சமீபத்தில் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதாவது "முஸ்லிம்கள் எப்படி ஒரு பக்தியுள்ள முஸ்லிம்களாக வாழ்கிறார்கள்?" மற்றும் அவர்கள் இஸ்லாமை விட்டு வெளியேறி மற்ற மார்க்கங்களை பின்பற்ற தயக்கம் காட்டுவது ஏன்? வேறுவகையாக சொல்ல வேண்டுமென்றால், முஸ்லிம்கள் இஸ்லாமை விட்டு வெளியேறுவது ஏன் ஒரு கடினமான செயலாக இருக்கிறது?
இதற்கு பல காரணங்கள் உள்ளன. அவைகளில் முக்கியமான மூன்று காரணங்களை இப்பொழுது காண்போம்.
1) இஸ்லாமிய கலாச்சாரம்:
முதலாவதாக, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக முஸ்லிம் நாடுகளில் பிறக்கிறார்கள், இதனால் பிறந்ததிலிருந்தே இஸ்லாம் என்பது அவர்களின் ரத்தத்தில் ஊறிய ஒன்றாக மாறிவிடுகிறது. இதன் அர்த்தம் என்னவென்றால், ஒருவன் முஸ்லிமாக வாழ்வதற்கு அவனுக்கு ஒரு வலுவான குடும்ப உறவுகளும் கலாச்சாரங்களும் உதவி புரிகின்றன. இதன்படி பார்த்தால் ஒரு முஸ்லிம் இஸ்லாமை விட்டு வெளியேறுகிறான் என்று சொன்னால், அதன் அர்த்தம், அவன் தன்னுடைய குடும்ப உறவுகளை ஒட்டுமொத்தமாக வெட்டிவிட்டு தன் கலாச்சாரத்தை விட்டுவிட்டு வெளியே வருகிறான் என்று அர்த்தம். இவைகளை தாண்டி ஒருவன் இஸ்லாமை விட்டு வெளிவருவது என்பது மிகவும் கடினமான காரியம் தான்.
2) வாழ்வின் அனைத்து பகுதிகளையும் பாதிக்கும் முடிவு:
இரண்டாவதாக, இஸ்லாமிய கலாச்சாரத்தில் ஒருவன் வாழ்ந்தால், அவனைச் சுற்றி முழுவதுமாக இஸ்லாம் தான் காணப்படும். உதாரணத்திற்கு, ஒரு வட்டவடிவமான ரொட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். அதை பல பாகங்களாக வெட்டுங்கள்.
இந்த ரொட்டியில் வெட்டப்பட்ட ஒவ்வொரு துண்டும் மனிதனின் ஒரு குறிப்பிட்ட பகுதியை குறிப்பதாக கருதிக் கொள்ளுங்கள்.
- அதில் ஒரு துண்டு அவனுடைய சம்பாத்தியத்தை குறிப்பதாக இருக்கும்.
- அடுத்த துண்டு குடும்பத்தை குறிப்பதாக இருக்கும்.
- இன்னொரு துண்டு மதத்தை குறிப்பதாக இருக்கும்.
- இன்னொரு துண்டு நண்பர்களை குறிப்பாக இருக்கும்.
- இன்னொரு துண்டு அவனுடைய கலாச்சாரத்தை குறிப்பதாக இருக்கும்.
இப்படி ஒவ்வொரு துண்டுக்கும் வாழ்க்கையின் ஒரு பகுதியை ஒப்பிடலாம்.
