ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?


2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)


1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!



101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்











மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

வியாழன், 25 ஜூன், 2020

அல்லாஹ்வும் அஹத் வார்த்தையும் (112:1) - அல்லாஹ் "ஒருவனா?" (அ) "ஆயிரத்தில் ஒருவனா?"

அல்லாஹ்வின் தனித்தன்மையைப் பற்றி குர்‍ஆனில் கீழ்கண்டவிதமாக படிக்கிறோம்:

குர்‍ஆன் 112:1 (ஐந்து தமிழாக்கங்கள்):

முஹம்மது ஜான் தமிழாக்கம்:

(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:

(நபியே! மனிதர்களை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ் ஒருவன்தான்

IFT- தமிழாக்கம்: கூறுவீராக! அவன் அல்லாஹ், ஏகன்,

சவூதி தமிழாக்கம்: (நபியே!) நீர் கூறுவீராக அவன் "அல்லாஹ்" ஒருவனே

பிஜே தமிழாக்கம்: "அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராக! 

இந்த அத்தியாயத்திற்கு இரண்டு பெயர்கள் உண்டு: ஸூரத்துல் இஃக்லாஸ் (ஏகத்துவம்) மற்றும் ஸூரத்துல் தௌஹித். நான்கு வசனங்கள் கொண்ட‌ இந்த சிறிய ஸூரா பற்றி ஒரு இஸ்லாமிய அறிஞர் கீழ்கண்டவாறு கூறினார்:

இறைவன் என்பதற்கான மிகச்சுருக்கமான வரையறை:

இஸ்லாமின் இறைவன் பற்றிய மிகவும் சுருக்கமான வரையறையை குர்‍ஆனின் " இஃக்லாஸ்" என்ற 112வது அத்தியாயத்தில் காணலாம்:

ஸூரத்துல் இஃலாஸ் - இறையியலின் உரைக்கல்:

இறையியலின் உரைக்கல் என்று குர்‍ஆனின் 112வது அத்தியாயமாகிய ஸூரத்துல் இஃக்லஸை கூறலாம்.

கிரேக்க மொழியில் "தியோ" என்றால் இறைவன் என்று பொருள், 'லாஜி' என்றால் படிப்பு  என்று பொருள். ஆக, தியாலஜி என்றால் இறையியல் என்று பொருள். முஸ்லிம்களை பொருத்தமட்டில், சர்வ வல்லவரான அல்லாஹ்வின் இறையியல் பற்றி அந்த நான்கு வார்த்தைகள் கொண்ட வசனமே ஒரு உரைக்கல்லாக உள்ளது போதுமானதாக உள்ளது. யார் யாரெல்லாம் தெய்வத்தன்மைக்கு போட்டியிருகின்றார்களோ, அவர்களை இந்த அமிலச் சோதனையில் போட்டு எடுக்கவேண்டும். இந்த அத்தியாயத்தில் கொடுக்கப்பட்ட அல்லாஹ்வின் குணங்கள் தனித்தன்மை வாய்ந்தவைகளாக உள்ளன. இதனால் தங்களை தெய்வங்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்களையும், பொய்யான தெய்வங்களை சுலபமாக அடையாளம் கண்டு அவர்களை புறக்கணிக்க முடியும்.

(டாக்டர் ஜாகிர் நாயக், இஸ்லாமில் இறைவன் பற்றிய கோட்பாடு இந்த மூல தொடுப்பை சொடுக்கும் போது கீழ்கண்ட செய்தி வருகின்றது- "The URL has been blocked as per the instructions of the Competent Government Authority/ in compliance to the orders of Court of Law." இன்றைய தேதியின் படி ஜாகிர் நாயக்கின் தளம் அரசாங்கத்தால் முடக்கப்பட்டுள்ளது, ஏன் என்று நம் அனைவருக்கும் தெரியும்.).

நாம் மேலே கண்ட 1வது  வசனத்தில் "அல்லாஹ் ஒருவனே" என்று அரபு மூலத்தில் சொல்லப்படவில்லை என்பது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.  உண்மையில் அரபியில் அதன் பொருள் "பலரின் அல்லாஹ் ஒருவன் (Say: He, Allah, is one of)" என்பதாகும்.

இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்ட அரபி வார்த்தை "அஹத்" என்பதாகும். குர்‍ஆனில், இந்த வசனத்தின் அரபி ஒலிப்பெயர்ப்பு கீழ்கண்ட விதமாக உள்ளது:

"குல் ஹுவ அல்லாஹு அஹத் (துன்)

இதன் பொருள்:

"கூறுவீராக: அவன், அல்லாஹ், பலரின் ஒருவனாக இருக்கிறான்"

"Say: He, Allah, is one of."

கிறிஸ்தவ எழுத்தாளரும், அரபி மொழி பேச்சாளருமான‌ அப்துல்லாஹ் அல் அரபி (Abdullah Al Araby) எழுதுகிறார்:

குர்ஆனின் வசனங்களை வேண்டுமென்றே தவறாக மொழிப்பெயர்க்கின்ற இந்த செயல் மீது ஒரு ஆழமான ஆய்வு நடத்தப்பட்டு ஆய்வறிக்கை சமர்ப்பிக்கவேண்டும், அவ்வளவு பெரிய தலைப்பு இது. இந்த கட்டுரைக்காக, ஒரு சில உதாரணங்களை மட்டுமே நான் இங்கு தருகிறேன்.

குர்‍ஆன் 112:1ம் வசனம்: நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே

அரபி மூலத்தில் "ஒருவனே" என்ற தமிழாக்கம் செய்யப்பட்ட வார்த்தை "ஒருவனே" என்ற அரபி வார்த்தையில்லை, அது " அஹத்  - பலரில் ஒருவன் - One of" என்ற  பொருள்படும் வார்த்தையாகும். தமிழாக்கம் செய்த முஸ்லிம், அஹத் என்ற வார்த்தையை சரியாக மொழியாக்கம் செய்திருந்தால், அது ஷிர்க் என்ற பெரும் பாவத்தை செய்வதற்கு சமமானதாக அந்த வசனம் மாறிவிடும். உண்மையில் அஹத் என்ற வார்த்தை, அல்லாஹ்வை பலரோடு ஒப்பிட்டு, பலரில் அல்லாஹ்வும் ஒருவன் என்ற பொருளில் தான் அமைந்துள்ளது. ("Nikah"- The Islamic "N" Word; What Does It Exactly Mean?).

ஒருவேளை அல்லாஹ் இதனை சரியான‌ முறையில் அரபியில் சொல்லவேண்டுமென்றால், "அல்லாஹு அல் அஹத்" அதாவது "அவன் அல்லாஹ், அவன் ஒருவனே" என்று சொல்லியிருந்தால் பிரச்சனை இல்லை. 

இந்த பிரச்சனையை சரி செய்ய, கீழ்கண்ட ஆங்கில மொழியாக்கம் செய்தவர்கள், தில்லுமுல்லு செய்து " தி - The" என்ற ஆங்கில வார்த்தையை உள்ளே நுழைத்து பொருளை சரி செய்கிறார்கள்.

Say (O Muhammad): "He is Allah, (the) One. (Hilali-Khan Translation)

Say: He is Allah, the One! (Pickthall - Translation)

Say `He is ALLAH, the One! (Sher Ali - Translation)

மேலும் சில முஸ்லிம் அறிஞர்கள், இந்த பிழையை மறைப்பதற்காக, முழுவாக்கியத்தையே மாற்றி அமைத்திருக்கிறார்கள்.

Proclaim, "He is the One and only GOD. (Khalifa - Translation)

Say, [God] is one God; (Sale - Translation)

குர்‍ஆனை கொடுத்த அல்லாஹ், இந்த பிரச்சனையையும், குழப்பத்தையும் நீக்குவதற்கு, இந்த வசனத்தை கீழ்கண்டவாறு இறக்கி இருந்திருக்கலாம்:

குல் ஹுவ அல்லாஹு அல் வாஹித்(துன்)

இதன் பொருள்:  கூறுவீராக, அவன் அல்லாஹ், அவன் ஒருவனே ("Say, he is Allah, the One,")

அல்லது

கூறுவீராக, அவன் அல்லாஹ் ஒருவனே ("Say he, Allah, is the One.")

மேலும் குர்‍ஆன் ஆக்கியோன், "அல்" என்ற எழுத்தையும் சேர்க்காமல், "குல் ஹுவ அல்லாஹு வாஹிதுன்(Qul huwa Allahu Wahid(un))" என்று வசனத்தை இறக்கியிருந்திருக்கலாம்.

As Michael B. Schub put in his paper "True Belief - a New Translation and Commentary on Sura 112", ZAL, 22 (1990), p. 81:

"ahadun: The rules of the `Arabiyya [i.e. Classical Arabic] require wahidun here."

மைக்கேல் பி. ஷுப் தம்முடைய "True Belief - a New Translation and Commentary on Sura 112" என்ற ஆய்வுக் கட்டுரையில் பக்கம் 81ல் கீழ்கண்டவாறு கூறுகின்றார்:

"அஹதுன்": பழமை வாய்ந்த மூல அரபியில் இந்த இடத்தில் "வாஹிதுன்" என்று வந்திருக்கவேண்டும்.


குர்‍ஆனில் வாஹித் என்ற வார்த்தை அல்லாஹ்வின் ஏகத்துவத்திற்கு பயன்படுத்தப்பட்ட வசனங்கள்

இன்னும் சில சான்றுகளை குர்‍ஆனிலிருந்து காண்போம். முஹம்மது ஜான் தமிழாக்கம் இக்கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. கீழ்கண்ட வசனங்களில் "அல்லாஹ் ஒருவனே" என்பதை குறிக்க "வாஹித்" என்ற வார்த்தை சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளதை, கவனிக்கவும்.

2:133. யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம் "எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?" எனக் கேட்டதற்கு, "உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே (ilahan wahidan இலாஹன் வாஹிதன்) -வணங்குவோம் அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்" எனக் கூறினர்.

2:163. மேலும், உங்கள் நாயன் ஒரே நாயன்(Wa-ilahukum ilahun wahidun - வ இலாஹுகும் இலாஹுன் வாஹிதுன்); அவனைத் தவிர வேறு நாயனில்லை அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.

4:171. . . . - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்(Allahu ilahun wahidun- அல்லாஹு இலாஹுன் வாஹிதுன்); அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.

5:73. நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள்; ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர வேறு நாயன் இல்லை(wama min ilahin illa ilahun wahidun - வமா மின் இலாஹின் இல்லா இலாஹுன் வாஹிதுன்); அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால் நிச்சயமாக அவர்களில் காஃபிரானவர்களை துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும்.

6:19. . . .நான் (அவ்வாறு) சாட்சி சொல்ல முடியாது என்றும் கூறுவீராக; வணக்கத்திற்குரியவன் நிச்சயமாக அவன் ஒருவன் தான்; அவனுக்கு நீங்கள் இணைவைப்பதிலிருந்து நான் நிச்சயமாக விலகிக் கொண்டவனே" என்று கூறிவிடும்(qul la ashhadu qul innama huwa ilahun wahidun - குல் ல அஷ்ஹது குல் இன்னமா ஹுவ இலாஹுன் வாஹிதுன்) .

38:5. "இவர் (எல்லாத்) தெய்வங்களையும் ஒரே நாயனாக(ilahan wahidan - இலாஹன் வாஹிதன்) ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயமே! (என்றும் கூறினர்).

(அனைத்து வசனங்களும் முஹம்மது ஜான் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது)

இங்கு கூர்ந்து கவனிக்கவேண்டிய ஒரு சுவாரஸ்மான விவரம் என்னவென்றால், அல்லாஹ்வின் ஏகத்துவம் பற்றி குர்‍ஆன் எங்கு பேசினாலும், அங்கு "வாஹித்" என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஒரு இடத்தில் மட்டும் அதாவது குர்‍ஆன் 112:1ல் மட்டும் அது "அஹத்(அனேகரில் இவனும் ஒருவன்)" என்று தவறாக பயன்படுத்தப்பட்டு  உள்ளது.

அஹத் என்ற வார்த்தை குர்‍ஆனில் அனைத்து இடங்களிலும் (74), "பலரில் ஒருவர்/உங்களில் ஒருவர்/யாராகிலும்" என்ற பொருளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது

குர்‍ஆனில் அஹத் என்ற வார்த்தை இடம்பெறும் வசனங்கள் அனைத்தையும் ஆய்வு செய்தால், அத்ஹு அல் அரபி என்பவர் சொன்ன கருத்தையே பிரதிபலிப்பதாக உள்ளது.  அஹத் என்ற வார்த்தை இடம் பெறும் வசனங்கள் அனைத்திலும் "அனேகரில் ஒருவர்" அல்லது ஒரு குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.  அஹத் என்ற வார்த்தை "ஒரே ஒருவர் அல்லது  தனித்தன்மை வாய்ந்த ஒருவர்" என்ற பொருளில் எங்கும் பயன்படுத்தப்படவில்லை (112:1ல் தவிர).

அஹத் வார்த்தை வரும் குர்‍ஆன் வசன சான்றுகள்:

ஒவ்வொருவரும் (ahaduhum - அஹதுஹும்):

2:96. அவர்கள், மற்ற மனிதர்களைவிட, இணை வைக்கும் முஷ்ரிக்குகளையும் விட (இவ்வுலக) வாழ்க்கையில் பேராசை உடையவர்களாக இருப்பதை (நபியே!) நீர் நிச்சயமாகக் காண்பீர்; அவர்களில் ஒவ்வொருவரும் (ahaduhum - அஹதுஹும்) ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என ஆசைப்படுகிறார்கள்; ஆனால் அப்படி அவர்களுக்கு நீண்ட வயது கொடுக்கப்பட்டாலும், அவர்கள் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது; இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்வதையெல்லாம் கூர்ந்து பார்ப்பவனாகவே இருக்கிறான்.

எவருக்கும்(ahadin - அஹதின்):

2:102. . . .. எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும்(ahadin - அஹதின்) எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது; தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?

ஒருவருக்கிடையேயும்(ahadin - அஹதின்):

2:136. (முஃமின்களே!)"நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும்(ahadin - அஹதின்) நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்" என்று கூறுவீர்களாக.

எவர் ஒருவரையும்(ahadin- அஹதின்):

2:285. (இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: "நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும்(ahadin- அஹதின்) பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்" என்று கூறுகிறார்கள்.

இன்னொருவருக்கும்(ahadun - அஹதுன்):

3:73. "உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுவோரைத் தவிர (வேறு எவரையும்) நம்பாதீர்கள்" (என்றும் கூறுகின்றனர். நபியே!) நீர் கூறும்: நிச்சயமாக நேர்வழியென்பது அல்லாஹ்வின் வழியே ஆகும்; உங்களுக்கு (வேதம்) கொடுக்கப்பட்டதுபோல் இன்னொருவருக்கும்(ahadun - அஹதுன்) கொடுக்கப்படுவதா அல்லது அவர்கள் உங்கள் இறைவன் முன் உங்களை மிகைத்து விடுவதா?" (என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.) நிச்சயமாக அருட்கொடையெல்லாம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது; அதை அவன் நாடியோருக்கு வழங்குகின்றான்; அல்லாஹ் விசாலமான (கொடையளிப்பவன்; யாவற்றையும்) நன்கறிபவன் என்று கூறுவீராக.

எவரொருவரையும்(ahadin - அஹதின்):

3:84. "அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும்(ahadin - அஹதின்) பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.

எவரையும் (ahadin - அஹதின்):

3:153. (நினைவு கூறுங்கள்! உஹது களத்தில்) உங்கள் பின்னால் இருந்து இறைதூதர் உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் எவரையும் (ahadin - அஹதின்) திரும்பிப் பார்க்காமல் மேட்டின்மேல் ஏறிக் கொள்ள ஓடிக் கொண்டிருந்தீர்கள்; ஆகவே (இவ்வாறு இறை தூதருக்கு நீங்கள் கொடுத்த துக்கத்தின்) பலனாக இறைவன் துக்கத்தின்மேல் துக்கத்தை உங்களுக்குக் கொடுத்தான்; ஏனெனில் உங்களுக்குக் கிடைக்க வேண்டியது தவறி விட்டாலோ, உங்களுக்குச் சோதனைகள் ஏற்பட்டாலோ நீங்கள் (சோர்வும்) கவலையும் அடையாது (பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்); இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.

எவரையும்(ahadin - அஹதின்):

4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும்(ahadin - அஹதின்) பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.

நீங்கள் (aḥadun -அஹதுன்): உங்களில் ஒருவர் என்று வந்திருக்கவேண்டும்! தமிழாக்கம் செய்தவர் "நீங்கள்" என்று எழுதியுள்ளார்.

4:43. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் ஓதுவது இன்னது என்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும்போது தொழுகைக்கு நெருங்காதீர்கள்; அன்றியும் குளிப்புக் கடமையாக இருக்கும்போது குளிக்கும் வரை (பள்ளிக்குள் செல்லாதீர்கள்; பள்ளியை) பாதையாக கடந்து சென்றால் தவிர. நீங்கள் நோயாளியாகவோ, யாத்திரையிலோ, மலஜலம் கழித்தோ(aḥadun minkum mina l-ghāiṭi - அஹதுன் மின்கும் மினால் க்ஹாடி), பெண்களைத் தீண்டியோ இருந்து (சுத்தம் செய்து கொள்ள) தண்ணீரை பெறாவிடின் சுத்தமான மண்ணைத் தொட்டு உங்களுடைய முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவி "தயம்மும்" செய்து கொள்ளுங்கள்; (இதன்பின் தொழலாம்) நிச்சயமாக அல்லாஹ் பிழை பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கின்றான்.

எவரும்(ahadun - அஹதுன்):

5:6. முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) - நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்; தவிர நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும்(ahadun - அஹதுன்) மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும்  . . .

எவருமே(ahadin - அஹதின்):

7:80. மேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: உலகத்தில் எவருமே(ahadin - அஹதின்) உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவா முனைந்தீர்கள்?"

யாரேனும் (ahadun - அஹதுன்):

9:6. (நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் (ahadun - அஹதுன்) உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக; அதன் பின் அவரை அவருக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் வேறு இடத்திற்கு (பத்திரமாக) அனுப்புவீராக - ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.

யாராவது (ahadin - அஹதின்):

9:84. அவர்களில் யாராவது (ahadin - அஹதின்) ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக நீர் ஒருக்காலும் (ஜனாஸா) தொழுகை தொழவேண்டாம்; இன்னும் அவர் கப்ரில் (பிரார்த்தனைக்காக) நிற்க வேண்டாம்; ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்துப் பாவிகளாகவே இறந்தார்கள்.

யாராவது(ahadin - அஹதின்):

9:127. யாதொரு (புதிய) அத்தியாயம் இறக்கப்பட்டால் அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: "உங்களை யாராவது(ahadin - அஹதின்) பார்த்து விட்டார்களோ?" என்று கேட்டுக் கொண்டே திரும்பி(ப் போய்) விடுகின்றனர்; அல்லாஹ் அவர்களுடைய நெஞ்சங்களை (ஒளியின் பக்கத்திலிருந்து) திருப்பி விட்டான் - (காரணமென்னவெனில்) அவர்கள் சத்தியத்தை அறிந்து கொள்ள முடியாத மக்களாக இருக்கின்றனர்.

