முன்னுரை: குர்ஆன் பல நபிமார்கள் (தீர்க்கதரிசிகள்) பற்றி பேசுகின்றது. நபிகள் அல்லாத இன்னும் சில மனிதர்கள் பற்றியும் மிகவும் பெருமையாக பேசுகின்றது, இவர்கள் முஸ்லிம்கள், அல்லாஹ்வை பின்பற்றியவர்கள், அவனுக்கு கீழ்படிந்தவர்கள் என்று அடித்துச் சொல்கிறது. ஆனால், குர்ஆனில் இருக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், குர்ஆன் குறிப்பிடும் நபர்கள் பற்றிய இதர அடிப்படை விவரங்களை கொடுக்க தவறியது தான்.
"இல்லையே!" குர்ஆன் சொல்லும் நபிமார்கள் பற்றிய அனைத்து விவரங்கள் எங்களுக்குத் தெரியுமே! என்று முஸ்லிம்கள் சொல்லக்கூடும்.
இக்கூற்றில் உண்மையில்லை, அதாவது குர்ஆன் கூறும் நபிமார்கள் பற்றிய மேலோட்டமான விவரங்களைத் தான் குர்ஆன் சொல்கிறது, ஆனால், பைபிள் குர்ஆனுக்கு உதவவில்லையென்றால், முஸ்லிம்களால் முந்தைய நபிமார்கள் பற்றிய முக்கியமான அடிப்படை விவரங்களை அறிந்துக்கொள்ளமுடியாது. அவ்வளவு ஏன்! அல்லாஹ்வின் கடைசி இறைத்தூதர் என்று கருதப்படும் முஹம்மது பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது? இஸ்லாம் பற்றி அறியாத ஒருவரிடம் குர்ஆனை மட்டும் கொடுத்து, படிக்கச் சொல்லி, கடைசியாக, அவரிடம் "முஹம்மது என்பவர் யார்? அவரைப் பற்றி குர்ஆனிலிருந்து அறிபவை என்ன என்று கேட்டுப்பாருங்கள் உண்மை தெரியும்.
நபிகள் பற்றிய குர்ஆனின் நிலைப்பாடு இப்படி அரைகுறையாக இருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னும் ஒரு சிலரைப் பற்றி குர்ஆன் சொல்லும் விவரங்களை வைத்துக்கொண்டு, "உண்மையில் அவர் யார்?" என்ற கேள்விக்கு இதுவரை இஸ்லாமிய அறிஞர்களால் விடை காணமுடியவில்லை.
ஒரு நபரின் அடையாளம் இல்லாமல், அவரைப் பற்றி குர்ஆன் பேசுகின்றது. இப்படிப்பட்டவர்களில் துல்கர்ணைன், தாலுத் , மற்றும் லுக்மான் என்ற மூன்று நபர்களை குறிப்பிடலாம். துல்கர்ணைன் என்பவர் யார்? இவர் மகா அலேக்சாண்டர் என்று சொல்கிறார்கள், ஆனால், ஒரு காலத்தில் இதனை ஒப்புக்கொண்ட முஸ்லிம்கள் இன்று மறுக்கிறார்கள், இதனால் துல்கர்ணைனின் அடையாளமும் தொலைந்துவிட்டது. தாலுத் என்பவர் பைபிளில் வரும் கிதியோன் என்ற பழைய ஏற்பாட்டு நபர் என்று அடையாளப்படுத்தப்படுகின்றார், ஆனால் முஸ்லிம்கள் இவர் பழைய ஏற்பாட்டு 'சவுல்' என்கிறார்கள், ஆனால் இதில் பல முரண்பாடுகள் உள்ளன. இதனால் தாலுத் என்பவருடைய அடையாளமும் சந்தேகத்திற்கு உள்ளாகிவிட்டது. அடுத்த நபர்...
லுக்மான்
இந்த வரிசையில், லுக்மான் என்ற நபர் பற்றி நாம் இக்கட்டுரையில் கீழ்கண்ட தலைப்புக்களில் ஆய்வு செய்யப் போகின்றோம்.
தலைப்புக்கள்:
1) லுக்மான் என்பவர் யார்? ஞானியா அல்லது நபியா? குர்ஆன் சொல்வது என்ன?
2) குர்ஆன் சொல்லும் கட்டுக்கதைகள் (asāṭīru - அஸாதீரு) - அக்கால மக்களின் கருத்து
3) அரேபியர்களின் லுக்மானும், கிரேக்கர்களின் ஈசாப்பும்
4) லுக்மான் பற்றி இஸ்லாமிய அறிஞர்களின் கருத்து என்ன?
5) முடிவுரை: குர்ஆனின் இன்னொரு சரித்திர தவறு
1) லுக்மான் என்பவர் யார்? ஞானியா (அ) நபியா? குர்ஆன் சொல்வது என்ன?
குர்ஆனின் 31வது அத்தியாயத்திற்கு "லுக்மான்/லுஃக்மான்" என்று பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வத்தியாயத்தில் 34 வசனங்கள் உள்ளன, இது மக்காவில் இறக்கப்பட்ட அத்தியாயம், இதில் லுக்மான் குறித்து 8 வசனங்கள் வருகின்றது.
குர்ஆன் 31:12-19 - லுக்மான் தம் மகனுக்கு கொடுக்கும் அறிவுரை:
31:12. இன்னும், நாம் லுஃக்மானுக்கு நிச்சயமாக ஞானத்தைக் கொடுத்தோம். "அல்லாஹ்வுக்கு நீர் நன்றி செலுத்தும்; ஏனென்றால் எவன் நன்றி செலுத்துகிறானோ அவன் தன(து நன்மை)க்காவே நன்றி செலுத்துகிறான்; இன்னும் எவன் நிராகரிக்கிறானோ (அவன் தன்னையே நட்டப்படுத்திக் கொள்கிறான்) - நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்திருந்தும்) தேவையில்லாதவன்; புகழப்படுபவன்".
