கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்ஆன் வசனங்கள்
அமெரிக்காவில் இஸ்லாமிய, யூத மற்றும் இதர மத நூல்களை தங்கள் சபைகளில் படிக்கப்போவதாக, அனேக சபைகள் அறிவித்து இருக்கின்றன. இஸ்லாமியர்களை நாங்கள் நேசிக்கிறோம் என்பதை எடுத்துக்காட்ட கிறிஸ்தவ சபைகள் இந்த முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்கான நாளாக ஜூன் 26ம் தேதி 2011 (ஞாயிற்றுக் கிழமை) ஒதுக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களை வரவேற்று அவர்கள் முன்னிலையில் தங்கள் கிறிஸ்தவ ஞாயிறு ஆராதனையில் குர்ஆன் வசனங்களை படிக்கப்போவதாக அறிவித்துள்ளன. அனேக சபைகள் இதற்கு அங்கீகாரம் அளித்துள்ளன. (Source)
இஸ்லாமியர்கள் தங்களுக்கு புரியாத மொழியில் குர்ஆனை படிக்கும் அதே அரபி மொழியில், இவர்கள் படித்து கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு குழப்பத்தை உண்டாக்குவார்களோ அல்லது புரியும் மொழியில் படிக்கப்போவார்களோ நமக்குத் தெரியாது.
கீழ்கண்ட குர்ஆன் புனித வசனங்களை, அந்த கிறிஸ்தவ சபைகளில் வாசிக்க வேண்டும் என்று நான் அவர்களை உற்சாகப்படுத்துகிறேன்: (அமெரிக்க கிறிஸ்தவ சபை போதகர்களே, நீங்கள் உங்கள் சபையில் படிக்கவேண்டும் என்று தெரிந்துக்கொண்ட குர்ஆன் வசனங்களில் இவ்வசனங்கள் உண்டா? அல்லது உங்களிடம் வரவிருக்கும் இஸ்லாமியர்களே படிக்கப்போகும் வசனங்களை அவர்களே தெரிவு செய்துள்ளார்களா?)
1) அல்லாஹ் உங்களை அழிப்பான்:
அருமை கிறிஸ்தவ போதகர்களே, கீழ்கண்ட குர்ஆன் வசனத்தின் படி, இயேசு தேவ குமாரன் என்றுச் சொல்பவர்களை அல்லாஹ் அழிப்பானாம். அந்த அழிக்கும் நபர்களில் நீங்களும் இருக்கிறீர்கள், இது உங்களுக்குத் தெரியுமா? இதனை தெரிந்துக்கொள்ளாமல், அவர்களை அழைத்து வந்து அவர்கள் முன்னிலையில் குர்ஆனை வாசிக்கப்போகிறீர்கள்? மட்டுமல்ல, இஸ்லாமியர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்க, அந்த குறிப்பிட்ட ஜூன் 26ம் தேதி ஆராதனையில் "இயேசு தேவ குமாரன்" என்ற சொற்றொடரை உங்களுக்கு தெரியாமலும் பயன்படுத்திவிட வேண்டாம். அப்படி நீங்கள் தெரியாமல் பயன்படுத்தினாலும், இஸ்லாமியர்கள் உங்களிடம் "எங்களை அழைத்து, குர்ஆனை படிக்கவைத்து, குர்ஆனுக்கு எதிரான வாசகங்களை எங்கள் முன்னிலையில் சொல்கிறீர்களா?" என்று கோபம் கொண்டாலும் கொள்(ல்)வார்கள் எனவே எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
குர்ஆன் 9:30
யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் எள்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?
2) குர்ஆனின் படி - நீங்கள் தங்கும் இடம் நரகம் தான்:
இயேசு இறைவன் என்று நம்பும் உங்களுக்கு "நரகம்" தான் தங்குமிடம் என்று கீழ்கண்ட குர்ஆன் வசனம் கூறுகிறது. குர்ஆன் வசனங்களை ஞாயிறு அன்று ஆராதனையில் படிக்க முடிவு எடுத்த கிறிஸ்தவ போதகரே! உங்களுக்கு நரகம் தான் கதியாம்...
குர்ஆன் 5:72
"நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்" என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிடடார்கள்;. ஆனால் மஸீஹ் கூறினார்; "இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்" என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.