யாரும்(ahadun - அஹதுன்):

11:81. (விருந்தினராக வந்த வானவர்கள்) கூறினார்கள்: "மெய்யாகவே நாம் உம்முடைய இறைவனின் தூதர்களாகவே இருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள் உம்மை வந்தடைய முடியாது; எனவே இரவின் ஒரு பகுதி இருக்கும்போதே உம் குடும்பத்துடன் (இவ்வூரை விட்டுச்) சென்றுவிடும்! உம்முடைய மனைவியைத் தவிர, உங்களில் யாரும்(ahadun - அஹதுன்) திரும்பியும் பார்க்க வேண்டாம். நிச்சயமாக அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்து அவளையும் பிடித்துக் கொள்ளும். (வேதனை வர) அவர்களுக்கு நிச்சயமாக வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும்; விடியற்காலை சமீபித்து விடவில்லையா?"

எவரும் (ahadun - அஹதுன்):

15:65. ஆகவே இரவில் ஒரு பகுதியில் உம்முடைய குடும்பத்தினருடன் நடந்து சென்று விடும்; அன்றியும் (அவர்களை முன்னால் செல்ல விட்டு) அவர்கள் பின்னே நீர் தொடர்ந்து செல்லும். உங்களில் எவரும் (ahadun - அஹதுன்) திரும்பிப் பார்க்க வேண்டாம். நீங்கள் ஏவப்படும் இடத்திற்கு சென்று விடுங்கள் என்று அ(த் தூது)வர்கள் கூறினார்கள்.

ஒருவனுக்கு(ahaduhum  - அஹதுஹும்):

16:58. அவர்களில் ஒருவனுக்கு(ahaduhum  - அஹதுஹும்) பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான்.

ஒருவரையேனும் (ahadin - அஹதின்):

19:98. அவர்களுக்கு முன்னர், எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கிறோம்; அவர்களில் ஒருவரையேனும் (ahadin - அஹதின்) நீர் பார்க்கிறீரா? அல்லது அவர்களுடைய இலேசான சப்தத்தை நீர் கேட்கிறீரா?

எவரும் (ahadin - அஹதின்):

24:21. ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்க வற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்; அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் (ahadin - அஹதின்) எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையடைந்திருக்க முடியாது - எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் தூய்மைப் படுத்துகிறான் - மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.

எவருமே (ahadin - அஹதின்):

29:28. மேலும், லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பி வைத்தோம்); அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்: "நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே (ahadin - அஹதின்) உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலை செய்ய முனைந்து விட்டீர்கள்.

எவர் (ahadin - அஹதின்):

33:40. முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் (ahadin - அஹதின்) ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன்.  

வேறெவரும் (ahadin - அஹதின்):

35:41. நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான்; அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் (ahadin - அஹதின்) அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்வன்.

ஒருவனுக்கு (ahaduhum – அஹதுஹும்):

43:17. அர் ரஹ்மானுக்கு அவர்கள் எதனை ஒப்பாக்கினார்களோ அதை (அதாவது பெண் குழந்தையை) கொண்டு அவர்களில் ஒருவனுக்கு (ahaduhum – அஹதுஹும்)  நற்செய்தி கூறப்படும்பொழுது அவனுடைய முகம் கருத்துப் போய்விடுகின்றது. மேலும் அவன் கோபம் நிரம்பியவனாகவும் ஆகிவிடுகின்றான்.

எவரும்(ahadin - அஹதின்):

69:47. அன்றியும், உங்களில் எவரும்(ahadin - அஹதின்) (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை.

ஒருவரும்  (ahadun - அஹதுன்):

72:22. கூறுவீராக: "நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் ஒருவரும்  (ahadun - அஹதுன்) என்னைப் பாதுகாக்க மாட்டார்; இன்னும், அவனையன்றி ஒதுங்குந் தலத்தையும் நான் காணமுடியாது.

எவனும் (ahadun - அஹதுன்):

89:25. ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் (ahadun - அஹதுன்) வேதனை செய்யமாட்டான்.

எவனும் (ahadun - அஹதுன்):

89:26. மேலும், அவன் கட்டுவது போல் வேறு எவனும் (ahadun - அஹதுன்) கட்டமாட்டான்.

ஒருவரும் (ahadun - அஹதுன்):

90:5. "ஒருவரும் (ahadun - அஹதுன்), தன் மீது சக்தி பெறவே மாட்டார்" என்று அவன் எண்ணிக் கொள்கிறானா?

ஒருவரும்  (ahadun - அஹதுன்):

90:7. தன்னை ஒருவரும்  (ahadun - அஹதுன்) பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?

அவனுக்கு(ahadun - அஹதுன்):

112:4. அன்றியும், அவனுக்கு(ahadun - அஹதுன்)  நிகராக எவரும் இல்லை.

குர்‍ஆனில் "அஹத்" என்ற வார்த்தை வரும் ஒவ்வொரு வசனத்தை ஆய்வு செய்தாலும், அது "அனேகரில் ஒருவர் பற்றியே அல்லது ஒரு குறிப்பிட்ட மக்களில் ஒருவர் பற்றியே" குறிப்பிடுகிறது என்பதை காணலாம். ஒரே ஒரு வசனத்தில் கூட இந்த அஹத் என்ற வார்த்தைக்கு "ஒரே ஒருவன், ஒருவன் மட்டும், தனிப்பட்ட ஒருவன்" என்று பொருள் வருவதில்லை. நாம் மேலே பார்த்த அல் அரபி என்பவரின் கூற்று தான் உண்மை என்று இவைகள் நிருபிக்கின்றன.

குர்‍ஆனின் மிகப்பெரிய இலக்கண பிழை:

அடிப்படையில் "குர்‍ஆனில் ஒரு மிகப்பெரிய மோசமான இலக்கண பிழை இருப்பதை இது நிருபிக்கிறது, மேலும் இது இஸ்லாமின் ஏகத்துவ கொள்கையின் அஸ்திபாரத்தை தகர்த்து விடுவதாக அமைந்துவிட்டது".

எப்படி இந்த பிழை குர்‍ஆனில் நுழைந்தது?

இந்த பிழை (அஹத் என்ற வார்த்தை) குர்‍ஆனின் 112:1ல் நுழைந்ததற்கு "யூதர்களுடன் முஹம்மது (அ) குர்‍ஆனின் ஆசிரியர் கொண்டிருந்த தொடர்பு கூட‌ ஒரு காரணமாக இருக்கலாம்" என்று நான் கருதுகிறேன், இது உண்மையாகவும் இருக்கலாம். அதாவது முஹம்மது யூதர்களிடமிருந்து அவர்களின் 'ஒரே தெய்வ விசுவாசப் பிரமாணத்தை(the Jewish Shema - ஷேமா)' கேள்விப்பட்டு இருந்திருக்கவேண்டும். யூதர்களின் விசுவாசப்பிரமானம் உபாகமம் 6:4ம் வசனத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அங்கு, யெகோவா தேவனின் தனித்தன்மையை வெளிப்படுத்த 'எகாத்' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

யூதர்களின் விசுவாச பிரமாண வசனத்தை எபிரேய மொழியிலும், ஒலிப்பெயர்ப்பிலும் கிழே கொடுத்துள்ளேன்.

எபிரேய ஒலிப்பெயர்ப்பு: ஷெமா இஸ்ரயேல், யாவே எலோஹினு யாவே எகாத்

உபாகமம் 6:4 இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.

Translilteration English: Shema Yisrael Yahweh Elohenu Yahweh Echad

English: Hear O Israel, Yahweh Our God Yahweh is One.

யூதர்கள் "எகாத்" என்ற வார்த்தையை தங்கள் தெய்வத்தின் ஏகத்துவத்தை வெளிக்காட்ட பயன்படுத்துவதை முஹம்மது கவனித்து இருந்துள்ளார். அதன் பிறகு தன்னுடைய அல்லாஹ்விற்கு இதற்கு சமமான வார்த்தையை அரபியில் பயன்படுத்தலாம் என்று நினைத்து, 'அஹத்' என்ற வார்த்தையை அல்லாஹ்விற்கு பயன்படுத்திவிட்டிருக்கிறார். இந்த வார்த்தையின் பயன்பாடு அவரது ஏகத்துவ நிலைப்பாட்டை தகர்த்துவிடும் என்பதையும், குர்‍ஆனின் அரபி மொழி இலக்கணத்தை கேள்விக்குறியாக்கிவிடும் என்று அவர் நினைத்துக் கூட பார்க்கவில்லை.  அதாவது அஹத் என்ற வார்த்தையை அல்லாஹ்விற்கு சூட்டி, அவர் தான் நம்பிக்கொண்டு இருந்த ஏகத்துவ கோட்பாட்டை அழித்துவிட்டார்.

அஹத் என்ற வார்த்தை அல்லாஹ்வின் ஏகத்துவத்தை நிலைநாட்ட தவறாக பயன்படுத்தியதற்கு இன்னொரு காரணமும் இருக்கலாம். முஹம்மதுவோ அல்லது குர்‍ஆனை கொடுத்தவனோ, குர்‍ஆன் வசனங்களில் முதல் வாக்கியத்திற்கும் இரண்டாம் வாக்கியத்திற்கு இடையே "வரிகளின் ராகம் - எதுகை/மோனை சுவையாக இருக்கும்" என்பதால் கூட இப்படி 'அஹத்' என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்திருக்கலாம். 

இரண்டாம் வசனத்தின்  (112:2)  கடைசியில் "ஸமத்" என்று வார்த்தை முடியும், அதற்காக முதல்(112:1) வாக்கியத்தில் "அஹத்" என்று ராகத்திற்காக பயன்படுத்தி இருந்திருக்கலாம்.

தவறான வார்த்தையை பயன்படுத்தி, இந்த இலக்கண பிழையை செய்வதைக் காட்டிலும், "அல்-வாஹித்" என்றோ "அல்-அஹத்" என்றோ எழுதியிருந்தால், இந்த பிழை நீங்கியிருக்கும், அதே நேரத்தில் ராகமும் ஓரளவிற்கு சரியாக வந்திருக்கும்.

எது எப்படியிருந்தாலும், குர்ஆனை ஒரு தலைசிறந்த படைப்பாகவோ அல்லது அரபு இலக்கியத்தின் சிகரமாகவோ கருதமுடியாது என்பதை இதுவரை பார்த்த விவரங்கள் காட்டுகின்றன.  அல்லாஹ்வின் இயல்புடன் தொடர்புடைய மிக முக்கியமான வசனத்தில் ஒரு வார்த்தையை தவறாகப் பயன்படுத்தியதிலிருந்து "குர்ஆன் இறைவனிடமிருந்து வரவில்லை, அதன் ஆக்கியோன் சர்வஞானியான இறைவன் அல்ல" என்பது தெளிவாக புரிகின்றது.  இந்த ஒரு உதாரணமே, குர்‍ஆன் இறைவேதமல்ல என்பதற்கு தெளிவான சான்றாகும். யாரோ ஒருவரின் தவறான கண்டுபிடிப்பு தான் குர்‍ஆன். இது இறைவனின் வார்த்தைகள் என்று தனது வாசகர்களை நம்ப வைக்க விரும்பிய ஒருவரின் அபூர்வமான கண்டுபிடிப்பு தான் குர்‍ஆன். ஆனால் இதுபோன்ற அடிப்படை இலக்கண தவறுகளைச் செய்து, குர்‍ஆனின் ஆசிரியர் தனக்குத் தானே நம்பிக்கை துரோகம் செய்துக்கொண்டார். மேலும் அவரது சமகாலத்தவர்களுக்கு மிகவும் தவறான செய்தியை கொடுத்தார். இதுமட்டுமா, தன்னுடைய கோட்பாடுகளை எதிர்க்கும் எதிரிகளின் கைகளில் ஒரு கூர்மையான ஆயுதத்தை அவரே தயார் செய்து கொடுத்தும்விட்டார்.  அதனை அவர் மீதே அவர்கள் பயன்படுத்த அனுமதியும் கொடுத்துவிட்டார்.

குர்‍ஆன் என்பது தெய்வீகமுள்ளது, அல்லாஹ் என்பவர் ஏகத்துவ இறைவன் என்று மற்றவர்களுக்கு எடுத்துக்காட்ட விரும்பிய குர்‍ஆனின் ஆசிரியர், தன் இலக்கண பிழையினால், வேறு ஒரு செய்தியை தன்னை அறியாமல் மக்களுக்கு கொடுத்துவிட்டார். குர்‍ஆனின் எதிரிகளுக்கு தேவையான சான்றுகளை குர்‍ஆனே கொடுத்தது போன்று ஆகிவிட்டது. இதனை ஆய்வு செய்யும் மக்கள், "அல்லாஹ் சரியாக குழம்பியுள்ளான், ஒரு இடத்தில் தான் மட்டுமே இறைவன் என்றுச் சொல்கிறான், ஆனால் வேறு இடத்தில் உள்ள இலக்கண பிழையினால், அல்லாஹ்வைத் தவிர வேறு தெய்ங்களும் இருக்கின்றன" என்று சொல்கின்ற அளவிற்கு குர்‍ஆனின் தரம் உள்ளது அவர்கள் சொல்லவைத்திருக்கிறது.

மேலதிக விவரங்களும் விமர்சனங்களும்: தவ்ஹீத்

சுவாரஸ்யமாக, அஹத் என்ற வார்த்தையின் பொருள் "பலரில் ஒருவர் அல்லாஹ்" என்பதற்கு மேலும் ஒரு சான்றும் உள்ளது. குர்‍ஆனின் 112வது அத்தியாயத்திற்கு சில முஸ்லிம் அறிஞர்கள் "தவ்ஹித்" என்ற பெயரையும் சூட்டியுள்ளார்கள் என்பதை நாம் இதற்கு முன்பு பார்த்தோம்.

இந்த தவ்ஹித் (தௌஹித்) என்ற வார்த்தைக்கு முஸ்லிம் அறிஞர்கள் "ஒற்றுமை" அல்லது "ஒன்று" என்று பொருள் கூறுகிறார்கள். இந்த வார்த்தை 'பலர் ஒன்றாக சேர்வது' அல்லது 'பல பெருட்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு குழுவாக இருப்பது' என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும்.

தவ்ஹீத் என்ற வார்த்தைப் பற்றி முஸ்லிம் அறிஞர்கள் சொல்லும் விளக்கத்தை படிப்போம்:

தவ்ஹீத் என்ற வார்த்தை வஹ்ஹத் என்ற வினைச்சொல்லிலிருந்து வந்தது, இதன் அர்த்தம் 'ஒன்றாக சேர்ப்பது' என்பதாகும். இஸ்லாமின் படி இதன் பொருள் "ஒருவரின் செயல்களில் (உள்நோக்கி மற்றும் வெளிப்புறமாக) அல்லாஹ்வின் ஒற்றுமையை உணர்ந்து வாழ்வதாகும்". தௌஹித் என்ற வார்த்தை குர்‍ஆனிலும் இல்லை, ஹதீஸ்களிலும் இல்லை. ஆனால், இதன் மூல வார்த்தையின் நிகழ்காலச் சொல்லை ஹதீஸ்களில் (சுன்னா) காணலாம்.

இறைத்தூதர் முஅத் இப்னு ஜபலை யெமனுக்கு ஆளுநராக அனுப்பும் போது (ஹிஜ்ரி 9), "நீங்கள் வேதக்காரர்களிடம் செல்கிறீர்கள், எனவே அவர்களை அல்லாஹ்விடம் ஒற்றுமையடைய (யுவஹ்ஹிது) வாருங்கள் என்று அழையுங்கள்" என்றார்.

மேலும் இந்த மேற்கோளையும் படிக்கவும்:

தவ்ஹீத்: வரையறை மற்றும் வகைகள்:

இஸ்லாம் தவ்ஹீத்ஐ நம்புகிறது. தவ்ஹீத் என்பது வெறும் ஏகத்துவ வாதம் அல்ல அதாவது ஒரே இறைவன் மீது வைக்கும் நம்பிக்கை மட்டுமல்ல, இதற்கும் அப்பாற்பட்டதை இஸ்லாம் நம்புகிறது. தவ்ஹீத் என்றால் 'ஒற்றுமைப்படுதல், ஐக்கியப்படுதல்' என்பதாகும். இந்த வார்த்தை வஹ்ஹத என்ற வார்த்தையிலிருந்து வந்தது, மேலும் இதன் பொருள் "ஒற்றுமைப்படுதல், ஒன்று சேர்த்தல்" என்பதாகும்.

Tauhiyd comes from the verb wahhad WHICH LITERALLY MEANS TO UNITE. In Islamic terminology, it means to realize and maintain the unity of Allâh in one's actions (inwardly and outwardly). The actual word tauhiyd does not occur in the Quran or Sunnah though the present tense of the verb (from which tauhiyd is derived) is used in Sunnah. The Prophet sent Muadh ibn Jabal as governor of Yemen in 9 A.H. He told him, "You will going to the people of the book, so first invite yuwahhidu Allâh [them to the assertion of the oneness of Allâh]".[1] (The Concept of Tauhiyd in Islam; capital emphasis ours)

And:

TAWHEED:

Definition and Categories:

Islam believes in 'Tawheed' which is not merely monotheism i.e. belief in one God, but much more. Tawheed literally means 'unification' i.e. 'asserting oneness' and is derived from the Arabic verb 'Wahhada' which means TO UNITE, UNIFY or CONSOLIDATE. (Source; the bold, underlined, capital emphasis is ours)

ஆக, இந்த 112வது அத்தியாயத்தில் அல்லாஹ்வின் தனித்தன்மையை விவரிக்க பயன்படுத்திய அஹத் என்ற வார்த்தையும் மற்றும் அல்லாஹ்வின் ஒற்றுமையைக் குறிக்க முஸ்லிம்கள் பொதுவாகப் பயன்படுத்தும் தவ்ஹீத் என்ற வார்த்தையும், "ஏகத்துவத்தை குறிப்பதில்லை", பலவற்றை ஒற்றுமைப்படுத்த ஐக்கியப்படுத்த பயன்படும் வார்த்தையாக அது உள்ளது.

குர்‍ஆனின் 112வது ஸூராவிற்கு 'தவ்ஹீத்' என்ற பெயரை முஸ்லிம்கள் சூட்டினார்கள். ஆனால், இந்த வார்த்தை அரபி மூலத்தில் அதாவது குர்‍ஆனில் எங்கும் இல்லை. இந்த பெயரை சூட்டியவர்களின் நோக்கத்திற்கு வெளியே இந்த பெயர் அமைந்துள்ளது, அதாவது அல்லாஹ்வின் இயல்புக்கு எதிராக தவ்ஹீத் என்ற வார்த்தை அமைந்துள்ளது.

