றும் தேங்கை முனீப், பஹ்ரைன் அவர்களுக்கு மறுப்பு)


எம். எம். அக்பர் என்ற கேரள இஸ்லாமிய அறிஞர், பைபிள் பற்றியும், குர்‍ஆன் பற்றியும் சொல்லியுள்ள செய்திகளை, தேங்கை முனீப் என்ற இஸ்லாமிய சகோதரர் தமிழில் மொழி பெயர்த்து இஸ்லாம் கல்வி தளத்தில் வெளியிடுகிறார். இஸ்லாமிய அறிஞர்களின் பைபிள் ஆராய்ச்சியின் தரம் எந்த அளவிற்கு உள்ளது என்பதை இந்த கட்டுரையில் நான் விளக்குகிறேன்.

M.M. அக்பர் அவர்கள் எழுதியது:

திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் - ஓர் ஒப்பீடு

(பகுதி 2)

மூலம்: M.M.அக்பர் - தமிழில் தேங்கை முனீப், பஹ்ரைன்

தீர்க்கதரிசிகளே தீமை புரிந்தனரா? . . .

6. இஸ்ரவேலரின் இரட்சகர் என பைபிள் கூறும் இயேசு கிறிஸ்து தாயை மதிக்காதவராகவும் (யோவான்: 2:5, 19:26) சகிப்புத்தன்மை இல்லாதவராகவும் (மத்தேயு 12:34, 12:39, யோவான் 8:44) முன்கோபம் உடையவராகவும் (யோவான் 2:13-17, மத்தேயு 21:19) திருமண விருந்தில் தண்ணீரை மதுவாக மாற்றி மக்களுக்குக் கொடுத்து அவர்களுக்குப் போதையூட்டியவராகவும் (யோவான் 2:1-11) அறிமுகப்படுத்துகின்றது.

Source: http://www.islamkalvi.com/religions/quran_bible_compare2.htm
Formats mine



1. முஸ்லீம்கள் தீர்க்கதரிசிகளுக்காக ஏன் அதிகமாக பரிந்துபேசுகிறார்கள்:

பைபிள் தீர்க்கதரிசிகளைப் பற்றி சொல்லும் போது அவர்கள் சாதாரண மனிதர்கள் போல, சில தவறுகள் செய்துள்ளார்கள் என்றும், அதற்கு தேவன் தண்டனைகளை கொடுத்துள்ளார் என்றும்  சொல்கிறது. தீர்க்கதரிசிகளும் சாதாரண மனிதர்கள் தான், அவர்களும் தவறுகள் செய்துள்ளார்கள் என்று பைபிள் பாரபட்சம் காட்டாமல், உள்ளதை உள்ளது போலவே சொல்கிறது.

இதை முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்வது இல்லை. இவர்களின் கருத்துப்படி, தீர்க்கதரிசிகள் மிகவும் நல்லவர்கள், அவர்கள் தவறே செய்யமாட்டார்கள். அவர்களைப் பற்றி பைபிள் சொல்வது தவறு என்று இவர்கள் சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் பைபிள் சொல்வது போல, குர்‍ஆனும், ஹதீஸ்களும், முகமதுவின் வாழ்க்கை வரலாறும், தீர்க்கதரிசிகள் கூட பாவம் செய்துள்ளார்கள், இறைவனிடம் மன்னிப்பை கேட்டுள்ளார்கள் என்று சொல்கின்றன. இதைப் பற்றிய பதிலை தொடர் கட்டுரைகளாக நாம் காணலாம்.

சரி, ஏன் இஸ்லாமியர்கள் இப்படி சொல்கிறார்கள் என்று சிறிது சிந்துப்பார்த்தால், ஒரு உண்மை புரியும், அது என்னவென்றால், பைபிள் சொல்வது போல, தீர்க்கதரிசிகள் கூட தவறுகள் செய்வார்கள் என்று இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொண்டால், அது இவர்களுக்கு தலைவலியாக மாறும்.  எப்படி இவர்களுக்கு தலைவலியாக மாறும் என்று தெரிந்துக்கொள்ள மேலும் படியுங்கள். பைபிள் சொல்லும் தீர்க்கதரிசிகள் ஏதோ ஒரு சூழ்நிலையில் தவறு செய்ததாக சொல்கிறது, அந்த தவறினால் மற்றவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால், அதற்கு உடனே தேவன் அவர்களுக்கு தண்டனை கொடுத்ததாக பைபிள் சொல்கிறது. பிறகு அந்த தீர்க்கதரிசிகள் அந்த தவறை மறுபடியும் செய்யாமல் இருந்தார்கள் என்று பைபிள் சொல்கிறது.

ஆனால், முகமதுவையும் ஒரு தீர்க்கதரிசியாக (நபியாக)  ஏற்றுக்கொண்டால், இவர் பைபிள் சொல்லும் தீர்க்கதரிசிகள் போல ஒரு முறை தவறு செய்யாமல், அதை தொடர்ந்து செய்துள்ளார், இதில் ஒரு வித்தியாசம் என்னவென்றால், அல்லா இவர் செய்த எல்லா தவறுகளை கணக்கில் கொள்ளாமல், தண்டனை கொடுக்காமல் மன்னித்து, இவர் செய்யும் எல்லா செயல்களுக்கு அல்லாவே அங்கீகாரம் கொடுத்துள்ளார். எனவே, பைபிள் சொல்வது உண்மை என்று இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொண்டால், இவர்கள் உத்தமர் என்று பின்பற்றும் முகமதுவுடைய செயல்களும் தவறு தான் என்று இவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டி வரும். எனவே, தங்கள் முகமதுவை காப்பாற்ற மற்ற தீர்க்கதரிசிகளுக்கு இவர்கள் வக்காளத்து வாங்குகிறார்கள்.

இதில் இன்னொரு முக்கியமான விவரம் என்னவென்றால், குர்‍ஆனிலும், ஹதீஸ்களிலும் எங்கும் இயேசு பாவம் செய்ததாக சொல்லப்படவில்லை, அதாவது, முகமதுவை விட பல மடங்கு இயேசு நல்லவர் என்பதை இஸ்லாமிய புத்தகங்களே சொல்கின்றன. இயேசு நல்லவர், முகமது தவறுகள் செய்தார் என்று இஸ்லாமிய ஹதீஸ்கள் சொல்வதை சரி செய்ய, எந்த தீர்க்கதரிசியும் தவறு செய்யவில்லை என்று மழுப்புகிறார்கள இஸ்லாமியர்கள்.

இஸ்லாமியர்கள் சொல்வது தவறானது என்பதை விளக்குவதற்கு முன்பு, இவர்கள் இயேசுவைப் பற்றி இந்த கட்டுரையில் சொல்லியுள்ள சில விவரங்களுக்கு பதிலை சொல்லலாம் என்று கருதுகிறேன்.



M.M. அக்பர் அவர்கள் எழுதியது:  
.....
.....
.....
6. இஸ்ரவேலரின் இரட்சகர் என பைபிள் கூறும் இயேசு கிறிஸ்து தாயை மதிக்காதவராகவும் (யோவான்: 2:5, 19:26) ....



2. இயேசு மரியாளை மதிக்கவில்லையா? யோவான்: 2:5, 19:26 வசனங்கள் என்ன சொல்கின்றன:

இஸ்லாமிய அறிஞர்கள் பைபிள் வசனங்களுக்கு எவ்வளவு அழகாக விளக்கம் அளிக்கிறார்கள் என்பதை இதன் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

முதலாவது, அவர்கள் மேற்கோள் காட்டிய வசனத்தை பார்ப்போம்.


யோவான் 2:5 அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள்.



மேலே எம்.எம். அக்பர் அவர்கள் குறிப்பிட்ட வசனத்தை பாருங்கள், ஏதாவது புரிகிறதா? ஒன்றுமே புரியாது! ஏனென்றால், அவர்கள் குறிப்பிட்ட வசனமே தவறாக உள்ளது. உண்மையில் அவர்கள் மேற்கோள் காட்டியிருக்கவேண்டிய வசனம் யோவான் 2:4 ஆகும். அல்லது யோவான் 2:1-4 வரையுள்ள வசனங்களை குறிப்பிட்டு இருக்கவேண்டும்.

