ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள்

இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல! - புதிய தொடர் கட்டுரைகள்

1) மக்காவின் பிரச்சனைகள் - அறிமுகம்: இஸ்லாமின் பிறப்பிடம் மக்கா அல்ல!
2) மக்காவின் பிரச்சனை 1: குர்-ஆன் 6:92 - நகரங்களுக்கெல்லாம் தாய் என்று மக்காவை அழைப்பது பொருத்தமானதாக இல்லையே ஏன்?
3) மக்காவின் பிரச்சனை 2: வியாபாரிகள் செல்லும் வழியில் அமைந்துள்ள முக்கியமான நகரம் மக்கா – இது உண்மையா?
4) மக்காவின் பிரச்சனை 3: வியாபார நகரம் “மக்காவின்” பெயர் கி.பி. 900க்கு முன்புவரையுள்ள வரைபடங்களில் (Map) ஏன் ஒரு முறை கூட காணப்படவில்லை?
5) மக்காவின் பிரச்சனை 4: ஸஃபா மர்வாவிற்கு இடையே ஓடும் நீரோடை
6) மக்காவின் பிரச்சனை 5: ஸஃபா மர்வா பெரிய மலைகளா? (அ) பொடிக்குன்றுகளா?
7) மக்காவின் பிரச்சனை 6: மக்காவில் திராட்சை மற்றும் இதர கனிதரும் தோட்டங்கள் இருந்தனவா?
8) மக்காவின் பிரச்சனை 7: இஸ்லாமின் புனித நகரம் இவ்வளவு பெரிய கூட்ட மக்களை எப்படி உருவாக்கியது?
9) மக்காவின் பிரச்சனை 8: குர்-ஆன் 11:83 - அல்லாஹ் புரட்டிப்போட்ட ஊர் இஸ்லாமிய புனித நகரத்திற்கு அருகில் உள்ளதா?

2015 ரமளான் சிறப்புக் கட்டுரைகள்

15) 2015 ரமளான் கடிதம் 15 - புனிதமான ரமளான் மாதத்தில் நடந்துமுடிந்த புனிதமற்ற செயல்கள்

14) 2015 ரமளான் கடிதம் 14 - அபூ பக்கரின் இரண்டாண்டு சாதனைகள்: ”ஸகாத்” உன் அப்பன் சொத்து அல்ல!

13) 2015 ரமளான் கடிதம் 13 - சஹாபாக்கள் & அப்போஸ்தலர்கள் இவர்களில் யார் சொர்க்கவாசிகள்?

12) 2015 ரமளான் கடிதம் 12 - சொர்க்கவாசிகளும் (அஷரத்துல் முபஷ்ஷரா) அல்லாஹ்வின் இறையியல் தவறுகளும்

11) 2015 ரமளான் கடிதம் 11 - இமைகளை சுமைகளாக கருதிய கருவிழிகள் (யார் முதல் கலிஃபாவாக பதவியேற்பது?)

10) 2015 ரமளான் கடிதம் 10 - சஹாபாக்கள் அனாதைகள் அல்ல! இயேசுவின் சீடர்கள் தான் அனாதைகள்!

9) 2015 ரமளான் கடிதம் 9 - இஸ்லாமின் இருகண்களில் முஹம்மதுவிற்கு பிரியமான கண் எது? முஹாஜிர்களா? (அ) அன்ஸார்களா?

8) 2015 ரமளான் கடிதம் 8 - முஹம்மதுவின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாதபடி தடுத்த அல்லாஹ்

7) 2015 ரமளான் கடிதம் 7 - அலி அவர்கள் சந்தர்ப்பவாதியா?

6) 2015 ரமளான் கடிதம் 6 - அலியின் சாட்சி - குர்-ஆன் பற்றிய அறியாமையில் முஹம்மது இருக்கிறார்

5) 2015 ரமளான் கடிதம் 5 - அபூ பக்கர் முஹம்மதுவின் ஆஸ்தி விஷயத்தில் ஃபாத்திமாவை ஏமாற்றினாரா?

4) 2015 ரமளான் கடிதம் 4 - ஃபாத்திமா - பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது

3) 2015 ரமளான் கடிதம் 3 - என் கண்ணிலிருந்து துரும்பை எடுத்துப்போட்டீர்கள்!
உங்கள் கண்ணில் இருக்கின்ற உத்திரத்தை எப்போது எடுத்துப்போடுவீர்கள்?

2) 2015 ரமளான் கடிதம் 2 - இஸ்லாமிய சமுதாய தலைவர் கலிஃபாவை ஆதரிப்பது குற்றமா? தீவிரவாதமாகுமா?
(இஸ்லாமிய கலிஃபாவின் ஆட்சி – உலகத்துக்கு சமாதானமா? அல்லது சமாதியா?)

1) 2015 ரமளான் கடிதம் 1 - இஸ்லாமின் இறையியலும் தீவிரவாதமும் - தம்பி, ஐஎஸ் (IS) ல் நீ ஐஸ் போல கறைந்து விடுவாயோ என்று பயப்படுகிறேன்!

101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவை புறக்கணிக்கிறார்கள்? அவரை ஏன் தீர்க்கதரிசி என்று நம்புவதில்லை?
போன்ற கேள்விகளுக்கு கீழ்கண்ட சுருக்கமான விவரங்கள் பதில் அளிக்கும்.
இங்கு கொடுக்கப்படும் ஒவ்வொரு விவரத்திற்கும் குர்ஆன் வசனங்கள்,ஹதீஸ்கள்
மேலும் முஹம்மதுவின் வாழ்க்கை வரலாற்று மேற்கோள்கள் ஆதாரமாக அடிக்குறிப்பில் தரப்படுகின்றது.

பாகம் 1 பாகம் 2 பாகம் 3 பாகம் 4 பாகம் 5 பாகம் 6 பாகம் 7 பாகம் 8 பாகம் 9 பாகம் 10

2013 ரமளான் சிறப்புத் தொடர் கட்டுரைகள் முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் - தொடர் கட்டுரைகள்

அறிமுகம் ரமளான் 2012 - அனுதின ரமளான் தியான கட்டுரைகள்

மிஸ்ட் மற்றும் ஜாவித் போன்ற இஸ்லாமியர்கள், தங்கள் இஸ்லாமிய தளங்களில்
கிறிஸ்தவர்களின் கட்டுரைகளின் தொடுப்புக்களைக் கொடுக்க பயந்து, ஆதாரம் இல்லாமல் எழுதப்படும்
ஒரு சில கட்டுரைகள் பற்றி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்காக இந்த தளத்தில் உள்ள 270க்கும் அதிகமான
தமிழ் கட்டுரைகள் தலைப்பு வாரியாக தரப்படுகிறது.

ஈஸா குர்ஆன் தள கட்டுரைகள் தலைப்பு வாரியாக

குர்ஆன் மற்றும் அல்லாஹ்

  1. வர்ஷ் மற்றும் ஹப்ஸ் குர்‍ஆனில் உள்ள வித்தியாசங்களின் சிறிய பட்டியல்
  2. கிறிஸ்தவ சபையே விழிமின் எழுமின் - பாகம் 1
  3. சமீபத்திய‌ வெளிப்பாடு (மார்க்கம்) உண்மையான மார்க்கமா?
  4. கிறிஸ்தவ சபைகளில் வாசிக்கப்படவிருக்கும் குர்‍ஆன் வசனங்கள்
  5. எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்குச் செல்வார்களா?
  6. குர்‍ஆனில் அடிமைப் பெண்கள் செக்ஸ் சொத்துக்களாவார்கள்
  7. பைபிள் மற்றும் குர்‍ஆனின் படி பாவமன்னிப்பும் மகிமையும்
  8. குர்‍ஆன் முரண்பாடு: குர்‍ஆன் இறங்கிய விதம் - சிறிது சிறிதாக இறங்கியதா? அல்லது ஒரே முறை மொத்தமாக இறங்கியதா?
  9. இஸ்லாமியர்களுக்கு 45 போனஸ் கேள்விகள் - ரமளான் ஸ்பெஷல்
  10. கிறிஸ்தவர்கள் வர்ணம் தீட்டிக்கொள்கிறார்களா? அல்லது ஞானஸ்நானம் எடுக்கிறார்களா?
  11. மஸீஹாவும் மற்றும் குர்‍ஆனும் - அல்லாஹ்விற்கு மஸீஹா என்பதின் பொருள் என்னவென்றுத் தெரியுமா?
  12. குர்ஆனின் சரித்திர தவறு: குர்ஆனும் மோசேயும் மற்றும் கற்பலகைகளும்
  13. குர்ஆன் முரண்பாடுகள்: மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
  14. குர்ஆனின் சரித்திர பிழை: யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?
  15. குர்ஆனும் விஞ்ஞானமும்: சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?
  16. குர்ஆன் முரண்பாடுகள் - ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?
  17. குர்‍ஆனின் முரண்பாடு: அவர்கள் இருவரும் வாலிபர்களா?
  18. ஆபிரகாமின் உண்மைப் பெயர் அல்லாஹ்விற்கு தெரியுமா?
  19. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் :இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்
  20. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி
  21. குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்
  22. Answering Mist: குர்ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
  23. பாகம் 1 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  24. பாகம் 2 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  25. பாகம் 3 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  26. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  27. பாகம் 4 - சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் (எகிப்து 1924) ஒப்பீடு
  28. பைபிளில் மற்றும் குர்‍ஆனில் வன்முறை - ஒரு கிறிஸ்தவ பார்வை
  29. இயேசுவின் சில கட்டளைகள் - குர்‍ஆனின் இயேசுவின் கட்டளைகளை காணமுடியுமா?
  30. அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?
  31. குர்‍ஆன் 4:34: அவர்களை அடியுங்கள் (அ) அவர்களை அடிக்காதீர்கள்
  32. குர்‍ஆன் ஒரு அற்புதமா? - Is The Qur'an Miraculous?
  33. சூரா அல்-ஜின்: குர்‍ஆனின் சவாலும் ஜின்களும்
  34. வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?
  35. குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா?
  36. குர்‍ஆன் முரண்பாடுகள்: நோவாவின் வயது (Noah’s Age)
  37. நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
  38. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19) - The Sins of Muhammad
  39. ஏகத்துவத்திற்கு பதில்: குர்‍ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1 மோசேயும், எரியும் புதரும் MOSES AND THE BURNING BUSH
  40. குர்‍ஆன் முரண்பாடுகள்: மோசேயின் குழந்தைபருவம் மற்றும் இஸ்ரவேலரும் கானானும் - பாகம் - 2
  41. அல்லாவின் பெயரால் மற்றவர்களை கொல், நீயும் கொல்லப்படு
  42. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை:7 வட்டார மொழிகளில் குர்‍ஆனா? (கீது, இக்கு, இக்குது, இருக்கு, இருக்குது...)
  43. இன்றைய குர்‍ஆனில் இல்லாத "பால் கொடுக்கும்" வசனம்
  44. விபச்சார குற்றத்திற்கு கல்லெறிதல் தண்டனை பற்றிய வசனம் குர்‍ஆனில் இல்லை ஏன்?
  45. ஆயிஷா அவர்களின் ஹதீஸின் படி குர்‍ஆன் 2:238 முழுமையானதல்ல‌!?!
  46. ஈஸா குர்‍ஆன் & அபூ முஹை: "நூன்" எழுத்தை குர்‍ஆனில் இடையில் நுழைத்தது ஏனோ?
  47. பல விதமான அரபி குர்‍ஆன்கள் - THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR’AN
  48. ஒரு குர்‍ஆனா அல்லது பல குர்‍ஆன்களா?! - Quran or Qurans?!
  49. குர்‍ஆனில் உள்ள எழுத்துப் பிழைகள் - Scribal errors in the Qur'an
  50. குர்‍ஆனில் கிறிஸ்துமஸ் பாகம் 2 - குர்‍ஆனின் சரித்திர தவறு:யோவான் ஸ்நானகனும் அல்லாவும் (குர்-ஆன் 19:7)
  51. இஸ்லாம் கல்விக்கு பதில்: அல்லாவும் மதுபானமும் ‍ பாகம் 1 - குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  52. கையாலாகாத, சக்தியில்லாத கடவுள், அல்லா - அப்துல்லா மற்றும் அப்ரஹாமின் உரையாடல்(பாகம் - 3)
  53. பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?
  54. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்‍ஆன் 4:155 159): ஈஸா குர்‍ஆன் பதில்
  55. "எஸ்றா அல்லாவின் குமாரனா?” யார் சொன்னது? குர்-ஆன் தான் சொல்கிறது
  56. அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம் (ஏமாற்றும் இறைவன், திறமையில்லா மஸிஹா)
  57. குர்ஆன் பாதுகாக்கப்பட்டதா?

முஹம்மது மற்றும் நபித்துவம்

  1. Answering Ziya & Absar: "இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?" – Round 2
  2. நித்யானந்தாவை வெறுக்கும் பீஜே, இவரையும் வெறுப்பாரா?
  3. கிறிஸ்தவர்கள் "அவர் மீது சாந்தி உண்டாகட்டும் (PBUH)" என்று ஏன் பயன்படுத்தக்கூடாது?
  4. முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு படக்கதை - தொகுப்பு 1
  5. முஹம்மது, பெண் பித்து பிடித்தவரா? லைலா ஏன் அவரை மணமுடிக்கவில்லை?
  6. முஹம்மது 1 யோவான் 4ம் அதிகாரத்தின் பரிட்சையில் வெற்றி பெறுவாரா?
  7. Answering Apsar: முஹம்மதுவை காப்பாற்ற ஸஃபிய்யாவை கேவலப்படுத்தும் இஸ்லாம்
  8. அரபுப் பெண்ணும், முஹம்மதுவும், நபித்தோழர்களும், ரௌடித்தனமும்...
  9. பாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர்
  10. பாகம் 2: முஹம்மது ஒரு பாவியா? - ஹதீஸ்களின் சாட்சி ("புகாரி" மற்றும் "முஸ்லிம்" ஹதீஸ்களின் வெளிச்சத்தில்)
  11. இடையரை (முஹம்மதுவை) ஒரு அரசி திருமணம் செய்துக்கொள்வாளா?
  12. முஹம்மது உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது, அவரது தோழர் கதவிடம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்
  13. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?
  14. இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...
  15. முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள் (முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)) - கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
  16. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 4
  17. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3
  18. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 2
  19. "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 1
  20. முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும்: முஹம்மதுவின் அதிர்ஷ்டம் ஆறுபேரின் துரதிஷ்டம்
  21. மனைவி கிழவியாக மாறியதால் விவாகரத்து செய்த முஹம்மது
  22. முஹம்மதுவை காக்க, குர்ஆனை தாக்கும் இஸ்லாமியர்கள் (இருமேனி முபாரக் அவர்களுக்கு பதில்)
  23. பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்‍ஆனின் சாட்சி
  24. முஹம்மதுவின் "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட" திருமண(ம்)ங்கள்
  25. முஹம்மது ஒரு தீவிரவாதியா? 26/11 Mumbai Attack Special
  26. இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
  27. முகம்மதுவின் முரண்பாடுள்ள செயல்கள் - முஹம்மதுவும் தொழுகையின் முக்கியமின்மையும்
  28. இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது
  29. இறைவனின் மெய்யான‌ நபித்துவ முத்திரை பெற்றவர் யார்? இயேசுவா (அ) முஹம்மதுவா?
  30. பைபிள் தீர்க்கதரிசிகளை நிந்திக்கின்றதா?
  31. இயேசுவா முஹம்மதுவா? - உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு
  32. முஹம்மதுவின் பாவங்கள், சூரா முஹம்மது (47:19)
  33. முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்
  34. ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)
  35. முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை - இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
  36. முகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)
  37. முகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) - உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர்
  38. இஸ்லாம் வாளால் தான் பரவியது, முகமது எழுதிய கடிதங்களே இதற்கு சாட்சி - (அபுமுஹை கட்டுரைகளில் மறைந்(த்)த உண்மைகள்)
  39. முகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராக கண்டனர்?
  40. உபாகமத்தின் உண்மை: - முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்
  41. இயேசுவும் திராட்சைரசமும், குடித்த மயக்கத்தில் நமாஜ் செய்ய அனுமதித்தவரும்
  42. சுவர்னதென்றலுக்கு பதில்-1 : பைபிள் முகமது பற்றி ஒன்றும் சொல்வதில்லை
  43. முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்
  44. முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும்
  45. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது "கர்த்தரை", முகமதுவை அல்ல
  46. உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், "முகமதுவை" அல்ல!
  47. பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1
  48. "இஸ்மவேல் முகமது பைபிள் (இது தான் இஸ்லாம்)" கட்டுரைக்கு மறுப்பு
  49. இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்

இஸ்லாமிய அறிஞர்களுக்கு கொடுத்த மறுப்புக்கள் தொடரும்....

புதன், 25 நவம்பர், 2020

ஏன் இயேசு யூத மத குருக்களை அதிகமாக தாக்கி பேசினார் (மத்தேயு 23:13-33; 21:45; 16:4) இந்த கேள்வியை அஹமத் தீதத் கேட்டார்.

கேள்வி: ஏன் இயேசு யூத மத குருக்களை அதிகமாக தாக்கி பேசினார் (மத்தேயு 23:13-33; 21:45; 16:4) இந்த கேள்வியை அஹமத் தீதத் கேட்டார்.