எது எப்படியிருந்தாலும், முஸ்லிம்கள் குழப்பத்தில் உள்ளனர் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது. ஸூரா 112:1ன் படி அஹத் என்றால், அல்லாஹ் பலபேர்களில் ஒருவராக இருக்கிறார் என்று பொருள். ஆனால், அந்த பலபேர் எந்த வகையைச் சார்ந்தவர்கள்? என்ற கேள்வி எழுகிறது. அதாவது பல தெய்வங்களில் ஒருவர் அல்லாஹ்வா? இதனை நாம் ஏற்றுக்கொண்டால், இது குர்‍ஆனில் உள்ள வேறு பல வசனங்களோடு மோதுகின்றது, அதாவது அல்லாஹ்வைத் தவிர வேறு தெய்வங்கள் இல்லை என்றுச் சொல்லக்கூடிய வசனங்களோடு இது சண்டையிடுகின்றதே! ஒருவேளை, பல தெய்வங்கள் இருக்கிறார்கள், அவர்களை ஒன்று சேர்க்கும்படியாக அல்லாஹ் இருக்கின்றான் என்று சொல்லலாமா? தௌஹித் என்றால் இது தானே பொருள், பலவற்றை ஒன்றாக மாற்றுதல் என்பது தான் தௌஹித். இதனை ஏற்றுக்கொண்டால், ஒன்றுக்கும் அதிகமான தெய்வங்கள் இருப்பதாக பொருள் வந்துவிடுமே! இது கூட குர்‍ஆனின் இதர வசனங்களுக்கு எதிராக பேசுகின்றதே!

இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இதே குற்றச்சாட்டை அன்று பலதெய்வ வழிப்பாட்டு மக்கள் முஹம்மது மீது சுமத்தினார்கள், அதாவது முஹம்மது பல தெய்வங்களை ஒரு தெய்வமாக மாற்றுகிறார் என்று அவர்கள் குற்றம் சாட்டினார்கள், பார்க்க குர்‍ஆன்: 38:5

38:5. "இவர் (எல்லாத்) தெய்வங்களையும் ஒரே நாயனாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயமே! (என்றும் கூறினர்).(முஹம்மது ஜான் தமிழாக்கம்)

38:5. என்ன, இவர் அத்தனை கடவுளருக்கும் பகரமாக ஒரே கடவுள்தான் என்று ஆக்கிவிட்டாரா? இது மிகவும் வியப்புக்குரிய விஷயம்தான்!" (IFT – தமிழாக்கம்)

38:5. கடவுள்களை ஒரே கடவுளாக ஆக்கி விட்டாரா? இது வியப்பான செய்தி தான்.'(பிஜே தமிழாக்கம்)

"Say: He is Allah, one of many who have always existed as God."

அல்லது

ஒரே கடவுளாக எப்போதும் ஒன்றாக இருந்த பல தெய்வங்களில் இவரும் ஒருவரா? 

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பல தெய்வங்கள் ஒன்றாக சேருவது ஒற்றுமையல்ல, உண்மையாக தெய்வங்களாக இருந்தவர்கள் ஒன்றாக சேருவது தான் ஒற்றுமையாக இருக்கமுடியும்.  இதனை தெளிவாக்க கீழ்கண்டவற்றை படிக்கவேண்டும்:

"கூறுவீராக: அவன் அல்லாஹ், எப்போதும் இருக்கின்ற பல தெய்வங்களில் இவரும் ஒருவராவார்".

இதைத் தான் ஸுரா 112வது அத்தியாயம் கூறுகிறது. இப்போது இந்த முழூ அத்தியாயத்தையும் இங்கு மேற்கோள் காட்டுகிறோம். அதோடு கூட, அந்த அஹத் என்ற வார்த்தையின் உண்மையான பொருளோடு சேர்த்து தருகிறோம்.

112:1. (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் (அஹதுன் - மற்ற தெய்வங்களைப் போல அவனும்) ஒருவனே.

112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.

112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.

112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் (அவனைப்போன்று பன்முகத்தன்மையாக, பல தெய்வங்களில் ஒருவனாக‌, வேறு ஒருவரும்) இல்லை.

மேற்கண்ட ஸூராவில் நம்முடைய மொழியாக்கத்தை/விளக்கத்தை கொடுத்துள்ளோம். அந்த விளக்கம் அஹத் என்ற வார்த்தையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நாம் எழுதவில்லை. குர்‍ஆனின் அனேக வசனங்களின் அடிப்படையில் அதனை நாம் கொடுத்துள்ளோம். அதாவது அஹத் என்ற வார்த்தை குர்‍ஆனில் பயன்படுத்தப்பட்ட இடங்களில் "ஒன்றுக்கும் மேற்பட்ட தெய்வங்கள், மனிதர்கள் இருக்கும் ஒரு குழுவிலிருந்து ஒரு தெய்வத்தை அல்லது மனிதனை" குறிக்க அஹத் வார்த்தை குர்‍ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு: அல்லாஹ்வின் ஆவி/ஆத்துமா கூட இறைவன் தான் என்று குர்‍ஆன் சொல்கிறது.  இந்த ஆத்துமாவிற்கு ஒரு ஆள்தத்துவமும், இறைவனுக்கு இருக்கும் அனைத்து இயல்புகளும் உள்ளது என்று குர்‍ஆன் சொல்கிறது.  இதைப் பற்றிய மேலதிக விவரங்களுக்காக கீழ்கண்ட ஆங்கில கட்டுரையை படிக்கவும்:

குர்‍ஆன், தான் சொல்ல வந்த செய்தியை, எல்லா இடங்களிலும் ஒரே விதமாக சொல்லவில்லை என்பதை இந்த கட்டுரையில் எடுத்துக்காட்டினோம். ஒளிவு மறைவு இன்றி, விருப்பு வெறுப்பு இன்றி, குர்‍ஆனின் வசனங்களை அவைகள் சொல்லும் பொருளில் பார்க்கும் போது, "குர்‍ஆன் குழப்புகிறது" என்பதை மட்டும் புரிந்துக்கொள்ள முடிகின்றது.

இறைவனின் இயல்பு பற்றி இவ்விதமாக குழப்பமான செய்தியைத் தரும் புத்தகம் எப்படி ஒரு இறைவேதமாக இருக்கும்.

மேலதிக விவரங்கள்:

அஹத் என்ற வார்த்தை பல வடிவங்களில் குர்‍ஆனில் 74 இடங்களில் வருகிறது, அவைகள் அனைத்தையும் கீழ்கண்ட பட்டியலில் தருகிறோம்.

இந்த பட்டியலை குர்‍ஆன் கார்பஸ் என்ற தளத்திலிருந்து எடுத்துள்ளோம், அதன் தொடுப்பு: http://corpus.quran.com/qurandictionary.jsp?q=AHd#(112:1:4)

 

ஆசிர்யர்: சாம் ஷமான்

ஆங்கில மூலம்: https://www.answering-islam.org/Shamoun/ahad.htm

தேதி: 25th Jun 2020


சாம் ஷமானின் இதர கட்டுரைகள்

உமரின் இதர கட்டுரைகள்

Source: https://www.answering-islam.org/tamil/authors/sam-shamoun/allah_ahad_q112.html

புதன், 24 ஜூன், 2020

சின்னஞ்சிறு கேள்வி பதில்கள் 1000: பாகம் 13 "இஸ்லாமிய கலைச்சொற்கள்/அகராதி"

"சின்னஞ்சிறு கேள்வி பதில்கள் 1000" தொடரின் முந்தைய பதிவுகளை இங்கு சொடுக்கி படிக்கலாம். குர்‍ஆன், முஹம்மது, பைபிள், அல்லாஹ் யெகொவா, கிறிஸ்தவம் போன்ற‌ தலைப்புகளில் இதுவரை 360 கேள்வி பதில்களை பார்த்துள்ளோம். இந்த கட்டுரையில் "இஸ்லாமிய கலைசொற்கள் அல்லது இஸ்லாமிய அகராதி" என்ற தலைப்பில்  மேலும் 30 கேள்வி  பதில்களைக் காண்போம்.

ஆன்மீகத்தில் ஓரளவிற்கு ஈடுபாடு கொண்ட ஒரு முஸ்லிம் சகோதரர் அல்லது சகோதரியிடம் பேசும் போது, பல அரபிச் சொற்கள் இடையிடையே வருவதை காணமுடியும். மேலும் நாம் குர்‍ஆனை தமிழில் படிக்கும் போது கூட, பல அரபி வார்த்தைகள் அப்படியே "தமிழாக்கம்" செய்யப்படாமல் "ஒலியாக்கம்(Transliteration)" செய்துயிருப்பதை காணமுடியும். இந்த கேள்வி பதில் தொடரில் அப்படிப்பட்ட சொற்களின் விளக்கங்களை கற்றுக்கொள்வோம், மட்டுமல்லாமல் இஸ்லாம் பற்றி அறிந்துக்கொள்ளவும் இது உதவி புரியும்.


கேள்வி 361: இஸ்லாமிய நாட்காட்டி(Islamic Calendar) என்றால் என்ன? அது எப்போது தொடங்கப்பட்டது?

பதில் 361: இஸ்லாமிய காலண்டர் (நாட்காட்டி) பற்றி அறிவதற்கு முன்பு, கிரெகோரியன்  காலண்டர்(Gregorian calendar) என்றால் என்னவென்பதை சுருக்கமாக பார்ப்போம்.

கிரெகோரியன் நாட்காட்டி (Gregorian calendar) என்பது சர்வதேச அளவில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பயன்படுத்தப்படும் நாட்காட்டியாகும். மேலும் மேற்கத்திய நாட்காட்டி எனவும் கிறித்துவ நாட்காட்டி எனவும் வழங்கப்பெறுகிறது. இந்த நாட்காட்டியானது சர்வதேச நிறுவனங்களான சர்வதேச தபால் ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றினால் அங்கீகரிப்பட்டுள்ளது.

இன்று உலகில் பரவலாகப் பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியான இது கி. மு 45 -ல் ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியன் நாட்காட்டியின் (Julian calendar) ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும். இத்தாலியரான அலோசியஸ் லிலியஸ் (Aloysius Lilius) என்ற மருத்துவரால் முன்வைக்கப்பட்டது. இது பிப்ரவரி 24 1582 இல் அப்போதைய "திருத்தந்தை பதின்மூன்றாம் கிரெகோரியன் " ஆணைப்படி துவக்கி வைக்கப்பட்டது. இதன் காரணமாகப் பின்னாளில் இந்நாட்காட்டிக்கு "கிரெகோரியன் நாட்காட்டி" என்னும் பெயர் வழங்கலாயிற்று. இந்த நாட்காடியின் படி இயேசு பிறந்ததாகக் கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் இலக்கமிடப்பட்டன. (மூலம்: விக்கிபீடியா - ta.wikipedia.org/s/qp)

இன்று நம்முடைய அனுதின அலுவல்களுக்காகவும், மற்ற எல்லா விதமான காரியங்களுக்காக நாம் பயன்படுத்திக்கொண்டு இருப்பது இந்த கிரெகோரியன் காலண்டரைத் தான்.

இஸ்லாமிய நாட்காட்டி:

இஸ்லாமிய நாட்காட்டி என்பது கி.பி. 622ம் ஆண்டிலிருந்து துவங்கப்பட்டதாகும். அதாவது, இந்த ஆண்டில் முஹம்மது மக்காவிலிருந்து  மதினாவிற்கு ஹிஜ்ரா (இடம் பெயர்ந்தார்) செய்தார். முஸ்லிம் சமுதாயம் இந்த தேதியை முக்கியப்படுத்தி தங்கள் நாட்காட்டியை தயாரித்துள்ளார்கள்.

சந்திரனின் சுழற்சியை  அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய நாட்காட்டி தயாரிக்கப்படுவதினால், இஸ்லாமிய நாட்காட்டியில் ஒரு ஆண்டுக்கு 354/355 நாட்கள் வருகின்றது. கிரெகோரியன் அல்லது கிறிஸ்தவ நாட்காட்டியில் 365/366 நாட்கள் ஒரு ஆண்டுக்கு வருகிறது என்பதை கவனிக்கவும்.

இஸ்லாமிய நாட்காட்டியின் படி தேதியை குறிப்பிடும் போது தமிழில் "ஹிஜ்ரி" என்றும், ஆங்கிலத்தில் A.H (After Hijra) என்றும் எழுதுவார்கள்.

கீழ்கண்ட இரண்டு குர்‍ஆன் வசனங்களின் படி, சந்திரனை அடிப்படையாகக் கொண்டு இஸ்லாமிய நாட்காட்டி தயாரிக்கப்படுகின்றது.

குர்‍ஆன்  2:189. (நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: "அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. . . ..

குர்‍ஆன்  10:5. அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.

இஸ்லாமிய 12 மாதங்களின் பெயர்கள்:

ஒரு மாதம் என்பது 29 அல்லது 30 நாட்களை கொண்டு இருக்கும். 

  • 1) முஹர்ரம்
  • 2) ஸபர்
  • 3) ரபியுல்  அவ்வல்
  • 4) ரபியுல் ஆஹிர்
  • 5) ஜமாத்திலவ்வல்
  • 6) ஜமாத்திலாஹிர்
  • 7) ரஜப்
  • 8) ஷஃபான்
  • 9) ரமளான் (ரமலான்)
  • 10) ஷவ்வால்
  • 11) துல்காயிதா
  • 12) துல்ஹஜ் 

இதனால், இஸ்லாமிய ஆண்டு என்பது, கிரெகோரியன் நாட்காட்டியை விட 11 நாட்கள் குறைவாக இருக்கும்.

இஸ்லாமிய நாட்காட்டியை பிரிண்ட் எடுப்பதில் உள்ள சிக்கல்:

கிரெகோரியன் அல்லது கிறிஸ்தவ நாட்காட்டியை கணக்கிட்டு பல ஆண்டுகளுக்கான நாட்காட்டியை பிரிண்ட் எடுத்துக்கொள்ளமுடியும், ஏனென்றால் சூரியனை அடிப்படையாகக் கொண்டு கிரெகோரியன் காலண்டர் உள்ளது. அதாவது பூமி தன்னைத் தானே சுற்ற எவ்வளவு மணி பிடிக்கிறது, பூமி சூரியனை ஒரு முறை சுற்ற எத்தனை நாட்கள் பிடிக்கிறது என்று கணித்து நாட்காட்டியை தயாரிக்கிறார்கள்.

ஆனால், இஸ்லாமிய நாட்காட்டியில் ஒரு புதிய மாதம் பிறந்ததா இல்லையா? என்பதை சந்திரனின் பிறையைப் பார்த்து முடிவு செய்கிறார்கள்.

சில நேரங்களில் மேகமூட்டத்தினால் நாம் பிறையை பார்க்கமுடியாது, அப்படியானால் எப்படி புது மாதத்தை சரியாக கணக்கிடுவது? இதனால் தான் இஸ்லாமிய நாட்காட்டியில் ஒரு மாதம் 29 நாட்களாகவும் இருக்கும், 30 நாட்களாகவும் இருக்கும்.

ஒரு வேளை ஒரு ஆண்டுக்கான மாதங்களை, நாட்களை முன்பாகவே கணித்து, ஒவ்வொரு மாதத்திற்கும் 30 நாட்கள் என்றுச் சொல்லி பிரிண்ட் எடுத்தாலும், அந்த மாதம் தொடங்கும் போது, பிறையைப்  பார்த்து மாற்றிக்கொள்ளவேண்டி வரும். பிறை தெரிந்தால் நாளை புது மாதம் தொடங்கும், பார்க்கமுடியவில்லையென்றால், நாளை மறுநாள் புதுமாதம் என்று கருதப்படும்.

கிரெகோரியன் நாட்காட்டிக்கு மாறிய் சௌதி அரேபியா:

சௌதி அரேபியா 2016ம் ஆண்டு வரை இஸ்லாமிய நாட்காட்டியை பயன்படுத்திக் கொண்டு இருந்தது. அதாவது வியாபாரம், அலுவல்கள் மற்றும் மத சம்மந்தப்பட்ட காரியங்கள் அனைத்திற்கும் இஸ்லாமிய நாட்காட்டியை பயன்படுத்தியது. ஆனால், அலுவல்கள் மற்றும் வியாபார காரியங்களுக்கு, வானத்தைப் பார்த்து பிறை தெரிகின்றதா? இல்லையா? என்று பார்த்துவிட்டு, வியாபாரத்தைச் செய்யமுடியாது, என்பதால் சௌதி அரசு இந்த மாற்றத்தை கொண்டு வந்தது.

இந்த மாற்றத்தைப் பற்றி The Economist (த எகனாமிஸ்ட்) என்ற  ஆங்கில‌ செய்தித்தாள் கீழ்கண்ட வாறு எழுதியுள்ளது.

Saudi Arabia adopts the Gregorian calendar

THE kingdom presented its shift from the Islamic to the Gregorian calendar as a leap into modernity. In April the dynamic deputy crown prince of Saudi Arabia, Muhammad bin Salman, chose to call his transformation plan Vision 2030, not Vision 1451 after the corresponding Islamic year as traditionalists might have preferred. Recently his cabinet declared that the administration is adopting a solar calendar in place of the old lunar oneHenceforth they will run the state according to a reckoning based on Jesus Christ's birth, not on the Prophet Muhammad's religious mission.

But puritans in Islam's birthplace are wincing at their eviction from control first over public space, and now of time. Guardians of the Wahhabi rite, who seek to be guided by Muhammad's every act, ask whether they are now being required to follow Jesus. A slippery slope, the clergy warn, to forgetting the fasting month of Ramadan altogether; the authorities are rewinding the clock to the jahiliyyah, or pre-Islamic age of ignorance. The judiciary, a clerical bastion, still defiantly insists on sentencing miscreants according to the old calendar

இதே போன்று அரப்நியூஸ் என்ற செய்தித்தாளும் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

இஸ்லாமிய நாட்காட்டியை நீக்கி, புதிய நாட்காட்டியை புகுத்திய அக்பர்:

இஸ்லாமிய நாட்காட்டியினால் வரி போடுவதிலும், வருமானம் வசூலிப்பதிலும் பிரச்சனை இருப்பதினால், முகலாய அரசர் அக்பர், சூரியனை அடிப்படையாகக் கொண்டு ஒரு காலண்டரை தயாரித்து பாங்களாதேஷில் அறிமுகம் செய்ததாக கூறப்படுகின்றது.

அதாவது, கிரெகோரியன் நாட்காட்டியோடு ஒப்பிடும் போது, இஸ்லாமிய நாட்காட்டி 11 நாட்கள் ஒரு ஆண்டுக்கு குறைவாக உள்ளது.

கிரெகோரியன் காலண்டரின் 30 ஆண்டுகள், இஸ்லாமிய  காலண்டரின் படி 31 ஆண்டுகளுக்கு  சமமாகிறது. இஸ்லாமிய காலண்டரின் அடிப்படையில் உழவர்களிடம் வரி வசூல் செய்தால், அவர்கள் 31 ஆண்டுகள் வரி தரவேண்டும். அதிகபடியான ஒரு ஆண்டு வரி அவர்களுக்கு  நஷ்டமாக உள்ளது.