31:13. இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு: "என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்," என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக).
31:14. நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே "நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது."
31:15. ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேண்டாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக - பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்."
31:16. (லுஃக்மான் தம் புதல்வரிடம்) என் அருமை மகனே! (நன்மையோ, தீமையோ) அது ஒரு கடுகின் வித்து அளவே எடையுள்ளது ஆயினும்; அது கற்பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களில் இருந்தாலும், அல்லது பூமிக்குள்ளே இருந்தாலும் அல்லாஹ் அதையும் (வெளியே) கொண்டு வருவான்; நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன்; (ஒவ்வொன்றின் அந்தரங்கத்தையும்) நன்கறிபவன்.
31:17. "என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக; நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக; உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக; நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும்.
31:18. "(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
31:19. "உன் நடையில் (மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல்) நடுத்தரத்தை மேற்கொள்; உன் குரலையும் தாழ்த்திக் கொள்; குரல்களிலெல்லாம் வெறுக்கத்தக்கது நிச்சயமாக கழுதையின் குரலேயாகும். (டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்)
மேற்கண்ட வசனங்களில் லுக்மான் என்பவர் ஒரு ஞானி என்றுச் சொல்லப்படுகின்றது, இவர் ஒரு நபி என்று குர்ஆன் சொல்லவில்லை. இதனால் முஸ்லிம் அறிஞர்கள் "இவர் ஒரு தீர்க்கதரிசி/நபி" என்று உறுதியாக சொல்வதில்லை.
இந்த லுக்மான் என்பவர் நபி இல்லாத பட்சத்தில், இவரைப் பற்றி முஸ்லிம்களால் பைபிளிலும் காணமுடிவதில்லை . ஆகையால், குர்ஆன் சொல்லும் ஓரிரு விவரங்கள் தவிர இவரைப் பற்றி வேறு எதுவும் இஸ்லாம் (குர்ஆன், ஹதீஸ்கள்) சொல்வதில்லை. சுருக்கமாக சொல்வதானால்,
- லுக்மானுக்கு அல்லாஹ் ஞானத்தை கொடுத்தான்
- லுக்மான் தன் மகனுக்கு நல்ல அறிவுரைகளை கொடுத்தார்,
- அல்லாஹ்வை மட்டும் வணங்கும் படி கட்டளையிட்டார் ,
- ஆகையால் இவர் ஒரு முஸ்லிம் ஆவார்
இவ்விவரங்களை மட்டும் தான் இஸ்லாம் சொல்கிறது. ஹதீஸ்களிலும், இவர் தன் மகனுக்கு "அல்லாஹ்வை மட்டும் வணங்கு" என்று அறிவுரை கூறிய விவரம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
2) குர்ஆன் சொல்லும் முந்தைய கால கட்டுக்கதைகள் (asāṭīru : அஸாதீரு) - அக்கால மக்களின் கருத்து
முஹம்மது தம் மக்களுக்கு குர்ஆன் வசனங்களையும், நிகழ்ச்சிகளையும், நபர்கள் பற்றிய விவரங்களையும் சொல்லும் போது, அம்மக்கள் 'குர்ஆனை ஆச்சரியமாக பார்க்கவில்லை', இவைகள் எல்லாம் எங்களுக்குத் தெரியும்! எங்கள் முன்னோர்களும் இவைகளை எங்களுக்குச் சொல்லிக் கொடுத்துள்ளார்கள். இவைகள் முன்னோர்களின் கட்டுக்கதைகள் தாம் என்றுச் சொன்னார்கள். இதனை குர்ஆனில் அல்லாஹ்வே ஒப்புக்கொள்கின்றான்.
கட்டுக்கதைகள் என்ற தமிழ் வார்த்தைக்கு அரபியில் அஸாதீரு(asāṭīru) என்ற வார்த்தை குர்ஆனில் அல்லாஹ் பயன்படுத்துகின்றான்.
கீழ்கண்ட 7 வசனங்களை படித்துப்பாருங்கள்:
குர்ஆன் 6:25, 8:31, 16:24, 23:83, 27:68, 46:17 & 68:15
குர்ஆன் 6:25. அவர்களில் சிலர் உம் பேச்சைக் கேட்(பது போல் பாவனை செய்)கின்றனர்; நாம் அவர்களுடைய உள்ளங்களில் அதை விளங்கிக் கொள்ளாது இருக்குமாறு திரைகளையும் இன்னும் அவர்கள் காதுகளில் செவிட்டுத் தன்மையும் ஏற்படுத்தினோம்; இன்னும் அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் பார்த்தாலும் அவற்றை நம்பமாட்டார்கள்; இன்னும் இவர்கள் உம்மிடம் வந்தால் உம்மோடு வாதாடுவார்கள்; "இவையெல்லாம் முன்னோர்களுடைய கட்டுக் கதைகளேயன்றி (اَسَاطِيْرُ) வேறில்லை" என்று இந்நிராகரிப்போர் கூறுவார்கள்.
குர்ஆன் 8:31. அவர்கள் மீது நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள், "நாம் நிச்சயமாக இவற்றை (முன்னரே) கேட்டிருக்கின்றோம்; நாங்கள் நாடினால் இதைப் போல் சொல்லிவிடுவோம்; இது முன்னோர்களின் கட்டுக்கதைகளேயன்றி (اَسَاطِيْرُ) வேறில்லை" என்று சொல்கிறார்கள்.