பதில்:  இந்த கேள்விக்கு பதிலை கொடுப்பதற்கு முன்பு, ஒரு முக்கியமான விவரத்தையும் சொல்லிவிடுகிறேன். இயேசு தம்மை ஏற்றுக்கொள்ளாத மத குருக்களை, தலைவர்களை எதிர்த்தது மட்டுமல்ல, அவர்கள் செய்கின்ற (தம்மை புறக்கணிக்கின்ற) செயலினால், நரகத்தில் தள்ளப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.  இப்படி வெறும் வார்த்தைகளோடு இயேசு நின்றுவிடவில்லை, ஒரு சாட்டையை தயார் செய்து, தேவாலயத்தில் வியாபாரம் செய்கின்றவர்களை தாக்கினார், ஆம், வியாபாரிகளின் கடைசிகளை உடைத்து தும்சம் செய்தார், தேவனுடைய ஆலயத்தை கள்ளர் குகை ஆக்காதீர்கள் என்றுச் சொல்லி கடினமாக நடந்துக்கொண்டார். 

இதனை மனதில் வைத்துக்கொள்ளவும், இப்போது ஏன் இப்படி இயேசு செய்தார் என்பதற்கான பதிலைக் காண்போம்.

முதலாவதாக, யூத மத தலைவர்களைக் காட்டிலும் இயேசுவிற்கு அதிகபடியான அதிகாரம் உள்ளது.  யூதர்களின் மேசியாவாக வந்த இயேசுவிற்கு தம் 'மேசிய அதிகாரத்தை' பயன்படுத்தி, அவர்களுக்கு வழிகாட்ட அவருக்கு அதிகாரம் உள்ளது. மேலும் தாம் மேசியா என்பதை நிருபிக்க பல அற்புத  அடியாளங்களை இயேசு செய்துக் காட்டினார். உண்மையான இறைவன் "நாம் நம் வாழ்வில் எந்த ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டாலும், நம்முடைய அனுமதியின்று அவைகளை சரி செய்ய அவருக்கு அதிகாரம் உண்டு'. ஏன் யூத தலைவர்களை அவர் கடிந்துகொண்டார்? மனிதனை படைத்த இறைவனுக்கு மனிதனின் தவறான வழியை சுட்டிக்காட்ட உரிமை உள்ளது.

இரண்டாவதாக, தாங்கள் மட்டும் நரகத்திற்குப் போகாமல், மற்றவர்களையும் அங்கு அழைத்துச் செல்ல அந்த மத  தலைவர்கள் முயன்றதால், இன்னும் அதிகமாக அவர்களை கடிந்துகொள்ள மெய்யான தெய்வத்திற்கு உரிமையுண்டு, இதனை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

மத்தேயு 23:15. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.

ஆபிரகாமைக் காட்டிலும், மோசேயைக் காட்டிலும், சாலொமோனைக் காட்டிலும், தேவாலயத்தைக் காட்டிலும், அவ்வளவு ஏன் பழைய  ஏற்பாட்டிற்கும் மேலாக இருக்கும் மேசியாவிற்கு, தன் முழு அதிகாரத்தை பயன்படுத்த உரிமையுண்டு என்பதை நாம் அறிந்துக்கொள்ளவேண்டும். அதனால் தான் மாய்மாலம் செய்த யூத தலைவர்களை கண்டித்தார், அதே நேரத்தில் நேர்மையாக நடந்துக்கொண்ட யூத மத தலைவர்களை மெச்சிக்கொண்டார், அவர்களை உற்சாகப்படுத்தினார்.

யோவான் 1:47 இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.

இதன் மூலம் நாம் பெறும் பாடம் என்ன? தவறான மத தலைவர்களை நாம் பின்பற்றக்கூடாது. இந்த வகையில் வந்தவர் தான் 'இஸ்லாமிய நபி முஹம்மது', இவர் ஒரு கள்ளத் தீர்க்கதரிசி.

தீத்து 1:13. இந்தச் சாட்சி உண்மையாயிருக்கிறது; இது முகாந்தரமாக, அவர்கள் யூதருடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய கற்பனைகளுக்கும் செவிகொடாமல்,

14. விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள்.

பொய்யான மத தலைவர்களை நாம் கடிந்துக்கொள்ளவேண்டும், அவர்களை உலகத்திற்கு அடையாளப்படுத்தி காட்டவேண்டும். ஒரு துக்ககரமான விஷயம் என்னவென்றால் தங்கள் மத தலைவர்  எப்படிப்பட்டவர் என்று தெரிந்துக்கொள்ளாமல், கோடிக்கணக்கான மக்கள், அப்படிப்பட்டவர்களை பின்பற்றுவது தான். இந்த நிலையில் தான் முஸ்லிம்கள் உள்ளார்கள், அவர்கள் அறியாமையில் இருக்கிறார்கள், அவர்களின் அறியாமை போக்கப்படவேண்டும்.

ஆக, நேர்மையற்ற யூத மதத்தலைவர்களை இயேசு கடிந்துக்கொண்டதில் தவறு இல்லை. இதே போன்று இஸ்லாமிய நபியாகிய முஹம்மது போன்றவர்களின் உண்மை முகத்தை உலகிற்கு காட்டி, கடிந்துக்கொள்ளவேண்டியது நம் கடமையாகும். தவறான வழியில் செல்கின்ற முஸ்லிம்களுக்கு நேரான வழியை அதாவது இயேசுவைக் காட்டவேண்டியது நம் கடமையாகும்.

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2020ramalan/2020-ramalan-19.html

அஹமத் தீதத் அவர்கள் கேட்ட கேள்வி: பரிசுத்த ஆவியை பெறுவதற்கு இயேசு 30 ஆண்டுகள் காத்திருந்தார் (மத்தேயு 3:16), ஆனால் யோவான் ஸ்நானகன் பிறந்ததிலிருந்தே பரிசுத்த ஆவியினால் நிரம்பியிருந்தார் (லூக்கா 1:15). “மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள்”, பரிசுத்த ஆவியானவரை மலிவுவிலை போன்று மிகவும் சுலபமாக பெற்றுக் கொள்கிறார்கள். இது வேடிக்கையாக உள்ளதல்லவா?

கேள்வி: அஹமத் தீதத் அவர்கள் கேட்ட கேள்வி: பரிசுத்த ஆவியை பெறுவதற்கு இயேசு 30 ஆண்டுகள் காத்திருந்தார் (மத்தேயு 3:16), ஆனால் யோவான் ஸ்நானகன் பிறந்ததிலிருந்தே பரிசுத்த ஆவியினால் நிரம்பியிருந்தார் (லூக்கா 1:15). "மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள்", பரிசுத்த ஆவியானவரை மலிவுவிலை போன்று மிகவும் சுலபமாக பெற்றுக் கொள்கிறார்கள். இது வேடிக்கையாக உள்ளதல்லவா?

பதில்:  அஹமத் தீதத் அவர்கள் பெரிய இஸ்லாமிய அறிஞர், ஆனால் இவரது கேள்விகளைப் பார்த்தால், வேடிக்கையாகவும், சிந்திக்காமல், ஆய்வு செய்யாமல் மேலோட்டமாக கேட்கப்பட்டதாகவும் தெரிகின்றது.

இலவசம் வேறு - மலிவானது வேறு:இவ்விரண்டிற்கும் உள்ள‌ வித்தியாசம் தெரியாத முஸ்லிம்கள்:

அஹமத் தீதத் அவர்களுக்கு 'இலவசம்' மற்றும் 'மலிவு' இவ்விரண்டிற்கு இடையேயுள்ள வித்தியாசத்தை புரிந்துக்கொள்ள குழப்பம் உள்ளது என்பதை அறியமுடிகின்றது. மேலும் இயேசுவின் தெய்வீகத்தன்மைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதையும் அவர் சரியாக அறிந்துக்கொள்ளவில்லை.

அஹமத் தீதத் அவர்கள் பரிசுத்த ஆவியானவர் என்ற தேவனின் விலைமதிப்பில்லாத பரிசை பெறாதபடியினால், அவருக்கு "மக்கள் பார்க்கும் விதமாக பரிசுத்த ஆவியானர் ஒரு வெளிச்சமாக, புறாவைப்போன்று இயேசு மீது வந்து அமர்ந்ததை புரிந்துக்கொள்ளமுடியாமல் போகிறது".

இலவசம் தான் ஆனால், மலிவானதல்ல:

ஒரு மனிதன் இயேசுவை தன் சொந்த தெய்வமாக விசுவாசிக்கும் போது, தன் பாவங்களை அறிக்கையிட்டு மனந்திரும்பும் போது, அவனுக்குள் பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்ய ஆரம்பிக்கிறார். இந்த பரிசு இலவசமானது தான், ஆனால் விலைமதிக்கமுடியாதது, அதாவது, 'இயேசுவின் மரணம் இதற்கு, அதாவது இந்த இரட்சிப்பிற்கு விலையாக கொடுத்து வாங்கப்பட்டதாகும்'. இந்த பரிசுத்த ஆவியானவர் ஒரு விசுவாசியின் உள்ளத்தில் வாசம் செய்து, நாலொரு மேனி பொழுதொரு வண்ணம் என்று சொல்வதுபோன்று, அந்த மனிதனை ஒவ்வொரு நாளும் சுத்திகரித்து, நீதியில் நடக்கவைத்து, அம்மனிதனின் கடைசி மூச்சு வரைக்கும் கூட இருந்து பரிசுத்தத்தில் நடக்க உதவி செய்கின்றார். இதைத் தான் ஒவ்வொரு "மறுபடியும் பிறந்தவர்கள்" பெற்றுக்கொள்வது, இதற்கு அந்த மனிதன் விலை கொடுக்கவில்லை, இயேசு கொடுத்தார். அந்த மனிதனுக்கு இரட்சிப்பு இலவசம், ஆனால் அது இயேசுவின் இரத்தம் கொடுத்து உயிர் கொடுத்து சம்பாதிக்கப்பட்டது.

எனவே, இலவசமாக கிடைப்பதெல்லாம் மலிவானது முக்கியமில்லாதது என்று கருதுவது தவறு. காற்று இலவசம் தான், மலிவானது அல்ல. இலவசமாக கிடைக்கும் காற்று நின்றுவிட்டால், இல்லாமல் போனால், மனிதன் அழிந்துவிடுவான்.

இயேசுவின் தெய்வீகத்தன்மையும் பரிசுத்த ஆவியானவரும்:

இயேசு பரிசுத்த ஆவியானவரின் நிறைவிற்காக 30 ஆண்டுகள் காத்திருந்தார் என்று கூறுவது தவறான புரிதலாகும். ஏனென்றால், 

  • சிறு வயதிலிருந்தே "தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது" (லூக்கா 2:40).
  • இயேசுவே இறைவனாக இருக்கிறார், மனிதர்களாகிய நாம் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுவது போன்று அவருக்குத் தேவையில்லை.

மேலும்: 

இயேசு பரிசுத்த ஆவியானவரை தம் விசுவாசிகளுக்காக அனுப்புவார்:

யோவான் 16:7. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.

இயேசுவின் பெயரிலே, பிதா பரிசுத்த ஆவியானவரை அனுப்புவார்:

யோவான் 14: 

16. நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

26. என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.

பிதா, இயேசு மற்றும் பரிசுத்த ஆவியானவர் ஒன்றாகவே எப்போதும் இருப்பார்கள், அவர்களை வேறு பிரிக்கமுடியாது. 

இயேசுவின் மீது பரிசுத்த ஆவியானவர் புறாவைப் போல இறங்கியது, யாருக்காக?

பிதாவும், இயேசுவும், பரிசுத்த ஆவியானவரும் ஒருவருக்குள் ஒருவர் இருப்பார்கள் என்று மேலே பார்த்தோம். 

மத்தேயு 3:16ல்   "தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்" என்று சொல்லப்பட்டதை அஹமத் தீதத் தவறாக புரிந்துக் கொண்டுள்ளார்.

மத்தேயு 3:16. இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.

17. அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

தேவ ஆவியானவர் ஒரு புறாவைப்போல இறங்கிவந்து இயேசு மீது அமர்ந்தது, இயேசுவிற்காக அல்ல, அது மற்றவர்களுக்காக ஆகும். அதே போன்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானதும் இயேசுவிற்காக அல்ல, அது மற்றவர்களுக்காக ஆகும்.

குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், யார் மேசியா என்று யோவான் ஸ்நானகன் அறிந்துக்கொள்வதற்காக பரிசுத்த ஆவியானவர் வெளிப்படையாக காணும்படி வந்தார். யோவான் சொல்லும் சாட்சியை கவனியுங்கள்:

மேசியாவை கண்டுபிடிப்பதற்கு யோவானுக்கு தேவன் ஒரு அடையாளத்தைக் கொடுத்து இருந்தார், அது என்னவென்று பாருங்கள்:

யோவான் 1:29-34

29. மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.

30. எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்.

31. நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்க வந்தேன் என்றான்.

32. பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன்.

33. நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவரென்று எனக்குச் சொல்லியிருந்தார்.

34. அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்துவருகிறேன் என்றான்.

இயேசுக் கிறிஸ்து பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் கொடுக்கின்றவர், அவரோடு எப்போதும் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். புறாவைப்பற்றிய அடையாளம் யாருக்கு தேவையாக இருந்தது? யோவான் ஸ்நானனுக்கு தேவையாக இருந்தது என்பதைத் தான் மேலே பார்த்தோம்.

இதுவரை கண்ட விவரங்களிலிருந்து நாம் அறிவது: 

1) இஸ்லாமிய அறிஞர் அஹமத் தீதத் ஒரு இறையியலில் ஒரு அரைவேக்காடு ஆவார். அரைகுறையாக மற்றவர்களின் வேதங்களை படித்து, தனக்கு சாதகமான பொருளை கூறுபவர்கள் அரைகுறை ஞானமுள்ளவர்கள் தானே!

2) இயேசுவிற்குள், இயேசுவோடு எப்போதும் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார்.

3) தேவ ஆவி புறாவைப்போல வந்து இயேசு மீது அமர்ந்ததும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசக்குமாரன் என்றுச் சொன்னதும், இயேசுவிற்காக அல்ல, அது மற்றவர்களுக்கான அடையாளங்கள் ஆகும்.

4) இயேசுவை ஏற்றுக்கொள்கின்ற ஒவ்வொருவருக்கும் பரிசுத்த ஆவியானவர் தங்குகிறார், அந்த மனிதனுக்குள் வாசம் செய்து, அந்த நபரை தேவனுடைய ராஜ்ஜியத்துக்கு ஏற்ற நபராக அவர் மாற்றுகின்றார். இதைத் தான் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதல் என்கிறோம்.

5) இந்த இடத்தில் பரிசுத்த ஆவியானவரின் வரங்களில் ஒன்றான "அந்நிய பாஷைகளை" பேசுதல் பற்றி நான் கூறவில்லை, இதைப் பற்றி வேறு கேள்விகளில் அறிந்துக்கொள்ளலாம். பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொருவரின் உள்ளங்களில் வாழுகின்றார், வழிநடத்துகின்றார், இது ஒவ்வொருவருக்குள்ளும் நடப்பதாகும்.

ஆக, பைபிளை ஆய்வு செய்து கேள்வி கேட்க விரும்பும் அருமையான முஸ்லிம் சகோதர சகோதரிகளிடம் நான் வேண்டிக்கொள்வது என்னவென்றால், நீங்கள் கேள்விகளை கேட்பதற்கு முன்பாக, சுயமாக நீங்களே பைபிளை படித்துப் பாருங்கள், உங்களுக்கு சுலபமாக புரியும். அதன் பிறகும் புரியவில்லையென்றால் கேள்விகளை கேளுங்கள் பதில்களைச் சொல்கிறோம்.

அஹமத் தீதத், ஜாகிர் நாயக் மற்றும் பீ ஜைனுல் ஆபீதீன் போன்ற முஸ்லிம் அறிஞர்கள் சொல்லும் விவரங்களை "நீங்கள் ஆய்வு செய்யாமல் நம்பாதீர்கள்", இது ஆபத்தானதாகும்.

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2020ramalan/2020-ramalan-19.html

ஏன் தேவன் ஓசியா என்ற தீர்க்கதரிசியை விபச்சாரம் செய்ய கட்டளையிட்டார் (ஓசியா 1:2-3)? ஒரு முஸ்லிம் இந்த கேள்வியை கேட்டார்.

கேள்வி: ஏன் தேவன் ஓசியா என்ற தீர்க்கதரிசியை விபச்சாரம் செய்ய கட்டளையிட்டார் (ஓசியா 1:2-3)? ஒரு முஸ்லிம் இந்த கேள்வியை கேட்டார்.

பதில்: இந்த கேள்வியைக் கேட்ட முஸ்லிம் சகோதரர், சரியாக ஓசியா புத்தகத்தை படிக்கவில்லை. 

இந்த புத்தகத்தில் தேவன் ஓழியாவை விபச்சாரம் செய்யச் சொல்லவில்லை. இஸ்ரவேல் மக்கள் சோரம் போனார்கள், அதாவது மெய்யான தெய்வமாகிய யெகோவாவை தொழுதுக்கொள்ளாமல், அந்நிய தெய்வங்களை வணங்கினார்கள். இருந்தபோதிலும் தம் அன்பினால் தேவன் அவர்களை மறுபடியும் தம்மிடம் சேர்த்துக்கொண்டார், அவர்களின் துன்பங்களை நீக்கினார். ஆனால், அவர்கள் மறுபடியும் அந்நிய தெய்வங்களை வணங்க ஆரம்பித்தார்கள்.

இதனை விளக்கவும், இஸ்ரேல் மக்களின் கீழ்படியாமையையும் விளக்கவே, தம் தீர்க்கதரிசி ஓசியாவிடம் "நீ போய் ஒரு சோரம் போன ஸ்திரியை திருமணம் செய்துக்கொள்" என்றார். இங்கு திருமணம் பற்றி பேசப்படுகின்றது, விபச்சாரம் பற்றியல்ல.

ஓசியா 1:2-3

2. கர்த்தர் ஓசியாவைக்கொண்டு உரைக்கத்தொடங்கினபோது, கர்த்தர் ஓசியாவை நோக்கி: நீ போய், ஒரு சோர ஸ்திரீயையும் சோரப்பிள்ளைகளையும் உன்னிடமாகச் சேர்த்துக்கொள்தேசம் கர்த்தரை விட்டு விலகிச் சோரம்போயிற்று என்றார்.