எனவே, அரசர் அக்பர், பல நிபுனர்களை நியமித்து, கிரெகோரியன் காலண்டருக்கு இணையான காலண்டரை உருவாக்கி பயன்பாட்டுக்கு கொண்டுவந்தாராம்.

இதைப் பற்றிய மேலதி விவரங்களுக்கு கிழ்கண்ட தொடுப்புக்களை சொடுக்கவும்:

Bangladeshi calendar - https://en.wikipedia.org/wiki/Bangladeshi_calendar & https://www.answering-islam.org/Index/C/calendar.html

உலக நாட்காட்டிகள் பற்றியபல சுவாரஸ்யமான  கேள்வி பதில்களை இங்கு காணலாம்:  Calendar FAQ

கேள்வி 362: ஜின்கள் என்றால் என்ன? இஸ்லாமுக்கும் ஜின்களுக்கும் என்ன சம்மந்தம்? ஜின்களில் நல்ல கெட்ட ஜின்கள் உள்ளனவா?

பதில் 362: இஸ்லாமின் படி ஜின்கள் என்பவர்கள் கண்ணுக்குத் தெரியாத ஆவிகள். இவர்களுக்கு மனிதர்களைப் போல நன்மை தீமைகளை தெரிவு செய்யும் சக்தியுண்டு என்று இஸ்லாம் கூறுகிறது. ஜின் என்ற பெயரில் ஒரு அத்தியாயம் (ஸூரா 72) குர்‍ஆனில் உள்ளது. ஜின்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒரு விசேஷ ஒற்றுமையுள்ளது. முஸ்லிம்கள் அல்லாஹ்வை நினைப்பதற்கும் அதிகமாக ஜின்களை நினைக்கிறார்கள்.  

நானும் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் வளர்ந்தபடியினால், என் சிறு வயதில் பெற்றோர்கள், அல்லது மற்றவர்கள் ஜின்கள் பற்றிச் சொல்லும் சுவாரஸ்யம் கலந்த பயம் உண்டாக்கும் விவரங்களைக் கேட்டு மிகவும் பயந்துள்ளேன். மசூதிக்குள்ளும் ஜின்கள் இருக்கும் என்றுச் சொல்வார்கள், எனவே மாலை நேர தொழுகை முடித்துக்கொண்டு வெளியே செல்லும் போது முதலாவதாக நான் இருப்பேன். வீட்டிலே கூட கழிவறைகளில் கெட்ட ஜின்கள் இருப்பதாகச் சொல்லி வைத்தார்கள், இதனால் கழிவறைக்கு செல்வதற்கும் பயப்படுவேன்.

ஜின்கள் பற்றி குர்‍ஆனும் ஹதீஸ்களும் சொல்லும் விவரங்கள், உங்கள் ஆய்வுக்காக:

  • ஜின்களை நெருப்பிலிருந்து அல்லாஹ் படைத்தான்: குர்‍ஆன் 7:12, 15:27, 38:76,  55:15, 6:100
  • அல்லாஹ்வை வணங்க படைக்கட்டவைகள் ஜின்கள்:  குர்‍ஆன் 51:56
  • அல்லாஹ் ஒவ்வொரு நபிக்கும் ஜின்களை விரோதிகளாக்கினான்:  6:112. 
  • கியாமத் நாளில் அல்லாஹ் ஜின்களிடம் கேள்வி கேட்பான்:  6:128, 130.
  • ஜின்களில் அனேகரை நரகத்திற்கென்று அல்லாஹ் படைத்தான்: 7:179, 11:119, 32:13. 
  • மனிதர்கள் ஜின்கள் ஒன்றாக சேர்ந்தாலும், குர்‍ஆன் போன்ற ஒன்றை கொண்டுவரமுடியாது, அல்லாஹ்வின் சவால்: 17:88
  • இப்லீஸ் / சைத்தான் ஜின் இனத்தைச் சேர்ந்தவன்: 18:50. 
  • சுலைமான் அரசனுக்கு ஜின்களிலிருந்து படையும், வேலையாட்களும் இருந்தார்கள், தேவாலயம் கட்ட உதவின‌:  27:17, 34:12.
  • ஜின்களுக்கு மறைவான ஞானம் இல்லை: 34:14.
  • ஜின்கள் குர்‍ஆனை கேட்டு சாட்சி பகிர்ந்தனர்: 46:30, 72:1. 
  • முஸ்லிம்களுக்கு அல்லாஹ் சொர்க்கத்தில்  கொடுக்கப்போகும் பெண்களை ஜீன்களும் தீண்டாத கன்னிகள்: 55:56, 55:74.
  • ஜின்னை தூணில் கட்டிப்போட விரும்பிய முஹம்மது, ஆனால் சுலைமான் அரசனுக்காக அதை விட்டுவிட்ட முஹம்மது:  புகாரி நூல் எண்: 461, 3423. 
  • பாங்கு சப்தத்தை கேட்கும் ஜின்: புகாரி நூல் எண்:  609, 3296. 
  • முஹம்மது நஜ்மு அத்தியாயத்தை ஓதி ஸஜ்தாச் செய்தார்கள், அனைவரோடும் கூட ஜின்களும் ஸஜ்தா செய்தன: புகாரி நூல் எண்:  1071.
  • முஹம்மது கூறினார்: வீடுகளில் வசிக்கும் பாம்புகள் ஜின்களாக இருக்கும்: புகாரி நூல் எண்:  3298, 4017.
  • முஹம்மது கூறினார்: மாலை வேளைகளில் ஜின்கள் பூமியில் பரவி (பொருள்களையும், குழந்தைகளையும்) பறித்துச் சென்று விடும்: புகாரி நூல் எண்: 3316.
  • ஜின்களுக்கு "முஹம்மது அல்லாஹ்வின் இறைத்தூதர்" என்று அடையாளப்படுத்திக் கொடுத்தது, ஒரு மரமாகும்:  புகாரி நூல் எண்: 3859. 
  • எலும்பும் கெட்டிச் சாணமும் ஜின்களின் உணவு: புகாரி நூல் எண்: 3860. 
  • பெண் ஜின்னும், சஹாபாக்களின் உரையாடலும்: புகாரி நூல் எண்: 3866. 
  • மனிதர்களில் சிலர் 'ஜின்' இனத்தாரில் சிலரை வழிபட்டுக் கொண்டிருந்தனர், ஜின்கள் இஸ்லாத்தை ஏற்றனர்: புகாரி நூல் எண்: 4714
  • ஜின்கள் ஜோதிடர்களுக்கு உதவி செய்கின்றன, சில வேளைகளில் அது உண்மையாகியும் விடுகின்றது: புகாரி நூல் எண்: 5762, 6213. 

ஜின்கள் பற்றி இன்னும் அனேக விவரங்கள் இருக்கின்றன, அவைகளை தேவையான இடங்களில் காண்போம்.

கேள்வி 363: காஃபிர் (பன்மை காஃபிரூன்) என்றால் யார்?

பதில் 363: இஸ்லாமின் படி அல்லாஹ்வை வணங்காதவர் காஃபிர் என்று அழைக்கப்படுகின்றார். வேறுவகையில் சொல்வதாக இருந்தால், இஸ்லாமியரல்லாதவர்கள் அனைவரும் காஃபிர்கள் ஆவார்கள். இந்தியாவில் உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் நாத்தீகர்கள் அனைவரும் முஸ்லிம்களின் படி காஃபிர்கள் ஆவார்கள்.

காஃபிர்கள் பற்றி குர்‍ஆனும் முஹம்மதுவும் என்ன கூறியுள்ளார்கள், என்பதை சுருக்கமாக இங்கு காண்போம்.

அல்லாஹ்வின் வழியை பின்பற்றாத காஃபிர்கள் நரக வாசிகள்:

குர்‍ஆன் 2:39. அன்றி யார் (இதை ஏற்க) மறுத்து, நம் அத்தாட்சிகளை பொய்ப்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரக வாசிகள்; அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் தங்கி இருப்பர்.

அல்லாஹ்வை நிராகரித்த  கிறிஸ்தவர்களும் கஃபிர்கள் தான்:

குர்‍ஆன்  5:72. "நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்" என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: "இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்" என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.

ஒரு முஸ்லிமைப் பார்த்து இன்னொரு முஸ்லிம் காஃபிர் என்று அழைத்தால், அவர்களிருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார்:

புகாரி எண்:  6103. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'

ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரரை நோக்கி 'காஃபிரே!' (இறைமறுப்பாளனே!) என்று கூறினால் நிச்சயம் அவர்களிருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஒரு முஸ்லிமை இன்னொரு முஸ்லிம் கொன்றால், அவன் காஃபிர் (இறைமறுப்பாளன்):

புகாரி எண்: 121. 'நபி(ஸல்) அவர்கள் தங்களின் இறுதி ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றிய நேரத்தில்) என்னிடம் 'மக்களை அமைதியுடன் செவி தாழ்த்திக் கேட்கும் படி செய்வீராக!' என்று கூறினார்கள். (மக்கள் அமைதியுற்ற பின்னர்) 'எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர் கழுத்தை ஒருவர் வெட்டிக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறி விடவேண்டாம்' என்று கூறினார்கள்' என ஜரீர்(ரலி) அறிவித்தார்.

இறைமறுப்பாளனின் இரண்டு தோள் புஜங்களுக்கிடையே உள்ள தூரம் அனேக கிலோமீட்டர்கள் இருக்கும்:

ஸஹீஹ் புகாரி எண் 6551

6551. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நரகத்தில்) இறைமறுப்பாளனின் இரண்டு தோள் புஜங்களுக்கிடையே உள்ள தூரம், துரிதமாகப் பயணிப்பவர் மூன்று நாள்கள் கடக்கும் தூரமாகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  

முஹம்மது நரகம், சொர்கம் பற்றிச் சொல்வதை யாரும் உடனே சரி பார்க்கமுடியாது. இந்த தைரியத்தில் நம்பமுடியாத விஷயங்களை சரளமாக முஹம்மது கூறியுள்ளார்.  முஹம்மது "(நரகத்தில்) இறைமறுப்பாளனின் இரண்டு தோள் புஜங்களுக்கிடையே உள்ள தூரம், துரிதமாகப் பயணிப்பவர் மூன்று நாள்கள் கடக்கும் தூரமாகும்" என்று கூறியுள்ளார். ஒரு மனிதனின் இரண்டு தோள் புஜங்களுக்கு இடையே இருக்கும் தூரம் அனேக கிலோ மீட்டர்கள் இருக்கும் என்று இவர் கூறுகிறார். கடந்த 14 நூற்றாண்டுகளாக இதையும் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் முஸ்லிம்கள். ஒரு ஆரோக்கியமுள்ள மனிதன் துரிதமாக நடந்தால், ஒரு மணிக்கு குறைந்த பட்ச வேகமாகிய 5 கிலோமீட்டர் என்று கணக்கிட்டால், 8 மணி நேரம் நடந்தால் அவன் 40 கிலோ மீட்டர் தொலைவை கடக்கமுடியும். மூன்று நாட்களை கணக்கில் கொண்டால், 40 x 3 = 120 கிலோ மீட்டர். ஒரு மனிதனின் ஒரு புஜத்திற்கும், அடுத்த புஜத்திற்கும் இடையே இருக்கும் தூரம் 120 கிலோ  மீட்டர் இருக்குமா? அறிவுள்ளவர்கள் சிந்திக்கட்டும். முஹம்மது குதிரையில் அல்லது ஒட்டகத்தில் பயணிப்பவர் பற்றி சொல்லியிருக்கக்கூடும். இப்படி  ஒரு குதிரையில் செல்பவன் கடக்கும் தூரத்தை கணக்கிட்டால், என்னவாகும் இந்த கணக்கு?  எங்கேயோ போகும். இப்படியெல்லாம் புதுமையான பொய்களைச் சொல்லி முஹம்மது தன் மார்க்க மக்களை குஷி படுத்தியுள்ளார்.  

கேள்வி 364: வேதங்கள் கொடுக்கப்பட்டோர் (அஹல் அல்-கிதாப் - AHL AL-KITAB) என்றால் யார்?  

பதில் 364: அஹல் அல்கிதாப் என்றால், வேதம் கொடுக்கப்பட்டோர்கள் என்று யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் குர்‍ஆன் குறிக்கிறது.

வேதங்கள் கொடுக்கப்பட்டோரிடம் சென்று முஸ்லிம்கள் கற்கவேண்டும்:

குர்‍ஆன்  21:7. (நபியே!) உமக்கு முன்னரும் மானிடர்களையே அன்றி (வேறெவரையும்) நம்முடைய தூதர்களாக நாம் அனுப்பவில்லை; அவர்களுக்கே நாம் வஹீ அறிவித்தோம். எனவே "(இதனை) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (நினைவுபடுத்தும்) வேதங்களுடையோரிடம் கேட்டுத் (தெரிந்து) கொள்ளுங்கள்" (என்று நபியே! அவர்களிடம் கூறும்).

குர்‍ஆன்  16:43. (நபியே!) இன்னும் உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர வேறல்லர்; ஆகவே (அவர்களை நோக்கி) "நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால். (முந்திய) வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்" (என்று கூறுவீராக).

முஹம்மதுவிற்கே சந்தேகம் வந்தாமும் வேதம் கொடுக்கப்பட்ட யூத கிறிஸ்தவர்களிடம் கேட்டு சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளவேண்டும்.

குர்‍ஆன்  10:94. (நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொள்வீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக; நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது - எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம்.  10:95. அன்றியும் அல்லாஹ்வின் வசனங்களை பொய்ப்பிப்போர்களில் ஒருவராக நீரும் ஆகிவிட வேண்டாம்; அவ்வாறாயின் நஷ்டமடைவோரில் நீரும் ஒருவராவீர்.

முஹம்மது தம் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள, தரம் குறைந்த ஒன்றிடம் சென்று சரிபார்க்கும் படி அல்லாஹ் கூறுவானா? நிச்சயம் இல்லை. எனவே யூத கிறிஸ்தவ வேதங்கள் 'இஸ்லாமின் கடைசி நபியின் சந்தேகத்தை' தீர்க்கும் தரமுள்ளது என்று குர்‍ஆன் சொல்கிறது.

கேள்வி 365: முஜாஹீர்கள் என்றால் யார்?

பதில் 365: அல்லாஹ்விற்காக ஜிஹாதில் ஈடுபடுகிறவர்களை முஜாஹீர்கள் என்பார்கள். 

அரபி வார்த்தை: முஜாஹித் என்பது ஒருமை, முஜாஹிதீன் என்பது பன்மையாகும்.

முஜாஹீர்கள் பற்றி குர்‍ஆன்:

முஹம்மது ஜான் தமிழாக்கம்: 

குர்‍ஆன் 47:31. அன்றியும், (அல்லாஹ்வின் பாதையில் போரிடும்) உங்களிலிருந்துள்ள முஜாஹிதுகளையும், பொறுமையாளர்களையும் நாம் அறியும் வரை உங்களை நிச்சயமாக நாம் சோதிப்போம்; உங்கள் செய்திகளையும் நாம் சோதிப்போம் (அவற்றின் உண்மையை வெளிப்படுத்துவதற்காக).

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்(IFT) தமிழாக்கம்:

47:31. நாம் உங்களை நிச்சயமாகச் சோதனைக்குள்ளாக்குவோம் உங்கள் நிலைமைகளைப் பரிசீலித்து உங்களில் யார் முஜாஹிதுகள் போராளிகள், நிலைகுலையாது துணிச்சலுடன் இருப்பவர்கள் என்பதை நாம் கண்டறிவதற்காக! 

கேள்வி 366: உம்ரா (Umra) என்றால் என்ன?

பதில் 366: உம்ரா என்றால் இஸ்லாமியர்கள் மக்காவிற்குச் செல்லும் புனித யாத்திரையாகும். இதனை சின்ன ஹஜ் என்பார்கள்.

பக்ரீத் மாதத்தில் செல்லும் புனித யாத்திரை ஹஜ் எனப்பபடும், இதர மாதங்களில் செல்லும் புனித யாத்திரையை உம்ரா  என்பார்கள்.  உம்ரா செய்வது குறைவான நன்மைகளைத் தருகிறது, ஹஜ் செய்வது அதிக நன்மைகளைத் தருகிறது என்று இஸ்லாம் கூறுகின்றது.

கேள்வி 367: நபித்தோழர்கள்/சஹாபாக்கள் என்றால் யார்?

பதில் 367:  முஹம்மது உயிரோடு இருந்த போது, அவரை நபி என்று நம்பி, அவரோடு கூட இருந்த முஸ்லிம்களை சபாஹாக்கள் என்பார்கள்.  இவர்களை நபித்தோழர்கள் (Companions) என்றும் அழைப்பார்கள்.

அரபியில்:

  • "ஸஹாபி" (ṣaḥābiyy) : ஆண் - ஒருமை
  • "ஸஹாபிய்யாஹ்" (ṣaḥābiyyah) : பெண் - ஒருமை
  • "ஸஹாபா" (Al-ṣaḥābah) : பன்மை

சஹாபாக்களை பல வகைகளில் பிரிக்கிறார்கள்:

1) முஹாஜிர்கள்: முஹம்மதுவோடு மதினாவிற்கு ஹிஜ்ரா செய்தவர்கள். இவர்கள் மக்காவில் இருக்கும் போதே முஹம்மதுவை நபி என்று நபி இஸ்லாமை தழுவியர்கள்.

2) அன்சார்கள்: மதினாவில் இருந்தவர்கள், முஹம்மதுவை நபியாக ஏற்றுக்கொண்டவர்கள்.

3) பத்ரியூன்: பத்ரு போரில் முஹம்மதுவோடு பங்கு பெற்ற சஹாபாக்கள்.

இப்படி ஒவ்வொரு முக்கியமான உடன்படிக்கை மற்றும் போரில் ஈடுபட்ட சஹாபாக்கள் என்று வகைப்படுத்துகிறார்கள். 

தோராயமாக எத்தனை சஹாபாக்கள்?

முஹம்மதுவோடு மிகவும் நெருங்கிய சஹாபாக்கள் என்று அறிஞர்கள் 50 அல்லது 60 பேரை பட்டியலிட்டுள்ளார்கள். இவர்கள் மட்டுமல்லாமல், இஸ்லாமிய சரித்திர நூல்களில் (ibn Sa'd's early Book of the Major ClassesAl-Qurtubi's Istīʻāb fī maʻrifat al-Aṣhāb) மேலும் அனேக சஹாபாக்களின் பெயர்களையும், விவரங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். இந்நூல்களில் 2770 ஆண் சஹாபாக்களின் விவரங்களும், 381 பெண் சஹாபாக்களின் விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளது (மூலம்: https://en.wikipedia.org/wiki/Companions_of_the_Prophet).

முஹம்மதுவை நேரடியாக பார்த்தவர்கள் என்று  கணக்கிட்டால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகும், அதாவது மக்காவை ஆக்கிரமித்தபோது, 10,000 பேர் மக்காவை நோக்கி சென்றதாக அறியமுடியும், மேலும் போரில் பங்கு பெறாதார்களும் இன்னும் அதிகமாக இருந்திருப்பார்கள்.