இது என்ன பெரிய தவறா? என்று நீங்கள் கேட்கலாம், இது பெரிய தவறு இல்லை, ஆனால், மற்றவர்களின் வேதங்களில் உள்ள வசனத்தை மேற்கோள் காட்டும் போது, குறைந்தபட்சம் ஒரு முறை சரிபார்ப்பது நல்லது. கட்டுரையின் மூல ஆசிரியர் எம். எம். அக்பர் அவர்களோ அல்லது மொழி பெயர்த்த முனீப் அவர்களோ இதை கவனிக்கவில்லை. இது ஒரு பெரிய தவறாக நான் குறிப்பிடவில்லை, ஆனால், இஸ்லாமிய அறிஞர்கள் எவ்வளவு மேலோட்டமாக மற்றவர்களின் வேதங்களின் வசனங்களை கையாளுகிறார்கள் என்பதை குறிப்பிடவந்தேன், அவ்வளவு தான். சரி, விவரத்திற்கு வருகிறேன்.


3. ஏன் இயேசு தன் தாயை ஸ்திரியே(பெண்ணே) என்று அழைத்தார்?

ஒரு முறை இயேசுவும், அவரது சீடர்களும், மரியாளும் ஒரு திருமணத்திற்கு சென்றார்கள். அப்போது, அங்கே திராட்சை ரசம் குறைவுப்பட்டது. இதை கவனித்து மரியாள், இயேசுவிடம் இவர்களுக்கு திராட்சை ரசம் குறைவுப்பட்டது, ஏதாவது (அற்புதம்) செய்யும் என்று கேட்டுக்கொண்டார்கள்.

அதற்கு பதிலாக இயேசு ஸ்திரியே என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்கிறார்கள். இதை பைபிள் வசனங்கள் கொண்டு படியுங்கள், இதில் இயேசு மரியாளை எங்கு அவமதித்துள்ளார் என்பதை நீங்களே கண்டுபிடியுங்கள்.


யோவான் 2:1-5 மூன்றாம்நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். திராட்சரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை எனறாள். அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படிசெய்யுங்கள் என்றாள்.



பெண்ணே என் வேளை இன்னும்வரவில்லை, நான் எப்போது அற்புதங்கள் செய்யவேண்டும், எப்போது செய்யக்கூடாது என்று எனக்கு தெரியும். இறைவன் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் இப்படி மனிதர்களின் இடையூறு தேவையில்லை என்ற தோரணையில் இயேசு பதில் அளிக்கிறார். இதில் எந்த தவறும் இல்லை. இதே போல பல சந்தர்பங்களில், இயேசு என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்லியுள்ளார் (யோவான் 7:6, 8, 30, 8:20).


பைபிள் காமண்டரி இதைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை பாருங்கள்:

"The mother of Jesus reported the matter to Him presumably knowing that He could save the situation. 4 Dear women, why do you involve me?(Gk: ti emoi kai soi): This is a translation of an idiom, both in classical Greek and Hebrew, meaning "leave me to follow my own course'. No one has any right of access to the Lord in this matter. (Page : 1236, Zondervan's Understand the Bible Reference Series, New International BIBLE COMMENTARY Based on the NIV. F. F. Bruce, General Editor).

4. தன் வேளை வரவில்லை என்று சொன்னாலும், மறுபடியும் இயேசு மரியாளின் மீதுள்ள அன்பினால் அற்புதம் செய்தார்:

நம் இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் விவரங்கள் எப்படி உள்ளது என்றால், இயேசுவின் தாய் அவரிடம் அற்புதம் செய்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லும் போது, இயேசு பெணணே "என்னை தொந்திரவு செய்யாதே" என்றுச் சொல்லி, மறுபடியும் மரியாள் இயேசுவிடம் அதிகமாக கேட்டுக்கொண்டும், அவர் "முடியாது என்றால் முடியாது" என்று தட்டிக்கழித்ததாக கற்பனை செய்துக்கொண்டு பைபிள் வசனத்திற்கு வியாக்கீனம் செய்கிறார்கள்.

ஆனால், உண்மையில் இயேசு "என் வேளை இன்னும் வரவில்லை" என்று சொல்லிவிட்டு, மறுபடியும் "சரி செய்கிறேன்" என்று ஒப்புக்கொண்டுள்ளார். பிறகு மரியாள், அந்த வேலைக்காரர்களை அழைத்து, அவர் சொல்லுகின்றபடி செய்யுங்கள் என்று சொல்ல, தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றுகிறார் இயேசு. இந்த விவரங்கள் எல்லாம், இஸ்லாமியர்கள் படிக்கமாட்டார்கள். அவர்களுக்கு இந்த வசனங்கள் பைபிளில் இருப்பது தெரியாது! அப்படி தெரிந்தாலும் வெளியே சொல்லமாட்டார்கள்.


யோவான் 2:6-8 யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரரிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள்.



இயேசு அனுமதி கொடுக்காமலா! மரியாள் வேலைக்காரர்களை பார்த்து இவர் சொல்கின்றபடி செய்யுங்கள் என்று சொல்லியுள்ளார்கள்? இயேசுவிற்கு மரியாளின் மீது மரியாதை இல்லாமலா அவர் அன்று அந்த திருமண வீட்டில் அற்புதம் செய்தார். சிந்திக்கவேண்டும்.

5. இயேசு "தான் வந்த வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தார்:"

இயேசு தான் எந்த வேலைக்காக வந்தாரோ அதை கச்சிதமாக செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தார், "நீர் இதை செய்யுங்கள்" என்று அவருக்கு அறிவுரை சொல்லத்தேவையில்லை. ஒரு முறை யூத ஆசாரியர்கள் இயேசு செய்த பல அற்புதங்களை கண்டும், அவர் மீது விசுவாசம் வைக்காமல் "வேண்டுமென்றே அற்புதம் செய்துக்காட்டு" என்று சொல்லும் பொது, இயேசு செய்துக்காட்டவில்லை. இந்த விவரத்தைப் பற்றி, பி. ஜைனுல் ஆபீதீன் என்ற இஸ்லாமிய அறிஞருக்கு நான் அளித்த பதிலில் மிகவும் தெளிவாக காணலாம்.

1. பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 1

2. பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 2

எனவே, இயேசு தன் தாயை பெண்ணே என்று அழைத்தது ஒன்றும் பெரிய குற்றமில்லை. இஸ்லாமியர்கள், இயேசுவை ஒரு நபி என்று மட்டும் பார்க்கிறீர்கள், ஆனால், அவர் மேசியாவாகிய தேவன் என்பதை நீங்கள் அறியவில்லை. மரியாள் இவ்வுலகத்தில் பெயரளவிற்கு இயேசுவிற்கு தாயாக இருக்கிறார், ஆனால், அந்த மரியாளுக்கு "இயேசு" தேவனாக இருக்கிறார் என்பதை நீங்கள் மறக்கக்கூடாது. மரியாள் தான் இயேசுவிற்கு "அடிமை" என்றும், அவர் "தன் இரட்சகர் - Saviour" என்றும் சொல்லியுள்ளதை நாம் கவனிக்கவேண்டும்.

லூக்கா 1:47 என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது. 1:48 அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.



உலக மக்கள் மரியாளை "பாக்கியவதி" என்பார்கள், ஆனால், இயேசுவை விட மனிதர்கள்(மரியாள்) பெரியவர் இல்லையே. எனவே, இயேசுவை பின்பற்றிய சீடர்கள் போல மரியாளும் இயேசுவின் சீடர் ஆவார்கள். மரியாளுக்கும் இயேசு என்னும் இரட்சகர் தேவை.


6. சிலுவை நேரத்தில் மரியாளை பெண்ணே என்று அழைத்த இயேசு:

இயேசு சிலுவையில் தொங்கும் போது கூட ஒரு தாய்க்கு ஒரு சராசரி மனிதன் செய்யக்கூடிய(வேண்டிய) கடமையையும் இயேசு செய்துவிட்டுச்சென்றார். தன் சீடர்களில் எல்லாம் தான் அதிகமாக நேசித்த சீடனாகிய யோவானின் கையில் மரியாளை ஒப்படைத்து சென்றார் இயேசுக் கிறிஸ்து.