முஸ்லிமல்லாதவர்களுக்கும் மேற்கத்திய நாடுகளில் வசிப்பவர்களுக்கும் இந்த உதாரணம் சரியாக பொருந்தக் கூடியதாக இருக்கிறது. அதாவது ஒரு மேற்கத்திய மனிதன் தன் மதத்தை மாற்றிக் கொண்டான் என்று சொன்னால், அவனுடைய அந்த ஒரு ரொட்டியின் ஒரு பகுதியை அவன் மாற்றிக் கொள்கிறேன் என்று அர்த்தம். அவ்வளவுதான் மீதம் இருக்கின்ற இதர பகுதிகள் அதாவது சம்பாத்தியம், குடும்பம், நண்பர்கள், கலாச்சாரம் போன்றவைகள் மாறவே மாறாது. ஆனால் ஒரு முஸ்லிமுக்கு, முக்கியமாக இஸ்லாமிய நாடுகளில் வாழும் ஒரு முஸ்லிம் தன்னுடைய மதத்தை விட்டு வெளியேறுகிறான் என்று சொன்னால், அவன் ஒரு பகுதியை மாற்றிக் கொள்ளவில்லை, தன் வாழ்வின் எல்லாப் பகுதிகளையும் மாற்றிக் கொள்கிறான் என்று அர்த்தம். அதாவது, ஒரு முஸ்லிம் தன் மதத்தை மாற்றிக்கொண்டால் அது அவருடைய குடும்பத்தை பாதிக்கும், நண்பர்களை பாதிக்கும், சம்பாத்தியத்தை பாதிக்கும் மற்றும் கலாச்சாரத்தையும் பாதிக்கும். வேறு வகையாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு முஸ்லிம் தன் மதத்தை மாற்றிக் கொள்வது என்பது, "அவனைத் தொடும்" எல்லா வாழ்க்கை பகுதிகளையும் அவன் மாற்றிக் கொள்வதற்கு சமம் ஆகும். இதற்காக ஒரு முஸ்லிம் மிகப்பெரிய விலையை செலுத்த வேண்டி இருக்கும். இதனால் தான், முஸ்லிம்கள் சீக்கிரமாக தங்கள் மதத்தை மாற்றிக் கொள்வதில்லை.
3) இஸ்லாமின் கொடூரமான மரண தண்டனையும், வேறு பல வன்முறைகளும்:
மூன்றாவது முக்கியமான காரணம், இஸ்லாமை விட்டு வெளியேறுகிறவர்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் தண்டனை ஆகும். அதாவது ஒருவன் இஸ்லாமை விட்டு வேறு மார்க்கத்தை பின்பற்றினால் அவனுக்கு இஸ்லாமில் மரண தண்டனை கொடுக்கப்படும்.
இஸ்லாமிலிருந்து கிறிஸ்தவத்திற்கு மனம் மாறுகின்றவர்களுக்கு முஸ்லிம்கள் அதிக தொல்லைகளை கொடுக்கிறார்கள். எப்படியாவது அவர்கள் கிறிஸ்துவை விட்டு மறுபடியும் இஸ்லாமுக்கு திரும்பிவிட வேண்டும் என்பதற்காக அதிகப்படியாக கொடுமைப்படுத்துகிறார்கள். இந்த வன்கொடுமைகளையும் தாங்கிக்கொண்டால், அடுத்தபடியாக, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.
இப்படிப்பட்ட அனேக நிகழ்வுகளை நான் பார்த்திருக்கிறேன். அதாவது இஸ்லாமிலிருந்து கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பார்கள், வீட்டை விட்டு ஓடுவார்கள், தான் வாழ்ந்து வந்த சமுதாயத்தை விட்டு பாதுகாப்பைத் தேடி ஓடுவார்கள். தங்கள் உயிர் பிழைக்க ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு தாவிக் கொண்டே இருப்பார்கள். இவ்விதமான தொல்லைகளை சந்திக்க வேண்டி வரும் என்பதால் அநேகர் இஸ்லாமை விட்டு வெளியே வருவதில்லை.
இப்படிப்பட்ட பல பிரச்சனைகளை மக்கள் சந்திக்க வேண்டியிருந்தாலும், பரிசுத்த ஆவியானவர் அனைத்து இடையூறுகளையும் தகர்த்தெரிந்து மக்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டே இருக்கிறார். அதனால்தான் கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியானவர் இடைபடவேண்டும் என்று ஜெபிக்க வேண்டும். அதாவது தேவனின் மிகப்பெரிய பலத்தினால்தான் ஒருவர் இஸ்லாமிலிருந்து வெளியே வந்து கிறிஸ்துவை பின்பற்றமுடியும்.