3. அவன் போய், திப்லாயிமின் குமாரத்தியாகிய கோமேரைச் சேர்த்துக்கொண்டான்; அவள் கர்ப்பந்தரித்து, அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.

ஓசியா தீர்க்கதரிசி தேவனுக்கு ஒப்பாகவும், அவர் திருமணம் செய்த அந்த சோரம் போன பெண், இஸ்ரேல் மக்களுக்கு ஒப்பாகவும் பாவித்து வசனங்கள் சொல்லப்பட்டுள்ளது.  ஒரு தீய பெண்ணை திருமணம் செய்து, அவளுக்கு நல்ல வாழ்க்கை கொடுத்த பிறகு, அவள் மறுபடியும் தன் பழைய வாழ்க்கைக்கே திரும்பினால், தன் கணவருக்கு எவ்வளவு துக்கம் வருமோ, அதே போன்று, இஸ்ரவேல் மக்களின் செயல்களினால் தேவனின் மனதும் துக்கப்படுகின்றது என்பதைக் காட்டுகின்றது இந்த ஓசியா புத்தகம்.

தேவனின் சிறந்த நிபந்தனையற்ற அன்பைக் காட்டும் சிறப்பான புத்தகம் தான் ஓசியா.  பரிசுத்தமான இறைவனுக்கு முன்பாக நாம் அனைவரும் 'பரிசுத்தமில்லாதவர்கள் என்றும், நாம் தவறு செய்துவிட்டு, மறுபடியும் மனந்திருந்தும் போது, நம்மை சேர்த்துக்கொள்கின்ற இறைவனாக' தேவன் இருக்கிறார் என்பதைத் தான் இந்த புத்தகம் காட்டுகின்றது.  

எனவே, இந்த கேள்வியைக் கேட்ட முஸ்லிம் சகோதரர் ஓசியா புத்தகம் முழுவதையும் படிக்கும் படி நான் கேட்டுக்கொள்கிறேன்(ஓசியா புத்தகத்தில் 14 அத்தியாயங்கள் மட்டுமே உள்ளன, எனவே, சுலபமாக படித்து புரிந்துக்கொள்ளலாம்).

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2020ramalan/2020-ramalan-19.html

தேவனுக்கு எப்படி இரண்டு சேஷ்டபுத்திரர்கள் இருக்கமுடியும்? யாத் 4:22ன் படி யாக்கோபு, எரேமியா 31:9ன் படி எப்பிராயீம் சேஷ்ட புத்திரன்? இது முரண்பாடு அல்லவா?

கேள்வி:  தேவனுக்கு  எப்படி இரண்டு சேஷ்டபுத்திரர்கள் இருக்கமுடியும்? யாத் 4:22ன் படி யாக்கோபு, எரேமியா 31:9ன் படி எப்பிராயீம் சேஷ்ட புத்திரன்? இது முரண்பாடு அல்லவா?

இந்த கேள்வியை இஸ்லாமிய அறிஞர் அஹமத் தீதத் கேட்டார்

பதில்: இஸ்லாமிய அறிஞர் பைபிளை சரியாக படிக்கவில்லை, ஆய்வு செய்யவில்லை என்று இதன் மூலம் அறியமுடிகின்றது. 

ஒரு விவரத்தை மனதில் வைக்கவேண்டும், தேவன் ஒருவரைப் பார்த்து "இவன் என் குமாரன், என் சேஷ்ட புத்திரன், என் மகள்" என்று சொல்கிறார் என்று வைத்துகொண்டால், அவர் ஆவிக்குரிய/ஆன்மீக வகையில் சொல்கிறார் என்று பொருளே தவிர, மனித முறையில் (உடலுறவு மூலமாக) பிறந்த பிள்ளைகள் என்று சொல்கிறார் என்று பொருள் கொள்ளக்கூடாது. முஸ்லிம்களிடம் பேசும் போது, இந்த விவரத்தை நாம் முதலாவது தெளிவு படுத்தவேண்டும். தேவனுக்கு  சேஷ்ட புத்திரன் என்றுச் சொன்னால், அவருக்கும் அந்த மனிதனுக்கும் இடையே இருக்கும் விசேஷித்த உறவுமுறையை, உரிமையை வெளிப்படுத்துவதாக அது உள்ளது.

சரி, இப்போது பதிலுக்குச் செல்வோம், முதலாவது அஹமத் தீதத் அவர்கள் குறிப்பிட்ட வசனங்களை வாசிப்போம்.

யாத்திராகமம் 4:22

அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன்.

எரேமியா 31:9

அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழிநடத்துவேன்; அவர்களைத் தண்ணீருள்ள நதிகளண்டைக்கு இடறாத செம்மையான வழியிலே நடக்கப்பண்ணுவேன்; இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான்.

யாக்கோபு/இஸ்ரவேல்:

ஈசாக்கு மற்றும் ரெபேக்கள் தம்பதியினருக்கு பிறந்த இரண்டாவது மகன் தான் யாக்கோபு (இஸ்ரவேல் என்ற இன்னொரு பெயரை தேவன் இவருக்கு பிறகாலத்தில் கொத்தார்). ஈசாக்குக்கு பிறந்த இரண்டாவது மகனைத் தான் தேவன் "என் சேஷ்ட புத்திரன்" என்கிறார்.

எப்பிராயீம்: 

யாக்கோபுக்கு பிறந்த முதலாவது மகன் "ரூபன்" என்பவர், ஆனால் இங்கே தேவன் "எப்பிராயீம்" என் சேஷ்ட புத்திரன் என்கிறார். 

ஈசாக்கின் முதல் மகன் ஏசாவை விட்டுவிட்டு, ஏன் இரண்டாவது மகன் யாக்கோபை தேவன் தெரிவு செய்தார்? இதே போன்று, யாக்கோபின் முதல் மகனாகிய "ரூபனை" விட்டுவிட்டு, ஏன் யாக்கோபின் பேரனை (எப்பிராயீமை) தெரிவு செய்தார்? ஆவிக்குரிய விதத்தில் அவர் மக்களை தெரிவு செய்கின்றார். 

சில வேளைகளில் வேறு காரணங்களும் இருக்கும், உதாரணத்திற்கு, யாக்கோபின் முதல் மகன், "ரூபன்" ஒரு கட்டளையை மீறி பெரும் பாவத்தை செய்தான்,  அதனால் சேஷ்ட புத்திர உரிமை "யோசேப்பின் குடும்பத்துக்கு" கொடுக்கப்பட்டது. பார்க்க I நாளாகமம் 5:1.

I நாளாகமம் 5:1

ரூபன் இஸ்ரவேலுக்கு முதற்பிறந்த சேஷ்டபுத்திரன்; ஆனாலும் அவன் தன் தகப்பனுடைய மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தினபடியினால், கோத்திரத்து அட்டவணையிலே அவன் முதற் பிறந்தவனாக எண்ணப்படாமல், அவனுடைய சேஷ்டபுத்திர சுதந்தரம் இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின் குமாரருக்குக் கொடுக்கப்பட்டது.

யோசேப்பிற்கு மனாசே என்ப‌வர் தான் முதல் மகன் (சேஷ்ட புத்திரன்), அவனை விட்டுவிட்டு, இரண்டாவது மகன் "எப்பிராயீம்" என்பவரை தெரிவு செய்தார் தேவன் ஏன்? இதன் காரணத்தை அறிய கீழ்கண்ட வசனங்களையும் பார்க்கவும்.

யாக்கோபு மரிக்கும் நேரம் வந்தது, அவர் அனைவரையும் அழைத்து ஆசீர்வதிக்கிறார், அந்த நேரத்தில் யோசேப்பின் பிள்ளைகளை ஆசீர்வதிக்கும் போது, என்ன நடந்தது என்பதை பாருங்கள்.

ஆதியாகமம் 48: 13-20

13. பின்பு, யோசேப்பு அவ்விருவரையும் கொண்டுவந்து, எப்பிராயீமைத் தன் வலது கையினாலே இஸ்ரவேலின் இடது கைக்கு நேராகவும், மனாசேயைத் தன் இடதுகையினாலே இஸ்ரவேலின் வலதுகைக்கு நேராகவும் விட்டான்.

14. அப்பொழுது இஸ்ரவேல், மனமறிய, தன் வலதுகையை நீட்டி, இளையவனாகிய எப்பிராயீமுடைய தலையின்மேலும், மனாசே மூத்தவனாயிருந்தும், தன் இடதுகையை மனாசேயுடைய தலையின்மேலும் வைத்தான்.

. . .

17. தகப்பன் தன் வலதுகையை எப்பிராயீமுடைய தலையின்மேல் வைத்ததை யோசேப்பு கண்டு, அது தனக்குப் பிரியமில்லாதபடியால், எப்பிராயீமுடைய தலையின்மேல் இருந்த தன் தகப்பனுடைய கையை மனாசேயினுடைய தலையின்மேல் வைக்கும்படிக்கு எடுத்து:

18. என் தகப்பனே, அப்படியல்ல, இவன் மூத்தவன், இவனுடைய தலையின்மேல் உம்முடைய வலதுகையை வைக்கவேண்டும் என்றான்.

19. அவன் தகப்பனோ தடுத்து: அது எனக்குத் தெரியும், என் மகனே, எனக்குத் தெரியும்; இவனும் ஒரு ஜனக்கூட்டமாவான், இவனும் பெருகுவான்; இவனுடைய தம்பியோ இவனிலும் அதிகமாய்ப் பெருகுவான்; அவனுடைய சந்ததியார் திரளான ஜனங்களாவார்கள் என்றான்.

20. இவ்விதமாக அவன் அன்றைத்தினம் அவர்களை ஆசீர்வதித்து: தேவன் உன்னை எப்பிராயீமைப்போலவும் மனாசேயைப்போலவும் ஆக்குவாராக என்று இஸ்ரவேலர் உன்னை முன்னிட்டு வாழ்த்துவார்கள் என்று சொல்லி, எப்பிராயீமை மனாசேக்கு முன்னே வைத்தான்.

இதன் படி, முதலாவது தேவனுக்கு 'யாக்கோபு' சேஷ்ட புத்திரன், அதன் பிறகு யாக்கோபின் பிள்ளைகளில் ரூபனை விட்டுவிட்டு, அது யோசேப்பின் இரண்டாவது மகனுக்கு 'சேஷட புத்திர உரிமை' கொடுக்கப்பட்டது.

எனவே, தேவனுக்கு 'யாக்கோபு சேஷ்ட புத்திரன்', அதன் பிறகு 'எப்பிராயீம் சேஷ்ட புத்திரன்'. இந்த விவரம் தோறாவில் (ஐந்தாகமங்களில்) இருப்பதினால் யூதர்களுக்கு எந்த‌ குழப்பமும் இல்லை. அஹமத் தீதத் போன்ற முஸ்லிம்கள் பைபிளை சரியாக படிக்காததினால், ஆய்வு செய்யாததினால் இப்படி குழம்புகிறார்கள்.

source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2020ramalan/2020-ramalan-19.html

கர்த்தர் "கெர்ச்சிக்கிறார்" என்றுச் சொல்வது, இறைவனது இலக்கணத்துக்கு அடுக்குமா? பார்க்க: ஏசாயா 42:13 & எரேமியா 25:30

கேள்வி : கர்த்தர் "கெர்ச்சிக்கிறார்" என்றுச் சொல்வது, இறைவனது இலக்கணத்துக்கு அடுக்குமா? பார்க்க: ஏசாயா 42:13 & எரேமியா 25:30

பதில்: கர்த்தர் "சிங்கம் போல‌ கெர்ச்சிக்கிறார்" என்றுச் சொல்வது, இறைவனது இலக்கணத்துக்கு எதிரானது அல்ல. சிங்கம் அதிகாரத்திற்கும், வலிமைக்கும்  உதாரணமாக காட்டப்படுகின்றது. சிங்கத்தின் கெர்ச்சிப்பு பலசாலிகளின் வெற்றியை குறிக்கிறது. தம்மை பல இடங்களில் சிங்கத்திற்கு தேவன் ஒப்பிட்டு பேசுகின்றார்.

ஒரு சிங்கம் எப்படி கெர்ச்சித்து காட்டு மிருகங்களை கலங்கடிக்குமோ, அதே போன்று கர்த்தரும் தம் எதிர்களை கலங்கடிக்கிறார் என்பதைத் தான் இதன் மூலம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

ஏசாயா 42:13

13. கர்த்தர் பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, யுத்தவீரனைப்போல் வைராக்கியமூண்டு, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய சத்துருக்களை மேற்கொள்ளுவார்.

எரேமியா 25:30

30. ஆதலால் நீ அவர்களுக்கு விரோதமாக இந்த வார்த்தைகளையெல்லாம் தீர்க்கதரிசனமாக உரைத்து, அவர்களை நோக்கி: கர்த்தர் உயரத்திலிருந்து கெர்ச்சித்து, தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து தம்முடைய சத்தத்தைக் காட்டி, தம்முடைய தாபரத்துக்கு விரோதமாய்க் கெர்ச்சிக்கவே கெர்ச்சித்து, ஆலையை மிதிக்கிறவர்கள் ஆர்ப்பரிப்பதுபோல் பூமியினுடைய எல்லாக் குடிகளுக்கும் விரோதமாக ஆர்ப்பரிப்பார் என்று சொல் என்றார்.

யுத்த வீரனைப்போன்று, பராக்கிரசாலியைப்போன்று கர்த்தர் கெர்ச்சித்து தம் வல்லமையை காட்டுகின்றார், தம் எதிர்களை கலங்கடிக்கிறார் என்று மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன. இவைகள் இறைவனின் இலக்கணத்திற்கு முரண்பட்டதன்று, இவைகள் இறைவனுக்கு ஏற்ற குணமாகும். மக்கள் மீது தாயைப்போல அன்பு செலுத்தவும், அதே நேரத்தில் தவறான வழியில் நடக்கின்ற மக்களை தன் நீதியான வழியில் கொண்டுவர சிங்கத்தைப்போன்று கெர்ச்சித்து, அவர்களை தண்டிக்க அவருக்கு உரிமையுண்டல்லவா! நம் தகப்பனும் தாயும், அண்ணன் அக்காளும் நம் மீது அன்பு செலுத்தியது  போன்று, நாம் தவறு செய்யும் போது, 'சிங்கத்தைப்போன்று கெர்ச்சித்து, ச‌த்தம் போட்டு சில வேளைகளை நம்மை அடித்து திருத்தியிருக்கிறார்கள்'.

தேவன் பல இடங்களில் தம்மை தந்தைக்கு, தாய்க்கு, நண்பனுக்கு, எஜமானனுக்கு என்று பலவாறு ஒப்பிடுகின்றார், இதே போன்று, எதிர்களோடு சண்டையிடுவதை காட்டும் போது தம்மை சிங்கத்தின் கெர்ச்சிப்புக்கு ஒப்பிடுகின்றார்.

யோவேல் 3:16

கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; வானமும் பூமியும் அதிரும்; ஆனாலும் கர்த்தர் தமது ஜனத்துக்கு அடைக்கலமும் இஸ்ரவேல் புத்திரருக்கு அரணான கோட்டையுமாயிருப்பார்.

ஆமோஸ் 1:2

கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; அதினால் மேய்ப்பரின் தாபரங்கள் துக்கங்கொண்டாடும்; கர்மேலின் கொடுமுடியும் காய்ந்துபோகும்.

சிங்கத்தின் கெர்ச்சிப்பு தேவனுக்கு மட்டுமல்ல, சாதாரண ராஜாவிற்கும், சில இடங்களில் பலசாலியான தீயவர்களுக்கும் ஒப்பிட்டு பேசப்பட்டுள்ளது.

நீதிமொழிகள் 19:12

ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயை புல்லின்மேல் பெய்யும் பனிபோலிருக்கும்.

நீதிமொழிகள் 20:2

ராஜாவின் உறுக்குதல் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனைக் கோபப்படுத்துகிறவன் தன் பிராணனுக்கே துரோகஞ்செய்கிறான்.

I பேதுரு 5:8

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.

எனவே, ஏசாயா 42:13 & எரேமியா 25:30 வசனங்களில் "கர்த்தர் கெர்ச்சிக்கிறார்" என்ற வார்த்தைகள் வருவது இறைவனது இலக்கணத்திற்கு இழுக்கு அல்ல என்பது இதன் மூலம் நாம் அறிந்துக்கொள்ளமுடியும்.

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2020ramalan/2020-ramalan-19.html

நீதிமொழிகள் 31:6,7ல், மதுபானத்தை குடிக்ககொடுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளதே இது நியாயமான கட்டளையா?

கேள்வி:  நீதிமொழிகள் 31:6,7ல், மதுபானத்தை குடிக்ககொடுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளதே இது நியாயமான கட்டளையா?

இந்த கேள்வியை அஹமத் தீதத் என்ற இஸ்லாமியர் கேட்டுயிருந்தார்.

பதில்: கீழ்கண்ட வசனங்களை தனியாக எடுத்து படிக்கும் போது, சாகின்றவனுக்கும், மனஉளைச்சல் உள்ளவனுக்கும் மதுபானம் கொடுங்கள், அவன் தன் துன்பத்தை மறக்கட்டும் என்று பைபிள் கட்டளையிடுவது போல தோன்றும்.  ஆனால், இது உண்மையில்லை. இவ்வசனங்களின் பின்னணி முதல் ஐந்து வசன‌ங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பின்னணியோடு பார்க்கும் போது, வேறு ஒரு செய்தி நமக்கு தெரியும், வாருங்கள் அதனைப் பார்ப்போம்.

நீதிமொழிகள் 31:6-7

6. மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சரசத்தையும் கொடுங்கள்;

7. அவன் குடித்துத் தன் குறைவை மறந்து, தன் வருத்தத்தை அப்புறம் நினையாதிருக்கட்டும்.