யோவான் 19:26 அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.



இயேசு மரியாளை அவமதிக்கவேண்டும் என்பதற்காக "ஸ்திரியே" என்று ஒரு திருமண விருந்தில் அழைத்தார் என்று இஸ்லாமியர்கள் குற்றம் சாட்டுகிறீர்கள். அப்படியானால், இந்த சிலுவை நேரத்தில் மரியாளின் மீது இயேசுவிற்கு என்ன கோபம் இருந்தது? அப்படி அவமதிக்கவேண்டும் என்று நினைத்து இருந்தால், ஏன் தனக்கு பிரியமான சீடனை மரியாளை பார்த்துக்கொள் என்று ஒப்படைக்கிறார்?


7. கிரேக்க வார்த்தை "gynai" மற்றும் அதன் உண்மைப்பொருள்:

இயேசு சொன்னதாக பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை "gynai" என்பதாகும். இதை தமிழில் "ஸ்திரி" அல்லது "பெண்" என்று மொழி பெயர்த்துள்ளார்கள்.

இந்த வார்த்தையை இயேசு மரியாளுக்கு பயன்படுத்தியது "ஒரு தாயை அவமதிப்பதாக ஆகும் " என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். இந்த வார்த்தை இன்னும் யார் யாருக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை கவனித்தால், இஸ்லாமியர்களின் இந்த வாதம் தவறானது என்ற முடிவிற்கு வரலாம். இந்த கிரேக்க வார்த்தை மதிப்பின், அன்பின் அடிப்படையில் குறிப்பிடும் வார்த்தையாகும்.

1. கிரேக்க புலவர் "ஹோமர் -  Homer " என்பவர் எழுதிய கவிதைகளில், ஒடிஸ்ஸியஸ்(Odysseus) என்பவர், தான் அதிகமாக நேசிக்கும் மனைவியை(Penelope) குறிப்பிடும் போது இந்த வார்த்தையை பயன்படுத்துகிறார்.  (Homer (ancient Greek: Ὅμηρος, Homēros) is a legendary ancient Greek epic poet, traditionally considered the author of the epic poems the Iliad and the Odyssey as well as some lesser-known poems.  Source: http://en.wikipedia.org/wiki/Homer)

2. ரோம சாம்ராஜ்ஜியத்தின் அரசர் சீசர் அகஸ்தஸ், எகிப்து இராணியாகிய "கிளியோபாட்ராவை" குறிப்பிடும் போது, இந்த வார்த்தையையே பயன்படுத்துகின்றார்.

The Protestant commentator William Barclay writes:

"The word Woman (gynai) is also misleading. It sounds to us very rough and abrupt. But it is the same word as Jesus used on the Cross to address Mary as he left her to the care of John (John 19:26). In Homer it is the title by which Odysseus addresses Penelope, his well-loved wife. It is the title by which Augustus, the Roman Emperor, addressed Cleopatara, the famous Egyptian queen. So far from being a rough and discourteous way of address, it was a title of respect. We have no way of speaking in English which exactly renders it; but it is better to translate it Lady which gives at least the courtesy in it" (The Gospel of John, revised edition, vol. 1, p. 98).

In the same way, the Expositor's Bible Commentary, published by Zondervan, states:

Jesus' reply to Mary was not so abrupt as it seems. 'Woman' (gynai) was a polite form of address. Jesus used it when he spoke to his mother from the cross (19:26) and also when he spoke to Mary Magdalene after the Resurrection (20:15)" (vol. 9, p. 42).

The Wycliff Bible Commentary put out by Moody Press acknowledges in its comment on this verse, "In his reply, the use of 'Woman' does not involve disrespect (cf. 19:26)" (p. 1076).

Source:http://homepages.paradise.net.nz/mischedj/ct_theotokos.html

John 2:4 "Dear woman, why do you involve me?" Jesus replied. "My time has not yet come."

Critics often accuse Jesus of being rude to his mother here; however, as parallel phrases in Greek literature show, this is not a phrase of derision or rudeness but of loving respect (as our NIV correctly captures). Consider this relevant data:

The term here is "Jesus' normal, public way of addressing women" (John 4:21, 8:10, 19:26, 20:31; Mt. 15:28; Lk. 13:12). It is also a common address in Greek literature, and never has the intent of disrespect or hostility. [Brow.GJ, 99]. The same term is used in Josephus Antiquities 17.17 by Pheroras to summon his beloved wife. [Beas.J, 34]


Source: http://www.tektonics.org/gk/jesusrudemom.html


சிந்தித்துப்பாருங்கள், ஒருவன் தான் அதிகமாக நேசிக்கும் மனைவியை குறிப்பிடும்போதும், ஒரு அரசியை ஒரு அரசன் குறிப்பிடும்போதும் பயன்படுத்தியுள்ள அதே கிரேக்க வார்த்தையைத் தான் இயேசு தன் தாயுக்கு பயன்படுத்தியுள்ளார், இது மரியாளை அவமதிக்கவோ, கோபத்தாலோ சொன்னது இல்லை, மதிப்பின் அடிப்படையில் சொன்ன வார்த்தையாகும்.

இதை கவனத்தில் கொண்டு பார்க்கும்போது, இயேசு மரியாளை அவமதிக்கவேண்டும் என்பதற்காக "ஸ்திரியே" என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை, அதற்கு மாறாக மதிப்பின் அடிப்படையில் பயன்படுத்தியுள்ளார்.

கிரேக்கத்திலிருந்து புதிய ஏற்பாட்டை ஆங்கிலத்திலோ, தமிழிலோ மொழி பெயர்க்கும் போது, "Woman" என்று பயன்படுத்தியுள்ளார்கள். இதை "Lady" என்று மொழிபெயர்ப்பது தான் சிறந்தது என்று மேலே பார்த்த காமண்டரியில் சொல்லப்பட்டுள்ளது.


"The Protestant commentator William Barclay writes: ....We have no way of speaking in English which exactly renders it; but it is better to translate it Lady which gives at least the courtesy in it" (The Gospel of John, revised edition, vol. 1, p. 98). "

தமிழிலே பெண், அல்லது ஸ்திரி என்பதற்கு சமமான ஆங்கில வார்த்தை "Woman" என்பதாகும், ஆனால், "Lady" என்பதற்கு தமிழில் என்ன வார்த்தை உள்ளது என்பது சந்தேகமாக உள்ளது.

"உன் தாயையும் தந்தையையும் கணம் செய்வாயாக" என்று பழைய ஏற்பாடு சொல்வதை நிறைவேற்ற நான் வந்தேன் என்று சொன்ன அதே இயேசு, எப்படி மரியாளை அவமதிப்பார்?


அவன் அவரை நோக்கி: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக; உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக; உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பவைகளையே என்றார். (மத்தேயு 19:18-19 )

நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 5:17-18 )



8. பொதுவாக வெறுப்பு இன்றி பெண்களை குறிப்பிட இயேசு பயன்படுத்தும் வார்த்தை :

இயேசு பல சந்தர்பங்களில் பெண்களை குறிப்பிடும் போது, "ஸ்திரியே" என்று தான் அழைத்து பேசியுள்ளார், அது நம்பிக்கையை புகழும் போதும் சரி, மன்னிக்கும் போதும் சரி அல்லது சுகமாக்கி ஆறுதலான வார்த்தைகளை பேசும் போதும் சரி, இப்படித் தான் இயேசு குறிப்பிட்டுள்ளார். கீழே வரும் வசனங்களில் இயேசு சாதாரணமாக பேசினாரா? அல்லது அவமதிக்கும் வகையில் பேசினாரா? என்பதை சிந்தித்துப்பாருங்கள்.


நம்பிக்கையை மெச்சிக்கொள்ளும்போது: மத்தேயு 15:28 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.

சுகமாக்கிவிட்டு ஆறுதல்படுத்தும் போது: லூக்கா 13:12 இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே , உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,

நம்பிக்கையைப் பற்றிய சந்தேகத்தை தீர்க்கும்போது: யோவான் 4:21 அதற்கு இயேசு: ஸ்திரீயே , நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.