குர்ஆன் 16:24. "உங்களுடைய இறைவன் எதை இறக்கி வைத்தான்?" என்று (குர்ஆனை குறிப்பிட்டு) அவர்களிடம் கேட்கப்பட்டால், "முன்னோர்களின் கட்டுக்கதைகள்(اَسَاطِيْرُ)" என்று அவர்கள் (பதில்) கூறுகிறார்கள்.
குர்ஆன் 23:83. "மெய்யாகவே முன்னர் நாங்கள் (அதாவது) நாமும், எம் மூதாதையரும் - இவ்வாறே வாக்களிக்கப்பட்டிருக்கிறோம்; ஆனால் இது முன்னுள்ளவர்களின் கட்டுக் கதைகளே(اَسَاطِيْرُ) அன்றி வேறில்லை" (என்றும் கூறுகின்றனர்).
குர்ஆன் 27:68. நிச்சயமாக, இ(ந்த அச்சுறுத்தலான)து எங்களுக்கும் எங்களுக்கு முன் சென்று போன எங்கள் மூதாதையருக்கும் வாக்களிக்கப்பட்டே வருகிறது; இது முன்னோர்களின் கட்டுக்கதைகளேயன்றி(اَسَاطِيْرُ) வேறில்லை" (என்றுங் கூறுகின்றனர்).
குர்ஆன் 46:17. . . .; அதற்கவன் "இவையெல்லாம் முன்னுள்ளவர்களின் கட்டுக்கதைகளேயன்றி(اَسَاطِيْرُ) வேறில்லை" என்று கூறுகிறான்.
குர்ஆன் 68:15. நம் வசனங்கள் அவனிடம் ஓதப்பட்டால், "இவை முன்னோர்களின் கட்டுக்கதைகள் (اَسَاطِيْرُ)" என்று அவன் கூறுகின்றான்.
முஹம்மது வாழ்ந்த காலத்தில் நிலவிய கட்டுக்கதைகள், நீதிக்கதைகள் மற்றும் புகழ்பெற்ற முந்தைய கால அரசர்களின் வாழ்க்கை வரலாறு (அலேக்சாண்டர்) போன்றவைகளை அக்கால மக்கள் நன்கு அறிந்திருந்தார்கள். வியாபாரத்திற்காக பல நாடுகளுக்குச் சென்றுவரும் மக்கள் பல கதைகளை கற்றுக்கொண்டு வருவார்கள், அவைகளை வாய்வழியாக பரப்புவார்கள். வாய்வழி கதைகளை கவிதைகளாக எழுதி மனப்பாடம் செய்து அடுத்த சந்ததிக்கு கொண்டுச் சென்றார்கள்.
இவர்களுக்குத் தெரிந்த பல விவரங்களை குர்ஆன் சொல்லும் போது, அம்மக்களை குர்ஆன் ஆச்சரியப்படுத்தவில்லை, 'ஓ.. இந்த கதையா? எங்களுத்தெரியுமே! இது ஒரு கட்டுக்கதையாச்சே!' அல்லது 'எங்கள் முன்னோர்களும் அறிந்திருந்த விவரங்களாயிற்றே' என்று அவர்கள் கூறினார்கள், இதை அப்படியே குர்ஆன் சொல்கிறது.
குர்ஆனின் பல வசனங்களை மக்காவினர் கேட்டபோது, அவர்கள் 'அந்த நிகழ்ச்சிகளை/கதைகளை ஏற்கனவே அறிந்திருந்தனர்' என்பதை மேற்கண்ட வசனங்கள் மூலமாக அறியமுடிகின்றது. இந்த வசனங்கள் இக்கட்டுரைக்கு எப்படி உதவும் என்ற கேள்வி எழுகின்றதா? மேற்கொண்டு படியுங்கள், அப்போது இவைகளின் முக்கியத்துவம் புரியும்.
3) அரேபியர்களின் லுக்மானும், கிரேக்கர்களின் ஈசாப்பும்
லுக்மான் பற்றி குர்ஆன் தான் முதன் முதலாக குறிப்பிடுகின்றதா? என்று கேட்டால், இல்லை என்பது தான் பதில். இதனை குர்ஆனும் அறியும், லுக்மான் பற்றி குர்ஆனில் எழுதியவரும் அறிவார்.
உதாரணத்திற்கு: தெனாலிராமன் பற்றிய கதைகளை நாம் அறிந்திருக்கிறோம் அல்லவா? அது போல, லுக்மான் பற்றிய பல கதைகள் முஹம்மதுவின் காலத்திற்கு முன்பே, அரேபிய பாரம்பரிய கதைகளாக உலா வந்துள்ளன. மக்கா மக்கள் அவைகளை நன்கு அறிவார்கள். எனவே தான், குர்ஆன் கூட, லுக்மான் பற்றிய எந்த ஒரு அறிமுகம் கொடுக்காமல், அவரைப் பற்றி பேசுகின்றது.
அரேபிய கலாச்சாரத்தில் உலா வந்த லுக்மான் கதைகள்:
சௌதி அரேபியாவில் வெளிவந்துக்கொண்டு இருந்த பத்திரிக்கை "அரம்கோ ஓர்ல்ட்" ஆகும். இந்த பத்திரிக்கையில் 1974ம் ஆண்டு வெளிவந்த ஒரு கட்டுரையில் கீழ்கண்ட விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் தொடுப்பையும் கொடுத்துள்ளேன், வாசகர்கள் சொடுக்கி படித்துக்கொள்ளலாம்.