ராஜ மாதா, தன் மகன் இளவரசனுக்கு கொடுக்கும் அறிவுரை:

நீதிமொழிகள் 31வது அத்தியாயத்தில், சாலொமோனின் தாய் கொடுக்கும் அறிவுரையாக  இந்த அத்தியாயம் தொடங்கும்.  சாலொமோனுக்கு இருக்கும் இன்னொரு பெயர், "லேமுவேல்" என்பதாகும்.

நீதிமொழிகள் 31:1-5

1. ராஜாவாகிய லேமுவேலுக்கடுத்த வசனங்கள்; அவன் தாய் அவனுக்குப் போதித்த உபதேசமாவது:

2. என் மகனே, என் கர்ப்பத்தின் குமாரனே, என் பொருத்தனைகளின் புத்திரனே,

3. ஸ்திரீகளுக்கு உன் பெலனையும், ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன் வழிகளையும் கொடாதே.

4. திராட்சரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல.

5. மதுபானம் பண்ணினால் அவர்கள் நியாயப் பிரமாணத்தை மறந்து, சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள்.

இங்கு சலொமோன் அரசனின் தாய், ஒரு ராஜா "எப்படியெல்லாம் தீமையை விட்டு விலகவேண்டும், எவைகளை செய்யக்கூடாது" என்பதைச் சொல்லி எச்சரிக்கிறார்கள்.

1) பெண்களுக்கு உன் பெலனை கொடுக்காதே

2) ராஜக்களை கெடுக்கும் காரியங்களுக்கு விலகியிரு

3) திராட்சரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல, மகனே அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல.

4) மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல

ஒருவேளை ராஜாக்கள் குடித்தால் என்ன நடக்கும்? அதே தாய் அதன் விளைவுகளையும் கூறுகின்றார்கள்.

5) மதுபானம்பண்ணினால் அவர்கள் நியாயப்பிரமாணத்தை (சட்டத்தை) மறந்துவிடுவார்கள்

6) சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள்

இதுவரை சொன்ன அறிவுரைகளின் படி அறிவது என்ன? மதுபானம் ராஜாக்களுக்கு நல்லதல்ல, நாட்டுக்கு நல்லதல்ல, அந்த அரசனின் ஆட்சியில் வாழும் மக்களுக்கு நல்லதல்ல என்பதாகும்.

இதன் பிறகு தான் இந்த கேள்வியில் கேட்ட  6வது மற்றும் 7வது வசனம் வருகின்றது.

இவ்விரு வசனங்களில் அறிவது என்ன? தற்கொலை எண்ணமுடையவன் குடித்துவிட்டு கொஞ்சம் அவன் எண்ணத்தை மாற்றிக்கொள்ளட்டும், மனம் கசந்தவன் (மன உளைச்சல்) உள்ளவன் குடித்து, தன் துக்கத்தை விட்டு கொஞ்சம்  தன் வலி நீங்கி இருக்கட்டும், ஆனால், "நீ ராஜா, உனக்கு இந்த மதுபானம் தேவையில்லை, அதன் பக்கம் போகாதே! நீ என்ன தற்கொலை எண்ணமுடையவனா? மனஉளைச்சல் உள்ளவனா? இல்லையல்லவா. எனவே மதுபாத்தை விட்டு தூரமாக இரு". 

ஒரு அரசன் குடிப்பதற்கும், சாதாரண மனிதன் அதாவது தற்கொலை எண்ணமுடையவன், அதிக வலி உள்ளவன் குடிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.

அவன் குடித்தால் அவனது தற்காலிக வலி, குறைவு நீங்கி சிறிது நிம்மதியாக இருப்பான், நீ (ராஜா) குடித்தால், நீ சட்டத்தை மீறுவாய், ஏழைகளுக்கு அநீதி செய்வாய், எனவே அதன் பக்கம் போகாதே. இது தான் சாலொமோன் அரசனின் தாய் அவனுக்கு கொடுத்த அறிவுரை.

எனவே, நீதிமொழிகள் 31:6,7ம் வசனங்கள் குடிக்கச் சொல்லி அறிவுரை கூறவில்லை என்பது இதன் மூலம் அறியலாம். இவ்வசனங்கள் அவைகளின் முந்தைய 5 வசனங்களோடு சேர்த்து படிக்கவேண்டியவைகளாகும்.

பைபிளில் இன்னும் நீதிமொழிகளில் மதுபானத்திற்கு எதிரான சில‌ எச்சரிக்கைகள்:

ஓசியா 4:11 

11. வேசித்தனமும் திராட்சரசமும் மதுபானமும் இருதயத்தை மயக்கும்.

நீதிமொழிகள் 20:1

1. திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல.

நீதிமொழிகள் 23:20,21,29-33

20. மதுபானப்பிரியரையும் மாம்சப் பெருந்தீனிக்காரரையும் சேராதே.

21. குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும்.

29. ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்? 

30. மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே.

31. மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும்.

32. முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.

33. உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்.

எபேசியர் 5: 18

18. துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து;

1 தீமோ 3:3

அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பணஆசையில்லாதவனுமாயிருந்து,

பதில் முற்றிற்று, ஆனால் முஸ்லில்கள் சிந்திக்க அவர்கள் வேதத்திலிருந்து இந்த மதுபான தலைப்பு பற்றிய சில  விவரங்கள்:

பின் குறிப்பு:

1) இஸ்லாமில் முஸ்லிம்கள் குடித்து, மதி மயங்கி தொழுதுக்கொண்டு இருந்தார்கள், அதன் பிறகு தான் அல்லாஹ் மதுபான தடை சட்டம் கொடுத்தான். இதன் படி பார்த்தால், இஸ்லாமில் அல்லாஹ் மதுபானத்தை தடை செய்யும் வரை, அது அனுமதிக்கப்பட்டு இருந்தது என்று அர்த்தம் தானே!

இதைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு இஸ்லாமியருக்கு(அபூ அப்திர்ரஹ்மான்) பதில் கொடுத்துள்ளேன், அதன் ஒரு பகுதிய இங்கு பதிக்கிறேன்.

அபூ அப்திர்ரஹ்மான் (முஸ்லிம்கள் கூறியது):

"மதுபானம் அருந்தாதீர்கள்" என்று பைபிள் உபதேசம் செய்தாலும் அந்தத் தீமையை தீர்க்கதரிசிகளே செய்து வந்தார்கள் என்றும் இயேசு கிறிஸ்து கூட கல்யாண விருந்தில் அதை பரிமாறியிருக்கிறார் என்று புரோகிதர்கள் எழுதி வைத்துள்ளதால் இது குறித்தும் தார்மீக வழிகாட்டுதல் இல்லாமல் பாஸ்டர் கூட மதுப்பழக்கத்துக்கு அடிமையாவதும் கிறிஸ்தவத்திலேயே நடக்கின்றன.

ஈஸா குர்‍ஆன்:

இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றிய அற்புதம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு கீழ் கண்ட பதிலை நாம் ஏற்கனவே கொடுத்துள்ளோம். 

அல்லாஹ் கொஞ்சம் கொஞ்சமாக மதுபானத்தை தடை செய்தார், அதுவரையில் இஸ்லாமியர்கள் குடித்தார்கள் என்று இஸ்லாமியர்கள் சொல்வார்கள். திடீரென்று குடிப்பழக்கத்தை நிறுத்தமுடியாது, அதற்காக மனிதனின் மனநிலையை புரிந்துக்கொண்டு தான் அல்லாஹ் இப்படி அழகாக செய்தார் என்றுச் சொல்வார்கள். இஸ்லாமியர்களின் இப்படிப்பட்ட பலவீனமான வாதங்கள் அனைத்தும் ஒன்றுக்கும் உதவாத வாதங்களாக மாறிவிடுகின்றன, எப்படி என்பதை கீழ் கண்ட கட்டுரைகளை படித்துப்பார்க்கவும். 

குடித்தபோதையில் ஒட்டக எலும்பால் அடித்துக்கொண்டு காயப்பட்ட இஸ்லாமிய ஆரம்பகால மாமனிதர்கள்: 

இஸ்லாமிய அறிஞரான இபின் கதிர், ஏன், எப்போது அல்லாஹ் மதுபான தடை  வசனங்களை இறக்கினார் என்பதை குறிப்பிடுகிறார். குடித்த போதையில் ஒருவர் ஒரு ஒட்டகத்தின் எலும்பை எடுத்து, போட்டார் ஒரு போடு, மூக்கில் காயம், இறங்கியது வசனம்.

Causes of Its Revelation 

Ibn Abi Hatim has recorded some reports about the incident of its revelation: Sa`d said, "Four Ayat were revealed concerning me. A man from the Ansar once made some food and invited some Muhajirin and Ansar men to it, and we ate and drank until we became intoxicated. We then boasted about our status.'' Then a man held a camel's bone and injured Sa`d's nose, which was scarred ever since. This occurred before Al-Khamr was prohibited, and Allah later revealed, 

(O you who believe! Approach not As-Salat (the prayer) when you are in a drunken state). Muslim recorded this Hadith, and the collectors of the Sunan recorded it, with the exception of Ibn Majah. 

Source: https://www.wordofallah.com/tafseer  select 4:43 verse - Tafsir Ibn Kathir

குடித்துவிட்டு, போதையில் தொழுகை செய்யும் போது வாய் குழம்பிய பே(போ)தையர்: 

ஒரு இஸ்லாமியர் குடித்தார், போதை ஏறியது (சென்னைத் தமிழில் அழகாக மப்பு என்பார்கள்), குடித்த மயக்கத்திலேயே தொழுகை செய்ய ஆரம்பித்தார். மற்றவர்களை தொழுகையில் நடத்தும்படி, முன்னின்று தொழுகை செய்ய ஆரம்பித்தார். 

அவர் கீழ் கண்டவாறு குர்‍ஆன் சூராவை ஓதினார்: 

"காஃபிர்களே! நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்,

ஆனால், நீங்கள் வணங்குபவற்றை நாங்கள் வணங்குவோம்" 

இதற்காகவே இற‌ங்கிய‌து இன்னொரு வ‌ச‌ன‌ம், 

Another Reason Ibn Abi Hatim narrated that `Ali bin Abi Talib said, "Abdur-Rahman bin `Awf made some food to which he invited us and served some alcohol to drink. When we became intoxicated, and the time for prayer came, they asked someone to lead us in prayer. He recited `Say, `O disbelievers! I do not worship that which you worship, but we worship that which you worship [refer to the correct wording of the Surah: 109].''' Allah then revealed, 

(O you who believe! Do not approach Salah when you are in a drunken state until you know what you are saying). '' This is the narration collected by Ibn Abi Hatim and At-Tirmidhi, who said "Hasan [Gharib] Sahih.'' Allah's statement, 

Source: https://www.wordofallah.com/tafseer  select 4:43 verse - Tafsir Ibn Kathir

மேலே உள்ள விவரங்கள் இஸ்லாமிய ஆதாரங்களாகும், அதாவது குர்‍ஆன் விரிவுரைகளாகும், எனவே, எங்கள் மீது யாரும் கோபம் கொள்ளவேண்டாம்.

ஆக, இந்த குடி போதையில் அடித்துக்கொள்ளும் வேலையை அந்த இஸ்லாமிய குடிமகன்கள் பல ஆண்டுகளுக்கு பின்பாக செய்ததால், தடை சிறிது சிறிதாக வந்தது என்று பெருமையாக இஸ்லாமியர்கள் இப்போது சொல்லிக்கொள்கிறார்கள், ஆனால், அவர்கள் அந்த வேலையை ஆரம்பத்திலேயே செய்திருந்தால், தடை ஆரம்பத்திலேயே வந்திருக்கும். மேலும் விவரங்களுக்கு மேலே தரப்பட்ட கட்டுரைகளை படிக்கவும். 

அபூ அப்திர் ரஹ்மான் அவர்களிடம் கேட்க விரும்பும் கேள்விகள்: 

• பைபிளில் மதுபானம் தடைசெய்யப்பட்டு இருந்தால், ஏன் கிறிஸ்தவத்திற்கு பிறகு 600 ஆண்டுகளுக்கு பின்பு வந்த இஸ்லாமில் அந்த தடை ஆரம்பத்திலிருந்தே இல்லாமல் இருந்தது? 

• பழைய ஏற்பாட்டில் பன்றி மாமிசம் கூடாது என்று மோசேயின் மூலமாக தேவன் (அல்லாஹ் - உங்கள் நம்பிக்கைப்படி) தடை செய்திருக்கும் போது, 2000 ஆண்டுகளுக்கு பின்பும் அது இஸ்லாமில் அமுலில் இருக்குமானால், அதே தேவன் கொடுத்த மதுபான தடை ஏன் இஸ்லாமில் ஆரம்பத்திலிருந்தே சொல்லுபடியாகாது? 

• இன்னும் பல நூற்றாண்டுகள் பின்னுக்குச் சென்று, ஆபிரகாமுக்கு தேவன் கட்டளையிட்ட விருத்தசேதனம் என்பது, கி.பி. 600க்கு அடுத்து செல்லுபடியாகுமானால், அதே தேவன் விதித்த மதுபான தடை ஏன் செல்லுபடியாகாது?

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2020ramalan/2020-ramalan-19.html

செவ்வாய், 24 நவம்பர், 2020

சின்னஞ்சிறு கேள்வி பதில்கள்: பைபிள், கேள்விகள் 471 லிருந்து 480 வரை (பாகம் 19)

சின்னஞ்சிறு "இஸ்லாம் கிறிஸ்தவம்" தலைப்பின் முந்தைய 470 கேள்வி பதில்களை படிக்க இங்கு சொடுக்கவும். இந்த கட்டுரயில் "பைபிள்" பற்றி முஸ்லிம்கள் கேட்கும் மேலதிக 10 கேள்விகளுக்கு பதில்களைக் காண்போம்.

கேள்வி 471:  நீதிமொழிகள் 31:6,7ல், மதுபானத்தை குடிக்ககொடுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளதே இது நியாயமான கட்டளையா?

இந்த கேள்வியை அஹமத் தீதத் என்ற இஸ்லாமியர் கேட்டுயிருந்தார்.

பதில் 471: கீழ்கண்ட வசனங்களை தனியாக எடுத்து படிக்கும் போது, சாகின்றவனுக்கும், மனஉளைச்சல் உள்ளவனுக்கும் மதுபானம் கொடுங்கள், அவன் தன் துன்பத்தை மறக்கட்டும் என்று பைபிள் கட்டளையிடுவது போல தோன்றும்.  ஆனால், இது உண்மையில்லை. இவ்வசனங்களின் பின்னணி முதல் ஐந்து வசன‌ங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பின்னணியோடு பார்க்கும் போது, வேறு ஒரு செய்தி நமக்கு தெரியும், வாருங்கள் அதனைப் பார்ப்போம்.

கேள்வி 472: கர்த்தர் "கெர்ச்சிக்கிறார்" என்றுச் சொல்வது, இறைவனது இலக்கணத்துக்கு அடுக்குமா? பார்க்க: ஏசாயா 42:13 & எரேமியா 25:30

பதில் 472: கர்த்தர் "சிங்கம் போல‌ கெர்ச்சிக்கிறார்" என்றுச் சொல்வது, இறைவனது இலக்கணத்துக்கு எதிரானது அல்ல. சிங்கம் அதிகாரத்திற்கும், வலிமைக்கும்  உதாரணமாக காட்டப்படுகின்றது. சிங்கத்தின் கெர்ச்சிப்பு பலசாலிகளின் வெற்றியை குறிக்கிறது. தம்மை பல இடங்களில் சிங்கத்திற்கு தேவன் ஒப்பிட்டு பேசுகின்றார்.

ஒரு சிங்கம் எப்படி கெர்ச்சித்து காட்டு மிருகங்களை கலங்கடிக்குமோ, அதே போன்று கர்த்தரும் தம் எதிர்களை கலங்கடிக்கிறார் என்பதைத் தான் இதன் மூலம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

ஏசாயா 42:13

13. கர்த்தர் பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, யுத்தவீரனைப்போல் வைராக்கியமூண்டு, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய சத்துருக்களை மேற்கொள்ளுவார்.

எரேமியா 25:30

30. ஆதலால் நீ அவர்களுக்கு விரோதமாக இந்த வார்த்தைகளையெல்லாம் தீர்க்கதரிசனமாக உரைத்து, அவர்களை நோக்கி: கர்த்தர் உயரத்திலிருந்து கெர்ச்சித்து, தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து தம்முடைய சத்தத்தைக் காட்டி, தம்முடைய தாபரத்துக்கு விரோதமாய்க் கெர்ச்சிக்கவே கெர்ச்சித்து, ஆலையை மிதிக்கிறவர்கள் ஆர்ப்பரிப்பதுபோல் பூமியினுடைய எல்லாக் குடிகளுக்கும் விரோதமாக ஆர்ப்பரிப்பார் என்று சொல் என்றார்.

யுத்த வீரனைப்போன்று, பராக்கிரசாலியைப்போன்று கர்த்தர் கெர்ச்சித்து தம் வல்லமையை காட்டுகின்றார், தம் எதிர்களை கலங்கடிக்கிறார் என்று மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன. இவைகள் இறைவனின் இலக்கணத்திற்கு முரண்பட்டதன்று, இவைகள் இறைவனுக்கு ஏற்ற குணமாகும். மக்கள் மீது தாயைப்போல அன்பு செலுத்தவும், அதே நேரத்தில் தவறான வழியில் நடக்கின்ற மக்களை தன் நீதியான வழியில் கொண்டுவர சிங்கத்தைப்போன்று கெர்ச்சித்து, அவர்களை தண்டிக்க அவருக்கு உரிமையுண்டல்லவா! நம் தகப்பனும் தாயும், அண்ணன் அக்காளும் நம் மீது அன்பு செலுத்தியது  போன்று, நாம் தவறு செய்யும் போது, 'சிங்கத்தைப்போன்று கெர்ச்சித்து, ச‌த்தம் போட்டு சில வேளைகளை நம்மை அடித்து திருத்தியிருக்கிறார்கள்'.

