"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
"LIFE OF MUHAMMAD" SEMINAR - PART 3
முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பாகம் 1ஐ இங்கு படிக்கவும்.
முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பாகம் 2ஐ இங்கு படிக்கவும்.
இந்த கட்டுரையில் அதன் தொடர்ச்சியாக மூன்றாம் பாகத்தை காண்போம்.
எச்சரிப்பவராக முஹம்மது: "பிரச்சாரம் செய்தல், ஒடுக்கப்படுதல் மற்றும் பாதுகாக்கப்படுதல்"
[பிரச்சாரம் செய்தல், ஒடுக்கப்படுதல் மற்றும் பாதுகாக்கப்படுதல்: LoM p117-218, Tabari vol 6 p88-145, various Hadith]
முஹம்மது இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகள் வரை தனக்கு ஏற்பட்ட அனுபவத்திற்கு பிறகு, இஸ்லாமைப் பற்றி வெளிப்படையாக மக்காவின் மக்களுக்கு பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். அவர்கள் "ஓர் இறைவனை" வணங்கும் படி, தன்னை ஒரு உண்மையான அல்லாஹ்வின் நபி என்று நம்பும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அவர்களின் இதர தெய்வ நம்பிக்கையைப் பற்றி கடுமையாய் விமர்சித்தார்.
இந்த காலக்கட்டத்தில் முஹம்மது "எச்சரிக்கை" செய்பவராக மட்டுமே இருந்தார். மக்கள் தன் கொள்கை மீது நம்பிக்கை கொள்ளும் படிச் செய்ய, அவர்களை கட்டாயப்படுத்த அவருக்கு ஆற்றல் இல்லாமல் இருந்தது.
"வரவிருக்கும் பயங்கரமான அழிவைப் பற்றி எச்சரிக்கை செய்ய நான் வந்திருக்கிறேன்". "நான் உங்கள் அனைவரையும் ஒன்று கூட்டி, இறைவனின் தண்டனையைப் பற்றி எச்சரிக்கை செய்கிறேன்". Tabari vol 6, page 89, 92.
மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா? குர்ஆன் 10:99
மக்காவில் முஹம்மதுவின் வாழ்க்கை இயேசுவின் வாழ்க்கைக்கு ஒத்து இருந்தது.
முஹம்மது தன் செய்தியை உறுதியுடன் போதித்தார். அவர் நிந்தனைகளையும், அவமானங்களையும் பயமுறுத்தல்களையும் சந்தித்தார் மற்றும் சகித்தார். முஹம்மது மக்கா மக்களின் நம்பிக்கையை பரிகாசம் செய்தார் அதனால், மக்கா மக்கள் அவர் மீது கடுங்கோபம் கொண்டு கொதித்தெழுந்தனர். ஒரு குறிப்பிட்ட சமயத்தில், "தங்கள் நம்பிக்கையைப் பற்றி பரிகசித்து பேசுவதை நிறுத்திவிட்டால், உம்மை விட்டுவிடுகிறோம்" என்று அம்மக்கள் சொன்னார்கள், ஆனால், முஹம்மது மறுத்துவிட்டார்.
முஹம்மது மக்கா மக்களின் மத நம்பிக்கையை அவமானப்படுத்தியதாலும், வேறு ஒரு நம்பிக்கையை தங்களுக்கு போதித்ததாலும், அவர்கள் அவருக்கு எதிராக எழும்ப ஆரம்பித்தார்கள். முஹம்மதுவின் சித்தப்பா அபூ தலிப் அவருக்கு பாதுகாப்பு அளித்துக்கொண்டு வந்தார். இதன் காரணமாக, மக்கா மக்கள் உடனே அவரை கொல்லமுடியவில்லை.
"அபூ தலிப் உங்கள் சொந்தக்காரர் [முஹம்மது] எங்கள் தெய்வங்கள் பற்றி தவறாக பேசுகிறார், நம் மதத்தை பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறார். நம்முடைய கலாச்சாரத்தை ஏளனம் செய்கிறார் மற்றும் நம்முடைய முற்பிதாக்கள் வழிதவறியவர்கள் என்றுச் சொல்கிறார். அவர் எங்கள் மீதான தன் குற்றச்சாட்டுக்களை நிறுத்திக்கொள்ளும்படி செய்யும், அல்லது நாங்கள் அவருக்கு தகுந்த பதில் அளிக்க (ஒரு கை பார்க்கும் படி) எங்களுக்கு அனுமதி அளியும். நாங்கள் எப்படி அவருக்கு எதிராக இருக்கிறோமோ, அதே போல நீரும் இருக்கிறீர், உங்களுக்காக வேண்டுமானால் நாங்கள் அவரை பார்த்துக்கொள்கிறோம். Tabari, vol 6, pages 93, 94.