மன்னிக்கும் பொது: யோவான் 8:10 இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேரொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.

உயிர்த்தெழுந்த பிறகு: யோவான் 20:15 இயேசு அவளைப் பார்த்து ஸ்திரீயே , ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.



8. தன்னை எதிர்த்த பெண்ணை கொலை செய்ய துடித்த முகமது:

இயேசு தன் தாயை "ஸ்திரியே" என்று அழைத்தார், இது ஒரு நபிக்கு இருக்கக்கூடிய தகுதி அல்ல. நபி என்பவர்கள் இப்படி சொல்லமாட்டார்கள் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள், முகமது தன்னை ஒரு பெண் எதிர்த்தாள் (அதுவும் பல பிள்ளைகளுக்கு தாய்) என்பதற்காக "எனக்காக அவளை கொல்பவர் யார்?" என்று கேட்டு, அந்தப் பெண்ணை கொலை செய்யவைத்தவர் முகமது. இது ஒரு நபிக்கு இருக்கக்கூடிய தகுதியா? (படிக்க "முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்")

தன் அனுமதி இல்லாமல், ஒரு மனிதன், தன் மனைவி "முகமதுவை" தொடர்ந்து திட்டிக்கொண்டு இருக்கிறாள் என்பதற்காக கொலை செய்துவிட்டு, முகமது கேட்கும் போது, நான் தான் செய்தேன் என்று சொல்லும் போது:

என்னை திட்டினால் எப்படி உன் மனைவியை நீ கொலை செய்வாய்?

அதுவும் ஒரு கர்ப்பிணிப் பெண் என்றுச் சொல்கிறாய்! எப்படி உன்னால் இது முடிந்தது?

என் அனுமதி இல்லாமல் இப்படி கொலை செய்ததால், இஸ்லாமுக்கு கெட்டப்பெயர் நீ கொண்டு வந்தாய்?

சட்டத்தை ஏன் கையில் எடுத்துக்கொண்டாய்? அரசு எடுக்கவேண்டிய முடிவை எப்படி நீ எடுத்தாய்?


என்று கேள்விகள் கேட்டு, முகமது அந்த மனிதனுக்கு தகுந்த தண்டனை அளிக்காமல், எல்லாருக்கும் முன்பாக, " சாட்சியாளர்களாக அமர்ந்திருப்போரே ! அவளின் இரத்தத்திற்கு பலி எடுக்கப்படாது." என்றுச் சொன்னதாக ஹதீஸ் சொல்கிறதே. இப்படிப்பட்டவரையா நீங்கள் நபி என்றும், இப்படிப்பட்ட மார்க்கத்தையா அமைதியின் மார்க்கம் என்றுச் சொல்கிறீர்கள்?

இயேசு தன் தாயை "ஸ்திரியே" என்று அழைத்தது பைபிளில் சொல்லப்பட்டதால், அது வேதமல்ல என்று சொல்லும் நீங்கள், உங்கள் முகமது, வயிற்றில் இருக்கும் பிள்ளையோடு கொன்ற ஒரு மனிதனுக்கு மன்னிப்பு அளித்தாரே, இந்த பெண்ணுக்காக பலி கொடுக்கப்படாது என்று சொன்னாரே, இவர் நபியா? இதை படிப்பவர்கள் சிந்திக்கட்டும்.( படிக்க : கர்ப்பிணி பெண்ணை கொன்ற மனிதனை தண்டிக்காத முகமது http://unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_16.html)


முடிவுரை: அன்பான இஸ்லாமிய அறிஞர்களே, சிந்தியுங்கள், மரியாளை "ஸ்திரியே" என்று இயேசு சொன்னது, மரியாளை அவமதிக்க அல்ல என்பதை இதுவரைக்கும் கண்டோம். ஒரு முறை இயேசு மக்களுக்கு போதித்துக்கொண்டு இருக்கும் போது, உங்கள் தாயாரும் சகோதரரும் வெளியே உங்களுக்காக வெளியே காத்திருக்கிறார்கள் என்று அவருக்கு சொல்லப்பட்டபோது, என் தாய் யார்? என் சகோதரர் சகோதரிகள் யார்? என் பிதாவின் சித்தம் செய்பவர்களே என்று தன் சீடர்களை குறிப்பிட்டுச் சொன்னார்? இப்படி அவர் சொன்னதற்காக, அவருக்கு மரியாளின் மீது அன்பில்லை என்று பொருளா? . தன் சொந்த உலக குடும்பத்தைவிட, தேவனுடைய ஆன்மீக குடும்பத்தின் முக்கியத்துவம் அதிகம் என்பதை காட்டவே, இயேசு இவ்விதமாக சொன்னார்.

யார் யாருக்கு என்ன  முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், எப்போது கொடுக்கவேண்டும் என்று இயேசுவிற்கு நன்றாகத் தெரியும். எனவே, இயேசு மரியாளை "ஸ்திரியே" என்று சொல்லி அழைத்தது மரியாளை அவமதிப்பதற்காக அல்ல, உங்கள் குற்றச்சாட்டு ஆதாரமற்றது.

என் அடுத்த பதிலில், இயேசு சகிப்புத்தன்மை இல்லாதவர், முன்கோபமுடையவர், மக்களை போதையூட்ட அற்புதம் செய்தவர் போன்ற இஸ்லாமியர்களின் (இஸ்லாம் கல்வி தளம், எம்.எம். அக்பர் அவர்களின்) குற்றச்சாட்டிற்கு என் பதிலை தருகிறேன்.



1. இஸ்லாம் கல்விக்கு ஈஸா குர்ஆனின் இதர பதில்கள் :

1. எம். எம் அக்பருக்கு (இஸ்லாம் கல்விக்கு) பதில்: குர்ஆனில் குலறுபடிகள்

2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில் (குப்பை சடங்குகளை குப்பையில் போடச்சொன்ன இயேசு)

3. இஸ்லாம் கல்வி தள கட்டுரையும் 1 தீமோத்தேயு 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்


2. பி.ஜைனுல் ஆபீதீன் அவர்களுக்கு ஈஸா குர்ஆனின் பதில்கள்

3. நேசமுடன் தளத்திற்கு ஈஸா குர்ஆனின் பதில்கள்

4. டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈஸா குர்ஆனின் பதில்கள்

5. இது தான் இஸ்லாம் தளத்திற்கு ஈஸா குர்ஆனின் பதில்கள்



Isa Koran Home Page Back - Islam Kalvi Rebuttals Index  Page
1
 

வெள்ளி, 15 பிப்ரவரி, 2008

Answering PJ: இயேசு நியமித்த நேர்த்திமிகு தலைவர் "பேதுரு"

   
Answering PJ: இயேசு நியமித்த நேர்த்திமிகு தலைவர் "பேதுரு"

(பிஜே அவர்களின் "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்திற்கு ஈஸா குர்‍ஆன் மறுப்பு)


"இயேசுவிற்கு மனிதர்களை சரியாக மதிப்பிடத் தெரியவில்லை, தனக்குப் பின் கிறிஸ்தவத்தை தலைமை தாங்க பேதுருவை இயேசு நியமித்தது சரியானது அன்று" என்று "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்தில் பிஜே அவர்கள் கேள்வியை எழுப்புகிறார்.

பிஜே அவர்களது கணிப்பு தவறானது என்றும், ஆதாரமற்றது என்றும் என் முதல் கட்டுரையில் விளக்கினேன். இயேசுவிற்கு எத்தனை சீடர்கள் இருந்தார்கள் என்று கூட தெரிந்துக்கொள்ளாமல் பிஜே அவர்கள் கிறிஸ்தவ கட்டுரைகளை எழுதிக்கொண்டு இருக்கிறார். பிஜே அவர்களின் இந்த குற்றச்சாட்டிற்கு என் முதல் பதிலை கீழ் கண்ட கட்டுரையில் படிக்கலாம்.