3) கிறிஸ்தவ போதகர்களே, உங்கள் மார்க்கம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது:
கிறிஸ்தவ போதகர்களே, உங்கள் மார்க்கம் நீங்கள் படிக்கப்போகும் குர்ஆனின் படி ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஆனால் நீங்கள் அவர்களை அழைத்து அதே குர்ஆனை படிக்கிறீர்கள், உங்களுக்கு அதிகமான சகிப்புத் தன்மையுள்ளது.
குர்ஆன் 3:85
இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.
4) ஹலோ போதகர்களே! இஸ்லாமியர்கள் உங்களை பாதுகாவலர்களாக, நண்பர்களாக ஆக்கிக்கொள்ளக்கூடாது:
ஹலோ போதகர்களே! உங்களை பாதுகாவலர்களாக, நண்பர்களாக ஆக்கிக்கொள்ளக்கூடாது என்று இஸ்லாமியர்களின் இறைவன் அவர்களுக்கு கட்டளையிட்டுள்ளான்... இதனை படித்த பின்பும் அவர்கள் உங்களை நண்பர்களாக ஏற்றுக் கொள்வார்களா?....
குர்ஆன் 5:51
முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கினால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்தவர்தான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்.
5) அல்லாஹ்வின் பார்வையில் இஸ்லாமை ஏற்காதவர்கள் மிருகங்களை விட கேவலமானவர்கள்:
அல்லாஹ்வின் பார்வையில் இஸ்லாமை ஏற்காதவர்கள் மிருகங்களை விட கேவலமானவர்கள், குர்ஆனை படிக்க ஒரு நாளை நியமித்து பரிசுத்த சபையில் படிக்கப்போகும் கிறிஸ்தவர்களே... நீங்கள் எல்லாரும் கேவலமான மிருகங்கள் என்று குர்ஆன் சொல்கிறது. இந்த வசனத்தை ஒரு முறை சத்தத்தை உயர்த்தி படிப்பீர்களா?
குர்ஆன் 8:55
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிரினங்களில் மிகவும் கெட்டவர்கள், நிராகரிப்பவர்கள் தாம் - அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
6) அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் வேதக்காரர்கள் (கிறிஸ்தவர்கள்/யூதர்கள்):
அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள் வேதக்காரர்கள் (கிறிஸ்தவர்கள்/யூதர்கள்):, நீங்கள் நித்திய நித்திய காலமாக நரக நெருப்பில் இருப்பீர்களாம்... அல்லாஹ் சொல்கிறார்... இவ்வசனத்தை உங்கள் சபை விசுவாசிகள் அனைவரும் காது கொடுத்து கேட்கும் படி, படித்துக் காட்டுவீர்களா போதகர்களே...?
குர்ஆன் 98:6
நிச்சயமாக வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் - அதில் என்றென்றும் இருப்பார்கள் - இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள்.
7) உங்களுக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் அதிக வேதனை உண்டு:
அருமை கிறிஸ்தவ போதகர்களே, நீங்கள் இஸ்லாமை ஏற்கிறீர்களா? அல்லது நிராகரிக்கிறீர்களா? ஏற்பவராக இருந்தால், இப்போது நின்றுக்கொண்டு இருக்கும் சபையை விட்டுவிட்டு, ஏதாவது ஒரு மசூதிக்குள் சென்று இஸ்லாமிய போதகம் செய்ய ஆரம்பித்து விடுங்கள். நிராகரிப்பவராக இருந்தால், அல்லாஹ் சொல்கிறார், "உங்களுக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் அதிக வேதனை உண்டு" இதனை அங்கீகரிக்கிறீர்களா?
குர்ஆன் 3:56
எனவே, நிராகரிப்போரை இவ்வுலகிலும், மறுமையிலும் கடினமான வேதனையைக்கொண்டு வேதனை செய்வேன்;. அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்.
8) இஸ்லாமை நம்பாதவர்கள் ஜிஸ்யா என்னும் வரியை இஸ்லாமியர்களுக்கு கட்டும் வரை அவர்களிடம் போர் புரிய வேண்டும்:
கிறிஸ்தவர்களில் அல்லாஹ்வை நம்பாதவர்கள், இஸ்லாமை நம்பாதவர்கள் ஜிஸ்யா என்னும் வரியை இஸ்லாமியர்களுக்கு கட்டும் வரை அவர்களிடம் போர் புரிய வேண்டும் என்று இப்போது நீங்கள் படித்துகொண்டு இருக்கும் குர்ஆன் கூறுகிறது. அருமை போதகர்களே.. நீங்கள் எப்போது ஜிஸ்யா வரி கட்டப்போகிறீர்கள்?