Aramco World: https://archive.aramcoworld.com/issue/197402/aesop.of.the.arabs.htm
இந்த தொடுப்பில் கொடுக்கப்பட்ட விவரங்களின் சுருக்கம்: லுக்மான் என்பவர் யார் என்பதை அறிய இவ்விவரங்கள் தேவை.
1) அரபு மக்களின் பழங்கதைகளில் மிகவும் புகழ்பெற்றது "லுக்மான் பின் ஆது" என்பவரின் கதைகளாகும்.
2) இவரைப் பற்றி குர்ஆனிலும் சொல்லப்பட்டுள்ளது.
3) ஆயிரக்கணக்கான ஞான போதனைகளை லுக்மான் கூறியுள்ளார், இதனை அரபி மொழி அறிஞர் வஹப் பின் முனஹ்பி (Wahb bin Munabih) பதிவு செய்துள்ளார்.
4) லுக்மான் பல ஆண்டுகள் வாழ்ந்தார் என்று சொல்லப்படுகின்றது.
5) லுக்மான் மரிப்பதற்கு முன்பு, தம் மகனுக்கு ஞான போதனைகளைச் செய்தார் (இதையே குர்ஆன் கூறுகிறது).
6) இவரைப் பற்றி பல முந்தைய கால அரபி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
7) லுக்மானின் ஒரு புகழ்பெற்ற நிகழ்ச்சி, இவர் ஒரு முதலாளியிடம் அடிமையாக வேலை செய்யும் போது நடந்த நிகழ்ச்சி/கதை ஆகும்.
இவருடைய முதலாளி, எனக்கு ஒரு ஆட்டை அறுத்து, மிகவும் சிறந்த பகுதியை சமைத்துக்கொண்டுவா என்று சொல்லும் போது, இவரும் ஒரு ஆட்டை அறுத்து, அதன் நாவு மற்றும் இதயத்தை சமையல் செய்து கொண்டு வந்து கொடுத்தாராம். அடுத்த நாளில், அந்த எஜமான், மறுபடியும் ஒரு ஆட்டை அறுத்து, மிகவும் மோசமான பகுதியை சபையல் செய்து கொண்டுவா என்று சொல்லும் போது, லுக்மான் மறுபடியும் ஒரு ஆட்டை அறுத்து, முந்தைய நாளில் செய்தது போன்று, நாவையும், இருதயத்தையும் சமையல் செய்து கொடுத்தாராம். இதனால், அந்த முதலாளி லுக்மான் மீது கோபம் கொண்டு, நேற்றும் இன்றும் எப்படி ஒரே பகுதியை நீ சமையல் செய்துகொடுப்பாய்? என்று கேட்டபோது, அதற்கு லுக்மான், "நாவும் இருதயமும் நன்றாக இருந்தால், இவைகளைக் காட்டிலும் சிறந்த ஒன்று இல்லை, இதே போன்று, நாவும் இருதயமும் தீயதாக இருந்தால், இவைகளைக் காட்டிலும் கெட்டது எதுவுமே இல்லை" என்று பதில் கொடுத்தாராம்.
8) இந்த கதை வேறு ஒரு நாட்டின் பழங்குடி கதையாக கேட்ட ஞாபகம் வருகிறதல்லவா? ஆம், இதே கதை தான், கிரேக்கர்கள் "ஈசாப்பு" என்ற ஒருவரின் வாழ்வில் நடந்ததாக பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதியுள்ளார்கள்.
9) ஓரே நிகழ்ச்சி, கிரேக்க கதையாக "ஈசாப்பு" என்பவரின் பெயரில் உலா வந்துள்ளது, இதே கதை, அரேபியர்களின் லுக்மான் என்பவரின் பெயரில் அரேபிய பகுதியில் உலா வந்துள்ளது.
10) இதிலிருந்து அறிவது என்ன? அரேபியாவில் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் லுக்மான் என்பவர், கிரேக்க ஈசாப்பு என்பவரிடமிருந்து காபி செய்து இருந்திருக்கவேண்டும்? அல்லது ஈசாப்பு என்பவர் அரேபிய லுக்மானிடமிருந்து காபி அடித்து இருந்திருக்கவேண்டும்.
11) ஆனால், உண்மையென்னவென்றால், அரேபிய பழங்கதையின் நாயகன் "லுக்மானுக்கு" பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, கிரேக்க பழங்கதை நாயகன் ஈசாப்பின் பெயரில் இந்த கதை கிரேக்க பாரம்பரிய நூல்களில் எழுதப்பட்டுள்ளது. இதனால் அறிவது என்ன? ஈசாப்பு தான் இந்த கதையின் உண்மையான நாயகன், லுக்மான் அல்ல.
12) இதுமட்டுமல்ல, அரேபிய கற்பனைக் கதாபாத்திரமான லுக்மானும், கிரேக்க ஈசாப்பும் மிருகங்களை வைத்து பல கதைகளை சொல்லியுள்ளார்கள். ஈசாப் நீதிக்கதைகள் என்று உலகமனைத்தும் இக்கதைகள் மிகவும் புகழ்பெற்றவை.
14) அரபியில் லுக்மானின் பெயரில் மிருகங்களின் மூலமாக சொல்லப்பட்ட 49 நீதிக்கதைகள் கூறப்படுகின்றது.