தன்னை பின்பற்றும் சிலரை முஹம்மது சம்பாதித்தார். மக்கா மக்கள் அவரை பின்பற்றுகிறவர்களை அடிக்கடி தாக்கி பேசினார்கள்.
"இஸ்லாமை ஏற்றுக்கொண்டு முஹம்மதுவின் சகாக்களாக இருந்தவர்களுக்கு எதிராக குரைஷி மக்கள் விரோதத்தை வளர்த்துக்கொண்டார்கள், அவர்களுக்கு எதிராக கலகஞ்செய்தார்கள்." Tabari vol 6, page 97.
தன்னை எதிர்த்த சிலரை முஹம்மது வெறுத்தார், "கேளுங்கள் குரைஷி மக்களே, முஹம்மதுவின் உயிர் தங்கியிருக்கும் இறைவனின் பெயரில் சொல்கிறேன், உங்களுக்கு நான் மரணத்தை தருவேன்" என்று முஹம்மது கூறினார். Tabari vol 6 page 102.
இஸ்லாமியர்களுக்கு ஒடுக்குதல் மிகவும் தீவிரமாக இருந்தது, அதனால் முஹம்மது தன்னை பின்பற்றுகிறவர்கள் சிலரை பாதுகாப்புக்காக அபிசீனியாவிற்கு அனுப்பிவிட்டார். முஸ்லீம்களுக்கு எதிராகவும் அவர்களின் இனத்திற்கு எதிராகவும் மக்கா மக்கள் மிகப்பெரிய புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்தார்கள். முஹம்மது தன் மார்க்கத்தை விட்டுவிட, மக்கா மக்கள் அவருக்கு இலஞ்சம் கொடுக்கவும் முயற்சித்தார்கள்.
இறைத்தூதருக்கு குரைஷி மக்கள் அதிகமதிகமான சொத்துக்களை கொடுப்பதாகவும், அதனால், மக்காவில் முஹம்மது மட்டுமே மிகப்பெரிய பணக்காரராக இருப்பார் என்றும் வாக்களித்தனர். அவருக்கு எத்தனை மனைவிகள் விருப்பமோ அத்தனை மனைவிகளை கொடுப்பதாகும், மற்றும் அவரது கட்டளைகளுக்கு கீழ்படிந்து இருப்பதாகும் வாக்களித்தனர்.
குரைஷி மக்கள் முஹம்மதுவிடம் இவ்விதமாக கூறினார்கள், "முஹம்மதுவே நீர் எங்கள் தெய்வங்கள் பற்றி ஏளனமாக பேசாமல் இருந்தால், குற்றப்படுத்தாமல் இருந்தால், இவைகளை நாங்கள் உங்களுக்குத் தருவோம். இப்படி நீர் செய்யவில்லையானால், இன்னொரு விஷயத்தையும் நாங்கள் சொல்கிறோம், இதனால் நீரும் நாங்களும் நன்மையடைவோம்". அது என்ன என்று அவர் கேட்டார். அதற்கு அவர்கள் "நீர் எங்கள் தெய்வங்களான அல் லத் மற்றும் அல் உஜ்ஜாவை ஒரு ஆண்டுகாலம் வணங்கவேண்டும், அதே போல நாங்கள் உங்கள் இறைவனை ஒரு ஆண்டுகாலம் வணங்குவோம்" என்றனர். Tabari, vol 6, pages 106, 107.
இதற்கு முஹம்மது ஒப்புக்கொள்ளவில்லை. அவர் தன் நிலையைவிட்டுவிடவோ, தன் நம்பிக்கையை விட்டுவிடவோ விரும்பவில்லை (பார்க்கவும் குர்ஆன் சூரா 109:1 லிருந்து 6 வரை). முஸ்லீம்களுக்கு செய்யப்பட்ட கொடுமைகள் உச்சியை எட்டியது, அவர்களுக்கு வாழ்வு மிகவும் கடினமாக இருந்தது.
ஏதாவது கேள்விகள் உண்டா?