சில இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துப்படி, முஹம்மதுவை பார்த்தவர்கள், அவரோடு சில காலம் வாழ்ந்தவர்கள் அனைவரையும் சஹாபாக்கள் என்று சொல்லமுடியாது. சஹாபாக்கள் என்றால் அவர்களுக்கென்று சில தனிப்பட்ட குணங்கள் உண்டு என்றுச் சொல்கிறார்கள்.

கேள்வி 368: பனி/பனூ இஸ்ராயீல் (Bani Israel) என்றால் யார்?

பதில் 368: குர்‍ஆனிலும், ஹதீஸ்களிலும் "பனி இஸ்ராயீல்" என்ற சொற்கள் "இஸ்ரவேல்" மக்களைக் குறிக்க பயன்படுத்தட்டுள்ளது. பைபிளின் பழைய ஏற்பாட்டிலுள்ள யூதர்களையும், முஹம்மதுவின் காலத்தில் இருந்த யூதர்களைக் குறிக்கவும் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்ராயீல் மக்கள் பற்றிய சில குர்‍ஆன் வசனங்களைக் காண்போம்.

இஸ்ராயீலின் சந்ததியை மேன்மைப்படுத்திய அல்லாஹ்:

2:40. இஸ்ராயீலின் சந்ததியினரே! நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட்கொடையை நினைவு கூறுங்கள்; நீங்கள் என் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்; நான் உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்; மேலும், நீங்கள் (வேறெவருக்கும் அஞ்சாது) எனக்கே அஞ்சுவீர்களாக.

2:47. இஸ்ராயீல் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள்.

2:122. (யஃகூப் என்ற) இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அளித்த என் நன்கொடைகளை நினைவு கூறுங்கள்; இன்னும் நிச்சயமாக நான் உங்களை உலக மக்கள் எல்லோரையும்விட மேம்பாடுடையோராகச் செய்தேன்.

இஸ்ராயீல் மக்களுக்கு அல்லாஹ் அத்தாட்சிகளை அனுப்பினான்:

2:211. (நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளிடம் (யஹூதிகளிடம்) நீர் கேளும்: "நாம் எத்தனை தெளிவான அத்தாட்சிகளை அவர்களிடம் அனுப்பினோம்" என்று; அல்லாஹ்வின் அருள் கொடைகள் தம்மிடம் வந்த பின்னர், யார் அதை மாற்றுகிறார்களோ, (அத்தகையோருக்கு) தண்டனை கொடுப்பதில் நிச்சயமாக அல்லாஹ் கடுமையானவன்.

'தவ்ராத்' க்கு முன்பு இஸ்ராயீல்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த உணவு கட்டுப்பாடு:

3:93. இஸ்ராயீல் (என்ற யஃகூப்) தவ்ராத் அருளப்படுவதற்கு முன்னால் தன் மீது ஹராமாக்கிக் கொண்டதைத் தவிர, இஸ்ரவேலர்களுக்கு எல்லாவகையான உணவும் அனுமதிக்கப்பட்டிருந்தது; (நபியே!) நீர் கூறும்: "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் தவ்ராத்தையும் கொண்டு வந்து அதை ஓதிக்காண்பியுங்கள்" என்று.

ஒருவனை கொலை செய்தால், அனைவரையும் கொலை செய்ததற்கு சமம் என்ற கட்டளை பெற்றவர்கள்:

5:32. இதன் காரணமாகவே, "நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.

இஸ்ரேல் நாட்டை சொந்தமாக இஸ்ராயீலுக்கு அல்லாஹ் கொடுத்தான்:

5:21. (தவிர, அவர்) "என் சமூகத்தோரே! உங்களுக்காக அல்லாஹ் விதித்துள்ள புண்ணிய பூமியில் நுழையுங்கள்; இன்னும் நீங்கள் புறமுதுகு காட்டி திரும்பி விடாதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் நஷ்ட மடைந்தவர்களாகவே திரும்புவீர்கள்" என்றும் கூறினார்.

இஸ்ராயீல் மக்களுக்கு வழிகாட்டியாக மூஸாவின் மூலமாக வேதம் கொடுக்கப்பட்டவர்கள்:

17:2. இன்னும், நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம்; நாம் அதை இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வழிகாட்டியாக ஆக்கி, "என்னையன்றி வேறு எவரையும் நீங்கள் பாதுகாவலனாக ஆக்கிக் கொள்ளாதீர்கள் (எனக் கட்டளையிட்டோம்).

32:23. நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (அவ்) வேதத்தைக் கொடுத்தோம். எனவே, அவர் அதைப் பெற்றதைப்பற்றி சந்தேகப்படாதீர்; நாம் இதனை இஸ்ராயீலின் சந்ததிக்கு வழிகாட்டியாகவும் ஆக்கினோம்.

இஸ்ராயீலின் சந்ததியினரை வேதத்திற்கு வாரிசாக்கினோம்:

40:53. நிச்சயமாக மூஸாவுக்கு நேர்வழி (காட்டும் வேதத்தை) நாம் அளித்தோம் - அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரை வேதத்திற்கு வாரிசாக்கினோம்.

இஸ்ராயீலின் சந்ததியினருக்கு வேதத்தையும், அதிகாரத்தையும், நுபுவ்வத்தையும் கொடுத்தோம்:

45:16. நிச்சயமாக நாம், இஸ்ராயீலின் சந்ததியினருக்கு வேதத்தையும், அதிகாரத்தையும், நுபுவ்வத்தையும் கொடுத்தோம்; அவர்களுக்கு மணமான உணவு (வசதி)களையும் கொடுத்தோம் - அன்றியும் அகிலத்தாரில் அவர்களை மேன்மையாக்கினோம்.

கேள்வி 369: குர்‍ஆனை மனனம் செய்தவர்களை என்னவென்று அழைப்பார்கள்?

பதில் 369: குர்‍ஆனை முழுவதுமாக மனனம் செய்தவரை 'ஹஃபிஜ்(Hafiz)' என்று அழைப்பார்கள். இதன் பொருள் பாதுகாவளர் அல்லது மனனமிட்டவர் என்பதாகும்.

ஹுஃப்ஃபாஜ்(Huffaz) என்பது பன்மையாகும். ஹஃபீஜா(Hafiza) என்பது பெண் பால் ஆகும்.

அதாவது ஒரு ஆண் குர்‍ஆனை முழுவதுமாக மனனம் செய்திருந்தால், அவரை ஹஃபீஜ் என்பார்கள், ஒரு பெண் குர்‍ஆனை மனனம் செய்திருந்தால், அவரை  ஹஃபீஜா என்பார்கள்.

இஸ்லாமிய நபி முஹம்மது தனக்கு இறக்கப்பட்ட குர்‍ஆனை முழுவதுமாக மனப்பாடம் செய்திருந்தார் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். ஆனால், இஸ்லாமிய ஆதாரங்களின் படி, பல முறை முஹம்மது குர்‍ஆன் வசனங்களை மறந்துள்ளார், அந்த நேரத்தில் யாரோ ஒரு நபர் அவருக்கு ஞாபகப்படுத்தியுள்ளார். 

கேள்வி 370: ஈத் உல் ஃபித்ர்  (Eid-ul Fitr) என்றால் என்ன? Eid al-Fitr 

பதில் 370: ரமலான் மாதத்தின் முதல் நாள் முதற்கொண்டு 30 நாட்கள் தொடர்ந்து நோன்பு இருந்து கடைசியாக கொண்டாடப்படும் இஸ்லாமிய பண்டிகையின் பெயர் தான் "ஈத் அல்-பித்ர்" அல்லது "ஈத் உல்-பித்ர்" என்பதாகும். இதனை ரமலான் / ரம்ஜான் பண்டிகை என்றும் கூறுவர்.

ரமளான் மாதம் நோன்பா? அல்லது விருந்தா?

ஒரு முஸ்லிம் குடும்பத்தில், சாதாரண மாதங்களில் உணவிற்காக ஆகும் செலவை விட, நோன்பு மாதத்தில் (ரமளான்) அதிகமாக செல்வாகிறது. ரமளானில் உணவிற்கு இப்படி செலவு அதிகமானால், இம்மாதத்தை "நோன்பு மாதம்" என்று ஏன் நாம் அழைக்கவேண்டும்? உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், இந்த மாதம் "விருந்து மாதம்" என்று அழைக்கலாம், பல வகையான பண்டங்கள், மாமிச உணவுகள் அதிகமாக செலவிடப்படுகின்ற மாதம் இது, இதை நோன்பு மாதம் என்று சொல்வது தவறல்லவா?

கேள்வி 371: அதான் (அஜான், பாங்கு) என்றால் என்ன?

பதில் 371: பாங்கு அல்லது அதான் / அஜான் என்பது முஸ்லிம்கள் தொழுகை தொடங்குவதற்கு முன்பு மசூதிகளிலிருந்து விடுக்கப்படும் அழைப்பு ஆகும். ஒரு நாளில் ஐந்து முறை அதான் விடுக்கப்படும். பாங்கு என்பது பாரசீகச் சொல்லாகும். அதான் என்பது அரபிச் சொல்லாகும். பாங்கு சொல்வதற்காக நியமிக்கப்படுபவரை "முஅத்தின்" என்று அழைப்பார்கள்.

பாங்கு அரபி மொழியில் சொல்லப்படும். பாங்கின் அரபி மற்றும் தமிழாக்கத்தை கீழே காணலாம்:

தொழுகைக்கான அழைப்பு (பாங்கு அல்லது அதான்):

  • அல்லாஹு அக்பர் (2 முறை) - இறைவன் மிகப் பெரியவன் 
  • அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ் (2 முறை) – இறைவன் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று சாட்சி கூறுகிறேன்.
  • அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்(2 முறை) – முஹம்மது இறைவனின் தூதர் என்று சாட்சி சொல்கின்றேன்
  • ஹய்ய அலஸ்ஸலாஹ் (2 முறை)– தொழுகைக்கு விரைந்து வாருங்கள்
  • ஹய்ய அலல்ஃபலாஹ் (2 முறை) – வெற்றியின் பக்கம் வாருங்கள்
  • அல்லாஹு அக்பர் (2 முறை) – இறைவன் மிகப் பெரியவன்
  • லா இலாஹ இல்லல்லாஹு - இறைவன் ஒருவனைத் தவிர வேறு கடவுள் இல்லை.

அதிகாலை தொழுகைக்காக (சுப்ஹ்) அழைப்பு விடும்போது கீழ்வரும் வரிகளை இணைத்து அழைப்பு விடுவர்.

  • அஸ்ஸலாத்து ஹைரும் மினன் நெளம்(2 முறை) - தூக்கத்தை விடத் தொழுகை மேலானது

மூலம்: ta.wikipedia.org/s/k76

அதான் பின்னணி:  பாங்கு சொல்வது எப்போது தொடங்கப்பட்டது?

புகாரி நூல் எண்: 604

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்படுவதில்லை. அவர்கள் ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து கொள்வார்கள். ஒரு நாள் இது பற்றி எல்லோரும் கலந்தாலோசித்தனர்.

அப்போது சிலர், கிறித்தவர்களைப் போன்று மணி அடியுங்கள் என்றனர்.

வேறு சிலர் யூதர்கள் வைத்திருக்கிற கொம்பைப் போன்று நாமும் கொம்பூதலாமே என்றனர்.

அப்போது உமர்(ரலி) 'தொழுகைக்காக அழைக்கிற ஒருவரை ஏற்படுத்தக் கூடாதா?' என்றனர். உடனே பிலால்(ரலி) அவர்களிடம் 'பிலாலே! எழுந்து தொழுகைக்காக அழையும்' என்று நபி(ஸல்) கூறினார்கள்..

பாங்கு சொல்வதைப் பற்றிய முஹம்மதுவின் கட்டுக்கதை: ஷைத்தான் பின் துவாரத்தின் வழியாகக் காற்றுவிட்டவனாக ஓடி விடுகிறான்

முஹம்மது எப்படியெல்லாம் மக்களை முட்டாள்களாக்க முடியுமோ, அப்படியெல்லாம் பொய்களைச் சொல்லி அவர்களை முட்டாள்களாக்கியுள்ளார். தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் பாங்கு சப்தம் தனக்குக் கேட்காமலிருப்பதற்காக ஷைத்தான் பின் துவாரத்தின் வழியாகக் காற்றுவிட்டவனாக ஓடி விடுகிறான். பாங்கு முடிந்ததும் திரும்பி வந்து இகாமத் கூறப்பட்டதும் மீண்டும் ஓடுகிறான். இப்படி முஹம்மது கூறியுள்ளார். சாத்தான் இப்படியெல்லாம் காற்றுவிட்டவனாக ஓடுவானா? இது அறிவுடமையா?  உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மசூதிகளில் பாங்கு சொல்லும் போது, ஒரே நேரத்தில் எப்படி சாத்தான் எல்லா இடங்களிலும் காற்றுவிட்டவனாக ஓடமுடியும்? இது உண்மையென்றால், சாத்தான் அல்லாஹ்வைப் போன்று சர்வவியாபியாக இருக்கிறான் என்று அர்த்தம். இப்படி கட்டுக்கதைகளைச் சொல்லி மக்களை முஹம்மது ஏமாற்றியுள்ளார். இவரை நபி என்று நாம் கூறினால், இது மிகப்பெரிய பாவமாக  இருக்கும்.

ஸஹீஹ் புகாரி எண்  1231.

1231 'தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் பாங்கு சப்தம் தனக்குக் கேட்காமலிருப்பதற்காக ஷைத்தான் பின் துவாரத்தின் வழியாகக் காற்றுவிட்டவனாக ஓடி விடுகிறான். பாங்கு முடிந்ததும் திரும்பி வந்து இகாமத் கூறப்பட்டதும் மீண்டும் ஓடுகிறான். இகாமத் முடிந்ததும் மீண்டும் வந்து தொழுபவரின் உள்ளத்தில் ஊடுருவி 'இதை இதையெல்லாம் நினைத்துப்பார்' எனக் கூறி, அவர் இதுவரை நினைத்துப் பார்த்திராதவற்றையெல்லாம் நினைவூட்டி அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதை மறக்கடிக்கிறான். உங்களில் ஒருவருக்குத் தாம் தொழுத ரக்அத்களில் மூன்றா அல்லது நான்கா என்று தெரியவிட்டால் (கடைசி) இருப்பில் இரண்டு ஸஜ்தாச் செய்து கொள்ளட்டும்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

கேள்வி 372: அமீனா (Aminah) என்ற  பெண்மணி யார்?

பதில் 372:  இந்த பெண்மணி, வஹாப் என்பவரின் மகளாவார்கள். இவர் அப்துல்லாஹ்வின் மனைவியும், முஹம்மதுவின் தாய் ஆவார்கள். இவர்கள் முஹம்மதுவிற்கு தாய்ப்பால் கொடுக்கமுடியாத நிலையில் இருந்தபடியால், ஹலிமா என்ற ஒரு பெண்ணிடம் முஹம்மதுவை கொடுத்து பாலூட்டச் சொன்னார்கள். அமீனா அவர்கள் முஹம்மதுவிற்கு ஆறு வயது இருக்கும் போது காலமானார்கள். அதன் பிறகு முஹம்மதுவை அவருடைய தாத்தா அப்துல் முத்தாலிபும், அதன் பிறகு அபூ தாலிப்பும் முஹம்மதுவை வளர்த்து வந்தார்கள். 

முஹம்மதுவின் தாயும் தந்தையும் நரகத்தில் இருப்பார்கள்:

தம்முடைய தாயும் தந்தையும் நரகத்தில் இருப்பார்கள் என்று முஹம்மது கூறியுள்ளார், முஸ்லிம் நூல் இதனை பதிவு செய்துள்ளது.

1777. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத்தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள், "நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத்தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. 

347. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார்?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(நரக) நெருப்பில்" என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்றபோது அவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, "என் தந்தையும் உன் தந்தையும் (நரக) நெருப்பில்தான் (இருக்கிறார்கள்)" என்று கூறினார்கள்.

கேள்வி 373: அர்ஷ் (Al-ʿArsh) என்பது என்ன?

பதில் 373: அல்லாஹ் உட்கார்ந்து இருக்கும் சிம்மாசனத்திற்கு "அர்ஷ்" என்று பெயர்.

அல்லாஹ்வின் நாற்காலி அர்ஷ் தண்ணீர் மீது அமைந்துள்ளது:

குர்‍ஆன் 11:7. அவனே வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் அதற்கு முன்னர் அவனுடைய அர்ஷ்* நீரின் மீது இருந்தது எதற்காகவெனில் உங்களில் யார் நற்செயல் புரியக்கூடியவர் என்பதைச் சோதித்துப் பார்ப்பதற்காக! இப்போது நபியே! நீர் மக்களிடம் "நீங்கள் மரணமடைந்த பின் திண்ணமாக எழுப்பப்படுவீர்கள்!" என்று கூறினால் இறைநிராகரிப்பாளர்கள் உடனே கூறுவார்கள்: "இது வெளிப்படையான சூனியமே அன்றி வேறில்லை."

குர்‍ஆன்  7:54. நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கின்றது; இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.

கேள்வி 374: அரஃபத் என்பது இடத்தின் பெயரா அல்லது மனிதர்களின் பெயரா?

பதில் 374: அரஃபத் என்பது மக்காவிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடத்தின் பெயராகும். இதைப் பற்றி குர்‍ஆனிலும் கீழ்கண்ட வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

2:198. (ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல்(அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது; பின்னர் அரஃபாத்திலிருந்து திரும்பும்போது "மஷ்அருள் ஹராம்" என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு(தியானம்)செய்யுங்கள்; உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள்.

இஸ்லாமிய புனித பயணம் செய்யும் முஸ்லிம்கள், இந்த அரஃபத் பகுதியில் உள்ள மலையில் வந்து ஒரு நாள் தங்கி, தங்கள் பாவங்களை மன்னிக்கும்படி அல்லாஹ்விடம் வேண்டுவார்கள். ஹஜ் செய்பவர்கள் இங்கு வந்து இப்படி  செய்யவில்லையென்றால், அவர்களின் ஹஜ் என்பது முழுமைப்பெறாது என்றும் சொல்லப்படுகின்றது.

புகாரி நூல் எண்: 4520:

4520. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின் போது) குறையுயரும் அவர்களின் மதத்தவர்களும் முஸ்தலிஃபாவிலேயே தங்கிவிடுவார்கள். (ஹரம் - புனித எல்லையைவிட்டு வெளியேறமாட்டார்கள்.) அவர்கள் (இந்த விஷயத்தில்) 'உறுதிமிக்கவர்கள்' எனப் பெயரிடப்பட்டு வந்தனர். மற்ற அரபுகள் அனைவருமே அரஃபாத்தில் தங்கிவந்தார்கள். இஸ்லாம் வந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு (ஃதுல்ஹஜ் 9 வது நாளில்) அரஃபாத் சென்று, அங்கே தங்கியிருந்துவிட்டு அங்கிருந்தே திரும்ப வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டான். அந்தக் கட்டளைதான் 'மக்கள் அனைவரும் திரும்புகிற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்' எனும் (திருக்குர்ஆன் 02:199 வது) இறைவசனமாகும்.