பாகம் 1 : Answering PJ: "பின்னாகப் போ சாத்தானே" என்றார்


பாகம் 2 :

Answering PJ: இயேசு நியமித்த நேர்த்திமிகு தலைவர் "பேதுரு"


இந்த கட்டுரையில், "இயேசு நியமித்த நேர்த்தி மிகு தலைவர் பேதுரு " என்ற தலைப்பில் பதில் அளிக்கிறேன். பேதுருவை தலைவராக இயேசு நியமித்தது மிகவும் சரியான மதிப்பிடல் என்பதை இக்கட்டுரையில் விளக்குகிறேன். ஆதாரமே இல்லாமல், பேதுருவை விட சிறந்த சீடர்கள் இயேசுவிற்கு 9 பேர் இருந்தார்கள் என்று பிஜே அவர்கள் சொன்னது தவறானது என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.

பிஜே அவர்கள் எழுதியது:

பரலோகத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்தில் நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார். ( மத்தேயு 16:19)

பேதுருவை விடச் சிறந்த சீடர்கள் ஒன்பது பேர் இருக்கும் போது பேதுருவைச் சரியாக எடை போடாமல் அவனிடம் பரலோக ராஜ்ஜியத்தின் திறவுகோலை வழங்கியது கடவுள் செய்யக் கூடியதா? இயேசு கடவுளாக இருக்க முடியாது என்பதை இதிலிருந்து ஐயமற அறியலாம்.

Source: http://www.onlinepj.com/book/mahana11.htm



1. பேதுருவை தயார்படுத்திய இயேசு:

இயேசு தன் ஊழிய ஆரம்ப காலத்திலிருந்தே பேதுருவையும், யோவானையும், அவன் சகோதரன் யாக்கோபையும் பல முக்கியமான சந்தர்பங்களில் தன்னோடு கூட அழைத்துச் சென்றார். அற்புதங்கள் செய்யும் போது, இவர்களை தன்னோடு அழைத்துச்சென்றார்.

a) இயேசு பேதுருவை தன் சீடனாக அழைக்கும்போதே "கல்" என்ற பொருள் வரும் "கேபா" என்ற பெயரை வைத்தார். பெயருக்கு ஏற்றார் போல் எது நடந்தாலும் அசையாமல் உறுதியாய் இருக்கும்படி இயேசு பெயரை மாற்றுகிறார்.

யோவான் 1:42 பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து, நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம்.



b) ஒரு ஜெப ஆலைய தலைவனின் மகள் மரித்த செய்தி கேட்டவுடன் , இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் அழைத்துக்கொண்டு சென்று அற்புதம் செய்தார் (மாற்கு 5:35-42, லூக்கா 8:49-56). இந்த மூவர் தான் இயேசுவிற்கு பிறகு எருசலேம் சபைக்கு தலைமை தாங்கி வந்தனர்.

c) ஒரு முறை இயேசு இந்த மூவரை ஒரு உயர்ந்த மலைக்கு அழைத்துக்கொண்டுச் சென்று அங்கு அவர்கள் முன்பு "மறுரூபமானார்". மற்றும் எலியாயும், மோசேயும் இயேசுவோடு பேசியதை இவர்கள் கண்டார்கள். மட்டுமல்லாமல், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி "இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்கு செவிகொடுங்கள்" என்று சொல்லிற்று. (மாற்கு 9:2-10 , மத்தேயு 17:1-9, லூக்கா 9:28-36).

இந்த நிகழ்ச்சியை குறித்து பேதுரு சபைக்கு கடிதம் எழுதும் போது கூட, நாங்கள் கட்டுக்கதைகளை கேட்டு இப்படி ஊழியம் செய்யவில்லை, இயேசுவின் மகிமையை எங்கள் கண்களால் கண்டதால் பேசுகிறோம் என்று ஆணித்தரமாக எழுதுகிறார் (2 பேதுரு 1:16-18).

நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம். இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக்கேட்டோம் (2 பேதுரு 1:16-18)



இப்படியாக இயேசு தன் மகிமையை இந்த மூன்று முன்னனி சீடர்களுக்கு காட்டினார்.

d) எல்லா சீடர்களுக்கும் பிரதிநிதியாக பேதுரு இருக்கவேண்டும் என்று இயேசு கருதினார் . சில சயமங்களில் எல்லா சீடர்களிடம் கேள்விகள் கேட்பதற்கு பதிலாக, பேதுருவிடம் இயேசு கேள்விகள் கேட்கிறார்.

பின்பு, அவர் சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி , நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா? (மத்தேயு 26:40) & (மாற்கு 14:37)

அப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து, நாம் பஸ்காவைப் புசிக்கும்படிக்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம் பண்ணுங்கள் என்றார்(லூக்கா 22:8)

தேவ தூதனும் அப்படியே சொன்னான்:

நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும், பேதுருவினிடத்திற்கும் போய்,உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச்சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச்சொல்லுங்கள் என்றான். (மாற்கு 16:7)



e) கெத்சமனே தோட்டத்தில் கூட இந்த மூன்று சீடர்கள் மிகவும் நெருங்கி இருக்கவேண்டும் என்று இயேசு விரும்பி, மற்ற சீடர்களை தூரமாக இருக்கவைத்து, இந்த மூன்று சீடர்களை மட்டும் தன்னோடு வரும்படி, ஜெபிக்கும்படி இயேசு சொல்லியுள்ளார்.

அப்பொழுது, இயேசு அவர்களோடே கெத்சமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீஷர்களை நோக்கி: நான் அங்கே போய் ஜெபம்பண்ணுமளவும் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; பேதுருவையும், செபதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார். (மத்தேயு 26:36-37)



f) கடைசியாக தன் சபையை மேய்க்கும் பொறுப்பை பேதுருவிடம் இயேசு தருகிறார்

அவர்கள் போஜனம்பண்ணின பின்பு, இயேசு சீமோன் பேதுருவை நோக்கி; யோனாவின்குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார்.அதற்கு அவன், ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர், என்ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார். மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி, யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னைநேசிக்கிறாயா என்றார், என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக்கேட்டபடியினாலே பேதுரு துக்கப்பட்டு, ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான்உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு, என் ஆடுகளை மேய்ப்பாயாகஎன்றார்(யோவான் 21:15, 17).



இப்படியாக இயேசு பேதுருவை பல முக்கியமான சமயங்களில் தன்னோடு வைத்துக்கொண்டு, பேதுருவை தயார்படுத்தினார். பேதுருவை மட்டுமல்ல யோவானையும், யாக்கோபையும் அப்படியே தயார் படுத்தினார், ஆனால், பேதுருவிடம் அதிக பொறுப்பை ஒப்படைத்தார்.

ஆனால், பிஜே அவர்கள் இதைப்பற்றியெல்லாம் ஒன்றும் தெரிந்துக்கொள்ளாமல், ஒரு நிகழ்ச்சியில் இயேசு பேதுருவை கடிந்துக்கொண்டதை மிகப்பெரிய குற்றமாக பாவித்து, பேதுரு தலைவன் பொறுப்பிற்கு தகுதியானவன் அல்ல என்று ஆதாரம் இல்லாமல் எழுதுகிறார். தவறே செய்யாதவன் தலைவன் இல்லை, தவறுகளை திருத்திக்கொள்பவன் தான் தலைவன் ஆவான்.

இயேசு பேதுருவை தலைவனாக மாற்றியது மட்டுமல்ல, ஒரு தலைவனுக்கு தேவையான குணங்கள் இயற்கையாக பேதுருவிடமும் இருந்தது, ஒரு துடிப்புள்ள தலைவனாக பேதுரு செயல்பட்டார், துன்ப நேரங்களில் முன் வரிசையில் நின்றார் இந்த பேதுரு.

பேதுருவின் தலைமைத்துவ குணங்கள் என்னவென்று சுருக்கமாக காணலாம்


a) மற்ற சீடர்களின் பிரதிநிதியாக பேதுரு தானே முன்வந்து பேசியுள்ளார்.

ஒரு தலைவனுக்கு இருக்கவேண்டிய குணங்களில் ஒன்று தன் நண்பர்களுக்காகவோ, தன் கூட இருப்பவர்களுக்காகவோ வாய்ப்பு கிடைக்கும் போது முதலாவது பேசி விவரங்களை தெரிந்துக்கொள்வது. இதை பேதுரு செய்துள்ளார். இயேசுவோடு 12 பேர் இருந்தாலும், அவர்களில் பல சந்தர்பங்களில் பேதுரு மற்றவர்களுக்காக பேசியுள்ளார்.

அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இந்த உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்றான். (மத்தேயு 15:15)

அப்பொழுது பேதுரு அவரை நோக்கி, இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே, என்று சொல்லத்தொடங்கினான். (மாற்கு 10:28)



இயேசு பொதுவாக எல்லா சீடர்களிடமும் கேட்கும் கேள்விகளுக்கு, பேதுரு தானே முந்திக்கொண்டு பதில் அளித்தார்.


அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். (மத்தேயு 16:15-16)



b) இயேசுவின் மீது திடமான நம்பிக்கை உள்ளவர் பேதுரு:

இயேசு ஒரு முறை "தன் மாம்சம் போஜனம் என்றும், தன் இரத்தம் பானமாக இருக்கிறது என்றும், இதை புசித்து, பானம் பண்ணுகிறவன்" என்றேன்றும் பிழைப்பான் என்று சொல்லும் போது, இது கடினமான உபதேசம் என்றுச் சொல்லி பல சீடர்கள் பின்வாங்கிப்போனார்கள், அப்போது இயேசு என்னை விட்டு போக மனதாக இருக்கிறீர்களா? என்று எல்லாரையும் கேட்டபோது, பேதுரு "ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே, நாங்கள் எங்கே போவோம், நீர் கிறிஸ்து" என்று அறிக்கையிட்டார். பல சீடர்கள் முறுமுறுக்கும் போது கூட,பேதுரு தன் நம்பிக்கையை வெளிப்படுத்தினார், மட்டுமல்ல, எல்லா சீடர்களுக்கு பதிலாக தானே பேசினார்.

அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள். அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார். சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான். (யோவான் 6:66-69)



c) விசுவாச வீரர் பேதுரு:

ஒரு முறை சீடர்கள் படகில் செல்லும் போது, காற்று பலமாக அடிக்கும் நேரத்தில், இயேசு தண்ணீரில் நடந்து அவர்களிடத்தில் வரும்போது, நீர் இயேசுவானால் நானும் தண்ணீரில் நடக்கட்டும் என்று தைரியமாக சொல்லி, இயேசுவின் அனுமதி பெற்று தண்ணீரில் நடந்தவர் இந்த பேதுரு. அப்படி நடந்து வரும் போது, காற்றையும், அலைகளையும் கண்டு பயந்து மூழ்கும் போது, இயேசு பேதுருவை பிடித்து தூக்கி எடுத்து மறுபடியும் இருவரும் படகு வரை தண்ணீரில் நடந்து வந்தது, ஒரு சாதாரண மனிதனான பேதுருவின் வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவம் ஆகும்.

பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக்கட்டளையிடும் என்றான். அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக கடலின்மேல் நடந்தான். காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான். உடனே இயேசு கையை நீட்டி அவனைப்பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். அவர்கள் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது. (மத்தேயு 14: 28-32)



பேதுரு தண்ணீரில் நடந்தாலும், பிறகு சந்தேகப்பட்டு மூழ்கினார் இல்லையா? என்று கேட்கலாம். ஆனால், இயேசுவின் வார்த்தைகளை நம்பி தண்ணீரில் முதல் அடி எடுத்து வைப்பதற்கு எவ்வளவு அதிக விசுவாசம் வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் .

d) பேதுருவின் அதிக அன்பு, இயேசுவின் வருகையை புரிந்துக்கொள்ள தடையாக இருந்தது:

பேதுரு மற்ற சீடர்கள் போல இயேசுவின் மீது அதிக அன்பு வைத்து இருந்தார், இன்னும் சொல்லப்போனால, அவர்களை காட்டிலும் அதிகமாகவே அன்பு வைத்து இருந்தார், பேதுரு இயேசுவை "மேசியாவாகிய கிறிஸ்து" என்று நம்பியிருந்தார், ஆனால், அந்த மேசிய எப்படி மக்களுக்கு விடுதலையை கொடுப்பார் என்பதை அறிந்துக்கொள்ள வில்லை. அதனால், தான் இயேசு தன் மரணம், பாடுகளைப் பற்றி விவரிக்கும் போது, பேதுரு புரிந்துக்கொள்ளாமல், இயேசுவை தனியாக அழைத்து இப்படி உமக்கு நடக்ககூடாது என்று கடிந்துக்கொண்டார்.

இயேசுவின் மீதுள்ள அதிகமான அன்பு அவரை இப்படி பேசச்சொல்லியது, நாம் நேசிக்கும் நபர்களுக்கு ஒரு ஆபத்து வரும் என்று தெரிந்தால், நாம் என்ன செய்வோம்? அப்படியே ஆகட்டும் என்று சொல்வோமா? இல்லை அல்லவா? அது போலவே, உங்களுக்கு சிலுவை பாடு வேண்டாம், மரணம் வேண்டாம், உயிர்த்தெழுதலும் வேண்டாம் என்று அறியாமையினால் இயேசுவிடம் சொல்லும் போது, இயேசு பேதுருவை கடிந்துக்கொள்கிறார்.

சிலுவை மரணம் வேண்டாமென்றும், உயிர்த்தெழுதல் வேண்டாமென்றும் சொன்ன பேதுருவைப் பார்த்து, இயேசு "பின்னாகப்போ சாத்தானே, நீ தேவனுக்கு ஏற்றவைகளை சிந்திக்காமல், மனிதருக்கு ஏற்றதை சிந்திக்கிறாய்" என்று கடிந்துக்கொள்கிறார்.

அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான். அவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார். (மத்தேயு 16: 21-23)



ஆனால், பிஜே அவர்கள் இயேசு ஒரு முறை பேதுருவை கடிந்துக்கொண்டதை பெரிதுபடுத்தி "பேதுரு தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்ள தகுதியானவர் இல்லை" என்று முடிவு செய்துவிட்டார்.

நாம் நம் பிள்ளைகளை கடிந்துக்கொள்வதில்லையா? ஒரு ஆசிரியர் தன் மாணவனை திட்டுவதில்லையா? நீங்கள் உங்கள் ஆசிரியரிடம் ஒரு அடி, அல்லது திட்டு வாங்கவில்லையா? அப்படி வாங்கினால், நாம் வாழ்க்கையில் விளங்காமல் போய்விடுவோமா? இல்லை பிஜே அவர்களே இல்லை, இன்று பெரிய பதவிகளில் இருக்கும் நபர்களை கேட்டுப்பாருங்கள், அவர்கள் எத்தனை முறை பெற்றோர்களால், ஆசிரியர்களால் கடிந்துக்கொள்ளப்பட்டார்கள் என்றுச் சொல்வார்கள். அவர்கள் வகுப்பில் பட்ட அந்த அவமானமே அவர்களை எப்படி நல்ல நிலைக்கு கொண்டுவந்தது என்று பெருமையாக சொல்லி இன்று சந்தோஷப்படுவார்கள். ஆனால், "இயேசு சிலுவையில் மரிக்கவில்லை, உயிர்த்தெழவில்லை" என்று ஓயாமல் 1400 ஆண்டுகளாக சொல்லிக்கொண்டு இருக்கும் இஸ்லாமியர்களை இயேசு என்ன சொல்லிக்கொண்டு இருப்பார் என்று சிந்தித்துப் பாருங்கள்.

எனவே, ஒரு முறை இயேசு பேதுருவை கடிந்துக்கொண்டது ஒன்றும் பெரிய தவறில்லை.

e) இயேசுவை பாதுகாப்பதாக நினைத்து, வாளை எடுத்த பேதுரு:

இயேசுவிற்கு ஒரு ஆபத்து என்று வரும்போது, யுதர்கள் சிப்பாய்களோடு வந்து இயேசுவை கைது செய்யும் போது, வாளை எடுத்து ஒரு சிப்பாயின் காதை வெட்டியவர், இந்த பேதுரு. இவர் செய்தது தவறு என்று இயேசு சொன்னது உண்மையென்றாலும், 12 சீடர்கள் இருக்கும் போது, தன் தலைவனுக்கு ஒரு தீங்கு வரும் போது அதை எதிர்த்து நின்ற இந்த பேதுருவை இயேசு தன் சபைக்கு தலைமை தாங்க நியமித்தது ஒன்றும் ஆச்சரியமில்லையே!