முக்கிய அம்சம்: சாத்தானின் வசனங்கள் (THE SATANIC VERSES)
[சாத்தானின் வசனங்கள்: "Tabari's History", vol 6 p 107-113, "Kitab al-Tabaqat al-Kabir", pages 236-239, LoM p165-167, "The Life of Mahomet", Volume 2, pages 150-152, by W. Muir, quoting "Kitab al-Wakidi"]
அநேகங் கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள் - இயேசு, மத்தேயு 24:11
"And many false prophets will appear and deceive many people." Jesus, Matthew 24:11
அனேக இஸ்லாமியர்கள் இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி (சாத்தானின் வசனங்கள்) நடைபெறவில்லை என்றுச் சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் "சாத்தானின் வசனங்கள்" நிகழ்ச்சி பற்றிய விவரங்கள் ஆரம்பகால இஸ்லாமிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல, இந்த விவரங்கள் ஹதீஸ்கள் மற்றும் குர்ஆனில் உள்ள விவரங்களோடு ஒத்துப்போகிறது.
முஹம்மது தன்னை நம்புகிறவர்களின் துன்பங்களுக்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று விரும்பினார். அதே நேரத்தில் தன் ஊர் மக்களாகிய மக்காவினரோடு சமாதானமாக இருக்க விரும்பினார். இந்த பிரச்சனைகளுக்கு முடிவு கட்ட அல்லாஹ் ஒரு வெளிப்பாட்டை அனுப்புவார் என்று முஹம்மது நம்பினார்.
"இறைத்தூதர் தன் மக்களின் நலனில் அதிக அக்கரையுள்ளவராக இருந்தார் மற்றும் மக்காவினரோடு ஒற்றுமையடைந்து சமாதானமாக இருக்க விரும்பினார்..." Tabari vol 6, page 107, 108.
இந்த சந்தர்ப்பத்தை சாத்தான் பயன்படுத்திக்கொண்டு முஹம்மதுவின் வாயில் தன் வசனங்களை போட்டுவிட்டான். முஹம்மது சாத்தானின் வார்த்தைகளை அப்படியே அல்லாஹ்வின் வார்த்தையாக வெளிப்படுத்திவிட்டார் மற்றும் மக்காவினரின் தெய்வங்களுக்கு மரியாதையும் செய்ய அனுமதித்து விட்டார்.
குர்ஆன் சூரா 53:19-20 நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா? மற்றும் மூன்றாவதான "மனாத்"தையும் (கண்டீர்களா?) இவைகள் உயர பறப்பவைகள், இவர்களின் மத்தியஸ்தம் அங்கீகாரத்தோடு ஏற்றுக்கொள்ளப்படும்.
முஹம்மதுவின் வார்த்தைகளை மக்கா மக்கள் ஏற்றுக்கொண்டனர், ஏனென்றால், இவர் அவர்களின் தெய்வங்களை அங்கீகரித்தார்.
"குரைஷிகள் இதை கேட்டதும், மட்டில்லா மகிழ்ச்சி கொண்டனர், மற்றும் அவர் தங்கள் தெய்வங்கள் பற்றி சொன்ன விதம் அவர்களுக்கு அதிக சந்தோஷத்தை கொடுத்தது..." Tabari vol 6, page 108.
காபிரியேல் தூதன் முஹம்மதுவை கடிந்துக்கொண்டு அவரின் தவறை திருத்தினார். இதனால், முஹம்மது குர்ஆனில் இருந்த அந்த சாத்தானின் வசன பகுதிக்கு பதிலாக வேறு வசனத்தைச் சொன்னார், மறுபடியும் இது மக்காவினரின் மனதை வேதனைக்குள்ளாக்கியது. முஹமம்து தன் பாவத்திற்காக அதிகமாக வேதனையடைந்தார், ஆகையால், காபிரியேல் முஹம்மதுவிடம் "அல்லாஹ் உன் தவறை லேசாக எடுத்துக்கொண்டார்" என்றுச் சொன்னார், அதாவது சாத்தானின் பொய்யான வசனத்தை குர்ஆனோடு சேர்த்த முஹம்மதுவின் பாவத்தை அல்லாஹ் அவ்வளவு பெரிய பாவமாக கருதவில்லை. இதோடு நின்றுவிடாமல், முந்தைய நபிகளும் இதே போல சாத்தானால் தூண்டப்பட்டு, இதே பாவத்தை செய்தார்கள், அதாவது சாத்தானின் வசனத்தை இறைவனின் வசனமாகச் சொன்னார்கள் என்றும் அல்லாஹ் கூறினார்.