குர்ஆன் 9:29
வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள்
அல்லாஹ்வின் மீதும்,
இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும்,
அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும்,
உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ.
அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.
கிறிஸ்தவ போதகர்களுக்கு:
நீங்கள் இஸ்லாமியர்களை நேசிக்கிறீர்கள் என்பதை காட்ட விரும்புகிறீர்கள். இஸ்லாமியர்களை மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் நாம் நேசிக்கவேண்டும். இது தான் இயேசுவின் போதனையும் கூட. ஆனால், இந்த அன்பை எப்படி காட்டவேண்டும்?
இஸ்லாமியர்களின் குர்ஆனை உங்கள் ஆலயங்களில் ஒரு நாள் படிப்பதினால் மட்டும், நீங்கள் அவர்களை நேசிக்கிறீர்கள் என்பதை அவர்கள் நம்பிவிடுவார்களா? இல்லை. அனேக இஸ்லாமிய நாடுகள் ஏழை நாடுகளாக இருக்கின்றன, இந்த நாடுகளில் வாழும் ஏழை இஸ்லாமியர்களுக்கு உங்களின் இந்த செயலினால் என்ன நன்மை உண்டாகப்போகிறது?
அதற்கு பதிலாக, ஏழை எளிய இஸ்லாமியர்களுக்கு உதவி செய்யலாமே. அவர்களின் பிள்ளைகளுக்கு படிப்பையும், வேலை வாய்ப்புக்களையும் உருவாக்கித் தரலாமே (தங்கள் பிள்ளைகள் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று இஸ்லாமியர்கள் விரும்பினால்).
"உலகத்தில் தீவிரவாதத்தை பரப்ப உதவியாக இருக்கும் ஒரு நூலை" தேவனுடைய பரிசுத்த ஆயலத்தில் நீங்கள் படிப்பதினால் தேவனையும் துக்கப்படுத்தியிருக்கிறீர்கள்? ஒவ்வொரு இஸ்லாமிய தீவிரவாதியும் ஒரு கையில் ஆயுதமும், இன்னொரு கையில் குர்ஆனையும் வைத்து அலைந்து திரிகிறான். உலக மகா தீவிரவாதி பின் லாடன் மரித்ததற்கு வருத்தம் தெரிவித்து, இஸ்லாமியர்கள் அவருக்காக தொழுகை நடத்துகிறார்கள்.
மனிதனை நாம் நேசிக்கவேண்டும் அவன் எந்த மதத்தை சார்ந்தவனாக இருந்தாலும் சரி, அதற்காக அவனது நூல்களையும் கொள்கைகளையும் உண்மைக்கு எதிராக இருக்கும் கோட்பாடுகளையும் பரிசுத்த ஆலயத்தில் படிப்பது என்பது துக்ககரமானது. ஒருவரை நேசிப்பதோடு மட்டும் நம் கடமை முடிந்துவிடுவதில்லை, அவர் நல்லவரா இல்லையா என்பதையும் பார்க்கவேண்டும், நம்முடைய தலையை அவன் கையில் கொடுத்து வம்பில் மாட்டிகொள்ளக்கூடாது?
நல்லெண்ணத்துடன் நீங்கள் செய்ய விரும்பிய இந்த செயலுக்கு நிகராக அதே நல்லெண்ணத்துக்காக இஸ்லாமிய மசூதிகளில் அவர்கள் பைபிளை படிக்க ஒரு நாளை ஒதுக்குவார்களா? பைபிளை தங்கள் மசூதிகளில் கொண்டுச் செல்ல அனுமதி அளிப்பார்களா? இப்படிப்பட்ட ஒரு உடன்பாடு உங்களுக்கு உண்டா என்று ஒரு முறையாவது நீங்கள் அவர்களிடம் கேட்டுள்ளீர்களா?
நாம் இஸ்லாமியர்களை நேசிக்கவேண்டும், ஆனால், இஸ்லாம் போன்ற மனித இனத்திற்கு கேடு விளைவிக்கும் மார்க்கத்தை படித்து தெரிந்துக்கொண்டு, அதன் உண்மை நிலையை உலகிற்கு எடுத்துக்காட்டவேண்டும்.
இன்னும் என்னென்ன நடக்குமோ.. நடக்கட்டும்... அதிகபடியான அடி நம்மீது விழும் வரை நாம் உணரமாட்டோம்...