அப்பொழுது சீமோன்பேதுரு, தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்; அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று பெயர். அப்பொழுது இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தை உறையிலேபோடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ என்றார். (யோவான் 18:10-11)



இங்கு நான் பேதுரு செய்தது சரியானது என்று சொல்லவில்லை, ஆனால், உலகபிரகாரமாக பார்க்கும் போது தன் குருவிற்கு வரும் ஆப‌த்தை கண்டு பேதுருவினால் சும்மா இருக்கமுடியவில்லை என்று சொல்லவந்தேன்.

f) இயேசுவிற்கு என்ன நடக்கும் என்று அறிய ஆவலோடு நீதிமன்றம் வரை சென்றவர் இந்த பேதுரு:

சீமோன்பேதுருவும் வேறொருசீஷனும் இயேசுவுக்குப் பின்சென்றார்கள். அந்தச் சீஷன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்ததினால், இயேசுவுடனேகூடப் பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் பிரவேசித்தான். பேதுரு வாசலருகே வெளியே நின்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்த மற்றச் சீஷன் வெளியே வந்து, வாசல் காக்கிறவர்களுடனே பேசி பேதுருவை உள்ளே அழைத்துக்கொண்டுபோனான். (யோவான் 18:15-16)

பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைவரைக்கும் வந்து, உள்ளே பிரவேசித்து, முடிவைப்பார்க்கும்படி சேவகரோடே உட்கார்ந்தான். (மத்தேயு 26:58)



இயேசுவை யூத ஆசாரியர்கள் பிடித்துச் சென்ற போது, பேதுருவும் மற்ற சீடர்களும் ஓடிச்சென்றவர்கள் தான், ஆனால், பேதுருவும் இன்னும் ஒரு சீடனும் இயேசுவை கொண்டுச்சென்ற பிரதான ஆசாரியன் வீடுவரைக்கு சென்று முடிவு என்ன ஆகிறது என்று பார்க்க சென்றார்கள்.

மற்ற 9 பேர் ஓடிப்போனார்கள். இந்தச் செயல் மற்ற சீடர்களை விட பேதுருவும், இன்னொரு சீடனும் சிறிது முக்கியமானவர்களாக பிஜே அவர்களுக்கு தெரியவில்லையா? ஒரு வேளை இப்படி இயேசுவை விட்டு ஓடிப்போன 9 பேர் தான் தலைமை பொறுப்பிற்கு தகுதியானவர்கள் என்று பிஜே அவர்கள் கருதிவிட்டாரோ? இவர்களைத் தான் பிஜே அவர்கள் தன் புத்தகத்தில் பேதுருவை விட சிறந்த்வர்கள் என்று குறிப்பிடுகிறாரோ?

அப்படியானால், பேதுரு ஏன் இயேசுவை அங்கு மறுதலித்தார்? என்று கேட்கலாம். பேதுரு ஒரு மகான் இல்லை அவர் ஒரு மனிதர் தான். அவர் ஒரு மீனவர் தான். தன் குருவிற்கு ஒரு ஆபத்து என்று வரும் போது கூட, பயந்துக்கொண்டு தான் அவர் பிரதான ஆசாரியன் வீடு வரைக்கும் வந்து காத்துக்கொண்டு இருக்கிறார். தன்னை திடீரென்று ஒரு பெண் கண்டுபிடித்து நீயும் இயேசுவோடு இருந்தவன் என்று சொல்லும் போது, இயேசுவை மறுதலித்தார். இது தவறு தான், எப்படியாவது தப்பித்து போகவேண்டும் என்ற எண்ணத்தில் பேதுரு இந்த இடத்தில் "பொய் சொல்கிறார் ". ஆனால், மறுபடியும் அதை நினைத்து மனம் கசந்து அழுது திருந்திவிட்டார் இல்லையா? அது தான் முக்கியம்.

எந்த வாய் இயேசு எனக்கு தெரியாது என்று சொன்னதோ, அதே வாய் அதே எருசலேமில் பல ஆயிரம் மக்களுக்கு இயேசுவைப்பற்றி பிரசங்கம் செய்தது, முதல் பிரசங்கத்திலேயே 3000 பேர் இயேசுவை ஏற்றுக்கொண்டதாக அப்போஸ்தலர் நடபடிகள் சொல்கின்றது.

பிஜே அவர்களே, நீங்கள் பேதுரு எப்படி விழுந்தார் என்று பார்க்கிறீர்கள், ஆனால்,இயேசு பேதுரு விழுந்து எழுந்த பிறகு என்ன செய்யப்போகிறார் என்று பார்த்தார். நீ குணப்பட்ட பின்பு என் மந்தையை மேய்ப்பாயாக என்று இயேசு பேதுருவின் எதிர்காலத்தைப் பற்றி சொல்கிறார்.

g) சபை பொறுப்பை பேதுருவின் கையில் கொடுத்த இயேசு:

பேதுரு சுருசுருப்பானவர், மற்ற சீடர்களை விட சிறிது அதிக பிரசங்கித்தனம் உள்ளவர் (முந்திரிக்கொட்டை என்று சொல்வோமே அதுபோல), விசுவாசத்தில் தீரர், தண்ணீரில் நடந்தவர், தன் குருவை காப்பாற்ற முன்வந்தவர், அதே நேரத்தில் அறியாமையினால் பேசும் போது, இயேசுவால் கடிந்துக்கொள்ளப்பட்டவர். இயேசுவோடு பல அற்புதங்கள் நடைபெறும் போது, அவரோடு இருந்தவர்.

நீங்கள் என்னை யார் என்று நினைக்கிறீர்கள் என்று 12 சீடர்களை இயேசு கேட்டபோது, "நீர் ஜீவனுடைய தேவனுடைய குமாரன், கிறிஸ்து" என்று அறிக்கையிட்டவர் பேதுரு. இப்படிப்பட்டவரிடம் பரலோகத்தின் திறவுகோலை இயேசு கொடுப்பேன், என்று சொன்னது ஆச்சரியமில்லையே.

h) முதல் சுவிசேஷ கூட்டத்தில் பேசிய சுவிசேஷகர் பேதுரு:

இயேசு பரமேறிய பிறகு பெந்தகோஸ்தே நாளன்று, பல ஆயிரம் பேர் கூடி இருக்கும்போது, தான் பொய் சொன்ன அதே மக்களைப் பார்த்து, தைரியமாக எழுந்து நின்று, முதல் சுவிசேஷ கூட்டத்தில் பேசி, 3000 பேரை தேவனின் மந்தையில் சேர்த்த பெருமைக்கு சொந்தக்காரர் இந்த பேதுரு அல்லாமல் வேறு யார் இருக்கமுடியும்?


அப் 2:14. அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய், யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.

அப் 2:23. அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.

அப் 2:24. தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.

அப் 2:41. அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.



இப்பொழுது சொல்லுங்கள், பேதுரு ஒரு கோழையா? வீரனா? மக்கள் குழப்பத்தில் இருக்கும் போது, எழுந்து நின்று அவர்கள் குழப்பதை தீர்த்தார் இந்த பேதுரு. இது ஒரு தலைவனுக்கு இருக்கவேண்டிய தகுதியா இல்லையா? இவைகள் உங்களுக்கு தெரியவில்லையா பிஜே அவர்களே?

i) அரசர்களுக்கு, ஆசாரியர்களுக்கு முன்பாக‌ தைரியமாக சாட்சி கொடுத்த பேதுரு:

பேதுரு யோவானோடு சேர்ந்து தேவாலயத்திற்கு சென்ற போது அங்கு ஒரு முடவன் நடக்க இயேசுவின் பெயரிலே அற்புதம் செய்து, பிறகு அதே தேவாலயத்தில் மிகவும் நீண்ட பிரசங்கம் செய்தார் ( அப்போஸ்தலர் நடபடிகள் அதிகாரங்கள் 3, 4).