முஹம்மது தம்முடைய கடைசி பிரசங்கத்தி இந்த மலையிலிருந்து கொடுத்தார் என்று இஸ்லாம் சொல்கிறது.

புகாரி நூல் எண்: 1739

1739. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் 10-ஆம் நாள் உரை நிகழ்த்தினார்கள். அப்போது, 'மக்களே! இது எந்த நாள்?' எனக் கேட்டார்கள். மக்கள் 'புனிதமிக்க தினம்' என்றனர். பிறகு நபி(ஸல்) அவர்கள் 'இது எந்த நகரம்?' எனக் கேட்டதும் மக்கள் 'புனிதமிக்க நகரம்' என்றனர். பிறகு அவர்கள் 'இது எந்த மாதம்?' எனக் கேட்டதும் மக்கள் 'புனிதமிக்க மாதம்!' என்றனர். பிறகு நபி(ஸல்) அவர்கள், 'நிச்சயமாக உங்களுடைய இந்த மாதத்தில், உங்களுடைய இந்த நாள் எவ்வாறு புனிதம் பெற்று விளங்குகிறதோ அவ்வாறே உங்களின் உயிர்களும் உடைமைகளும் கண்ணியமும் உங்களுக்குப் புனிதமானவையாகும்!' எனப் பல முறை கூறினார்கள். பிறகு தலையை உயர்த்தி, 'இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்து விட்டேனா? இறைவா! நான் (உன் மார்க்கத்தை) சேர்ப்பித்து விட்டேனா?' என்றும் கூறினார்கள். என்னுடைய உயிர் யாருடைய கைவசம் உள்ளதோ அ(வ்விறை)வன் மீது ஆணையாக! இது அவர்கள் தங்களின் சமுதாயத்திற்கு வழங்கிய இறுதி உபதேசமாகும். பின்னர் 'இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு அறிவித்து விடுங்கள்! என்னுடைய மரணத்திற்குப் பின் நீங்கள் ஒருவரோடொருவர் சண்டையிட்டு நிராகரிப்பவர்களாகி விட வேண்டாம்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் 'நபி(ஸல்) அவர்கள் அரஃபாவில் உரை நிகழ்த்த கேட்டேன்' என்ற வாக்கியம் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

குறிப்பு: யாசெர் அரஃபத்(Arafat, Yasser)  என்ற பெயரில் ஒரு நபரும் இருந்தார், இவர் "பலஸ்தீன விடுதலை இயக்கத்தின்(PLO)" தலைவராக இருந்தார். இஸ்ரேல் நாட்டுடன் விடுதலைக்காக போராடிய இயக்கமாகும் இது. இவரைப் பற்றி வேறு ஒரு கேள்வியில் காண்போம்.

 

கேள்வி 375: ஷம்ஸ் என்ற அரபி வார்த்தையின் பொருள் என்ன?

பதில் 375: அரபி வார்த்தை "ஷம்ஸ்" என்பதன் பொருள் "சூரியன்" என்பதாகும். குர்‍ஆனின் 91வது ஸூராவிற்கு (அத்தியாயத்திற்கு) ஷம்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

"ஷம்ஸுத்தீன்" என்ற பெயரை முஸ்லிம்கள் வைத்திருப்பதை நாம் காணலாம். இந்த பெயர் இரண்டு வார்த்தைகளின் கூட்டு ஆகும்.

"ஷம்ஸ்" என்றால் சூரியன், "தீன்" என்றால் "மதம்" என்று பொருள் முக்கியமாக இஸ்லாம் என்று கூறலாம். ஆக ஷம்ஸுத்தீன் என்றால், "மதத்தின் சூரியன்" என்று பொருள். சில இஸ்லாமிய அறிஞர்கள் "தீன்" என்ற வார்த்தையை பெயர்களில் பயன்படுத்தவேண்டாம் என்று ஆலோசனை கூறுகிறார்கள்.

 

கேள்வி 376: இத்தா (Iddah) என்றால் என்ன?  ஏன் இஸ்லாமிய பெண்களுக்கு இத்தா நாட்கள் கொடுக்கப்படுகின்றன?

பதில் 376: இத்தா (காத்திருக்கும் காலம்) என்பது ஒரு பெண் தன் கணவரின் மரணத்திற்குப் பிறகு அல்லது விவாகரத்துக்குப் பிறகு, அடுத்த திருமணம் செய்யாமல் "காத்திருக்கும் காலமாகும்". அந்த சமயத்தில் அவள் வேறொரு ஆணை திருமணம் செய்து கொள்ளக்கூடாது.

இந்த இத்தா காலம் காத்திருக்காமல், அந்தப்பெண் வேறு ஆணை திருமணம் செய்துக்கொண்டால், அதன் பிறகு இவள் கர்ப்பமானால், அந்த பிள்ளையின் தந்தை யார்? என்ற கேள்விக்கு பதில் சொல்வது மிகவும் கடினமாக இருக்கும் என்பதால் இந்த "காத்திருக்கும் காலம்" நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இத்தாவின் விதிவிலக்கு: 

கீழ்கண்ட வசனத்தில் "ஒரு பெண்ணை திருமணம் செய்த பிறகு, அவர்கள் உடலுறவு கொள்வதற்கு முன்பாக, கணவன் விவாகரத்து செய்துவிட்டால், இந்த இத்தா காலம் தேவையற்றது" என்று குர்‍ஆன் சொல்கிறது.

33:49. ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களை தொடுவதற்கு முன்னமேயே "தலாக்" செய்து விட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக் கூடிய (இத்தத்)தவணை ஒன்றும் உங்களுக்கு இல்லை - ஆகவே அவர்களுக்குத் (தக்கதாக) ஏதேனும் கொடுத்து அழகான முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள்.

மூன்று வகையான பெண்களுக்கு இத்தா காலம்

கீழ்கண்ட வசனத்தை கவனிக்கவும்:

அப்துல் ஹமீது பாகவி தமிழாக்கம்:

65:4. (தலாக் சொல்லப்பட்ட) உங்கள் மனைவிகளில் எவர்கள் (அதிக வயதாகி) மாதவிடாயின் நம்பிக்கையிழந்து, (இத்தாவைக் கணக்கிட) என்ன செய்வதென்று நீங்கள் சந்தேகத்திற்கு உள்ளாகிவிட்டால், அத்தகைய பெண்களுக்கும், இன்னும் எவர்களுக்கு இதுவரையில் மாதவிடாய் ஏற்படவில்லையோ அவர்களுக்கும், இத்தாவின் தவணை மூன்று மாதங்களாகும். கர்ப்பமான பெண்களுக்கு இத்தாவின் தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையில் இருக்கின்றது. எவர்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயப்படுகின்றார்களோ, அவர்களுடைய காரியத்தை அவர்களுக்கு எளிதாக்கி விடுகின்றான்.

இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) தமிழாக்கம்:

65:4. உங்கள் பெண்களில், எவர்கள் 'இனி மாதவிலக்கு வராது' என்று நம்பிக்கையிழந்து விட்டிருக்கின்றார்களோ அவர்களுடைய விஷயத்தில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால், (நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்:) அவர்களுடைய இத்தாகாலம் மூன்று மாதங்களாகும். மேலும், எந்தப் பெண்களுக்கு இதுவரையிலும் மாதவிலக்கு வரவில்லையோ அவர்களுக்கான விதிமுறையும் இதுவே! மேலும், கர்ப்பிணிகளுக்கான இத்தா வரம்பு அவர்கள் குழந்தை பெற்றெடுப்பதுடன் முடிகின்றது. யார் அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றாரோ அவருடைய விவகாரத்தில் அல்லாஹ் இலகுவை ஏற்படுத்தியிருக்கின்றான். 

மூன்று வகையான பெண்களுக்கு இத்தா காலம் நியமிக்கப்பட்டுள்ளது:

1) வயது காரணமாக "இனி மாதவிலக்கு வராது" என்ற நிலையில் இருக்கும் பெண்கள்:  மூன்று மாதங்கள் காத்திருப்பு காலமாகும்.

2) இதுவரையில் மாதவிலக்கு வராத பெண்கள்/சிறுமிகள்: மூன்று மாதங்கள் காத்திருப்பு காலமாகும்.

3) கர்ப்பிணிப்பெண்க‌ள்: குழந்தை பிறக்கும் வரையில் காத்திருப்பு காலமாகும்.

வயதுக்கு வராத சிறுமிகளை திருமணம் செய்து, அவர்களோடு உடலுறவு கொல்ல அல்லாஹ் அனுமதிக்கிறான்:

அல்லாஹ் மேற்கண்ட குர்‍ஆன் வசனத்தில் சிறுமிகளாக இருக்கும் பெண் குழந்தைகளை திருமணம் செய்ய அனுமதி அளித்துள்ளான். இது ஒரு சமுதாய கேடு ஆகும்.  ஒரு பெண் குழந்தை தனக்கு ஆறு அல்லது ஏழூ வயது இருக்கும் போது, எப்படி ஒரு  ஆணை திருமணம் செய்துக்கொள்ள முடியும்? அவளோடு உடலுறவு கொள்வது தவறானதல்லவா? அவளுக்கு கணவன், மனைவி,  குடும்பம் போன்ற விவரங்கள் பற்றி எந்த ஒரு அறிவும் இல்லாத போது, அக்குழந்தையில் உடலும் திருமணத்திற்கு (முக்கியமாக உடலுறவுக்கு) தயாராக இல்லாத போது, ஏன் அல்லாஹ் இப்படிப்பட்ட 'சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும்' சட்டங்களை இயற்றியுள்ளான்?

அல்லாஹ்வின் இப்படிப்பட்ட கட்டளையினால் தான் இஸ்லாமிய நாடுகளில் அதிக வயதுள்ள ஆண்கள், வயதுக்கு வராத சிறுமிகளை திருமணம் செய்துக்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட சிறுமிகளை விவாகரத்து செய்துவிட்டால், அவர்கள் எத்தனை நாட்கள் இத்தா இருக்கவேண்டும் என்று குர்‍ஆனும் மேற்கண்டவிதமாக கட்டளையிட்டுள்ளது.

நாகரீகமடைந்த எந்த சமுதாயமும் சமுதாயத்திற்கு கேடுவிளைவிக்கும் இப்படிப்பட்ட கட்டளைகளை எப்படி ஏற்றுக்கொள்ளும்?

  

கேள்வி 377: இஹ்ராம் என்றால் என்ன?

பதில் 377: இஹ்ராம் என்பது மக்காவிற்கு ஹஜ்/உம்ரா புனிதப் பயணம் செல்லும் முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில கட்டுப்பாடுகள் ஆகும். அவர்கள் ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கடந்தபின் ஹஜ்/உம்ரா பயணத்தின் குறிப்பிட்ட கடமைகளை நிறைவேற்றி முடிப்பது வரை அவர்களின் உடை, நடத்தை, சிந்தனை ஆகியவற்றில் சில கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும். இதற்கு 'இஹ்ராம்' என்று பெயர்.

இதைப் பற்றிய மேலதிக கட்டுப்பாட்டு விவரங்களை கீழ்கண்ட தொடுப்பில் பார்க்கலாம்: en.wikipedia.org/wiki/Ihram

இஹ்ராமின் போது செய்யக்கூடாதவை:

2:197. ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது; நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்; மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே! எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.

5:1. முஃமின்களே! (நீங்கள் செய்து கொண்ட) உடன்படிக்கைகளை (முழுமையாக) நிறைவேற்றுங்கள்; உங்கள் மீது ஓதிக்காட்டி இருப்பவற்றைத் தவிர மற்றைய நாற்கால் பிராணிகள் உங்களுக்கு (உணவிற்காக), ஆகுமாக்கப்பட்டுள்ளன. ஆனால் நீங்கள் இஹ்ராம் அணிந்திருக்கும் சமயத்தில் (அவற்றை) வேட்டையாடுவது (உங்களுக்குத்) தடுக்கப்பட்டுள்ளது; நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைக் கட்டளையிடுகிறான்.

இஹ்ராமின் போது கடலில் வேட்டையாடலாம்:

5:96. உங்களுக்கும் (இதர) பிரயாணிகளுக்கும் பலன் கிடைக்கும் பொருட்டு (நீங்கள் இஹ்ராம் கட்டியிருந்தாலும்) கடலில் வேட்டையாடுவதும், அதைப் புசிப்பதும் உங்களுக்கு ஹலாலாக - ஆகுமானதாக ஆக்கப்பட்டுள்ளது; ஆனால் நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் காலமெல்லம் தரையில் வேட்டையாடுவது உங்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.

இஹ்ராமின் போது அல்லாஹ்வின் சோதனை:

5:94. ஈமான் கொண்டவர்களே! (நீங்கள் இஹ்ராம் உடை அணிந்திருக்கும் நிலையில்) உங்கள் கைகளும், உங்கள் ஈட்டிகளும் சுலபமாக வேட்டையில் அடையக்கூடிய பொருளைக்கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களை சோதிப்பான்; ஏனென்றால் மறைவில் அவனை யார் அஞ்சுகிறார்கள் என்பதை அல்லாஹ் அறி(விப்ப)தற்காகத்தான்; இதன் பின்னரும் எவர் வரம்பு மீறுகிறாரோ அவருக்கு நோவினை தரும் வேதனையுண்டு.

இஹ்ராம் பற்றிய சில கேள்விகளுக்கு முஹம்மதுவின் பதில்: 

புகாரி நூல் எண்: 366: 

366. 'ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிய விரும்புகிறவர் எந்த ஆடையை அணிய வேண்டும் என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு 'சட்டை, முழுக்கால் சட்டை, தொப்பி, குங்குமச் சாயம் பட்ட ஆடை, சிவப்புச் சாயமிடப்பட்ட ஆடை ஆகியவற்றை அணியக் கூடாது. யாருக்காவது செருப்பு கிடைக்காமலிருந்தால் தோலினாலான காலுறை அணிந்து கொள்ளலாம். அந்தத் தோலுறையில் கரண்டைக்குக் கீழே இருக்கும் வகையில் மேல் பாகத்தை வெட்டி விட வேண்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

   

கேள்வி 378: ஈத் அல்-அதா (Eid al-Adha) என்றால் என்ன?

பதில் 378: ஈத் அல் அதா என்பது முஸ்லிம்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையாகும். இதற்கு தியாகத்திருநாள் என்றும் ஒரு பெயர் உண்டு. மேலும் இந்த பண்டிகையில் ஆடுகளையும், மாடுகளையும் பலியிடுவதினால், உருது மொழியில் இதனை பக்ரீத் பண்டிகை (பக்ரா என்றால் ஆடு, ஈத் என்றால் பண்டிகை)  என்று கூட  அழைக்கிறார்கள். இதனால் தமிழ் நாட்டிலும் பக்ரீத பண்டிகை என்றும் அழைக்கிறார்கள். 

இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் (Dul Haji) 10 ஆம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.

இந்த பண்டிகையின் போது தான் ஹஜ் என்ற மக்காவிற்குச் செல்லும் புனிதப்பயணம் மேற்கொள்ளப்படுகின்றது.

பழைய ஏற்பாட்டில் ஆதியாகமத்தில் வரும் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்கள் இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள். அதாவது ஆபிரகாம் (இப்றாஹீம்) தன் மகனை பலியிட கொண்டுச் சென்ற அந்த தியாக நிகழ்ச்சியை நினைவு கூறும் நாளாக இது உள்ளது. எனவே இதற்கு தியாகத்திருநாள் என்று அழைக்கிறார்கள்.

இப்றாஹீம் பலியிட கொண்டுச் சென்றது இஸ்மாயீலையா? அல்லது ஈஷாக்கையா?

முஸ்லிம்களின் கூற்றுப்படி இப்றாஹீம் பலியிட கொண்டுச் சென்றது இஸ்மாயீலைத்தான், ஆனால் பைபிளும் குர்‍ஆனும் இப்படி சொல்லவே இல்லை, இதற்கான சுருக்கமான பதிலைப் பார்ப்போம்.

முஸ்லிம்களில் பலரின் குற்றச்சாட்டு என்னவென்றால், இஸ்லாமுக்கு கலங்கம் விளைவிக்கவேண்டும் என்பதற்காக பைபிளில் மாற்றம் செய்யப்பட்டது,  ஆபிரகாமின் கதையில் முக்கியமாக தன்னுடைய மகனை பலியிட இறைவன் சொன்ன விஷயத்தில் மாற்றம் செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டுகிறார்கள். பலியிட தேவன் சொன்ன மகன் இஸ்மவேல் ஆவார் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். ஆனால், பைபிள் அந்த மகன் ஈசாக்கு என்று தெளிவாக கூறுகிறது (ஆதியாகமம் 22:9, எபிரேயர் 11:17 மற்றும் யாக்கோபு 2:21 வசனங்களை படிக்கவும்.)

முழு குர்-ஆனில் ஒரே ஒரு இடத்தில் இந்த விவரம் பற்றி கூறப்பட்டுள்ளது, அதுவும் ஆபிரகாமின் வேண்டுதலாக அது ஆரம்பிக்கிறது. அதாவது தனக்கு ஒரு மகன் கொடுக்கும்படி இறைவனிடம் அவர் வேண்டுகிறார். அந்த குர்-ஆன் வசனங்களை இங்கு படியுங்கள்.

மேலும், அவர் கூறினார்; "நிச்சயமாக நான் என்னுடைய இறைவனிடம் செல்பவன்; திட்டமாக அவன் எனக்கு நேர் வழியைக் காண்பிப்பான்." "என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக" (என்று பிரார்த்தித்தார்). எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம். பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்; "என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!" (மகன்) கூறினான்; "என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்." ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்றாஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது நாம் அவரை "யா இப்றாஹீம்!" என்றழைத்தோம். "திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம். "நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்." ஆயினும், நாம் ஒரு மகத்தான் பலியைக் கொண்டு அவருக்குப்ப பகரமாக்கினோம். (37:99 -107)

மேற்கண்ட வசனங்களை நன்றாக கவனியுங்கள், அதாவது பலியிடச்சென்ற மகன் பற்றி குர்-ஆனில் வரும் ஒரே ஒரு இடம் இது தான். மேலும், அந்த ஒரு இடத்திலும் எந்த மகன், அவன் பெயர் என்ன என்ற விவரங்கள் குர்-ஆனில் கொடுக்கப்படவில்லை. ஆனால், ஒரு விஷயம் குர்-ஆனில் கூறப்பட்டுள்ளது, அது என்னவென்றால், இந்த மகன் "ஒரு நற்செய்தியாக" தீர்க்கதரிசனமாக முன்னறிவிக்கப்பட்டவர் ஆவார். ஒருவர் முழு குர்-ஆனை தேடிப்பார்த்தாலும், இஸ்மவேலின் பிறப்பு பற்றி எந்த ஒரு இடத்திலும் சொல்லப்படவில்லை என்பதை கவனிக்கமுடியும். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், இஸ்மவேல் பற்றி மிகக்குறைவாக குர்-ஆனில் கூறப்பட்டுள்ளது. மேலும் இஸ்மவேலின் தாய் பற்றியோ அல்லது இஸ்மவேலின் பிள்ளைகள் பற்றியோ எதுவும் குர்-ஆனில் கூறப்படவில்லை. முக்கியமாக, இஸ்மவேலின் தாயின் பெயர் ஆகார் என்றும் மேலும் அவருக்கு பன்னிரண்டு மகன்கள் இருந்தார்கள் என்றும் நாம் பைபிளிலிருந்து அறிகிறோம் (ஆதியாகமம் 25:12-17).  நாம் மேலே குறிப்பிட்ட "நற்செய்தி" பற்றிய குர்-ஆன் வசனம் பற்றி நம் கவனத்தை திருப்புவோம்.  ஈசாக்கு மற்றும் அவரது தாயார் சாராள் பற்றி குர்-ஆனில் கீழ்கண்ட விதமாக நாம் படிக்கிறோம்.