15) இவைகளில் இரண்டு கதைகள், லுக்மான் மற்றும் ஈசாப்பின் கதைகளில் ஒரே மாதிரியாக வருகிறது. இதன்பொருள் என்ன? இவர்களில் யாரோ ஒருவர் மற்றவரிடமிருந்து காப்பி அடித்து இருந்திருக்கவேண்டும். இவர்கள் கற்பனைக் கதாபாத்திரங்கள், எனவே மக்கள் இவர்களின் பெயர்களில் தாங்கள் கேள்விப்பட்ட கதைகளை புனைத்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை. ஆனால், கிரேக்க கதைகள் அரேபிய கதைகளை விட பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பதிவு செய்யப்பட்டுள்ளன, எனவே, கிரேக்கத்திலிருந்து தான் இக்கதைகள் அரபியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது உண்மை. அப்படி செய்யும் போது, லுக்மானின் பெயரோடு அவைகளை முடிச்சு போட்டுள்ளார்கள்.
16) இந்த இரண்டு கதைகள் எவைகள் தெரியுமா? நாம் பள்ளிக்கூடங்களில் படித்த "முயலும் ஆமையும் ஓட்டப்பந்தைய கதையும்", "சிங்கமும் நரியும்" கதையும் தான். இவைகள் "ஈசாப்பின் நீதிக்கதைகள்" புத்தகத்தில் படித்திருப்போம், மேலும் நம் ஆசிரியர்களும் நமக்கு இவைகளைச் சொல்லியிருப்பார்கள்.
17) லுக்மானும், ஈசாப்பும் அபிசீனியாவிலிருந்து வந்தவர்கள் என்றும் இவர்கள் அழகாக இருக்கமாட்டார்கள் என்றும் சொல்லப்படுகின்றது. இதுவும் இவர்களிடையே இருக்கும் ஒற்றுமையாகும்.
மேற்கண்ட விவரங்களின் மூல மேற்கோள்கள் (Source: Aramco World: https://archive.aramcoworld.com/issue/197402/aesop.of.the.arabs.htm)
One of the more curious characters in the folklore of the Arabs is Luqman bin 'Ad, a member of that mysterious tribe descended from giants that once roamed southern Arabia and built the great dam of Marib. Luqman is mentioned in the Koran as "one to whom Allah brought wisdom.". . .
So many wise saws were ascribed to Luqman that Wahb bin Munabbih, who fathered a great many traditions of his own, claimed that he personally had read a book of wisdom of Luqman containing more than ten thousand chapters. Luqman apparently lived long enough to accumulate that much wisdom. According to tradition, he lived as long as seven vultures, which means, since the average vulture has a lifespan of 80 years, that Luqman achieved the considerable age of 560. . .
Before his death, Luqman passed on his wisdom to his son in the form of a last will and testament. Various versions of this survive. In all of them the wisdom, like all of the so-called wisdom of the East, is eminently practical. . . .
Not all of Luqman's advice to his son is contained in his testament. Sayings of Luqman are scattered through the works of Arab writers of all ages. Sometimes they are classified according to subject matter. We have, for instance, a set of admonitions to Luqman's son before he set off on a journey. . . .
Perhaps the most famous story told about Luqman is this one. Luqman, while he was still a serf, was summoned by his master and ordered to slaughter a sheep. He did so, and his master said, "Now give me the best part of it." So Luqman removed the tongue and the heart and prepared them for his master's supper. The next evening he was again summoned by his master and ordered to slaughter a sheep. He did so, and his master commanded, "Now give me the worst parts." Again Luqman prepared the heart and tongue of the sheep for his master's supper. His master grew angry and said, "When I ordered you to prepare the best parts of the sheep for me, you gave me the tongue and heart, and now when I order you to give me the worst parts of the sheep you again serve me the tongue and hear!" Luqman responded: "There is nothing better than them when they are good, and nothing worse when they are bad."
If this last story sounds familiar, it should. The same story is told about Aesop by the Greeks. Both Aesop and Luqman are described as having originally been Abyssinian and ugly. The story about Luqman and the seven vultures seems to be purely Arab, but both Aesop and Luqman are credited with having composed animal fables. In Arabic literature, 49 animal fables are attributed to Luqman, all but two identical to fables in the collection of Aesop. It is obvious that either the Greek fables are translations from the Arabic or that the Arabic fables, are translations from the Greek.
The latter alternative is the more likely, as the Aesopian fables are older than their Arabic counterparts, but it is perfectly possible that the animal fable was originally an oriental literary genre and that both Aesop and Luqman adapted it from the same Babylonian source. It says much for the basic identity of Classical and Islamic culture that the story of the tortoise and the hare, the wily fox, the proud but rather stupid lion are equally at home in Greek and Arabic. No matter how far Eastern and Western cultures have subsequently diverged they both have their roots in a common East-Mediterranean culture of great antiquity.
This article appeared on pages 2-3 of the March/April 1974 print edition of Saudi Aramco World.
Source: Aramco World: https://archive.aramcoworld.com/issue/197402/aesop.of.the.arabs.htm
இதுவரை கண்ட விவரங்களின் படி, கிரேக்க நூல்களில் எழுதியிருந்த ஈசாப்பு என்ற கற்பனை கதையாசிரியரும், இஸ்லாமுக்கு முன்பு அரேபிய கலாச்சாரத்தில் வரும் லுக்மான் என்ற கற்பனை நபரும், மக்களால் உருவாக்கப்பட்டவர்கள் என்றும், மேலும் ஈசாப்பு என்பவரின் கதைகளில் சிலவற்றை அப்படியே அரபியில் எடுத்தாளப்பட்டுள்ளது என்பதும் புரியும்.