யூதாஸுக்கு பதிலாக இயேசுவை கண்களால் கண்டவர் ஒருவர் சாட்சியாக வேண்டும் என்றுச் சொல்லி ஒரு சீடனை 11 பேரோடு சேர்த்துக்கொள்ள முயற்சி எடுத்தவர் இந்த பேதுரு (அப் 1:15-1:26 வரை).

பேதுருவையும் யோவானையும் ஆசாரியர்கள் கைது செய்து, விசாரிக்கும் போது பேதுரு தன் நம்பிக்கையை குறித்து மிகவும் தைரியமாக சாட்சி சொன்னார். இவரது தைரியத்தை குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ஒரு பெண்ணுக்கு பயந்து பொய் சொன்ன அதே பேதுரு, இங்கு அரசர்களுக்கும், நீதிபதிகளுக்கும், ஆசாரியர்களுக்கும் முன் நின்று தைரியமாக சாட்சி பகருகின்றார். "ஆமாம், இயேசு உயிர்த்தெழுந்தார் " என்று சாட்சி சொல்கிறார். இதை தைரியம் என்று சொல்லாமல் வேறு என்னவென்றுச் சொல்வது. இதை பிஜே அவர்கள் கவனிக்கவில்லையோ?

அப் 4:13. பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்.14. சொஸ்தமாக்கப்ட்ட மனுஷனன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்பேச அவர்களுக்கு இடமில்லாதிருந்தது.

இன்னொரு முறை, ஆசாரியர்கள் இனி இயேசுவைப்பற்றி பேசக்கூடாது என்று கட்டளையிட்டபோது, பயப்படாமல், உனக்கு கீழ்படிவதை பார்க்கிலும் தேவனுக்கு கீழ்படிவது நல்லது என்று தைரியமாக பேசினார் இந்த பேதுரு.

அப் 5: 28. நீங்கள் அந்த நாமத்தைக்குறித்துப் போதகம்பண்ணக்கூடாதென்று நாங்கள் உங்களுக்கு உறுதியாய்க் கட்டளையிடவில்லையா. அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்கள் போதகத்தினாலே நிரப்பி, அந்த மனுஷனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவேண்டுமென்றிருக்கிறீர்கள் என்று சொன்னான்.29. அதற்குப் பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும், மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.30. நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி,31. இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார்.32. இந்தச் சங்கதிகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம் . தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவியும் சாட்சி என்றார்கள்.



எருசலேமில் மாத்திரம் அல்லாமல், சமாரியாவிற்கும் சென்று ஊழியம் செய்தார். பேதுரு மிஷனரி ஊழியராக லித்தா, யோப்பா நாடுகளுக்கும் சென்று வந்தார் (அப் 9, 10 அதிகாரங்கள் ). இன்னும் அவரைப் பற்றி சொல்லிக்கொண்டு போகலாம்.

கல்லை மாணிக்கம் ஆக்கும் இயேசு: 

பைபிளை பொருத்தமட்டில், ஒரு மனிதன் பழைய ஏற்பாட்டு நபராக இருந்தாலும் சரி, புதிய ஏற்பாட்டு நபராக இருந்தாலும் சரி, அவனை தேவன் தெரிந்தெடுக்கும் போது, அவன் பூரண குண லட்சணங்கள் உடையவனாக, தகுதி உடையவனாக இருப்பதில்லை, தேவன் அவனை அழைத்து தன் வேலைக்காக அவனை தகுதிப்படுத்தி, கற்றுக்கொடுக்கவேண்டிய பாடங்களை கற்றுக்கொடுத்து, பயன்படுத்திக்கொள்கிறார். இதே போலத்தான் பேதுருவும், கோழையாகவும், சிந்திக்காமல் சீக்கிரத்தில் பேசுகிறவராகவும் இருந்தார், இயேசுவை மறுதலித்தார், இருந்தாலும் அவரையே இயேசு பயன்படுத்திக்கொண்டார். இதோ இன்று நம்முன் "கிறிஸ்தவம் இயேசுவின் தெரிந்தெடுப்பு மிகச்சரியானது என்று சாட்சி பகருகின்றது". இதற்கு தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுத்த பேதுருகூட ஒரு காரணம் என்றுச் சொன்னால், அது மிகையாகாது. 

முடிவுரை:

கடைசியாக, பிஜே அவர்களே உங்கள் கணிப்பு தவறு, இயேசுவின் தெரிந்தெடுப்பு தான் மிகச்சரியானது என்பதை இதுவரை நாம் பார்த்த விவரங்களிலிருந்து அறிந்துக்கொள்ளலாம்.

பிஜே அவர்களுக்கு ஒரு சவால்: உங்கள் கணிப்பு சரியானது என்றும், பேதுருவைத் தவிர மற்ற சீடர்கள் 9 பேர் (உங்கள் கணக்குப்படி) தலைமை பொறுப்பிற்கு தகுதியானவர்கள் என்று நிருபியுங்கள். பேதுரு தான் மிகச்சரியானவர் என்பதை நான் விவரித்தேன், என் பங்கு முடிந்துவிட்டது, உங்கள் பங்கு உள்ளது அதை நிருபித்து, உங்கள் நிலையை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

இயேசு பேதுருவை தலைவனாக மாற்றுகிறேன் என்றுச் சொல்லி, மற்ற சீடர்களை குறைவாக மதிப்பிடவில்லை, இதற்கு பதிலாக "உங்களில் தலைவனாக இருக்கவிரும்புகிறவன் மற்றவர்களுக்கு சேவை செய்யவேண்டும் என்று சொல்லி எச்சரித்தார் ". இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக தானே சீடர்களின் கால்களை கழுவினார். தன்னை ஒரு நல்ல எடுத்துக்காட்டாக விட்டுச்சென்றார் (இயேசு(கடவுள்) சீடர்களின் கால்களை கழுவலாமா? என்ற தலைப்பில் பிஜே அவர்கள் முன்வைத்த ஒரு கேள்விக்கு என் பதிலை மற்றுமொரு கட்டுரையில் விவரிக்கிறேன்.)

மற்ற சீடர்களும் பேதுருவின் தலைமையை மிகவும் ஆனந்தமாக ஏற்றுக்கொண்டு அவரோடு கூட சேர்ந்து ஊழியம் செய்தார்கள்.

இன்று இஸ்லாமுக்கு சவால் விட்டு வீரநடை போட்டுக்கொண்டு இருக்கும் கிறிஸ்தவத்தின் அஸ்திபாரம் இயேசு என்றுச் சொன்னால், அதன் மிது தலை நிமிர்ந்து நிற்கும் தூண்கள், அவரது சீடர்களாகிய அப்போஸ்தலர்கள் ஆவார்கள். அவர்களில் ஒரு தூண் தான் பேதுரு என்பவர். கிறிஸ்தவம் இன்று ஒரு ஆலமரம் போல மிகப்பெரிய மரமாகி எல்லாருக்கும் நிழல்கொடுத்துக்கொண்டு இருக்கிறதென்றால், இதற்கு முதல் காரணம், அன்று இயேசு எடுத்த சரியான முடிவு தான் என்பதை தாழ்மையுடம் இஸ்லாமிய உலகிற்கு முக்கியமாக பிஜே அவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்.

இதோடு பிஜே அவர்களின் "இயேசுவிற்கு மனிதர்களை மதிப்பிட தெரியவில்லை " என்ற தலைப்பிற்காக என் பதில்களை முடித்துக்கொண்டு, என் அடுத்த பதிலை சந்திக்கும் வரை கர்த்தருடைய கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக என்று கூறி முடிக்கிறேன்.



பிஜே அவர்களுக்கு ஈஸா குர்ஆனின் இதர பதில்கள்:

1. பி.ஜைனுல் ஆபிதீனும், திரித்துவமும் & பவுலும்: பதில்

2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்ஆன் பதில்

3. பி.ஜைனுல் ஆபிதீனும் பரிசுத்த ஆவியும் : ஈஸா குர்‍ஆன் பதில்

4. பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 1

5. பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 2

6. Answering - PJ: இயேசு நறுமணம் பூசிக்கொள்ள ஆசைப்படுவாரோ?

7. Answering PJ: "பின்னாகப் போ சாத்தானே" என்றார் - Part 1



Isa Koran Home Page Back - Answering PJ index Page
1