தேவன் பல இடங்களில் தம்மை தந்தைக்கு, தாய்க்கு, நண்பனுக்கு, எஜமானனுக்கு என்று பலவாறு ஒப்பிடுகின்றார், இதே போன்று, எதிர்களோடு சண்டையிடுவதை காட்டும் போது தம்மை சிங்கத்தின் கெர்ச்சிப்புக்கு ஒப்பிடுகின்றார்.

யோவேல் 3:16

கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; வானமும் பூமியும் அதிரும்; ஆனாலும் கர்த்தர் தமது ஜனத்துக்கு அடைக்கலமும் இஸ்ரவேல் புத்திரருக்கு அரணான கோட்டையுமாயிருப்பார்.

ஆமோஸ் 1:2

கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; அதினால் மேய்ப்பரின் தாபரங்கள் துக்கங்கொண்டாடும்; கர்மேலின் கொடுமுடியும் காய்ந்துபோகும்.

சிங்கத்தின் கெர்ச்சிப்பு தேவனுக்கு மட்டுமல்ல, சாதாரண ராஜாவிற்கும், சில இடங்களில் பலசாலியான தீயவர்களுக்கும் ஒப்பிட்டு பேசப்பட்டுள்ளது.

நீதிமொழிகள் 19:12

ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயை புல்லின்மேல் பெய்யும் பனிபோலிருக்கும்.

நீதிமொழிகள் 20:2

ராஜாவின் உறுக்குதல் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனைக் கோபப்படுத்துகிறவன் தன் பிராணனுக்கே துரோகஞ்செய்கிறான்.

I பேதுரு 5:8

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.

எனவே, ஏசாயா 42:13 & எரேமியா 25:30 வசனங்களில் "கர்த்தர் கெர்ச்சிக்கிறார்" என்ற வார்த்தைகள் வருவது இறைவனது இலக்கணத்திற்கு இழுக்கு அல்ல என்பது இதன் மூலம் நாம் அறிந்துக்கொள்ளமுடியும்.

கேள்வி 473: எரேமியா தன் தாயின் வயிற்றில் உருவாகுமுன்னே தீர்க்கதரியானார் என்று எரேமியா 1:5 சொல்கிறது, இது எப்படி சாத்தியமாகும்?

இந்த கேள்வியை இஸ்லாமிய அறிஞர் அஹமத் தீதத் கேட்டார்

பதில் 473:  இந்த வசனத்தில் "எரேமியா தன் தாயின் வயிற்றில் இருந்தது முதல் மக்களுக்கு நபியாக/தீர்க்கதரிசியாக இருந்தார்" என்றுச் சொல்லவில்லை.  அதற்கு பதிலாக, தேவன் அவரை "தீர்க்கதரியாக நியமித்தார்" என்று மட்டும் தான் சொல்கிறது.

எரேமியா 1:5. 

நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார்.

எரேமியா பிறந்தவுடன், "பாருங்கள் மக்களே, நான் உங்கள் தீர்க்கதரிசி" என்று சொல்லவில்லை. அவர் வாலிப வயது ஆகும்வரை, அவருக்கே "தன்னை கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியாக ஊழியம் செய்ய அழைப்பார் என்று தெரியாது". கர்த்தர் நம்மை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஊழியத்திற்காக‌, நாம் பிறப்பதற்கு முன்பே முடிவு செய்வார். ஆனால், நாம் பிறந்த பிறகு பல ஆண்டுகள் கழித்து, அதற்கான நேரம் வரும் போது தான் "அந்த ஊழிய அழைப்பை நமக்கு வெளிப்படுத்துவார்". இதே போன்று தான் எரேமியா பற்றியும் தேவன் கூறுகின்றார்.

இஸ்லாம் நம்பும் "விதிப் பற்றிச் நான் இங்கு சொல்லவில்லை". விதியை பைபிள் எதிர்க்கிறது, அதனை ஏற்பதில்லை. எரேமியாவை நியமித்தது "விதியல்ல", இது சிலரை சில விசேஷித்த வேலைக்காக தேவன் நியமிப்பது பற்றியதாகும்.

இதில் எந்த ஒரு முரண்பாடோ, குழப்பம் அடைவதற்கான காரணமோ இல்லை. இந்த சிறிய விஷயம் கூட அஹமத் தீதத் போன்ற பெரிய அறிஞருக்கு தெரியவில்லை என்பதை அறியும் போது, வேதனையாகத் தான் உள்ளது.

பைபிளை பொருத்தமட்டில், தேவன் ஒருவரை ஊழியத்திற்காக நியமித்தாலும், மனிதனுக்கு சுயமாக தெரிவு செய்கின்ற திறமையை(Free Will) பிறந்ததிலிருந்து கொடுத்து இருப்பதினால், மனிதன் எந்நேரத்திலும் தன் முடிவை மற்றிக்கொள்ளலாம். இதனால் தான் 'பைபிள் விதியை  அங்கீகரிப்பதில்லை'. கிறிஸ்தவ இறையியலில் 'விதி' என்ற கோட்பாடு இல்லை.

கேள்வி 474:  தேவனுக்கு  எப்படி இரண்டு சேஷ்டபுத்திரர்கள் இருக்கமுடியும்? யாத் 4:22ன் படி யாக்கோபு, எரேமியா 31:9ன் படி எப்பிராயீம் சேஷ்ட புத்திரன்? இது முரண்பாடு அல்லவா?

இந்த கேள்வியை இஸ்லாமிய அறிஞர் அஹமத் தீதத் கேட்டார்

பதில் 474: இஸ்லாமிய அறிஞர் பைபிளை சரியாக படிக்கவில்லை, ஆய்வு செய்யவில்லை என்று இதன் மூலம் அறியமுடிகின்றது. 

ஒரு விவரத்தை மனதில் வைக்கவேண்டும், தேவன் ஒருவரைப் பார்த்து "இவன் என் குமாரன், என் சேஷ்ட புத்திரன், என் மகள்" என்று சொல்கிறார் என்று வைத்துகொண்டால், அவர் ஆவிக்குரிய/ஆன்மீக வகையில் சொல்கிறார் என்று பொருளே தவிர, மனித முறையில் (உடலுறவு மூலமாக) பிறந்த பிள்ளைகள் என்று சொல்கிறார் என்று பொருள் கொள்ளக்கூடாது. முஸ்லிம்களிடம் பேசும் போது, இந்த விவரத்தை நாம் முதலாவது தெளிவு படுத்தவேண்டும். தேவனுக்கு  சேஷ்ட புத்திரன் என்றுச் சொன்னால், அவருக்கும் அந்த மனிதனுக்கும் இடையே இருக்கும் விசேஷித்த உறவுமுறையை, உரிமையை வெளிப்படுத்துவதாக அது உள்ளது.

சரி, இப்போது பதிலுக்குச் செல்வோம், முதலாவது அஹமத் தீதத் அவர்கள் குறிப்பிட்ட வசனங்களை வாசிப்போம்.

யாத்திராகமம் 4:22

அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன்.

எரேமியா 31:9

அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழிநடத்துவேன்; அவர்களைத் தண்ணீருள்ள நதிகளண்டைக்கு இடறாத செம்மையான வழியிலே நடக்கப்பண்ணுவேன்; இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான்.

யாக்கோபு/இஸ்ரவேல்:

ஈசாக்கு மற்றும் ரெபேக்கள் தம்பதியினருக்கு பிறந்த இரண்டாவது மகன் தான் யாக்கோபு (இஸ்ரவேல் என்ற இன்னொரு பெயரை தேவன் இவருக்கு பிறகாலத்தில் கொத்தார்). ஈசாக்குக்கு பிறந்த இரண்டாவது மகனைத் தான் தேவன் "என் சேஷ்ட புத்திரன்" என்கிறார்.

எப்பிராயீம்: 

யாக்கோபுக்கு பிறந்த முதலாவது மகன் "ரூபன்" என்பவர், ஆனால் இங்கே தேவன் "எப்பிராயீம்" என் சேஷ்ட புத்திரன் என்கிறார். 

ஈசாக்கின் முதல் மகன் ஏசாவை விட்டுவிட்டு, ஏன் இரண்டாவது மகன் யாக்கோபை தேவன் தெரிவு செய்தார்? இதே போன்று, யாக்கோபின் முதல் மகனாகிய "ரூபனை" விட்டுவிட்டு, ஏன் யாக்கோபின் பேரனை (எப்பிராயீமை) தெரிவு செய்தார்? ஆவிக்குரிய விதத்தில் அவர் மக்களை தெரிவு செய்கின்றார். 

சில வேளைகளில் வேறு காரணங்களும் இருக்கும், உதாரணத்திற்கு, யாக்கோபின் முதல் மகன், "ரூபன்" ஒரு கட்டளையை மீறி பெரும் பாவத்தை செய்தான்,  அதனால் சேஷ்ட புத்திர உரிமை "யோசேப்பின் குடும்பத்துக்கு" கொடுக்கப்பட்டது. பார்க்க I நாளாகமம் 5:1.

I நாளாகமம் 5:1

ரூபன் இஸ்ரவேலுக்கு முதற்பிறந்த சேஷ்டபுத்திரன்; ஆனாலும் அவன் தன் தகப்பனுடைய மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தினபடியினால், கோத்திரத்து அட்டவணையிலே அவன் முதற் பிறந்தவனாக எண்ணப்படாமல், அவனுடைய சேஷ்டபுத்திர சுதந்தரம் இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின் குமாரருக்குக் கொடுக்கப்பட்டது.

யோசேப்பிற்கு மனாசே என்ப‌வர் தான் முதல் மகன் (சேஷ்ட புத்திரன்), அவனை விட்டுவிட்டு, இரண்டாவது மகன் "எப்பிராயீம்" என்பவரை தெரிவு செய்தார் தேவன் ஏன்? இதன் காரணத்தை அறிய கீழ்கண்ட வசனங்களையும் பார்க்கவும்.

யாக்கோபு மரிக்கும் நேரம் வந்தது, அவர் அனைவரையும் அழைத்து ஆசீர்வதிக்கிறார், அந்த நேரத்தில் யோசேப்பின் பிள்ளைகளை ஆசீர்வதிக்கும் போது, என்ன நடந்தது என்பதை பாருங்கள்.

ஆதியாகமம் 48: 13-20

13. பின்பு, யோசேப்பு அவ்விருவரையும் கொண்டுவந்து, எப்பிராயீமைத் தன் வலது கையினாலே இஸ்ரவேலின் இடது கைக்கு நேராகவும், மனாசேயைத் தன் இடதுகையினாலே இஸ்ரவேலின் வலதுகைக்கு நேராகவும் விட்டான்.

14. அப்பொழுது இஸ்ரவேல், மனமறிய, தன் வலதுகையை நீட்டி, இளையவனாகிய எப்பிராயீமுடைய தலையின்மேலும், மனாசே மூத்தவனாயிருந்தும், தன் இடதுகையை மனாசேயுடைய தலையின்மேலும் வைத்தான்.

. . .

17. தகப்பன் தன் வலதுகையை எப்பிராயீமுடைய தலையின்மேல் வைத்ததை யோசேப்பு கண்டு, அது தனக்குப் பிரியமில்லாதபடியால், எப்பிராயீமுடைய தலையின்மேல் இருந்த தன் தகப்பனுடைய கையை மனாசேயினுடைய தலையின்மேல் வைக்கும்படிக்கு எடுத்து:

18. என் தகப்பனே, அப்படியல்ல, இவன் மூத்தவன், இவனுடைய தலையின்மேல் உம்முடைய வலதுகையை வைக்கவேண்டும் என்றான்.

19. அவன் தகப்பனோ தடுத்து: அது எனக்குத் தெரியும், என் மகனே, எனக்குத் தெரியும்; இவனும் ஒரு ஜனக்கூட்டமாவான், இவனும் பெருகுவான்; இவனுடைய தம்பியோ இவனிலும் அதிகமாய்ப் பெருகுவான்; அவனுடைய சந்ததியார் திரளான ஜனங்களாவார்கள் என்றான்.

20. இவ்விதமாக அவன் அன்றைத்தினம் அவர்களை ஆசீர்வதித்து: தேவன் உன்னை எப்பிராயீமைப்போலவும் மனாசேயைப்போலவும் ஆக்குவாராக என்று இஸ்ரவேலர் உன்னை முன்னிட்டு வாழ்த்துவார்கள் என்று சொல்லி, எப்பிராயீமை மனாசேக்கு முன்னே வைத்தான்.

இதன் படி, முதலாவது தேவனுக்கு 'யாக்கோபு' சேஷ்ட புத்திரன், அதன் பிறகு யாக்கோபின் பிள்ளைகளில் ரூபனை விட்டுவிட்டு, அது யோசேப்பின் இரண்டாவது மகனுக்கு 'சேஷட புத்திர உரிமை' கொடுக்கப்பட்டது.

எனவே, தேவனுக்கு 'யாக்கோபு சேஷ்ட புத்திரன்', அதன் பிறகு 'எப்பிராயீம் சேஷ்ட புத்திரன்'. இந்த விவரம் தோறாவில் (ஐந்தாகமங்களில்) இருப்பதினால் யூதர்களுக்கு எந்த‌ குழப்பமும் இல்லை. அஹமத் தீதத் போன்ற முஸ்லிம்கள் பைபிளை சரியாக படிக்காததினால், ஆய்வு செய்யாததினால் இப்படி குழம்புகிறார்கள்.

கேள்வி 475: ஏன் தேவன் ஓசியா என்ற தீர்க்கதரிசியை விபச்சாரம் செய்ய கட்டளையிட்டார் (ஓசியா 1:2-3)? ஒரு முஸ்லிம் இந்த கேள்வியை கேட்டார்.

பதில் 475: இந்த கேள்வியைக் கேட்ட முஸ்லிம் சகோதரர், சரியாக ஓசியா புத்தகத்தை படிக்கவில்லை. 

இந்த புத்தகத்தில் தேவன் ஓழியாவை விபச்சாரம் செய்யச் சொல்லவில்லை. இஸ்ரவேல் மக்கள் சோரம் போனார்கள், அதாவது மெய்யான தெய்வமாகிய யெகோவாவை தொழுதுக்கொள்ளாமல், அந்நிய தெய்வங்களை வணங்கினார்கள். இருந்தபோதிலும் தம் அன்பினால் தேவன் அவர்களை மறுபடியும் தம்மிடம் சேர்த்துக்கொண்டார், அவர்களின் துன்பங்களை நீக்கினார். ஆனால், அவர்கள் மறுபடியும் அந்நிய தெய்வங்களை வணங்க ஆரம்பித்தார்கள்.

இதனை விளக்கவும், இஸ்ரேல் மக்களின் கீழ்படியாமையையும் விளக்கவே, தம் தீர்க்கதரிசி ஓசியாவிடம் "நீ போய் ஒரு சோரம் போன ஸ்திரியை திருமணம் செய்துக்கொள்" என்றார். இங்கு திருமணம் பற்றி பேசப்படுகின்றது, விபச்சாரம் பற்றியல்ல.

ஓசியா 1:2-3

2. கர்த்தர் ஓசியாவைக்கொண்டு உரைக்கத்தொடங்கினபோது, கர்த்தர் ஓசியாவை நோக்கி: நீ போய், ஒரு சோர ஸ்திரீயையும் சோரப்பிள்ளைகளையும் உன்னிடமாகச் சேர்த்துக்கொள்தேசம் கர்த்தரை விட்டு விலகிச் சோரம்போயிற்று என்றார்.

3. அவன் போய், திப்லாயிமின் குமாரத்தியாகிய கோமேரைச் சேர்த்துக்கொண்டான்; அவள் கர்ப்பந்தரித்து, அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.

ஓசியா தீர்க்கதரிசி தேவனுக்கு ஒப்பாகவும், அவர் திருமணம் செய்த அந்த சோரம் போன பெண், இஸ்ரேல் மக்களுக்கு ஒப்பாகவும் பாவித்து வசனங்கள் சொல்லப்பட்டுள்ளது.  ஒரு தீய பெண்ணை திருமணம் செய்து, அவளுக்கு நல்ல வாழ்க்கை கொடுத்த பிறகு, அவள் மறுபடியும் தன் பழைய வாழ்க்கைக்கே திரும்பினால், தன் கணவருக்கு எவ்வளவு துக்கம் வருமோ, அதே போன்று, இஸ்ரவேல் மக்களின் செயல்களினால் தேவனின் மனதும் துக்கப்படுகின்றது என்பதைக் காட்டுகின்றது இந்த ஓசியா புத்தகம்.

தேவனின் சிறந்த நிபந்தனையற்ற அன்பைக் காட்டும் சிறப்பான புத்தகம் தான் ஓசியா.  பரிசுத்தமான இறைவனுக்கு முன்பாக நாம் அனைவரும் 'பரிசுத்தமில்லாதவர்கள் என்றும், நாம் தவறு செய்துவிட்டு, மறுபடியும் மனந்திருந்தும் போது, நம்மை சேர்த்துக்கொள்கின்ற இறைவனாக' தேவன் இருக்கிறார் என்பதைத் தான் இந்த புத்தகம் காட்டுகின்றது.  

எனவே, இந்த கேள்வியைக் கேட்ட முஸ்லிம் சகோதரர் ஓசியா புத்தகம் முழுவதையும் படிக்கும் படி நான் கேட்டுக்கொள்கிறேன்(ஓசியா புத்தகத்தில் 14 அத்தியாயங்கள் மட்டுமே உள்ளன, எனவே, சுலபமாக படித்து புரிந்துக்கொள்ளலாம்).

கேள்வி 476: முஹம்மது பற்றி ஆபகூக் 3:3 வசனம் முன்னறிவிக்கிறது என்கிறார்களே, இது உண்மையா?