"தம் நாட்டில் உலாவரும் நீதிக்கதைகளின் ஆசிரியர், மற்றும் மக்கள் அனைவரும் ஞானியாக கருதும் லுக்மானை குர்ஆனில் சேர்த்துவிட்டால், இன்னும் குர்ஆனின் மேன்மை உயரும் என்று எண்ணி, குர்ஆன் ஆக்கியோன், லுக்மான் பற்றி குர்ஆனில் சேர்த்துள்ளார்".
நல்லவேளை குர்ஆன் இந்தியாவில் எழுதப்படவில்லை. ஒரு வேளை முஹம்மது இந்தியாவில் பிறந்திருந்தால், திருவள்ளுவரும் அல்லாஹ்வை வணங்கியவர் தான் என்றும், இன்னும் ஞானிகள் என்று புகழ்பெற்ற தமிழ் புலவர்களையெல்லாம் குர்ஆனில் சேர்த்து, அவர்களையெல்லாம் முஸ்லிமாக்கியிருப்பார்.
4) லுக்மான் பற்றி இஸ்லாமிய அறிஞர்களின் கருத்து என்ன?
இப்போது, முஸ்லிம் அறிஞர்கள், குர்ஆனை மொழியாக்கம் செய்தவர்கள் இந்த லுக்மான் பற்றியும், ஈசாப்பு பற்றியும் என்ன கூறியுள்ளார்கள் என்பதைப் பார்ப்போம்.
a) முஹம்மது அஸத் (Muhammad Asad) குர்ஆன் விளக்கவுரை: குர்ஆன் 31:12
லுக்மான் ஒரு கற்பனை கதாபாத்திரம்
குர்ஆனை மொழியாக்கம் செய்து, விளக்கவுரை கொடுத்த முஹம்மது அஸத் என்பவர், குர்ஆன் 31:12ம் வசனத்திற்கும், லுக்மான் பற்றியும் எழுதிய விளக்கத்தை படியுங்கள்:
இவர் ஈசாப்புடன் (போதுமான சான்றுகள் இல்லாமல்) ஒப்பிடப்படுகிறார். லுக்மான் பண்டைய அரேபிய பாரம்பரியத்தில் அதிகமாக பேசப்பட்ட ஒரு புகழ்பெற்ற கற்பனை பாத்திரமாக (Legend) இருக்கிறார். இவர் உலகத்தை வெறுத்து ஆன்மீக பரிபூரணம் அடையும் படி முயற்சித்தார் என்று கூறப்படுகின்றது. கி.பி. 6ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜியாத் இப்னு முஆவியா (புனைப்பெயர் நபிகாஹ் அத் துப்யானி) எழுதிய ஒரு கவிதையில் லுக்மானை புகழ்ந்து எழுதியுள்ளார். இஸ்லாம் வருவதற்கு முன்பாகவே லுக்மானின் பெயரில் பல கதைகள், நீதிக்கதைகள், ஆன்மீக விவரங்கள் புனையப்பட்டு புகழ் பெற்று இருந்தன. இதன் காரணமாகவே இந்த கற்பனை நபரைப் பற்றி குர்ஆனும் பேசுகின்றது. இதே குர்ஆன் அல்கித்ரு என்ற இன்னொரு கற்பனை கதாபாத்திரம் பற்றியும் பேசுகின்றது (ஸுரா 18). இந்த கற்பனை நாயர்களைக் கொண்டு சில பாடங்களை கற்றுக்கொடுக்க குர்ஆன் முடிவு செய்துள்ளது என்பதை மட்டும் நாம் அறிந்துக்கொள்ளலாம்.
Asad Translation Note Number : 12
Popularly (though without sufficient justification) identified with Aesop, Luqman is a legendary figure firmly established in ancient Arabian tradition as a prototype of the sage who disdains worldly honours or benefits and strives for inner perfection. Celebrated in a poem by Ziyad ibn Mu'awiyah (better known under his pen-name Nabighah adh-Dhubyani), who lived in the sixth century of the Christian era, the person of Luqman had become, long before the advent of Islam, a focal point of innumerable legends, stories and parables expressive of wisdom and spiritual maturity: and it is for this reason that the Qur'an uses this mythical figure - as it uses the equally mythical figure of Al-Khidr in surah {18} - as a vehicle for some of its admonitions bearing upon the manner in which man ought to behave.
நன்றாக கவனியுங்கள், முஹம்மது அஸத், "லுக்மான் என்பவர் ஒரு கற்பனை கதாநாயகர் (mythical figure) என்று கூறுகிறார்", அல்கித்ரு என்ற இன்னொரு பாத்திரமும் கற்பனையே என்கிறார். குர்ஆனை மொழியாக்கம் செய்தவரே, லுக்மான் என்பவரும், அல் கித்ரு என்பவரும் கற்பனை பாத்திரங்கள் என்றுச் சொல்லுவது, குர்ஆனுக்கு எவ்வளவு பெரிய அவமானமாக இருக்கிறது!
b) யூசுஃப் அலி (Yusuf Ali) என்ன சொல்கிறார்
யூசுஃப் அலி அவர்களின் ஆங்கில குர்ஆன் மொழியாக்கம் புகழ்பெற்றது. இவர் லுக்மான் பற்றி தம் விளக்கவுரை 3593ல் எழுதுவதை கவனியுங்கள்.