"முஹம்மதுவே நீர் செய்தது என்ன? நான் இறைவனிடமிருந்து கொண்டுவராத வசனத்தை நீர் சொல்லியிருக்கிறீர் மற்றும் உம்மிடம் சொல்லாத ஒன்றை சொன்னதாக சொல்லியுள்ளீர்". இதனால் இறைத்தூதர் மிகவும் வேதனையுற்றார் மற்றும் இறைவனுக்கு அதிகமாக பயந்தார். ஆனால், இறைவன் அவருக்கு வெளிப்பாட்டை அனுப்பினார், ஏனென்றால், அவர் மிகவும் கிருபையுள்ளவர், முஹம்மதுவை தேற்றினார் மற்றும் இந்த விஷயத்தை மிகப்பெரிய தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. மேலும், அவருக்கு முன்பிருந்த நபிகளும் அல்லது இறைத்தூதர்களும், முஹம்மது விரும்பியது போல விரும்பினார்கள், ஆனால், சாத்தான் தன் வார்த்தைகளை அவர்களின் வெளிப்பாடுகளில் புகுத்திவிட்டான், எப்படி முஹம்மதுவின் நாவில் போட்டானோ அது போல" என்று அல்லாஹ் முஹம்மதுவிற்கு அறிவித்தார். Tabari Vol 6, p109
பழைய ஏற்பாட்டின்படி, யாராவது ஒரு நபர் தேவனைவிட்டு வேறு தெய்வங்களை வணங்கும்படி செய்தால், அப்படிப்பட்டவர் கொல்லப்படவேண்டும் என்று கட்டளையுண்டு. யாராவது உண்மையான தேவன் சொல்லாத வசனத்தைச் சொன்னால், அவர் கொல்லப்படவேண்டும் உபாகமம் 13:1-5.
யேகோவா தேவன் இப்படிப்பட்ட பாவத்தை லேசாக எடுத்துக்கொள்ள மாட்டார். ஆனால், அல்லாஹ் இப்படிப்பட்ட பாவத்தை லேசாக எடுத்துக்கொண்டார். ஆகையால், யேகோவா தேவனும் அல்லாஹ்வும் ஒருவரே அல்ல. துரதிஷ்டவசமாக, சில கிறிஸ்தவர்கள், இஸ்லாமிய அல்லாஹ்வும், கிறிஸ்தவ தேவனும் அல்லது யேகோவா தேவனும் ஒருவரே என்றுச் சொல்கிறார்கள், ஆனால், உண்மையில் அது தவறாகும், இவ்விருவரும் ஒருவரல்ல.
சிந்திக்க ஆய்வு செய்ய சில கேள்விகள் (QUESTIONS FOR THOUGHT AND STUDY)
1) தேவன் எப்போதாவது இப்படிப்பட்ட மிகப்பெரிய பாவத்தை, லேசாக விட்டுவிடுவாரா?
2) குர்ஆன் ஒரு விசேஷித்த ஒன்றாக இருந்தால், ஏன் சாத்தானின் வசனத்திற்கும் அல்லாஹ்வின் வசனத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை குர்ஆனால் சொல்லமுடியவில்லை?
3) முஹம்மதுவினாலும், முஸ்லீம்களாலும் எது சாத்தானின் வசனம் எது அல்லாஹ்வின் வசனம் என்று வகைபிரிக்க தெரியாமல் இருக்கும்போது, குர்ஆனில் எவ்வளவு வசனங்கள் சாத்தானால் இறக்கப்பட்டு இருக்கும்?
4) குர்ஆன் என்பது பரிசுத்தமான இறைவனின் வேதமாக இருந்தால், முஹம்மதுவினால் உடனே அவ்வசனம் சாத்தானின் வசனம் என்று ஏன் கண்டுபிடிக்கமுடியவில்லை? ஏன் முஹம்மதுவை பின்பற்றினவர்களும் கண்டுபிடிக்கவில்லை? முஹம்மதுவினால், எது சாத்தானின் வசனம், எது அல்லாஹ்வின் வசனம் என்று வேறுபிரித்து சொல்லத் தெரியவில்லையானால், அவர் ஒரு உண்மையான நபி (தீர்க்கதரிசி) என்றுச் சொன்னால் ஏற்கக்கூடியதாக உள்ளதா?
பாகம் 3 முற்றிற்று
ஆங்கில மூலம்: "LIFE OF MUHAMMAD" SEMINAR
நான்காம் பாகம் அடுத்த கட்டுரையில்....
"கிறிஸ்தவர்களுக்காக" பக்கத்தை காண்க
© Answering Islam, 1999 - 2010. All rights reserved.