பதில் 476: முஹம்மது இறைத்தூதுவராக வந்தார் என்று இஸ்லாமியர்கள் நம்புகின்றனர். அது மட்டுமல்ல, மற்ற வேதங்களில் அவர் வருகைப் பற்றி எழுதப்பட்டுள்ளது என்று அவர்கள் தேடிக்கொண்டும், மாற்று மத வேதங்களில் சில வசனங்கள எடுத்துக்கொண்டு, இந்த வசனம் முஹம்மதுவின் வருகைப் பற்றி சொல்கிறது என்று தவறாக சொல்லிக்கொண்டு வருகின்றனர். 

இப்படி இஸ்லாமியர்கள் சொல்கின்ற வசனங்களில் "பைபிளின் பழைய ஏற்பாட்டின்" ஆபகூக் புத்தகமும் ஒன்று. ஆபகூக் 3:3ம் வசனத்தில் வரும் "பரிசுத்தர் பாரான் வனாந்திரத்திலிருந்து வந்தார்" என்ற வாக்கியம் "முஹம்மதுவை" குறிக்கும் என்று இஸ்லாமியர்கள் சொல்கின்றனர். 

இவர்களின் இந்த வாதம் தவறானது. இந்த வசனம் குறிப்பிடும் நபர் தேவனாவார் . இவர்களின் இந்த வாதம் சரியானதா இல்லையா என்பதை பார்ப்போம். 

ஆபகூக் 3:3ம் வசனம் குறிப்பிடுவது "தேவனைத்/இறைவனைத் தான், முஹம்மதுவை அல்ல" என்பதற்கான காரணங்கள்: 

இது தான் இஸ்லாம் மற்றும் தமிழ் முஸ்லீம் தளம் முன்வைத்த வாதம்: 

பரிசுத்தர் பாரான் மலையிலிருந்து வந்தார் என்று ஆபகூக் கூறுகின்றது. முஹம்மத் அவர்கள் பாரான் மலையில் இருந்த போதுதான் கேப்ரீல் (ஜிப்ரீல்) என்ற தேவதூதர் முஹம்மதிடம் வந்து வேத வசனங்களை வெளிபடுத்தினார். கேப்ரீலை இஸ்லாம் பல்வேறு இடங்களில் 'அவர் பரிசுத்தர்' என்று சொல்லிக் காட்டுகின்றது. 

1. அல்லா அனுப்பியது "தோரா, ஜபூர், இஞ்ஜில்" மட்டும் தான் என்று இஸ்லாமியர்கள் நம்புகின்றனர், பின் ஏன் ஆபகூக் லிருந்து ஆதாரம்? 

இஸ்லாமியர்களின் நம்பிக்கைப் படி மோசேவிற்கு "தோராவையும் (ஆதியாகமம் – உபாகமம்)", தாவீதுக்கு "ஜபூர் - சங்கீதம் " என்ற வேதத்தையும், இயேசுவிற்கு "இஞ்ஜில்" என்ற வேதத்தையும் அல்லாஹ் இறக்கினான். இவைகள் தவிர பைபிளில் உள்ள மற்ற தீர்க்கதரிசன புத்தகங்கள் அல்லாஹ் இறக்கவில்லை என்றும், இன்னும் புதிய ஏற்பாட்டில் சுவிசேஷங்களுக்கு அடுத்துள்ள புத்தகங்கள் வேதங்கள் அல்லாஹ் என்றும் நம்புகின்றனர். 

இஸ்லாமியர்கள் ஒன்றை கவனிக்கவேண்டும், அதாவது "ஆபகூக்" என்ற புத்தகம் என்றும் இறக்கியதாக நம்பும் "தோரா, ஜபூர் மற்றும் இஞ்ஜில்" போன்ற மூன்று வேதங்களிலும் வராது. 

என் கேள்விகள்: 

1. இஸ்லாமியர்கள் பைபிளில் உள்ள மற்றும் அல்லாஹ் இறக்கியதாகச் சொல்லும் தோரா(ஆதியாகமம் -உபாகமம்), ஜபூர் ( சங்கீதம் ) மற்றும் இஞ்ஜில் வேதத்தையே நம்புவதில்லை. ஆனால், அல்லாஹ்  இறக்கியதாகச் சொல்லாத "ஆபகூக்" என்ற பைபிள் புத்தகத்திலிருந்து மட்டும் ஏன் அவர்கள் ஆதாரத்தை முன்வைக்கின்றனர்?  வேடிக்கையாக உள்ளதல்லவா?

2. பைபிளின் "ஆபகூக்" புத்தகத்தைப் பற்றி,  ஏதாவது வசனத்தை அல்லாஹ்  குர்-ஆனில் சொல்லியுள்ளானா? 

3. ஆபகூக் 3:3ம் வசனத்தை நம்பும் இஸ்லாமியர்கள், இந்த ஆபகூக் புத்தகம் முழுவதும் திருத்தப்படவில்லை என்று நம்புகிறார்களா? 

4. தீர்க்கதரிசி ஆபகூக் போல பைபிளின் மற்ற தீர்க்கதரிசிகளாகிய ஏசாயா, எரேமிய, தானியேல் இன்னும் பல தீர்க்கதரிசிகள் புத்தகங்களையும் இஸ்லாமியகள் நம்புகிறார்கள் என்று நாம் நினைக்கலாமா?

2. ஆபகூக் புத்தகத்தின் சாராம்சம் (சாராம்சத்திற்கு வெளியே பொருள் தேடும் இஸ்லாமியர்கள்): 

ஆபகூக் புத்தகம் முழுவதும் ஒரு முறை படித்துப்பாருங்கள். மக்களின் துன்மார்க்க வாழ்க்கையை பார்த்து தேவனிடம் முறையிடுகிறார்(ஆபகூக் அதிகாரங்கள் 1, 2) மற்றும் மூன்றாம் அதிகாரத்தில் தேவனின் அதிசய செயலை நினைத்து அவர் மீது சார்ந்துக்கொள்கிறார். தேவன் மூலமாக வரும் இரட்சிப்பை நினைத்து துதிபாடுகிறார். 

ஆபகூக் 1:2-4

2. கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன். நீர் கேளாமலிருக்கிறீரே! கொடுமையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் இரட்சியாமலிருக்கிறீரே! 

3. நீர் எனக்கு அக்கிரமத்தைக் காண்பித்து, என்னைத் தீவினையைப் பார்க்கப்பண்ணுகிறதென்ன? கொள்ளையும் கொடுமையும் எனக்கு எதிரே நிற்கிறது; வழக்கையும் வாதையும் எழுப்புகிறவர்கள் உண்டு. 

4. ஆகையால் நியாயப்பிரமாணம் பெலனற்றதாகி, நியாயம் ஒருபோதும் செல்லாமற்போகிறது; துன்மார்க்கன் நீதிமானை வளைந்துகொள்கிறான்; ஆதலால் நியாயம் புரட்டப்படுகிறது

எதிர்காலத்தில் ஒரு தீர்க்கதரிசி வருவார் என்று ஆபகூக் 3:3ல் சொல்லப்படவில்லை. தேவன் கடந்த காலத்தில் செய்த அற்புதத்தைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் சொல்வது போல, முஹம்மது பாரானிலிருந்து வருவார் என்று ஆபகூக் சொல்லவில்லை, இது இஸ்லாமியர்களின் கற்பனையே தவிர வேறில்லை. 

ஆபகூக் புத்தகத்தில் உள்ள மூன்று அதிகாரங்களை படிக்கும்படி இஸ்லாமியர்களை கேட்டுக்கொள்கிறேன். அப்போது தான் சில இஸ்லாமிய அறிஞர்களின் இந்த வாதம் தவறானது என்பது புரியும். 

3. ஆபகூக் 3ம் அதிகாரம் ஒரு பாடலே (விண்ணப்பம்) ஒழிய, முஹம்மது வருகையின் தீர்க்கதரிசனமல்ல? 

ஆபகூக 3:1ம் வசனம் தெளிவாகச் சொல்கிறது, இந்த மூன்றாம் அதிகாரம் " ஒரு பாடலாகிய விண்ணப்பம்" என்று, இஸ்லாமியர்களின் கூற்றுப்படி இது ஒரு "எதிர் காலத்தில் நடக்க இருக்கின்ற தீர்க்கதரிசன வார்த்தைகள் அல்ல ". பார்க்க ஆபகூக் 3:1 

ஆபகூக் 3:1 ஆபகூக் தீர்க்கதரிசி சிகாயோனில் பாடின விண்ணப்பம். 

A prayer of Habakkuk the prophet upon Shigionoth

இந்த பாடல் ஒரு வகையான வாத்தியத்தில் (அல்லது) ஒரு குறிப்பிட்ட இராகத்தில்  பாடின பாடலாகும். அந்த வாத்தியம் அல்லது இராகம் சிகாயோனில் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த வாத்தியத்தில் தாவீது இராஜா கூட ஒரு சங்கீதம் பாடினார், இதை ஏழாம் சங்கீதம் தலைப்பு பகுதியில் காணலாம். இந்த வார்த்தை ஏழாம் சங்கீதத்தில் ஒருமையில் கொடுக்கப்பட்டுள்ளது. (Note: Shiggaion = singular, Shigionoth = Plural) 

சங்கீதம் 7ன் தலைப்பு பகுதி: பென்யமீனியனாகிய கூஷ் என்பவனுடைய வார்த்தைகளினிமித்தம் தாவீது கர்த்தரை நோக்கி பாடின சீகாயோன் என்னும் சங்கீதம். 

A shiggaion of David, which he sang of the LORD concerning Cush, a Benjamite. (NIV Study Bible)

இந்த ஆபகூக் மூன்றாம் அதிகாரத்தின் முதல் சில வசனங்கள்(13 வசனங்கள்)   ஒரு பாடல் தான் என்பதற்கு இன்னும் ஒரு ஆதாரம், ஆபகூக் 13ம் & 3:3 ம்   வசனத்தின் கடைசியில் உள்ள "சேலா" என்ற வார்த்தையை பார்த்தால் புரியும் . 

ஆபகூக் 3:13

உமது ஜனத்தின் இரட்சிப்புக்காகவும் நீர் அபிஷேகம் பண்ணுவித்தவனின் இரட்சிப்புக்காவுமே நீர் புறப்பட்டீர். கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி, துஷ்டனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்; சேலா.

இந்த "சேலா " என்ற வார்த்தை ஜபூர் என்ற சங்கீத புத்தகத்தில் 39 சங்கீதங்களுக்கு வருகிறது (சங்கீதம் 3,4,7,9,20, 140,143 etc…). இது பாடல்களுக்கு, அல்லது இசைக்கு சம்மந்தப்பட்ட ஒரு வார்த்தையாகும். இதனை சங்கீதத்தை(Psalm)  படிப்பவர்கள் கவனிக்கலாம். 

இந்த ஆபகூக் 3ம் அதிகாரம் ஒரு விண்ணப்பம் அல்லது பாடலாகிய விண்ணப்பம் என்று இந்த விவரங்கள் நமக்கு தெளிவாகச் சொல்கிறன. எனவே, ஆபகூக் 3:3ம் வசனம் முஹம்மதுவினுடைய வருகையின் தீர்க்கதரிசனம் அல்ல என்பது தெளிவு. 

4. ஆபகூக் 3:3 வசன "பரிசுத்தர்" என்பது தேவதூதரோ அல்லது மனிதனோ அல்ல, அவர் "கர்த்தர்" 

இந்த வசனத்தில் ஆபகூக் தேவனைப் பற்றியும் அவருடைய மகிமையைப் பற்றியும் பேசுகிறார். இந்த இடத்தில் பரிசுத்தர் என்பது முஹம்மதுவோ அல்லது இது தான் இஸ்லாம் தள கட்டுரை சொல்வது போல தேவதூதரோ அல்ல, இந்த வசனத்தில் சொல்லப்பட்ட பரிசுத்தர் "தேவன்" ஆவார் . 

பாரான் என்பது மக்கா அல்ல. இது சீனாய் தீபகர்பத்தில் உள்ள பாரான் வனாந்திரமாகும். (பாரான் என்பது மக்கா அல்ல என்ற கட்டுரையை இங்கு படிக்கவும்.)

ஆபகூக் 3:3

தேவன் தேமானிலிருந்தும், பரிசுத்தர் பாரான் பர்வதத்திலிருந்தும் வந்தார்; சேலா . அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால் பூமி நிறைந்தது.

இந்த இடத்தில் ஆபகூக் கடந்த கால(Past not Future) நிகழ்ச்சியை குறிப்பிடுகிறாரே தவிர, தன் காலத்திலிருந்து 1200 ஆண்டுகளுக்கு பிறகு வரும் முஹம்மதுவை குறித்து அவர் குறிப்பிடவில்லை. (ஆபகூக் காலம் கி.மு. 6ம் நூற்றாண்டாகும்). "வந்தார்" என்ற வார்த்தை கடந்த காலத்தை குறிக்கும், "வருவார்" என்று ஆபகூக் கூறவில்லை என்பதை கவனிக்கவும். 

இந்த  ஆபகூக் பலமுறை கர்த்தர், தேவன், தேவரீர் என்று அடிக்கடி சொல்வதை காணலாம். அதாவது இவர் தேவனிடம் தொடர்ந்து விண்ணப்பம் செய்கிறதை பார்க்கலாம். 

பரிசுத்தர் என்ற வார்த்தையை தேவன் தன்னை குறிப்பிட பலமுறை பயன்படுத்தியுள்ளார். சில நேரங்களில் பக்தர்கள் "தேவன்" என்ற வார்த்தையும், "பரிசுத்தர்" என்ற வார்த்தையையும் சேர்த்தே (அடுத்ததடுத்து) பயன்படுத்தியுள்ளனர். 

ஆபகூக் 1:12-13     

12 கர்த்தாவே, நீர் பூர்வகாலமுதல் என் தேவனும் என் பரிசுத்தருமானவர் அல்லவா ? நாங்கள் சாவதில்லை, கர்த்தாவே, நியாயத்தீர்ப்பு செய்ய அவனை வைத்தீர்; கன்மலையே, தண்டனை செய்ய அவனை நியமித்தீர்.13 தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; பின்னை துரோகிகளை நீர் நோக்கிக்கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மெளனமாயிருக்கிறதென்ன? 

12 O LORD, are you not from everlasting?  My God, my Holy One, we will not die.  O LORD, you have appointed them to execute judgment;  O Rock, you have ordained them to punish.

13 Your eyes are too pure to look on evil;  you cannot tolerate wrong. Why then do you tolerate the treacherous?  Why are you silent while the wicked swallow up those more righteous than themselves?

எசேக்கியேல்: 39:7

இவ்விதமாய் நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின் நடுவிலே என் பரிசுத்த நாமத்தைத் தெரிவிப்பேன்; என் பரிசுத்த நாமத்தை இனிப் பரிசுத்தக்குலைச்சலாக்கவொட்டேன்; அதினால் நான் இஸ்ரவேலில் பரிசுத்தராகிய கர்த்தர் என்று புறஜாதிகள் அறிந்துகொள்வார்கள்.

Ezekiel 39: 7 " 'I will make known my holy name among my people Israel. I will no longer let my holy name be profaned, and the nations will know that I the LORD am the Holy One in Israel. 

ஓசியா: 11:9

என் உக்கிர கோபத்தின்படியே செய்யமாட்டேன்; எப்பிராயீமை அழிக்கும்படித் திரும்பமாட்டேன்; ஏனென்றால் நான் மனுஷனல்ல, தேவனாயிருக்கிறேன்; நான் உன் நடுவிலுள்ள பரிசுத்தர்; ஆகையால் பட்டணத்துக்கு விரோதமாக வரேன். 

Hosea 11:9 I will not carry out my fierce anger, nor will I turn and devastate Ephraim. For I am God, and not man— the Holy One among you. I will not come in wrath

இந்த மேலே சொல்லப்பட்ட வசனங்களைக் கண்டும் நீங்கள் இன்னும் "பரிசுத்தர்" என்று ஆபகூக் 3:3ல் சொல்லப்பட்டது "தேவன்" தான் என்பதை நம்பவில்லையானால், நான் இன்னும் எத்தனை வசனங்களை ஆதாரமாக காட்டினாலும் நம்பமாட்டீர்கள். 

5. " தேவன்" என்பதை "முஹம்மது" என்று சொல்வது இஸ்லாமியர்களுக்கு "ஷிர்க்" ஆகும் 

இஸ்லாமியர்கள் தொடர்ந்து செய்துக்கொண்டு வரும் ஒரு பெரிய தவறு என்னவென்றால், பைபிளில் எங்கெல்லாம் (தங்களுக்கு சாதகமான வசனங்களில்) "தேவன்" அல்லது "இறைவன்" என்று வருகிறதோ, அங்கெல்லாம் அந்த வார்த்தை குறிப்பிடுவது "முஹம்மது" தான் என்று சொல்லிவருகிறார்கள். 

இது இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி "ஷிர்க் - SHIRK" ஆகும். அதாவது, அல்லாஹ்விற்கு இணையாக மனிதனை ஒப்பிடுவது. இதை இவர்கள் தெரிந்து செய்கிறார்களோ தெரியாமல் செய்கிறார்களோ எனக்கு தெரியாது. முஹம்மதுவை நபி என்று நிருபிக்க வேறு வழி ஏதாவது தேடினால் அவர்களுக்கு நல்லது, இல்லையென்றால் இறைவனுக்கு இணைவைத்த பாவத்திற்கு ஆளாகவேண்டி வரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 

6. பாரான் மலை அரேபியாவின் "ஹிரா" மலை அல்ல. 

பாரான் என்பது மக்கா அல்ல என்பதை நாம் முன்பே பார்த்தோம். இங்கு இது தான் இஸ்லாம் தள நண்பர் எழுதுகிறார், பாரான் மலை என்பது "ஹிரா" மலையாகும் என்று. இதற்கு எந்த ஆதாரமும் காட்டமுடியாது. 