யூசுஃப் அலி விளக்கம் 3593:
இந்த ஸூராவின் பெயர் லுக்மான், இவர் அரபு பாரம்பரியத்தைச் சேர்ந்தவர். இவரது வாழ்க்கையைப் பற்றி மிகக் குறைந்த விவரங்களே உள்ளன. இவர் நீண்ட காலம் வாழ்ந்ததாக கூறப்படுகின்றது, இதனால் இவருக்கு "முஅம்மர்(நீண்ட காலம் வாழ்ந்தவர்)" என்ற பெயரும் உண்டு. ஆது சமுதாய மக்கள் இவரை குறிப்பிட்டுள்ளார்கள், இவருக்கு அதிக ஞானம் இருப்பதாக கருதப்படுகிறது. இவர் ஒரு எளிமையான வாழ்வை வாழ்ந்ததாகவும், அல்லது ஒரு அடிமையாகவோ, அல்லது தச்சனாகவோ இருந்ததாகவும், உலக அதிகாரங்களை வெறுத்து இவர் வாழ்ந்ததாக கூறப்படுகின்றது. கிரேக்க பாரம்பரியத்தில் வரும் ஈசாப்பு என்பவரைப் போன்று, இவர் பெயரில் பல நீதிக்கதைகள் சொல்லப்படுகின்றது. லுக்மான் தான் ஈசாப்பு என்பதற்கு சரித்திர ஆதாரங்கள் இல்லை எனினும், இவ்விருவரும் ஒருவரின் கதைகளை இன்னொருவர் படித்து இருந்திருக்கவேண்டும் என்பதுமட்டும் உண்மை என்றுச் சொல்லலாம்.
Yusuf Ali Translation Note Number : 3593
The sage Luqman, after whom this Sura is called, belongs to Arab tradition. Very little is known of his life. He is usually associated with a long life, and his title is Mu'ammar (the long-lived). He is referred by some to the age of the 'Ad people, for whom see n. 1040 to vii. 65. He is the type of perfect wisdom. It is said that he belonged to a humble station in life, being a slave or a carpenter, and that he refused worldly power and a kingdom. Many instructive apologies are credited to him, similar to Aesop's Fables in Greek tradition. The identification of Luqman and Aesop has no historical foundation, though it is true that the traditions about them have influenced each other.
மேற்கண்ட விளக்கத்தில் கிரேக்க ஈசாப்பிற்கும், அரபு லுக்மானுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமைகளை யூசுஃப் அலி சொல்லியிருப்பார், அதாவது ஒருவரின் கதைகளை இன்னொருவர் படித்து, அதனை சொல்லியிருக்கக்கூடும் என்று இவர் கூறுகின்றார். மேலும், கிரேக்க ஈசாப்பின் கதைகள் இஸ்லாமுக்கும், அரபு பாரம்பரியத்துக்கும் முந்தியது என்பதால், யார் யாரிடமிருந்து பெற்று இருந்திருக்கவேண்டும் என்பதை நாம் புரிந்துக்கொள்ளலாம்.
c) முஹம்மதுவின் வரலாற்றில் 'லுக்மான்'
ஒரு முறை ஒரு மதினாவாசியை முஹம்மது சந்தித்து பேசியதாகவும், அந்த மதினாவாசி, தாம் லுக்மானின் ஞானபோதனைகளை கற்றுள்ளேன் என்று கூறியதாகவும், அதன் பிறகு முஹம்மது குர்ஆன் வசங்களை ஓதிக்காட்டியதால், அந்த மதினாவாசி முஸ்லிமானார் என்றும் சொல்லப்படுகின்றது.
1) ஸுவைத் இப்னு ஸாமித்: இவர் மதீனாவாசிகளில் நுண்ணறிவு மிக்க பெரும் கவிஞராக விளங்கினார். இவன் வீரதீரம், கவியாற்றல், சிறப்பியல்பு, குடும்பப் பாரம்பரியம் ஆகிய சிறப்புகளால் இவரது சமுதாயம் இவரை 'அல்காமில்' (முழுமையானவர்) என்று அழைத்தனர். இவர் ஹஜ் அல்லது உம்ரா செய்வதற்காக மக்கா வந்தார். இஸ்லாமிய அழைப்புக்காக அவரிடம் நபி (ஸல்) அவர்கள் பேசியபோது அவர் "உங்களிடம் இருப்பதும் என்னிடம் இருப்பதும் ஒன்றாகத்தான் இருக்கும்" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "உங்களிடம் என்ன இருக்கிறது?" என்று கேட்டதற்கு "நான் லுக்மான் (அலை) வழங்கிய ஞானபோதனைகளைக் கற்று வைத்துள்ளேன்" என்றார். நபி (ஸல்) அவர்கள் "எனக்கு அதை சொல்லிக் காட்டுங்கள்" என்று கேட்கவே, அவர் அதை சொல்லிக் காண்பித்தார். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், "நிச்சயமாக இது அழகிய பேச்சுதான். எனினும், என்னிடம் இருப்பதோ இதைவிட மிகச் சிறந்தது. அதுதான் அல்லாஹ் எனக்கு அருளிய குர்ஆன். அது ஒளிமிக்கது நேர்வழி காட்டக்கூடியது" என்று கூறி, குர்ஆனை அவருக்கு ஓதி காண்பித்து, அவரை இஸ்லாமின் பக்கம் அழைத்தார்கள். குர்ஆன் அவரது உள்ளத்தைக் கவர்ந்தது. "இது மிக அழகிய வசனங்கள் உடைய வேதமாக இருக்கிறதே" என வருணித்து இஸ்லாமைத் தழுவினார். பிறகு மதீனா வந்த சில காலத்திலேயே புஆஸ் போருக்கு முன்பாக அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் கோத்திரத்தாடையில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டார். அநேகமாக நபித்துவத்தின் 11 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவர் இஸ்லாமை தழுவியிருக்கலாம்.