இப்றாஹீமின் கண்ணியம் மிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா?  அவர்கள், அவரிடம் பிரவேசித்த போது, (அவரை நோக்கி; "உங்களுக்கு) "ஸலாம்' என்று கூறினார்கள்; (அதற்கவர்), "(உங்களுக்கு) "ஸலாம்" என்று கூறினார். . . . , பயப்படாதீர்!" எனக் கூறினார்; அன்றியும், அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங் கூறினர்.  பின்னர் இதைக்கேட்ட அவருடைய மனைவியார் சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக் கொண்டு "நான் மலட்டுக் கிழவியாயிற்றே!" என்று கூறினார்.  (அறிவு மிக்க புதல்வர் பிறப்பார் என்று;) "இவ்வாறே உம் இறைவன் கூறினான், நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்,) நன்கறிந்தவன்" என்று கூறினார்கள்.  (குர்-ஆன் 51:24-25, 28-30)

மேற்கண்ட வசனங்களுக்கு மேலதிகமாக, ஆபிரகாம் மற்றும் ஈசாக்கு பற்றிய ஒரு சுருக்கத்தை நாம் கீழ்கண்ட குர்-ஆன் வசனங்களில் காண்கிறோம்: 

"ஸலாமுன் அலா இப்ராஹீம்" (இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக)!  இவ்வாறே, நன்மை செய்வோருக்கு, நாம் கூலி கொடுக்கிறோம். நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர்.  ஸாலிஹானவர்களிலுள்ளவரான நபி இஸ்ஹாக்கை அவருக்கு இன்னும் (மகனாகத் தருவதாக) நாம் நன்மாராயம் கூறினோம்.  இன்னும் நாம் அவர் மீதும் இஸ்ஹாக் மீதும் பாக்கியங்கள் பொழிந்தோம்; . . . .  (குர்-ஆன் 37:109 - 113)

மேற்கண்ட குர்-ஆன் வசனங்களில் வரும் சொற்றொடர்களாகிய "அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங் கூறினர்" என்பதையும் "ஸாலிஹானவர்களிலுள்ளவரான நபி இஸ்ஹாக்கை அவருக்கு இன்னும் (மகனாகத் தருவதாக) நாம் நன்மாராயம் கூறினோம்." என்பதையும் கூர்ந்து கவனியுங்கள். குர்-ஆனிலே இப்படிப்பட்ட "நன்மாராயங் கூறுவதாக" இஸ்மவேலின் பிறப்பு பற்றி கூறப்படவில்லை.  இப்போது உங்களுக்கு தெளிவாக புரிந்து இருக்கும் அதாவது குர்-ஆனில் "நன்மாராங் கூறி" பிறந்தவர் இஸ்மவேல் அல்ல அவர் ஈசாக்கு ஆவார் மேலும் ஈசாக்கே பலியிட கொண்டுப் போகப்பட்டவராவார் (குர்-ஆன் 37:99-107). மேலும் பைபிள் கூறுவது போல ஈசாக்கு தான் பலியிட கொண்டுபோகப்பட்டார்.

முஸ்லிம்களில் அனேகர், குர்-ஆனை முழுவதுமாக ஆய்வு செய்து, "ஆம் குர்-ஆன் குறிப்பிடுவதும் ஈசாக்கைத் தான்" என்று முடிவிற்கு வந்துள்ளார்கள். யூசுஃப் அலி என்ற இஸ்லாமிய அறிஞர், தம்முடைய குர்-ஆன் மொழியாக்கத்தின் விளக்கத்தில் (பக்கம் 1204, குறிப்பு 4096), கீழ்கண்டவாறு ஒப்புக்கொள்கிறார்:

"The boy thus born was according to Muslim tradition (which however is not unanimous on this point) the first-born of Abraham viz. Ismail." 

முஸ்லிம் பாரம்பரியத்தின் படி (இதில் எல்லாரும் ஒருமித்த கருத்தை கொண்டு இருக்கவில்லை) ஆபிரகாமின் முத்த மகனாகிய இஸ்மவேல் தான் அந்த மகன்"

"முஸ்லிம் பாரம்பரியத்தின் படி" என்ற சொற்றொடர்களையும் "இதில் எல்லாரும் ஒருமித்த கருத்தை கொண்டு இருக்கவில்லை" என்ற சொற்களையும் கவனியுங்கள்.  இதன் மூலம் தெள்ளத்தெளிவாக அறிவது என்னவென்றால், குர்-ஆனின் படி "இஸ்மவேல்" பலியிட கொண்டுபோகப்படவில்லை என்பதாகும். மேலும் குர்-ஆன் சொல்வதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும், அதாவது முந்தைய வேதங்களை மெய்ப்பிக்கும்படி குர்-ஆன் வந்ததே தவிர அவைகளுக்கு எதிராக முரண்பட அல்ல என்று குர்-ஆனே சொல்வதை கவனிக்கவும். இதன் படி தெரிவது என்னவென்றால் பைபிளில் சொல்லப்பட்டவைகளை ஏகோபித்து குர்-ஆன் இந்த விஷயத்தில் முன்மொழிகிறது, ஆனால், இஸ்லாமிய பாரம்பரியங்கள் முரண்படுகின்றன. (மூலம்: இஸ்மாயில் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் என்ற இஸ்லாமியர்களின் வாதம்)

கேள்வி 379: குர்பானி (பலி) என்றால் என்ன?

பதில் 379: பக்ரீத் பண்டிகையின் போது கொடுக்கப்படும் ஆடு/மாடு/ஒட்டக பலியை அரபியில் "குர்பானி" என்பார்கள்.

எபிரேய மொழியில் "கொர்பான்" என்ற வார்த்தையும் இதைச் சுற்றியே உள்ளது. கொர்பான் என்ற எபிரேய வார்த்தையின் பொருள் காணிக்கை(Offering), மிருகங்களை பலியிடுதல் என்பதாகும்.

இந்த வார்த்தை மூன்று இடங்களில் குர்‍ஆனில் வருகிறது:

குர்‍ஆன் 3:183. மேலும் அவர்கள், "எந்த ரஸூலாக இருந்தாலும், அவர் கொடுக்கும் குர்பானியை(பலியை) நெருப்பு சாப்பிடு(வதை காண்பிக்கு)ம் வரை அவர் மீது நாங்கள் விசுவாசம் கொள்ள வேண்டாம்" என்று அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்" என்று கூறுகிறார்கள். (நபியே!): "எனக்கு முன்னர் உங்களிடம் வந்த தூதர்களில் பலர், தெளிவான ஆதாரங்களையும், இன்னும் நீங்கள் கேட்டுக்கொண்ட (படி பலியை நெருப்பு உண்ப)தையும் திடமாகக் காண்பித்தார்கள். அப்படியிருந்தும் ஏன் அவர்களை நீங்கள் கொன்றீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்" என்று நீர் கூறும்.

குர்‍ஆன் 5:27. (நபியே!) ஆதமுடைய இரு குமாரர்களின் உண்மை வரலாற்றை நீர் அவர்களுக்கு ஓதிக்காண்பியும்; அவ்விருவரும் (ஒவ்வொருவரும்) குர்பானி கொடுத்த போது, ஒருவரிடமிருந்து அது ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை; (பின்னவர்) "நான் நிச்சயமாக உன்னைக் கொலை செய்து விடுவேன்" என்று கூறினார். அதற்கு (முன்னவர்) "மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடமிருந்து தான்" என்று கூறினார்.

குர்‍ஆன் 46:28. (அல்லாஹ்விடம் தங்களை) நெருங்க வைக்கும் தெய்வங்களென்று அல்லாஹ் அல்லாதவற்றை இவர்கள் எடுத்துக் கொண்டார்களே, அவர்கள் ஏன் இவர்களுக்கு உதவி புரியவில்லை? ஆனால், அவர்கள் இவர்களை விட்டும் மறைந்து விட்டனர் - அவர்களே இவர்கள் பொய்யாகக் கூறியவையும், இட்டுக் கட்டியவையுமாகும்.

மேற்கண்ட வசனத்தில் (46:28), அல்லாஹ்விடம் "நெருங்க" என்ற பொருளில் குர்‍பானி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

கேள்வி 380: ஈமான் (Faith) என்றால் என்ன?

பதில் 380: இஸ்லாமில் ஈமான் என்ற அரபி வார்த்தையின் அர்த்தம் 'நம்பிக்கை, விசுவாசம் (Faith)' என்பதாகும்.

ஒருவர் முஸ்லிமாக இருக்க கீழ்கண்ட ஆறு காரியங்கள் மீது ஈமான்(நம்பிக்கை)கொள்ளவேண்டும்.

1) அல்லாஹ்வின் மீதும் அவன் ஒருவன் என்றும் நம்பவேண்டும்

2) தேவ தூதர்கள் இருக்கிறார்கள் என்று நம்பவேண்டும்

3) வேதங்கள் மீது நம்பிக்கை வைக்கவேண்டும் (மூஸாவிற்கு தவ்ராத், தாவூதுக்கு ஜபூர், இயேசுவிற்கு இன்ஜில், முஹம்மதுவிற்கு குர்‍ஆன்  கொடுக்கப்பட்ட வேதங்கள் என்று நம்பவேண்டும்)

4) நபிகளை/தீர்க்கதரிசிகளை நம்பவேண்டும் (முஹம்மது கடைசி நபி என்று நம்பவேண்டும்)

5)  நியாயத்தீர்ப்பு நாளை நம்பவேண்டும்

6) விதியை நம்பவேண்டும் (நல்லதோ கெட்டதோ அதை அல்லாஹ் நிர்ணயித்துவிட்டான், அதுபடியே நடக்கும் என்பதை  நம்பவேண்டும்)

முஸ்லிம் நூல் எண்: 7 

7. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்), என்னிடம் (விளக்கம்) கேளுங்கள்" என்று கூறினார்கள். . . . அல்லாஹ்வின் தூதரே! ஈமான் (இறை நம்பிக்கை) என்றால் என்ன?" என்று அம்மனிதர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதத்தையும், அவனது சந்திப்பையும், அவனுடைய தூதர்களையும் நீங்கள் நம்புவதும் (மரணத்திற்குப் பின் இறுதியாக அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நீங்கள் நம்புவதும்,விதியை முழுமையாக நம்புவதும் ஆகும்" என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் உண்மை தான்" என்றார்.

இவைகள் மட்டுமல்லாமல், இன்னும் பல காரியங்கள் மீது நம்பிக்கை வைக்கவேண்டும்.

முஸ்லிம் நூல் எண்: 57 & 58

57. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கை (ஈமான்) என்பது எழுபதுக்கும் அதிகமான கிளைகளைக் கொண்டதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

58. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கை என்பது "எழுபதுக்கும் அதிகமான" அல்லது "அறுபதுக்கும் அதிகமான" கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை" என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளைதான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

கேள்வி 381: இலா (ilah) என்றால் என்ன?

பதில் 381: அரபி மொழியில் 'இலா(Ilash)" என்றால் "கடவுள், இறைவன்" என்று பொருள். "அல்லாஹ்" என்ற வார்த்தையும் இவ்வார்த்தையிலிருந்து வந்தது என்று நம்புகிறார்கள்.

அல் + இலா என்பது தான் "அல்லாஹ்" என்று மாறியிருக்கும் என்றும் நம்பப்படுகிறது. "அல்" என்றால் "The" என்று பொருள், "இலா(Ilah)" என்றால் இறைவன்(god)  என்று பொருள். ஆக, அல்லாஹ் என்றால் "The god" என்று மாறியிருக்கலாம் என்ற நம்பப்படுகிறது.

இஸ்லாமிய விசுவாச அறிக்கையின் முதல் வாக்கியம்:

  • "லா இலாஹ இல்லல்லாஹு" என்றால் 
  • "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் (இலா) இல்லை என்பதாகும்.

இதில் "இலா(Ilah)" என்ற சொல்லும் வருகிறது, "அல்லாஹ்(Allah)" என்ற சொல்லும் வருகிறது என்பதை கவனிக்கவும்.'

எபிரேய வார்த்தை எல் (El): 

எபிரேய மொழியிலும் "எல்(EL)" என்ற வார்த்தை உண்டு, அதற்கும் பொருள் "இறைவன், கடவுள்" என்று பொருள்.

கேள்வி 382: மன்னு, ஸல்வா என்றால் என்ன?

பதில் 382:  இஸ்ரேல் மக்கள் எகிப்திலிருந்து  இஸ்ரேல் நாட்டிற்கு மூஸா அழைத்துச் சென்ற போது, அவர்களுக்காக வானத்திலிருந்து இறைவன் கொடுத்த‌ உணவு தான் மன்னு மற்றும் ஸல்வா ஆகும்.

பைபிளில் "மன்னா" என்ற அழைக்கப்பட்ட உணவு தான்,  குர்‍ஆனில் "மன்னு" என்று மொழியாக்கம் செய்துள்ளார்கள்.  "ஸல்வா" என்றால்  "காடைகள்" என்று இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இதைப் பற்றி குர்‍ஆனில் மூன்று இடங்களில் வருகிறது (குர்‍ஆன் 2:57, 7:160,20:80):

2:57. இன்னும், உங்கள் மீது மேகம் நிழலிடச் செய்தோம்; மேலும் "மன்னு, ஸல்வா" (என்னும் மேன்மையான உணவுப் பொருள்களை) உங்களுக்காக இறக்கி வைத்து, "நாம் உங்களுக்கு அருளியுள்ள பரிசுத்தமான உணவுகளிலிருந்து புசியுங்கள்" (என்றோம்;) எனினும் அவர்கள் நமக்குத் தீங்கு செய்துவிடவில்லை; மாறாக, தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.

7:160. மூஸாவின் கூட்டத்தாரைத் (தனித்தனியாகப்) பன்னிரண்டு கூட்டங்களாக பிரித்தோம்; மூஸாவிடம் அவர்கள் குடி தண்ணீர் கேட்டபோது, நாம் அவருக்கு: "உம்முடைய கைத்தடியால் அக்கல்லை அடிப்பீராக!" என்று வஹீ அறிவித்தோம், (அவர் அவ்வாறு அடித்ததும்) அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுக்கள் பொங்கி வந்தன; அவர்களில் ஒவ்வொரு வகுப்பாரும் தாம்(நீர்) அருந்தும் ஊற்றைக் குறிப்பறிந்து கொண்டார்கள்; மேலும், அவர்கள் மீது மேகம் நிழலிடும்படிச் செய்தோம், அவர்களுக்கு மன்னு. ஸல்வாவையும் (மேலான உணவாக) இறக்கிவைத்து : "நாம் உங்களுக்கு அளித்துள்ள தூயவற்றிலிருந்து புசியுங்கள்" (என்று சொன்னோம்; அவ்வாறு இருந்தும் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்தார்கள்), அவர்கள் நமக்கு ஒன்றும் தீங்கிழைக்கவில்லை; தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.

20:80. "இஸ்ராயீலின் சந்ததியினரே! நாம் திட்டமாக உங்களை உங்கள் பகைவனிடமிருந்து இரட்சித்தோம்; மேலும், தூர்(ஸினாய் மலையின்) வலப்பக்கத்தில் நாம் (தவ்ராத் வேதத்தை அருள்வதாக) உங்களுக்கு வாக்குறுதியளித்தோம்; இன்னும் "மன்னு ஸல்வாவை" (உணவாக) உங்கள் மீது நாம் இறக்கி வைத்தோம்.

சமையள் காளானும், மன்னுவும்:

சமையளுக்கு பயன்படுத்தும் காளான் "மன்னு" வகையைச் சார்ந்ததாக முஹம்மது கூறியுள்ளார், உண்மையில் மன்னு என்பது இறைவன் வானத்திலிருந்து கொடுத்த ஒருவகையான உணவாகும், இதை காளானுக்கு ஒப்பிட்டு முஹம்மது பேசியுள்ளார். இது தவறான கூற்றாகும். காளான் மண்ணில் முளைக்கும் உணவுப்பண்டம், மன்னு (மன்னா) வானத்திலிருந்து இறைவன் கொடுத்தது. முஹம்மதுடம் ஒரு பழக்கம் உண்டு, எதை கேட்டாலும் சரி, ஏதோ ஒரு பதிலை சொல்லிவிடுவார்.

நூல் புகாரி: எண்கள் 4478, 4639, 4778, 5708

4478. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.

சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு' வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும். என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.

கேள்வி 383: ஷிர்க் (SHIRK) என்றால் என்ன? 

பதில் 383: இஸ்லாமின் படி, "மன்னிக்கப்படாத பாவத்தை/குற்றத்தை" ஷிர்க் என்பார்கள். உதாரணத்திற்கு, அல்லாஹ்விற்கு இணை வைப்பது (அல்லாஹ்விற்கு இணையாக இன்னொருவரை கருதுவது) ஷிர்க் ஆகும். 

  • குர்-ஆன் 4:48, 137 மற்றும் 47:34ன் படி இணைவைப்பவர்கள் அல்லாஹ்வினால் மன்னிக்கப்படமாட்டார்கள்.

இயேசுவை இறைவனென்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றபடியால், குர்-ஆன் அவர்களை "இஸ்லாமிய நம்பிக்கையற்றவர்கள் (காஃபிரூன்) என்றும், இணைவைப்பவர்கள் (முஷ்ரிகூன்) என்றும்" குற்றம் சாட்டுகிறது. 

குர்-ஆன் 9:30 - 33

யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்? அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை - அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன். தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான்.)

ஷிர்க் பற்றிய விவரங்கள் அடங்கிய சில கட்டுரைகள்:

ஆங்கிலக் கட்டுரைகள்:

தமிழ் கட்டுரைகள்:

கேள்வி 384: ஹராம் (HARAM) என்றால் என்ன?

பதில் 384: ஹராம் என்றால் இஸ்லாமிய சட்டத்தில் "தடுக்கப்பட்டவைகள்" என்று பொருளாகும். இந்த வார்த்தையின் எதிர்ச் சொல் "ஹலால்" ஆகும்.  