இஸ்லாமியர்களின் வாதம் தவறானது என்று இது வரை நாம் பார்த்த விவரங்கள் மிகத்தெளிவாகச் சொல்கிறது. இவர்களுடைய வாதம் வெறும் ஆதாரமில்லாத வாதமே ஒழிய வேறில்லை. 

7. ஆபகூக் இந்த வாதத்தைப் பற்றி இதர இஸ்லாமிய அறிஞர்கள்: 

டாக்டர் ஜமால் பதாவி: இவர் இந்த வசனத்தைப் பற்றி பேசும் போது ஒருபடி மேலே சென்று, பைபிளின் பொருள் மாறும்படி சில வார்த்தைகளை அடைப்பிற்குள் எழுதி தன் வாதத்தை முன்வைக்கிறார் . 

Dr. Jamal Badawi also claimed that, "Habakkuk 3:3 speaks of God (God's help) coming from Te'man (an Oasis North of Medina according to J. Hasting's Dictionary of the Bible), and the holy one (coming) from Paran. That holy one who under persecution migrated from Paran (Mecca) to be received enthusiastically in Medina was none but prophet Muhammad." Source :   www.bibleandquran.com/quran-word-of-god8.htm

தேவன் என்று வரும் வார்த்தையை தேவனின் உதவி அதாவது God's Help என்று அடைப்பு குறிக்குள் போட்டுவிட்டு இவர் பொருள் கூறுகிறார். "God's Help" என்று எழுதினால் தான், முஹம்மதுவிற்கு உதவியாக இருக்கும் என்று இவர் எழுதுகிறார். 

இன்னொரு இஸ்லாமிய சகோதரர் தேவன் என்ற வார்த்தைக்கு பக்கத்தில் His Guidance என்று எழுதி வசனத்தை வெளியிடுகிறார். உண்மையில் அந்த வசனத்தில் தேவன் என்ற வார்த்தை உள்ளதே தவிர "தேவனின் உதவி" அல்லது God's Guidance என்று இல்லை. இவைகள் எல்லாம் இஸ்லாமிய அறிஞர்களின் திருவிளையாடல்கள். Source:   www.answering-islam.de/Main/Muhammad/Foretold/mish1a.html   

முடிவாக முஹம்மதுப் பற்றி ஒரு வசனமும் பைபிளில் இல்லை. அப்படி இருந்து இருந்தால், அதை கிறிஸ்தவர்கள் தான் முதலாவது நம்பியிருப்பார்கள். மாற்று மத வேதங்களை எப்படியெல்லாம் திருத்திச் சொல்லவேண்டுமோ அப்படியெல்லாம் இஸ்லாமிய அறிஞர்களில் சிலர் திருத்திச் சொல்கிறார்கள். இதனால் ஒரு பிரயோஜனமும் இருக்காது. 

இயேசுவிற்கு அடுத்து இன்னொருவர் வரவேண்டிய அவசியமே இல்லை. வேண்டுமானால், கள்ள தீர்க்கதரிசிகள் வருவார்கள், பல பொய்யைச் சொல்வார்கள், ஏன் பல அற்புதங்களையும் செய்வார்கள் என்று பைபிள் சொல்கிறது. இயேசு தான் வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறார் என்பதை இஸ்லாமிய அன்பர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஜெபத்துடன் முடிக்கிறேன்.

கேள்வி 477: பைபிளில் வரும பாரான் என்பது மக்கா என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள் (ஆபகூக் 3:3 & உபாகமம் 1:1)? இது சரியா?

பதில் 477: பைபிளில் வரும் பாரான் வனாந்திரம் மக்கா அல்ல. இதற்கான பதில் கீழ்கண்ட கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.

கேள்வி 478: அஹமத் தீதத் அவர்கள் கேட்ட கேள்வி: பரிசுத்த ஆவியை பெறுவதற்கு இயேசு 30 ஆண்டுகள் காத்திருந்தார் (மத்தேயு 3:16), ஆனால் யோவான் ஸ்நானகன் பிறந்ததிலிருந்தே பரிசுத்த ஆவியினால் நிரம்பியிருந்தார் (லூக்கா 1:15). "மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள்", பரிசுத்த ஆவியானவரை மலிவுவிலை போன்று மிகவும் சுலபமாக பெற்றுக் கொள்கிறார்கள். இது வேடிக்கையாக உள்ளதல்லவா?

பதில் 478:  அஹமத் தீதத் அவர்கள் பெரிய இஸ்லாமிய அறிஞர், ஆனால் இவரது கேள்விகளைப் பார்த்தால், வேடிக்கையாகவும், சிந்திக்காமல், ஆய்வு செய்யாமல் மேலோட்டமாக கேட்கப்பட்டதாகவும் தெரிகின்றது.

இலவசம் வேறு - மலிவானது வேறு:இவ்விரண்டிற்கும் உள்ள‌ வித்தியாசம் தெரியாத முஸ்லிம்கள்:

அஹமத் தீதத் அவர்களுக்கு 'இலவசம்' மற்றும் 'மலிவு' இவ்விரண்டிற்கு இடையேயுள்ள வித்தியாசத்தை புரிந்துக்கொள்ள குழப்பம் உள்ளது என்பதை அறியமுடிகின்றது. மேலும் இயேசுவின் தெய்வீகத்தன்மைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதையும் அவர் சரியாக அறிந்துக்கொள்ளவில்லை.

அஹமத் தீதத் அவர்கள் பரிசுத்த ஆவியானவர் என்ற தேவனின் விலைமதிப்பில்லாத பரிசை பெறாதபடியினால், அவருக்கு "மக்கள் பார்க்கும் விதமாக பரிசுத்த ஆவியானர் ஒரு வெளிச்சமாக, புறாவைப்போன்று இயேசு மீது வந்து அமர்ந்ததை புரிந்துக்கொள்ளமுடியாமல் போகிறது".

இலவசம் தான் ஆனால், மலிவானதல்ல:

ஒரு மனிதன் இயேசுவை தன் சொந்த தெய்வமாக விசுவாசிக்கும் போது, தன் பாவங்களை அறிக்கையிட்டு மனந்திரும்பும் போது, அவனுக்குள் பரிசுத்த ஆவியானவர் வாசம் செய்ய ஆரம்பிக்கிறார். இந்த பரிசு இலவசமானது தான், ஆனால் விலைமதிக்கமுடியாதது, அதாவது, 'இயேசுவின் மரணம் இதற்கு, அதாவது இந்த இரட்சிப்பிற்கு விலையாக கொடுத்து வாங்கப்பட்டதாகும்'. இந்த பரிசுத்த ஆவியானவர் ஒரு விசுவாசியின் உள்ளத்தில் வாசம் செய்து, நாலொரு மேனி பொழுதொரு வண்ணம் என்று சொல்வதுபோன்று, அந்த மனிதனை ஒவ்வொரு நாளும் சுத்திகரித்து, நீதியில் நடக்கவைத்து, அம்மனிதனின் கடைசி மூச்சு வரைக்கும் கூட இருந்து பரிசுத்தத்தில் நடக்க உதவி செய்கின்றார். இதைத் தான் ஒவ்வொரு "மறுபடியும் பிறந்தவர்கள்" பெற்றுக்கொள்வது, இதற்கு அந்த மனிதன் விலை கொடுக்கவில்லை, இயேசு கொடுத்தார். அந்த மனிதனுக்கு இரட்சிப்பு இலவசம், ஆனால் அது இயேசுவின் இரத்தம் கொடுத்து உயிர் கொடுத்து சம்பாதிக்கப்பட்டது.

எனவே, இலவசமாக கிடைப்பதெல்லாம் மலிவானது முக்கியமில்லாதது என்று கருதுவது தவறு. காற்று இலவசம் தான், மலிவானது அல்ல. இலவசமாக கிடைக்கும் காற்று நின்றுவிட்டால், இல்லாமல் போனால், மனிதன் அழிந்துவிடுவான்.

இயேசுவின் தெய்வீகத்தன்மையும் பரிசுத்த ஆவியானவரும்:

இயேசு பரிசுத்த ஆவியானவரின் நிறைவிற்காக 30 ஆண்டுகள் காத்திருந்தார் என்று கூறுவது தவறான புரிதலாகும். ஏனென்றால், 

  • சிறு வயதிலிருந்தே "தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது" (லூக்கா 2:40).
  • இயேசுவே இறைவனாக இருக்கிறார், மனிதர்களாகிய நாம் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுவது போன்று அவருக்குத் தேவையில்லை.

மேலும்: 

இயேசு பரிசுத்த ஆவியானவரை தம் விசுவாசிகளுக்காக அனுப்புவார்:

யோவான் 16:7. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.

இயேசுவின் பெயரிலே, பிதா பரிசுத்த ஆவியானவரை அனுப்புவார்:

யோவான் 14: 

16. நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

26. என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.

பிதா, இயேசு மற்றும் பரிசுத்த ஆவியானவர் ஒன்றாகவே எப்போதும் இருப்பார்கள், அவர்களை வேறு பிரிக்கமுடியாது. 

இயேசுவின் மீது பரிசுத்த ஆவியானவர் புறாவைப் போல இறங்கியது, யாருக்காக?

பிதாவும், இயேசுவும், பரிசுத்த ஆவியானவரும் ஒருவருக்குள் ஒருவர் இருப்பார்கள் என்று மேலே பார்த்தோம். 

மத்தேயு 3:16ல்   "தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்" என்று சொல்லப்பட்டதை அஹமத் தீதத் தவறாக புரிந்துக் கொண்டுள்ளார்.

மத்தேயு 3:16. இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார்.

17. அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

தேவ ஆவியானவர் ஒரு புறாவைப்போல இறங்கிவந்து இயேசு மீது அமர்ந்தது, இயேசுவிற்காக அல்ல, அது மற்றவர்களுக்காக ஆகும். அதே போன்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானதும் இயேசுவிற்காக அல்ல, அது மற்றவர்களுக்காக ஆகும்.

குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், யார் மேசியா என்று யோவான் ஸ்நானகன் அறிந்துக்கொள்வதற்காக பரிசுத்த ஆவியானவர் வெளிப்படையாக காணும்படி வந்தார். யோவான் சொல்லும் சாட்சியை கவனியுங்கள்:

மேசியாவை கண்டுபிடிப்பதற்கு யோவானுக்கு தேவன் ஒரு அடையாளத்தைக் கொடுத்து இருந்தார், அது என்னவென்று பாருங்கள்:

யோவான் 1:29-34

29. மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.

30. எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான்.

31. நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்க வந்தேன் என்றான்.

32. பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன்.

33. நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவரென்று எனக்குச் சொல்லியிருந்தார்.

34. அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்துவருகிறேன் என்றான்.

இயேசுக் கிறிஸ்து பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் கொடுக்கின்றவர், அவரோடு எப்போதும் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார். புறாவைப்பற்றிய அடையாளம் யாருக்கு தேவையாக இருந்தது? யோவான் ஸ்நானனுக்கு தேவையாக இருந்தது என்பதைத் தான் மேலே பார்த்தோம்.

இதுவரை கண்ட விவரங்களிலிருந்து நாம் அறிவது: 

1) இஸ்லாமிய அறிஞர் அஹமத் தீதத் ஒரு இறையியலில் ஒரு அரைவேக்காடு ஆவார். அரைகுறையாக மற்றவர்களின் வேதங்களை படித்து, தனக்கு சாதகமான பொருளை கூறுபவர்கள் அரைகுறை ஞானமுள்ளவர்கள் தானே!

2) இயேசுவிற்குள், இயேசுவோடு எப்போதும் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார்.

3) தேவ ஆவி புறாவைப்போல வந்து இயேசு மீது அமர்ந்ததும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசக்குமாரன் என்றுச் சொன்னதும், இயேசுவிற்காக அல்ல, அது மற்றவர்களுக்கான அடையாளங்கள் ஆகும்.

4) இயேசுவை ஏற்றுக்கொள்கின்ற ஒவ்வொருவருக்கும் பரிசுத்த ஆவியானவர் தங்குகிறார், அந்த மனிதனுக்குள் வாசம் செய்து, அந்த நபரை தேவனுடைய ராஜ்ஜியத்துக்கு ஏற்ற நபராக அவர் மாற்றுகின்றார். இதைத் தான் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதல் என்கிறோம்.

5) இந்த இடத்தில் பரிசுத்த ஆவியானவரின் வரங்களில் ஒன்றான "அந்நிய பாஷைகளை" பேசுதல் பற்றி நான் கூறவில்லை, இதைப் பற்றி வேறு கேள்விகளில் அறிந்துக்கொள்ளலாம். பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொருவரின் உள்ளங்களில் வாழுகின்றார், வழிநடத்துகின்றார், இது ஒவ்வொருவருக்குள்ளும் நடப்பதாகும்.

ஆக, பைபிளை ஆய்வு செய்து கேள்வி கேட்க விரும்பும் அருமையான முஸ்லிம் சகோதர சகோதரிகளிடம் நான் வேண்டிக்கொள்வது என்னவென்றால், நீங்கள் கேள்விகளை கேட்பதற்கு முன்பாக, சுயமாக நீங்களே பைபிளை படித்துப் பாருங்கள், உங்களுக்கு சுலபமாக புரியும். அதன் பிறகும் புரியவில்லையென்றால் கேள்விகளை கேளுங்கள் பதில்களைச் சொல்கிறோம்.

அஹமத் தீதத், ஜாகிர் நாயக் மற்றும் பீ ஜைனுல் ஆபீதீன் போன்ற முஸ்லிம் அறிஞர்கள் சொல்லும் விவரங்களை "நீங்கள் ஆய்வு செய்யாமல் நம்பாதீர்கள்", இது ஆபத்தானதாகும்.

கேள்வி 479: அமஹதியா முஸ்லிம்கள் 'இயேசு யூதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்துலகத்துக்கும் வந்த இரட்சகர்' என்று நிருபித்தால் $20,000 அமெரிக்க டாலர்கள் கொடுப்பதாக சவால் விட்டுள்ளார்களே, இதற்கு என்ன பதில்? மத்தேயு 10 5-6

பதில் 479:  இன்று இவர்கள் இந்த கேள்வியை கேட்கவில்லை, பல ஆண்டுகளுக்கு முன்பாக கேட்டுள்ளார்கள். இன்றுள்ள முஸ்லிம்கள் இப்படி பணத்தைக்கொண்டு சவால் விடுவதில்லை என்றாலும், அவர்கள் இந்த கேள்வியை கேட்கிறார்கள். முஹம்மது முழு உலகத்துக்கும் வந்த இறைத்தூதர், ஆனால், இயேசு யூதர்களுக்காக மட்டுமே வந்தவர் என்று சொல்கிறார்கள்.

இது ஒரு முக்கியமான கேள்வி, இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.

பைபிளில் அதாவது பழைய ஏற்பாட்டு புத்தகம் தொடங்கி, வெளிப்படுத்தின விசேஷம் என்ற கடைசி புத்தகம் வரை, மேசியா அதாவது இயேசுக் கிறிஸ்து முழு உலகத்துக்கும் வந்த இரட்சகர் என்றுச் சொல்கிறது.

மத்தேயு 10:5-6

5. இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், 6. காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்.

மேற்கண்ட இரண்டு வசனங்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஆய்வு செய்யக்கூடாது, இதைப் பற்றி இதர வசனங்களையும ஆய்வு செய்யவேண்டும், அப்போது தான் உண்மை புரியும். 

இவைகளை கிழ்கண்ட தலைப்புக்களில் ஆய்வு செய்வோம்:

1) பழைய ஏற்பாடு மேசியா முழு உலகத்துக்கும் இரட்சகர் என்றுச் சொல்கிறது

2) இயேசு சமாரியர்களிடமும் சென்று தம் இரட்சிப்பின் செய்தியை பரப்பினார்

3) இயேசு இஸ்ரவேலுக்கு வெளியே சென்று யூதரல்லாவதவர்களுக்கும் தம் செய்தியைச் சொன்னார்

4) இயேசு தம்முடைய செய்தி உலகமனைத்திற்கும் செல்லவேண்டும் என்று கட்டளையிட்டார்

5) கடைசியாக, இயேசுவின் சீடர்கள் அவரின் உண்மையான செய்தியை சரியாக புரிந்துக்கொண்டு ஊழியம் செய்தார்கள்

இப்பொழுது மேற்கண்ட தலைப்புக்கள் ஒவ்வொன்றிற்கும் சான்றுகளைப் பார்ப்போம்.

1) பழைய ஏற்பாடு மேசியா முழு உலகத்துக்கும் இரட்சகர் என்றுச் சொல்கிறது

ஏசாயா 9:1-7 வசனங்கள், மேசியாவின் ஊழியம் பற்றிய துள்ளியான தீர்க்கதரிசனமாக உள்ளது.

ஏசாயா 9:1 முதல் வசனத்தின் இரண்டாம் பாகம், என்ன சொல்கிறது என்பதை கவனியுங்கள், யூதரல்லாத புறஜாதி(மற்ற நாடுகள்) மக்களுக்கும் அவர் ஊழியம் செய்வார்:

"9:1.. . . ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார்."

ஏசாயா 42:1-9 கூட மேசியாவின் தீர்க்கதரிசனமாகும்: 6,7ம் வசனங்களில் பல ஜாதிகளுக்கு (நாடுகளுக்கு) என்றுச் சொல்லப்பட்டுள்ளது, இஸ்ரவேல் என்ற ஒரு நாட்டுக்கு  மட்டுமல்ல.  தமிழ் பைபிளில் "ஜாதி" என்ற வார்த்தை "நாடு (Nation, Country)" என்ற வார்த்தைக்கான மொழியாக்கமாகும். இன்று இந்தியாவில் பயன்படுத்தும் "ஜாதி(Caste)" என்ற பொருளில் இவ்வசனங்கள் வரவில்லை என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும்.