மூலம்: http://www.tamililquran.com/history.php?page=143
பக்கம் : 143. முஹம்மது நபி(ஸல்) வரலாற்றில்
5) முடிவுரை: குர்ஆனின் இன்னொரு சரித்திர தவறு
இதுவரை நாம் பார்த்த விவரங்களின் சுருக்கம் இது தான்.
லுக்மான் என்பவர் ஒரு கற்பனை பாத்திரமாவார். இவரது பெயரில் அரபு பாரம்பரியங்களில், இஸ்லாமுக்கு முன்பிலிருந்து பல கதைகள் புனையப்பட்டுள்ளன. இவரது ஞானபோதனைகள், கதைகளை மக்கள் படித்து வந்துள்ளனர்.
குர்ஆன் பொதுவாக செய்யும் செயலைப்போன்று, இவரையும் தம் பட்டியலில் சேர்த்துக்கொண்டு, குர்ஆன் 31ம் ஸூராவில் 8 வசனங்களை புகுத்தியுள்ளது. ஆனால், அரபு பாரம்பரியங்களில், இந்த பெயரில் ஒரு கட்டுக்கதைகள் வருவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிலிருந்து கிரேக்க பாரம்பரியங்களில் "ஈசாப்பு" என்ற பெயரில், பல கட்டுக்கதைகள், நீதிக்கதை போதனைகள் உலா வந்துள்ளன. கிரேக்க ஈசாப்புக்கும், அரபு லுக்மானுக்கு இடையே பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன.
இருவரும் எத்தியோப்பியா (அபிசீனியா) நாட்டுக்காரர்கள், அடிமைகள் அல்லது எளிய வாழ்க்கை வாழ்ந்தவர்கள், மிருகங்கள் மூலமாக பல கதைகளைச் சொல்லியுள்ளார்கள். முயலும் ஆமையும் கதை மிகவும் புகழ்பெற்ற கதை, இதை இவ்விருவரும் சொன்னதாக பாரம்பரியம் கூறுகிறது, மேலும் முதலாளிக்கு ஒரு ஆட்டை சமையல் செய்து கொடுத்த நிகழ்ச்சி, இவ்விருவரின் வாழ்விலும் நடந்ததாக பாரம்பரியங்கள் சொல்கின்றன. கிரேக்க பாரம்பரிய கதை நூல்கள், அரபு பாரம்பரிய கதை நூல்களைவிட பல நூற்றாண்டுகள் முந்தியது என்பதால், லுக்மான் என்ற பெயரில், ஈசாப்பு என்பவரின் கதைகளை புகுத்தியிருக்கவேண்டும் என்று சொல்லமுடியும்.
இவைகள் எல்லாம் கற்பனைக் கதைகள் என்றோ, கிரேக்கத்தில் இப்படிப்பட்ட கதைகள் உலா வந்துள்ளன என்பதையோ அறியாத குர்ஆன் ஆக்கியோன், "லுக்மானை முஸ்லிமாக்கிவிட்டுள்ளான்" என்பது மட்டும் புரிகின்றது.
இரவல் வாங்கும் குர்ஆன்
குர்ஆனில் பல நிகழ்ச்சிகள் சொந்த கதைகள் அல்ல என்பதை குர்ஆனை படிப்பவர்கள் அறியமுடியும்.
1) குர்ஆன் கூறும் 20க்கும் அதிகமான நபிமார்கள்/நபர்கள் 'யூத கிறிஸ்தவ வேதங்களிலிருந்து குர்ஆன் எடுத்துக்கொண்டவர்கள்' ஆவார்கள் (Earlier Scriptures).
2) துல்கர்ணைன் (மகா அலேக்சாண்டர்) என்பவர் உலக சரித்திரத்திலிருந்து குர்ஆன் எடுத்துக்கொண்டதாகும் (World History or General Knowledge)
3) குர்ஆன் கூறும் "பல ஆண்டுகள் ஒரு குகையில் தூங்கிய நண்பர்களின் கதை", இஸ்லாமுக்கு முன்பு உலா வந்துக்கொண்டு இருந்த கிறிஸ்த வாலிபர்களின் கட்டுக்கதையாகும் (குர்-ஆன் குகைவாசிகளும், கும்ரான் குகைவாசிகளும்) (Pre-Islamic Legend stories).
4) இந்த கட்டுரையில் நாம் பார்த்த "லுக்மான்" கற்பனைக் கதை கூட, அரபு பாரம்பரியத்தில் உலாவிய ஒரு கதையை உண்மையென்று நம்பி, குர்ஆன் ஆக்கியோன் செய்த தில்லுமுல்லு தான். இவைகள் எல்லாம், குர்ஆனின் சரித்திர பிழைகள் (Arabian folk stories, legends).
இதுவரை பார்த்த விவரங்களின்படி, குர்ஆன் என்பது இறைவேதமல்ல, கட்டுக்கதைகளின் பெட்டகம் என்பதை அறியலாம்.
அடிக்குறிப்புக்கள்:
1) Aesop Stories in English: read.gov/aesop/001.html
2) Amazon Books: ஈசாப்பின் நீதி கதைகள் (பகுதி 1)/தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்: Aesop's Fables In Tamil (Part 1) /Selected Short Stories
3) ஈசாப் நீதிக்கதைகள் - www.udumalai.com/esap-neethi-kathigal-amaravathi.htm
தேதி: 30 மே 2021
இதர குர்ஆன் ஆய்வுக் கட்டுரைகள்
Source: https://www.answering-islam.org/tamil/authors/umar/arabic_quran/q31-12-luqman-aesop.html