இஸ்லாமின் சில ஹராம்கள்:

உணவில் ஹராம்:

2:173. தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான்; ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான்.

6:119. அல்லாஹ்வின் பெயர் கூறி (உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவற்றில்) அறுக்கப்பட்டதை நீங்கள் சாப்பிடாமலிருக்க என்ன (தடை) இருக்கிறது? நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டாலன்றி சாப்பிட உங்களுக்கு விலக்கப்பட்டவை எவை என்பதை அல்லாஹ் விவரித்துக் கூறியுள்ளான் - ஆனால் பெரும்பாலோர், அறியாமையின் காரணமாகத் தங்களுடைய மன இச்சைகளின் பிரகாரம் (மனிதர்களை) வழி கெடுக்கிறார்கள்; வரம்பு மீறிச்செல்பவர்களை நிச்சயமாக உம் இறைவன் நன்கு அறிகிறான்.

அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது:

6:56. "நீங்கள் அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை(க் கடவுளர்களாக) அழைக்கின்றீர்களோ அவர்களை வணங்கக் கூடாதென்று நான் நிச்சயமாக தடுக்கப்பட்டு உள்ளேன்" (என்று நபியே!) நீர் கூறுவீராக: "உங்களுடைய மன இச்சைகளை நான் பின்பற்ற மாட்டேன்; (நான் அப்படிச் செய்தால்) நான் நிச்சயமாக வழி தவறி விடுவேன்; மேலும் நான் நேர்வழி பெற்றவர்களிலும் இருக்கமாட்டேன்" என்றும் (நபியே!) நீர் கூறுவீராக.

இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்திற்கு இடையே ஹலால்/ஹராம் பற்றிய தொடர் கட்டுரைகளை கீழே படிக்கலாம்:

இயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம்:

கேள்வி 385: ஹலால் (HALAL) என்றால் என்ன?

பதில் 385: குர்-ஆன் மற்றும் ஹதீஸ்களின் (இஸ்லாமிய) சட்டப்படி ஹலால் என்றால் "அனுமதிக்கப்பட்டவைகள்" என்று பொருள். அதாவது இஸ்லாமியர்கள் பயன்படுத்தவோ அல்லது உட்கொள்ளவோ அல்லது உடுத்தவோ அனுமதிக்கப்பட்ட பொருட்களை "ஹலால் பொருட்கள்" என்பார்கள். இதே போல, இஸ்லாமில் அனுமதிக்கப்படாதவைகளை "ஹராம்" என்றுச் சொல்வார்கள். 

ஆனால், ஹலால் பட்டியலில் எவைகள் வருகின்றன, ஹராம் பட்டியலில் எவைகள் வருகின்றன என்பதைக் குறித்து இஸ்லாமிய பிரிவுகளில் ஒருமித்த கருத்து இல்லை. ஒவ்வொரு பிரிவினரும் வெவ்வேறு பட்டியலைத் தருவார்கள். 

இயேசுவும் முஹம்மதுவும் ஒரே செய்தியைத் தான் போதித்தார்கள் என்று முஸ்லிம்கள் சொல்வார்கள், ஆனால், இவ்விருவரின் போதனைகளை ஆய்வு செய்தால், அடிப்படை விஷயங்கள் தொடங்கி, தொழுகை வரை, இயேசு ஹலால் என்று போதித்தவைகளை முஹம்மது ஹராம் என்று போதனை செய்துள்ளார் என்பதை கவனிக்கமுடியும்.

இந்த தலைப்பில் எழுதப்பட்ட 12 ஆய்வுக் கட்டுரைகளை இங்கு தருகிறேன் படிக்கவும்.

இயேசுவின் ஹலால் முஹம்மதுவின் ஹராம்:

கிறிஸ்தவர்கள் சிந்திக்க ஒரு வசனம்:

எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது. ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன். (1 கொரிந்தியர் 10:23-24)

கேள்வி 386: உம்மா (Ummah) என்றால் என்ன?

பதில் 386: அரபியில் உம்மா என்றால், ஒரு சமுதாயம் என்று பொருள். இஸ்லாமை பொறுத்தமட்டில், பொதுவாக  "உம்மா" என்றால் இஸ்லாமிய சமுதாயத்தை குறிக்கும்.  இஸ்லாமிய சமுதாயத்தை குறிக்க அரபியில்  "உம்மத் அல் இஸ்லாம்(ummat al-Islām)" என்றும் கூறுவார்கள்.

உம்மா என்ற வார்த்தை பல வடிவங்களில் குர்‍ஆனில் 62 முறை வருவதாக கூறப்படுகிறது. கீழ்கண்ட வசனத்தில் "சமுதாயம்" என்ற வார்த்தைக்கு அரபியில் "உம்மா" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது;

குர்‍ஆன் 23:51. (நம் தூதர்கள் ஒவ்வொருவரிடத்திலும்:) "தூதர்களே! நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள்; (ஸாலிஹான) நல்லமல்களை செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன் (என்றும்) 23:52. "இன்னும், நிச்சயமாக (சன்மார்க்கமான) உங்கள் சமுதாயம் (முழுவதும்) ஒரே சமுதாயம் தான்; மேலும், நானே உங்களுடைய இறைவனாக இருக்கின்றேன்; எனவே நீங்கள் எனக்கே அஞ்சுங்கள்" (என்றும் கூறினோம்).

கேள்வி 387: கிப்லா (தொழும் திசை - Qibla) என்றால் என்ன?

பதில் 387: இஸ்லாமில் "கிப்லா" முக்கிய இடத்தை பிடித்துள்ளது. முஸ்லிம்கள் தொழுகை செய்யும் போது, ஒரு திசையை நோக்கி தொழுதுக்கொள்வார்கள், அந்த திசைக்கு கிப்லா என்பார்கள்.

முஸ்லிம்கள் உலகில் எந்த பகுதியில் வாழ்பவராக இருந்தாலும் சரி, அவர்கள் நமாஜ் (தொழுகை) செய்யும் போது, தங்கள் முகங்களை சௌதி அரேபியாவில் உள்ள மக்கா நகரத்திற்கு நேராக  திருப்பிக்கொண்டு தொழவேண்டும். மக்கா நகரத்தில் தான் "காபா" என்ற ஆலயம் உள்ளது என்பதால், முஸ்லிம்கள் கேள்வி கேட்காமல் அதன் பக்கம் திரும்பியே தொழவேண்டும். உலகின் மசூதிகள் அனைத்தும், இதன் அடிப்படையில் தான் கட்டப்படுகின்றன.

உதாரணத்திற்கு:

  • தமிழ் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் தொழும்போது, வடக்கு நோக்கி (கிப்லா) தொழுவார்கள்.
  • அமெரிகாவில் உள்ளவர்கள், கிழக்கு நோக்கி தொழுவார்கள், ஏனென்றால் அமேரிக்காவிற்கு  கிழக்கில் சௌதி அரேபியா (மக்காவும், காபாவும்) இருப்பதினால்.
  • மக்காவிற்கு புனித ஹஜ் பயணம்  செய்யும் போது, காபாவை நோக்கி முஸ்லிம்கள் 360 டிகிரியில் தொழுவதைக் காணலாம்.

சில வேளைகளில் கிப்லா திசை எது என்று முஸ்லிம்களுக்கு தெரியாத பட்சத்தில் அதாவது  ஹோட்டல்களில், விமான நிலையங்களில் "கிப்லா இந்த பக்கம்" உள்ளது என்ற அடையாளத்தை முஸ்லிம்கள் அறிவிப்பு பலகையாக எழுதி வைத்திருப்பார்கள். அதைப் பார்த்து முஸ்லிம்கள் தொழுவார்கள்.

முதல் 12 ஆண்டுகள் முஹம்மதுவும் முஸ்லிம்களும் எருசலேமை நோக்கியே தொழுதார்களா?

ஆம், முஹம்மதுவிற்கு கிபி 610ல் முதல் குர்‍ஆன் வசனம் இறங்கிய காலம் தொடங்கி, அவர் மதினாவிற்கு ஹிஜ்ரி செய்த பிறகு கூட, 1.5 ஆண்டுகள் மதினாவில், அவரும் மற்றும் அனைத்து முஸ்லிம்களும் எருசலேமையே தங்கள் கிப்லா (வணக்க திசையாக) வைத்து தொழுகை புரிந்தார்கள்.

கீழ்கண்ட வசனத்தின்  மூலமாக கிப்லா மாற்றப்பட்டது:

ஸூரா 2:144. (நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம்; எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்; ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.

ஏன் கிப்லா மாற்றப்பட்டது?

ஆரம்பத்தில் "யூதர்களும் கிறிஸ்தவர்களும்" தன்னை நபியாக ஏற்பார்கள் என்று முஹம்மது எதிர்ப்பார்த்தார். மக்காவில் இறங்கிய குர்‍ஆன் வசனங்கள் யூத கிறிஸ்தவர்களுக்கு சாதகமான‌ வசனங்களாகவே பெரும்பான்மையாக இருந்தன.

நீங்கள் என்னதான் செய்தாலும் அற்புதம் செய்துக் காட்டவில்லையென்றால் நாங்கள் உம்மை நம்புவதாக இல்லை என்று ஒரே போடு போட்டார்கள் யூதர்கள். முஹம்மதுவிற்கும், அற்புதங்களுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. கிறிஸ்தவர்களோ, இயேசுவின் சிலுவை மரணம், மற்றும் உயிர்த்தெழுதலோடு ஃபெவிகால் இணைப்பு போன்று ஒட்டிக்கொண்டு இருந்தார்கள், முஹம்மது என்ன செய்தாலும், யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் இவரை நபியாக ஏற்பதாகத் தெரியவில்லை.

சரி, இனி இவர்களுடைய எருசலேமை நோக்கி ஏன் தொழவேண்டும்? "நாட்டமை தீர்ப்பை மாற்றிச்சொல்லுங்க" என்று அல்லாஹ்வை அடிக்கடி வேண்டிக்கொள்ள, இறங்கியது குர்‍ஆன் 2:144, மாறியது கிப்லா.

கிப்லா பற்றி கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் பற்றிய மேலதிக விவரங்கள்:

கேள்வி 388: ஜன்னாஹ் (Jannah) என்றால் என்ன?

பதில் 388 ஜன்னாஹ் என்றால் அரபியில் சொர்க்கம் என்று பொதுவான அர்த்தம் கொடுக்கப்பட்டுள்ளது.  

அரபியில் "அல்-ஜன்னா" என்பது தோட்டம் என்றும் பொருள் கூறப்படுகின்றது (ஜன்னத் என்றால் பன்மையாகும்). சொர்க்கத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியைக் குறிக்க அல் ஃபிர்தௌஸ்(al-Firdaus)  என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

யாருக்கு அல்லாஹ்வின் சொர்க்கம் கிடைக்கும்?

  • தன் மர்ம உறுப்பையும், நாவையும் காத்துக்கொண்டவர்களுக்கு:  புகாரி எண்: 6907

6807. 'தம் இரண்டு கால்களுக்கிடையே உள்ளதான (மர்ம உறுப்பி)ற்கும், தம் இரண்டு தாடைகளுக்கிடையே உள்ளதான‌ (நாவி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிப்பவருக்காக நான் சொர்க்கத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ(ரலி) அறிவித்தார்.

  • மனந்திருப்பி, நம்பிக்கைகொண்டு, நல்லவைகளை செய்தால் : 19:60-61
  • பொறுமையுடன்  இருப்பவர்களுக்கு  76:12
  • நம்பிக்கைகொண்டு, நல்லவைகளை செய்தால் 2:25, 22:23
  • பயபக்தியுடையவர்கள, தங்கள் கடமைகளைச் செய்பவர்களுக்கு 44:51, 47:15, 52:17
  • அல்லாஹ்வை தேடுபர்களுக்கு, தொழுபவர்களுக்கு, தானதர்மங்கள் செய்பவர்களுக்கு: 13:22-23

சொர்க்கம் பற்றிய மேலதிக விவரங்களை கீழ்கண்ட கட்டுரைகளில் படிக்கலாம்:

கேள்வி 389: ஜஹன்னம் (Jahannam) என்றால் என்ன?

பதில் 389: இஸ்லாமில் ஜஹன்னம் என்றால் நரகம் என்று பொருள். குர்‍ஆனில் நரகம் பற்றி தோராயமாக 500 வசனங்கள் உள்ளன என்று சொல்லப்படுகின்றது.

இஸ்லாமை நம்பாதவர்கள் தான் நரக நெருப்பின் எரிபொருள்களாக இருக்கின்றனர்: குர்‍ஆன் 3:10

3:10. நிராகரிப்போர்களுக்கு அவர்களுடைய செல்வங்களும், குழந்தைகளும் அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எதையும் நிச்சயமாக தடுக்கப்படமாட்டாது; இன்னும் அவர்கள்தாம் (நரக) நெருப்பின் எரிபொருள்களாக இருக்கின்றனர்.

நரகத்திற்கு 7 வாசல்கள் இருக்கின்றன, அவைகளில் ஒரு குறிப்பிட்ட வகையான பாவம் செய்தவர்கள் நுழைவார்கள்:

15:43. நிச்சயமாக (உன்னைப் பின்பற்றும்) அனைவருக்கும் நரகம் வாக்களிக்கப்பட்ட இடமாகும்.15:44. அதற்கு ஏழு வாசல்கள் உண்டு; அவ்வாசல்கள் ஒவ்வொன்றும் பங்கிடப்பட்ட (தனித்தனிப்) பிரிவினருக்கு உரியதாகும்.  

முஹம்மதுவின் தாயும் தந்தையும் நரகத்தில் இருப்பார்கள்:

1777. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத்தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள், "நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவமன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத்தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத்தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!" என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. 

347. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார்?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(நரக) நெருப்பில்" என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்றபோது அவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, "என் தந்தையும் உன் தந்தையும் (நரக) நெருப்பில்தான் (இருக்கிறார்கள்)" என்று கூறினார்கள்.

முஹம்மதுவின் பெரிய தந்தை அபூதாலி நரகத்தில்:

360. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் அவர்களுடைய பெரிய தந்தை அபூதாலிப் அவர்களைப் பற்றிக் கூறப்பட்டது. அப்போது அவர்கள், "மறுமை நாளில் அவருக்கு என் பரிந்துரை பயனளிக்கக் கூடும்; (அதனால்) நரக நெருப்பு அவரது (முழு உடலையும் தீண்டாமல்) கணுக்கால்கள்வரை மட்டுமே தீண்டும்படி ஆக்கப்படலாம். (ஆனால்,) அதனால் அவருடைய மூளை (தகித்துக்) கொதிக்கும்" என்று கூறினார்கள்.

முஸ்லிம்கள் அனைவரும் முதலில் நரகத்திற்குச் செல்வார்கள்:

299. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

. . .(தொடர்ந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அந்தக் கொக்கிகள் கருவேல மரத்தின் முள்ளைப் போன்றுதான் இருக்கும். ஆயினும், அதன் பருமன் என்னவென்று அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். அந்தக் கொக்கிகள் மக்களை அவர்களின் செயல்களுக்கேற்ப கவ்விப்பிடிக்கும். அவர்களில் தமது (பாவச்) செயலால் (அங்கு) தங்கிவிட்ட இறைநம்பிக்கையாளரும் இருப்பார். இன்னும் அவர்களில் தண்டனை அளிக்கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்படுபவரும் இருப்பார். இறுதியாக இறைவன், அடியார்களிடையே தீர்ப்பு வழங்கி முடித்த பின், நரகவாசிகளில் தான் நாடிய சிலரைத் தனது கருணையினால் (நரகத்திலிருந்து) வெளியேற்ற விரும்புவான். அதன்படி அல்லாஹ்விற்கு எதையும் இணைகற்பிக்காமல் இருந்து, "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை" என்று உறுதிகூறியவர்களில், தான் கருணைகாட்ட நாடிய சிலரை நரகத்திலிருந்து வெளியேற்றுமாறு வானவர்களுக்கு இறைவன் ஆணையிடுவான். வானவர்கள் நரகத்திலிருக்கும் அவர்களை சஜ்தாவின் அடையாளங்களை வைத்து இனம் கண்டுகொள்வார்கள். மனிதனி(ன் உடலி)ல் உள்ள சஜ்தாவின் அடையாளத்தைத் தவிர மற்றப் பகுதிகளை நரகம் தீண்டுகிறது. சஜ்தா அடையாளத்தைத் தீண்டக் கூடாதென நரகத்திற்கு இறைவன் தடை விதித்துள்ளான். ஆகவே, அவர்கள் அங்கமெல்லாம் கரிந்துவிட்ட நிலையில் நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.. .  

கேள்வி 390: ஷஹதா (Shahadah)  என்றால் என்ன?

பதில் 390:  ஷஹதா என்றால் இஸ்லாமிய  விசுவாச அறிக்கையாகும் அல்லது இஸ்லாமிய‌ சாட்சியம் கூறுவதாகும்.

இஸ்லாமிய ஷஹதா: ஒருவர் முஸ்லிமாக மாறும்போது இந்த கீழ்கண்ட சாட்சியம் கூறவேண்டும்:

  • தமிழ்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, முஹம்மது அல்லாஹ்வின் தூதர் என்று நான் சாட்சியம் கூறுகிறேன்.
  • அரபியில்:  Ashhadu an la ilaha illa 'llah; ashhadu anna Muhammadan rasulu 'llah 
  • ஆங்கிலத்தில்: I witness that there is no god but Allah, and Muhammad is the messenger of Allah.

ஷியா முஸ்லிம்கள், தங்கள் விசுவாச அறிக்கையில் கீழ்கண்ட வரியையும் அதிக படியாக சேர்த்துக்கொள்வார்கள்:

  • அரபியில்: lā sayf ʾillā Ḏū l-Fiqār (லா ஸைஃப் இல்லா துல் ஃபிகார்)
  • தமிழ்: துல் ஃபிகார்போல வாள் இல்லை

துல் ஃபிகார் என்பது முஹம்மதுவின் மருமகன் அலி அவர்கள் பயன்படுத்திய வாளின் பெயர் ஆகும்.

குர்‍ஆனில் எந்த ஒரு வசனத்திலும் முழு ஷஹதா காணப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது, அவை மூன்று வசனங்களிலிருந்து முஸ்லிம்கள் எடுத்துள்ளார்கள்.

குர்‍ஆன் 37:35-36:

37:35. "அல்லாஹ்வைத் தவிர நாயன் இல்லை" என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், மெய்யாகவே அவர்கள் பெருமையடித்தவர்களாக இருந்தனர்.  37:36. "ஒரு பைத்தியக்காரப் புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா?" என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

குர்‍ஆன் 47:19:

47:19. ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக; இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக - அன்றியும் உங்களுடைய நடமாட்டத்தலத்தையும் உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான்.

குர்‍ஆன் 48:29:

48:29. முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்;  . . .

தேதி: 24th Jun 2020


சின்னஞ்சிறு 1000 கேள்வி பதில்கள் பொருளடக்கம்

உமரின் கட்டுரைகள் பக்கம்

Source:  https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2020ramalan/2020-ramalan-13.html