ஏசாயா 42:6 நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைச் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும்,

7. கர்த்தராகிய நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப்பிடித்து, உம்மைத் தற்காத்து, உம்மை ஜனத்திற்கு உடன்படிக்கையாகவும், ஜாதிகளுக்கு(நாடுகளுக்கு-Nations, Countries) ஒளியாகவும் வைக்கிறேன்.

ஏசாயா 49:1-7 கூட மேசியாவின் தீர்க்கதரிசனமாகும்:

ஏசாயா 49:6. யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பவும், இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களைத் திருப்பவும், நீர் எனக்குத் தாசனாயிருப்பது அற்பகாரியமாயிருக்கிறது; நீர் பூமியின் கடைசிபரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை ஜாதிகளுக்கு(நாடுகளுக்கு-Nations, Countries) ஒளியாகவும் வைப்பேன் என்கிறார்.

இன்னும் பழைய ஏற்பாட்டிலிருந்து மேசியாவைப் பற்றிய அனேக வசனங்களை மேற்கோள் காட்டலாம். இப்போது அடுத்த தலைப்பிற்குச் செல்வோம்.

2) இயேசு சமாரியர்களிடமும் சென்று தம் இரட்சிப்பின் செய்தியை பரப்பினார்

யோவான் 1:1-42 வசனங்களின் படி, இயேசு சமாரியார்களுக்கும் நற்செய்தியை அறிவித்தார். இந்த சமாரியர்கள் என்பவர்கள் பழைய ஏற்பாட்டின் கடைசி காலத்திலிருந்து அந்நிய ஜனங்களோடு சேர்ந்துவிட்ட யூதர்கள் ஆவார்கள். ஆனால், இவர்கள் யூதர்கள் என்று அறியப்படாதவர்கள் ஆவார்கள்.

லூக்கா  17:16. அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான்.

17. அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே?

18. தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி,

ஆனால், சமாரியர்களில் ஒரு பெண்ணுக்கு மட்டும் நற்செய்தி சொல்லவில்லை, சமாரிய கிராங்களில் உள்ள அனைவருக்கும் இயேசு தம்மை மேசியாவாக அறிவிக்கிறார். 

யோவான் 4:8,9

8. அப்பொழுது சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ள வந்தாள். இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத் தா என்றார்.

9. யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால், சமாரியா ஸ்திரீ அவரை நோக்கி: நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள்.

34வது வசனத்தில் "சமாரியர்களுக்கு நற்செய்தி சொல்வதே தேவனின் சித்தம் என்று இயேசு தம் சீடர்களுக்குச் சொல்கிறார்". இயேசு யூதர்களுக்கு மட்டுமே வந்தால், எப்படி மற்ற மக்களுக்குச் சொல்வது 'தேவனின் சித்தமாக இருக்கும்?'.

யோவான் 4:34. இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.

இயேசுவை சமாரியர்கள் வேண்டிக்கொண்டபடியே, அவர் அவர்களோடு இரண்டுநாள் தங்கினார். அம்மக்கள் கூட அவர்மீது நம்பிக்கைக் கொண்டனர், உலக இரட்சகர் என்றனர்.

யோவான் 4:40. சமாரியர் அவரிடத்தில் வந்து, தங்களிடத்தில் தங்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவர் இரண்டுநாள் அங்கே தங்கினார்.

41. அப்பொழுது அவருடைய உபதேசத்தினிமித்தம் இன்னும் அநேகம்பேர் விசுவாசித்து,

42. அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்.

இயேசு வெறும் யூதர்களுக்காக மட்டுமே வந்த இரட்சகர் என்றால், ஏன் அவர் சமாரியர்களிடம் இரண்டு நாட்கள் தங்கி, அவர்களுக்கு ஊழியம் செய்கிறார், தம்மை வெளிப்படுத்துகிறார்?

3) இயேசு இஸ்ரவேலுக்கு வெளியே சென்று யூதரல்லாவதவர்களுக்கும் தம் செய்தியைச் சொன்னார்

மாற்கு 7ம் அத்தியாயத்தில், கிரேக்க மக்களுக்கும் இயேசு தம் நற்செய்தியைச் சொல்லி, சுகமாக்கினார் என்று காண்கின்றோம்.

இந்த நிகழ்ச்சியில் வரும் பெண் ஒரு கிரேக்கப்பெண்ணாக இருந்தாள் (ஸ்திரீ சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீயாயிருந்தாள்) என்பதைக் காண்கிறோம். அந்த நாடும் இஸ்ரேல் நாடு அல்ல, அந்தப் பெண்ணும் யூதப்பெண் அல்ல.

மாற்கு 7:24-26

24. பின்பு, அவர் எழுந்து அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளில் போய், ஒரு வீட்டுக்குள் பிரவேசித்து, ஒருவரும் அதை அறியாதிருக்க விரும்பியும், அவர் மறைவாயிருக்கக் கூடாமற்போயிற்று.

25. அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு சிறு பெண்ணின் தாயாகிய ஒரு ஸ்திரீ அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள்.

26. அந்த ஸ்திரீ சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீயாயிருந்தாள்; அவள் தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டாள்.

பன்றிகளை வளர்க்கும் யூதரல்லாத நாட்டில் (கதரேனருடைய நாட்டில்) இயேசுவின் ஊழியம்: மாற்கு 5:1-20

1. பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையிலுள்ள கதரேனருடைய நாட்டில் வந்தார்கள்.

2. அவர் படவிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான்.

யூதர்களின் நாட்டில் பன்றிகளை வளர்க்கமாட்டார்கள். மேற்கண்ட கிரேக்க நாட்டில் இயேசு சென்று ஒரு மனிதனை சுகமாக்கினார், இன்னும் அனேக அற்புதங்கள் செய்ய விரும்பினார், ஆனால் அவரது ஊழியத்தை விரும்பவில்லை, எனவே திருப்பி அனுப்பிவிட்டார்கள். 

இரட்சிப்பின் செய்தியை இயேசு யூதரல்லாத கிரேக்க நாடுகளுக்கும் சொல்லியுள்ளார்.

மேலும் பார்க்க: மாற்கு 7:31-37 மற்றும் மாற்கு 8:1-10

இவைகள் எல்லாம் அந்நிய நாடுகள் ஆகும், அங்கும் இயேசு சென்று தம் நற்செய்தியைச் சொல்லி,  அற்புதங்களைச் செய்தார்.

4) இயேசு தம்முடைய செய்தி உலகமனைத்திற்கும் செல்லவேண்டும் என்று கட்டளையிட்டார்

இயேசு தம் சீடர்களிடம் தம் நற்செய்தியை வெறும் யூதர்களுக்கு மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திற்கும் சென்று அறிவியுங்கள் என்றார். 

a) மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் பிரசங்கிக்கப்பட வேண்டும்:

லூக்கா 24: 45-47 

லூக்கா 24:45. அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களை நோக்கி:

46. எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது;

47. அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.

மத்தேயு 28:18-20

மத்தேயு 28:18. அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

19. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் (சகல நாடுகளுக்கும் - All Nations, countries) சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,

20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

மத்தேயு 8: 10-12 :  பல நாடுகளிலிருந்து தம்மை நம்பியவர்கள் வருவார்கள், ஆனால், ராஜ்ஜியத்தின் புத்திரர் (யூதர்கள்) தண்டிக்கப்படுவார்கள் என்று இயேசு இங்கு சுட்டிக்காட்டுகின்றார். வேறு நாட்டிலிருந்து வந்த ஒருவருக்கு 'உன் வேண்டுதலை கேட்டேன், உன் விசுவாசத்தின் படி நடக்கும் என்று நம்பிக்கைகொடுத்து, அற்புதம் செய்கின்றார்'

மத்தேயு 8:10. இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின் செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

11. அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள்.

12. ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மேசியாவாகிய இயேசு கைக்குழந்தையாக இருந்தபோது, அவரைப் பற்றி சிமியோன் என்ற தீர்க்கதரிசி சொன்ன வார்த்தைகள்: "புறஜாதியாருக்கு (மற்ற நாடுகளுக்கு) ஒளி, யூதருக்கு மகிமையாக இயேசு இருப்பார்:"

லூக்கா 2:28-32 

28. அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து:

29. ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்;

30. புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,

31. தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின

32. உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.

யோவானின் சாட்சி: யூதர்களின் பாவங்களை அல்ல, உலகத்தின் பாவங்களை தீர்க்கிறவர் இயேசு.

யோவான்  1:29. மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.

இன்னும் அனேக வசனங்களை சொல்லமுடியும், இப்போதைக்கு இதோடு முடித்துக்கொள்ளலாம்.

5) கடைசியாக, இயேசுவின் சீடர்கள் அவரின் உண்மையான செய்தியை சரியாக புரிந்துக்கொண்டு ஊழியம் செய்தார்கள்

இன்று நாம் இயேசுவிற்கு 2000 ஆண்டுகளுக்கு பிறகு வாழ்கிறோம், ஆனால் அவரோடு இருந்த சீடர்கள், இயேசுவின் செய்தியை எப்படி  புரிந்துக்கொண்டார்கள்? அவர்களுக்கு அவர் எவைகளைக் கற்றுக்கொடுத்தார், அச்சீடர்களின் சாட்சி என்னவென்பதை இப்போது காண்போம்.

சீடர் பேதுருவின் கூற்று: மனிதன் இரட்சிக்கப்படுவதற்கு பூமியில் ஒரே வழி இயேசு மட்டுமே:

அப்போஸ்தலர் நடபடிகள் 4:12. அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.

சீடர் யோவானின் சாட்சி: சர்வ லோகத்திற்காக பலியானவர் இயேசு:

I யோவான் 2:2. நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்திசெய்கிற பலியாயிருக்கிறார்.

ஏன் ஒவ்வொரு சீடர்களும் வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று இயேசுவின் நற்செய்தியை அறிவித்தார்கள், இவர்கள் அனைவருக்கும் 'வெறும் யூதர்களுக்கு மட்டுமே ஊழியம் செய்யவேண்டும்' என்றும் தெரியாதா? இயேசுவின் செய்தியை அவர்கள் சரியாக புரிந்துக்கொண்டார்கள், சிலர் இஸ்ரேலில் யூதர்களுக்கு ஊழியம் செய்தார்கள், சிலர் பல நாடுகளுக்குச் சென்று அந்நிய ஜனங்களுக்கும் ஊழியம் செய்தார்கள்.

முஸ்லிம்களின் அறியாமை: 

இதுவரை பைபிளிலிருந்து பல வசனங்களை மேற்கோள் காட்டி, இயேசு யூதர்களுக்கு மட்டுமல்ல, முழு உலகத்திற்கும் வந்த இரட்சகர் என்பதை விளக்கினோம். முஸ்லிம்கள் ஒரு சில வசனங்களை மட்டும் எடுத்து பொருள் கூறுகிறார்கள், ஆனால், முழு விவரங்களை படித்து வியாக்கீனம் செய்வது தான் சரியான ஆய்வு ஆகும்.  

உண்மையை அறிய விரும்புகிறவர்கள், புதிய ஏற்பாட்டில் வரும் இயேசுவின் சரிதையை படித்து புரிந்துக்கொள்ளட்டும்.

கேள்வி 480: ஏன் இயேசு யூத மத குருக்களை அதிகமாக தாக்கி பேசினார் (மத்தேயு 23:13-33; 21:45; 16:4) இந்த கேள்வியை அஹமத் தீதத் கேட்டார்.

பதில் 480:  இந்த கேள்விக்கு பதிலை கொடுப்பதற்கு முன்பு, ஒரு முக்கியமான விவரத்தையும் சொல்லிவிடுகிறேன். இயேசு தம்மை ஏற்றுக்கொள்ளாத மத குருக்களை, தலைவர்களை எதிர்த்தது மட்டுமல்ல, அவர்கள் செய்கின்ற (தம்மை புறக்கணிக்கின்ற) செயலினால், நரகத்தில் தள்ளப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.  இப்படி வெறும் வார்த்தைகளோடு இயேசு நின்றுவிடவில்லை, ஒரு சாட்டையை தயார் செய்து, தேவாலயத்தில் வியாபாரம் செய்கின்றவர்களை தாக்கினார், ஆம், வியாபாரிகளின் கடைசிகளை உடைத்து தும்சம் செய்தார், தேவனுடைய ஆலயத்தை கள்ளர் குகை ஆக்காதீர்கள் என்றுச் சொல்லி கடினமாக நடந்துக்கொண்டார். 

இதனை மனதில் வைத்துக்கொள்ளவும், இப்போது ஏன் இப்படி இயேசு செய்தார் என்பதற்கான பதிலைக் காண்போம்.

முதலாவதாக, யூத மத தலைவர்களைக் காட்டிலும் இயேசுவிற்கு அதிகபடியான அதிகாரம் உள்ளது.  யூதர்களின் மேசியாவாக வந்த இயேசுவிற்கு தம் 'மேசிய அதிகாரத்தை' பயன்படுத்தி, அவர்களுக்கு வழிகாட்ட அவருக்கு அதிகாரம் உள்ளது. மேலும் தாம் மேசியா என்பதை நிருபிக்க பல அற்புத  அடியாளங்களை இயேசு செய்துக் காட்டினார். உண்மையான இறைவன் "நாம் நம் வாழ்வில் எந்த ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டாலும், நம்முடைய அனுமதியின்று அவைகளை சரி செய்ய அவருக்கு அதிகாரம் உண்டு'. ஏன் யூத தலைவர்களை அவர் கடிந்துகொண்டார்? மனிதனை படைத்த இறைவனுக்கு மனிதனின் தவறான வழியை சுட்டிக்காட்ட உரிமை உள்ளது.

இரண்டாவதாக, தாங்கள் மட்டும் நரகத்திற்குப் போகாமல், மற்றவர்களையும் அங்கு அழைத்துச் செல்ல அந்த மத  தலைவர்கள் முயன்றதால், இன்னும் அதிகமாக அவர்களை கடிந்துகொள்ள மெய்யான தெய்வத்திற்கு உரிமையுண்டு, இதனை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

மத்தேயு 23:15. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.

ஆபிரகாமைக் காட்டிலும், மோசேயைக் காட்டிலும், சாலொமோனைக் காட்டிலும், தேவாலயத்தைக் காட்டிலும், அவ்வளவு ஏன் பழைய  ஏற்பாட்டிற்கும் மேலாக இருக்கும் மேசியாவிற்கு, தன் முழு அதிகாரத்தை பயன்படுத்த உரிமையுண்டு என்பதை நாம் அறிந்துக்கொள்ளவேண்டும். அதனால் தான் மாய்மாலம் செய்த யூத தலைவர்களை கண்டித்தார், அதே நேரத்தில் நேர்மையாக நடந்துக்கொண்ட யூத மத தலைவர்களை மெச்சிக்கொண்டார், அவர்களை உற்சாகப்படுத்தினார்.

யோவான் 1:47 இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.

இதன் மூலம் நாம் பெறும் பாடம் என்ன? தவறான மத தலைவர்களை நாம் பின்பற்றக்கூடாது. இந்த வகையில் வந்தவர் தான் 'இஸ்லாமிய நபி முஹம்மது', இவர் ஒரு கள்ளத் தீர்க்கதரிசி.

தீத்து 1:13. இந்தச் சாட்சி உண்மையாயிருக்கிறது; இது முகாந்தரமாக, அவர்கள் யூதருடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய கற்பனைகளுக்கும் செவிகொடாமல்,

14. விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள்.

பொய்யான மத தலைவர்களை நாம் கடிந்துக்கொள்ளவேண்டும், அவர்களை உலகத்திற்கு அடையாளப்படுத்தி காட்டவேண்டும். ஒரு துக்ககரமான விஷயம் என்னவென்றால் தங்கள் மத தலைவர்  எப்படிப்பட்டவர் என்று தெரிந்துக்கொள்ளாமல், கோடிக்கணக்கான மக்கள், அப்படிப்பட்டவர்களை பின்பற்றுவது தான். இந்த நிலையில் தான் முஸ்லிம்கள் உள்ளார்கள், அவர்கள் அறியாமையில் இருக்கிறார்கள், அவர்களின் அறியாமை போக்கப்படவேண்டும்.

ஆக, நேர்மையற்ற யூத மதத்தலைவர்களை இயேசு கடிந்துக்கொண்டதில் தவறு இல்லை. இதே போன்று இஸ்லாமிய நபியாகிய முஹம்மது போன்றவர்களின் உண்மை முகத்தை உலகிற்கு காட்டி, கடிந்துக்கொள்ளவேண்டியது நம் கடமையாகும். தவறான வழியில் செல்கின்ற முஸ்லிம்களுக்கு நேரான வழியை அதாவது இயேசுவைக் காட்டவேண்டியது நம் கடமையாகும்.

அடுத்த கட்டுரையில் மேலதிக பைபிள் கேள்விகளுக்கு பதில்களைக் காண்போம்.

இந்த கட்டுரையின் கேள்விகள்/பதில்கள் இந்த தளத்திலிருந்து எடுக்கப்பட்டன: https://biblequery.org/

இஸ்லாமிய அறிஞர் அஹமத் தீதத்:

இக்கட்டுரையில் வரும் பெரும்பான்மையான கேள்விகளை கேட்டவர், தென் ஆப்ரிக்காவில் வாழ்ந்த காலஞ்ச்சென்ற இஸ்லாமிய அறிஞர் அஹமத் தீதத் ஆவார். நான்  இயேசுவை என் சொந்த தெய்வமாக அங்கீகரித்த பிறகு, இவரது புத்தகங்களை படித்தேன், இவர் கேட்ட கேள்விகளுக்கு பதில்களை தேட ஆரம்பித்தேன், இதன் விளைவு தான், ஈஸா குர்‍ஆன் மற்றும் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளம்.

தேதி: 24th Nov 2020

சின்னஞ்சிறு 1000 கேள்வி பதில்கள் பொருளடக்கம்

உமரின் கட்டுரைகள் பக்கம்

Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/ramalan/2020ramalan/2020-ramalan-19.html